மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.12

Cinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா!

Cinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா!

காதல் வயப்படுவது பெரும்பாலும் ஈர்க்கின்ற அழகை வைத்துத்தான். அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் பார்க்கின்ற வேலையும், கிடைக்கின்ற சம்பளத்தையும் வைத்துத்தான் காதல் வசப்படுகின்றது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இரு பாலரும் தெளிவாக இருக்கிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. கல்யாணம் செய்த பிறகு ஒண்டிக்குடித்தனத்தில் ஓட்டு வீட்டில் அவதிப்படக்கூடாது இல்லையா? ஆகவே அது சரிதான்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
நெஞ்சைத் தொட்ட புது பாடல் எண்.8
படம்: பத்ரி
பாடல்:  காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் தலைவா
------------------------------------------
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே

அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி
(காதல்..)

படப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி
(காதல்..)
----------------------------------
படம்: பத்ரி (2001)
நடிப்பு: விஜய், பூமிகா சாவ்லா
இசை: ரமணா கோகுலா
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுனிதா
பாடலாக்கம்: கவிஞர்.பழநிபாரதி
இயக்குனர்: P.A.அருண் பிரசாத்

காணொளி:

http://youtu.be/xyHNJnFYF2Y
Our sincere thanks to the person who uploaded the video clipping

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

29 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

    //////காதல் வயப்படுவது பெரும்பாலும் ஈர்க்கின்ற அழகை வைத்துத்தான். அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் பார்க்கின்ற வேலையும், கிடைக்கின்ற சம்பளத்தையும் வைத்துத்தான் காதல் வசப்படுகின்றது///////
    நாட்டு நடப்பினை சரியாக சொன்னீர்கள்.
    நன்றி!!

    ReplyDelete
  2. அது எந்த ஊர் விமான நிலையம்? நம்பூதிரி அமர்ந்துள்ள 'ஸ்ட்ய்லை'ப் பார்த்தா கேரளாவில் எங்கேயோ.விமானம் பெரும்பாலும் வெள்ளோட்டத்திற்குத் தயாராக இருக்கும் நிலை என்று தோன்றுகிறது.அறிவியல், பக்தியிடம் உத்தரவு வாங்க வேண்டியுள்ளது போலும்.

    பாட்டு பாட்டாக இருக்ணும். ரோட் சைட் ரோமியோக்கள் பாடிக் காண்பித்தால் ஈவ் டீசிங்கில் உள்ளே போக வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. இன்றைய பதிவு பத்தி நேற்றைக்குத் தான் பேசிட்டிருந்தோம். ஆச்சரியமா இருக்கா?.பக்கத்து வீட்டு காலேஜ் படிக்கிற பொண்ணும் நானும் ஃப்ரெண்ட்ஸ். நேத்து சும்மா ஜாலியா பேசிட்டிருந்த போது அவள் சொன்ன தகவல்கள்(சம்பளச் சீட்ட சேர்க்கலை). ஒரு பொண்ணுகிட்ட ஒருபையன் 'ப்ரொபோஸ்' பண்ணனும்னா,
    1. அவன் பைக் வச்சிருக்கணும்(என்ன தகுதி)
    2. வீட்டுக்கு ஒரே பையனா இருக்கணும்.இல்லைன்னா ரெண்டு,மூணு பசங்க இருந்தா ஓ.கே.(மாமனார்,மாமியாரை புட் பால் ஆடத்தான்)ஆனா ஒரு தங்கை அல்லது அக்காவுக்கு மேலே நாட் அலவ்ட்.
    4.அப்பா,அம்மா ரெண்டு பேரும் வொர்க்கிங் ஆ இருக்கணும். அப்பத்தான், பையனுக்கு நிறைய பாக்கெட் மணி கிடைக்கும்.
    5.பிறந்த நாள்னா,மினிமம் கொலுசு,மேக்ஸிமம் கோல்ட் ஸ்டட் ப்ரெசண்ட் பண்ற அளவுக்கு தாராள மனசு அவசியம்.
    6ஹோட்டலுக்கு பொண்ணு தன் ஃப்ரெண்ட்ஸோட போனாலும் முகம் சுளிக்காம அவங்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யணும்.
    7.டாப் அப்பிலிருந்து மேக் அப் வரை எல்லா செலவும் பார்த்துக்கணும்..... இப்படி போகிறது பட்டியல். முழுசா கேட்டால் தலை சுத்தும். இதில் காதல்,பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் எல்லாம்..... தேடினாலும் கிடைக்காது.

