மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.8.12

Devotional எல்லோரும் கொண்டாடுவோம்!

Devotional எல்லோரும் கொண்டாடுவோம்!

பக்தி மலர்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

கல்லாகப் படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபம் இல்லே
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
(எல்லோரும்)

நூறு வகைப் பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா...ஆ..

கறுப்பில்லை வெளுப்பும் இல்லை
கனவுக்கு உருவமில்லை
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னையென்போம்
முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம்
(எல்லோரும்)

ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா ?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
ஓ..

படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்

திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், நாகூர் ஹனிபா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
--------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video clipping!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

42 comments:

  1. ரமலானுக்காக வெளியிட்ட பாடல் முக்கியமான ஒரு கருத்தைப் பிரதிபலிக்கிறது.அதாவது சமூக ஒற்றுமை.பாவமன்னிப்பு வந்த காலம் அப்படிப்பட்ட ஒற்றுமை நிலவிய காலம். சிறுகச் சிறுக அந்த ஒற்றுமை கருத்துக்கள் பின்னடைவு அடைந்து, வேற்றுமை எண்ணங்கள் ஏற்றம் பெற்றுவிட்டன.

    சரி.வேறு வேறு மதங்களுக்கிடையேதான் பூசல்கள் என்று எண்ண வேண்டாம்.ஒரே மதத்திற்கு உள்ளேயும் வேற்றுமைக் கருத்துக்கள் பரவி
    சமூக ஒற்றுமைய பயமுறுத்தி வருகின்றன.

    முஸ்லிம் பெருமக்கள் கடவுளுக்கு(அல்லாவுக்கு) உருவம் இல்லை என்னும் கருத்து உடையவர்கள் என்று நாம் எண்ணியுள்ளோம். ஆனால் அங்கேயும் கடவுளுக்கு உருவம் உண்டு என்ற கருத்து நிலவுகிறது. அதைப்பற்றிய நீண்ட விவாதம் ஒன்றை இந்தக் காண் ஒலிகளில் பாருங்கள். 14,15 மணி நேரம் செலவு செய்ய முடிந்தவர்கள் முழுவதையும் பார்க்கலாம்.மற்றவர்கள் சும்மா மாதிரிக்குக் கொஞ்சம் பாருங்கள்.

    http://www.youtube.com/watch?v=jeNaJYJPYqM

    அவர்கள் விவாதக்களம் அமைத்துக் கொண்டு, எழுத்துமூல ஒப்பந்தம் செய்துகொண்டு, அங்கே நேரடியான‌ மோதல்கள் வராமல் இருப்பதற்க்கான பாதுகாப்புக்களைச் செய்து கொண்டு, செலவினங்களைப் பகிர்ந்து கொண்டு முறையாக விவாதம் செய்வது பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுடைய கொள்கை முரண்பாடுகளால் பொதுவான இஸ்லாமிய ஒற்றுமை இப்போது கொஞ்ச்ம் குறைந்துள்ளது. அதற்கு அரசியல் வாதிகளும் முக்கிய‌ காரணம்.

    பழைய நாட்களைப்போல அவர்கள் நமக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்ல நாம் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துச் சொல்லும் சகஜ நிலை வர வேண்டும்.
    இப் பதிவு அதற்கான நல்ல முயற்சி.அதற்காக ஐயாவுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.ஐயாவுக்கு ஆலோசனை கூறிய நண்பர் ஹாலாஸ்யத்திற்கும் நன்றி.ரமலான் திருநாள் ஒற்றுமையை மீட்டு எடுக்கட்டும்.

    ReplyDelete
  2. நல்லதொரு பாடலை மறுபடி நினைவு படுத்தினீர்கள். என்ன அருமையான வரிகள். நன்றி.

    ReplyDelete
  3. அய்யா காலை வணக்கம்

    ReplyDelete
  4. அனைவருக்கும் ரமதான் வாழ்த்துக்கள்
    EID MUBAARAK .....
    ''வானில் மூன்றாம் பிறை வரும் போது
    வாசலில் மடியிட்டு திருக்குரான் ஓது
    துயரங்கள் அங்கே சொன்னால்
    சுகமாகும் நெஞ்சம் ......
    அநாதை யாரும் இல்லை அவனேதான் தந்தை''
    நான் மஸ்கட்டில் எட்டு வருடம் இருந்திருக்கிறேன்
    நல்ல ஒரு நகரம் அது.

    அன்புடன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  5. ரம்ஜானுக்கு இன்னும் பத்து தினங்கள் இருக்கின்றன என் நினைக்கிறேன்.

    இந்த ரம்ஜான் மாதம் புனித மாதம் என்று அழைக்கிறார்கள்., இஸ்லாமியர்களின் நோன்பு ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கும். மருத்துவ முறைப்படியும் இதை மிகவும் மதிக்கிறார்கள். உடல் நலம் பெருகிறது.

    இந்த ரம்ஜான் நோன்பு மிக மகத்தானது. நாள் முழுக்க நீர் கூட பருகாமல் ஒரு நாள் முழுக்க நோன்பிருப்பதன் மூலம் வறியவர்களின் பசியை உனர முடியும். இதன் மூலம் ஏழை பணக்காரன் பேதம் நீங்கி ஒற்றுமை வருகிறது.முப்பது நாள்கள் நோன்பிருந்து கொண்டாடும் பெரு நாளுக்கு முன் தன் வருமானத்தின் ஒரு பகுதியை தர்மமாக கொடுக்கிறார்கள். இதன் மூலம் சகோதரத்துவம் வளர்கிறது.

    இந்த மாதம் முழுக்க கூடுதலான இறை வணக்கத்தில் இரவு பகல் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் இறை கட்டளைகள் நிறைவேற்றப்படுவதால் மறுமையின் நினைவு
    மறையாமல் அவர்களை கொண்டு செல்கிறது.

