மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.1.12

இயற்கையான உணவு எது?


எது இயற்கையான உணவு?
ஆக்கம்: கே முத்துராம கிருஷ்ணன், லால்குடி

உணவு பற்றிய என் கட்டுரையை இந்த வாரமும் தொடர்கிறேன்.

அசைவ உணவை சமைக்காமல் சாப்பிட முடியாது என்று சென்ற பதிவில் கூறியிருந்தேன்.அதற்கு ஜப்பான் மைனர்வாள் எதிர்வினை ஆற்றியிருந்தார்.

ஜப்பானில் குதிரை மாமிசம் உட்பட பல மாமிச வகைகளைப் பச்சையாகவே உண்கின்ற‌னராம். இது எனக்குப் புதிய செய்தியே!உண்மையாகவே ஜப்பானியருக்கு ஜீரண உருப்புக்கள் மிகவும் வலுவுள்ளதாக இருத்தல் வேண்டும்.

கடுகு, முழுதாக விழுங்கப்பட்ட பருப்பு, தக்காளியின் தோல் ஆகியவை வடிவம் மாறாமல் நம் உடலில் இருந்து வெளியேறி விடுகின்றன.அந்த அளவுதான் நமது வயிற்றில் ஊறுகின்ற செரிமான திரவத்தின் வலிமை.அப்படியிருக்கும் போது சமைக்காத அசைவம் எப்ப‌டி ஜப்பானியருக்கு செரிமானம் ஆகிறது என்பது வியப்புக்கு உரியதே! அந்தப் பழக்கத்தால் ஜப்பானியருக்கு சீரண உறுப்புக்களில் ஏற்படும் நோய்கள் பற்றி ஆய்வு நடத்தினாலே நமக்கு சரியான ஒரு முடிவு தெரியவரும்.

மனிதனின் இயற்கை உணவு என்ன?

சிங்கம் புலிக்கு இயற்கையான உணவு மான், மாடு, ஆடு போன்ற‌ தாவர உணவு உண்ணும் சாதுவான விலங்கினங்களே.மான், ஆடு, மாடு போன்ற
மிருக இனம் மறந்தும் அசைவம் உண்பதில்லை.இது போல மனிதனுக்கு எது இயற்கையான உணவு?

ஒரு பார்வை என்னவெனில், எந்த உணவை ஓர் உயிரினம் சமைக்காமல் உண்ண முடியுமோ அதுவே அந்த  உயிரினத்தின் இயற்கை உணவு.

அந்தக் கருத்துப்படி இந்திய அளவிலாவது அசைவம் சமைக்காமல் பச்சையாக மனிதன் உண்பது இல்லை. எனவே இந்திய மக்களுக்கு அசைவம் இயற்கை உணவு ஆகாது. அதேசமயம், சூரியன் என்ற பிரமாண்ட அடுப்பில் இயற்கையாகச் சமைக்கப்பட்ட எல்லா வகைப் பழங்கள், பல காய்கனிகளை மனிதன் சமைக்காமலே உண்ண முடியும். எனவே காய்கனிகள், சில கொட்டைகள், ஆகியவையே இந்திய‌ மனிதனின் இயற்கை உணவு.தானிய வகைகள் கூட இரண்டாம் இடத்தைத்தான் பிடிக்கின்றன.ஏனேனில் தானியங்கள் வேகவைக்கப்பட வேண்டும்.

வங்காளத்தில் பிராமணர்கள் உட்பட அனைவரும் மீன் சாப்பிடுபவர்கள்தான்.

ஒவ்வொரு பிராமணர் வீட்டுப் பின்புறமும் சிறிய குட்டையில் மீன் வளர்க்கப்படும். மடி ஆசாரம் பார்க்கும் மூதாட்டிகள், மீன்களை மடியாகத் தானே பிடித்துவந்து (மற்ற‌வர்கள் பிடித்தால் மீன் தீட்டாகிவிடுமாம்) சமைத்து உண்பார்களாம்.மற்ற வட மாநிலங்களிலும் எல்லா இனத்தாரும் அசைவம் சாப்பிடுவது சகஜமப்பா!

சுவாமி விவேகானந்தர் அசைவம்தான்.(இதைச் சொல்வதால் சுவாமிஜிக்கு நான் இழுக்குத் தேடித் தருகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
யாரலும் மாசுபடுத்த முடியாத ஞான சூரியன் அவர்.) தேசாச்சாரம், குலாச்சாரம் ஆகியவற்றால் அவருக்கு அசைவப் பழக்கம் இருந்தது.

சுவாமிஜி அமெரிக்கா செல்லுமுன் பாரதம் முழுதும் திக்விஜயம் செய்தாரல்லவா? அப்போது அவர் ஒரு தலைமை ஆசிரியரைச் சந்திக்கிறார்.
அவர் தீவிர சைவ உணவுப்பற்றாளர்.சுவாமிஜியோ இந்திய மக்கள் ஆங்கிலேயரால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சத்தால் வாடி வதங்கிக் கிடப்பதை நாடு முழுதும் கண்ணுற்று வருந்தித் திரும்பியிருந்த நேரம்.

ஆம்!இங்கிலாந்தில் உள்ள நூற்பு/நெசவு ஆலைகள் இயங்குவதற்காக‌ இந்தியாவில் உணவுப் பயிர்களை நிறுத்தி, பருத்தியும், சாயத்திற்காக அவுரியும் பயிரிடச் சொல்லி விவசாயிகளை நிர்பந்தப்படுத்தியதால் இந்தியாவில் செயற்கை உணவுப்பஞ்சம் ஆங்கில அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை நேரடியாகவே சுவாமிஜி கண்டும் கேட்டும் உணர்ந்து அதற்கு மாற்றாக மக்கள் அசைவமோ,சைவமோ ஏதோ ஒன்றை உண்டு புஜ வலிமை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சமயம், அந்தத் தலைமை ஆசிரியருடன்  விவாதம் நடத்துகிறார்.

தலைமை ஆசிரியர்:  "மனிதனின் குடல் அமைப்பு பசுவுடையதைப் போல நீளமானது. எல்லா சைவ உணவு உட்கொள்ளும் விலங்கினங்களுக்கும் குடலின் நீளம் அதனுடைய உடலின் உயரத்தினைப் (நீளத்தினைப்)போல் 5,6 பங்கு நீளமுடையதாக இருக்கும். மனிதனுக்கும் அதுபோல நீளமான குடல் இருப்பதால் மனிதனும் பசுவைப் போல‌ சைவ உணவுதான் உண்ண‌ வேண்டும்"

சுவாமிஜி:"அப்போது மனிதனும் பசுவைப் போல புல் வெளியில் சென்று வயிறாற புல்லை மேய்ந்து விட்டு வரலாமே?! பட்டினி பஞ்சம் என்று அல்லல் ஏன் பட வேண்டும்?"

த.. ஆ: "நாம் உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் நம் குணம் அமையும். மிருகக் கொழுப்பினை உண்டால் மிருகத்தைப் போன்ற மனோ நிலை/அறிவுதான் உண்டாகும்."

சு..ஜி:"உங்கள் வாதப்படியே கத்தரிக்காய் உண்டால் கத்தரிக்காய் மன‌மும், அறிவும் வரும்!முட்டைக்கோஸ் உண்டால் அதனுடைய மனமும், அறிவும் உண்டாகும் அல்லவா? எனக்கு கத்தரிக்காய் அறிவைக்காட்டிலும் ஆட்டின் அறிவு இருந்தாலே நல்லது என்று தோன்றுகிறது."

