மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.8.12

Astrology - Popcorn Post அவர் நாயகனா அல்லது வில்லனா?

Astrology - Popcorn Post  அவர் நாயகனா அல்லது வில்லனா?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினைந்து

செவ்வாயின் இரட்டை வேடம்.

ஒரு படத்தின் நாயகனுக்குப் படத்தில் இரட்டை வேடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். படத்தின் கதாநாயகனும் அவரே, வில்லனும்
அவரே என்றால், எந்த வேடத்தில் அதிகமாகக் காட்சி கொடுப்பார்?

காட்சி கொடுப்பது முக்கியமில்லை. எந்த வேடத்தில், படத்தின் முடிவில் அவர் வெற்றி பெறுவார்? வில்லன் வேடமே வெற்றி பெற்றால் என்ன ஆகும்?

செவ்வாய்க்கு அந்த நிலைமை உண்டு!

விருச்சிக லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் லக்கினத்திற்கும் உரியவன், ஆறாம் வீடான மேஷத்திற்கும் உரியவன் அவன்.ஆறாம் வீடு வில்லங்கமான வீடு என்பது நமக்குத் தெரியும். ஆகவே நாம் விருச்சிக லக்கினக்காரர்கள் என்றால் அதிகமாகக் கவலை கொள்வோம்.

செவ்வாய் ஜாதகத்தில் வலிமையுடன் இருந்தால், அதாவது உச்சம் பெற்றோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ இருந்தாலோ அல்லது
அஷ்டகவர்க்க சுயபரல்களில் 5ம் அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ,  ஜாதகனுக்கு மொத்தமாக நாயகன் வேலையை மட்டுமே
செய்வார்.
 
தவறி வலிமையின்றி இருந்தால், அதாவது ஜாதகத்தில் நீசமடைந்து இருந்தாலும் அல்லது 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தாலும்
அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக் குறைவான பரல்களுடன் இருந்தாலும் நீமைகளையே செய்வார்.

எப்போது செய்வார்? தனது தசா புத்திகளில் செய்வார். அப்படிப்பட்ட நிலைமை உடைய ஜாதகர்கள், சம்பந்தப்பட்ட புத்திக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், இறைவழிபாட்டையும் மேற்கொள்வது நன்மை பயக்கும்

செவ்வாய்க்கு மேஷம்தான் மூலத்திரிகோண வீடாகும். ஆகவே அவர் வலிமையுடன் இருந்தால், லக்கினத்துடன் இரண்டு வீடுகளுக்கும்
சேர்த்து இரட்டிப்பு நன்மைகளைச் செய்வார்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

27 comments:

  1. ஒரு கிரஹம் இரண்டு இடங்களுக்கு அதிபதியாக வரும்போது அதில் ஒரு இடம் 3,6,8,12ஆம் இடங்களுக்கு அதிபதியாக இருந்தால் அவர் என்ன செய்வார் என்ற குழப்பம் எல்லோருக்குமே இருக்கும். இன்றைய பாப்கார்ன் பதிவில் அந்த சந்தேகம் மிக தெளிவாக தீர்க்கப்பட்டிருந்தது.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. மெடிக்கல் சம்பந்த பட்ட பயனுள்ள பகுதியை பார்த்தேன்..நிச்சயம் இது முக்கியமான ஒன்று..

    ReplyDelete
  3. ஐந்திற்கும் பன்னிரெண்டிற்கும் அதிபதி இரண்டாம் வீட்டில் உட்சம் பெற்று!
    இரண்டிற்கு உரியவனோடு பரிவர்த்தனை யோகத்தோடு!
    பூர்வ புண்ணியாதிபதி உட்சம் பெற்று தனது வீட்டையும் எட்டு, ஒன்பதாம் வீடுகளையும் தனது பார்வையிலே வைத்து இருக்கிறான்.

    மேலும் அவனுக்கு கேந்திரங்களில் சுபகிரங்கள் குரு, சுக்கிரன் (லக்னாதிபதியும், லாபாதிபதியும்) மற்றும் வளர்பிறைச் சந்திரன். எட்டிற்குரியவன் என்றாலும் வர்க்கப் பலத்துடன் இருக்கும் ராஜ கிரகம் அல்லவா!

    நடப்பு செவ்வாய் திசை ராகு புத்தி...
    அடுத்து குஜ திசையிலே குரு புத்தி....

