மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.7.14

Astrology: quiz.64: வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க!

 
Astrology: quiz.64: வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க!

Quiz No.64: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தி நான்கு

29.7.2014


Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.



அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. thirumanam nadanthu irukkum
    7 m idathirkku guruvin parvai irukku
    7 m aathi suriyan 10 il irukkinrar
    kalathirakaraganudan guruvum lagnathipathi sanium ullarkal

    ReplyDelete
  2. It is very difficult to analayse and predict it.

    1.Jathagar Mesa Rasi and Kumba lagnam. Lagnathil kethu and mandi amarvathu mosmanama amaipu.
    DOB:Novembar 30, 1960 12.45 PM.

    Rasil Lagnathiruku 7il Raghu, navamsathil lagnathiruku 7il Sani (utchampettru) might have stopped the marriage.
    Jagathakarukku 21 vayasukumel vantha dasa ellam 6ku udaiya chandra desa and 3kudaiya vakiram pettra chevvai dasa.. also kalathirakaran sukuran and 7th house owner Sun in 8th place in navamsa.

    2vathu vittinmel entha oru suba paravai illai.
    lagnathipathi 2 paral, 7th house athipathi 3 paral..sukuran 4 paral.. kalayana yogammillai.

    ReplyDelete
  3. Respected Sir
    Not sure if it is trick question.

    Since you ask us to only answer to the question, I am not going to say anything about Rahu being in 7th house or Sukra/Mars Parivarthanai in navamsa...

    He is definitly married. He got married after 21 in Sun dasa.
    1. 7th lord sun is in kentram, friends house and vargothamam.
    2. Lknathipathi in 11th house/uchham in Navamsa
    3. 2nd/11th lord in his own 11th place and looks at 7th house.

    ReplyDelete
  4. Respected sir

    1. He got marriage from other religion (Rahu is in seventh house)
    2. But Marriage life is not satisfied he got Divorcee / Widow.
    Sukran is join with Virayathipathee Saturn.
    Regards
    Rm.Srithar

    ReplyDelete
  5. குருஜி வாணக்கம்,

    லக்னாதிபதி 11ல் உடன் பாக்யாதிபதி சுக்ரன் அதுமட்டுமா ஆட்சி பெற்ற குருவும் அங்கேயே அமர்ந்து இருக்கிறார், மிக மிக சிறப்பான அமைப்பு.

    7ல் ராகு இருந்தாலும் எந்த பதிப்பும் இருகாது இந்த அன்பருக்கு, ஏனெனில் அந்த வீட்டு அதிபதி 10ல் பலமாக அம்ர்ந்து இருகிறார் அதுவும் வர்கோத்துவம் பேற்று அத்துடன் குரு பார்வை 7ம் வீட்டுகு கிடைக்கிறது. ஒரே ஒரு குறை சூரியன் லக்னாதிபதிக்கு 2/12 அமர்ந்து இருபதுதான். அதாலால் மறு திருமணம் நடைபேறும்.
    மனைவி அரசங்க அதிகரியா இருபார். சூரிய திசையிலெ திருமணம் நடை பேற்று இருகும். நன்றி

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய ஐயா !!

    புதிர் எண்: 64 இற்கான பதில் !!!

    குறிப்பிடப்பட்ட அன்பர் கும்ப லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி லாபஸ்தானத்தில் லாபாதிபதி குருவுடன். லக்கினாதிபதி சனி, யோகம் மற்றும் களத்திரகாரகன் சுக்கரனுடன் கிரக யுத்தம். இருந்தாலும் ஏழாமதிபதி சூரியன் நட்பு வீட்டில் மற்றும் வர்கோதமத்தில். முதல் நிலை கேந்திரவீடான பத்தாம் வீட்டில். மேலும் முதல் நிலை சுபகிரகம், மற்றும் குடும்பஸ்தானாதிபதி குருவின் ஒன்பாதம் விசேச பார்வையில் ஏழாம் வீடு.ஏழில் ராகு இருந்ததால் தார தோஷம். இவை அனைத்தும் இருந்தாலும் ஏழாமதிபதியின் (சூரியன்) திசை 28 வயது வரை உள்ளது. சூரிய திசை சுக்கர புத்தியில் 28 ஆம் வயதில் திருமணம் நடைபெற்று இருக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு !!!!!

    இப்படிக்கு

    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  7. dear sir.
    அன்பருக்கு திருமனம் நடந்திருக்கும்
    சூரியதிசையில் நடந்திருக்கும்
    2ம் அதிபதி குரு 11ல் ஆட்சி!
    குரு 7ம் இடத்தை பார்வை செய்கிரது
    7 ம் அதிபதி 10ல் திக்பலம் !!!
    5 ம் அதிபதி 9ல் பாக்யவான் !!!
    k.sakthivel

    ReplyDelete
  8. அய்யா,
    7-ஆம் வீட்டில் ராகு, 2-ஆம் வீட்டிற்குரிய குரு, சனி மற்றும் சிக்கிரன் பிடியில். ஆகையால் இந்த ஜாதககாரருக்கு திருமண நடைபெற சாத்தியம் இல்லை.

