மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.5.14

Astrology: Quiz 54: காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்?

 
Astrology: Quiz 54: காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்?

புதிர் எண் 54ற்கான விடை:
---------------------------------------------
யோகத்தின் முக்கியத்துவம்.

காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகக்காரர்கள். சின்ன வயதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவதிக்கு உள்ளாவார்கள். ஆனால் அதன் காலம்  முடிந்த பிறகு, அதாவது 32 அல்லது 33 வயதிற்குப் பிறகு நன்றாக வந்தால் போதாதா? அப்படி ஏற்பட்டால், அதற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும். அதைப் பின் யோக ஜாதகம் என்று கூறுவார்கள்.  That is the second part of the life will be better.

அப்படி அதே ஜாதகம் யோகம் உள்ளதாக மாற வேண்டுமென்றால், ஜாதகத்தில் நல்ல யோகங்கள் ஒன்றோ அல்லது இரண்டோ நிச்சயம் இருக்க வேண்டும். அந்த யோகங்களால் நிச்சயம் நல்ல பலன்கள் உண்டாகும்

ஒரு உதாரண ஜாதகத்தின் மூலம் அதை அலசுவோம்

மகர லக்கின ஜாதகம். உத்திராட நட்சத்திரம்.

1. சச யோகம் உள்ளது. சனி லக்கினத்தில் இருப்பதால் அந்த யோகம். உடன் சுபக்கிரகங்களான சந்திரனும் குருவும் சனியுடன் சேர்ந்து இருப்பதால் அந்த யோகம் வலிமை பெற்று விளங்குகிறது.

2. சனி பத்தாம் பார்வையாக ஜாதகத்தின் பத்தாம் இடத்தைப் பார்க்கிறது. சனி திசையில் ஜாதகன் அதீதமான உத்தியோக உயர்வுகளைப் பெற்று தான் பார்த்த உத்தியோகத்தில் உச்சத்தைத் தொட்டான்.

3. கஜ கேசரி யோகம் உள்ளது. மகர லக்கினத்திற்கு குரு 3 மற்றும் 12ஆம் இடங்களுக்கு உரியவன். அதனால் அந்த யோகம் பயனில்லாமல் போய்விட்டது. யோகத்தில் கிரகம் அமர்ந்திருக்கும் இடம் போல ஆதிபத்தியம் கொண்ட இடமும் முக்கியம். அதை மனதில் கொள்க!

4. ஆனால் அந்த் கஜகேசரி யோகத்தால் ஒரு பயனும் இல்லாமல் போகாது. குடும்ப வாழ்க்கையில் ஜாதகனுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

5. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது. ஆனால் அதை ஒரு நல்ல யோகம் என்று சொல்ல முடியாது. சின்னச் சின்ன வெற்றிகள் எல்லாம் வாழ்க்கையின் பின் பகுதியிலேயே கிடைக்கும்!

Success if any is said to come late in life!
--------------------------------------------------------

கேட்கப்பெற்ற கேள்விகள்:

1. ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது. எத்தனை வயதில் நிமிர்ந்து உட்கார்ந்தார்?
2.பார்த்த வேலை ஸ்திரமாகி நிம்மதி கிடைத்ததா? அல்லது கிடைக்கவில்லையா?


சரியான விடைகள்:
1. ஜாதகனுக்கு 38 வயதிற்குப் பிற்கு, அதாவது ராகு திசை முடிந்து குரு மகா திசை ஆரம்பித்தவுடன் நல்ல காலம் பிறந்தது. அப்போதுதான் அவரால் நிமிர்ந்து உட்கார முடிந்தது.

2.சனி ஸ்திரமாக இருந்ததால், நல்ல வேலை கிடைத்தது. ஆனால் 38 வயதிற்குப் பிறகு தான் படிப்படியாக உயர்வுகள் கிடைத்தது. சனி திசையில் ஜாதகன் அதீதமான உத்தியோக உயர்வுகளைப் பெற்று தான் பார்த்த உத்தியோகத்தில் உச்சத்தைத் தொட்டான்.

