மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.7.14

Astrology: quiz.61: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக் காவிய கலையே ஓவியமே!

 

Astrology: quiz.61: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக் காவிய கலையே ஓவியமே!

Quiz No.61: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தியொன்று

2.7.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டையும், 7ஆம் வீட்டையும்  ஆராய்ந்து பதில் எழுதுங்கள்.


Chart with navamsam is appended


1.
ஜாதகியின் கல்வி பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகி படித்தவரா? அல்லது படிக்காதவரா? அல்லது படிப்பைப் பாதியில் விட்டவரா? ஆராய்ந்து எழுதுங்கள்.

2
ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஆகவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

 1. Respected Guru Ji,
  1. லகனாதிபதி சனி 4ல் நட்பு வீட்டில் நல்ல அமைப்பு, அந்த வீட்டு அதிபதி சுக்ரன் உச்சம் ஆனல் சூரியனுடன் சேர்ந்து கெட்டு உள்ளார். புத்னும் பாபகர்தாரியில் மாட்டி கொன்டுள்ளார். படிப்பு பாதியில் விட்டு இருபார்.

  2.7ம் வீட்டு அதிபதி சூரியன் குடும்ப ஸ்தனமான 2ல், மாரக ஸ்தான அதிபதி மறு மாரக ஸ்தானத்தில் உடன் களத்திர காரகன் சுக்ரன் வேறு. 7ம் விட்டின் மேல் சேவ்வாய்யின் 8ம் பார்வை, ஆகையால் ராகு திசையில் சூரிய புத்தியில் அல்லது சுக்ர புத்தியில் திருமணம் நடந்து இருக்கும். அதாவது 25 வயதுக்கு அப்புரம் நடைபெறும்.

  ReplyDelete
 2. கல்விகாரகன் புதன் 1ல், அதன் மீது 4ல் உள்ள சனியின் பார்வை, படிப்பை பாதியில் விட்டவர்.

  படிக்காவிட்டாலும் 5ல் உள்ள கேது(5ம் அதிபதி புதன் லக்கினத்தில்) நல்ல ஞானத்தையும், உலக அறிவையும் பல பரிட்சைகள் வைத்து வழங்கினார்.


  கும்ப லக்கினதிற்கு யோக காரகனாகிய சுக்கிரன் உச்சமாகி 7ம் பாவாதிபதியான சூரியனுடன் 2ல், திருமணம் ராகு திசையில் இனிதே நடைபெற்றது.


  லக்ஷ்மி நாராயணன்.

  ReplyDelete
 3. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  புதிர் பகுதி 61 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

  கும்ப லக்கின ஜாதகியான இவருக்கு லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.

  கல்விஸ்தான அதிபதியான சுக்கிரன் 2ல் உச்சம் பெற்று இருப்பதால் ஆரம்ப கல்விக்கு தடையில்லை. ஆனால் கல்வி காரகன் புதன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருப்பதாலும், சனி பகவான் 4ல் நின்று 10ம் பார்வையாகப் புதனைப் பார்ப்பதாலும் கல்வியில் தடை ஏற்பட்டிருக்கும். என்றாலும் 4க்கு குரு பார்வை கிடைப்பதால் ஜாதகி பள்ளிப் படிப்பு வரை படித்திருப்பார்.

  களத்திர காரகன் சுக்கிரன் உச்சமாகி களத்திர ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று குடும்ப ஸ்தானத்தில் இருப்பதாலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்று இருப்பதாலும் ஜாதகிக்கு அவருடைய 29 வது வயதில் குரு தசையில் திருமணம் நடந்திருக்கும். காலசர்ப்ப தோஷமும் இருப்பதால் தாமதமான திருமணம்தான்.

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா, ஜோதிட புதிர் போட்டி எண் 61 ற்கான எனது கணிப்பு:-

  ஜாதகி படித்தவர்.

  லக்கின அதிபதி "சனி" 4ம் இடத்தில், மற்றும் 10ம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறார். மேலும் "நீசபங்க ராஜயோக குரு"வின் 5ம் பார்வையினை பெறுகிறார். மற்றும் கல்விகாரகன் "புதன்" லக்கினத்தில் உள்ளதனால் ஜாதகி படித்தவர். (குரு பார்பதனால் சட்ட படிப்பிற்கான வாய்ப்பு)

  ஜாதகிக்கு 31:5:10 வயதிற்கு மேல் குரு தசையில் தாமதமாக திருமணம் நடந்திருக்கும்.

  7ம் இடத்து அதிபதி "சூரியன்" உச்சம் பெற்ற களத்திர காரகன் சுக்கிரனுடன் இணைந்து 2ம் இடமான "குடும்ப ஸ்தானத்தில்" உள்ளாதனால் திருமணம் நிச்சயமாக உண்டு. மேலும் தாமதத்திற்காண காரணம் ஜாதகிக்கு "அவசவ்ய காலசர்ப்ப தோசம் உள்ளது" (கேது கொடி பிடிப்பதனால்) இதனால் குருசந்திர, சசிமங்கள யோகங்கலானது தாமதமாக கிடைக்கும்.

