மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.2.12

Astrology பாபமாவது, கர்த்தாரியாவது - ஏன்டா குழப்புறீங்க?


 Astrology பாபமாவது, கர்த்தாரியாவது - ஏன்டா குழப்புறீங்க?

பயிற்சிப் பாடம் - Key Points - பகுதி 3

உங்கள் வீட்டிற்கு இரு புறமும் தாதாக்கள் குடியிருந்தால் என்ன ஆகும்? ஏதாவது அடிதடி என்றால் உங்களுக்கும் சேர்த்து அடிவிழுகும். அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணக்காக - என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்காக - உங்களையும் கூட்டிக் கொண்டுபோய் வதைக்கலாம்.

இன்னொன்றையும் யோசியுங்கள். அந்தக் காலத்தில் பொதுமகளிர் எல்லாம் வீடுகளில் குடியிருந்து கொண்டே தொழில் செய்தார்களாம். அதுபோல உங்கள் வீட்டிற்கு இரு புறமும் அந்த மாதிரிப் பெண்கள் இருந்தால் உங்கள் நிலை என்ன ஆகும். சரக்கடித்துவிட்டு, அவர்களைத் தேடி வருகிறவன், குடி மயக்கத்தில் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டித் திறக்கச் சொல்லி தகராறு செய்யும் அபாயம் இருக்கும்

அதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள நமக்கு முக்கியம். நமது நன்மைக்கும், அமைதிக்கும் முக்கியம்.

அதுபோல ஜாதகத்தில் ஒருவீட்டின் இருப்க்கமும் தீய கிரகங்கள் இருந்தால், அந்த வீட்டிற்கு அது கேடானது.

அதற்குப் பாபகர்த்தாரி யோகம் என்று பெயர். பாபிகளால் சூழப்பெற்ற வீடு - அதற்குரிய கேடுகளை அனுபவிக்க வேண்டும் என்று பொருள்

இன்று அதைப் பற்றி ஒரு பர்ர்வை பார்ப்போம்!
----------------------------------

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.

2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்

3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.

4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.

5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.

6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.

7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.

8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.

10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)

11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.

12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

சரி, சுப கர்த்தாரி யோகம் என்கிறார்களே - அது என்ன? அதன் பல என்ன?

அது மேல் நிலைப் பாடம் அதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

8.2.2012

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

48 comments:

  1. பாடம் எளிதில் புரியும்படி உள்ளது நன்றி ஐயா.
    எனக்கு ஒரு வீடு மாட்டிக்கொண்டு இருக்கிறது. என் அப்பாவிற்கும் பத்தாம் இடத்தில் இந்த அவயோகம் உள்ளது ஆனால் தீய பலன் இல்லாமல் போய்விட்டது. உண்மையில் பலன் எதிர்மறையாக இருக்கிறது, எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக தொழில் நடந்தது, நடக்கிறது. எனவே பொதுப் பலன் என்பதை நினைவு படுத்திக் கொள்கிறேன்.

    இன்றைய படம் நினைவுக்கு கொண்டு வருவது....
    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா

    ReplyDelete
  2. The explanation under 'pabha karthari yoga' is simple and clear. Thank U guruji.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்! பாப கர்த்தாரி அவயோகத்தின் பாவபலன்களை, அறிவித்தமைக்கு நன்றி! இப்படி மாட்டிக் கொள்ளும் கிரகங்கள் ஆட்சி,உச்சம் எனில் பலன்கள் எவ்வாறு இருக்கும்?இந்த யோகத்தில் மாட்டிக் கொள்ளும் பாபகிரகங்கள் எவ்வாறு பலன் அளிக்கும்?

    ReplyDelete
  4. பாபகர்த்தாரி யோகம் . பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள் மிகவும் தெளிவாக உள்ளது.
    ஒரு சந்தேகம் .
    ஒரு வீட்டின் இருபுறமும் கிரகங்கள் இல்லாமல் தனியாக ஒரு கிரகம் நின்றால் அந்த வீட்டிற்கு என்ன பெயர்.
    அதனால் என்ன பலன் .
    எஸ். சந்திரசேகரன்

    ReplyDelete
  5. ////பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.////
    இன்று இன்னும் ஒருப் புதிய தகவல்....
    பதிவு, பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. Hi Sir,

    Thanks for the lesson and it is really useful. I have sent you the request in your email for email classes. Unfortunately, i haven't received even one single class lesson yet.