------------------------------------------------------
இரண்டு விடைகளையும் சரியாக அல்லது ஒட்டி எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். மொத்தம் 10 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகுக! ஒரு விடையை மட்டும் சரியாக எழுதியவர்களை நான் கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதை மனதில் கொள்ளவும். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------
1
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Here is my answer.
    1. After 36 (in sani Dasa)
    20 to 36 Guru dasa. Guru is 3rd and 12th lord and neecham.
    2. His will have stable job as he has dharma karmathipathi yogam (Sukra/Budha parivarthanai) and guru looks at 10th lord Sukra.
    Kethu starts the Kala sharba dosa. But Guru, Sukra, Butha and Chandran have more tan 5 parals.
    Wednesday, May 21, 2014 9:14:00 AM////
---------------------------------------------------------------
2  
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 54 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    6 மற்றும் 9ம் பதியான புதன் 10ல், செவ்வாய் மற்றும் நீச்ச சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 10ம் பதியான சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகியிருப்பதால், தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்பட்டு வலுப்பெற்று இருப்பதாலும், சுக்கிரனுக்கு குரு பார்வை கிடைப்பதாலும் ஜாதகருக்கு பார்த்த வேலை ஸ்திரமாகி இருக்கும்.
    ஆனாலும் கால சர்ப்ப தோஷம் இருப்பதால் ராகு திசை முடிந்து குரு திசையில்தான் அதாவது அவருடைய 39வது வயதுக்குப் பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.
    Wednesday, May 21, 2014 10:42:00 AM/////
--------------------------------------------------------------
3
//////Blogger SIVA said...
    வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கம் ..
    17/OCT/61 2:15 PM பிறந்த இந்த ஜாதகர் , அஷ்டமா & அஷ்டமதிலுள்ள கிரகங்கள் மற்றும் மாரகதிபதிகளின் திசையை கடந்து தனது குரு திசையில் இப்போது இருக்கின்றார் பத்தில் புதன் ஆதித்ய யோகம் கேந்திரமாகிய பத்தில் இந்த யோகம் இருந்தால் தொழிலில் திறமையாக செயல்படலாம் .ஆகவே குரு திசையில் இவர் தொழிலில் நிமிர்ந்து நிற்பார்., இவருக்கு மூன்று கிரகங்கள் நீச பங்கம் ஆகின்றது .. குரு ,சுக்கிரன் , சூரியன் . இதில் முக்கியமானது என்னவென்றால் சுக்கிரனும் புதனும் தர்மகர்மாபதி யோகத்தில் பரிவர்தனை . மேலும் லக்கினத்தில் உள்ள தொழில்காரகன் சனி பார்வை பத்தில்., தனகாரகன் குரு பார்வை ஒன்பதாமிடதிற்கு ., பரல் கணக்கில் மிகவும் பலமான சுக்கிரன் மற்றும் குரு,
    இரண்டு மற்றும் ஏழாம் அதிபதிகளின் சேர்க்கை , சஸமகா மற்றும் கஜகேசரி யோகத்தால் திடமான மற்றும் நன்மையான குணாதிசயங்கள் இவருக்கு உண்டு., ..   
    எனது இந்த கணிப்பிற்கு தங்களது மேலான ஆலோசனைகளை எதிர்பார்கிறேன்...
    Wednesday, May 21, 2014 11:37:00 AM//////
----------------------------------------------------------------------

/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    This person have kaala sarpa dosam leading by Kethu.
    Placement of neecha sukran in 9th help the native in later stage of life.
    1. After the age of 39 when guru dasa start , the native got improvement in the life. Even though guru is neecham, since it is placed in lagna it will do good to him.
    2. Until the age 39, he could not stand in one job, because Sun in neecham in 10th place, 10th lord sukran also neecham.
    But the lagna lord sani made him to work hard after the age of 39.
    Thanking you.
    C.Jeevanantham.
    Wednesday, May 21, 2014 12:07:00 PM/////
------------------------------------------------------------------------

