மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.2.12

வண்ண மயமான செய்திகள்

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை நால்வரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன
படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
1


வண்ண மயமான செய்திகள் 
ஆக்கம்: தேமொழி

'கருப்புப்' பணம் சேர்த்த அதிகாரிகளைப் பற்றி 
அரசு வெளியிட்ட 'வெள்ளை' அறிக்கை
'நீலப்' படமெடுத்த இயக்குனர் கொடுத்த 
'மஞ்சள்' கடுதாசி பற்றிய அறிவிப்பு


'சிவப்பு' விளக்கு வரைவின் மகளின் 
வாழ்க்கை பற்றிய 'பச்சை' பச்சையாய்க் கதை
'காவி' உடை காமலீலை சாமியாருக்கு  
'கறுப்புக்' கொடி காட்டிய மக்களின் கண்டனம் 


வண்ணமயமான செய்திகள் பல கொடுத்து 
மக்களின் மனம் கவரும் பத்திரிக்கையுடன் 
சாயம் வெளுக்காமல் துவைக்க ஒரு 
சலவை சோப்பு இலவச இணைப்பு  
--தேமொழி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
வரை படம்:
வரைந்தவர்: தேமொழி



படத்தைப் பற்றிய செய்தி:

நிழல் போன்ற தோற்றத்தில் உள்ள "சில்லோவெட்" (Silhouette) படத்தை தமிழில் "நிழற்படம்" என நாம் குறிப்பிடுவோம். வெளிர் வண்ண பின்புலத்தில் வெளிக்கோடுகளை மட்டும் கொண்டு உட்புறம் முழுவதும் கருமையாக வண்ணம் பூசப்படும் இந்த ஓவிய முறைக்கு பெயர் வந்த கதையே வேடிக்கையானது.  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ரென்ச் நிதியமைச்சரான  "ஏட்யன் டி சில்லோவெட்" (Étienne de Silhouette) என்பவரே இந்த ஓவிய முறைக்கு பெயர் வரக் காரணமாம்.  போர்க்காலத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக அவர் நிர்ணயித்த கண்டிப்பான சிக்கன நடவடிகைகளை பிடிக்காதவர்கள், அவரின் நடவடிக்கைகளை கஞ்சத்தனமானது, கருமித்தனமானது எனக் கேலி பேசினார்கள்.  அதிலிருந்து குறைந்த செலவில் தயாரிக்கக் கூடிய இதுபோன்ற ஓவியங்களுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டதாம்.  அவர் மிக குறிகிய காலமே பதவி வகித்ததை குறித்தும், அவர் மாளிகையில் இது போன்ற படங்களை சேகரித்து வைத்ததும் மற்ற பிற காரணங்களாக சொல்லப் படுகின்றன.

இந்த கட்டிடத்தின் படத்தை நிழற்பட முறையில் மைக்ரோசாஃப்ட் வர்டில் (Microsoft Word: Insert =>Shapes=>) வரைந்தேன்.  மேலே பறக்கும் கொடி முதற்கொண்டு அணைத்து வடிவங்களும் மைக்ரோசாஃப்ட் வர்டில் இருந்து எடுத்ததுதான். உலகில் மிகுந்த அதிகாரம் உடைய அதிபர் வாழும் இந்த மாளிகையை அடையாளம் தெரிகிறதா? ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் நிழற் படம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

சிறுகதை: அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். 
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
------------------------------------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"இதோ அம்மா குத்துக் கல்லாட்டம் எதிர்ல‌ இருக்கேன், நா செத்து போய்ட்டேன்னு  அழறியேடா குழந்த.."

அவனை மடியில் போட்டுக் கொண்டு அம்மாவும் கண் கலங்கினாள்.

நேற்று மாலையிலிருந்தே அவன் விடாமல் ஜபம் மாதிரி 'எங்க அம்மா செத்துப்போயிட்டா, எங்க‌ அம்மா செத்துபோயிட்டான்னு' அழத் துவங்கி விட்டான்.

எதனால் அவனுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் மலை முகட்டு மேகம் போல கவிஞ்சுண்டது? யாருக்கும் தெரியவில்லை.

"ஏதாவது கனாக்கண்டயோடா, குழந்தை?"

"எங்க அம்மா செத்துப்போய்ட்டா"

"எதாவது திருஷ்டி கழிச்சுப்போட்ட எலுமிச்சம் பழத்தை, மொளகாய மொதிச்சுப்பிட்டு வந்திருப்பான் மாமி"

மாவு மிஷின்காராள் ஆத்து ஜானகியோட அபிப்ராயம்.

"எங்கம்மா செத்துப் போய்ட்டா"

கீற‌ல் விழுந்த கிராமஃபோன் கணக்கா அதே பல்லவி.