    Kindly help
    Siva

    ReplyDelete
  7. சனி, சூரியன் அல்லது செவ்வாய் ஆகிய கிரகங்கள் லக்கினாதிபதியாகவோ அல்லது ராசிநாதனாகவோ இருக்கையில் இவைகளும் பாப கிரகங்களாக கருதப்படுமா அய்யா..?

    பாடம் மிக எளிமை.

    நன்றிகள்.

    ReplyDelete
  8. புரியும்படி எழுதியதால், பயன் கண்டிப்பாக உண்டு :) நன்றி

    ReplyDelete
  9. /////Blogger தேமொழி said...
    பாடம் எளிதில் புரியும்படி உள்ளது நன்றி ஐயா.
    எனக்கு ஒரு வீடு மாட்டிக்கொண்டு இருக்கிறது. என் அப்பாவிற்கும் பத்தாம் இடத்தில் இந்த அவயோகம் உள்ளது ஆனால் தீய பலன் இல்லாமல்

    போய்விட்டது. உண்மையில் பலன் எதிர்மறையாக இருக்கிறது, எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக தொழில் நடந்தது, நடக்கிறது. எனவே பொதுப் பலன்

    என்பதை நினைவு படுத்திக் கொள்கிறேன்.
    இன்றைய படம் நினைவுக்கு கொண்டு வருவது....
    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா////

    லல லல் லல்லா....லல லல் லல்...லா.. ல..ல..லா
    லல லல் லல்லா,,,,லல லல் லல்...லா.. ல..ல..லா
    ல..ல......லல லல் லல்லா
    எனக்கு பாபாவும் இல்லை கத்தாரியும் இல்லை

    ReplyDelete
  10. ////Blogger Nathan.... said...
    The explanation under 'pabha karthari yoga' is simple and clear. Thank U guruji./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயா வணக்கம்! பாப கர்த்தாரி அவயோகத்தின் பாவபலன்களை, அறிவித்தமைக்கு நன்றி! இப்படி மாட்டிக் கொள்ளும் கிரகங்கள் ஆட்சி,உச்சம் எனில்

    பலன்கள் எவ்வாறு இருக்கும்? இந்த யோகத்தில் மாட்டிக் கொள்ளும் பாபகிரகங்கள் எவ்வாறு பலன் அளிக்கும்?/////

    வீட்டைப் பற்றித்தானே பேச்சு. மாட்டிக்கொண்ட கிரகங்கள் பெயிலில் வந்து விடும். அவற்றிடம் பிறிதொரு நாள் பேசுவோம்!

    ReplyDelete
  12. ////Blogger csekar2930 said...
    பாபகர்த்தாரி யோகம் . பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள் மிகவும் தெளிவாக உள்ளது.
    ஒரு சந்தேகம் .
    ஒரு வீட்டின் இருபுறமும் கிரகங்கள் இல்லாமல் தனியாக ஒரு கிரகம் நின்றால் அந்த வீட்டிற்கு என்ன பெயர்.
    அதனால் என்ன பலன் .
    எஸ். சந்திரசேகரன்/////

    தனியாக இருந்தால் ஒரு பெயரும் இல்லை.

    ReplyDelete
  13. ///Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ////பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க

    நேரிடும்.////
    இன்று இன்னும் ஒருப் புதிய தகவல்....
    பதிவு, பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  14. ////Blogger iyer said...
    11///

    அடுத்து 10

    ReplyDelete
  15. ////Blogger Siva said...
    Hi Sir,
    Thanks for the lesson and it is really useful. I have sent you the request in your email for email classes. Unfortunately, i haven't

    received even one single class lesson yet.
    Kindly help
    Siva////

    இ.மெயில் பாடங்கள் எதுவும் இல்லை. தற்சமயம் மேல் நிலைப் பாடங்களுக்கென்று தனி இணைய தளம் உள்ளது. அது உறுப்பினர்களுக்கு மட்டுமே!

    ReplyDelete
  16. காலை வணக்கம் ஐயா.

    ஏற்கனேவ வகுப்பறையில் படித்த பாடம். ஆனாலும் Revision செய்யும் போது நன்றாக இருக்கிறது.