பல இலட்சம் யூதர்களை கொடூரமாகக் கொன்ற சர்வாதிகாரி ஹிட்லர் சுத்த சைவர்! சைவ உணவு அவருக்கு சாந்தியான மனத்தினை அளிக்கவில்லை.இதனை ஒரு 'எக்ஸெப்ஷ'னாகக் கொள்ளலாம்.

அதேபோல அபூர்வமான ஒரு ராட்சச மரம் உள்ளதாம். அது தன்னுடைய அழகான நிறமுடைய மலராலும், மணத்தாலும் பறவைக் கூட்டத்தை கவர்ந்து இழுத்து தன் கிளைகளில் அவை அமர்ந்தவுடன் அப்படியே மடக்கிப் பிடித்து ரத்தததினை உறிஞ்சிக் குடிக்குமாம்!

நகர்ந்து வந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனிதன்,விலங்குகளை கிளைகளால் தூக்கி விழுங்கும் மரங்கள் கூட உள்ளனவாம்.

அசைவம் சாப்பிடும் தாவரங்கள்! வியப்பாக இல்லை?!

மேற்கண்ட விவாதம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அசைவத்தை விட சைவ உண‌வே மனிதனுக்கு ஏற்றது.

அசைவமாக உள்ள மிருகங்கள் ஏன் சைவ உணவு உண்ணும் மாடு, ஆடு, மான் போன்ற‌ விலங்குகளையே அடித்து உண்ணுகின்றன? ஏன் ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தின் சதையை உண்பதில்லை?

அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களுக்கு உடலில் புரோட்டின் உற்பத்திக்கான‌ அமினோ அமிலங்கள் தானாகச் சுரப்பதில்லை. எனவே தங்கள் புரோட்டின் தேவைக்காக சைவ உணவு உண்ணும் விலங்குகளை அடித்துத் தின்கின்றன.

மனிதனுக்கும், மாட்டிற்கும், ஆட்டிற்கும் 22 அமினோ அமிலங்களில் 13 அமிலங்கள் அவர் அவர் உடலிலேயே உற்பத்தி ஆகிவிடுகின்றன‌.மீதம் உள்ள 9 அமிலங்களைத்தான் வெளியில் இருந்து பெற வேண்டும்.எல்லா வகைப் பருப்புக்களும் மனிதன் எடுத்துக்கொண்டால் மிகவும் அவசியமான அமினோ அமிலங்கள் கிடைத்துவிடும்.அதற்கும் மேல் மாட்டுப் பாலும், முட்டையும் போதுமானது.அதற்கு மேல் உயிர்வதை செய்யப்பட வேண்டுவது இல்லை.

எல்லோரும் சைவமாக மாறிவிட்டால் உணவுத் தட்டுப்பாடு வந்துவிடும் என்று கூறுவது ஒரு வெற்று வாதமே!

வர்த்தக ரீதியில் கொல்லப்படுவதற்காகவே வளர்க்கப்படும் பன்றி, ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் தாவர உணவு, மனிதனுக்குத் திருப்பி விடப்பட்டால் உலகின் எந்தப்பகுதியிலுமே உணவுப்பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.

அசைவ உணவில் நாக்கு ருசி கண்டுவிட்டபின் அதனை விட முடியாமல்தான் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

'அஹிம்சோ பரமோ தர்மஹ' என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.
-------------------------------------
"'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற‌
செய்யாமை செய்யாமை நன்று"

என்பார் ஐயன் திருவள்ளுவர்.

2
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
----------------------------------------

ஆட்டினைக் கொல்லும் போது பாவ உணர்ச்சி ஏற்படுகிறது.அதனை ஈடுகட்டவே அதனை ஒரு காளிக்கோ, முனியப்பனுக்கோ, கருப்பண்ணசாமிக்கோ படைத்துவிட்டு  பிரசாதமாக உண்கின்றனர்.

ஓர் ஆப்பிரஹாமிக் மதத்திலும் அராபிய மந்திரம் சொல்லி ஆட்டின் கழுத்தை அறுத்துவிட்டால் பாவம் போய்விடும்!

"என்னதான் சொல்ல வருகிறீர் சுருக்கமாகச் சொல்லி முடியும் அய்யா!"என்று சுனாமி சுவாமிகள் சத்தம் போடுகிறார். சீக்கிரம் பிரவசனத்தை முடிக்கிறேன்.

இந்தப் பரந்த உலகம் மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. பல விலங்கினங்களும் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த பல உயிரனங்கள் இப்போது மனிதனின் பேராசையாலும், அறியாமையாலும் அழிந்து விட்டன. இயற்கைச் சம நிலையைப் பாதுக்காக்கும் காரணத்திற்காகவாவ‌து  விலங்குகளைக் கொல்லாமை, தாவரங்களை அழிக்காமை ஆகியவற்றைக் கைக் கொள்ள வேண்டும்.

40 வயதைக் கடந்தவர்கள் அசைவத்தால் ஏற்படும் நோய்களைப் படித்து அறிந்து, உடல் நலம் கருதியாவது சைவத்துக்கு மாற வேண்டும்.

வணிக ரீதியில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வரும் கோழி, ஆடு போன்றவை இயற்கைக்கு மாறாக அடைபட்டுக் கிடந்து வருவதால் அவற்றின்
உடலில் ஆரோகியமான சுரப்பிகள் இல்லை. நம் உடலுக்குக்கேடு விளைவிக்கும் சுரத்தல்களுடன் அவை வருகின்றன‌.

நம் நாட்டில் ஆடுகள் எந்த விதமான மருத்துவ சோதனையும் இன்றி நாற்சந்தியில் வெட்டப்படுகின்றன.அவை நோயுள்ளவையாக இருக்கலாம்.
ஒரு ஆடு வெட்டப்படுவதைப்பார்த்துக் கொண்டே உயிர்வதை பயத்தில் இருக்கும் மற்றொரு ஆடு வெட்டப்படுகிறது. அந்த இரண்டாவது ஆட்டின் உடல் முழுதும் பலவித 'டாக்ஸின்' பரவி விடும்.

கூடிய வரை சைவம் அதிகமாக உண்ணுங்கள். அசைவத்திற்கு முன்னரும் பின்னரும் நிறைய காய்கனி, கீரை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கு எது ஏற்கிறது, எது ஏற்கவில்லை என்பதை அறிந்து கொண்டு நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் நூறாண்டு வாழ்க‌!

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி) 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
மனிதனின்  மூன்றாம் கண்
ஆக்கம்: தனுசு
 ----------------------------------------
மாயமில்லை மந்திரமில்லை
மகாஜனங்களே!
ஜக்கம்மா சத்தியமா
சொல்வதெல்லாம் உண்மையம்மா!

இணையம் என்றொரு உலகம்
இது மேலோகமல்ல
நாமிருக்கும் பூலோகமுமல்ல
அதுஒரு மந்திர உலகம் .

இறை வாழும் வீட்டுக்கு ஒரு வாசல்
நாம் வாழும் கூட்டுக்கு  இரு வாசல்
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது  வாசல்
உலக தொடர்புக்கு - இந்த
இணையம்  மட்டுமே வாசல்

இதை தொட்டவருக்கு
தூறும்  ஏழாம்அறிவு.
தொடாதவற்கு
வரும் குறை அறிவு.

ஆணும் பெண்ணும் கலந்த கலப்பினம்
கூடுமிடம்  கூத்தாண்டவர்.
ஆணும் பெண்ணும் சகலமும்  அறிய  
தேடுமிடம் கூகுள் ஆண்டவர்.