/////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    புதிர் எண் 54 இற்கான விடை:
    1) ஜாதகருக்கு ஒரு 26 வயது வரை காலசர்பதோசம் உண்டு. இளம் வயதில் கஷ்ட ஜீவனம்.
    2) தர்மகர்மாதிபதி யோகம். மகர லக்கினத்திற்கு சுக்கரனும், புதனும் யோகக்காரர்கள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை பெற்று இருப்பதுடன் சுக்கரன் நீசம் பெற்றாலும் 7 பரல்கள், புதனும் 6 பரல்களுடன் பலத்துடன் இருப்பதுடன் ராகு திசை 21 வயதில் தொடக்கம். ராகுவில் ராகுவும், குருவும் முடிந்த பின்னர் ஜாதகர் அசுர வளர்ச்சி பெற்று இருப்பார். ராகு திசை வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குரு திசையில் பல விரயங்கள் உண்டு.
    Wednesday, May 21, 2014 12:33:00 PM//////
---------------------------------------------------------------------------
6
/////Blogger kmr.krishnan said...
    1. ஜாதகரின் 36 வயது வரை கால சர்பதோஷம் படுத்தி வைத்தது. ராகு தசா சந்திர புக்தி ஜுலை 1997 முதல் தான் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
    2.குருதசா பிப்ரவரி 2000 முதல் துவக்கம்.அதாவது 40 வயது போல பார்த்த வேலையில் உறுதித்த‌னமை ஏற்படடது.
    Wednesday, May 21, 2014 1:48:00 PM/////
------------------------------------------------------------------------- 
7
//////Blogger venkatesh r said...
    வணக்கம் ஐயா!
    கொடுத்து உள்ள ஜாதக அன்பர் மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்து உள்ளார். ஜாதகப்படி அவரின் 10மிடத்திற்கான அலசல் :
    1. கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷ ஜாதகர்.
    2. 21 வயதில் வேலைக்குச் செல்லும் சமயத்தில் ராகு தசை ஆரம்பித்து உள்ளது.
    2.10மிடத்தில் அஷ்டமாதிபதி சூரியனும், ஜாதக வில்லன் புதனும், செவ்வாயுடன் கூட்டு வைத்து உள்ளனர்.
    3.10மிட அதிபதி மற்றும் யோகாதிபதியான சுக்கிரன் 9ல், அதாவது 10மிடத்திற்கு 12ல் அமர்ந்து, பாபகர்த்தாரியின் பிடியில் நீசமடைந்து உள்ளார்.ஆனாலும் புதனுடன் பரிவர்த்தனையில் உள்ளார்.
    4.ஜாதகத்தில் இரண்டு சுபகிரங்கள் நீசமடைந்து உள்ளனர்.
    இவை எல்லாம் சேர்ந்து கொண்டு, ஜாதகரை கிட்டதட்ட 38 வயது வரை நிமிர்ந்து உட்கார இயலாமல் செய்து விட்டன. மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமலும், கிடைத்த சில வேலைகளில் பணி நிரந்தரமாகாமலும் மன‌ நிம்மதி இழந்திருப்பார்.
    அதற்கு பிறகு 38 வயதிற்கு மேல், குரு தசையில் ஜாதகர் ஒரு ஸ்திரமான சுய தொழிலை தொடங்கி அதில் வெற்றியும் பெற்று பணக்காரராகி இருப்பார்.
    அதற்கான காரணங்கள்:
    1)லக்னாதிபதி லக்னத்தில் இரண்டு சுபகிரகங்களுடன் அமர்ந்து உள்ளார்.
    2)10மிடத்திற்கு லக்னாதிபதியும், கர்மகாரகனுமான ச‌னியின் பார்வை உள்ளது.
    3) குருவின் 9ம் தனிப்பார்வை 10மிட‌ அதிபதியான‌ சுக்கிரனின் மேல்.
    4)10ல் புதனும், செவ்வாயும் சேர்ந்து தங்களின் இன்னொரு ஆதிபத்தியத்தின் காரணமாக (4,9) ராஜ யோகத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
    4)9மிடமும், 10மிடமும் பரிவர்த்தனை பெற்று உள்ளன.
    தங்களின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.
    Wednesday, May 21, 2014 3:10:00 PM//////
------------------------------------------------------------------------------
8
Blogger Ramkumar KG said...
    இந்த ஜாதகத்தில் உள்ள
    சாதகங்கள்
    --------------------
    1) லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி
    2) ஏழாம் அதிபதி லக்னத்தில்
    3) இரண்டம் அதிபதி லக்னத்தில்
    4) 11ஆம் அதிபதி பத்தில்
    5) 9ஆம் அதிபதி பத்தில்
    6) யோகாதிபதி சுக்ரன் 9இல் குருவின் பார்வையில்
    7) குரு லக்னத்தில் நீசபங்கம்
    8) குரு பார்வையில் 5,9 இடங்கள்
    பாதகங்கள்
    -------------------
    1) லக்னத்தில் மாந்தி
    2) லக்னத்தில் 12ஆம் அதிபதி
    3) இரண்டில் கேது
    4) 10இல் 6,8ஆம் அதிபதிகளின் அட்டகாசம்
    5) காலசர்ப்ப தோசம்
    ரகு திசையின் முடிவில் 38 வயதிற்கு மேல் மேம்படுவர் .
    தொழிலில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேறுவார்.