    இப்படி பல வகையிலும் சிறந்து விளங்கும் இந்த ரம்ஜானை நம் வகுப்பில் கொண்டுவந்த அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. ரம்ஜான் நோன்பு காலத்தில் மிக அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள். சமூக ஒற்றுமைக்கு இதுபோன்ற கலாச்சார ஒற்றுமை முக்கியம். பிறரையும், பிறரது மதக் கோட்பாடுகளையும் மதிப்போமானால் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக ஒருவர் மற்றவரை எதிரியாக நினைக்கும் போக்கு சமூக நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல. ஆசிரியர் ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. We judge ourselves by our intention;
    but
    the world judge by our action..!!

    மறைக்கப்பட்டவையும்
    மறுக்கப்பட்டவையும்

    மறுபடியும் வலம் வருவதில்
    மற்றற்ற மகிழ்ச்சியே..

    கண்ணதாசன் பாடலில்
    ஆய்வு தொடங்கிய போது

    வேறு பக்கம் நின்று பார்க்க வைத்தது இந்த பாடல் அதனை அன்று சொன்ன அதனை இங்கு மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி..

    நன்றிகள் பல..
    நலமுடன் வளம் பெறுக

    ReplyDelete
  8. எப்போதும் நினைவில் நிற்கும் அருமையான பாடலைத் தந்தமைக்கு நன்றி.
    திரு.கே.எம்.ஆர் அவர்கள் சொன்னதைப் போல், சகோதரத்துவம் நிறைந்த காலக்கட்டத்தில் வந்த பாடல். முஸ்லிம் சகோதரர்களை,'பாய்' என்றும் சகோதரிகளை'பாயம்மா' என்றும் அன்புடன் அழைத்துச் சொந்தம் கொண்டாடிய காலம் மீண்டும் வர வேண்டும்.

    நான் பிறந்த ஊரில், சந்தனக்கூடு உற்சவத்தில், இந்துக்கள் பெருமளவில் பங்கெடுப்பர். முருகப்பெருமானின் பங்குனி பிரம்மோற்சவத்தில், ஒலி, ஒளி அமைப்பு முழுவதும் முஸ்லிம் சகோதரர்களின் உபயமாக இருக்கும். 'ஊர்த்திருவிழா' என்று தோன்றுமேயல்லாது 'மதம் சம்பந்தப்பட்ட விழா' என்று தோன்றுவதேயில்லை. இன்றைக்கும் குழந்தைகளுக்கு உடம்பு முடியாமல் போனால், குழந்தையுடன் பள்ளிவாசலின் வாயிலில் நின்று, தொழுகை முடித்து வரும் சகோதரர்களை, குழந்தையின் நெற்றியில் ஊதும்படி செய்வார்கள். அவ்வாறு செய்தால், நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது.

    ஆனால் பெருவாரியான மக்கள் மனதில், இன்றைய சூழ்நிலை மாற்றத்தால், அந்த மதத்தின் பெயரைச் சொன்னாலே, ஏதோ தீவிரவாதியைப் பார்ப்பது போல் பார்க்கும் சூழல் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டு விட்டது. 'வேற்றுமை நீங்கி ஒற்றுமை பெருக இறைவன் அருள் செய்ய வேண்டும்.

    காணொளியும் அருமை.

    நல்லதொரு பாடலைத் தந்தமைக்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இப்பாடலை பதிவிட வேண்டுகோள் வைத்த சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  9. ரம்ஜான் நோன்பு காலத்தில் மிக அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  10. குருவிற்க்கு வணக்கம்
    நல்ல ஒரு பாடல்
    நன்றி

    ReplyDelete
  11. பாடல் நன்று. மத நல்லினகத்தை வலியுறுத்த இது போன்ற பாடல்கள் அவசியம்தான். எப்போதோ கேட்டது. மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டீகள்.

    ReplyDelete
  12. ஆஹா! கவியரசுவின் கருத்துக் குவியலில் விளைந்த அற்புதமான அருமையானப் பாடல் இது...
    உலகில் அனைத்தும் அந்த பர பிரமத்தின் படைப்பே இதிலே...

    யாகூவா! அல்லா!! முருகா!!! இவைகள் தாம் அவரவர் தாய் மொழியிலே ஒருவரைத் தான் அழைக்கிறோம் என்பதை உணர்ந்தால் பேதம் என்பது பேதைமை என்பது விளங்கும்.

    அதே போல் நான் விரும்பும் ஓசைகளிலே வாங்கோசையும் ஒன்று.. அதைக் கேக்கும் போது ஒரு உள்ளுணர்வு மகிழ்வு பொங்கும்...
    புரியாத சம்ஸ்கிருத மொழியினை கோவிலிலே கருவறையில் தெய்வீக எதிரொலியோடு ஓதக் கேட்கும் போது ஏற்படும் ஒரு பரவச உணர்வைப் போன்ற இனிமையானது..

    வேற்றுமைக் காண்பின் இன்னும் அந்த ஒருமையினை புரிந்து அறிந்துக் கொள்ளவில்லை என்றே பொருள்.
    இந்தத் தருணத்திலே வகுப்பறைக்கு வரும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது பரக்கத்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

    ////பெரு நாளுக்கு முன் தன் வருமானத்தின் ஒரு பகுதியை தர்மமாக கொடுக்கிறார்கள்.////
    இது லாபத்தில் ஏழு விழுக்காடு என்றே நினைக்கிறேன்...

    இங்கே இன்னும் ஒருத் தகவலையும் பகிர ஆசைப் படுகிறேன், சமீபத்தில் தான் அறிந்தேன்.... பள்ளி வாசலில் மேற்கு நோக்கி நின்று தொழுவது தான் அல்லாஹூ அளித்த முறையாக கூறினாலும்...