    தங்களின் பாடம் மூலம் இனியும் நல்ல கால கட்டமாகவே இருக்கும் எனவும் அறிகிறேன்.

    பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. Good morning, A truly eye opening post indeed; The same logic, if I am not wrong, may be applied to natives of other lagna, for instance, Sagittarius, for whom Venus is not only the Lord of the 11th house but is also the Lord of the much dreaded 6th house.

    So, by the principle of mathematical induction, shall we safely conclude that for those with Venus in good health (Exalted/in own house and a good score in Ashtagavarkam), Venus shall act as the Lord of the 11th house, by and large?

    I wish all a good day!

    ReplyDelete
  5. அன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.கடந்த சில நாட்களாக வேலைப்பளு காரணமாக வகுப்பரைக்கு வர இயலவில்லை. இன்றயபதிவு மிக அருமை.நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது.எனக்கு செவ்வாய் பூர்வபுண்ணியாதிபதியாகவும்,விரையாதிபதியாகவும் இருக்கிறார்.அவர் 11ல் ராசிநாதன் சுக்கிரனுடன் 5பரல்களுடன் அமர்ந்து நன்மையே செய்துகொண்டிருக்கிறார்.நன்றிகள்.

    ReplyDelete
  6. ////Blogger சரண் said...
    ஒரு கிரஹம் இரண்டு இடங்களுக்கு அதிபதியாக வரும்போது அதில் ஒரு இடம் 3,6,8,12ஆம் இடங்களுக்கு அதிபதியாக இருந்தால் அவர் என்ன செய்வார் என்ற குழப்பம் எல்லோருக்குமே இருக்கும். இன்றைய பாப்கார்ன் பதிவில் அந்த சந்தேகம் மிக தெளிவாக தீர்க்கப்பட்டிருந்தது.
    நன்றி ஐயா./////

    ஆமாம். பலருடைய நீண்ட நாள் குழப்பம் இன்று தீர்ந்துவிடும் என்று நானும் நம்புகிறேன்!

    ReplyDelete
  7. /////Blogger கோவை நேரம் said...
    மெடிக்கல் சம்பந்தப்பட்ட பயனுள்ள பகுதியை பார்த்தேன்..நிச்சயம் இது முக்கியமான ஒன்று../////

    நல்லது. நன்றி நண்பரே! நல்ல நேரம் கோவை என்று பெயரை வைத்துக்கொண்டிருக்கலாம்!

    ReplyDelete
  8. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ஐந்திற்கும் பன்னிரெண்டிற்கும் அதிபதி இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று!
    இரண்டிற்கு உரியவனோடு பரிவர்த்தனை யோகத்தோடு!
    பூர்வ புண்ணியாதிபதி உட்சம் பெற்று தனது வீட்டையும் எட்டு, ஒன்பதாம் வீடுகளையும் தனது பார்வையிலே வைத்து இருக்கிறான்.
    மேலும் அவனுக்கு கேந்திரங்களில் சுபகிரங்கள் குரு, சுக்கிரன் (லக்னாதிபதியும், லாபாதிபதியும்) மற்றும் வளர்பிறைச் சந்திரன். ட்டிற்குரியவன் என்றாலும் வர்க்கப் பலத்துடன் இருக்கும் ராஜ கிரகம் அல்லவா!
    நடப்பு செவ்வாய் திசை ராகு புத்தி...
    அடுத்து குஜ திசையிலே குரு புத்தி....
    தங்களின் பாடம் மூலம் இனியும் நல்ல கால கட்டமாகவே இருக்கும் எனவும் அறிகிறேன்.
    பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    உங்கள் பெயரில் கோவிந்தன் இருக்கிறார். உங்களுக்கு எப்போதுமே நல்ல நேரம்தான் ஆலாசியம்!

    ReplyDelete
  9. //////Blogger Bhuvaneshwar said...
    Good morning, A truly eye opening post indeed; The same logic, if I am not wrong, may be applied to natives of other lagna, for instance, Sagittarius, for whom Venus is not only the Lord of the 11th house but is also the Lord of the much dreaded 6th house.
    So, by the principle of mathematical induction, shall we safely conclude that for those with Venus in good health (Exalted/in own house and a good score in Ashtagavarkam), Venus shall act as the Lord of the 11th house, by and large?
    I wish all a good day!/////

    இரட்டை வீடுகளுக்கு உரிமை. அதில் ஒரு வீடு 6 அல்லது 8 அல்லது 12 எனும்போது என்ன ஆகும் எனும் பொதுக் குழப்பம் அனைவருக்கும் இன்று தீர்ந்துவிடும் என்று நானும் நம்புகிறேன்!

