மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.7.14

சிலிர்க்கவைக்கும் சில உண்மைத் தகவல்கள்!

 

சிலிர்க்கவைக்கும் சில உண்மைத்தகவல்கள்!

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் சில உண்மைத் தகவல்கள்!.

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில்
"சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே
இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின்
வயது 250 கோடிவருடம். ஏழுமலையானின் திருமேனியும்,
இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம்
சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்
பாறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு
365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்
வெடிப்பு ஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில்
சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலை
யானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்.
ஏழுமலையான்  திருவுருவச்சிலையில் அப்படி எதுவும்
அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால்
ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள்
எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி,காதணிகள்,
புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ்
போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி
ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது.திருமலை 3000 அடி
உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30மணிக்கு
குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம்
செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம்டிந்தவுடன்
ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால்
வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.வியாழக்கிழமை
அபிஷேகத்திற்கு முன்னதாக,நகைகளைக் கழற்றும்போது,
ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன. திருப்பதி
ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள்,
சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக
இருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும்.
பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை,முறுக்கு,
ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம்,மெளகாரம், லட்டு, பாயசம்,
தோசை, ரவாகேசரி,பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி
போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி
வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிரவேறு எந்த
நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத்தாண்டாது. வைரம், வைடூரியம்,
தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச்
செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட
எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக்
கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும்
கொண்டபுடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை
கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான
அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில்
ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம்
சாத்துவார்கள். இது மேல்சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய
பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள்
காத்திருக்க வேண்டும்.

4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய்
கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம்
செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து
வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம்
சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை
சாத்தப்படுகிறன.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று
கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க
வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,
நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு,
பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய
உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்
தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில்
பால் அபிஷேகம் செய்யப்படும்.பிறகு கஸ்தூரி சாத்தி,
புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி
வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார்
ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து
 பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால்
திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர்,
தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம்
போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்
கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி,
இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும்
இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால்
ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை
செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்ததி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ
எடை.இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை.
சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375கிலோ.
கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில்
யாரிடமும் கிடையாது. இதன்மதிப்பு ரூ.100 கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண
தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு
பல காணிக்கைகளையும், அறக்கட்டளை களையும் செய்து
அவற்றை கல்வெட்டுகளிலும்,செப்பேடுகளிலும்
பொறித்துள்ளனர். சோழ அரசியும்இங்கு வந்து காணிக்கை
சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை
ஆண்டவனைப்போலவே, அபிஷேகஅலங்காரம் செய்து
பார்க்க ஒரு சிறிய விக்கிரகம்கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி
வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ
 குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன்
பெருந்தேவி நகை களைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும்
வைத்தார். முதலாம் குலோத்துங்க   சோழன் திருமலை
தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு
உபயோகப் படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம்
நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில்
விபூதி நெற்றிப்பட்டை  சாத்தப்பட்டு திருவீதி உலா நடக்கிறது.
தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை  பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும்
பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்
கோயிலுக்கு வந்திருக்கிறார்.  அவரும் அன்னமய்யாவும் சம
காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி
தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திரசாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான்
மீது சேஷசலநாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது
கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளியமரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும்
கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர்
நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்
முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற
இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்
சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்.
அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார்.
குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள்
ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை
எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே
அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக் கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள்
விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள்
ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால்
என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு
இனத்தைச்சேர்ந்த நெசவாளர் கள் இதை பயபக்தியுடன்
நெய்கிறார்கள். உள் பாவாடை  சீமாட்டியின் திருமேனியில்
படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில்
வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ
கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடு
களிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய
வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50,000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும்,
2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு
பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில்
கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்து
விட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து
குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முசாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும்,தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம்  இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார்.
முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும்.பிறகு தென்கலை
சாத்துமுறை சேவிக்கப்படும்.பிறகு நைவேத்தியம் செய்யப்படும்.
பிறகு ஒரு தீபாராதனைசெய்யப்படும்.ஏழுமலையான் அந்த
தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி
தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த
முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த
மாலைகள் திருப்பதி கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீஆண்டாள்
ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன.
இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.169 கல்வெட்டுக்கள்
சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர்
காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர்
காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன்
(பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.
கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான்  தெலுங்கு, கன்னட
மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.

