மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.2.12

Astrology ரேவதிசந்திரன்



Astrology ரேவதிசந்திரன்

ஆஷா கேளுன்னி குட்டி என்ற நடிகை திருமதி ரேவதியை நமக்கெல்லாம் தெரியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாராதிராஜா அவர்கள்
தன்னுடைய மண்வாசனை என்ற வெற்றிப் படத்தில் அவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு உதயகீதம், வைதேகி காத்திருந்தாள்,மெளனராகம்,
அரங்கேற்றவேளை போன்ற பல வெற்றிப்படங்களில் தன் நடிப்பால் கலக்கியவர் அவர்.

யார் அவர் ரேவதி சந்திரன்?

27 நட்சத்திரத் தேவியர்களில் ஒருவர்தான் அவர். மக்களுக்கு அழகைக் கொடுக்கக்கூடிய சந்திர பகவானை விரும்பி (உங்கள் மொழியில் சொன்னால்
காதலித்து) மணந்து கொண்டவர் அவர்.

சந்திரனை மணந்து கொண்டதால் அவர் ரேவதிசந்திரனாகிவிட்டார்

இன்று அவரைப்பற்றிப் பார்ப்போம்!
------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 12
ரேவதி நட்சத்திரம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
-----------------------------------
முன்னரே 26 நட்சத்திர தேவிகளை மணந்த சந்திர பகவான்,சும்மா இருக்காமல் கடைசி நட்சத்திர தேவியான ரேவதியையும் மணந்தார். வந்தவள், தன்
நாயகனோடு சேர்ந்து, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசிக்க விரும்பினாள். கருணை கொண்ட அம்பிகை காட்சி கொடுத்தார். அந்த இடமே
இத்தலத்தில் சிவனாருக்கு ஒரு கோவிலுடன் சிறப்புப் பெற்றது.

மேகங்கள் எல்லாம் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன வாம். எனவே ரேவதி நட்சத்திரத்தன்று இங்கு வருண பகவானுக்குப் பிரார்த்தனை செய்தால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. தட்டுப்பாடின்றி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்கு மெனற நம்பிக்கை நிலவுகிறது. விவசாயிகள் பெருமளவில் வந்து வணங்கிச் செல்லும் கோவிலாகும் இது

காசிக்கு அடுத்து காருகுடி என்ற சொல்லடைலை இத்தலத்திற்கு ஏற்பட்டுள்ளது. காசிக்கு இணையான தலம் என இதனைப் போற்றுகின்றனர். நோய் தீர்க்கும் தலம் எனவும் பெயர் பெற்றுள்ளது.

முற்காலத்தில் நாமக்கல்லிற்கு அருகில் உள்ள கொல்லிமலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதுப்பித்துக் கட்டியுள்ளான்.
பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோர வீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம்,
நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

அந்தக் கோவில்தான் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோவிலாகும்
-------------------------------------------------
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சுவாமியின் பெயர்: கைலாசநாதர்
அம்பிகையின் பெயர்: கருணாகரவல்லி
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்

 
கோவிலின் விலாசம்:
அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில்
காருகுடி கிராமம் - 621 210
தாத்தயங்கார் பேட்டை அருகில்,
முசிறி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

திருச்சியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் முசிறி நகருக்குச் சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டைக்குச் செல்ல வேண்டும். அந்த ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காருகுடி கிராமத்திற்குச் சென்றால கோவிலை அடையலாம்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தல இறைவனை வணங்கலாம். இக்கோவிலில் பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும் என்பதும், சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையைக் கேள்வி கேட்காமல் சொல்லியுள்ளபடி பிரார்த்தனையை மட்டும் செய்யுங்கள்

ஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்  
++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

13 comments:

  1. மணி சங்கர அய்யரின் ஊர் பெயரும் காருகுடிதான்.அதுவும் இதுவும் ஒன்றா என்று தெரிடவில்லை.அந்தக் காருகுடி திருவையார்று அருகில் உள்ளது.

    இதற்காக மாணவ மணிகள் திருச்சி வந்தால் தெரியப்படுத்தவும். சந்திக்க ஆவலாக உள்ளேன்.