    Wednesday, May 21, 2014 8:08:00 PM//////
-----------------------------------------------------------------
9
////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
    இன்றைய புதிருக்கான விடை:
    1.33ம்வயதிற்க்கு மேல் நிமிர்ந்து உட்கார்ந்து இருப்பார்.
    2.ராகுத‌சை சுக்கிர புத்தியில் ஸ்திரமான வேலையை அடைந்து இருப்பார்.

    * மகர லக்கினம்,மகர ராசி லக்கினாதிபதி ஆட்சி.உடன் 12க்குரிய நீச்சகுரு.
    *கால‌ சர்பதோச ஜாதகம்.லக்கினம் செவ்வாயின் பார்வையில், இளமையில் போராட்டமான வாழ்க்கை.
    *5,10க்குரிய சுக்கிரன் யோகாதிபதியாகி 9க்குரிய புதனுடன் பரிவர்தனையாகி
    உள்ளார்.தர்மகர்மாதிபதி யோகம்.
    *அத்துடன் குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவது நன்மையான அமைப்பு.இதனால் வேலை ஸ்திரமாக வாய்ப்பு உண்டு.
    நன்றி ஐயா. விடையினை சரியா என தெரிந்து கொள்ள ஆவல்.
    ல ரகுபதி
    Wednesday, May 21, 2014 9:23:00 PM/////
-------------------------------------------------------------------
10 
/////Blogger ravichandran said...
    Respected sir,
    My answer for our today's Quiz No.54:
    1. He has relieved from Kala sharpa dhosa at the age of 38.
    2. He has settled in his job at the age of 40 (Guru dasa,Saturn sub period).

    Answer no.1:
    He has affected Viloma kala sharpa dhosa. It's very bad. Lakna having 26 parals but Ragu dasa was continued during that period. So he relieved from Kala sarpa dhosa at his age of 38.(at the end of Ragu dhasa)
    2. Tenth lord venus debiliated as well as baba kathiri yoga and tenth house affected by Sixth and Eigth lord. So business is not suitable for him. lagna lord also along with twelfth house lord.
    He has some what comfort in his job at the age of 40 (Jupiter dhasa sub period of Saturn)since Guru is aspecting Venus as well as Saturn aspecting tenth house.
    In Navamsa, Saturn is Varkothmam.
    With kind regards,
    Ravichandran M.
    Thursday, May 22, 2014 3:15:00 AM//////
-------------------------------------------------------------------------
இது உதிரியான/ உபரியான  பதில்

////Blogger வேப்பிலை said...
    என்னுடைய ஜாதகத்தை அலசலுக்கு
    எடுத்துக் கொள்ளும் வரை
    புதிர்களில் கலந்து கொள்வதில்லை
    புரிந்து கொண்டுபடி பதிவேற்றி
    உயிருடன் இருக்கும் போதே
    உறுப்பு தானம் என்பது போல்
    அலசலுக்கு ஆட்படுத்துங்கள்
    அதுவரை அன்புடன்
    Wednesday, May 21, 2014 8:46:00 AM/////

வகுப்பறைக் கண்மணிகளின் ஜாதகத்தை வகுப்பறையில் அலசலுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதில் சில பிரச்சினைகள் உள்ளன. விவரிக்க முடியாது. மன்னிக்கவும்!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வகுப்பறை மாணவர்களின் ஜாதகத்தை அலசலுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. ஒருவர் ஜாதகத்தை அலச ஆரம்பித்தால் பிறகு எல்லாரும் தங்களது ஜாதகத்தை அலசும்படி கேட்பார்கள். நாலாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்களே. நாளுக்கு ஒன்று என்று பார்த்தாலும் வருடத்திற்கு 365 ஜாதங்கள்தான் அலச முடியும். நான்காயிரத்தை தொடுவதென்பது நடக்கிற காரியமா? இங்கே வரும் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது. வாத்தியாருக்கு அனைவரும் சமம்தான். ஓரிருவருக்கு special என்கிற ரீதியில் வாத்தியார் நடந்துக் கொள்ள முடியாது.