    முகமது நபிகள் கிழக்கு நோக்கி நின்று (இமயம் நோக்கி) தொழுகை செய்தும் அதற்கு நமக்கு முன்பே ஞானிகள் தோன்றிய திசை அது அதனாலே அப்படியும் நான் தொழுகிறேன் என்றாராம். ரஷ்யாவிலே ஆராய்ந்து கூறிய ஒருக்கருத்து ஜீசஸ் இமயத்தில் வந்திருந்து விட்டும் சென்று இருக்கிறார் என்பது அது...

    யார்கண்டா! வசிட்டரும்.. வியாசரும் தான் முகமது நபியாகவும், ஜீசசுமாக அவதரித்தார்களோ

    எனது திருமண நாளும் இந்த ரம்ஜான் நாளே! என்பதால் அது எனக்கு ஒரு விசேச நாளாகிறது.

    எனது விருப்பப் பாடலை பதிவிட்ட ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். தாமதமாக வந்து இருக்கிறேன்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  13. Blogger kmr.krishnan said...
    ரமலானுக்காக வெளியிட்ட பாடல் முக்கியமான ஒரு கருத்தைப் பிரதிபலிக்கிறது.அதாவது சமூக ஒற்றுமை.பாவமன்னிப்பு வந்த காலம் அப்படிப்பட்ட ஒற்றுமை நிலவிய காலம். சிறுகச் சிறுக அந்த ஒற்றுமை கருத்துக்கள் பின்னடைவு அடைந்து, வேற்றுமை எண்ணங்கள் ஏற்றம் பெற்றுவிட்டன.
    சரி.வேறு வேறு மதங்களுக்கிடையேதான் பூசல்கள் என்று எண்ண வேண்டாம்.ஒரே மதத்திற்கு உள்ளேயும் வேற்றுமைக் கருத்துக்கள் பரவி சமூக ஒற்றுமைய பயமுறுத்தி வருகின்றன.
    முஸ்லிம் பெருமக்கள் கடவுளுக்கு(அல்லாவுக்கு) உருவம் இல்லை என்னும் கருத்து உடையவர்கள் என்று நாம் எண்ணியுள்ளோம். ஆனால் அங்கேயும் கடவுளுக்கு உருவம் உண்டு என்ற கருத்து நிலவுகிறது. அதைப்பற்றிய நீண்ட விவாதம் ஒன்றை இந்தக் காண் ஒலிகளில் பாருங்கள். 14,15 மணி நேரம் செலவு செய்ய முடிந்தவர்கள் முழுவதையும் பார்க்கலாம்.மற்றவர்கள் சும்மா மாதிரிக்குக் கொஞ்சம் பாருங்கள்.
    http://www.youtube.com/watch?v=jeNaJYJPYqM
    அவர்கள் விவாதக்களம் அமைத்துக் கொண்டு, எழுத்துமூல ஒப்பந்தம் செய்துகொண்டு, அங்கே நேரடியான‌ மோதல்கள் வராமல் இருப்பதற்க்கான பாதுகாப்புக்களைச் செய்து கொண்டு, செலவினங்களைப் பகிர்ந்து கொண்டு முறையாக விவாதம் செய்வது பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுடைய கொள்கை முரண்பாடுகளால் பொதுவான இஸ்லாமிய ஒற்றுமை இப்போது கொஞ்ச்ம் குறைந்துள்ளது. அதற்கு அரசியல் வாதிகளும் முக்கிய‌ காரணம்.
    பழைய நாட்களைப்போல அவர்கள் நமக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்ல நாம் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துச் சொல்லும் சகஜ நிலை வர வேண்டும்.
    இப் பதிவு அதற்கான நல்ல முயற்சி.அதற்காக ஐயாவுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.ஐயாவுக்கு ஆலோசனை கூறிய நண்பர் ஹாலாஸ்யத்திற்கும் நன்றி.ரமலான் திருநாள் ஒற்றுமையை மீட்டு எடுக்கட்டும்.//////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. ///////Blogger ஸ்ரீராம். said...
    நல்லதொரு பாடலை மறுபடி நினைவு படுத்தினீர்கள். என்ன அருமையான வரிகள். நன்றி.//////

    ஆமாம். கவியரசரின் மிகச்சிறந்த பாடல்களைப் பட்டியல் இட்டால் இந்தப் பாடலும் அதில் இடம் பெறும்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. ////Blogger saravanan said...
    அனைவருக்கும் ரமதான் வாழ்த்துக்கள்
    EID MUBAARAK .....
    ''வானில் மூன்றாம் பிறை வரும் போது
    வாசலில் மடியிட்டு திருக்குரான் ஓது
    துயரங்கள் அங்கே சொன்னால்
    சுகமாகும் நெஞ்சம் ......
    அநாதை யாரும் இல்லை அவனேதான் தந்தை''
    நான் மஸ்கட்டில் எட்டு வருடம் இருந்திருக்கிறேன்
    நல்ல ஒரு நகரம் அது.
    அன்புடன்
    ரா.சரவணன்/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger thanusu said...
    ரம்ஜானுக்கு இன்னும் பத்து தினங்கள் இருக்கின்றன என் நினைக்கிறேன்.
    இந்த ரம்ஜான் மாதம் புனித மாதம் என்று அழைக்கிறார்கள்., இஸ்லாமியர்களின் நோன்பு ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கும். மருத்துவ முறைப்படியும் இதை மிகவும் மதிக்கிறார்கள். உடல் நலம் பெருகிறது.
    இந்த ரம்ஜான் நோன்பு மிக மகத்தானது. நாள் முழுக்க நீர் கூட பருகாமல் ஒரு நாள் முழுக்க நோன்பிருப்பதன் மூலம் வறியவர்களின் பசியை உனர முடியும். இதன் மூலம் ஏழை பணக்காரன் பேதம் நீங்கி ஒற்றுமை வருகிறது.முப்பது நாள்கள் நோன்பிருந்து கொண்டாடும் பெரு நாளுக்கு முன் தன் வருமானத்தின் ஒரு பகுதியை தர்மமாக கொடுக்கிறார்கள். இதன் மூலம் சகோதரத்துவம் வளர்கிறது.
    இந்த மாதம் முழுக்க கூடுதலான இறை வணக்கத்தில் இரவு பகல் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் இறை கட்டளைகள் நிறைவேற்றப்படுவதால் மறுமையின் நினைவு
    மறையாமல் அவர்களை கொண்டு செல்கிறது.
    இப்படி பல வகையிலும் சிறந்து விளங்கும் இந்த ரம்ஜானை நம் வகுப்பில் கொண்டுவந்த அய்யா அவர்களுக்கு நன்றிகள்.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கும், கருத்துப்பகிர்விற்கும் நன்றி தனுசு!