    ReplyDelete
  4. ஹ்ம்ம்..... இதுவரைக்கும் காதல் பாட்டுன்னா பொய் சொல்றதுதான்னு இருக்கிறதும் மாறல, பொண்ணுங்கதான் கனவு காணனுமுங்கறதும் மாறல.
    ஆனா பொண்ணுங்க எல்லாம் புத்திசாலியா ஆயிட்டாங்க, சுவாமின்னு கால எல்லாம் விழாம, டி போட்டா, உடனே பதிலுக்கு அடா புடான்னு மரியாதை கொடுத்து காதல் மடையான்னு லொட்டுன்னு தலையில தட்டி பைக்கில இருந்து பிடிச்சு இழுத்து விடறாங்க. திடீர்னு பக்கத்தில் வந்து ஆடவும் மாடு கூட கொஞ்சம் கதிகலங்கி போன மாதிரி இருக்கு. ஐந்து ஐந்து செகண்டுக்கு சம்பந்தமில்லாமல் எடுத்து கதம்பம் மாதிரி கோர்வையாக கொடுத்தால் பாடல் காட்சி ரெடி.

    பாட்டில் ஒவ்வொரு வரியும் துண்டு துண்டாக இல்லாமல் ஒரே பொருளில் கடைசி வரையில் இருக்கிறது, நல்ல பாடல். ஆனால் கொஞ்சம் விவகாரமான பாடல். காட்சியை மட்டும் பார்த்தால் அது தெரியாமல் இருக்கும்படி எடுக்கப் பட்டுள்ளது. இசையும் நன்றாக உள்ளது. வெளிப்புறப் படப்பிடிப்பு இடம், காட்சியமைப்பு, பாடல், இசை, நடிகர்கள், நடனம் எல்லாவற்றிலும் இயக்குனர் கவனம் செலுத்தியுள்ளார். நல்லதொரு புதிய பாடல் உள்ள பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. Parvathy Ramachandran said1. அவன் பைக் வச்சிருக்கணும்(என்ன தகுதி)
    2. வீட்டுக்கு ஒரே பையனா இருக்கணும்.இல்லைன்னா ரெண்டு,மூணு பசங்க இருந்தா ஓ.கே.(மாமனார்,மாமியாரை புட் பால் ஆடத்தான்)ஆனா ஒரு தங்கை அல்லது அக்காவுக்கு மேலே நாட் அலவ்ட்.
    4.அப்பா,அம்மா ரெண்டு பேரும் வொர்க்கிங் ஆ இருக்கணும். அப்பத்தான், பையனுக்கு நிறைய பாக்கெட் மணி கிடைக்கும்.
    5.பிறந்த நாள்னா,மினிமம் கொலுசு,மேக்ஸிமம் கோல்ட் ஸ்டட் ப்ரெசண்ட் பண்ற அளவுக்கு தாராள மனசு அவசியம்.
    6ஹோட்டலுக்கு பொண்ணு தன் ஃப்ரெண்ட்ஸோட போனாலும் முகம் சுளிக்காம அவங்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யணும்.
    7.டாப் அப்பிலிருந்து மேக் அப் வரை எல்லா செலவும் பார்த்துக்கணும்..... இப்படி போகிறது பட்டியல். முழுசா கேட்டால் தலை சுத்தும். இதில் காதல்,பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் எல்லாம்..... தேடினாலும் கிடைக்காது.

    கல்யாணத்தில்
    மாப்பிள்ளை வீட்டார் கேட்கும்
    சீரைக் காட்டிலும்
    காதலில் பெண் கேட்கும் சீர் பற்றி
    பார்வதி ராமசந்திரம் செல்வதுதான்
    சமயோசித காதல்.

    இது
    தெய்வீக காதல் அல்ல
    கல்யாணம்எட்டும் காதலும் அல்ல நன்றாக
    கல்லாகட்டும் காதல்.

    ReplyDelete
  6. இன்றைய படம் சொல்வது .

    ராகு கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பினாலும் ராகு காலம் பார்த்துதான் அனுப்புவேன் என்று சொல்வார்களோ ?

    ஒரு படத்தில் விவேக் சொல்வார்
    ஓராயிரம் spare partsஒட்டாத லாரியை ஒரு எலுமிச்சை பழமாடா ஓட்டபோகுது என்று.