  சுபம்.

  ReplyDelete
 5. மதிப்பிற்குரிய ஐயா !!!

  புதிர் எண் : 61 இற்கான பதில்.

  இதில் கொடுக்கப்பட்ட ஜாதகிக்கு கேது கொடிபிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம் உள்ளது. பெண்களுக்கே உரிய கும்ப லக்கினம். பெண்ணின் எல்லா அம்சமும் உண்டு !!! இலக்கின அதிபதி சனி 4இல் நட்பு வீடு.( கேந்திர வீடு ). பொதுவாக சனி 4இல் இருந்தால் சுககேடு, கல்விக்கு கேடு. ஆனால் சனி இந்த ஜாதகிக்கு ராசி மற்றும் லக்கினாதிபதி. மேலும் 4ஆம் அதிபதி சுக்கரன் 2இல் உச்சத்தில். உச்சத்தில் இருந்தாலும் 7ஆம் அதிபதியான சூரியனால் அஸ்தமனம். இருந்தாலும் சுக்கரன் 5 பரல்களுடன், அம்சத்தில் ஆட்சி பலத்துடன். மேலும் 4 ஆம் வீட்டை 2, 11 ஆம் அதிபதியான குருவின் விசேஷ பார்வையில்.கல்விக்கு காரகனான புதன் லக்கினத்தில் 6 பரல்களுடன். மேல்நிலை கல்விக்கான ஸ்தானமான 5 ஆம் அதிபதி புதன் 5 இற்கு 9 இல். இத்தகைய காரணங்களால் ஜாதகிக்கு உயர்கல்வி உண்டு !!! தொழில் ஸ்தானம் லக்கினாதிபதி சனியின் பார்வையில் இருப்பதால் கல்வியால் வேலையும் நன்றாக இருக்கும். களத்திர ஸ்தானாதிபதி சூரியனும் களத்திரகாரகன் சுக்கரனும் கிரக யுத்தம். 5ஆம் அதிபதி புதனின் பார்வை 7 ஆம் இடத்தில். 3,10 ஆம் அதிபதி செவ்வாயின் 8 ஆம் பார்வை 7லில். குடும்ப ஸ்தானாதிபதி குரு அந்த வீடிற்கு 11 இல் இருந்தாலும் குருவுடன் ஆறாம் அதிபதி( வில்லன் ) மற்றும் மாந்தியின் பிடியில். சூரியன் குருவின் அம்சத்தில் இருப்பதால்,ராகு திசை முடிந்த பின்னர் குரு திசை, குரு புத்தியில் 30 தாவது வயதில் திருமணம் நடைபெற்று இருக்கலாம். திருமணம் உண்டு !!!


  இப்படிக்கு

  சிவச்சந்திரன்.பா

  ReplyDelete
 6. Valkai nandraga ammaya vaipugal naraga vulathu... 4 ku vuriyavanudan 7 ku vuriyavan nalla kuttani... athudan 4kuriyavan vucham... kudumba valkai nandraga irunthirukum...

  ReplyDelete
 7. திருவோன நட்சத்திரம். மகர ராசி. கும்ப லக்னம். இரண்டுக்கும் அதிபதி சனி. பெண்களுக்கு கும்ப லக்னம் விசேஷம். மகர ராசி திருவோன நட்சத்திரமும் விசேஷம். ஆனால்
  கால சர்ப்ப தோஷம். கேது கோடி பிடிக்கும் ஜாதகம்!. இளம் வயது பெரும் போராட்டம்

  லக்னத்தில் புதன் தனித்திருக்கிறார். இதுவும் விசேஷமான அமைப்பு. லக்னாதிபதி சனி நான்கில் இருக்கிறார். யோககாரகனான சுக்ரன் வீட்டில் !. குருவின் பார்வை 4-ம் வீட்டிற்கு இருக்கிறது .

  நன்கு படித்திருப்பார் !

  ஏழாம் வீடு அதிபதி சூரியன் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில். சுக்கிரனோடு சேர்க்கை. சுக்ரன் உச்சமாய் இருந்தாலும் அஸ்தமனம் ! சூரியனும் எட்டாம் வீட்டை பார்க்கிறார் !. செவ்வாய் தோஷம் வேறு !.

  திருமண வாழ்க்கை இல்லை !

  அய்யா, சரியா ? தவறா ?.

  கணிப்பது கடினமாகவே உள்ளது !. இது போன்ற ஜாதகங்கள் ஜோதிட திறமையை உயர்த்தி கொள்ள உதவும் !.

  தங்கள் அலசலுக்காக காத்திருக்கிறேன் !