    ReplyDelete
  9. திருமணம் நடைபெற்று இருக்கும்.
    1. 7 ஆம் இடத்து அதிபதி 10ல் , குருயின் 9 ம் பார்வை 7 ம் வீட்டின் மேல்.களத்திரகாரன் 11 ல் இருப்பதாலும் திருமணம் நடைபெற்று இருக்கும்.

    இப்படிக்கு
    மு.சாந்தி

    ReplyDelete
  10. வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் நமது வகுப்பறை சார்பாக,ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதக அன்பருக்கு
    திருமணம் நடை பெற்றுள்ளது.
    அவருடைய சந்திர தசா குரு புக்தியில் சுக்கிரன் அந்தரத்தில் அவருடைய 30 வயதிற்க்கு மேல் திருமணம் நடந்துள்ளது.
    அலசல்:
    1). கும்ப லக்னமாகி,லக்னாதிபதி சனி 11ல், அந்த வீட்டதிபன் ஆட்சி பெற்ற குருவுடனும்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் கூட்டணி.அத்துடன் லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதியான சனியின் பார்வை.
    2). ஏழாமிடத்தில் ராகு இருப்பினும்,இரண்டாம் அதிபதி ஆட்சி பெற்ற குருவின் பார்வை திருமணத்தை நடத்தி வைத்துள்ளது.
    3). லக்கின அதிபதி 11ல். 2ம் பதி 11ல். களத்திரகாரகன் 11ல். 7ம் பதி சூரியன் உச்ச கேந்திரமான 10ம் வீட்டில்.
    நன்றியுடன்,
    பொன்னுசாமி.

    ReplyDelete
  11. பிறந்த நாள் நவம்பர் 30 1960
    திருமண நடைபெற வாய்ப்பு உள்ளது.
    7 ஆம் அதிபதி சூரியன் பத்தில்.
    தன் (சூரியன்) திசையில் நடத்தி வைப்பார்.
    மேலும் குரு ஏழாம் வீட்டை பார்க்கிறார்.
    காரகன் மற்றும் யோகாதிபதி சுக்கிரன் 11 இல் உடன் லாபாதிபதி மற்றும் 2 ஆம் இடத்து அதிபதி குரு மற்றும் லக்கினாதிபதி சனியுடன் உள்ளார்.
    மேலும் 10 இடத்தின் அதிபர் 5 இல் இருந்து 11 ஆம் இடத்தை பார்க்கிறார்.

    ReplyDelete
  12. வணக்கம் குரு,

    7இல் ராகு இருந்தாலும் 7க்குடைய சூரியன் ராசியில் கேந்திரமாகிய 10மிடதில் மற்றும் வர்கோதமம், லக்னாதிபதி சனி ராசியில் யோகாதிபதி சுக்கிரன் மற்றும் குடும்பாதிபதியும் லபாதிபதியும்மான குருவுடன் லாப ஸ்தானத்தில் சேர்க்கை அத்துடன் நவாம்சத்தில் உச்சம். ஆகவே திருமணம் நிச்சயம் சற்று தாமதமாக நடந்திருக்கும். அதாவது இந்த ஜாதகருடைய 27வது வயதில் சூரிய திசை சுக்கிரன் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். காரணம் செவ்வாயின் பார்வையில் சனி, குரு, சுக்கிரன் மற்றும் அயன சயன போக ஸ்தானம்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 64 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    கும்ப லக்கின ஜாதகரான இவருக்கு,
    லக்னாதிபதியான சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள். அவர்கள் இருவரும் குடும்ப ஸ்தான அதிபதி குருவுடன் சேர்க்கை பெற்று லாபஸ்தானத்தில் இருப்பதாலும் களத்திர ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைப்பதாலும் அவருடைய 27 வது வயதில் திருமணம் ஆகி இருக்கும்.