    ஐயா கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்? என்ற பாடத்தை நேற்று படித்துக் கொண்டிருந்தேன்(lession lable). அதில் லக்கின சுபர் மற்றும் பாபர் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் தனுசு மற்றும் மீன லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி,5 மற்றும் 9க்குரியவர்கள் யோககாரர்களாக இருக்கிறார்கள். மேஷம் மற்றும் கடகத்திற்கு 5 மற்றும் 9க்குரியவர்கள் யோககாரகர்களாக உள்ளனர்.

    ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்களுக்கு ஏன் 5ம் அதிபதியை யோககாரகரகராக எடுப்பதில்லை? நீங்கள் யோசித்துப்பார்க்கச் சொல்லியிருந்துர்கள். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. கன்னி மற்றும் துலா லக்கினக்காரர்களுக்கு சனி 5க்குரியவராகவும் லக்கினாதிபதிக்கு நட்புக்கிரகமாக இருந்தும் யோககாரகராக இல்லாமல் போனது எதனால் ஐயா?

    ReplyDelete
  17. செவ்வாய் கடகத்திற்கு யோககாரகன். அவ்ர் 12ல் நிற்பதும், சனி பூசத்திற்கு நடசத்திர அதிபன், சனி 2ல் நிற்பதும் கடகராசிக்கு கடக லக்னத்திற்கு பாபகர்தாரி ஆகுமா?

    பாடம் அருமை.நன்றி!

    ReplyDelete
  18. என்னை எப்பொழுதும் குழப்பும் யோகம் இது. இதில் தீய கிரகம் என்பது சுபாவத்தால் தீய கிரகமா? லக்னத்திலிருந்து ஆறாம், எட்டாம் அதிபதியாக
    சுக்கிரனோ, சந்திரனோ, குருவோ இருந்தால் அவர்களை இந்த கணக்கில் சேர்க்கலாமா? சனி, செவ்வாய் போன்றவர்கள் லக்ன, ஐந்தாம், ஒன்பதாம் அதிபதிகளாக இருந்தால் இந்த யோகத்தால் பாதிப்பில்லை என்று பி.வி.ராமன் எழுதியிருக்கிறார். இதைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  19. Respected Sir,

    What will be the result when one side of the house benefic planet co-joined with malefic planet and otherside malefic planet?

    Pls clarify sir........

    ReplyDelete
  20. மூத்த மாணவரான திரு.சிவராமகிருஷ்ணன்(old indian spin bowler)நமது மதிபிற்குரிய அய்யர், பொதுவாக (பால்)களை சுழலவிடுவார்.sorry, பாடல்களை சுழலவிடுவார்.நேற்றும்,இன்றும்,எண்கள்சுழலவிடும் எண்ணம் எதுவோ ??அமைதி காக்கிறோம்.with respect!

    ReplyDelete
  21. தொடர் பாடங்கள் அதுவும் பயன் உள்ள பாடங்கள். மிக்க நன்றிகள் அய்யா .

    சுப கர்தாரி பாடம் பற்றி மேலோட்டமாகவாவது கொஞ்சம் கொடுங்கள் அய்யா. அதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக் உள்ளேன். காரணம் எனக்கு துலா லக்னம் யோகா காரன் சனி நான்கில் ஆட்சி , இரு புறமும் பாவ கிரகங்கள் இல்லை . மாறாக இருபுறமும் சுப கிரகங்களாக இருக்கிறது .3 ல் சந்திரனும் 5 ல் குரு வும் இருக்கிறார்கள்.

    பபகர்தாரியில் இருக்கு இடங்கள் , வீடுகளுக்கு மட்டும் அந்த பாதிப்பு கிடைக்குமா? கிரகங்களுக்கும் சேர்த்து பாதிப்போ நல் பலன்களோ கிடைக்குமா?

    ReplyDelete
  22. 12 வீடுகளுக்கும் பாபகர்த்தாரி யோகத்தால் ஏற்படும் அவயோக பலனை பயிற்சிப் பாடமாக பதிவிட்டமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  23. ஐயா பதிவு அருமை,

    பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிய வீடு மட்டும் தான் முழிக்குமா?.இல்லை அதில் வாடகைக்கு வந்து தங்கிய விருந்தாளியும் தான் முழிக்கணுமா?.விருந்தாளி நண்பராக இருந்தாலும்,வீட்டு முதலாளி வேறொரு வீட்டில் நல்ல பலத்துடன்(உச்சமாக) இருந்தாலோ தள்ளுபடி ஏதாவது கிடைக்குமா?.

    ReplyDelete
  24. //Ananthamurugan said...