    ReplyDelete
  18. ////Blogger Thanjavooraan said...
    ரம்ஜான் நோன்பு காலத்தில் மிக அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள். சமூக ஒற்றுமைக்கு இதுபோன்ற கலாச்சார ஒற்றுமை முக்கியம். பிறரையும், பிறரது மதக் கோட்பாடுகளையும் மதிப்போமானால் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக ஒருவர் மற்றவரை எதிரியாக நினைக்கும் போக்கு சமூக நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல. ஆசிரியர் ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!////

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  19. ////Blogger அய்யர் said...
    We judge ourselves by our intention;
    but the world judge by our action..!!
    மறைக்கப்பட்டவையும்
    மறுக்கப்பட்டவையும்
    மறுபடியும் வலம் வருவதில்
    மற்றற்ற மகிழ்ச்சியே..
    கண்ணதாசன் பாடலில்
    ஆய்வு தொடங்கிய போது
    வேறு பக்கம் நின்று பார்க்க வைத்தது இந்த பாடல் அதனை அன்று சொன்ன அதனை இங்கு மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி..
    நன்றிகள் பல..
    நலமுடன் வளம் பெறுக/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  20. /////Blogger Parvathy Ramachandran said...
    எப்போதும் நினைவில் நிற்கும் அருமையான பாடலைத் தந்தமைக்கு நன்றி.
    திரு.கே.எம்.ஆர் அவர்கள் சொன்னதைப் போல், சகோதரத்துவம் நிறைந்த காலக்கட்டத்தில் வந்த பாடல். முஸ்லிம் சகோதரர்களை,'பாய்' என்றும் சகோதரிகளை'பாயம்மா' என்றும் அன்புடன் அழைத்துச் சொந்தம் கொண்டாடிய காலம் மீண்டும் வர வேண்டும்.
    நான் பிறந்த ஊரில், சந்தனக்கூடு உற்சவத்தில், இந்துக்கள் பெருமளவில் பங்கெடுப்பர். முருகப்பெருமானின் பங்குனி பிரம்மோற்சவத்தில், ஒலி, ஒளி அமைப்பு முழுவதும் முஸ்லிம் சகோதரர்களின் உபயமாக இருக்கும். 'ஊர்த்திருவிழா' என்று தோன்றுமேயல்லாது 'மதம் சம்பந்தப்பட்ட விழா' என்று தோன்றுவதேயில்லை. இன்றைக்கும் குழந்தைகளுக்கு உடம்பு முடியாமல் போனால், குழந்தையுடன் பள்ளிவாசலின் வாயிலில் நின்று, தொழுகை முடித்து வரும் சகோதரர்களை, குழந்தையின் நெற்றியில் ஊதும்படி செய்வார்கள். அவ்வாறு செய்தால், நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது.
    ஆனால் பெருவாரியான மக்கள் மனதில், இன்றைய சூழ்நிலை மாற்றத்தால், அந்த மதத்தின் பெயரைச் சொன்னாலே, ஏதோ தீவிரவாதியைப் பார்ப்பது போல் பார்க்கும் சூழல் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டு விட்டது. 'வேற்றுமை நீங்கி ஒற்றுமை பெருக இறைவன் அருள் செய்ய வேண்டும்.
    காணொளியும் அருமை.
    நல்லதொரு பாடலைத் தந்தமைக்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இப்பாடலை பதிவிட வேண்டுகோள் வைத்த சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  21. /////Blogger dubai saravanan said...
    ரம்ஜான் நோன்பு காலத்தில் மிக அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள்////

    நல்லது. நன்றி சரவணன்!