அம்மாவும் உப்பு மிளகாயை எடுத்து வந்து திருஷ்டி கழிக்கிறாள். அம்மாவின் சுற்றும் கையை சுற்றி சுற்றி  மலங்க மலங்கப் பார்த்து முழிக்கிறான்.

"எங்க‌ அம்மா செத்துப்போய்ட்டா..."

வீடே ஸ்தம்பித்து நிலை குலைந்து நிற்கிறது. இரண்டு அண்ணன் மாரும், அக்காவும் கடைகுட்டித் தம்பியின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று துப்புத் துலக்க அவனுடைய எட்டாம் வகுப்புத் தோழர்களை எல்லாம் பேட்டி காண்கிறார்கள்.

முதல் நாள் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.

இரண்டு ஆண்டுகளாக நாடகத்தில் அவனைத்தான் நடுநாயகமாக வைத்து நிகழ்ச்சி நடந்தது.இந்த ஆண்டு அவனுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவனுக்குத் திருப்தியில்லை.அவனை மேடையில் பார்த்த பையன்க‌ள் எல்லாம் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்தது போல கைகொட்டி சிரித்தார்கள். அதில் அவன் கொஞ்சம்  உள்வாங்கிப் போயிருக்கிறான் என்று ஊகிக்க முடிந்தது.

அதற்கும் அம்மாவை மனத்தளவில் அவன் சாக அடித்தத‌ற்கும் என்ன சம்பந்தம்? புதிர் அவிழவில்லை.

"என் மேல இவனுக்கு கொள்ளப் பிரியம். சும்மாவா? அஞ்சு வயசு வரை பால் உறிஞ்ச‌னவனாச்சே!எங்க அக்கா எவ்வளவோ முயற்சிப் பண்ணிப் பாத்தாளே,

இவனைப் பால் மறக்கடிக்க... ஒண்ணும் நடக்கலை.ராத்திரி ஒரு மணிக்கு தூக்கத்திலேயே மோப்பம் பிடிச்சுண்டு நாக்குட்டியாட்டும் வந்து என்னோட
ஒட்டிண்டுடுவன்..... "

அம்மா அந்த 13 வயது குழந்தையை மீண்டும் மடிக் குழந்தையாக பாவித்து உச்சிமோந்தாள்.

"என்னடா பண்ணித்து? எதையாவது பார்த்து பயந்துட்டயா?" அப்பா அக்கறையாக விசாரித்தார்.

காந்தி ஜெயந்தி, பாரதி விழா, விவேகானந்தர் ஜெயந்தி என்று வீட்டில் தங்காமல் சுற்றி வரும் அப்பா, எதற்கும் கலங்காத அப்பா, கண் கலங்கி அவன்
தலையை அன்புடன் தடவி விட்டுக் கொண்டு அவன் காலை எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்டார்.அம்மா மடியில் தலையும் அப்பா மடியில் கால்களும்..மீண்டும் மந்திரம் சொல்வது போல,  "எங்க அம்மா செத்துப் போய்ட்டா ..."

அம்மா,அப்பா, அண்ணன்கள், அக்கா, இரும்புக் கடையாத்துப் பையன்கள், இந்தி வாத்தியார் அகத்து மாமியும் பையன்களும், இன்னும் பலரும் சுற்றி நின்று
கவலையோடு பார்க்கின்றனர்.

"எங்க அம்மா செத்துப் போய்ட்டா ..."

"பைத்தியம் பிடிச்சுடுத்துடா தொப்ப கணபதிக்கு..." அவன் தெருப் பையனகள் குசு குசு வென்று பேசுகிறார்கள்.அவன் அம்மா கொடுக்கும் ஊட்டத்தால் 'கொழுக் மொழுக்' என்று இருப்பதால் அவனுக்கு தொப்ப கணபதி என்று 'நிக் நேம்!'

"போங்கடா.. ஓடுங்கடா.. எதையோ பார்த்து பயந்துட்டான் .. பைத்தியம்னு பட்டம் கட்டரேளா.. "

அம்மா குட்டி போட்ட தாய்ப் பூனை போல சீறினாள்.

"பகவானே! சடைஉடையாரே! இதென்ன சோதனை?.."  அம்மா கதறினாள்.

"எங்காத்துப் பக்கம் இப்படி கோட்டி பிடிக்கிற ஹிஸ்டரி ஒன்னும் இல்லை.."
அப்பா முணுமுணுத்தார்.

அம்மாவின் பாம்புச் செவியில் இது விழுந்ததோ இல்லையோ அவள் பொங்கி எழுந்தாள்.

"ஆமாம்! எங்காத்துப் பக்கம் உண்டுதான் அதுக்கு நா என்ன பண்ணமுடியும்? இத்தனை நாள் இல்லாம எங்காத்தை சாட உங்களுக்கு இப்பதான் நேரம்
கிடைச்சதாக்கும்?"