இணையத்தில் படித்தது. மனதை வியக்க வைத்ததால், உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்

---------------------------------------------------------------------
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

45 comments:

  1. இனிய தகவல்களுடன் நல்லதொரு நாள் ஆரம்பம்!.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. Respected Sir,
    Thank you for giving such wonderful informations about Lord Sri Venkatachalapathy. I have been blessed by Elumalayan to see the Lord every year for the last 25 years. I had an opportunity to go to Tirumala on 5th July 2014. Please let me know the website address containing these informations. Thank you once again. G.Murugan

    ReplyDelete
  3. அறியாத அருமையான தகவல்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
  4. அறிய தகவலுக்கு.... நன்றி ஐயா

    ReplyDelete
  5. இதுவரை அறிந்திராத பல நல்ல தகவல்கள்.

    நன்றி.

    ச. பாலாஜி.

    ReplyDelete
  6. குன்று இருக்கும் இடமெல்லாம்
    குமரன் இருக்குமிடம் அல்லவா...

    முருகா..
    முருகா..

    ReplyDelete
  7. மிக அருமையான தகவல் அய்யா !!!

    ReplyDelete
  8. I have already read this such a wonderful information about lord perumal. I think it should be 6 yrs before.

    ReplyDelete
  9. பக்திமயமான அறிய தகவள்கள் சோன்னதிற்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  10. அது பெருமாளே அல்ல, முருகன் சிலைதான்னு என் பொண்ணோட ஆசிரியர் சொன்னதா அடிக்கடி சொல்லும்

    ReplyDelete
  11. //கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட
    மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.//

    ம் ... ம்ம் ...!

    ReplyDelete
  12. very useful informations.

    I like this very much sir.

    ReplyDelete
  13. ////ராஜி said...
    அது பெருமாளே அல்ல, முருகன் சிலைதான்னு என் பொண்ணோட ஆசிரியர் சொன்னதா அடிக்கடி சொல்லும்///

    பெருமாளே என்றே திருப்புகழில்
    அருணகிரியார் சொல்லுவார்

    பெருமாள் என்பது முருகனையே
    சொன்னாலும் நம்மவர்கள்

    மாற்றிக் கொண்டு பரவாயில்லை
    மனம் தளராதீர்கள் என்பார்

    அவர்களும் முருகனை வழிபடுவது
    அவர்களுக்கும் நல்லது தானே

    நமக்கும் பெருமை தானே..
    நல்லா சொல்லுங்க..

    ராமர் கோவில் இருந்த இடத்தில்
    ராமர் வழிபாட்டினை இஸ்லாமியர்

    செய்தால் அந்த பெருமை
    செய்த இஸ்லாமியருக்கா?

    இராமரக்கு தானே..
    இஸ்லாமியரை இந்து வாக்கிய

    ராமரைப் போல..
    ரம்மியமான சூழலில் முருகனை

    வைனவர்களும் வணங்கினால்
    வையகத்திற்கு நல்லது தானே

    ReplyDelete
  14. //ராஜி said...
    அது பெருமாளே அல்ல, முருகன் சிலைதான்னு என் பொண்ணோட ஆசிரியர் சொன்னதா அடிக்கடி சொல்லும்//

    இல்லை ... காளி சிலை என்கிறார் அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.இப்பதிவில் இன்னும் சில விவரங்கள் ......
    http://dharumi.blogspot.in/2014/03/6.html

    ReplyDelete
  15. அம்பாள், முருகன் என்றெலாம் பெருமாளின் உருவத்தைச் சொல்லுகிறார்கள்.

    காலை 3 மணிக்கு அங்கப் பிரதட்சிணம் செய்தால் இலவசமாக ஒரு தரிசனம் உண்டு.

    இப்போது தரிசனத்தை கணினி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    உங்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  16. ஏற்கனவே நான் படித்த தகவல்கள் என்றாலும் தங்கள் மூலம் பலரை சென்றடைந்தது மகிழ்ச்சியே !. இதில் விசேஷம் என்னவெனில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும் 1 நாள் சிவனாகவும் வழிபடபடுகிறார் என்பது பலருக்கு தெரியாது ! வில்வ அர்ச்சனை நடக்கிறது என்பதும் பல முறை சென்றவற்கே தெரியாத தகவலாகும் !. மொத்தத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவராக அறியப்படுவது ஆச்சரியம் இல்லை !