    //மூத்த மாணவரான திரு.சிவராமகிருஷ்ணன்(old indian spin bowler)நமது மதிபிற்குரிய அய்யர், பொதுவாக (பால்)களை சுழலவிடுவார்.sorry, பாடல்களை சுழலவிடுவார்.நேற்றும்,இன்றும்,எண்கள்சுழலவிடும் எண்ணம் எதுவோ ??அமைதி காக்கிறோம்.with respect!//

    அப்படியா? ஐயர் அவர்கள் கிரிக்கெட்டெர் சிவராமகிருஷ்ணன் அவர்களா?
    விஸ்வநாத ஐயர் என்பதாகத்தானே இதுவரை அறிந்து இருந்தோம். புதிய செய்தியாக உள்ளதே,முருகா!?

    மஹா சிவன்ராத்திரி 20 தேதியன்று வருகிறது. அதற்கான கவுண்ட் டவுன்தான் இது.

    ReplyDelete
  25. "இதைப் பார்த்தவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?"

    இடது பக்க அருவியில் ஒரு நாயின் முகமும், இடது பக்க அருவியில் ஒரு நீண்ட அங்கியும், கண்களை மட்டும் உடைய பேய் முகமும் தெரிகிறது. பேய்க்கதை ராணி அவர்கள் இதை வைத்து ஒரு 'அருவிக்'கரைப்பேய்' என்ற கதை எழுதலாம்.

    ReplyDelete
  26. கண்ணதாசனின் பொன் மொழி ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் நமது பொன்னை கோர்ட் அவமதிப்பு வழக்கில் செலுத்தாமல் தப்பிக்கும் வழியைப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  27. வணக்கம் வாத்தியார் ஐயா!

    உள்ளேன் ஐயா

    ReplyDelete
  28. //இடது பக்க அருவியில் ஒரு நீண்ட அங்கியும், கண்களை மட்டும் //

    வலதுபக்க அருவியில் என்று வாசிக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  29. அருவியின் வெள்ளை நிறப் பாகத்தை மட்டும் ஒட்டு மொத்தமாகப் பாருங்கள்.ஒரு கோழியின் பாதி உருவம் தெரிகிறதா? பின்னால் சிறகு விரிந்து, முன்னால் மாரைத் துறுத்திக் கொண்டு ஒரு கோழி!

    ReplyDelete
  30. ///Blogger Govindasamy said...
    சனி, சூரியன் அல்லது செவ்வாய் ஆகிய கிரகங்கள் லக்கினாதிபதியாகவோ அல்லது ராசிநாதனாகவோ இருக்கையில் இவைகளும் பாப கிரகங்களாக கருதப்படுமா அய்யா..?
    பாடம் மிக எளிமை.
    நன்றிகள்.////

    சுபக்கிரகங்களான குரு, சந்திரன் & சுக்கிரன் ஆகிய மூவர் மட்டும்தான் பவ்ன்சர் போடாத பெள்லர்கள். மறறவர்கள் எல்லாம் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்!
    ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றால் யார் என்று தெரியுமல்வா?

    ReplyDelete
  31. ////Blogger Sanjai said...
    புரியும்படி எழுதியதால், பயன் கண்டிப்பாக உண்டு :) நன்றி///

    யாருக்கு?

    ReplyDelete
  32. ///Blogger Sathish K said...
    காலை வணக்கம் ஐயா.
    ஏற்கனேவ வகுப்பறையில் படித்த பாடம். ஆனாலும் Revision செய்யும் போது நன்றாக இருக்கிறது.
    ஐயா கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்? என்ற பாடத்தை நேற்று படித்துக் கொண்டிருந்தேன்(lession lable). அதில் லக்கின சுபர் மற்றும் பாபர் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் தனுசு மற்றும் மீன லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி,5 மற்றும் 9க்குரியவர்கள் யோககாரர்களாக இருக்கிறார்கள். மேஷம் மற்றும் கடகத்திற்கு 5 மற்றும் 9க்குரியவர்கள் யோககாரகர்களாக உள்ளனர்.
    ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்களுக்கு ஏன் 5ம் அதிபதியை யோககாரகரகராக எடுப்பதில்லை? நீங்கள் யோசித்துப்பார்க்கச் சொல்லியிருந்துர்கள். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. கன்னி மற்றும் துலா லக்கினக்காரர்களுக்கு சனி 5க்குரியவராகவும் லக்கினாதிபதிக்கு நட்புக்கிரகமாக இருந்தும் யோககாரகராக இல்லாமல் போனது எதனால் ஐயா?///