  ReplyDelete
 8. 1.ல‌க்னாதிபதி சனைச்சரன் 4ல் அமர்ந்தார்.சனைச்சரன் 12ம் அதிபதியும் அல்லவா?எனவே அவர் 4ல் அமர்ந்தது கல்விக்கு உதவி செய்யும் அமைப்பாகத் தோன்றவில்லை.
  2. நாலாம் அதிபன் சுக்ரன் இரண்டாம் இடத்தில் அமர்ந்தது கல்வி பெற உதவிதான். ஆனால் சுக்ரன் உச்சமானாலும், சூரியனால் அஸ்தங்கதம் ஆகிவிட்டாரே!
  3. கல்விகாரகன் புதன் லக்கினத்தில் அமர்ந்தது கல்விக்கு நன்மை செய்யலாமே என்றால், புதன் எட்டுக்கு உரியவராகி லக்கினம் ஏறியது கல்விக்கு உதவுவதாக இல்லை.
  4. 12ல் அமர்ந்த குருபகவான் நீசம் ஆனாலும் நீச பங்கம் ஆகிறார்.ஆனால் மாந்தியால் தாக்கப்பட்டுள்ளார்.இந்த குருபகவானால் 4ம் இடதிற்கு பார்வை பலம் உள்ளது.
  5. நாலாம் இடம் சூரியன், சனி,கேதுவினால் சூழப்பட்டுள்ளது.
  6. நாலாம் இடத்திற்கு 24 பரல்தான்.நாலாம் அதிபன் சுகர‌னுக்கு சுயவர்க்க பரல் ஐந்து. கல்விகாரகன் புதனுக்கு சுயவர்க்க பரல் 6.
  6.10 வயது நிறையும் போது ராகுதசா ஆரம்பமாகி விட்டது. 28 வயது முடியும் வரை ராகு தசாதான்.
  7.கேது ராகுவிற்கு நடுவில் அனைத்துக் கிரகங்களும் அடங்கியதால் சர்ப தோஷ ஜாதகம்.எல்லாப் பலன்களும் கால தாமதமாக்த்தான் கிடைக்கும்.

  கல்வியில் குருபார்வையினால் இந்த ஜாதகர் கல்லூரியை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு பள்ளிப் படிப்பை முடித்து இருப்பார். கல்லூரி செல்ல முடியாமல்
  தடை ஆகிவிட்டது.எனவே பள்ளிப் படிப்புடன் கல்வி நின்ற‌து.

  8. இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் 7ம் அதிபனும், கள‌த்திரகார‌கனும், யோககாரகனுமான சுக்கிரன் நிற்பது இவருக்குக் கல்யாண‌ம் ஆகும் வாய்ப்பைக் கொடுக்கிறது. கஜகேசரி யோகம், சசி மங்கள‌ யோகம்
  ஆகியவை திருமணத்தை நடத்தியிருக்கும்.

  9. ரகுதசா சுக்கிர புக்தியில் 23 வயதிலோ, குருதசா குரு புக்தியில் 30 வய்திலோ திருமணம் நடக்க வாய்ப்பு.

  ReplyDelete
 9. Respected sir,
  1. The native is very weak in education. She is a school drop-out because .... 8th lord bhudhan is in lagna and it is in paavakarthari yogam ...and sani the 12th lord is in 4th house. Guru is neesam in 12th house. 4th lord sukra is with enemy.
  2. The native is married at the age of 20 ..when she is on Ragu dasa sani buthi because at navamsa 1st and 2nd lord sani is placed in 7th house and it has a vision over ragu

  ReplyDelete
 10. ஜாதகி படிப்பைப் பாதியில் விட்டவர். உரிய வயதில் (23 வயதிற்குள்) திருமணம் ஆனவர்.

  4ல் சனி இருப்பது கல்விக்குத் தடையை உருவாக்கியது. குரு பார்ப்பதால் ஓரளவுக்கு கல்வி ஏற்பட வழி செய்திருப்பார்.

  புதன் லக்கினத்தில் இருந்து 7ம் இடத்தைப் பார்ப்பதும், களத்திரக்காரகன் மற்றும் இந்த ஜாதகத்திற்கு யோககாரகன் சுக்கிரன் 2ல் உச்சமாகியிருப்பதும் உடன் களத்திரஸ்தானாதிபதி இருப்பதும் உரிய வயதில் திருமணம் நடக்க உதவியது.

  ReplyDelete
 11. மதிப்பிற்குற்ய ஐயா,
  புதிர் தொடர் - பகுதி அறுபத்தியொன்றிற்கான பதில்

  படிக்கவில்லை-4 ல் சனி மற்றும் புதன் பாபகர்தாரி யோகத்தில்

  தாமத திருமணம் - 7 ஆம் இடத்து அதிபதி 2ல் , களத்திரகாரன் 2 ல் உச்சமாக இருப்பதாலும் திருமணம் நடைபெற்று இருக்கும்.

  இப்படிக்கு
  மு.சாந்தி

  ReplyDelete
 12. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.

  குறிப்பு :- நண்பரின் பெயர் தாமஸ் ராஜா இதனில் ஆட்சியம் என்ன வென்றால்
  அவர் கிறிஸ்துவ வகுப்பை சார்ந்தவர். அவருடைய முன்னோகளோ அல்லது
  சொந்தங்களுக்கு இதனைப்பற்றி எதுவும் தெரியாது.