மங்காத்தா பார்க்க வேண்டுமா
மங்காத்தா ஆட வேண்டுமா
மாரியாத்தா  தரிசனம் வேண்டுமா
மாரி மழை நிலவரம் வேண்டுமா.

ஜெகத்தாரோடு சேர வேண்டுமா?
ஜகன்னாத   ஹோரா வேண்டுமா?
ஜாமத்து "தணிக்கை" வேண்டுமா?
ஜகன்மோகினிகளே வேண்டுமா?

தாயா? தாரமா? தாய்க்குப்பின் தாரமா?
தகவல்களும் கிடைக்கும் தரமா.
தயிரா? வடையா? தயிர்வடையா?
இங்கு தயாரா இருக்கு செய்முறை சரியாய் .

அந்த இந்திரலோகத்தில்
இந்திரனுக்கு மட்டுமே தெரியும்
ரம்பையின் செய்திகள்!
இந்த மந்திரலோகத்தில்
யாவருக்கும் தெரிந்துவிடும்
ரம்பாவின்  செய்திகள்!

உலகை உருட்டி உள்ளங்கையில்  திரட்டி
வராது வந்த மாமணியே
விலைவாசி உயர்வும்  உன்னாலே.
விடலைகள் வீணாவதும் உன்னாலே.  

கண்ணுக்கு தெரியா மறைபொருளே
வித்தை செய்யும் மென்பொருளே
தொழில் நுட்ப உலகின் அணுகுண்டே -உன்
ஆட்டத்தை நல் ஆற்றலுக்கு மட்டுமே அளித்திடு

-தனுசு-  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                   
 3

சிறந்த நிர்வாகியாக இருக்க என்ன தகுதி வேண்டும்?
ஆக்கம்: தேமொழி
-----------------------------------------
[முன் குறிப்பு:
இது நூறு விழுக்காடு உண்மைக்கதை.  உண்மையைத்தவிர வேறு எதையும் உரைக்கவில்லை என்ற உறுதிமொழியைக் கொடுக்கிறேன்.  அத்துடன் இதைப்
படித்து நடைமுறைப் படுத்த நினைத்தால் அது உங்கள் சொந்த விருப்பம், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறேன்.]

நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.  ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள  விரும்புபவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வகுப்பு.  சேரும் மாணவர்களுக்கோ படித்து தகுதியை வளர்த்துக் கொள்ள ஆசை.  ஆனால் அதற்காக வேலையையும்   விடமுடியாத சூழ்நிலை.  அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கூட்டத்தை சேர்ந்தவர்களுக்காக, மீசை நனையாமல் கூழ் குடிப்பதற்கென்று  வடிவமைக்கப் பட்ட சிறப்பு "உறிஞ்சு குழல்" வகுப்பு.  அனைவரின் வசதியையையும்  உத்தேசித்து பணி முடிந்து வந்த பின் மாலை வேலைகளில் வகுப்பு மூன்று மணி நேரம் தொடர்ந்து நடக்கும்.  வகுப்பு ஆசிரியர்களும் நகரில் உள்ள பெரிய நிறுவனங்களில் மேலதிகாரி களாக இருப்பார்கள், அதுதான் அவர்களின்  மிக… மிக… முக்கியத் தகுதி.

அந்த ஆசிரியர்கள் தாங்கள் செயல்முறையில் அறிந்தவற்றையும் இணைத்து உதாரணங்களுடன் பாடத்தை நடத்துவதால் வெறும் "ஏட்டுச் சுரைக்காய்" போல் இல்லாமல் வகுப்பு உற்சாகமாகப் போகும்.  மாணவர்களும் கல்வி கற்கும் ஆர்வத்தில் உள்ளவர்களாதாலால் தவறாமல் வந்துவிடுவார்கள்.  ஆனால் வேலை முடிந்து ஓய்வு எடுக்கும் நேரத்தை வகுப்பில் செலவழிப் பதால் அனைவரும் அலுத்து சலித்து விளக்கெண்ணை குடித்தவர்கள் போல் அமர்ந்திருப்போம்.  சின்ன  வயதில் பெற்றோர்கள் செலவழித்த பொழுது கல்லூரியில் வகுப்புக்கு மட்டம் போட்டவர்கள், திரைப்படத்திற்கு சென்றவர்கள் எல்லோரும், சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் பொழுது தவறாமல் வகுப்புக்கு வருவது காலம் செய்த கோலம்.  முதுநிலை வகுப்பென்பதால் மாணவர்களின் எண்ணிக்கை  இருபதுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

அன்று நடந்த வகுப்பை எடுத்தவர் மிகப்பெருமை வாய்ந்த பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  அத்துடன் நாட்டின் மிகப்பிரபலமான
நிறுவனத்தின் உயர் அதிகாரியாகவும் இருப்பவர்.  அதாவது பேரன்பிற்குரிய நம் அப்துல் கலாம் ஐயா போன்று என வைத்துக் கொள்ளுங்கள்.  அவர்
வகுப்பில் இடம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல.  வகுப்பிற்கு பதிவு செய்யும் நாளில் அடித்துப் பிடித்து செய்துவிட வேண்டும்.  இல்லாவிட்டால் அந்த
வகுப்பிற்காக காத்திருந்து ஒரு ஆண்டு விரயமாகிவிடும்.  அவரைப் பற்றிய இந்த நீண்ட முன்னுரை அவர் மேன்மையை, முக்கியத்துவத்தை தெரிந்து
கொள்வதற்காக கொடுக்கப்பட்டது.  அவரது பெருமை தெரிந்தால்தானே அவர் சொன்ன கருத்து எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

இப்பொழுது வகுப்பிற்கு போவோம். வகுப்பு ஆரம்பித்து சிறிது நேர பாடத்திற்கு பிறகு ஆசிரியர் ஃப்ராங்க் (இது அவர் முழுப் பெயர் அல்ல) கேட்டார்.

"சிறந்த நிர்வாகியாக இருக்க ஒருவருக்கு  என்ன தகுதி வேண்டும், எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்.  முதல் வரிசையில் இருப்பவரில் இருந்து
ஆரம்பிக்கலாம், எங்கே நீங்கள் சொல்லுங்கள்,  என்ன தகுதி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று முதல் மாணவரிடம் கேட்டார்.

"தன்னம்பிக்கை"

ஃப்ராங்க் இல்லை என்று தலை அசைத்து அடுத்தவரைப் பார்த்தார்.  இதற்குள் நாங்கள் சிறந்த நிர்வாகியின் தகுதி என பொதுவாக வழக்கில் உள்ள
தகுதிகளையோ  அல்லது இதுவரை பாடத்தில் படித்ததையோ மனதில் தேர்வு செய்து கொண்டோம்.

"வழிகாட்டி செல்லும் திறன்"
"இல்லை, அடுத்து?"

"அனுசரித்துப் போகும் குணம்"
"ம்ஹூம்"

"வசீகரிக்கும் குணம்"
"அதிகாரம் செலுத்தும் திறமை"
"பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் பண்பு"
"முடிவெடுக்கும் திறமை"
"நிறைய பணம்"
"எதற்கும் கலங்காத மனம்"
"நிர்வாகயியல்  பட்டம்"
"சிரித்த முகம்"
"மோசமான சூழ்நிலையிலும் பொறுப்பேற்பது"
"எதிர்த்து நிற்கும் குணம்"
"பொறுமை"
"புத்திசாலித்தனம்"
"திறமையான ஊழியர்களை திருப்தியுடன் வைத்துக் கொள்வது"
"ஊழியர்களை மனிதர்களாக மதிப்பது"
"தகுதியற்றவர்களை வெளியேற்றுவது'

வரிசையாக நாங்களும் சொல்லிக்கொண்டே போனோம்.