    வகுப்பறையின் பழைய பாடங்களில் உள்ளது சாமி. படித்துப் பாருங்கள் (சுட்டியைக் கேட்காமல்)

    ReplyDelete
  33. ////Blogger kmr.krishnan said...
    செவ்வாய் கடகத்திற்கு யோககாரகன். அவ்ர் 12ல் நிற்பதும், சனி பூசத்திற்கு நடசத்திர அதிபன், சனி 2ல் நிற்பதும் கடகராசிக்கு கடக லக்னத்திற்கு பாபகர்தாரி ஆகுமா?
    பாடம் அருமை.நன்றி!////

    வீட்டுக்காரன் சந்திரனை விட்டுவிட்டீர்களே. அவன் தப்பிக்க முடியாது என்று தெரிந்துதானே விட்டு விட்டீர்கள்?

    ReplyDelete
  34. ///Blogger Jagannath said...
    என்னை எப்பொழுதும் குழப்பும் யோகம் இது. இதில் தீய கிரகம் என்பது சுபாவத்தால் தீய கிரகமா? லக்னத்திலிருந்து ஆறாம், எட்டாம் அதிபதியாக
    சுக்கிரனோ, சந்திரனோ, குருவோ இருந்தால் அவர்களை இந்த கணக்கில் சேர்க்கலாமா? சனி, செவ்வாய் போன்றவர்கள் லக்ன, ஐந்தாம், ஒன்பதாம் அதிபதிகளாக இருந்தால் இந்த யோகத்தால் பாதிப்பில்லை என்று பி.வி.ராமன் எழுதியிருக்கிறார். இதைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.////

    ராமன் இந்திய ஜோதிடத்தின் அததாரிட்டிகளில் ஒருவர். அவர் எழுதியுள்ளதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  35. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    What will be the result when one side of the house benefic planet co-joined with malefic planet and otherside malefic planet?
    Pls clarify sir........///

    அது கணக்கில் வராது.

    ReplyDelete
  36. ////Blogger Ananthamurugan said...
    மூத்த மாணவரான திரு.சிவராமகிருஷ்ணன்(old indian spin bowler)நமது மதிபிற்குரிய அய்யர், பொதுவாக (பால்)களை சுழலவிடுவார்.sorry, பாடல்களை சுழலவிடுவார்.நேற்றும்,இன்றும்,எண்கள்சுழலவிடும் எண்ணம் எதுவோ ??அமைதி காக்கிறோம்.with respect!///

    வாத்தியாருக்கு மட்டும் அமைதி காக்கத் தெரியாதா என்ன?

    ReplyDelete
  37. ///Blogger thanusu said...
    தொடர் பாடங்கள் அதுவும் பயன் உள்ள பாடங்கள். மிக்க நன்றிகள் அய்யா .
    சுப கர்தாரி பாடம் பற்றி மேலோட்டமாகவாவது கொஞ்சம் கொடுங்கள் அய்யா. அதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக் உள்ளேன். காரணம் எனக்கு துலா லக்னம் யோகா காரன் சனி நான்கில் ஆட்சி , இரு புறமும் பாவ கிரகங்கள் இல்லை . மாறாக இருபுறமும் சுப கிரகங்களாக இருக்கிறது .3 ல் சந்திரனும் 5 ல் குரு வும் இருக்கிறார்கள்.
    பபகர்தாரியில் இருக்கு இடங்கள் , வீடுகளுக்கு மட்டும் அந்த பாதிப்பு கிடைக்குமா? கிரகங்களுக்கும் சேர்த்து பாதிப்போ நல் பலன்களோ கிடைக்குமா?////

    மாட்டிக்கொண்ட வீட்டுக்காரனும் (வீட்டு அதிபதியும்) அடி வாங்க வேண்டியதுதான்!:-))))

    ReplyDelete
  38. ///Blogger முருகராஜன் said...
    12 வீடுகளுக்கும் பாபகர்த்தாரி யோகத்தால் ஏற்படும் அவயோக பலனை பயிற்சிப் பாடமாக பதிவிட்டமைக்கு நன்றிகள்.////

    ஆகா, உங்கள் நன்றிக்கு ஒரு நன்றி முருகா (ராஜா)!