    ReplyDelete
  10. //////Blogger sadan raj said...
    அன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.கடந்த சில நாட்களாக வேலைப்பளு காரணமாக வகுப்பரைக்கு வர இயலவில்லை. இன்றயபதிவு மிக அருமை.நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது.எனக்கு செவ்வாய் பூர்வபுண்ணியாதிபதியாகவும்,விரையாதிபதியாகவும் இருக்கிறார்.அவர் 11ல் ராசிநாதன் சுக்கிரனுடன் 5பரல்களுடன் அமர்ந்து நன்மையே செய்துகொண்டிருக்கிறார்.நன்றிகள்.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சதன்ராஜ்!!

    ReplyDelete
  11. நன்றி கிருஷ்ணன் சார். மிக நல்ல தளத்தை அருமுகப்படுத்தி உள்ளீர்கள்.

    பத்து மாத்திரை கம்பெனி கொடுப்பது 2.60 ஆனால் டாக்டர் விற்பதோ 26.60
    ஆகையால்தான் இப்போது டாக்டர்களே மருந்து மாத்திரையையும் விற்கிறார்கள் ,இப்போதெல்லாம் புத்தகங்களில் டாக்டர், ஜோக் தான் அதிகம் வருகிறது.

    ReplyDelete
  12. Thanks to Mr.KMR for the useful information and many thanks for you to publish the same...

    Kind Regards
    Ramakrishnan A

    ReplyDelete
  13. Thank you for the lesson sir. For example if he sits in 5th or 9th or 11th house and that house is an inimical house or an inimical planet joined with him, then what will be the result? Will the good result be reduced or evil result increased? In this scenario astavargam will show the type of result?

    ReplyDelete
  14. லால் குடி தோழரின் மருத்துவ செய்திகளுக்கு நன்றி..

    மருந்தே உணவாகிப் போன இன்றைய தேவைகளுக்கு ஏற்றது..

    மாத்திரை மருந்து சாப்பிடுவதையும் சாப்பிட்டு வருவதாக சொல்வதையும் கவுரவமாக நினைப்பவர்களுக்கு ஏதாவது சொன்னால் நன்று..

    வாழ்த்துக்கள் வணக்கங்கள்

    ReplyDelete
  15. நன்கு தெளிவாக உள்ளது ஐயா. ஆனாலும் நான் metallurgy படித்தவன் ஆதலால் 99.99% சதவிகிதம் இன்னும் Refine பண்ணி தெளிவாக்கிக் கொள்ள, ஒரு சந்தேகம்:

    Let's take a hypothetical case study.

    உதாரணமாக தனுசு லக்கினத்தினை கைப்பற்றுவோம்:

    இந்த லக்கினத்துக்கு வில்லன் கூடாரத்துக்கு உரிமையாளர் சுக்கிரர். அவர் லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கும் சாவிக்கொத்தினை மடியில் கட்டிக்கொண்டு உள்ளார்.

    ஒரு hypothetical நிலைமையை பார்ப்போம்: Let us assume, ஒரு தனுசு லக்கின ஜாதகத்தில் ஆறாம் அதிபதி + பதினொன்றாம் அதிபதி சுக்கிரர், ராசியில் உச்சம், அம்சத்தில் ஆட்சி, ஆனால் சுயவர்க்கப்பரல் நான்கு மட்டுமே.

    இங்கே உச்சம் + ஆட்சியை எடுத்துக்கொள்வதா இல்லை சராசரி நான்கு பரல்களை எடுத்துகொள்வதா?

    சுய வர்க்கம் நான்கு மட்டும் என்பதால் நல்லது + வில்லத்தனம் இரண்டையும் சமமாக பண்ணுவாரா? இல்லை, ராசியில் உச்சம் மற்றும் அம்சத்தில் ஆட்சி என்பதால் மோட்டார் படகு சவாரியில் "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" பாட்டுக்கு BGM போடுவாரா?

    (பழைய மாணவர்களுக்கு நான் சொன்னதின் பின்னணி புரியும்)

    Kindly dispel my doubt Sir!

    +++++

    பிரியங்களுடன்
    புவனேஷ்

    ReplyDelete
  16. Dear Sir

    Good Morning

    For me Viruchiga Lagna - Lagnadhibadhi sevvai is in 11th place (Kanni) with Mandhi , Lord Guru is 7th Place and lord saturn is 9th Place.