    ReplyDelete
  2. 2 நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை. (Absent without leave). அலுவலகத்தில் வேலையின் காரணமாக வீட்டிற்கு சென்று வகுப்பறையை பார்க்கலாம் என்றால் வீட்டில் உள்ள சின்ன மேடம் (பிறந்து நான்கரை மாதமே ஆன என் மகளைச் சொல்கிறேன்) அனுமதி தரவில்லை. 2 நாட்களாக இரவில் அழுது ஒரே ஆர்பாட்டமாக இருந்தது. என் மனைவி சமாளிக்க முடியாமல் என்னிடம் விட்டு விட்டார். மீதியைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சமாதானப் படுத்தி தூங்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

    ReplyDelete
  3. 17 அக்டொபர் 1961 ல் பிறந்த இந்த ஜாதகருக்கு சனிதசா 1 பிப்ரவரி 2016ல்தான் துவங்கப் போகிறது.இப்போது குருதசா ராகு புக்தியில்தான் உள்ளார்.

    'எனவே வரப்போகும் சனிதசாவில் உச்சத்தைத் தொடுவார்'என்பதே சரியாக இருக்கும்.

    எனது பதிலும் சரியாகக்கூறியவர்கள் பட்டியலில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி ஐயா!

    ReplyDelete
  4. வகுப்பறைக்கு வருமுன் எனக்கு பல குழப்பங்கள். ஏன்தான் இப்படி கஷ்டம் வருகிறதோ? என்ன காரணம்? என்றெல்லாம் குழம்பியது உண்டு. ஆனால் பாடங்களையும், வாத்தியாரின் அருமையான விளக்கங்களையும், பொறுமையான பதில்களையும் படித்த பிறகு, என்னுடைய ஜாதகத்தில் பல உண்மைகள் புரிந்தன.
    வாத்தியார் அவர்கள் கேலக்ஸி வகுப்பு கேள்விகளுக்கு பதில் அளித்த சமயத்தில் சொல்லியது எனக்கு நினைவுக்கு வருகிறது. "பாடங்களை தொடர்ந்து படித்து வந்தாலே போதும், அவரவர் ஜாதகத்தை அலசும் திறமை வந்து விடும். அதனால் சொந்த ஜாதகத்தை வைத்து எந்த கேள்வியும் கேட்காதீர்" என்பார். நாமென்ன படித்து ஒரு ஜோஸியராக வரப் போகிறோமா? இல்லை. அதனால் இந்த அளவுக்காவது ஜாதகத்தை அலசும் திறம் பெற்றதற்கு வாத்தியாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. ////Blogger Kirupanandan A said...
    நன்றாக யோசித்துப் பார்த்தால் வகுப்பறை மாணவர்களின் ஜாதகத்தை அலசலுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. ஒருவர் ஜாதகத்தை அலச ஆரம்பித்தால் பிறகு எல்லாரும் தங்களது ஜாதகத்தை அலசும்படி கேட்பார்கள். நாலாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்களே. நாளுக்கு ஒன்று என்று பார்த்தாலும் வருடத்திற்கு 365 ஜாதங்கள்தான் அலச முடியும். நான்காயிரத்தை தொடுவதென்பது நடக்கிற காரியமா? இங்கே வரும் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது. வாத்தியாருக்கு அனைவரும் சமம்தான். ஓரிருவருக்கு special என்கிற ரீதியில் வாத்தியார் நடந்துக் கொள்ள முடியாது.////

    உண்மையைப் புரிந்து கொண்ட மேன்மைக்கு நன்றி கிருபானந்தன்!