    அடிப்பக்கத்தில் சிவப்பு வர்ணம் பூசிய விமானம் எந்த நிறுவனத்தை சேர்ந்தது என்று அறிந்தவர்கள் சொல்லலாம்

    ReplyDelete
  7. வேறே யார் எல்லாம் நம்ம 'கிங்ஃப்ஷர்'தான். பூஜை என்ன சும்மாவா?
    ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா உதவிக்கு வந்து பெயில் அவுட் செஞ்சுதா இல்லையா? :))))
    http://www.tyndian.com/2011/07/16/it-happens-only-in-india-%E2%80%93-plane-%E0%A4%AA%E0%A5%82%E0%A4%9C%E0%A4%BE/

    ReplyDelete
  8. தேமொழி said...வேறே யார் எல்லாம் நம்ம 'கிங்ஃப்ஷர்'தான். பூஜை என்ன சும்மாவா?

    .மீனவ ராஜா,........ம்ம்ம்ம்...... ராஜா என்று வந்தாலே இப்படித்தான் போலிருக்கிறது. "மீனவ நண்பன்" என்று இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்.

    ReplyDelete
  9. காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா!
    கண்களுக்கும் அதை உணர்த்தியது இதயமென்றால் வேறொரு உயர்வா...!

    முற்றியக் காய்கள் கனிந்தால் அவைகள் அமிர்தமாய் இனிக்கும்..
    பிஞ்சிலே வெம்பினால் நெஞ்சிலே மரணம் தான் முளைக்கும்...

    நல்ல சினிமாப் பாடல். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  10. /// அவசரப் படாதீங்கோ! பூஜை முடிஞ்சாத்தான், பிளேன் டேக ஆஃப் ஆகும்!///

    எவ்வளவுப் பணம் இருந்தாலும் சூட்சுமம் தெரிந்தவராக இருப்பது தான் பாராட்ட வேண்டிய விஷயம்...
    பிரமாண்டம் என்றால் அந்த பிரமாண்டத்தின் பிரமாண்டத்தை எப்படி மறப்பது!

    இது தான் இந்தியா... இன்றைய விஞ்ஞானம் சில நூற்றாண்டுகள் தான், நமது வேதம் கூறிய மெஞ்ஞான விஞ்ஞானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது...

    என்ன செய்வது உலகம் உருண்டை என்பதையே கலிலியோ வந்து சொன்னாலும்...
    டயம் டிராவல் பற்றி ஐன்ஸ்டன் சொன்னாலும் தான் கேட்ப்போம்...

    அதையே நம்ம பெருசுகள் வியாசர் போன்றோர் சென்றார்கள் சென்று வந்து சொன்னார்கள் என்றால் கேட்க மாட்டோம்...
    அது நமது பேசன்....எல்லாவற்றிற்கும் வெள்ளைக் காரன் சர்டிபிகேட் தரனும். அப்படி என்றால் அதற்கு கேவியே இல்லை..
    பதினாறாம் நூட்ட்றாண்டு வரை ஐரோப்பியன் உலகம் தட்டை என்று தான் நம்பி இருந்திருக்கிறான்... நம்ம வேதம் அதை பூலோகம் என்றது...
    வராக அவதாரமே எடுத்த பரந்தாமன் அந்த உருண்டையை தனது மூக்கிலே உருட்டி வந்தான்.... அது தட்டை இல்லை என்றதை நாம் எப்போது அறிந்தோம்... நம்ம பெருசுகள் எப்போது அறிந்தது..!!!

    இத்தனையும் சொன்ன வேதம் தான் இந்த பூஜையையும் சொன்னது என்றால் இனியும் நாம் மறுப்பதற்கு ஏதும் இல்லை தானே!

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா,
    ஆஹா...அருமையான பாடல்...நான் அடிக்கடி பாடும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...இப்பாடலின் வரிகள் கூர்ந்து கவனித்தது இல்லை;ஆயினும் இப்பாடலை எனக்கு மிகவும் பிடித்தது 'soft melody' ரகத்தை சேர்ந்த பாடல் என்பதால் தான்...பார்ப்பதற்கும் பசுமையான பின்னணி காட்சிகளும் நன்றாக இருக்கும்...அத்துடன் இப்பாடலை பாடிய பாடகியின் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்...பாடலின் பல்லவி வரிகள் தான் அருமையாக இருக்கும்...நல்ல பாடலை தந்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  12. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    //////காதல் வயப்படுவது பெரும்பாலும் ஈர்க்கின்ற அழகை வைத்துத்தான். அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் பார்க்கின்ற வேலையும், கிடைக்கின்ற சம்பளத்தையும் வைத்துத்தான் காதல் வசப்படுகின்றது///////
    நாட்டு நடப்பினை சரியாக சொன்னீர்கள்.
    நன்றி!!////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  13. ///// kmr.krishnan said...
    அது எந்த ஊர் விமான நிலையம்? நம்பூதிரி அமர்ந்துள்ள 'ஸ்டைலை'ப் பார்த்தா கேரளாவில் எங்கேயோ.விமானம் பெரும்பாலும் வெள்ளோட்டத்திற்குத் தயாராக இருக்கும் நிலை என்று தோன்றுகிறது.அறிவியல், பக்தியிடம் உத்தரவு வாங்க வேண்டியுள்ளது போலும்.
    பாட்டு பாட்டாக இருக்ணும். ரோட் சைட் ரோமியோக்கள் பாடிக் காண்பித்தால் ஈவ் டீசிங்கில் உள்ளே போக வேண்டியதுதான்./////