    Guru parvayil & saturn parvayil Lagnadhibadhi 11il(with mandhi).

    Thank you

    Regards
    Arul Kumar Rajaraman

    ReplyDelete
  17. Dear Sir

    Good Morning.

    Lagdnadhibhadhi 11th place(kanniyil with mandhi) , Lord guru 7th place and lord saturn 9th place.

    The beauty of 11th place is from lagna - it is labha Isthana and from Sathru isthana to Sathru Isthana.

    Thank you

    Regards
    Arul Kumar Rajaraman

    ReplyDelete
  18. கடக லக்னத்திற்கு குரு 6க்கும் 9க்கும் உரியவர் ஆகிறார்.அனால் அவர் 6ம் விட்டிற்குரியவராகத் தீயவராகவும் 9ம் வீட்டிற்கு உரியவராக நன்மையானவராகவும் ஆகிறார்.அதே போல் சனி கடகலக்னத்திற்கு 7க்கும் 8க்கும் உரியவராகிறார். புதன் 3க்கும் 12 க்கும் உரியவராகிறார்.இவர்களால் நன்மையா தீமயா?
    செவ்வாய் கடகத்திற்கு 5,10க்கு உடையவராகி யோககாரகனாகி 12ல் மறைந்து, 5 சுயவர்க்கப் பரல் பெற்றால் நன்மையா ,தீமையா?

    4, 11 க்கு உடைய சுக்ரன் கடகத்திற்கு 3ல் கன்னியில் நீசமாகி கேது சம்பந்தம் பெற்றால்......?

    வாலறுந்த‌ குரங்குக்கு காயத்திற்கு மிளகாய்ப்பொடி வைத்துக்கட்டி, தேன் கூட்டில் கைவைத்து கலைந்த தேனிக்கள் கொட்ட, கள்பானையிலிருந்து கள்ளையும் குடித்துவிட்டால் எப்படி இருக்கும் என்பது போல கேள்வி இது.
    ஹி ஹி ஹி.....!

    ReplyDelete
  19. நல்ல ஸ்தானத்திற்கு அதிபதியான நல்லவன் தீய ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறான் என்றால் எல்லா சௌகரியங்களையும் செய்து கொடுத்த தந்த அதற்கு சில கட்டுப் பாடுகளையும் செய்து கொடுத்து அனுபவிக்கச் சொல்கிறார் என்றே நான் புரிந்துக் கொள்கிறேன்.

    வசதிபடைத்த வீட்டில் கட்டு பாடு இல்லாமல் வளரும் ஒருவனின் மனமும் புத்தியும் கெட்டுப் போயிருந்தால் அவன் எப்படி இருப்பான்... எத்தனையோ வில்லன்களை வரலாறு காட்டும்.

    கேந்திர கோணாதிபதிகளின் பலன் ஆற்றில் பெருகி ஓடும் வெள்ளம் போன்று என்றால்... அதன் கரைகள் தாம் அல்லது முகடுகளும் வளைவுகளும் சிறு மேடு பள்ளங்களும் தான் அதே அதிபன் தீய ச்தானத்திற்குமாக இருப்பதும்...

    இன்னும் புரியும் படி சொன்னால் நல்ல சொகுசு காரின் பிரேக்கும், செல்லும் சாலையின் வேகத் தடையும் தான் அந்த தீய வீட்டின் பலன்...

    ஞானம் பெற பேரு உதவியும் இவர்கள் தாம் செய்கிறார்கள்... இவர்கள் இல்லையேல்.. தாய் தந்தை அருமையை! மனைவியின் அருமையை! இறைவனின் அருமையை யார் உணர்த்துவது..... இப்படித் தான் எனது புரிதலும்...