ஃப்ராங்க்கோ "ஆமாம் சாமி" என்பதற்கு எதிர்ப்பதமாக "இல்லை சாமி"யாகிப் போனார்.   இதைப் படிக்கும் நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தகுதியை இங்கே
சொல்லுங்கள்.  நிச்சயம் அந்த பதிலும் சரியான பதிலாக இருக்காது.  வகுப்பில் உள்ள அனைவரும் ஒரு சுற்று பதில் சொல்லியாகிவிட்டது.   ஃப்ராங்க்ற்கு
திருப்தியில்லை.

"உங்களுக்கு யோசிக்க மேலும் அவகாசம் வேண்டுமா?"
"ஆமாம்"
"சரி, பத்து மணித்துளிகள் எடுத்துக் கொள்ளுங்கள்"

எங்களை தனியே விட்டுவிட்டு ஃப்ராங்க் வெளியில் சென்று அறைக்கு வெளியே தாழ்வாரத்தின் கைப்பிடியைப் பிடித்தவாறு வானத்தை வெறித்து நோக்கினார். 

எளிதான பதில் கூட தெரியாத இந்தக் கூட்டம் எப்படி நிர்வாகயியலில் தேறப் போகிறது என நினைத்தாரா, இல்லை அவர் சரியாக பாடம் நடத்தவில்லை எனதன்னையே நொந்து கொண்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.  நானும் நம் கணித நூல்களில் விடைப்பக்கம் இருக்குமே அதுபோல அந்த புத்தகத் திலும்  கடைசியில் ஏதாவது இருக்குமா எனத் தேடிப்பார்த்தேன்.  அந்தக் கவைக்குதவாத புத்தகத்தில் அப்படி ஒன்றையும் காணோம்.  சில மாணவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  வகுப்பில் மடிக்கணினி, இணைய இணைப்பு, கைபேசி இல்லாத காலம் என்பதால் கூகிளில் தேடி பதில் கண்டுபிடிக்க முடியாத நிலை.

மீண்டும் உள்ளே வந்த ஃப்ராங்க் இப்பொழுது இந்தக் கோடியில் இருந்து ஆரம்பித்தார்.  நாங்களும் பதில்களை மாற்றி சொன்னோம், ஆனால் அடுத்தவர்கள்

சொன்ன பதில்களின் மறுசுழற்சிதான்.  ஃப்ராங்க் வெறுப்பேறி பாதியிலேயே நிறுத்தச் சொன்னார்.

"உங்களால் சரியான பதில் சொல்ல முடியாது எனப் புரிகிறது.  நேரத்தை வீணடிப்பானேன், உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன்," என்றவர் தான் கொண்டு

வந்த கோப்பிலிருந்து ஒரு செய்தித்தாளின் சில நகல்களை உருவினார்.  வரிசைக்கு ஒன்றாக ஒரு நகல் கொடுத்தார்.

அது ஞாயிறன்று வரும் செய்தித்தாளின் கேலிச் சித்திரங்கள் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டது.  'ப்லான்டி' (Blondie) என்ற நகைச்சுவை சித்திரக் கதை

அதில் சித்தரிக்கப் பட்டிருந்தது.  கதைப்படி ப்லான்டியின் கணவன் 'டேக்வுட்  பம்ஸ்டட்' (Dagwood Bumstead)  ஒரு சாப்பாட்டுராமன், சோம்பேறி, தூங்குமூஞ்சி
பெரும்பாலான கதைகளில் அவன் சோஃபாவில் படுத்து தூங்கியவாறுதான் இருப்பான் (இந்த விளக்கம், அந்தக் கதைகளைப் படிக்காத யாராவது ஓரிருவர்
இருந்தால் அவர்களுக்காக கொடுக்கப் பட்டது).

அவர் கொடுத்த நகலில் இருந்த கதையும் அது போல ஒன்றுதான்.  வீட்டில் மனைவி, மகன், மகள் என ஒவ்வொருவரும் வந்து டேக்வுட்டிடம் உதவி
கேட்பார்கள் அல்லது ஏதாவது ஒரு வேலையைக் கொடுப்பார்கள்.  நம் கதாநாயகனோ, இதோ செய்கிறேன் ...இதோ செய்கிறேன் என்று படுத்தே கிடப்பான். 

ஒவ்வொருவராக பொறுத்திருந்து பார்த்து விட்டு பிறகு அவர்களே தங்கள் வேலையை முடித்துக் கொள்வார்கள்.  அதே கதையின் சுட்டி கிடைக்க வில்லை,

ஆனால் அதே போன்ற மற்றொரு கதையின் சுட்டி இங்கே:
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQu-FUSADX7Gsfw7s1EZLnrfBNlwnP2kyXBAHNxMCBXAwcnMcQZ 

அதைப் படித்துவிட்டு நாங்கள் குழப்பத்துடன் ஃப்ராங்க்கின் முகத்தைப் பார்த்தோம்.  அவர் சிரித்தவாரே எங்களிடம் சொன்னார், "இப்பொழுது புரிகிறதா சிறந்த நிர்வாகியாக, மற்றவர்களை வேலை வாங்குவதற்கு என்ன தகுதி வேண்டும் என்று?  நீங்கள் ஒரு "சோம்பேறி"யாக இருக்க வேண்டும்.  இந்த ஆளிடம் சொல்வதற்கு நானே செய்துவிடலாம் என நினைப்பவர்கள் அடுத்தவர்களை வேலை வாங்கும் தகுதி இல்லாதவர்கள்."

[பின் குறிப்பு: எதற்கும் நான் முதலில் கொடுத்த எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்களேன்]

செயல்முறை பகுதி/உதவி:
அடுத்தவரை வேலை வாங்க சில யுக்திகள்:
(1)
இது சிங்கப்பூரின் "ஒலி" பண்பலை  வானொலியில் கேட்டது, நிகழ்ச்சி தொகுப்பாளார்கள் எனக்குப் பிடித்த பி. என். பாலாவும் மற்றொரு பெண்மணியும் என நினைக்கிறேன்.  ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதால் சரியாக நினைவில்லை.  வீட்டில் உங்களுக்கு கணவர் கைவேலை களில் உதவியாகஇருப்பாரா? என்பதைப் பற்றிய நேயர்களின் கருத்து நிகழ்ச்சி.  அதில் ஒரு பெண்மணி நிகழ்ச்சியின் தொகுப்பாளரிடம்  கூறியது.

"எங்க வீட்டுக்காரர் எனக்கு நல்லா உதவி செய்வாருங்க"

"அட, அப்படியாம்மா ...நீங்க கொடுத்து வச்சவங்கதான்.  எப்படி செய்வார், என்னென்ன உதவி செய்வார் ...இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்"

"அதுவாங்க,  அது வந்து… அவருக்கு எல்லா வேலையையும் அழகா, நறுவிசா செய்யனுங்க.  அவரும் எது செஞ்சாலும் நல்லா நேர்த்தியா செய்வாரு. 

எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தெரியாதுங்க.  ஏதோ கசா முசான்னு காரியத்த பண்ணி முடிச்சுடுவேன்.  அதப் பார்க்க அவருக்குப் பொறுக்காது.  சரி நீ சும்மா இரு, நானே செஞ்சு தரேன்னு சொல்லிட்டு, அவரே செஞ்சு முடிச்சிடுவாரு".