    ReplyDelete
  6. /////Blogger Kirupanandan A said...
    2 நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை. (Absent without leave). அலுவலகத்தில் வேலையின் காரணமாக வீட்டிற்கு சென்று வகுப்பறையை பார்க்கலாம் என்றால் வீட்டில் உள்ள சின்ன மேடம் (பிறந்து நான்கரை மாதமே ஆன என் மகளைச் சொல்கிறேன்) அனுமதி தரவில்லை. 2 நாட்களாக இரவில் அழுது ஒரே ஆர்பாட்டமாக இருந்தது. என் மனைவி சமாளிக்க முடியாமல் என்னிடம் விட்டு விட்டார். மீதியைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சமாதானப் படுத்தி தூங்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்./////

    அதனால் என்ன? இது இணைய வகுப்பு. கால நேரம் என்று எதுவும் கிடையாது. ஆகவே நேரம் கிடைக்கும்போது எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் வகுப்பறைக்கு வரலாம். நன்றி கிருபானந்தன்!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    17 அக்டொபர் 1961 ல் பிறந்த இந்த ஜாதகருக்கு சனிதசா 1 பிப்ரவரி 2016ல்தான் துவங்கப் போகிறது.இப்போது குருதசா ராகு புக்தியில்தான் உள்ளார்.
    'எனவே வரப்போகும் சனிதசாவில் உச்சத்தைத் தொடுவார்'என்பதே சரியாக இருக்கும்.
    எனது பதிலும் சரியாகக்கூறியவர்கள் பட்டியலில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி ஐயா!/////

    உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. //////Blogger venkatesh r said...
    வகுப்பறைக்கு வருமுன் எனக்கு பல குழப்பங்கள். ஏன்தான் இப்படி கஷ்டம் வருகிறதோ? என்ன காரணம்? என்றெல்லாம் குழம்பியது உண்டு. ஆனால் பாடங்களையும், வாத்தியாரின் அருமையான விளக்கங்களையும், பொறுமையான பதில்களையும் படித்த பிறகு, என்னுடைய ஜாதகத்தில் பல உண்மைகள் புரிந்தன.
    வாத்தியார் அவர்கள் கேலக்ஸி வகுப்பு கேள்விகளுக்கு பதில் அளித்த சமயத்தில் சொல்லியது எனக்கு நினைவுக்கு வருகிறது. "பாடங்களை தொடர்ந்து படித்து வந்தாலே போதும், அவரவர் ஜாதகத்தை அலசும் திறமை வந்து விடும். அதனால் சொந்த ஜாதகத்தை வைத்து எந்த கேள்வியும் கேட்காதீர்" என்பார். நாமென்ன படித்து ஒரு ஜோஸியராக வரப் போகிறோமா? இல்லை. அதனால் இந்த அளவுக்காவது ஜாதகத்தை அலசும் திறம் பெற்றதற்கு வாத்தியாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.///////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வெங்கடேஷ்!

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்,
    என் பெயர் தினேஷ் . ஊர் ஈரோடு. எனக்கு சோதிடம் கற்க வேண்டு என்று ஆர்வம் உள்ளது. நான் தங்களுடைய blog ஐ பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பாடங்கள். இது தவிர புத்தகங்கள் மூலமாக கற்று கொள்ள வேண்டும் என்றால் என்னென்ன புத்தங்கள் வேண்டும் அய்யா?

    (எ-டு) பாலதீபிகை , ஜாதக அலங்காரம், குமாரசுவாமியம் போன்ற புத்தங்களில் எதனை வாங்கலாம். புலிப்பாணி சோதிடம் 300 வைத்துள்ளேன். அடிப்படையிலிருந்து கற்க எந்த நூல் சிறந்தது ??

    பாலதீபிகை, ஜாதக அலங்காரம் , குமாரசுவாமியம், பிருகத் ஜாதகம் இந்த நூல்கள் அனைத்தும் பாடல் வடிவில் அமைந்து விளக்க உரையுடன் இருக்குமா , அல்லது உரைநடை வடிவில் இருக்குமா ? இந்த நான்கு நூல்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன அய்யா ?? உங்களின் மேலான பதிலை எதிர்பார்த்து....
    நன்றி
    இப்படிக்கு,
    தினேஷ்.ந

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com