    ReplyDelete
  14. அய்யா ,
    அன்பர் அஸ்வினி-4. கேது நட்சத்திரம். மேஷா ராசி கும்ப லக்னம். அன்பருக்கு நிச்சயம் திருமணம் உண்டு! லக்னத்தில் கேது ஏழில் ராகு.இருந்தாலும் 11-ல் இருந்து இரண்டாம் அதிபதியான குரு தன்னுடைய ஆட்சி வீடான தனுசில் இருந்து ஏழாம் வீட்டை ஒன்பதாம் பார்வை பார்க்கிறார். வலுவான பார்வை. அவர் லக்னாதிபதி சனியுடனும் களத்திர காரகன் சுக்கிரனுடனும் கூட்டு வேறு ! அவனே திருமணத்தை நடத்தி முடிப்பான் !. ஏழாம் அதிபதி சூரியன் கேந்திரத்தில் நல்ல ஷட்பலத்துடன் இருக்கிறார். ராகு சூரியனின் வீட்டில் வலிமை குறைந்து காணப்படுகிறார் !. நவம்சத்தில் ஏழில் சனி இருந்தாலும் அவர் உச்சம் பெற்று இருக்கிறார் !. அதனால் திருமணம் நிச்சயம் உண்டு !
    எப்போது என்றால் சூரிய தசையில் குரு அல்லது சுக்கிர புக்தியில் நடந்திருக்கும் !

    ReplyDelete
  15. இந்த அன்பர் 30 நவம்பர் 1960, பகல் 12மணி 24 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடத்தினை சென்னை என்றே எடுத்துக்கொண்டேன்.

    ஜாதகத்தின் சிறப்புக்கள்:
    லக்கினாதிபதி சனைச்சரன் 11ம் இடத்தில் இருப்பது.
    குடும்ப ஸ்தானதிபதி குருபகவான் 11ம் இடத்தில் இருப்பது.
    யோககாரகனும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 11ல் நிற்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை 7ம் இடத்திற்கு இருப்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை சந்திரனின் மேல் இருப்பது.
    ஏழாம் அதிபன் சூரியன் கேந்திரம் ஏறி 10ல் நின்றது.

    ஜாதகத்தின் எதிர்மறைகள்:

    லக்கினத்திலேயே கேதுவும் மாந்தியும் நின்றது.
    ஏழாம் இடத்தில் ராகு நின்றது.
    12ம் இடத்திற்கு செவ்வாய் பார்வை
    லக்கினாதிபதியை செவ்வாய் பார்ப்பது.
    களத்திரகாரக‌னை செவ்வாய் பார்ப்பது.
    எட்டாம் இடத்திற்கு செவ்வாய் பார்வை.
    எட்டம இடத்திற்கு சனியின் பார்வை.

    இந்த ஜாதகருக்கு 28 வயதில் திருமணம் சந்திர தசா சந்திரபுக்தியில்.
    40 வயதில் செவ்வாய் தசா சனிபுக்தியில் மண முறிவு.

    ReplyDelete
  16. அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு,
    இது என்னுடைய முதல் முயற்சி. தவறு(கள்) இருப்பின் மன்னிக்கவும். classroom2007-ல் 170வது பாடப்பகுதி வரை படித்துள்ளேன். தெரிந்த ஜோதிட அறிவை வைத்து என்னுடைய பதிலைப் பதிவுச்செய்துள்ளேன்.
    I.திருமணம் நடக்கும். ஆனால் தாமதமாகும்.
    திருமணம் நடப்பதற்கான அமைப்புகள்:
    1. 7-ஆம் அதிபதி சூரியன் நன்மை பயக்கும் ராசிகளில் ஒன்றான விருட்சகத்தில் இருப்பது.
    2. சுக்கிரனும்,குருவும் சேர்ந்து 11 ஆம் வீட்டில் இருப்பது.
    3. 7-ஆம் வீட்டின் மீதுள்ள குருவின் 9-ஆம் சிறப்புப்பார்வை.
    4. வர்த்தக்கோமம் ஆகியுள்ள 7-ஆம் அதிபன்.
    தாமதமான திருமணத்திற்குக் காரணங்கள்:
    1. 7இல் உள்ள ராகு மற்றும் லக்கனத்திலிருந்து 7-ஆம் பார்வையைச் செலுத்தும் கேது.
    2. சனியின் பிடியில் உள்ள சுக்கிரனும்,குருவும் மற்றும் அம்சத்தில் 7-ல் உள்ள சனி.

    II.திருமணம் சூர்ய மஹா தசை ,குரு அல்லது சுக்கிர புக்தியில் நடக்கும்.

    இதுவரை வகுப்பின் வெளியிலிருந்து உங்களின் பாடங்களை உங்களின் அனுமதியின்றிக் கவனித்துவந்தேன். என்னுடைய முதல் வருகையைப்பதிவுச் செய்து வகுப்பைத் தொடர தங்களின் அனுமதியை வேண்டிக்கொள்கிறேன்.
    இங்கனம்,
    உலோ.பிரபாகரன்

    ReplyDelete
  17. The native is born on 30-Nov-1960 at around 12.20pm, considering chennai as birth place.
    1. Lagnathipathi Shani is in 11th house with 2nd and 11th lord Guru and yogakaraka and bhagyathipathi Sukran.
    Grahayutham in 11th house. Chevvai (in Vagram) is aspecting lagnathipathi, Sukran and lagnathipathi.
    2. Lagnam has Maandhi and ketu and Maandhi is aspecting 7th house. So this would have caused delays 2nd house lord Guru is aspecting 3rd house, 5th and 7th house.
    7th house lord Suryan is in 10th house.
    3. Yogakaraka Sukran is aspecting 5th house (purva punya sthanam).