    ReplyDelete
  17. இனிய தகவல்கள்.
    அருமை.

    ReplyDelete
  18. Thank you for sharing this information.

    ReplyDelete
  19. Thank you so much for sharing lots of unknown information for us. Can you please share the source of these information?

    Thanks
    Srinivasan

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா,

    ஏழுமலையானுக்கு இத்தனை பெருமைமிக்க வராலாறு இருப்பதை கேட்கும்போது பிரமிப்பாக இருக்கிறது,இப்பூவுலகில் வேறு எந்த கடவுளுக்கும் இத்தனை சிறப்புகள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்,மிகவும் நல்ல தகவல்களை கொடுத்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  21. அற்புதமான தகவல்கள் ஐயா.,

    நன்றி

    ReplyDelete
  22. அறியாத நல்ல தகவல்களை அறியத் தந்ததற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  23. ////Blogger துரை செல்வராஜூ said...
    இனிய தகவல்களுடன் நல்லதொரு நாள் ஆரம்பம்!.. வாழ்க நலம்!../////

    வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்!

    ReplyDelete
  24. ////Blogger GANAMURUGU said...
    Respected Sir,
    Thank you for giving such wonderful informations about Lord Sri Venkatachalapathy. I have been blessed by Elumalayan to see the Lord every year for the last 25 years. I had an opportunity to go to Tirumala on 5th July 2014. Please let me know the website address containing these informations. Thank you once again. G.Murugan/////

    மூலம் தெரியவில்லை நண்பரே! மின்னஞ்சல் மூலம் வந்ததை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  25. /////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    அறியாத அருமையான தகவல்
    சிறந்த பகிர்வு/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger S.Namasu said...
    அறிய தகவலுக்கு.... நன்றி ஐயா/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. ////Blogger S Balaji said...
    இதுவரை அறிந்திராத பல நல்ல தகவல்கள்.
    நன்றி.
    ச. பாலாஜி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger வேப்பிலை said...
    குன்று இருக்கும் இடமெல்லாம்
    குமரன் இருக்குமிடம் அல்லவா...
    முருகா..
    முருகா../////

    ஆமாம். அது அவ்வையின் வாக்கு. பெரும்பான்மையான குன்றுகளில் முருகப்பெருமான் உறைகின்றார். ஆனால் திருச்சியின் நடுவே உள்ள குன்றில் (உச்சிப்) பிள்ளையார் அல்லவா உறைகின்றார் ஸ்வாமி! அதை மறந்துவிட்டீர்களே!

    ReplyDelete
  29. ////Blogger Sivachandran Balasubramaniam said...
    மிக அருமையான தகவல் அய்யா !!!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////Blogger sasi said...
    I have already read this such a wonderful information about lord perumal. I think it should be 6 yrs before./////

    இருக்கலாம். எனக்குச் சென்றவாரம்தான் மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்!

    ReplyDelete
  31. ////Blogger seethalrajan said...
    பக்திமயமான அறிய தகவல்களைச் சொன்னதிற்கு மிக்க நன்றி ஐயா.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ////Blogger ராஜி said...
    அது பெருமாளே அல்ல, முருகன் சிலைதான்னு என் பொண்ணோட ஆசிரியர் சொன்னதா அடிக்கடி சொல்லும்////

    இருக்கலாம். கோடிக்கணக்கான மக்கள் அங்கே பெருமாளைத்தான் காணுகின்றார்கள். நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம் சகோதரி!

    ReplyDelete
  33. ///Blogger தருமி said...
    //கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட
    மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.//
    ம் ... ம்ம் ...!/////

    முதலில் திருமலை தமிழகத்தின் வசம் இருந்தது. 1957ல் நிகழ்ந்த மொழிவாரி மாநிலங்களின் பிரிவினையால், அது ஆந்திரத்திற்குச் சொந்தமாகிவிட்டது. நன்றி!