    ReplyDelete
  22. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்க்கு வணக்கம்
    நல்ல ஒரு பாடல்
    நன்றி/////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  23. //////Blogger ஜி ஆலாசியம் said...
    ஆஹா! கவியரசுவின் கருத்துக் குவியலில் விளைந்த அற்புதமான அருமையானப் பாடல் இது...
    உலகில் அனைத்தும் அந்த பர பிரமத்தின் படைப்பே இதிலே...
    யாகூவா! அல்லா!! முருகா!!! இவைகள் தாம் அவரவர் தாய் மொழியிலே ஒருவரைத் தான் அழைக்கிறோம் என்பதை உணர்ந்தால் பேதம் என்பது பேதைமை என்பது விளங்கும்.
    அதே போல் நான் விரும்பும் ஓசைகளிலே வாங்கோசையும் ஒன்று.. அதைக் கேக்கும் போது ஒரு உள்ளுணர்வு மகிழ்வு பொங்கும்...
    புரியாத சம்ஸ்கிருத மொழியினை கோவிலிலே கருவறையில் தெய்வீக எதிரொலியோடு ஓதக் கேட்கும் போது ஏற்படும் ஒரு பரவச உணர்வைப் போன்ற இனிமையானது..
    வேற்றுமைக் காண்பின் இன்னும் அந்த ஒருமையினை புரிந்து அறிந்துக் கொள்ளவில்லை என்றே பொருள்.
    இந்தத் தருணத்திலே வகுப்பறைக்கு வரும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது பரக்கத்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.
    ////பெரு நாளுக்கு முன் தன் வருமானத்தின் ஒரு பகுதியை தர்மமாக கொடுக்கிறார்கள்.////
    இது லாபத்தில் ஏழு விழுக்காடு என்றே நினைக்கிறேன்...
    இங்கே இன்னும் ஒருத் தகவலையும் பகிர ஆசைப் படுகிறேன், சமீபத்தில் தான் அறிந்தேன்.... பள்ளி வாசலில் மேற்கு நோக்கி நின்று தொழுவது தான் அல்லாஹூ அளித்த முறையாக கூறினாலும்...
    முகமது நபிகள் கிழக்கு நோக்கி நின்று (இமயம் நோக்கி) தொழுகை செய்தும் அதற்கு நமக்கு முன்பே ஞானிகள் தோன்றிய திசை அது அதனாலே அப்படியும் நான் தொழுகிறேன் என்றாராம். ரஷ்யாவிலே ஆராய்ந்து கூறிய ஒருக்கருத்து ஜீசஸ் இமயத்தில் வந்திருந்து விட்டும் சென்று இருக்கிறார் என்பது அது...
    யார்கண்டா! வசிட்டரும்.. வியாசரும் தான் முகமது நபியாகவும், ஜீசசுமாக அவதரித்தார்களோ
    எனது திருமண நாளும் இந்த ரம்ஜான் நாளே! என்பதால் அது எனக்கு ஒரு விசேச நாளாகிறது.
    எனது விருப்பப் பாடலை பதிவிட்ட ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். தாமதமாக வந்து இருக்கிறேன்.
    நன்றிகள் ஐயா!/////

    உங்களுடைய நெகிழ்ச்சியான, நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  24. // பள்ளி வாசலில் மேற்கு நோக்கி நின்று தொழுவது தான் அல்லாஹூ அளித்த முறையாக கூறினாலும்...முகமது நபிகள் கிழக்கு நோக்கி நின்று ...//

    இஸ்லாமியர்கள் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்கும் திசை கிழக்கா மேற்கா தெற்கா வடக்கா என்பது அவ‌ர்கள் உலக உருண்டையில் வாழும் இடத்தைப்பொறுத்தது.மக்காவில் உள்ள கஃபா எனப்படும் புனிதக் கட்டிடம் இருக்கும் திசை நோக்கி மண்டி இட வேண்டும் என்பதே அவர்களுகான கட்டளையாகும்.இந்தியாவிற்கு மேற்காக இருப்பதால் இங்குள்ளவர்கள் மேற்கு நோக்கித் தொழுகிறார்கள்.மேற்கே இருப்பவர்கள் கிழக்கு நோக்கித்தான் தொழுவார்கள். ஹஜ்ஜின் போது கஃபாவைச்சுற்றி பெருங் கூட்டமாக வட்ட வடிவில் மண்டி இடுகிறார்கள்.

    நாம் 'எம்மதமும் சம்மதம்' என்ற கருத்தைக் கூற ஏதாவது சொல்ல வந்தால்,
    அதனை இஸ்லாமிய நண்பர்கள் ரசிப்பதும் இல்லை; ஒப்புக் கொள்வதும் இல்லை.இஸ்லாத்தைப் பற்றிச்சொல்லும் போது கருத்துக்களில் மட்டுமல்லாது சொற்களிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

    நண்பர் ஹாலாஸ்யத்தின் கருத்தினை இஸ்லாமிய நண்பர்கள் ஏற்பது சந்தேகமே. கண்டனம் கூட வரலாம்.

    நான் ஏதாவது தவறாகக் கூறியிருப்பின் மன்னித்தருள்க.

    ReplyDelete
  25. நன்றிகள் கிருஷ்ணன் சார்!

    நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகம் வாசித்தேன்... ஹாங்காகில் வசிக்கும் ஒரு இந்திய தமிழ் இஸ்லாமியரின் ஆராய்ச்சிப் புத்தகம்.
    அதுவும் திருக்குரானைப் பற்றியது... அதிலே இந்து வேதங்களையும் குரானையும் ஒப்பிட்டு அதிலே இருக்கும் பல ஒற்றுமைகளை அழகாக எழுதி இருந்தார். இன்னும் சொன்னால் மகாபாரதத்தில் வரும் பல விசயங்களையும் உதாரணமாகவும் எடுத்து ஆண்டு இருந்தார்...

    இந்துக்களில் இருக்கும் வெகு சிலரைப் போல், இஸ்லாத்திலும் கிருஷ்த்துவத்திலும் ஆழமான உண்மையை சிலர்; மறுப்பதில்லை... ஏற்கிறார்கள்.
    எனது நண்பர்கள் சிலரும் இருக்கிறார்கள். நாம் ஒரு போதும் மதக் கோட்பாடுகளை ஒப்பிடுவதில்லை என்றால் மட்டும் போதும் உயர்நிலைக் கருத்துக்கள் எல்லாம் ஒன்று யாவரும் ஏற்கும் வண்ணமாகவே இருக்கிறது... மதத்திற்கு முந்திய காரணத்தைப் பற்றியக் கருத்தை யாவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

    உயர்வு தாழ்வு என்பதில்லை... உலகில் முன்பு பிறந்தவர்கள் என்பதால் அப்படி ஒரு எண்ணம் தோன்றியது.... அதற்கு முந்தியே இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவர் ஒருவர் இருப்பதாக தெரிய வந்தால்; நாம் அவர் தான் வியாசராக பிறந்திருப்பாரோ ஏற்ன்று கூறலாம்!!! மார்க்கம் இளையது காலத்திற்கு தகுந்தார் போன்று எளிமைப் படுத்தப் பட்டு இருக்கிறது. என்பது எனது புரிந்துணர்வும் கூட...