    Marriage of the native would have got delayed. The native might have got married in Chandra dasa
    or chevvai dasa.

    ReplyDelete
  18. 7ல் இராகு, 7ம் வீட்டு சூரியன் அந்த வீட்டிற்கு 4ம் வீடான 10ல் வர்கோத்தமம் பெற்றிருக்கிறார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 11ல், 7ம் வீட்டிற்கு 5ல் இருக்கிறார். 2ம் வீடான குடும்ப ஸ்தான அதிபதியான குரு பகவானும் 11ல் களத்திரகாரகருடன் இருக்கிறார். இருப்பினும் களத்திரகாரகருக்கும், குரு பகவானிற்கும், சனி கூட்டும், செவ்வாயின் பார்வையும் உள்ளது. ஆனால் சனி இலக்கினாதியும் கூட. 1ல் மாந்தியும் கேதுவும் 7ல் இராகுவும் உள்ளனர். இதனால் ஜாதகருக்கு திருமணம் சூரிய மகா தசையில் சுக்கிர புத்தியில் நடந்திருக்கும்.

    ReplyDelete
  19. திருமணம் நடை பெற்றிருக்கும்..
    23,24 வயதில்....
    குரு வின் 9பார்வை 7ஐ பார்ப்பதால்...

    ReplyDelete
  20. திருமணம் நிச்சயமாக நடைபெற்று இருக்கும்.

    1. லக்கணாதிபதி, குடும்ப ஸ்தானாதிபதி , களத்திர காரகன் மூவரும் கூட்டணியாக 11.ல்.
    2. களத்திர ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் 10-ம் வீட்டிலும் , வர்கோதததமம் பெற்றும் உள்ளார்.

    ஆனால்,
    ராகு மற்றும் கேது வின் ஆதிக்கம் 7-ம் வீட்டில் + செவ்வாய் பார்வை மூவர் கூட்டணி மீது.
    செவ்வாய் மற்றும் சனி நேர் பார்வை தாமத / காதல் திருமணத்திற்கு காரணமாய் இருக்கிறது.

    ReplyDelete
  21. Dear sir
    The person got married two times minimum. 2nd lord is with sukran and sani. 7th place rahu. Multiple marriage and not satisfied.

    ReplyDelete
  22. ஏழாமிடத்தில் ராகு இருப்பினும் யோகாதிபதியான சுக்கிர சாரம் பெற்றும் குடும்பாதிபதியான குருவின் (ஆட்சி பலத்துடன் இருக்கிறார்) பார்வையைப்பெற்ற ராகு திருமணத்திற்கு இடையூறு செய்ய மாட்டார்.. வாழ்க்கைத்துணை வழியே சிற்சில பிரச்சனை அல்லது சிறு பிரிவு இருந்திருக்கக்கூடும்

    குடும்பாதிபதி, யோகாதிபதி மற்றும் லக்னாதிபதி லாபத்தில் நிற்பதால் மிக இளைய வயதில் திருமணம் ஆகி இருக்கும்.. இள வயதில் வந்த சுக்கிரதசை 21 வயது முடிய.. சுக்கிரதசை முடிவதற்குள் திருமணம் ஆகி இருக்கும்..

    ReplyDelete
  23. kandipaka suriya thisaiyil thirumanam nadanthirukum

    ReplyDelete
  24. ஐயா வணக்கம்..

    லக்கினத்தில் மாந்தி.உடன் கேது ,7 ல் ராகு. 7 ம் அதிபதி சூரியனும், சுக்கிரன் ,குரு, லக்னாதிபதி சனி ஆகியோர் 1 -12 நிலையில் கிரக யுத்தத்தில் உள்ளனர். இவர்களின் மேல் 'செவ்வாயின் பார்வையும் உள்ளது.
    ஆயினும் 7 - ம் அதிபர் சூரியன் 'வர்கோத்தமம்' அடைந்து வலுவாக உள்ளார். அம்சத்தில் சூரியனும் ,களத்திரகாரகன் 'சுக்கிரனும் ஒன்றாக உள்ளனர். லக்கினாதிபதி 'சனியும் அம்சத்தில் உச்சமாக உள்ளார். மேலும் 7 ம் வீட்டை 'குரு' தன் விசேஷ 9 - ம் பார்வையால் பார்க்கிறார்.
    ஆகவே இந்த ஜாதகருக்கு சூரிய திசையில் திருமணம் நடந்திருக்கும் . இது காதல் திருமணமாக இருந்திருக்கும்.

    sivarajan
    (pondicherry)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com