  மேலும் ஐயா அவர் எந்த விதமான எதிர்பார்ர்ப்பு இல்லாமல் ஜாதகத்தில்
  உள்ளதை அவருடைய நுப்ப அறிவிற்கு எட்டிய தூரம் பலாபலன் கூறிவருகின்றார்
  ஐயா!

  ஐயா தங்களுடைய பாடங்களை முதல் தொட்டு படித்து வருகின்றார். அண்ணாருக்கு
  தங்களுடைய பதிப்பில் லக்கனத்தில் இருந்து எட்டாம் இடம் பற்றிய சரியான
  விபரங்களை பற்றி அறிய மிகவும் ஆசை படுகின்றார்.

  ஐயா தங்களுடைய தொகுப்பில் விரிவான விபரம் இல்லை. எனவே தங்களிடம் விரிவான
  குறிப்பு அல்லது புஸ்தகம் இருப்பின்
  தெரிய படுத்த வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 13. அய்யா வணக்கம் .,
  இவருடைய 5,9,10,11 மிட பரல்கள் நன்றாக இருப்பதாலும், யோககாரகன் சுக்கிரன் நல்லநிலையில் இருப்பதாலும் இவருடைய திருமணம் நடைபெறும்,
  இவர் காலசர்ப்பதோஷ ஜாதகர் , ஏழாம் அதிபதி தன்னுடைய வீட்டிற்கு எட்டில் மறைவு , செவ்வாய் ஏழாம் இடத்தை தனது பார்வையில் வைத்திருகிறார் ஆகவே இவருக்கு தாமத திருமணம்,28 வயது வரை நடந்த திசைகள் சாதகமாக இல்லை ஆகவே 28 வயதிற்கு மேல் குரு திசை சுக்கிரபுத்தி அல்லது கோச்சார ரீதியில் குரு பலமான நேரத்தில் இவருக்கு திருமணம் கைகூடும் .

  கல்வி :- இரண்டாம் அதிபதி பன்னிரண்டாம் இடத்தில் நீஷபங்கம் ஆனாலும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் உச்சம்,புதன் 6 பரல்கள் லக்கினத்தில் இருக்கிறார், நான்காமிடம் குருபார்வையுடன் ஆகவே நல்ல கல்வி உண்டு , லக்கினம் பாபகர்தாரி யோகத்தில் இருப்பதாலும் இரண்டாமிடத்தில் சூரியன் இருப்பதாலும் சிறுசிறு பிரச்சனைகள் வரும் ., ஐந்தாம் அதிபதியும் லக்கினாதிபதியும் கேந்திரம் அடைகிறார்கள். ஆகவே இவருக்கு நல்ல அறிவுத்திறன் இருக்கும்,

  குருசந்திரயோகம்,ருசயோகம் இருந்தாலும் பன்னிரண்டாம் இடத்தில மறைவுற்று இருப்பதால் இவருக்கு பலன் கிடைக்கவில்லை

  பாபகர்தாரி யோகம் மற்றும் சுபகர்த்தாரி யோகம் ஒரு சேர இருப்பது கலவையான பலன்களை தருமா என்பது புரியவில்லை அய்யா..

  ReplyDelete
 14. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் .QUIZ NO 61கொடுக்கப்பட்ட ஜாதகம் கும்ப லக்னம் ..மகர ராசி .கும்ப லக்ன பெண்கள் நல்ல உழைப்பாளி..
  ..லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் லக்னாதிபதி சனி கேந்த்ரத்தில் 4 ம் வீட்டில் பள்ளி படிப்பு படித்திருப்பார்
  கல்விகாரகன் புதன் லக்னத்தில் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி இருக்கான் ..
  ..உச்சம் பெற்ற செவ்வாயுடன் நீசம் பெற்ற குரு நீச பங்க ராஜா யோகத்தில் குரு 4 மிடத்தை 5 பார்வையாக பார்ப்பதால் பள்ளி படிப்பு.12 ம் வீட்டில் மாந்தி ஏழ்மை நிலைமை .???
  ..குடும்பத்தில் சுக்கிரன் சூரியன் ..சூரியன் 7 வீட்டதிபதி உடன் உச்சம் பெற்ற சுக்கிரன் ஆகவே திருமணம் நடை பெற்றிருக்கும். ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை.அலசல் சரியா. அய்யா ...S.N.கணபதி

  ReplyDelete
 15. புதிர் எண்:61க்கான அலசல்:

  கும்ப லக்னம், மகர ராசி ஜாதகி. கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷமுள்ள ஜாதகம். அவருக்கு

  1) படிப்பு ஏறவில்லை.10ம் வகுப்பை தாண்டியிருக்க மாட்டார்.
  2) திருமணம் ஆகியிருக்காது.

