மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.5.14

தென்றல் வந்து எதைத் தேடும்?

 
தென்றல் வந்து எதைத் தேடும்?

பக்தி மலர்

23.5.2014

இன்றையப் பக்தி மலரை 'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------
கோபுர வாசலிலே - குமரா உன்
கோலம் தெரியுதய்யா
(கோபுர வாசலிலே ... )

கொஞ்சும் தமிழ் கேட்டு - உன் முகம்
குறுநகை புரியுதய்யா
ஐயா ...
(கோபுர வாசலிலே ... )

காவிரி நீர் பெருக்கு - உன் மீது
கவிதைகள் பாடுதய்யா

பூவிரி சோலை எல்லாம் - தென்றல் வந்துன்
பூமுகம் தேடுதய்யா
முருகா ...
(கோபுர வாசலிலே ... )

குன்று மலைகளெல்லாம் - நீ வாழும்
கோவில்கள் ஆகுமய்யா

குமரிக் கடலலைகள் - உன்னை வந்து
கும்பிட்டு போகுமய்யா
முருகா ...
(கோபுர வாசலிலே ... )

கொஞ்சும் தமிழ் கேட்டு - உன் முகம்
குறுநகை புரியுதய்யா
ஐயா ...
(கோபுர வாசலிலே ... )   


பாடலைப் பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===============================================

13 comments:

  1. விடியல் லே எழுந்துகினு இந்த பாட்டு ரொம்ப நல்லா கீதே அப்படின்னு
    தேடி தேடி பார்த்தாலும் சூலமங்கலம் பாடினது கிடைக்கலியே....


    முருகா.ஞான பண்டிதா...!!

    ஒரு லிங்க் தந்திருக்க கூடாதா ...முருகா.

    பரவா இல்லை. நானே பாடி விடுறேன்.

    பொருத்தமா இல்லாட்டியும்
    பொறுத்துக்க முருகா.

    சுப்பு தாத்தா.
    www.kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  2. எனக்கு பிடித்த அருமையான பாடல். கீழ்க்கண்ட பாடல் கூட கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.நன்றி ஐயா!

    கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
    காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)

    மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
    மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)

    கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
    கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
    விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
    வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் (கலியுக)

    பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள், சௌம்யா
    ஆக்கம் : பெரியசாமி தூரன்
    ராகம் : ப்ருந்தாவன சாரங்கா
    தாளம் : ஆதி

    ReplyDelete
  3. என்றும் நினைவில் நிற்கும் இனிய பாடல்.. பதிவின் மூலமாகக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. திருச்செந்தூர் கோவிலின் படத்தை கண்டவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி. நாள் இனிதே தொடங்கியது:)

    ஒவ்வொரு முறை எங்கள் ஊர் திருநெல்வேலிக்கு செல்லும் போதும் நான் தவறாமல் செல்லும் கோவில் திருச்செந்தூர். அங்கு செல்லும் போது கிடைக்கும் அமைதி வேறெங்கும் எனக்கு கிடைத்ததில்லை. குன்றுருவ வேல் வாங்கி வந்த முகம் கொண்ட குமரனுக்கு கடலோரத்தில் உள்ள ஒரே கோவில் திருச்செந்தூர். இங்கே அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானுக்கு சிறப்பாக ஒரு சன்னிதி உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று குமரனை உளமாற வணங்கினால் தோஷ நிவர்த்தி உண்டென்று படித்திருக்கிறேன். அய்யா, தாங்கள் முருக பக்தர் என்பதால் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று சுப்பிரமனியரை வணங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கோவிலின் சிறப்பை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று விழைகிறேன். பலர் கூற கேட்டும், தங்கள் நடையில் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை. தாங்கள் பூரண உடல் நலம் பெற்றவுடன், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

    ReplyDelete
  5. //////Blogger sury Siva said...
    விடியல்லே எழுந்துகினு இந்த பாட்டு ரொம்ப நல்லா கீதே அப்படின்னு
    தேடி தேடி பார்த்தாலும் சூலமங்கலம் பாடினது கிடைக்கலியே....
    முருகா.ஞான பண்டிதா...!!
    ஒரு லிங்க் தந்திருக்க கூடாதா ...முருகா.
    பரவா இல்லை. நானே பாடி விடுறேன்.
    பொருத்தமா இல்லாட்டியும்
    பொறுத்துக்க முருகா.
    சுப்பு தாத்தா.
    www.kandhanaithuthi.blogspot.com/////

    வாருங்கள் சூரி சார்! உங்கள் வரவு நல் வரவாகுக!
    நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டதே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி
    பாடலைப் பாடி பதிவிட்டது மிக்க மகிழ்ச்சி
    லிங்க் கிடைத்திருந்தால், நீங்கள் பாடியிருக்க மாட்டீர்கள்!
    அதுவும் முருகனின் விளையாட்டுதான்
    நன்றி!

    ReplyDelete
  6. //////Blogger venkatesh r said...
    எனக்கு பிடித்த அருமையான பாடல். கீழ்க்கண்ட பாடல் கூட கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.நன்றி ஐயா!
    கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
    காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)
    மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
    மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)
    கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
    கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
    விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
    வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் (கலியுக)
    பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள், சௌம்யா
    ஆக்கம் : பெரியசாமி தூரன்
    ராகம் : ப்ருந்தாவன சாரங்கா
    தாளம் : ஆதி////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    Very nice. Thank you Sir!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger துரை செல்வராஜூ said...
    என்றும் நினைவில் நிற்கும் இனிய பாடல்.. பதிவின் மூலமாகக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி..//////

    அதைத்தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. //////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    உருவாய்
    அருவாய்
    உளதாய்
    இலதாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  10. //////Blogger thozhar pandian said...
    திருச்செந்தூர் கோவிலின் படத்தை கண்டவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி. நாள் இனிதே தொடங்கியது:)
    ஒவ்வொரு முறை எங்கள் ஊர் திருநெல்வேலிக்கு செல்லும் போதும் நான் தவறாமல் செல்லும் கோவில் திருச்செந்தூர். அங்கு செல்லும் போது கிடைக்கும் அமைதி வேறெங்கும் எனக்கு கிடைத்ததில்லை. குன்றுருவ வேல் வாங்கி வந்த முகம் கொண்ட குமரனுக்கு கடலோரத்தில் உள்ள ஒரே கோவில் திருச்செந்தூர். இங்கே அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானுக்கு சிறப்பாக ஒரு சன்னிதி உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று குமரனை உளமாற வணங்கினால் தோஷ நிவர்த்தி உண்டென்று படித்திருக்கிறேன். அய்யா, தாங்கள் முருக பக்தர் என்பதால் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று சுப்பிரமனியரை வணங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கோவிலின் சிறப்பை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று விழைகிறேன். பலர் கூற கேட்டும், தங்கள் நடையில் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை. தாங்கள் பூரண உடல் நலம் பெற்றவுடன், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.//////

    ஆஹா...என்னை எழுதப் பணித்ததே அவர்தான். அவரைப் பற்றி எழுதுவதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். உங்களின் பக்திக்கும் ஆர்வத்திற்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  11. சிறந்த பாடல் பகிர்வு

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com