"அதுக்குச் சொல்லலை..."  அப்பா மென்று முழுங்கினார்.

"ஆமாம் நேரும் சீருமா வளர்ந்து,  நல்ல மார்க் வாங்கி, இஸ்கூல் ஃபைனல் பாசாயிட்டு கவர்மென்ட் வேலைக்குப் பரிட்சைக் கொடுத்துட்டு மாமாவாத்துக்குப் போனான் எங்க அண்ணா .. அங்க என்ன நடந்ததோ ஏது நடந்ததோ ஆருக்குத்தெரியும்? வரும்போது இதப் போலத்தான் 'நா தப்பு பண்ணிட்டேன்.. நா தப்புப் பண்ணிட்டேன்'னு ஒரே பொலம்பல்.

என்ன தப்பு பண்ணினான் ஏது தப்புப்பண்ணினான், மாமாவாத்தில் யாரக் கேட்டாலும் சொல்லலை.  பராபரியா காதுல விழுந்தது என்ன‌ன்னா மாமா

பொண்ணுகிட்ட ஒரு ரோஜாப் பூவ நீட்டி 'என்ன உனக்குப் பிடிச்சிருந்தா இத சுப்பிரமணியர் படத்துல வை"ன்னு சொல்லியிருக்கான்..அவள் ஊரைக்கூட்டி
ஒப்பாரி வச்சுப்பிட்டா. மாமா அவனை கைநீட்டியிருப்பாரோ என்னவோ, ஆர் கண்டா..?"செஞ்சது தப்புன்னு" அவன் மனசில வாங்கிண்டுட்டான்.அது அவனை
பிடிச்சு ஆட்டி வச்சுடுத்து. அடங்காம எல்லாரையும் அடிக்க கடிக்க ஆரம்பிச்சுட்டான். கீழ்பாக்கத்துல கொண்டு விட்டுட்டு திரும்பிப் பாக்காம எங்க‌ அப்பா வந்துட்டார்... இன்னமும் அங்க‌தான் இருக்கான்,,இருக்கானோ செத்துப் போயிட்டானோ ஆரு கண்டா...."அம்மா புலம்பினாள் தன் அண்ணனை நினைத்து...

"சரி சரி வருத்தப்படாதே... நாம மனசரிஞ்சு ஒரு பாவமும் பண்ணலை... நம்மை பகவான் கைவிட மாட்டார்... முதல்ல இவனை உள்ளூர்

கோவிலுக்கெல்லாம் கூட்டிண்டு போய் பிரார்த்தனை பண்ணுவோம். கோட்டை மாரியம்மன் கைகண்ட தெய்வம் பாத்துக்கோ.. தரிசன மாத்திரத்தில
சரியாக்கிவிடுவள்..."

அப்பா ஆறுதலாகச் சொன்னார்.

அம்மா சாப்பிட மறுத்து அவனை அணைத்துப் படுத்துக் கொண்டாள்.

சின்ன அண்ணா தன் புலனாய்வு செய்தியுடன் வந்தான்.

"அம்மா, அப்பா! என்ன நடந்துருக்குன்னு கேளுங்கோ! இவன் நடிச்சதைப்பார்த்து பையன்கள் எல்லாம் கோட்டாளி பண்ணி சிரிச்சுருக்கா.. அதுல மனசொடிஞ்சு போயி மேடையோரமா நின்னு இருக்கான்.. அப்போ தலைமை தாங்க‌ வந்த டி இ ஓ தன் கதையைச்சொல்லியிருக்கார். 'பையன்கள் எல்லாம் தங்கள் பாடத்தை அன்றைக்கு அன்றே படித்து எப்போதும் பரிட்சைக்குத் தயாராக இருக்கணும். பரிட்சை சமயத்தில் ஏதாவது தடங்கல் வந்தால் கூட எப்போதும் தயாராக இருந்தால் நன்றாக எழுதிவிடமுடியும். என்னுடைய இறுதித்தேர்வு சமயம் என் அம்மா இறந்துவிட்டாள்.நான் முன்னரே படித்து வைத்து இருந்ததால் அம்மாவின் உடல் வீட்டில் இருக்க நான் பரிட்சை எழுதினேன். பரிட்சை முடிந்து வந்து அம்மாவுக்குக் கொள்ளி வைத்தேன். பரிட்சை முடிவுகள் வந்த போது நான் மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கியிருந்தேன் ...' இப்படி பேசியிருக்கார். இவன் அதை தன் அம்மா செத்துவிட்டதாக மனதில் வாங்கிக் கொண்டு விட்டான் என்று தோணறது...."  சின்ன அண்ணா விளக்கினான்.

"ஏண்டா அப்படிதானே...? அண்ணா சொல்றபடி டி இ ஓ வோட அம்மாதானே செத்துப் போய்ட்டா..? உங்க அம்மா இங்க இருக்கா பாரு..."