  அதற்கான காரணங்கள்:

  1. 4ல் லக்னாதிபதி சனி. அவரின் பத்தாம் பார்வை லக்கினத்திலும், அதில் அமர்ந்துள்ள‌ கல்விக்காரகர் புதனின் மேலும் உள்ளது.
  2. 4ம் அதிபதியும் யோககாரகனுமான‌ சுக்கிரன் 2ல் உச்சமடைந்தாலும் அஸ்தங்கம் ஆகி விட்டார்.
  3. லக்கினமும், அதில் அமர்ந்துள்ள கல்விக்காரகன் புதனும் பாப கர்த்தாரியின் பிடியில் உள்ளன.தவிர சுக்கிரனும், புதனும் 2/12 நிலைப்பாடில் அமர்ந்து விட்டனர்.
  3. 2/11ம் அதிபதி குரு 12ல் மறைந்து விட்டார், நீச பங்கம் ஆனாலும் ஜாதக வில்லன் 6ம் அதிபதி சந்திரனுடனும் மாந்தியுடனும் சேர்ந்து கெட்டு விட்டார். அதனால் அவர் பார்வை 4ம் பாவத்திற்கு வலு சேர்க்கவில்லை.

  இந்த காரணங்களால் ஜாதகிக்கு படிப்பு ஏறவில்லை.

  ஏழாமிடத்தை எடுத்துக் கொண்டால்,

  1)அதன் அதிபதி சூரியன் 2ல் உள்ளார். அது அந்த இடத்திற்கு 8மிடம்.தவிர களத்திரகாரகனும் யோகாதிபதியுமான‌ சுக்கிரன் அதில் அமர்ந்து அஸ்தங்கம் ஆகிவிட்டார்.
  2)7 மிடத்திற்கு புதன் பார்வையிட்டாலும் அவருக்கு 8மிட ஆதிபத்தியம் உள்ளதால் அவரும் ஜாதகிக்கு உதவவில்லை.
  3)குடும்ப காரகன் குரு கெட்டுவிட்டதோடு 12ல் அமர்ந்து உதவ மறுத்து விட்டார்.

  தவிர, ஜாதகிக்கு திருமண வயதில் வந்த ராகு தசை 27 வயது வரை இருந்தது. அதற்கு பிறகு வந்த குரு தசையும் உதவவில்லை.

  வயதாகி விட்ட காரணத்தினால் ஜாதகி திருமணம் செய்து கொள்ளவில்லை.

  வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. வணக்கம். QUIZ NO.61

  1. பள்ளி கூடம் வரை படித்திருப்பார். கல்லூரி செல்ல வாய்பில்லை.
  2. காலசர்ப தோஷத்தினால் தாமதமான திருமணம் நடைப்பெற்றது.

  30.03.1973 ஆம் தேதி காலை 4.36.06 மணிக்கு திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு கும்ப லக்கினம். யோககாரன் சுக்கிரன்.

  அலசல்-1 (கல்வி)
  (4ம் வீடு, 5ம் வீடு (நுண்ணறிவு), 2ம் வீடு (வாக்கு), புதன் நிலமை), 4ம் வீட்டு அதிபதி, 4ம் வீட்டின்மீது சுபபார்வை.

  1. காலசர்பதோஷம்/யோக ஜாதகம். தனது 10வயது முதல் 27வது வயது வரை பல சிரமங்களுக்கு ஆளானவர். கால சர்பதோஷம் ஆட்டி வைத்தது. 28 வயதில் குரு தசை வந்தவுடன் அதுவே யோகமாக மாறி உச்சநிலைக்கு கொண்டுபோய்விட்டது. நீசமான குருவுடன் உச்சமான செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம் உருவானதே காரணம்.

  2. லக்கினாதிபதி சனி 4ம் வீட்டில் (3 பரல்) பலவீனம். தாயின் அன்பும், கவணிப்பும் கிடத்திருக்காது. சோம்பேறியாகவும், தனிமையாகவும் இருந்திருப்பார்கள். கடுகடுப்பான மன நிலை இருக்கும். சொத்துக்கள் இருக்காது. மேலும், 10வயது முதல் 27 வயது வரை ராகு தசையினால்,கல்விக்கு தடங்கள் எற்பட்டிருக்கும்.

  3. 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (5 பரல்)மீனராசியில் உச்சமாக இருந்தாலும் அஸ்தங்கம் ஆகிவிட்டார். 9ம் வீட்டு அதிபதியும் சுக்கிரனே. இந்த ஜாதகத்திற்க்கு யோககாரணக சுக்கிரன் இருந்தாலும், அஸ்தங்கம் ஆகிவிட்டால் சுமரான பலந்தான் கிடைக்கும். இவர் கவிஞ்ஞராக இருக்க வாய்ப்புள்ளது. இசையில் நாட்டமுடையவர். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ளவர்.

  4. 5ம் வீடு நுண்ணறிவுக்கான வீடு. 5ம் வீட்டின் அதிபதி புதன் லக்கினத்தில் சனியின் 10ம் பார்வையில் உள்ளார்.5ம் வீட்டில் கேது அமர்ந்துள்ளார். ராகுவின் 7ம் பார்வை 5ம் வீட்டின் மீது. கல்வியின் மீது சிறந்த கவணம் செலுத்தமுடியாது.