    சுக்கிரன் தீய ஸ்தானத்திற்கு அதிபதி அதீத காம உணர்வை கொடுப்பான் அல்லது காலி செய்வான்... அவன் எப்படி இருக்கிறான் என்பதும் யாரோடு இருக்கிறான் என்பதும் அதை நிர்ணயிக்கும். சரி சுக்கிரன் அதற்கு மாத்திரமா காரகன் என்றால் இன்னும் பல இருக்கிறது போல அனைத்தையும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.... எனக்கு சுக்கிரன் ஆட்சியோடு ராசியிலும்... உச்சத்தோடு அம்சத்திலும் (அதிலும் உச்ச புதனின் பார்வை பெற்று இருக்கிறான்) குட்டி சுக்கிரதிசை வறுமை வழி காட்டியது.... அதுவே வாழ்வின் அர்த்தத்தையும் காட்டியது... ரசனை இருந்தது அது பூமியில் இருப்பவன் வானத்து விண்மீனை ரசிப்பது போன்று... கலை உணர்வு இருந்தது அதனால் கலைகளை கற்கவும் கற்றாரோடு இருக்கவும் செய்தது... இந்த சுக்கிரனும் புதனும் இரண்டில் இருக்கும் உச்ச செவ்வாயும் இலக்கிய ஆர்வம் கொடுத்தது மேடை ஏற்றியது... ஊர் போற்ற புகழைத் தந்தது... சுக்கிர திசை முடியும் போது வெளிநாட்டுக்கு அனுப்பி பொருளை ஏற்பாடு செய்து... வெகு இளமையில் இருபத்தைந்தாம் வயதில் மனமும் முடித்தும் வைத்தது.... அழகான, அன்பான, நன்கு புரிந்த மனைவியையும் தந்தது...

    குட்டிச் சுக்கிரன் கொடுமைக் காரன் வக்கிரமனதை வகைவகையாய்த் தருவான்... அதிலே மற்றவர்கள் எப்படி எல்லாம் உதவுகிறார்கள் என்பது தான் முக்கியம். அதாவது சந்திரனும், சனியும், குருவும் புதனுமாக... போதாதற்கு நம்ம ஞானி கேதுவோ ஒன்பதில்.... வாழ்வைப் புரிந்து கொள்ள பேருதவியே அவன் தானே!

    நன்றி...

    ReplyDelete
  20. ///////Blogger thanusu said...
    நன்றி கிருஷ்ணன் சார். மிக நல்ல தளத்தை அருமுகப்படுத்தி உள்ளீர்கள்.
    பத்து மாத்திரை கம்பெனி கொடுப்பது 2.60 ஆனால் டாக்டர் விற்பதோ 26.60
    ஆகையால்தான் இப்போது டாக்டர்களே மருந்து மாத்திரையையும் விற்கிறார்கள் ,இப்போதெல்லாம் புத்தகங்களில் டாக்டர், ஜோக் தான் அதிகம் வருகிறது.//////

    முற்காலத்தில் கல்வி & மருத்துவம் இரண்டும் இலவசம். மன்னர் மான்யம் அளிப்பார். இப்போது அவை இரண்டும்தான் காசு அதிகமாகப் புழங்கும் வியாபாரம்!

    ReplyDelete
  21. ///////Blogger Ramki said...
    Thanks to Mr.KMR for the useful information and many thanks for you to publish the same...
    Kind Regards
    Ramakrishnan A////////

    ஆகா, நானும் சொல்லிக்கொள்கிறேன்: நன்றி முத்துராமகிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  22. ////////Blogger Arul said...
    Thank you for the lesson sir. For example if he sits in 5th or 9th or 11th house and that house is an inimical house or an inimical planet joined with him, then what will be the result? Will the good result be reduced or evil result increased? In this scenario astavargam will show the type of result?///////

    பிறகு கேந்திர, திரிகோண ஸ்தானங்களுக்கு என்ன வேலை? அந்த இடத்தில் அமரும்போது, அது என்ன இடமாக இருந்தாலும் அவர்கள் நன்மையே செய்வார்கள்

    ReplyDelete
  23. ///////Blogger அய்யர் said...
    லால் குடி தோழரின் மருத்துவ செய்திகளுக்கு நன்றி..
    மருந்தே உணவாகிப் போன இன்றைய தேவைகளுக்கு ஏற்றது..
    மாத்திரை மருந்து சாப்பிடுவதையும் சாப்பிட்டு வருவதாக சொல்வதையும் கவுரவமாக நினைப்பவர்களுக்கு ஏதாவது சொன்னால் நன்று..
    வாழ்த்துக்கள் வணக்கங்கள்////////

    அவர்களுக்கு என்ன சொல்லியும் பிரயோசனமில்லை. சொல்லாமல் இருப்பதே (நமக்கு) கவுரவம்!