(2)
இந்த யுக்தி என் தம்பி என் அம்மாவிடம் உப்பயோகித்தது.  இப்பொழுது மனைவியிடம் இது செல்லுபடியாகவில்லை என நினைக்கிறேன்.  அதாவது ஒரு வேலை கொடுத்தால், செய்வதற்கு முன், கேள்வி மேல் கேள்வியாக ஒரு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு உயிரை எடுக்கவேண்டும்.

"தம்பி, காய்காரம்மா வரல, சைக்கிள எடுத்திட்டு சீக்கிரமா கொஞ்சம் கடைக்குப் போய் இந்த லிஸ்ட்ல இருக்கிறத வாங்கிட்டு வாயேன்"

"ஏன் சைகிள்ளதான் போகனுமா, என் டூ வீலர்ல போகக் கூடாதா?"

நீ எதுலயோ போய்க்க, ஆனா சீக்கிரமா வா, பாத்து வாங்கு... பழசு, பூச்சி இருக்கிறதெல்லாம் வாங்கிட்டு வராத"

"ஏன், அதையும் லிஸ்ட் மேலேயே எழுதிடுங்களேன், கடைக்காரன் பாத்துட்டு நல்லா காயா தருவான்ல, எனக்கு எப்படி பாத்து வாங்கறதுன்னு தெரியாது"

"அவங்கள நம்ப வேண்டாம், ஃப்ரெஷா இருக்கான்னு நீயே பாரு.  அப்படியே சின்ன வெங்காயம் நல்லா இல்லன்னா கைய வீசிக்கிட்டு வந்திடாத, பெரிய

வெங்காயமாவது வாங்கிட்டு வா?

"பெரிய வெங்காயம்னா என்ன அளவு?

"அதே அளவுதான், இது ஒரு கிலோன்ன அதுவும் ஒரு கிலோதான்.  சீக்கிரம் போ, சமைக்க நேரம்  ஆவுதுல்ல"

"ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போகவா? அதுக்குள்ள இந்த கேம் முடிஞ்சுடும்."

"நீ பத்து நிமிஷம்னா எவ்வளவு நேரம் எடுதுப்பேன்னு எனக்குத் தெரியும்,  உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு, என் புத்தியத்தான் சொல்லனும், தொண்ட
தண்ணி வத்தினதுதான் மிச்சம், நான் வேலைக்காரிய அனுப்பிக்கிறேன்"

-ஆக்கம்: தேமொழி 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4

எவன் நீந்திக் கரை ஏறுவான்?
ஆக்கம்: ஆலாசியம் கோ. சிங்கப்பூர்

பக்தனில் நான்கு வகை அதில் எந்த வகை நீ என்று கூறு?

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தவர்.

கற்றதனால் ஆயப் பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இவைகள் தெய்வப் புலவர் எழுதிய உலகப் பொதுமறை... என்னைப் போன்ற பெரும்பாலோர் இதைப் படித்தும்; இன்னும் சிலரோ இவற்றை அறிந்தும்; மிகச் சிலரோ இவற்றை உணந்தும் இருப்பார்கள்.

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,"

என்கிறார் மாணிக்க வாசகனார்.... அப்படிப் பிறந்து பெரிதும் முயன்று "அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற அவ்வை வாக்கிகிற்கு இணங்க அறிய மானிடப் பிறப்பை பெற்ற மானிடர்களாகிய....

நாம் கொண்டுவத நியதி (கர்மம்) என்னவோ?
நமது கடமை எதுவோ?
நமது லட்சியம் என்னவோ?

கர்மத்தை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனுபவிக்க வேண்டும் அது நியதி...

நமது கடமைகளாவன... மகனாய் (மாணவனாய்), கணவனாய், தந்தையாய் இப்படி பல வேசங்கள் கொண்டாலும் ஒரு மனிதனாய் நமக்கு இருக்கும் கடமைகள் யாவன?...

எத்தனையோப் பிறவிகளைக் கடந்து வந்தோம் இப்போது விடுதலைக்கு தகுதியான பிறவியில் இருக்கிறோம்... கர்மத்தை அனுபவித்துக் கொண்டே, கடமைகளைச் செய்து கொண்டே....

"மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்"

விடுதலை சிந்தனையையும் விதைக்கின்றோமா?

ஒவ்வொரு மனிதனும் நான் விடுதலைப் பெறவேண்டும் என்ற எண்ணத்திலே தான் தெரிந்தோ தெரியாமலோ, அவற்றை உணர்ந்தோ உணராமலோ பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றோம்...

நான் விடுதலைப் பெறவேண்டும் ஆமாம், அந்த நான் எங்கே? அது எப்படி இருக்கிறது... நான் நானாகத்தானே இருக்கிறேன் அது எப்படி விடுதலைப் பெற முடியும், அது என்ன விடுதலை... நான் சுதந்திரமாகத் தானே இருக்கிறேன்! என்றால் அது அல்ல என்கிறார்கள் மகான்கள்...

நான் என்பது அந்தப் பேரொளியின் மிகச் சிறிய அணுவினும் சிறிய ஒருத் துளியே! அது போட்டுக் கழட்டும் சட்டையைப் போன்றதே இந்த உடல்...

அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேரவேண்டும். அப்படி சென்று சேர்வதே விடுதலை/ வீடுபேறு / மோட்சம் / முக்தி என்று பலவாறு சொல்கிறார்கள்...

இதை தான் வள்ளுவர் "பிறவிப் பெருங்கடல் நீந்துவார்" என்றார்...

சரி, இப்போது விசயத்திற்கு வருவோம்.... "பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டும்"  அதற்கு எல்லாம் வல்ல இறைவனையே மனத்தாலும் சிந்தனையாலும் கனிந்து கசிந்துருகிப் போற்றி அவனின் அருளால் அவன் தாள் பணிந்து அவனோடு கலப்பது என்பதே... அப்படி அது நிகழ ஒருவிநாடிப் போதுமாம்....
அந்த பேருண்மையோடு கலக்கும் ஒருவினாடி பொழுது வரத்தான் எத்தனை கோடிப் பிறவிகளோ? அல்லது இப்பிறவி தானோ? யார் அறிவார் அவனை அன்றி...

இருந்தும் ஒலிம்பிக்கிலே ஓடப்போகும் யாவரும் தான் தான் அந்த தங்க பதக்கத்தைப் பெறப் போகிறேன் என்ற முழு நம்பிக்கையிலேத் தான் போகிறார்கள்... அதிலே எவன் அனைவரையும் விட அதிகமாக முயல்கிறானோ அவனுக்கு ஆண்டவன் அருளோடு அது வழங்கப் படுகிறது.... ஆமாம், தடுக்கி விழாமல் ஓடுவது என்னமோ அவன் கையில் இல்லையல்லவா!...

தடுக்கி விழச் செய்வது என்னவோ ஆண்டவன் செயல் அல்ல... இருந்தும் விழாமல் தாங்கிப் பிடிப்பது அவனின் அருளால் அல்லவா!

"கேளுங்கள் தரப்பட்டு தட்டுங்கள் திறக்கப் படும்" என்றார் ஏசு பெருமான்.

சரி இன்னும் விசயத்திற்கு வரவில்லை....

இறைவழிபாடு நாம் பெரும்பாலோரும் செய்கிறோம்.... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோரிக்கை... அது அவரவர் தேவைக்குத் தகுந்த மாதிரி... அதிலே தவறொன்றும் இல்லை... என்ன நியாயமான ஆசைக்கு, தனக்குத் தகுதி இருக்கிறது நான் தானே சரியான ஆள் என்று அவனிடம் உரிமையோடு கேட்பதும், அவனிடம் பணிந்து, மரியாதையாகவும், கொஞ்சி கெஞ்சிக் காதல் கடிதமெல்லாம் எழுதியும் கேட்பதும் ஒருவகை...