    உயிரினப் படைப்பு (எண்பத்து நான்கு லட்சம்!!) என்று இரு மறைகளும், அறிவியலும் கூறுகிறதாம். ஆக, ஆதி காலத்திலேயே பிறந்த மனிதன் மதங்களுக்கு முந்திய அதாவது வேத கால மனிதனின் ஆத்மா தானே மீண்டு மீண்டும் பிறந்திருக்க வேண்டும்.

    வியாசர் நமக்கு உயர்ந்தவர் ஒருவேளை அவரே பிற்காலத்தில் நபிகள் நாயகமாகப் பிறந்திருக்கலாம் அப்படி கருதும் போது வியாசரை தேவ தூதராக பார்க்கும் யாவரும் நபிகளையும் அந்த அளவிற்கு இல்லை அவராகவே பார்க்கத் தோன்றும், தோன்றுகிறது...

    இஸ்லாமிய நண்பர்கள் இதை ஏற்கிறார்களோ இல்லையோ.. நாம் நபிகளை நம் எண்ணத்திலே வைத்திருக்கும் இடத்தை அறிந்து மகிழ்வார்கள்... இன்னும் வேண்டுமானால்.. முனி களுக்கெல்லாம் மிக மேலானவர் நபி என்றாலும் அதை நாம் ஏற்பதிலும் முன்னே நிற்போம் தவறேதும் இல்லையே... அத்வைதிகளுக்கு ஏற்புடையதே....

    இறைவனின் படைப்பில் எல்லாம் சமம்... உயர்வு தாழ்வு இருப்பதாக தோன்றும் அதற்கு காரண காரியம் அவனன்றி யாரறிவார்.

    கருத்துப் பதிவாக நான் இதை கூறுகிறேன்...
    நன்றிகள் வாத்தியார் ஐயா! நன்றிகள் கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  26. தோழர் ஆலாசியம் அவர்களுக்கு
    மணநாள் வாழ்த்துக்கள்..

    உங்களது தெளிவான கருத்துரைகள்
    உணர்வுகளை பாராட்டுகிறது..

    இதை தான் பலமுறை அய்யர்
    இந்த வகுப்பில் சொல்லிக்கொண்டுவந்துளார்..

    உங்கள் மொழியில் சொன்னதற்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்

    எனினும்
    இந்த சிந்தனையை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்..

    YOU CAN BUY DOG; BUT
    YOU CAN'T MAKE THEM TO WAP THE TAIL.

    ReplyDelete
  27. இரண்டு நாளாக வரும் பின்னூட்டங்கள் படிக்கும் போது சராசரி மனிதன், சாமான்யன் யாவருக்கும் ஜாதி, மத, இன, பேதமில்லை என்று கூறுவது 100/100 சரியாக இருக்கிறது,
    இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் மாட்டுமே அதனை மூலப்பொருளாக்கி, முதலீடாக்கி லாபம் பார்க்கிறார்கள்.

    நம் வகுப்பறையின் சமத்துவம் இன்னும் மேன்மேலும் வளர ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  28. //இஸ்லாமிய நண்பர்கள் இதை ஏற்கிறார்களோ இல்லையோ.. நாம் நபிகளை நம் எண்ணத்திலே வைத்திருக்கும் இடத்தை அறிந்து மகிழ்வார்கள்...//

    நாம் எந்த எண்ணத்தில் கூறினாலும், அவர்கள் புரிந்து கொண்டுள்ள திருக்குரான், ஹதீஸுக்களுக்கு முரண் என்று தோன்றினால் கடுமையாக எதிர்ப்பார்கள்.

    கொஞ்சம் ஆர்வக் கோளாறு அதிகம் உள்ள ஓர் ஆதீனம் ஒருமுறை 'நபிகள் நாயகம் (சல்) அவர்களை ஓர் அவதாரம் என்றே நம்புகிறேன்'என்று தான் நபிகள் நாயகத்தை உயர்த்துவதாக நினைத்துப் பேசிவிட்டார்.அவர் எதிர் பார்த்ததற்கு மாறாக இஸ்லாமிய சமூகம் கொதித்து எழுந்து அவரைக் கண்டித்தது.அவருடைய கூற்றில் இரண்டு பெரிய இஸ்லாமிய‌ அவமதிப்பு சுட்டப்பட்டது. ஒன்று அவதாரக் கொள்கை.அது இஸ்லாத்தில் கிடையாது.இரண்டாவது நபிகளாக இருந்தாலும் அவரையும் அல்லாவுக்கு இணை வைக்கக்கூடாது.
    ஆதீனம் பொதுவான மன்னிப்புக் கேட்க வைக்கப்படார்.

    ReplyDelete
  29. //அதுவும் திருக்குரானைப் பற்றியது... அதிலே இந்து வேதங்களையும் குரானையும் ஒப்பிட்டு அதிலே இருக்கும் பல ஒற்றுமைகளை அழகாக எழுதி இருந்தார்.//

    நல்லது.முக்கியமாக அவர்கள் ஒப்பிடும்போது, 'வேதத்தில் ஓர் இறைக் கொள்கை(ஏகத்வம்) சொல்லியுள்ளது.திருக்குரானிலும் அவ்வாறே' என்பதுதான் அடிநாதமாக இருக்கும்.'அப்ப‌டி இருக்கும் போது உருவ வழிபாடு செய்து கொண்டு 'தெய்வம் பலப்பல சொல்லக் கூடாது'.எனவே திருக்குரான் வழிக்கு எல்லோரும்(பாதை மாறிப் போனவர்களே) மனம் திரும்புங்கள்'என்பதாகக் கூறுவார்கள்.