    ReplyDelete
  24. ///////Blogger Bhuvaneshwar said...
    நன்கு தெளிவாக உள்ளது ஐயா. ஆனாலும் நான் metallurgy படித்தவன் ஆதலால் 99.99% சதவிகிதம் இன்னும் Refine பண்ணி தெளிவாக்கிக் கொள்ள, ஒரு சந்தேகம்:
    Let's take a hypothetical case study.
    உதாரணமாக தனுசு லக்கினத்தினை கைப்பற்றுவோம்:
    இந்த லக்கினத்துக்கு வில்லன் கூடாரத்துக்கு உரிமையாளர் சுக்கிரர். அவர் லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கும் சாவிக்கொத்தினை மடியில் கட்டிக்கொண்டு உள்ளார்.
    ஒரு hypothetical நிலைமையை பார்ப்போம்: Let us assume, ஒரு தனுசு லக்கின ஜாதகத்தில் ஆறாம் அதிபதி + பதினொன்றாம் அதிபதி சுக்கிரர், ராசியில் உச்சம், அம்சத்தில் ஆட்சி, ஆனால் சுயவர்க்கப்பரல் நான்கு மட்டுமே.
    இங்கே உச்சம் + ஆட்சியை எடுத்துக்கொள்வதா இல்லை சராசரி நான்கு பரல்களை எடுத்துகொள்வதா?
    சுய வர்க்கம் நான்கு மட்டும் என்பதால் நல்லது + வில்லத்தனம் இரண்டையும் சமமாக பண்ணுவாரா? இல்லை, ராசியில் உச்சம் மற்றும் அம்சத்தில் ஆட்சி என்பதால் மோட்டார் படகு சவாரியில் "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" பாட்டுக்கு BGM போடுவாரா?
    (பழைய மாணவர்களுக்கு நான் சொன்னதின் பின்னணி புரியும்)
    Kindly dispel my doubt Sir!
    +++++
    பிரியங்களுடன்
    புவனேஷ்//////

    அம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். குறைந்த கருவிகளுடன் BGM போடுவார்!

    ReplyDelete
  25. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning
    For me Viruchiga Lagna - Lagnadhibadhi sevvai is in 11th place (Kanni) with Mandhi , Lord Guru is 7th Place and lord saturn is 9th Place. Guru parvayil & saturn parvayil Lagnadhibadhi 11il(with mandhi).
    Thank you
    Regards
    Arul Kumar Rajaraman////

    லக்கினாதிபதி 11ல் இருந்தால் (லாபமேறினால்) குறைந்த முயற்சி அதிக பலன். Minimum efforts; Maximum benefits
    குரு விருச்சிகத்திற்கு 2 & 5ஆம் அதிபதி அவர் 7ல் இருப்பது நன்மையே!
    சனி ஒன்பதில் இருப்பதுதான் கஷ்டம். அடிக்கடி Fuse போகும். கிடைக்கவேண்டியது நேரத்திற்குக் கிடைக்காது!

    ReplyDelete
  26. /////Blogger kmr.krishnan said...
    கடக லக்னத்திற்கு குரு 6க்கும் 9க்கும் உரியவர் ஆகிறார்.அனால் அவர் 6ம் விட்டிற்குரியவராகத் தீயவராகவும் 9ம் வீட்டிற்கு உரியவராக நன்மையானவராகவும் ஆகிறார்.அதே போல் சனி கடகலக்னத்திற்கு 7க்கும் 8க்கும் உரியவராகிறார். புதன் 3க்கும் 12 க்கும் உரியவராகிறார்.இவர்களால் நன்மையா தீமயா?
    செவ்வாய் கடகத்திற்கு 5,10க்கு உடையவராகி யோககாரகனாகி 12ல் மறைந்து, 5 சுயவர்க்கப் பரல் பெற்றால் நன்மையா ,தீமையா?
    4, 11 க்கு உடைய சுக்ரன் கடகத்திற்கு 3ல் கன்னியில் நீசமாகி கேது சம்பந்தம் பெற்றால்......?
    வாலறுந்த‌ குரங்குக்கு காயத்திற்கு மிளகாய்ப்பொடி வைத்துக்கட்டி, தேன் கூட்டில் கைவைத்து கலைந்த தேனிக்கள் கொட்ட, கள்பானையிலிருந்து கள்ளையும் குடித்துவிட்டால் எப்படி இருக்கும் என்பது போல கேள்வி இது.
    ஹி ஹி ஹி.....!////

    அவர்களால் நன்மையா அல்லது தீமையா என்பது அவர்களுடைய வலிமை அல்லது நிலைமையைப் பொறுத்தது!
    யோககாரகன் செவ்வாய் 12 ல் மறைந்தது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்! 50 பந்தில் செஞ்சுரி அடிப்பதை விட்டுவிட்டு, 100 பந்தில் 20 ரன்கள் எடுக்கும் நிலைதான்!