அதிலே இன்னொரு பரிதாபமான ஒரு முறை இன்று பலரும் செய்வது.... அவனையே ஒரு வியாபாரியாக்குவது... ஒரு இடைத்தரகராக்குவது.... இது எப்படி என்றால் பெரும்பாலும் தனக்குத் தகுதி இல்லை என்று முழுமையாக நம்புபவர்களே இதைச் செய்கிறார்கள்... அந்தக் கூத்தை எல்லாம் நாம் யாவரும் அறிந்ததே!

வழிபடுபவர்களின் வேண்டுதலைப் பொறுத்து அதாவது அவர்கள் வேண்டும் பொருளைப் பொறுத்து நான்கு வகையாக பிரித்து கூறுகிறார்...பகவத் கீதையிலே பகவான் கிருஷ்ணர். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸூக்ருதிநோர்ஜூந |
ஆர்தோ ஜிஜ்ஞாஸூரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||
(கீதா 7:16)

பரதகுலச்செம்மலே அர்ஜுன!... உலகியல் பொருட்களைப் பெறவேண்டி வழிபடுபவன், துன்பமடைந்தவன்,எனது பேருண்மையை அறிய ஆவலுடையவன், மேலும் மெஞ்ஞானம் பெற்றவன் ஆகிய நான்குவிதமான: நற்செயல்களைச் செய்கின்றவர்களாவான பக்தியுடைய மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள்....

(இந்த மேற்கூறிய நால்வரில் நாமும் அடங்க வேண்டுமென்றால் அதற்கு முதன்மைத் தகுதி எனச் சொல்லப் படுவது "நற்செயல்கள்" இதை கொள்ளாது இந்த அடிப்படைத் தகுதி இல்லாது நமது மனு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடியாகும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்...
அப்படிஎன்றால் பக்தி வியாபாரிகளின் கதி, அதாவது பகவானிடம் பேரம் பேசுபவர்களின் கதி? அதோகதி தான் என்பதை நான் சொல்லாமல் யாவரும் உணரலாம்).

'ஸூக்ருதிந' என்ற சொல்லுக்குப் பொருள்?
முந்தையப் பிறவிகளில் நற்செயல்கள் செய்து,

(மனிதப் பிறவியே நற்கதி தான் அதில் நாம் அனுபவிக்கும் தீய / நல்லக் கருமங்களை அதனால் விளையும் பலனை அனுபத்துக் கொண்டு போகிறோம்... இங்கே கவனம் தேவை என்னவென்றால் இதை சமாளிக்க போருக்க முடியாமல் தீவினையை மீண்டும் இப்பிறவியிலே செய்யாமல் இருப்பதே உத்தமம்)   

எவர்களுடைய இயல்பு சீர்திருத்தி நற்கர்மப் போக்குடையதாக ஆகிவிட்டதோ....

முந்தய மனப்பதிவுகளின் ப்ரபாவத்தினால் அல்லது மகான்களின் இணக்கத்தினால், எவர்கள் இப்பிறவியிலும் பகவானின் ஆணைப்படி நற்செயல்களையே செய்கிறார்களோ
(எங்கும், இயற்கையில் இருக்கிறான், நமக்குள்ளும் இருக்கிறான் அங்கிருந்து பிறக்கிறது ஆணை)
அவர்களே 'ஸூக்ருதிந' (நற்செயல் புரிவோர்) என்கிறார் பகவான்.

மேற்கூரியக் காரணத்தால் பகவானிடம் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு வழிபாடு செய்யும் பக்தர்கள் மேற்கூறிய நான்கு வகையினர்களும் இந்த 'ஸூக்ருதிந' என்பவர்களே...

நால் வகையினர்....

'அர்தாத்தீ' => மனைவி, மக்கள், செல்வம், மதிப்பு, பெருமை, புகழ், சுவர்க்க சுகம்
(இது விவாதத்திற்கு உரியது என்பதைவிட நடைமுறையில் தவறான விளக்கத்தில் புரிந்துக் கொள்ளப் படுகிறது)
முதலிய இஹலோக, பரலோக போகங்களில் ஏதாவது ஒன்றிலோ, பலவற்றிலோ விருப்பம் உள்ள மனிதன் அந்த ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, பகவான் ஒருவரையே முழுமையாக நம்பி மிகவும் சிரத்தையுடன், பகவான் நிச்சயம் நமது ஆசையைப் பூர்த்தி செய்வார் என்று முழு நம்பிக்கையுடன் அவனைத் தொழுபவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.... இதற்கு உதாரணமாக பெரியவர்கள் கூறுவது.. விபீசனனையும், சுக்ரீவனனையும்...

(இந்தக் கதை மாந்தர்களின் வாழ்வைப் போன்றது எனக் கொள்ளுங்களேன்)

இக்கால மக்கள் நம்மில் பலரும்; இவ்வகை அதிலும் நமது அரசியல் வாதிகள் தான் இதிலே முன்னிலை.... ஆனால் அவர்களின் மனு தள்ளுபடியாகாது இருக்க வேண்டும்?!!...

அதற்கு நற்செயல்கள் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.. ஆனால்... எங்கே உணர்கிறார்கள்!

'ஆர்த்த' => உடலிலோ மனதிலோ ஏற்படும் வேதனையாலோ, ஆபத்து, எதிரிகளின் மேல் உள்ள பயம், நோய், அவமானம், திருட்டு பயம், கொள்ளையடித்துக் கொலை செய்பவர்களால் பயம், கொடிய விலங்குகளிடம் ஏற்பட்ட பயம் என்று இன்னும் பல மனத் துயரங்களில் இருந்து விடுபட மிகவும், சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும், தகுதியுடனும் (நற்செயல்கள் செய்பவராக இருப்பது) இருந்து வேண்டிப் பெறுவது...

(இதற்கு உதாரணம்: திவாரகையில் வசிப்பவனே, கோவிந்தா! கிருஷ்ணா! வாசுதேவா என்று அபயக் குரல் கொடுத்து அவனையே முழுமையாக நம்பி, சிரத்தனையுடன்.... முழுமையாக நம்பி ஆமாம் அதனால் தான் அவள் தனது இரு கரங்களையும் தனது ஆடையைப் பற்றிப் பிடிக்காமல் விடுத்து தனது தலைக்கு மேலே கைகளை உயர்த்தி! மகாகவி சொல்வான்...

ஹரி ஹரி என்றாள் - கண்ணா
அபயம் அபயம் உனக்கபயம் என்றாள்
----------------------------------------------------
---------------------------------------------------
ஐயநின் பதமலே சரண்
ஹரஹரி! ஹரிஹரி! ஹரிஎன்றாள்..

அந்த அளவிற்கு முழு நபிக்கையுடன் அவனை சரணடைய வேண்டுமாம்.)

'ஜிஜ்ஞாஸூ' => அவனது பேருண்மையை அறிய ஆவலுடைய பக்தன். இவன் மேற்கூறிய மனைவி-மக்கள், செல்வம், வீடு முதலிய பொருட்களையும், அதற்கு அடுத்துக் கூறிய பயம், தோல்வி, வேதனை என்பன எல்லாவற்றையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாமல்... பரமாத்மாவை உண்மையாக அறிய வேண்டும் என்ற இந்த ஒரே ஒரு விருப்போடு, ஒருமித்த மனத்துடன், பகவானிடம் பக்தி செலுத்தி எப்படி சிரத்தையும், முழு நம்பிக்கையுடன் கூடிய அன்பை செலுத்தி அவனை... அந்தப் பேருண்மையை அறிய முயல்பவர்களே இந்த 'ஜிஜ்ஞாஸூ' என்னும் மூன்றாம் வகையினர் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா!...