    உங்கள் வயதிற்கும் அனுபவத்திற்கும் நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. //// Ananthamurugan said...
    Goodmorning!nalla padal.////

    உங்களுக்குப் பிடித்திருந்தால் சரிதான்!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. ////Parvathy Ramachandran said...
    இன்றைய பதிவு பத்தி நேற்றைக்குத் தான் பேசிட்டிருந்தோம். ஆச்சரியமா இருக்கா?.பக்கத்து வீட்டு காலேஜ் படிக்கிற பொண்ணும் நானும் ஃப்ரெண்ட்ஸ். நேத்து சும்மா ஜாலியா பேசிட்டிருந்த போது அவள் சொன்ன தகவல்கள் (சம்பளச் சீட்ட சேர்க்கலை). ஒரு பொண்ணுகிட்ட ஒருபையன் 'ப்ரொபோஸ்' பண்ணனும்னா,
    1. அவன் பைக் வச்சிருக்கணும் (என்ன தகுதி)
    2. வீட்டுக்கு ஒரே பையனா இருக்கணும்.இல்லைன்னா ரெண்டு,மூணு பசங்க இருந்தா ஓ.கே.(மாமனார்,மாமியாரை புட் பால் ஆடத்தான்)ஆனா ஒரு தங்கை அல்லது அக்காவுக்கு மேலே நாட் அலவ்ட்.
    4.அப்பா,அம்மா ரெண்டு பேரும் வொர்க்கிங் ஆ இருக்கணும். அப்பத்தான், பையனுக்கு நிறைய பாக்கெட் மணி கிடைக்கும்.
    5.பிறந்த நாள்னா,மினிமம் கொலுசு,மேக்ஸிமம் கோல்ட் ஸ்டட் ப்ரெசண்ட் பண்ற அளவுக்கு தாராள மனசு அவசியம்.
    6 ஹோட்டலுக்கு பொண்ணு தன் ஃப்ரெண்ட்ஸோட போனாலும் முகம் சுளிக்காம அவங்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யணும்.
    7.டாப் அப்பிலிருந்து மேக் அப் வரை எல்லா செலவும் பார்த்துக்கணும்..... இப்படி போகிறது பட்டியல். முழுசா கேட்டால் தலை சுத்தும். இதில் காதல்,பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் எல்லாம்..... தேடினாலும் கிடைக்காது./////

    ஆமாம். அப்படிக்கிடைத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது! உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. //// தேமொழி said...
    ஹ்ம்ம்..... இதுவரைக்கும் காதல் பாட்டுன்னா பொய் சொல்றதுதான்னு இருக்கிறதும் மாறல, பொண்ணுங்கதான் கனவு காணனுமுங்கறதும் மாறல.
    ஆனா பொண்ணுங்க எல்லாம் புத்திசாலியா ஆயிட்டாங்க, சுவாமின்னு கால எல்லாம் விழாம, டி போட்டா, உடனே பதிலுக்கு அடா புடான்னு மரியாதை கொடுத்து காதல் மடையான்னு லொட்டுன்னு தலையில தட்டி பைக்கில இருந்து பிடிச்சு இழுத்து விடறாங்க. திடீர்னு பக்கத்தில் வந்து ஆடவும் மாடு கூட கொஞ்சம் கதிகலங்கி போன மாதிரி இருக்கு. ஐந்து ஐந்து செகண்டுக்கு சம்பந்தமில்லாமல் எடுத்து கதம்பம் மாதிரி கோர்வையாக கொடுத்தால் பாடல் காட்சி ரெடி.
    பாட்டில் ஒவ்வொரு வரியும் துண்டு துண்டாக இல்லாமல் ஒரே பொருளில் கடைசி வரையில் இருக்கிறது, நல்ல பாடல். ஆனால் கொஞ்சம் விவகாரமான பாடல். காட்சியை மட்டும் பார்த்தால் அது தெரியாமல் இருக்கும்படி எடுக்கப் பட்டுள்ளது. இசையும் நன்றாக உள்ளது. வெளிப்புறப் படப்பிடிப்பு இடம், காட்சியமைப்பு, பாடல், இசை, நடிகர்கள், நடனம் எல்லாவற்றிலும் இயக்குனர் கவனம் செலுத்தியுள்ளார். நல்லதொரு புதிய பாடல் உள்ள பதிவிற்கு நன்றி ஐயா./////