எல்லோரும் அவனுடைய பல்லவிக்கு அநுபல்லவி பாட ஆரம்பித்தார்கள்.

அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிய ஆரம்பித்தது. அம்மா உயிருடன் இருப்பது தெரிந்தது.

புலம்புவது குறைந்தது. ஆனால் மெளனம் அவனை ஆட்கொண்டது.

மறு நாள் "யாரும் வரவேண்டாம் நான் மட்டும் அவனை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று அப்பா கிளம்பினார்.

குதிரை வண்டி ஸ்டாண்டுக்கு அவனை அழைத்துப் போகும் போது, எதிரில் அச்சிரா நரசிம்மைய்யர் வந்தார். அப்பாவின் நெடுநாளைய செள‌ராஷ்டிரா நண்பர்.

"சார் வசந்தா ஹால்ல ஒரு சக்தி உபாசகர் வந்துருக்காருங்கோ சார். நம்ப மஹாஜனமெல்லாம் அங்கதான் நிக்குது. நிங்களும் பையனை அங்க கூட்டிப்
போகுது சார் சரியாய்ப் போடும்" என்று செள்ராஷ்ட்ர தமிழில் கூறினார்.

"சரி.. சரி.."அப்பா கூறிக் கொண்டே வண்டியில் அவனை ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டார்.

கோட்டை மாரியம்மன் விபூதியை வாங்கி அவன் தலையில் அப்பா கொட்டினார்.

"எல்லாம் சரியாப் போச்சு... எல்லாம் சரியாப் போச்சு.. You are alright; you are perfectly normal" என்று சொல்லிக் கொண்டே அபிஷேகத் தீர்த்தத்தை எடுத்து அவன் முகத்தில் அடித்தார்.

தன் கணீர் குரலில் "உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா " என்ற பாரதி பாடலை குரல் எடுத்துப்பாடினார்.

அவனுக்கு அப்போதே எல்லாம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்துவிட்டான்.

ஆனாலும் வழக்கம் போல பேச வரவில்லை.

அங்கிருந்து வசந்தா ஹால் அருகில்தான். அங்கே அழைத்து சென்றார்.

அங்குள்ள தனி அறையில் அந்த சக்தி உபாசகர் தாடி , பெரிய ஒரு ரூபாய் பொட்டு,ஜடாமுடி எல்லாவற்றுடனும் மாந்திரிகர்களுக்கு உண்டான 'கெட் அப்'புடன் அமர்ந்து இருந்தார். குங்குமச் சிவப்பு ஆடை.

ஓரிருவர் அவர் முன்னால் பவ்யமாக அமர்ந்து இருந்தனர்.அதில் உள்ளூர் பிரமுகர் ஒருவடைய மனைவி ஒருவர். அந்த அம்மாளை அவனுக்குத் தெரியும்.

அவனை உள்ளே நடப்பதை பார்க்கும் படியுள்ள ஒரு ஜன்னல் அருகில் உட்கார வைத்துவிட்டு, அப்பா பூ ப‌ழம் வாங்கப் போனார்.

அப்போதுதான் அந்த நிகழ்ச்சி உள்ளே நடந்தது. அவன் அதிர்ச்சி அடைந்தான். அங்கிருந்து சாலைக்கு ஓடினான் அப்பாவை பூக்கடையில் பிடித்தான்.

"வாங்கோ அப்பா ஆத்துக்குப்போவோம்.."

"என்னடா, தெளிவா பேசரயே... அந்த சக்தி உபாசகரைப் பார்த்துட்டு...."

"வேண்டாம் வேண்டாம் ... போவோம் வாங்கோ... எனக்கு ஒண்ணும் இல்லை... அம்மா ஆத்துல கவலையோட காத்துண்டு இருப்பாப்பா.. சீக்கிரம் போகலாம்..வாங்கோ..."

"டேய்!உனக்கு நன்னா தெளிஞ்சுடுத்துடா... அம்மா உயிரோடு இருக்கா புரிஞ்சுதோன்னோ?"

"ஆமாம் , ஆமாம் அம்மா சாகலை.நான் தான் டி இ ஓ அம்மாவை நம்ப அம்மாவோட போட்டு குழப்பிண்டுட்டேன்."

அப்பாவும் மகனும் அகம் திரும்பினார்கள். நடந்ததயெல்லாம் கேட்டு எல்லோரும் ஆனந்தப்பட்டார்கள்.அம்மா பால் பாயசம் செய்தாள்

"அந்த சக்தி உபாசகர் ரூமுக்குள் என்னடா செய்தார்?"

வீட்டிலும், தெருவிலும், பள்ளியிலும் எல்லோரும் கேட்கத் துவங்கினார்கள்.