    ReplyDelete
  39. ////Blogger Rajaram said...
    ஐயா பதிவு அருமை,
    பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிய வீடு மட்டும் தான் முழிக்குமா?.இல்லை அதில் வாடகைக்கு வந்து தங்கிய விருந்தாளியும் தான் முழிக்கணுமா?.விருந்தாளி நண்பராக இருந்தாலும்,வீட்டு முதலாளி வேறொரு வீட்டில் நல்ல பலத்துடன்(உச்சமாக) இருந்தாலோ தள்ளுபடி ஏதாவது கிடைக்குமா?.////

    குடியிருப்பவனுக்கு என்ன வந்தது? வீட்டுக்காரனைக் காட்டிவிட்டுத் தன் வேலையைப் பார்ப்பான்!

    ReplyDelete
  40. ////Blogger kmr.krishnan said...
    //Ananthamurugan said...
    //மூத்த மாணவரான திரு.சிவராமகிருஷ்ணன்(old indian spin bowler)நமது மதிபிற்குரிய அய்யர், பொதுவாக (பால்)களை சுழலவிடுவார்.sorry, பாடல்களை சுழலவிடுவார்.நேற்றும்,இன்றும்,எண்கள்சுழலவிடும் எண்ணம் எதுவோ ??அமைதி காக்கிறோம்.with respect!//
    அப்படியா? ஐயர் அவர்கள் கிரிக்கெட்டெர் சிவராமகிருஷ்ணன் அவர்களா?
    விஸ்வநாத ஐயர் என்பதாகத்தானே இதுவரை அறிந்து இருந்தோம். புதிய செய்தியாக உள்ளதே,முருகா!?
    மஹா சிவன்ராத்திரி 20 தேதியன்று வருகிறது. அதற்கான கவுண்ட் டவுன்தான் இது.////

    இருக்கலாம்! ஓம் நமச்சிவாயா!

    ReplyDelete
  41. ///Blogger kmr.krishnan said...
    "இதைப் பார்த்தவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?"
    இடது பக்க அருவியில் ஒரு நாயின் முகமும், இடது பக்க அருவியில் ஒரு நீண்ட அங்கியும், கண்களை மட்டும் உடைய பேய் முகமும் தெரிகிறது. பேய்க்கதை ராணி அவர்கள் இதை வைத்து ஒரு 'அருவிக்'கரைப்பேய்' என்ற கதை எழுதலாம்.////

    பரிந்துரைக்கு அம்மையாரின் சார்பில் நன்றி!

    ReplyDelete
  42. ////Blogger kmr.krishnan said...
    கண்ணதாசனின் பொன் மொழி ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் நமது பொன்னை கோர்ட் அவமதிப்பு வழக்கில் செலுத்தாமல் தப்பிக்கும் வழியைப் பார்க்க வேண்டும்.////

    பெண்ணா? பொன்னா?

    ReplyDelete
  43. ///Blogger kannan said...
    வணக்கம் வாத்தியார் ஐயா!
    உள்ளேன் ஐயா///

    வருகைப் பதிவு மட்டும் தானா?

    ReplyDelete
  44. ////Blogger kmr.krishnan said...
    //இடது பக்க அருவியில் ஒரு நீண்ட அங்கியும், கண்களை மட்டும் //
    வலதுபக்க அருவியில் என்று வாசிக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்////

    பின்னூட்டத்தில இதெல்லாம் சகஜம் சாமி!

    ReplyDelete
  45. ///Blogger kmr.krishnan said...
    அருவியின் வெள்ளை நிறப் பாகத்தை மட்டும் ஒட்டு மொத்தமாகப் பாருங்கள்.ஒரு கோழியின் பாதி உருவம் தெரிகிறதா? பின்னால் சிறகு விரிந்து, முன்னால் மாரைத் துறுத்திக் கொண்டு ஒரு கோழி!///

    இன்னும் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தீர்கள் என்றால், வறுத்த முழுக் கோழி தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது!:-)))

    ReplyDelete
  46. ////Blogger Sanjai said...
    புரியும்படி எழுதியதால், பயன் கண்டிப்பாக உண்டு :) நன்றி///

    யாருக்கு?//

    எனக்கே புரியும்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன் :)
    உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும் :)

    ReplyDelete
  47. Dear Ayya, I was late to the class. The lesson is simple and easy to understand. And please make my attendance 'present sir'. - Kalai Seattle

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com