    அத்தான், அன்பே எல்லாம் போய், இப்போது டா & டி தான். உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. /// thanusu said...
    Parvathy Ramachandran said1. அவன் பைக் வச்சிருக்கணும்(என்ன தகுதி)
    2. வீட்டுக்கு ஒரே பையனா இருக்கணும்.இல்லைன்னா ரெண்டு,மூணு பசங்க இருந்தா ஓ.கே.(மாமனார்,மாமியாரை புட் பால் ஆடத்தான்)ஆனா ஒரு தங்கை அல்லது அக்காவுக்கு மேலே நாட் அலவ்ட்.
    4.அப்பா,அம்மா ரெண்டு பேரும் வொர்க்கிங் ஆ இருக்கணும். அப்பத்தான், பையனுக்கு நிறைய பாக்கெட் மணி கிடைக்கும்.
    5.பிறந்த நாள்னா,மினிமம் கொலுசு,மேக்ஸிமம் கோல்ட் ஸ்டட் ப்ரெசண்ட் பண்ற அளவுக்கு தாராள மனசு அவசியம்.
    6ஹோட்டலுக்கு பொண்ணு தன் ஃப்ரெண்ட்ஸோட போனாலும் முகம் சுளிக்காம அவங்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யணும்.
    7.டாப் அப்பிலிருந்து மேக் அப் வரை எல்லா செலவும் பார்த்துக்கணும்..... இப்படி போகிறது பட்டியல். முழுசா கேட்டால் தலை சுத்தும். இதில் காதல்,பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் எல்லாம்..... தேடினாலும் கிடைக்காது.
    கல்யாணத்தில்
    மாப்பிள்ளை வீட்டார் கேட்கும்
    சீரைக் காட்டிலும்
    காதலில் பெண் கேட்கும் சீர் பற்றி
    பார்வதி ராமசந்திரம் செல்வதுதான்
    சமயோசித காதல்.
    இது
    தெய்வீக காதல் அல்ல
    கல்யாணம் எட்டும் காதலும் அல்ல நன்றாக
    கல்லாகட்டும் காதல்./////

    இதுதான் இப்போதைய புதுப் பாட்டு: காசேதான் கடவுளடா, காதலர்க்கும் அது தெரியுமடா!

    ReplyDelete
  20. //// thanusu said...
    இன்றைய படம் சொல்வது .
    ராகு கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பினாலும் ராகு காலம் பார்த்துதான் அனுப்புவேன் என்று சொல்வார்களோ ?
    ஒரு படத்தில் விவேக் சொல்வார்
    ஓராயிரம் spare partsஒட்டாத லாரியை ஒரு எலுமிச்சை பழமாடா ஓட்டபோகுது என்று.
    அடிப்பக்கத்தில் சிவப்பு வர்ணம் பூசிய விமானம் எந்த நிறுவனத்தை சேர்ந்தது என்று அறிந்தவர்கள் சொல்லலாம்////

    அறிவு ஜீவி தேமொழி அக்கா இருக்க யோசனை ஏன்? பொறுத்திருங்கள். வந்து, ஆதாரத்துடன் சொல்வார்கள்

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. ///// தேமொழி said...
    வேறே யார் எல்லாம் நம்ம 'கிங்ஃப்ஷர்'தான். பூஜை என்ன சும்மாவா?
    ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா உதவிக்கு வந்து பெயில் அவுட் செஞ்சுதா இல்லையா? :))))
    http://www.tyndian.com/2011/07/16/it-happens-only-in-india-%E2%80%93-plane-%E0%A4%AA%E0%A5%82%E0%A4%9C%E0%A4%BE/////

    நினைத்தேன்: சொன்னீர்கள்
    கொடுத்தேன்; நூறு வயது!