அது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவனுடன் அதுவும் சேர்ந்து அழிவதையே அவன் விரும்புகிறான்.யாரிடமும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டான்.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


Ten steps to success
By. G.Ananthamurugan

1. Self-Belief:
Success is begins in the mind. One has to be a believer, first, if one wishes to be an achiever. Never under-estimate yourself. You have no idea how often can you surprise yourself. So to begin with, let's get in the belief, "I Can."


2. Clarity of Vision:
There is no point running around without knowing where one wants to reach. you must get your job cut out. Greatest achievers in the  world have been visionaries. Know exactly what you are best at and give it your best shot.


3. Setting the Right Goals:
The goals should be realistic .The goals should be achievable ,and yet challenging enough - neither too easy nor too difficult -something in  the middle.


4. Be focused:
If the sun's rays are focused on a piece of paper with a lens, the intensity of the concentrated energy burns the paper. Focus on your  objective will enhance the intensity of the effects of your efforts.


5. No Short Cuts to Success:
There are no short cuts to success. Divide your overall goals into smaller targets. Divide your monthly plans into weekly and weekly plans  into daily plans and see how simple can things be.


6. Take Risks:
Without any risk no progress is possible. Life comes to a stable standstill. People who take chances are the people who get ahead in life.  The only way to reduce risk is to take risks.


7. Take the Initiative:
People who take the initiative make the most of their lives. Proactive people do not wait for success to happen; rather they make it happen.  As they say, 'JUST DO IT'.


8. Never Hesitate to Struggle:
No one has ever climbed a mountain just by looking at it. Struggle, hard struggle, is a key to success.


9. Own Responsibility:
Failure to hit the bull's eye is never the fault of the target. People, who own complete responsibility of their lives, are the people who  make the most of it.


10. Never Give Up:
Many people who failed in life, where those who did not realize how close they were to success when they gave up. Success demands extra-ordinary amount of perseverance. Never, never, give up.  
- G.Ananthamurugan
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5

Humour
By S.Sabari Narayanan., Chennai


1
A couple is sitting on the porch sipping wine. The wife says, "I love you."
The husband says, "Is that you or the wine talking?"
The wife replies, "It's me, talking to the wine."


2
An elderly woman called 911 on her cell phone to report that her car had been broken in to. She is hysterical as she explains her situation to the dispatcher: "They've stolen the stereo, the steering wheel, the brake pedal and even the accelerator!" she cried.
The dispatcher said, "Stay calm. An officer is on the way."
A few minutes later, the officer radios in. "Disregard." He says. "She got in the back-seat by mistake."


3
After drinking, Men talk unnecessarily, Become emotional,
Drive badly, Stop thinking, Fight for nothing
Women can do all these without drinking!


4
Q. Where can men over 50 find younger sexy women who are interest in them?
A. Try a bookstore under fiction!
Q. How can you increase the heart rate of your 50+ year old husband?
A. Tell him you're pregnant!


5
"Always be nice to your children because they are the ones who
will choose your OLD AGE HOME."
+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

20 comments:

  1. போலிச் சாமியார்கள் தேமொழியின் சிந்தையிலும் KMRKவின் சிந்தையிலும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு பண்ணி இன்றைய மலரையுமே ஆக்கிரமித்து இருக்கிறார்கள்..

    கவிதை,கதை இரண்டிலும் இவர்களே..

    ஓவியம் நன்று...வயர்ஃபிரேம் என்று 3Dமாடலிங் பண்ணும்போது ஷேட்பண்ணாமல் சாலிட் ஆகக் காண்பிக்காமல் சில்ஹௌவ்ட்
    கர்வ் ஆகக் வைத்துப் பார்ப்பது/காண்பிப்பது//வரைவது வழக்கம்..தொழில்..

    சில்ஹௌவ்ட் பெயர்க் காரணம் இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  2. கருப்பு வெள்ளையின் பின்
    நீலமும் அலுத்துப் போய்
    சிக்னல் வண்ணங்களுக்குத் தாவி
    அதுவும் அலுத்து காவிக்குத்
    தாவினால் அங்கேயும் போலி.
    கருப்புதான் எனக்குப்புடிச்ச கலரு..

    என்னசோப்பு போட்டாலும் விடாதுகருப்பு.

    ReplyDelete
  3. நல்ல வேளை..பையன் கையிலே காமிராவைக் கொடுக்கலே..
    இல்லேன்னா சக்தி உபாசகர் சீன்
    'நம்பர் ஒன் டிவி' யிலே பிளாஷ் ஆகியிருக்கும்..

    ReplyDelete
  4. about jokes:
    By skipping the last two my rating:

    first wine/one is giving kick.

    second one has been already picturised in 'sathileelaavathi' of kamal with a motorbike.

    third one is really goes to place of 'the first'.