  5. 2ம் வீடு வாக்கு ஸ்தானம்.2ம் வீட்டு அதிபதி குரு (4 பரல்) 12ம் வீட்டில் மாந்தியுடன் சேர்ந்து இருப்பதால் வாக்குதடங்கள்.

  6 கல்விக்கு புதன் நிலமை மிகவும் முக்கியம் லக்கினத்தில் புதன் (6 பரல்கள்) சனியின் 10ம் பார்வையால் கல்விக்கு தடங்கள். ஜாதகி பள்ளிகூட படிப்பு வரை படித்து இருப்பார்.

  7. 6ம் வீட்டு அதிபதி சந்திரன் 12ல் இருந்து 7ம் பார்வையாக 6ம் வீட்டை பார்த்து கொண்டு இருக்கிறார். மேலும், சனியின் 3ம் பார்வை 6ம் வீட்டின்மீது. ஜாதகிக்கு எப்பொழுதும் மன கஷ்ட்டம் இருந்துகொண்டே இருக்கும். கல்வியில் கவணம் செலுத்தமுடியாது.

  அலசல்-2 (திருமணம்).

  லக்கினம் 26 பரல், லக்கினம் பாபகர்த்தாரி தோஷம் (ஒரு பக்கம் சூரியன், மறுபக்கம் செவ்வாய், மாந்தி) தாமதமான திருமணத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

  லக்கினாதிபதி சனி பலவீனம்.

  7ம் வீட்டு அதிபதி சூரியன் 2ம் வீட்டில் உச்சமான களத்திரகார சுக்கிரனுடன்கூட்டு, குரு தசையில் சனி புக்தியில் 32 வயதில் திருமணம் நடைபெற்றிருக்கும். நீச பங்க ராஜ யோகத்தினால் குருவின் 5ம் பார்வை சனியின் மீது பார்ப்பதால் குரு திருமணத்தை நடத்தி வைத்தார்.

  2ம் வீடு 7ம் வீட்டிலிருந்து 8ம் வீடு ஆகையினால் 2ம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் அழ‌கான நல்ல கணவன் கிடைத்திருப்பார். இரண்டில் சுபக்கிரகங்களுடன் - சூரியனும் கூடி நின்றால் – பொருள் நாசம். கையில் காசு தங்காது.

  லக்கினத்தில் 26 பரல், 7ம் வீட்டில் 23 பரல்கள். குடும்பத்தில் அம்மனியின் ஆதிக்கம் தான்.

  5ம் வீடு புத்திர தோஷம். 5ல் கேது,ராகுவின் 7ம் பார்வை 5ம் வீட்டின்மீது, காரகன் குரு 12ல் மாந்தியுடன் சேர்ந்து இருப்பதாலும், அவருடைய பார்வை 5ம் வீட்டின்மீது இல்லாமல் இருப்பதாலும், குழந்தை பிறக்க வாய்பில்லை.

  யோகம்
  1. 3ம் வீட்டு அதிபதியும் (செவ்வாயும்), 6ம் வீட்டு அதிபதியும் (சந்திரனும்) சேர்ந்து 12ம் வீட்டில் இருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டானது.

  2. சசி மங்கள யோகம்:- இந்த ஜாதகத்தில் ஜாதகிக்கு ‍பிறந்த காலத்திலிருந்து கடைசி காலம் வரை பணத்தட்டுபாடே இருக்காது. தேவை எற்படும்போது எல்லாம் பணம் கிடைக்கும்.

  3. கஜகேசரி யோகம்:- சந்திரனிலிருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் அதிர்ஷ்டம் பயக்கும். ஆஸ்திகள், வெற்றி, ஆகியவை வந்து அடையும்.

  சந்திரசேகரன் சூரியநாராயணன்

  ReplyDelete
 17. Respected Sir
  Here is my analysis.

  1. Kethu starts the Kalasharba dosham.
  2.But she has good yogams too. Gurumangala, sasimangala, gajakesari... All of thm are in 12th house, but still will give at least some benefits. Sukra, Guru, Sani all in "Mukona parivarthanai".
  3. Laknathipathi Sani is in 4th house and it is friend’s house too.
  4. 4th lord Sukra is in 11th house from it and is uchham. But Asthangam as it is close to Sun.
  5. 4th house also has Guru's parvai.
  6. Regarding 7th house, its lord is in 2nd place (8th from 7th place), but with uchha Sukran.
  7. Mars looks at 7th house.
  8. But Subha Buthan also looks at 7th house.
  9. Strong laknathipathi, 5th lord and sukra indicates love as well.

  So, She is definitely educated. she got married, but delayed as Mars's look and Sani is in 7th place in Navamsa.