‘ஞானியான’ பக்தன் => எவர்கள் பரமாத்மாவை அடைந்துவிட்டார்களோ! எவர்களுடைய நோக்கில் பரமாத்மா மட்டுமே காணப்படுகிறாரோ, பரமாத்மாவைத் தவிர வேறெதுவும் இல்லையோ, இவ்வாறு பரமாத்மாவை அடைந்த பிறகு… 

(பேரொளியில் கலத்தல் அத்வைதம், அருகில் அமர்தல் பாதமலராதல் துவைதம் / அருகில் அமர்தல் என்பது விவாதித்த ஒன்று அத்வைதி அதில் இங்கே சற்று வேறுபடுகிறான்... காரணம் அதற்கு உருவம் தந்துப் பொருள் என்றுக் கொண்டால்?! அது ஒரு இடத்திலே இருப்பதாக கொண்டால்?!... ஆதி அந்தம் இல்லாத எங்கும் பரவி இருக்கும் பரமாத்மா அருகில் அமர்வது என்பது அவர்தம் கருத்து வேறுபடுவதால்!)

இங்கே தான் தெய்வம், கடவுள், இறைவன் என்றக் கருத்து பேசப் படவேண்டும்!...

(எங்கெங்கு காணினும் சக்தியடா! ஆமாம், எங்கும் சக்தியை நிறைத்து அந்த தெய்வ சக்தியால் பிரபஞ்சத்தை இயக்குகிறான்.... அவனே அனைத்து உயிருக்குள்ளும் ஆன்மாவாக இருக்கிறான்... அதாவது உள்ளே கிடப்பவன்... உள்ளக் கிடப்பில் ஒரு சிறு இடத்தில் உறங்கிக் கிடப்பவன் அவனை காண உள்ளேக் கடந்து செல்லவேண்டும்... உள்கட ...உள்கட... அவனே அந்தக் கடவுள்.... அவன் வேறெங்கும் இருக்கும் அவனே நம்முள்ளும் இருக்கும் கடவுள்.... மனம் என்னும் திரை மறைத்து இருக்கும் அந்த ஆத்மாவை காண, மனம் என்னும் திரை விலக வேண்டும் / இப்படியும் கொள்ளலாம்... மனம் என்னும் கண்ணாடி தெளிவாக இருந்தால் ஆத்மா தனது சுயத்தை வெளிப்படுத்தும் என்று... இவைகள் வேதாந்தம் கூறுவதாக நமது இளைஞர் தளபதி விவேகானந்தர் கூறுகிறார்).

சரி, அப்படி என்றால் இறைவன் தான் யார்? அவன்தான் இந்த பிரபஞ்சத்தை தனது யோகசித்தியால் தனது ஒருதுளியாக தன்னில் ஒரு இடத்திலே தாங்கியுள்ளான் என்று கீதையிலே கிருஷ்ணர் கூறுகிறார்.....

இதப் பிரபஞ்சமே ஒரு துளி தானாம்... அப்படிஎன்றால் அவன் எவ்வளவுப் பெரியவன்.... அது தான் ஆதி அந்தம் இல்லாதவனாயிற்றே....

இதைதான் நமது 'விசு ஐயர்' அவர்கள் பலநேரங்களில் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்... உண்மையில் இது ஒரு பெரிய கட்டுரையாக விரித்து விளக்க வேண்டியதும்.. அதற்கு முன்பே சில அடிப்படை 'அகர' 'ககர' வரிசைகளைப் படிப்பவருக்கே அது புரியும் என்று நினைத்து எங்கே எப்படி ஆரம்பிப்பது அல்லது எப்போது ஆரம்பிப்பது என்றே அமைதி காக்கிறார் என்றே நம்புகிறேன்).

சரி, விசயத்திற்கு வருவோம்....
அடைந்தப் பிறகு...எவர்களுடைய எல்லா ஆசைகளும் இல்லாமல்; எஞ்சி நில்லாமல் சென்றுவிட்டதோ, அப்படிப்பட்ட நிலையில் எவர்கள் இயல்பாகவே பரமாத்மாவை வழிபடுகிறார்களோ! அவர்கள் இந்தவகை ஞானிகள்… 
(ஜீவன் முக்தி பெற்றவர்கள் / அழைப்பிற்காகக் காத்திருப்பவர்கள்)

இவர்களில் உதாரணம் நாரதர், பீஷ்மர்...  பிரகலாதன்…

(பிரகலாதன் இவன் கருவிலே ஞானம் பெற்றவனாம் / இது சமீப அறிவியல் இப்பொது தான் ஒத்துக் கொள்கிறது, கருவில் இருக்கும் குழந்தை தாயினை உணரமுடிகிறது என்று)

நமது நாயன்மார்களும், ஆழ்வார்களும்..... இன்னும் சொன்னால், நமது நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஷேசாஷ்திரி சுவாமிகள், ரமண  மகரிஷி, மகாத்மா காந்தி என்று பட்டியலிடலாம்....

பகவான் கூறிய இந்த நான்குப் பிரிவுகளில் முதலாமவனை விட இரண்டாமவனும் அவர்களைவிட மூன்றாமவனும் இவர்கள் மூவரையும் விட நான்காமவனான ஞானியே சிறந்தவன்...

ஆம், வேதாந்தக் கருத்துப்படி அவனே ஜீவன் முக்தன் அவனே பிறவியென்னும் பிறவிப் பெருங்கடலைக் கடந்தவன்.

ஆக, இறைவனைப் பற்றிய அறிவு படித்தமையால் நாமும் முக்தி பெற்றுவிடுவோமா? என்றால்..

கற்றதனால் ஆயப் பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

'கடவுளையும், எல்லாம் அறிந்த அவரது தன்மையையும் பற்றி நாம் அறிந்தவற்றின் தொகுப்பே வேதங்கள்' நான் 'வேதங்களைத் துறக்கிறேன்' என்பது  வேதாந்த தத்துவத்தின் கடைசி வார்த்தை என்பர்... மதப் பிரிவுகளும், சடங்குகளும், நூல்களும், மனிதன் தன உண்மை இயல்பை உணர்ந்துக் கொள்வதற்கு உதவுகின்றன. அதன் பிறகு அவைகள் அவனுக்கு தேவையற்றவைகளாகின்றன என்பார்.

'மாறாத ஒன்றை அறிய உதவுவதே உண்மையானக் கல்வி, படிப்பாலோ, நம்பிக்கையாலோ, ஆராய்ச்சியாலோ, அதைப் பெற முடியாது; அது உணர்வு கடந்த நிலையிலும், சமாதி நிலையிலும் பெறக் கூடிய ஒன்றாம். அந்த நிலையை ஒருவன் அடையும் பொது அவன் சகுனக் கடவுள் நிலையை (தெய்வம்) நிலையை அடைகிறான்; நானும் என்பிதாவும் ஒன்றே; தனிப் பரம்பொருளான பிரமத்துடன் (இறைவனுடன்) தான் ஒன்றி இருப்பதை அவன் அறிகிறான். சகுனக் கடவுள் ஆகிறான் என்பார் சுவாமி விவேகானதர்.

இங்கே நாம் தெரிந்து, அறிந்து, உணர்ந்து.....

'நான்' என்னும் ஆன்மாவை விடுதலை செய்ய வேண்டியதே மனித பிறவியின் லட்சியம்....

(லட்சியம் ஒருபக்கம் இருக்கட்டும்... அதற்கு முன்பாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் அல்லது எந்த வகையில் இருக்கிறோம்...