    ReplyDelete
  5. சர்கஸ் குழந்தையின் படம் நன்று..
    ச்சே..சக்சஸ் குழந்தையின்படம் நன்று..

    எழுதியதைப் படித்துநடந்து சக்செக்ஸ் வந்தால் அதுவும் நன்று..
    ச்சே..சக்சஸ் வந்தால் அதுவும் நன்று..

    என்னது இது..சக்சஸ் ஈசியா வரமாட்டேங்கறதே..?

    ReplyDelete
  6. தேமொழி 'கறுப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு'ன்னு சொல்லாமல் சொல்கிறார்.
    கவிதை 'நச்' சுன்னு இருக்கு பாராட்டுக்கள்.சில்ஹவுட் ஓவியமும் நன்கு அமைந்துள்ளது. வெள்ளிமாளிகை என்று சொன்னாதான் தெரிகிற‌து.

    ஆனந்தமுருகனின் 10 டிப்ஸ் அருமை. தமிழில் மொழிபெயர்க்க நேரமில்லையா சார்? 'செட்டிங் தெ கோல்' என்றால் புதுமையாக இருக்கிறது. அதையே 'உறுதி மொழி எடுத்தல்' என்று சொன்னால் அல்லது சங்கல்பம் செய்தல் என்றால் ஒரு விறுவிறுப்புக் கிடைப்பதில்லை.முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    சபரிமலை ஆண்டவருடைய நகைச்சுவையும் நன்றாக உள்ளது. மற‌ந்து போய்
    பின் சீட்டில் உட்கார்ந்து அலம்பல் பண்ணிய பாட்டி ஜோக் ரசித்தென். இங்கே ஒருவர் மனைவி பின் சீட்டில் உட்காரும் முன்னர் டூ வீலரை எடுத்துப் போய்விட்டு, போய் சேர்ந்து மனைவியைக் காணவில்லை என்று கம்பிளைன்ட் கொடுத்துவிட்டார்.

    ReplyDelete
  7. தேமொழியின் கவிதை அவர் பெயர் போலவே தேன் மொழியில் அழகாய் இருந்தது. கடைசி வரியில் இன்றைய பத்திரிகைகளின் 'சர்குலேஷன் ஏற எதை வேண்டுமானாலும் போடலாம்' என்கிற மனோபாவத்துக்கும்,'இலவசம்' என்றால் எதைவேண்டுமானாலும் வாங்குகிற மக்களின் மனநிலைக்கும் வைத்த குட்டு அநாயாசமானது. ஓவியமும் அருமை. லால்குடியாரின் கதையில் கடைசியில் மகனுக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது.போலிச்சாமியார்கள் பின்னால் ஓடுபவர்கள் பைத்தியம் தெளிவது எப்போது?.சக்சஸ் டிப்ஸ் அருமை. எல்லா ஜோக்குகளிலும் பொம்பளைங்களைக் கிண்டல் பண்ணி ஒரு வரியாவது வந்திடுது. என்ன பண்ண?

    ReplyDelete
  8. ஆஹா!
    வண்ண வண்ணக் கவிதை -வாசித்தோர்
    எண்ணமெல்லாம் வண்ணமானக் கவிதை.

    நல்லக் கற்பனையோடு புனைந்துள்ளீர்கள்.

    புனையா ஓவியம் என்று நமது இலக்கியங்களில் வரும்
    வண்ணம் தீட்டப் படாத அழகு ஓவியம்...
    தாங்கள் ஓவியர் என்பதால் அதைப் பற்றியத் தேடலின் துளிகள்.
    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

    'அவனுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம்' என்று ஒரு நிகழ்வின் நிழலை நிஜமாகக் காட்டியது உங்களின் ஆக்கம்...
    நன்றிகள் கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,
    தேமொழி அவர்களின் கவிதை கல(க்கல்)ரா கவிதை இருந்தது...'கலை' வண்ணத்திலிருந்து 'கவி'வண்ணம்...செய்தித்தாள் "கறுப்பு வெள்ளை" திரைப்படங்களை போன்று தெரிந்தாலும் அது தருவதோ வண்ணமயமான விஷயங்கள் என்று அழகாய் தந்திருக்கிறார்...உலகில் அழகான விஷயங்களை விட அவலங்கள் தான் அதிகம் என்று செய்தித்தாளே சாட்சி...இதில் "வெள்ளை"ஆசாமிகள்(அரசியல்வாதிகள்)மட்டும் எப்படி இடம் பிடிக்காமல் போய்விட்டார்கள்?!!!


    "வெள்ளை" மாளிகைக்கு 'கறுப்பு' ஓவியம்...நல்ல கான்ட்ராஸ்ட்...வெள்ளை மாளிகையின் "டோம்"(dome) வடிவம் இருந்திருந்தால் ஓவியம் முழுமையடைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்...நல்ல முயற்சி...அடுத்த முறை இந்திய "நாடாளுமன்றத்தை" முயற்சி செய்வீர்கள் என்று நம்புகின்றேன்...