  ReplyDelete
 18. the native has not educated.marriage may be taken place after 30 years . smooth marriage life is not possible.
  for education
  Point no 1 : the fourth place is occupied with Saturn
  2 Those who have fourth place Saturn is not suitable for education.
  3.Even though guru is auspicated fourth place it is debilitated.
  4.all planets are hemmed with ragu and kethu kala sarba dosham.
  5.rahu dasa is force during study period.Those who have undr running of rahu dasa is not favourable for education
  marriage may be taken pale after 30 years
  even though sukran yogagaran for kumba lagna palced in second place . (pathagapathy ) with sevent place sun combusted with sun.
  kala sarba dosham jathagam
  all functional malfic palnets are in strong .
  so marriage life is question mark ?

  nellai padmanaban

  ReplyDelete
 19. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
  கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில், ஜாதகி மெத்தப் படித்த மேதாவியாவார்.
  அவரது 30வது வயதில் திருமணம் நடந்து இருக்கும்.குரு தசை சனி புத்தியில் நடந்து இருக்கும்.
  அலசல்:
  ஜாதகி கும்ப லக்கினம்.லக்கினாதிபதி சனி கல்விக்குறிய 4ம் இடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்து,10ம் பார்வயால் லக்கினத்தையும்,அங்கு அமர்ந்த கல்விக்கு அதிபதி புதனையும் தன் பார்வையில் வைத்துள்ளார்.
  2).நுண்ணறிவிற்க்கு ஆதிபத்தியம் கொண்ட 5ம் பதி புதன், லக்கினத்தில் அமர்வு.தனது வீட்டிற்க்கு 9ல்.
  3). 7ம் பதி சூரியன் 2ல் உச்ச சுக்கிரனுடன் அமர்வு. ஆயினும் சூரியன் தன் வீட்டிற்க்கு 8ல் அமர்வு சிறப்பில்லை.உச்சம் பெற்ற செவ்வாய்,குருவின் சேர்க்கையுடன், தன் 8ம் பார்வையால் 7ம் இடத்தை பார்வை செய்வதால் தகுதியற்றவர் கணவராகவாய்த்திருப்பார்.
  4).4&9க்குடைய யோககாரகன் சுக்கிரன்,2ம் இடத்தில் உச்சம். 2ம் பதி குரு நீச்ச பங்க ராஜயோகம் அடைந்திருப்பதுடன் கல்வி ஸ்தானமாகிய 4மிடத்தையும், மாங்கல்ய ஸ்தானமாகிய 8மிடத்தையும் பார்வை செய்திருப்பது
  நன்மையே.

  ReplyDelete
 20. Respected sir,

  Lagnadhipathy Sani 4-il thannudaya nanban sukranin veetil. 4-m adhibathy Sukran Uccham petru 2-il amarvu. Lagnathai lagnadhipathy sani 10-m paarvayaga parkiraar.

  Budhan 5 & 8-m adhipathy and avar lagnathil amarvu saniyin paarvai. Jadhagi Kandhippaga Technical Padippu (B.E, M.B.B.S) padithuiruppar.

  7-m adhipathy sooriyan lagnathirku 2-il( Kudumbasthanathil amarvu) sooriyan thanveetirku 8-il amarvu. Kaaragan Sukran Uccham petru 2-il amarvu.

  Labasthanathil amarndha Raaghu migundha narpalangalai vaari valangi iruppar. Raaghu dhasa Chandra bukthiyi alladhu Neecha bangam adaindha Guru Dhasa-Sani bukthiyil avargalukku Thirumanam nadandhu irukkum and avar velinatil settle aagi iruppadharkku migavum adhigamana vaippu ulladhu.

  Thank You.
  Kadaisi Bench Maanavan.

  ReplyDelete
 21. இந்த பெண் ஜாதகம் "கால சர்ப்ப தோசம் உள்ள ஜாதகம்".

  1.ஆக திருமணம் 32 இல் தான்.சரியான வயதில் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

  2. 4 இல் சனி(கேந்திர தோசம்) & சனி எதையும் தாமதபடுத்துவார். ஆக கல்வி தடைபட வாய்ப்பு உள்ளது..

  தற்பொலுது தான் ஜோதிடம் பயில ஆரம்பித்திருக்கிரேன்..தவறு இருப்பின் மன்னிக்கவும்...

  ReplyDelete
 22. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


  விடை: 1.படிப்பை பாதியிலேயே விட்டவர்.

  2.திருமணம் மறுக்கப்ப‌ட்ட ஜாதகம்.  *கும்பலக்கினம் மகரராசி ஜாதகி.இது ஒரு காலஷர்பதோச ஜாதகம்.கேது கொடி பிடித்துசெல்கிறார்.எனவே இளமையில் போராட்டமான‌
  வாழ்க்கை.


  * லக்கினாதிபதி சனி நான்காம் இடத்தில் நீச்சபங்கமடைந்த குருவின்
  பார்வையில். அத்துடன் குரு 6மற்றும் 8ம் இடத்தை பார்வை செய்கிறார்.