    ReplyDelete
  27. /////Blogger ஜி ஆலாசியம் said...
    நல்ல ஸ்தானத்திற்கு அதிபதியான நல்லவன் தீய ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறான் என்றால் எல்லா சௌகரியங்களையும் செய்து கொடுத்த தந்த அதற்கு சில கட்டுப் பாடுகளையும் செய்து கொடுத்து அனுபவிக்கச் சொல்கிறார் என்றே நான் புரிந்துக் கொள்கிறேன்.
    வசதிபடைத்த வீட்டில் கட்டு பாடு இல்லாமல் வளரும் ஒருவனின் மனமும் புத்தியும் கெட்டுப் போயிருந்தால் அவன் எப்படி இருப்பான்... எத்தனையோ வில்லன்களை வரலாறு காட்டும்.
    கேந்திர கோணாதிபதிகளின் பலன் ஆற்றில் பெருகி ஓடும் வெள்ளம் போன்று என்றால்... அதன் கரைகள் தாம் அல்லது முகடுகளும் வளைவுகளும் சிறு மேடு பள்ளங்களும் தான் அதே அதிபன் தீய ச்தானத்திற்குமாக இருப்பதும்...
    இன்னும் புரியும் படி சொன்னால் நல்ல சொகுசு காரின் பிரேக்கும், செல்லும் சாலையின் வேகத் தடையும் தான் அந்த தீய வீட்டின் பலன்...
    ஞானம் பெற பேரு உதவியும் இவர்கள் தாம் செய்கிறார்கள்... இவர்கள் இல்லையேல்.. தாய் தந்தை அருமையை! மனைவியின் அருமையை! இறைவனின் அருமையை யார் உணர்த்துவது..... இப்படித் தான் எனது புரிதலும்...
    சுக்கிரன் தீய ஸ்தானத்திற்கு அதிபதி அதீத காம உணர்வை கொடுப்பான் அல்லது காலி செய்வான்... அவன் எப்படி இருக்கிறான் என்பதும் யாரோடு இருக்கிறான் என்பதும் அதை நிர்ணயிக்கும். சரி சுக்கிரன் அதற்கு மாத்திரமா காரகன் என்றால் இன்னும் பல இருக்கிறது போல அனைத்தையும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.... எனக்கு சுக்கிரன் ஆட்சியோடு ராசியிலும்... உச்சத்தோடு அம்சத்திலும் (அதிலும் உச்ச புதனின் பார்வை பெற்று இருக்கிறான்) குட்டி சுக்கிரதிசை வறுமை வழி காட்டியது.... அதுவே வாழ்வின் அர்த்தத்தையும் காட்டியது... ரசனை இருந்தது அது பூமியில் இருப்பவன் வானத்து விண்மீனை ரசிப்பது போன்று... கலை உணர்வு இருந்தது அதனால் கலைகளை கற்கவும் கற்றாரோடு இருக்கவும் செய்தது... இந்த சுக்கிரனும் புதனும் இரண்டில் இருக்கும் உச்ச செவ்வாயும் இலக்கிய ஆர்வம் கொடுத்தது மேடை ஏற்றியது... ஊர் போற்ற புகழைத் தந்தது... சுக்கிர திசை முடியும் போது வெளிநாட்டுக்கு அனுப்பி பொருளை ஏற்பாடு செய்து... வெகு இளமையில் இருபத்தைந்தாம் வயதில் மனமும் முடித்தும் வைத்தது.... அழகான, அன்பான, நன்கு புரிந்த மனைவியையும் தந்தது...
    குட்டிச் சுக்கிரன் கொடுமைக் காரன் வக்கிரமனதை வகைவகையாய்த் தருவான்... அதிலே மற்றவர்கள் எப்படி எல்லாம் உதவுகிறார்கள் என்பது தான் முக்கியம். அதாவது சந்திரனும், சனியும், குருவும் புதனுமாக... போதாதற்கு நம்ம ஞானி கேதுவோ ஒன்பதில்.... வாழ்வைப் புரிந்து கொள்ள பேருதவியே அவன் தானே!
    நன்றி...////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com