    பதிவுக்கு ஐயாவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    ரேவதி நட்சத்திரத்தினர் சென்று
    வழிபாடு செய்து நன்மை
    அடைவதற்கு ஏற்ற வகையில்--
    காருகுடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
    ஸ்தல வரலாறு, கோவிலின் சிறப்பம்சம் மற்றும் அங்கு
    சென்று வருவதற்கு ஏற்றவாறு வழி விபரங்களையும்
    சிறப்பாக கொடுத்துள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  3. //// kmr.krishnan said...
    மணி சங்கர அய்யரின் ஊர் பெயரும் காருகுடிதான்.அதுவும் இதுவும் ஒன்றா என்று தெரிய்வில்லை.அந்தக் காருகுடி திருவையார்று அருகில் உள்ளது.
    இதற்காக மாணவ மணிகள் திருச்சி வந்தால் தெரியப்படுத்தவும். சந்திக்க ஆவலாக உள்ளேன்.
    பதிவுக்கு ஐயாவுக்கு நன்றி.////

    அந்தக் காருகுடி திருவையாறு அருகில் உள்ளது என்று தெளிவாகக் கூறிவிட்டீர்கள். பதிவில் இந்தக் காருகுடி தாத்தய்யங்கார் பேட்டைக்கு அருகில் உள்ளது என்று சொல்லியுள்ளேன். பிறகு இதுவும் ஒன்றா என்று தெரிய்வில்லை என்று கேட்டுள்ளீர்கள் - என்ன குழப்பம்? தூக்கக் கலக்கமா?

    ReplyDelete
  4. //// V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    ரேவதி நட்சத்திரத்தினர் சென்று
    வழிபாடு செய்து நன்மை
    அடைவதற்கு ஏற்ற வகையில்--
    காருகுடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
    ஸ்தல வரலாறு, கோவிலின் சிறப்பம்சம் மற்றும் அங்கு
    சென்று வருவதற்கு ஏற்றவாறு வழி விபரங்களையும்
    சிறப்பாக கொடுத்துள்ளீர்கள். நன்றி!///

    எதையுமே சிறப்பாகப் பார்க்கும் உங்களின் கண்ணோட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  5. உண்மையில் பெரிய சாமர்த்திய சாலி தான் குசேலரின் மாப்பிள்ளை...:௦):)

    நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  6. பதிவிற்கு நன்றி! நீங்கள் சிரத்தை எடுத்து கோயிலோடு சம்பந்தப்பட்ட புராணக்கதைகள் மற்றும் மேல்விவரங்களைத்தருவதால் ஆர்வம் குறையாமல் படிக்கமுடிகிறது.

    ReplyDelete
  7. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    உண்மையில் பெரிய சாமர்த்திய சாலி தான் குசேலரின் மாப்பிள்ளை...:௦):)
    நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சார்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. //// Uma said...
    பதிவிற்கு நன்றி! நீங்கள் சிரத்தை எடுத்து கோயிலோடு சம்பந்தப்பட்ட புராணக்கதைகள் மற்றும் மேல்விவரங்களைத்தருவதால் ஆர்வம் குறையாமல் படிக்கமுடிகிறது.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,
    'ரேவதி சந்திரன்' என்று குறிப்பிட்டு இருந்தது அழகாகயிருந்தது...நட்சத்திர கோவில்கள் செல்லும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் சிறப்பு ஐயா...கைலாசநாதர் கோவிலைப் பற்றிய தகவல்களுக்கும் நன்றி ஐயா...

    ReplyDelete
  10. அந்த கைகூப்பும் குழந்தை பெரும்பாலும் தாய் தந்தையில்லாமல் ஏதாவது அனாதை விடுதியில் உள்ளதாகத்தான் இருக்க வேண்டும். அந்த முகத்தில் தெரியும் குரோதம் அச்சமூட்டுகிறது.

    ReplyDelete
  11. //"என்ன குழப்பம்? தூக்கக் கலக்கமா?"//

    ஹி ஹி ஹி ஹி......

    இல்லை.அவசரம்.மின்சாரம் 5 மணிக்குப் போய்விடும். நான் பதிவிடும்போது
    4.58 AM

    ReplyDelete
  12. என் சுற்று வட்டாரத்தில் எனக்குத் தெரிந்து ரேவதியும் இல்லை, ரேவதி நட்சத்திரக்காரர்களும் இல்லை. சிவனின் படம் நன்றாக இருக்கிறது. கோயில் படம் கிடைக்கவில்லையா? வழக்கம் போல் தகவல்கள் செறிந்த பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. குடிகாரர்களுக்கான எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ள ஊர் இங்கிலாந்தில் எங்கேயோ. சாலையின் அமைப்பு, தண்ணீரும், பனியும் உருகி வழிந்து ஓட சரியான வடிகாலுடன் அமைக்கப்பட்ட அருமையான சாலை, சரக்கு ஏற்றிச்செல்லும் லாரியின் அமைப்பு ஆகியவை இங்கிலாந்தையே சுட்டுகின்றன.
    நல்ல முன் யோசனையுடன் வெளியிட்டுள்ளீர்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com