  *4ம் இடத்தைகுரு பார்வைசெய்வதால் கல்வி பெறவாய்ப்பு உண்டு எனினும் காலஷர்பதோசம் மற்றும் 5 8க்குரிய புதன் (வித்யாக்காரகர்) லக்கினத்தில் பாபகர்தாரி யோகத்தில் அமர்ந்தது, கல்வி ஸ்தானாதிபதி அஸ்தங்கமடைந்து பலகீனமானது போன்ற காரணங்களால் கல்வி தடையானது.

  *உச்சமடைந்த யோகாதிபதி சுக்கிரன் 2ல் 7க்குரிய சூரியனுடன் அமர்ந்து அஸ்தங்கம். அத்துடன் சூரியன்,அவருடைய ஸ்தானத்திற்க்கு 8இல் அமர்ந்து மறைவு பெற்றார்.


  *உச்சமான செவ்வாயின் 8 ம்பார்வையாக களத்திர ஸ்தானத்தில் விழுவது போன்ற காரணங்களால் திருமணம் தடையாகியிருக்கும்


  *அஸ்தங்கமான களத்திரகாரகரையோ,ஸ்தானாதிபதியையோ அல்லது
  ஸ்தானத்தையோ சுபர்கள் யாரும் பார்க்காதது போன்ற காரணங்களால்
  திருமணம் தடையானது.

  சரியான விடையை அறிய ஆவல் ஐயா.


  நன்றி
  ல ரகுபதி

  ReplyDelete
 23. மதிப்பிற்குரிய ஐயா வணக்கம், புதிர் 61க்கு விடை: லக்கனாதிபதி 4ல் 4ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு 11ல் உச்சம்,அதனால் ஜாதகி படித்தவர்.7ம் வீட்டு அதிபதி லக்கனத்திற்க்கு 2ல், 7ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு 8ல்,கால சர்ப்ப தோஷ ஜாதகம்,களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம்,அதனால் 30 வயதிற்க்கு மேல் குரு திசையில், குரு புத்தியில் திருமணம் முடிந்திருக்கும்.

  ReplyDelete
 24. Quiz No.61

  1. 4 ம் இடத்தில் லக்னாதிபதியும் ,விரயாதிபதியான சனி பகவான் . வித்யாகாரகனான புதன் லக்னத்தில் ,ஆயினும் பாபகர்த்தாரி தோஷத்த்தில் ..இருப்பினும் 4 ம் இடத்திற்கு நீச 'குருவின் பார்வை உள்ளது. மேலும் 4 ம் அதிபதியான சுக்கிரன் 2 ம் வீட்டில் உச்சத்தில் உள்ளார். ஆகவே ஜாதகி நன்கு படித்தவர்.

  2. கேது கோடி பிடித்துச் செல்லும் காலசர்ப்ப தோசம் உள்ள ஜாதகி. 7 ம் அதிபதியான சூரியன் 7 க்கு 8 ல் ..
  7 ம் இடத்திற்கு 8 ம் அதிபதியான புதன் மற்றும் 3 ம் அதிபதியான செவ்வாய் ஆகியோரின் பார்வை ஆகிய காரணங்களால் ஜாதகிக்கு தாமதமாகவே 31 வயதில் குரு திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும். ஜாதகப்படி களத்திரக்காரனும் ,கும்ப லக்கினத்திற்கு யோககாரனுமான சுக்கிரன் உச்சமானதுடன் 7 ம் அதிபதியான சூரியனுடன் கூட்டு சேர்ந்து அந்த பெண்னுக்கு திருமண யோகத்தை வழங்கினார் . பெண்களுக்கு மற்றொரு களத்திர காரனான செவ்வாயும் உச்சத்தில் உள்ளார். உடன் குரு மங்கள யோகமும் ,குரு சந்திர யோகமும் உள்ளது.

  sivarajan
  (pondicherry)

  ReplyDelete
 25. /////Blogger Kirupanandan A said...
  என் கேள்வியைத் தாங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டீர்கள். என் அனுபவம் என்றில்லை. யாராக இருந்தாலும் 30 வயதை நெருங்கும் ஒரு ஜாதகிக்கு அப்போதுதான் ராகு தசையின் ஆரம்ப நிலை என்றால் திருமணத்திற்காக அந்த தசை முடியும் வரை காத்திருக்க முடியுமா?/////

  30 வயது நெருங்கினால். அல்லது தாண்டிவிட்டால், திருமணத்திற்கு ஜாதகத்தையே பார்க்காதீர்கள் என்று நான் சொல்லுவேன். ஜாதகம் பொருந்தினால் ஆளைப் பிடிக்காது. ஆளைப் பிடித்திருந்தால் ஜாதகம் பொருந்தாது. சோதனையாக இருக்கும். மேலும் 2 அல்லது 3 வருடங்கள் திருமணம் தள்ளிக் கொண்டே போகும். ஆகவே ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் திருமணம் செய்து கொள்ளுங்கள். விதிப்படி நடப்பது நடக்கட்டும். வர இருப்பதை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? என்பதுதான் என்னுடைய யோசனையாக இருக்கும் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com