    ReplyDelete
  10. kmrk அவர்களின் சிறுகதை நன்றாக இருந்தது...போலியான மனிதர்களால் "பேதை"யான மனதிலும் இறுக்கங்கள் உருவாகிவிடுகின்றன...'போலி' சாமியார்களின் போலித்தனத்தை மக்கள் இன்று நன்றாக‌ உணரத் தொடங்கிவிட்டார்கள்...ஆயினும் "எதை தின்றால் பித்தம் தெளியும்" என்று அலைபவர்களை கொண்டு இன்றும் சில "போலி"ஆசாமிகள் உலா வந்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்...மாமியின் அண்ணனின் கதை தான் பாவம்..."தொப்பை கணபதி" சொல்லாட்சி என்னை மிகவும் கவர்ந்தது...நான் என் தம்பியை அடிக்கடி கூறும் வார்த்தை அது...ஹிஹிஹி

    ReplyDelete
  11. அனந்தமுருகனின் "பத்துக்கு பத்து" மிகவும் அருமை...நகைச்சுவையிலிருந்து இன்றைய மாறுதல் நன்று...நல்ல ஆக்கத்தை தந்தமைக்கு நன்றிகள்...அடுத்து கதை,கவிதை என்று 'promotions' வாங்கிக் கொள்ளுங்கள்...


    சபரி அவர்களின் நகைச்சுவை பெரும்பாலும் "இணைய" ஜோக்குகள் என்பதால் பெண்களை கிண்டல் செய்தே அமைந்திருக்கின்றன...முதல் மற்றும் இரண்டாவது ஜோக்குகள் மட்டுமே எனக்கு பிடித்திருந்தது...

    ReplyDelete
  12. எனது கவிதையையும் படத்தையும் வெளியிட்ட ஆசிரியருக்கு என் நன்றிகள்.
    அவற்றை ரசித்தவர்களுக்கும், பாராட்டி கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    வெள்ளை மாளிகை படத்தை அஃபிசியல் வைட் ஹவுஸ் லோகோவைப் பார்த்து வரைந்தேன்.
    அந்தப் படத்தை இந்த சுட்டி வழியே சென்று பார்க்கலாம்.
    http://en.wikipedia.org/wiki/File:US-WhiteHouse-Logo.svg
    பொதுவாக நிழற் படங்கள் போக்குவரத்து அறிவிப்பில் இப்பொழுது பெரும்பாலும் இடம்பெறுகிறது என்ற செய்தியை குறிப்பிட விரும்பியும் மறந்து விட்டேன்.

    "நான் சொல்வதெல்லாம் உண்மையைத் தவிர வேறில்லை" என்று எழுதினால் தனுசுவும் அதே வாரம் அதே வரியை உபயோகிக்கிறார். நான் எழுதும் ஊரின் கதையையும் அதே வாரம் மைனர் கதையில் எழுதுகிறார். நான் போலிசாமியார் பற்றி எழுதும் வாரம் KMRK ஐயாவும் அவர்களைக் குறிபிடுகிறார். It's Kind of Creepy, you know. நான் இவர்களைப் பார்த்து பயப்பட வேண்டுமா , இல்லை இவர்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டுமா என்பது இன்னமும் புரியவில்லை.

    வாத்தியார் சாமர்த்தியமாக வெளிநாட்டு பத்திரிகையின் படம் போட்டு சர்ச்சையைத் தவிர்த்து விட்டார். 'உன்னால் முடியும் தம்பி ' என்று சொல்லும் குழந்தையின் படமும் நல்ல தேர்வு

    ReplyDelete
  13. நான் ஏற்கனவே கவுண்ட் டௌன் முடிந்தும் ஒரு அறிவிப்பும் இல்லை என்று மண்டை காய்ந்து இருக்கும் பொழுது, KMRK ஐயாவும் ஒரு ரகசியம் ஆனால் நான் சொல்லமாட்டேனாக்கும் என்று சொல்லிப்போட்டு போய்கொண்டே இருக்கிறார். தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. எனக்கெல்லாம் மிக விவரமாக சொன்னால்தான் புரியும். நான் கற்பனை செய்து வைத்திருப்பது சரியா என்று தெரியவில்லை. ஆனால் மைனர் கருத்துக்களைப் பார்த்து உத்தேசமாக அதுதான் என்று கொஞ்சம் புரிந்து கொள்கிறேன்.

    ஆனந்தமுருகனின் வெற்றிப்படிகளில் ஏற உதவும் தகவல்கள் ஆஹா...ஓஹோ...ஆனாலும் மீண்டும் மைனர் சொல்லும்பொழுது "சக்சஸ்" என்பது எவ்வளவு சிரமமானது என்பது புரிகிறது. :)))))

    சபரியின் நகைசுவை துணுக்குகள் முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்பொழுது மறுபடியும் ஹி...ஹி...ஹ..ஹ..ஹா...