    ReplyDelete
  23. //// thanusu said...
    தேமொழி said...வேறே யார் எல்லாம் நம்ம 'கிங்ஃப்ஷர்'தான். பூஜை என்ன சும்மாவா?
    .மீனவ ராஜா,........ம்ம்ம்ம்...... ராஜா என்று வந்தாலே இப்படித்தான் போலிருக்கிறது. "மீனவ நண்பன்" என்று இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்.////

    கிங் ஃபிஷர்தான் நம் மக்களுக்குப் பழகிய பெயர்!:-))))

    ReplyDelete
  24. //// thanusu said...

  25. ///// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா!
    கண்களுக்கும் அதை உணர்த்தியது இதயமென்றால் வேறொரு உயர்வா...!
    முற்றியக் காய்கள் கனிந்தால் அவைகள் அமிர்தமாய் இனிக்கும்..
    பிஞ்சிலே வெம்பினால் நெஞ்சிலே மரணம் தான் முளைக்கும்...
    நல்ல சினிமாப் பாடல். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    /// அவசரப் படாதீங்கோ! பூஜை முடிஞ்சாத்தான், பிளேன் டேக ஆஃப் ஆகும்!///
    எவ்வளவுப் பணம் இருந்தாலும் சூட்சுமம் தெரிந்தவராக இருப்பது தான் பாராட்ட வேண்டிய விஷயம்...
    பிரமாண்டம் என்றால் அந்த பிரமாண்டத்தின் பிரமாண்டத்தை எப்படி மறப்பது!
    இது தான் இந்தியா... இன்றைய விஞ்ஞானம் சில நூற்றாண்டுகள் தான், நமது வேதம் கூறிய மெஞ்ஞான விஞ்ஞானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது...
    என்ன செய்வது உலகம் உருண்டை என்பதையே கலிலியோ வந்து சொன்னாலும்...
    டயம் டிராவல் பற்றி ஐன்ஸ்டன் சொன்னாலும் தான் கேட்ப்போம்...
    அதையே நம்ம பெருசுகள் வியாசர் போன்றோர் சென்றார்கள் சென்று வந்து சொன்னார்கள் என்றால் கேட்க மாட்டோம்...
    அது நமது பேசன்....எல்லாவற்றிற்கும் வெள்ளைக் காரன் சர்டிபிகேட் தரனும். அப்படி என்றால் அதற்கு கேள்வியே இல்லை..
    பதினாறாம் நூட்ட்றாண்டு வரை ஐரோப்பியன் உலகம் தட்டை என்று தான் நம்பி இருந்திருக்கிறான்... நம்ம வேதம் அதை பூலோகம் என்றது...
    வராக அவதாரமே எடுத்த பரந்தாமன் அந்த உருண்டையை தனது மூக்கிலே உருட்டி வந்தான்.... அது தட்டை இல்லை என்றதை நாம் எப்போது அறிந்தோம்... நம்ம பெருசுகள் எப்போது அறிந்தது..!!!
    இத்தனையும் சொன்ன வேதம் தான் இந்த பூஜையையும் சொன்னது என்றால் இனியும் நாம் மறுப்பதற்கு ஏதும் இல்லை தானே!
    நன்றிகள் ஐயா!////

    அதைப் புரிந்து கொள்வதற்கு 40 வயதைத் தாண்ட வேண்டும் ஆலாசியம்!

    ReplyDelete
  28. ///// R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    ஆஹா...அருமையான பாடல்...நான் அடிக்கடி பாடும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...இப்பாடலின் வரிகள் கூர்ந்து கவனித்தது இல்லை;ஆயினும் இப்பாடலை எனக்கு மிகவும் பிடித்தது 'soft melody' ரகத்தை சேர்ந்த பாடல் என்பதால் தான்...பார்ப்பதற்கும் பசுமையான பின்னணி காட்சிகளும் நன்றாக இருக்கும்...அத்துடன் இப்பாடலை பாடிய பாடகியின் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்...பாடலின் பல்லவி வரிகள் தான் அருமையாக இருக்கும்...நல்ல பாடலை தந்தமைக்கு நன்றி ஐயா.../////

    உங்களைப் போன்ற இளம் வயதுக்காரர்களுக்காத்தான் இந்த புதுப் பாடல் பகுதி. நீங்கள் நன்றாக உள்ளது என்று சொல்வீர்கள் என்று எண்ணினேன். அதன் படியே சொல்லியுள்ளீர்கள். நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com