    அத்வைதம் கூறுவது இறையின் 'ஒருமைத் தன்மை'.(0neness)
    திருக்குரான் கூறுவது 'ஒரு கடவுள்'(0ne God)

    இவற்றுக்கான தத்துவ வேற்றுமை மிகவும் நுணுக்கமானது.

    "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்பது அத்வைதியின் நிலைப்பாடு.
    "தூணிலும் உளன், துரும்பிலும் உளன்" அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது(அணோர் அணியான் மகதோமஹியான்")என்பது அத்வைதியின் நிலை.எனவே கல்லிலோ, பஞ்சலோகத்திலோ, ஏதோ ஓர் உருவத்திலோ
    கடவுள் இல்லை என்று அத்வைதியால் சொல்ல முடியாது.'இல்லை' என்ற சொல்லே அவன் ஒரு முறைதான் கூறுவான் அது 'இரண்டு இல்லை'என்னும் போதுதான்.மற்ற சமயங்களில் அவனுடைய அகராதியில் இல்லை என்ற சொல்லுக்குப் பொருளே இல்லை.

    இறைவன் சிம்மாசனதில் அமர்ந்து சுவர்கத்தில் உள்ளார் என்பது ஆபிரஹாமிய மதங்களின் நிலைப்பாடு.

    நாம் மறு பிறப்பில் நம்பிக்கை உள்ளவர்கள்.அதனால்தான் 'வியாசர் மீண்டும் பிறப்பு எடுத்திருக்கலாம்' என்றெலாம் பேசுகிறோம்.

    இஸ்லாத்தில் இது ஒரு அவமதிப்பாகக் கொள்ளும் நிலை உள்ளது.அங்கே
    மறு பிறப்பு, அவதாரம் எல்லாம் கிடையாது.

    ReplyDelete
  30. //YOU CAN BUY DOG; BUT
    YOU CAN'T MAKE THEM TO WAP THE TAIL.//

    you can buy a dog;but
    you can't make him wag the tail

    என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விளக்கம் தேவை. சுத்தமான உரை நடையில்.

    ReplyDelete
  31. எம்மதமும் சம்மதம் என்பதை இஸ்லாமியர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் ..அதற்கான விளக்கம் ...
    http://www.youtube.com/watch?v=5JcwEDtfgr0

    ReplyDelete
  32. /// ஒன்று அவதாரக் கொள்கை.அது இஸ்லாத்தில் கிடையாது.இரண்டாவது நபிகளாக இருந்தாலும் அவரையும் அல்லாவுக்கு இணை வைக்கக்கூடாது.///

    சரி தான்...
    இந்த கோட்பாடு இறைவன் பற்றிய அடிப்படை கொள்கையே

    அது இஸ்லாத்திற்கு மட்டும் சொந்தமல்ல

    ///அவதாரக் கொள்கை.///

    "தாயுமிலி தந்தையிலி
    தான்தனியன் காணேடீ"

    இது திருவாசகத்தில் வரும் திருச்சாழல் என்ற பகுதியில் இருந்து..

    ///இரண்டாவது நபிகளாக இருந்தாலும் அவரையும் அல்லாவுக்கு இணை வைக்கக்கூடாது.///

    இறைவனுக்கு இணையாக
    யாரையும் சொல்ல முடியாது சொல்லக் கூடாது

    ஒருவன் என்னும் ஒருவன் காண்க

    "இது திருவண்டப்பகுதியில் வரும் திருவாசக வரிகள்.."

    அடிப்படை இங்கே..
    சரக்கு நம்முடையது..
    வியாபாரம் செய்பவர்கள் அவர்கள்..

    ReplyDelete
  33. பக்தி என்றாலே கலகம் என்றாகிவிடுகிறது.
    இந்தப் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் அனைத்தையும் பொறுமையாகப் பாருங்கள்
    விவாதத்தைத் தூண்டும் கருத்துக்கள்.
    எதிர் கருத்துள்ளவர்களைத் தூண்டில் போட்டு இழுக்கும் பின்னூட்டங்கள்

    பதிவு நன்றாக உள்ளது அல்லது இல்லை என்று ஒரு வரியில் சொல்லலாம் இல்லையா?
    அதைவிடுத்து, பதிவிற்குத் தேவையில்லாத தங்களுடைய சொந்தக் கருத்துக்களை எல்லாம், தெரிந்த செய்திகளை எல்லாம் எதற்காக பின்னூட்டங்களில் எழுத வேண்டும்?

    பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்றால் ஏன் அனுமதிக்கவில்லை என்ற கேள்வி.
    அனுமதித்தால் இதுபோன்ற குளறுபடிகள்.
    அனுமதித்ததை நீக்கு என்று ஒருவரின் மின்னஞ்சல்.
    எழுதியதை ஏன் நீக்கினாய் என்று எழுதியவரின் மின்னஞ்சல்!

    ”சோதனை மேல் சோதனை
    போதுமடா சாமி”

    வாத்தியார்

    ReplyDelete
  34. wag the tail
    என்பது சரியே..

    தட்டச்சு பிழை
    சுட்டிக் காட்டி திருத்திய மேன்மைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  35. வாத்தியார் ஐயா. இந்தப் பிரச்சினையெல்லாம் வேண்டாம் என்பது போன்றுதான் எனது பின்னூட்டம் எப்போதும் இருக்கும். எனக்கு போதிய நேரமில்லாமல் இருப்பது நல்லதாக போய் விட்டது. என் மூலம் வரக்கூடிய கருத்து, எதிர்கருத்து, வாத விவாதங்களெல்லாம் தவிர்க்கப் படுகிறது.