    ReplyDelete
  14. கவிதாயினியே வருக என
    கருத்துரையில் அன்று அய்யர்

    சொன்னதை ஏற்று
    சொன்னபடியே கவிதை தந்து உமது

    மற்றொரு முகத்தை காட்டியதில் இம்
    மன்றமே தமிழால் ம(கிழ்)ணக்கிறது

    கதையாசிரியையாய்..
    ஓவியராய்..
    கவிதாயினியாய்.. பின் ஊட்டி

    விமர்சகராய்..
    சோதிடராய்
    துப்பறியும் சிங்கமாய்

    முதல் பெஞ்ச் மாணவியாய்
    பாண்டி நாட்டு தோழியாய்
    திரைஉலக டி ஆர் போல்

    அஷ்டாவதானியாய் விளங்கும் உம்மை
    தசாவதானியாய் காண

    விரும்புகிறோம்
    வாழ்த்துகிறோம்..

    ReplyDelete
  15. பத்தாய் வந்த வெற்றி படிகட்டும் பத்தில்
    பாதியாய் (ஐந்தாய்) வந்தமையும்

    தமிழில் இல்லாமையால்
    தடுமாறிபோனோம்..(புரிந்து கொள்ள)

    குறிப்பாக சொல்ல ஏதுமில்லை எனினும்
    வழக்கமாக வணக்கமும் வாழ்த்தும்

    ReplyDelete
  16. எனது 'சிறுகதை'யைப் படித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு ஆக்கங்கள் த‌ருகின்றவர்களுடன் பின்னூட்டங்கள் 'லிமிட்' ஆகிவிடுகிற‌தே.போகட்டும் மற்ற வகுப்பறைத் தோழர்களில் பலரும் படித்திருக்க வாய்ப்புண்டு என்று மகிழ்வோமாக.

    எனது கதையில் 'போலிச்சாமியார்' பக்கம் அனைவரின் கவனமும் திரும்பிவிட்டது.மிகவும் கவனமாக அவரை ஓர் உபாசகர் என்றே குறிப்பிட்டிருந்தேன். சிவப்பு ஆடை அணிந்திருந்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.மாந்திரீகர் கெட் அப் என்றும் கூறியுள்ளேன். இருந்தும் அவருக்கு எப்படியோ சாமியார் பட்டம் கிடைத்துவிட்டது.அவர் சாமியார் அல்ல‌.

    கதையின் மையக் கரு, ஒரு மனஅழுத்தம் ஆகியுள்ளவர்களுக்கு குடும்பத்துடன் உள்ள தொடர்புதான் மிகவும் முக்கியமான வைத்தியம். குடும்பத்தின் முழுமையான புரிதலும் ஆதரவும் கிடைத்த ஆரம்ப நிலை மனக் கோளாறு உள்ளவர்கள் முற்றிலும் அதிலிருந்து விடுபட முடியும் என்பதே கதையின்
    உள்ளுறைச் செய்தி.மேலும் முற்றிலும் மாறுபட்ட சூழலுக்கு அழைத்துச் செல்லுதல், திடீரெனக் கிடைக்கும் அதிர்ச்சி ஆகியவையும் மன நோய் குணமாகக் காரணிகள் ஆகும். இவையெல்லாம் குறைவின்றிக் கிடைத்ததால் அந்தச் சிறுவனுக்குக் குணம் சீக்கிரம், மூன்றாவது நாளில் கிடைத்தது.

    இங்கு ஒரு காவல்துறை தலைமைக் காவலர் எப்போதும் காவல்துறை சீருடையில் முச்சந்தியில் நின்று Whwt is the time now? Why you are late?You are always late! என்று சாலையில் போவாரையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் அவருடைய மேலதிகாரியால் மன நோய்க்கு ஆளாகிவிட்டவர்.அவருக்கு அவர் மனம் அறிந்து உதவிசெய்ய குடும்பத்தின் ஆதரவு கிடைத்திருக்காது. எனவே அவர் நிரந்தர மன நோயாளி ஆகிவிட்டார்.

    ReplyDelete
  17. தேமொழியின் கைவண்ணத்தில் கவிதை, ஓவியம் இரண்டுமே நன்றாக இருந்தன. இருந்தும் கலர்புல் ஓவியங்கள் என்னைக்கவரும் அளவு நிழற்படங்கள் கவருவதில்லை.

    கிருஷ்ணன் சாரின் கதை, ஆனந்தமுருகனின் ஆக்கம், சபரியின் நகைச்சுவை அனைத்தும் அருமை. முதலாவது ஜோக் சுபெர்ப்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com