    ReplyDelete
  34. /////Blogger bg said...
    very useful informations.
    I like this very much sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////Blogger வேப்பிலை said...
    ////ராஜி said...
    அது பெருமாளே அல்ல, முருகன் சிலைதான்னு என் பொண்ணோட ஆசிரியர் சொன்னதா அடிக்கடி சொல்லும்///
    பெருமாளே என்றே திருப்புகழில்
    அருணகிரியார் சொல்லுவார்
    பெருமாள் என்பது முருகனையே
    சொன்னாலும் நம்மவர்கள்
    மாற்றிக் கொண்டு பரவாயில்லை
    மனம் தளராதீர்கள் என்பார்
    அவர்களும் முருகனை வழிபடுவது
    அவர்களுக்கும் நல்லது தானே
    நமக்கும் பெருமை தானே..
    நல்லா சொல்லுங்க..
    ராமர் கோவில் இருந்த இடத்தில்
    ராமர் வழிபாட்டினை இஸ்லாமியர்
    செய்தால் அந்த பெருமை
    செய்த இஸ்லாமியருக்கா?
    இராமரக்கு தானே..
    இஸ்லாமியரை இந்து வாக்கிய
    ராமரைப் போல..
    ரம்மியமான சூழலில் முருகனை
    வைனவர்களும் வணங்கினால்
    வையகத்திற்கு நல்லது தானே/////

    எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான் என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லுவார். ’வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா?’ என்று அவர் சிவபெருமானுக்கும் பாட்டு எழுதினார். ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா!’ என்று பெருமாளுக்கும் பாட்டு எழுதினார். ஆகவே அவர் வழி நடப்போம் வேப்பிலையாரே! எல்லாத் தெய்வங்களையும் வணங்குவோம். அந்தப் பெருந்தன்மை நமக்கும் இருக்கட்டுமே!

    ReplyDelete
  36. ////Blogger தருமி said...
    //ராஜி said...
    அது பெருமாளே அல்ல, முருகன் சிலைதான்னு என் பொண்ணோட ஆசிரியர் சொன்னதா அடிக்கடி சொல்லும்//
    இல்லை ... காளி சிலை என்கிறார் அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.இப்பதிவில் இன்னும் சில விவரங்கள் ......
    http://dharumi.blogspot.in/2014/03/6.html/////

    இருக்கலாம். கோடிக்கணக்கான மக்கள் அங்கே பெருமாளைத்தான் காணுகின்றார்கள். நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம் நண்பரே!!
    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. //////Blogger kmr.krishnan said...
    அம்பாள், முருகன் என்றெலாம் பெருமாளின் உருவத்தைச் சொல்லுகிறார்கள்.
    காலை 3 மணிக்கு அங்கப் பிரதட்சிணம் செய்தால் இலவசமாக ஒரு தரிசனம் உண்டு.
    இப்போது தரிசனத்தை கணினி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா!//////

    கோடிக்கணக்கான மக்கள் அங்கே பெருமாளைத்தான் காணுகின்றார்கள். நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம்.
    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  38. /////Blogger murali krishna g said...
    ஏற்கனவே நான் படித்த தகவல்கள் என்றாலும் தங்கள் மூலம் பலரை சென்றடைந்தது மகிழ்ச்சியே !. இதில் விசேஷம் என்னவெனில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும் 1 நாள் சிவனாகவும் வழிபடபடுகிறார் என்பது பலருக்கு தெரியாது ! வில்வ அர்ச்சனை நடக்கிறது என்பதும் பல முறை சென்றவற்கே தெரியாத தகவலாகும் !. மொத்தத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவராக அறியப்படுவது ஆச்சரியம் இல்லை !/////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி முரளிகிருஷ்ணா!

    ReplyDelete
  39. ////Blogger Karthikraja K said...
    இனிய தகவல்கள்.
    அருமை.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. Blogger Prakash Kumar said...
    Thank you for sharing this information.

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. /////Blogger Srinivas said...
    Thank you so much for sharing lots of unknown information for us. Can you please share the source of these information?
    Thanks
    Srinivasan/////

    மூலம் தெரியவில்லை! மின்னஞ்சல் மூலம் வந்ததை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  42. ////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,
    ஏழுமலையானுக்கு இத்தனை பெருமைமிக்க வராலாறு இருப்பதை கேட்கும்போது பிரமிப்பாக இருக்கிறது,இப்பூவுலகில் வேறு எந்த கடவுளுக்கும் இத்தனை சிறப்புகள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்,மிகவும் நல்ல தகவல்களை கொடுத்ததற்கு நன்றி ஐயா.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  43. ////Blogger Senthil Nathan said...
    அற்புதமான தகவல்கள் ஐயா.,
    நன்றி/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. /////Blogger சே. குமார் said...
    அறியாத நல்ல தகவல்களை அறியத் தந்ததற்கு நன்றி ஐயா...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. ஏற்கனவே படித்திருந்தாலும் பெருமாளின் பெருமைகள் மேலும் மேலும் வியக்கத்தான் வைக்கிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com