    ReplyDelete
  36. ///பதிவு நன்றாக உள்ளது அல்லது இல்லை என்று ஒரு வரியில் சொல்லலாம் இல்லையா?

    ”சோதனை மேல் சோதனை
    போதுமடா சாமி”////


    இறைவனுக்கு
    பிறப்பு கற்பிப்பது தவறு


    "இன்ன தன்மையென்று
    அறிவொன்ன எம்மானை"

    இது அப்பர் வாக்கு

    "எண்குணத்தான் தாளை
    வணங்காக தலை"

    என்ற குறளில்
    தடத்த இலக்கணமும்
    ஸ்வருப இலக்கணமும்

    என கருத்துப் பரிமாற்றமாகவே தான் இன்றைய பின் ஊட்டமுள்ளது..(இது வரையில்)

    இதில் இடர் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே..

    இருப்பினும்
    வாத்தியாரின் ஆனைப்படி

    இது தொடர்பாக
    இன்றைய பின் ஊட்டத்தில்
    இனி எழுதவில்லை

    வணக்கம்
    வளமுடன் வாழ்க
    நலமுடன் வளர்க..

    ReplyDelete
  37. எந்த மதத்தில் என்ன கூறி இருக்கிறார்கள், எது சரி, எது தவறு என்று சிந்திக்காமல், இறைவன் ஒருவனே என்ற கொள்கையில் இருப்பவன் நான். என் கருத்து, கருத்து பேதங்கள் எதுவானாலும் என்னுடனேயே வைத்துக் கொள்வேன். யாருடனும் விவாதிக்க விரும்புவதில்லை.

    ReplyDelete
  38. ///////Blogger அய்யர் said...
    ///பதிவு நன்றாக உள்ளது அல்லது இல்லை என்று ஒரு வரியில் சொல்லலாம் இல்லையா?
    ”சோதனை மேல் சோதனை
    போதுமடா சாமி”////
    இறைவனுக்கு
    பிறப்பு கற்பிப்பது தவறு
    "இன்ன தன்மையென்று
    அறிவொன்ன எம்மானை"
    இது அப்பர் வாக்கு
    "எண்குணத்தான் தாளை
    வணங்காக தலை"
    என்ற குறளில்
    தடத்த இலக்கணமும்
    ஸ்வருப இலக்கணமும்
    என கருத்துப் பரிமாற்றமாகவே தான் இன்றைய பின் ஊட்டமுள்ளது..(இது வரையில்)
    இதில் இடர் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே..
    இருப்பினும்
    வாத்தியாரின் ஆனைப்படி
    இது தொடர்பாக
    இன்றைய பின் ஊட்டத்தில்
    இனி எழுதவில்லை
    வணக்கம்
    வளமுடன் வாழ்க
    நலமுடன் வளர்க..//////

    உங்களுடைய கீழ்க்கண்ட கருத்தில் இடர் உள்ளதா அல்லது இல்லையா என்று சற்று விளக்குங்கள் சுவாமி!

    ///////அடிப்படை இங்கே..
    சரக்கு நம்முடையது..
    வியாபாரம் செய்பவர்கள் அவர்கள்..
    Saturday, August 11, 2012 12:34:00 PM//////

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  39. //எந்த மதத்தில் என்ன கூறி இருக்கிறார்கள், எது சரி, எது தவறு என்று சிந்திக்காமல், இறைவன் ஒருவனே என்ற கொள்கையில் இருப்பவன் நான். என் கருத்து, கருத்து பேதங்கள் எதுவானாலும் என்னுடனேயே வைத்துக் கொள்வேன். யாருடனும் விவாதிக்க விரும்புவதில்லை.//

    விவாதங்கள் தகவல் அறியும் ஒரு வழியே. நமது சமய இலக்கியம் முழுவதும் கேள்வியும் பதிலுமே. பகவத் கீதையும் கூட கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த சம்வாதமே. அப்படித்தான் ஒவ்வொரு அத்தியாயமும்
    முடியும் போது கீதையில் கூறி முடிப்பார்கள். "இதி பகவத்கீதானாம்,உபனிஷத்ஸு, பிரம்ம வித்யாயாயம், யோக ஸாஸ்த்ரே,
    கிருஷ்ணார்ஜுன சம்வாதே....'

    திரு. ஐயர் அவர்ககள் கூறியுள்ள 'திருச்சாழ'லும் கூட தத்துவ நிலையில் கரை கண்ட ஒரு பெண்ணுக்கும், புராண நிலையில் நிலை கொண்ட ஒரு பெண்ணுக்குமான சம்வாதமே.திருச்சாழலில் பரமசிவனின் புராணம் முழுமையும் கூறப்பட்டு, அதற்கான தத்துவ விளக்கமும் கூறப்படுகிறது என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது.

    இறைவன் ஒருவனே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
    ஆனால் அவனை 'ஓர்நாமம் ஓர் உருவம் இல்லார்க்குப் பல நாமம்' சொல்லும் உரிமையை யாருக்கும் மறுக்கக் கூடாது.அதுதான் உண்மையான மத ஒற்றுமையைக் கொண்டு வரும்.அப்படித்தான் இந்து மதம் விளங்கி வருகிறது.

    பல் வேறு நிலைகளில் இறைவனைப் பற்றிய புரிதல் இருப்பவர்களையும்
    அங்கீகரிக்காமல், நாங்கள் சொல்லுவதை மட்டுமே அனுசரிக்க வேண்டும் என்று ஒரு குழு சொல்லும் போதுதான் மத வேற்றுமை வருகிறது.

    ReplyDelete
  40. திரு அண்டப் பகுதி
    ‍‍‍==================

    "அற்புதன் காண்க! அநேகன் காண்க!"

    திருச்சாழல்:
    =============

    தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
    பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ!
    பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர்
    விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com