முதலாம் நிலை.... நாற்பதுக்குலாகவாது முற்றுப் பெறவேண்டும்... இரண்டாவது அறுபதுக் குள்ளாகவாவது முற்றுப் பெற வேண்டும்.... அடுத்த இரண்டும் ஆயுளுக்குள் நிச்சயம் நிகழும்...

பேரொளியில் கலக்கும் ஒரே ஒரு முதல் வினாடி வெகு தூரம் இல்லை... என்று இறைவனின் மேல் உள்ள பிரேமையுடன், முழு நம்பிக்கையுடன் முயன்றால் விடுதலை உறுதியே....)

நமது நிலையும், தேவையும் அறிந்து... தகுதியை உயர்த்தி அந்த உயரிய லட்சியத்தை நோக்கி முயலுவோம்...

“சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தேத் தீருவேன்” என்றார் திலகர்.

அவரும் அந்த கீதையின் சாரத்தை ஒரே வரியில் கொண்டு வந்தே அதை நாட்டு விடுதலைக்கும் கூறி இருப்பார் போலும். ஆக அதன் உண்மையான அர்த்தம் இந்த ஆன்ம விடுதலையே...

(பாரதியின் வரிசையில் முதலில் வருவது நாட்டு விடுதலை, அடுத்ததாக பெண்களின் விடுதலை, இவைகள் சாத்தியம் என்ற பிறகு ஆன்ம விடுதலை சாத்தியம் அப்படி சாத்தியம் ஆனபோது அதை இந்தியா இந்த உலகிற்கு அளிக்கும் என்று உறுதியுடன் விவேகானந்தரை போலவே பாரதி கூறுகிறான்...)

பிறந்தோம்; மடிந்தோம் என்றில்லாமல், அல்லது இந்த நால் வகையிலே முதல் இரண்டு வகைக்குள்ளேயே இருந்துக் கொண்டு. உலகாயதப் பொருள்களையே வேண்டிப் பெற்று... மீண்டும் மீண்டும் புது உடல் எடுத்து அவதியுற்று பிறவி என்னும் பெருங்கடலில் தத்தளித்து தவிப்பதை விடுத்து.

பேரானந்தம் என்னும் அந்த பேரொளியில் கலப்பதே லட்சியம் என்பதால் அதனை நோக்கியே முன்னேறுவோம்... 

பிறக்கும் போதே ஞானிகள் அல்ல...
வளரும் போதும் ஞானிகள் அல்ல....

சாதாரண மனிதர்கள் நாம். வாழும் போதே இந்த உடல் மடியும் முன்னமே,
இந்த உடல் இனியும் விடுதலைக்கு உதவாது என்று இந்த உடலை கலட்டி எறிந்து விட்டு வேறு ஒரு உடலை ஆன்மா தேர்ந்தெடுக்கும் முன்பே விழித்துக் கொள்வோம்... 

அன்பினால் உருகி; அவனின் அன்பை மட்டுமே வேண்டி; அந்த அன்பாய், அன்பென்னும் பேரொளியில் கலக்க; அவனின் தாள் பணிவோம்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

மாணிக்கவாசகனாரின் இந்த அற்புத திருவாசகத்தை நமது இசைஞானியின் சிம்பொனி இசையில் காணொளியாக கேட்டு இன்புறுங்கள்.

http://www.youtube.com/watch?list=PLEFBA9AF1D81C1387&feature=player_detailpage&v=lrkSN8pwby8

http://www.youtube.com/watch?list=PLEFBA9AF1D81C1387&feature=player_detailpage&v=fr8mTh6jEwU

நன்றி வணக்கம்.

அன்புடன்,
ஆலாசியம் கோ. சிங்கப்பூர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5




பெப்பர் ஸ்ப்ரே...

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்! பெப்பர் ஸ்ப்ரே..அப்படினா...என்ன.! ? என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ

"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'. ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.

அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொன்னால் போலீஸ் வந்து அவர்களை அள்ளிக் கொள்ளும்! "அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.

சமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' காவல்துறை வழங்கி வருகிறது. இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபது முறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.

முதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் காவல்துறைக்கு வந்திருக்கின்றன.

இதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது!" .

இந்த பெப்பர் ஸ்ப்ரே காவல் துறை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது. இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள்,பெண்கள் என அனைவரும் பயன் பெறலாம்..

அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத்துல இருந்து தப்பிக்க இது ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.

மேலும் தொடர்புக்கு:
துரைப்பாக்கம் சரகம்,
காவல்துறை உதவி ஆணையர்
அலுவலகம்,
போன்-044--234527

மின்னஞ்சலில் வந்தது. அனுப்பியவர் Ananthamurugan.G
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

79 comments:

  1. தனுசுவின் கவிதை(பாரதியின் வசன கவிதை பாணியோ?) நலம்.

    'தூறும்' ஏழாம் அறிவா? கொஞ்சம் விளங்க‌வில்லை சாமியோவ்! கோனார் நோட்ஸ் யாராவது 'ஆனந்தக் கோனார்'கள் போடுங்கப்பா! எப்போ புரியாமல் உரையாசிரியர் தேவைப்படுகிறதோ, அப்போவே தனுசுவை சிறந்த‌ கவிஞர்
    இடத்திற்கு உயர்த்திட்டோமில்ல?

    ஆக, தேமொழி ஒரு எம் பி ஏ என்று தெரிய வந்த‌து.எம் பி யே படிப்பு பிரபலமாகிவந்த ஆரம்ப காலகட்டத்தில் கம்யூனிஸ்டுத் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள் ஓர் உரையில் போகும் போக்கில் கூறினார்:"தொழிலாளியை கொக்காக நினைத்து அதன் தலையில் வெண்ணையை வைத்து, வெண்ணை வழிந்து கொக்கின் கண்ணை மூடும் போது 'லபக்' என்று கொக்கின் கழுத்தைப் பிடித்துவிடலாம் என்பது போன்ற 'டெக்னிக்'குகளைச் சொல்லித் தருவதுதான் நிர்வாகயியல்"

    டப்பாவாலாக்கள் இன்று ஐ ஐ எம்களில் பாடம் எடுக்கிறார்கள்.இன்று கலியாணங்களில் சமையல் காண்டிராக்ட் எடுத்து நிர்வகிக்கும் படிக்காத சமையற்காரரிடம் உள்ள நிர்வாகத்திறமை ஐ ஐ எம் களிடம் இருக்கிறதா? சந்தேகமே!

    தேமொழியின் தமிழ் கச்சிதமாக உள்ளது.பல செய்திகளை எழுதத் துவங்கியது
    கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஹாலாசியம் ஆக்க‌ம் சிந்தனையைத் தூண்டுகிறது.(இவ்வளவு கனத்தையெல்லாம் நம்ம தலை தங்காதுங்கோ!)பின்னூட்டத்தில்
    "தமிழ்பாட்டால் அடிப்பேன் ஓடு" என்று வந்து நிற்பாரே அவர் குறிப்பிட்ட வகுப்ப‌றை மாணவர்! ஈஸ்வரோ ர‌க்ஷது!

    கண்ணில் மண்ணைத் தூவுதல், மிளகாய்ப்பொடி தூவுதல் என்று பல டெக்னிக்.
    இப்போ மிளகுப் பொடியா? இது எப்ப‌டி வேலை செய்கிறது என்று அறிந்து குற்றவாளிகள் விரைவில் செயல் படுவார்கள்.ஏற்கனவே மயக்க மருந்து ஸ்பிரே செய்கிறார்கள்.இப்போ மிளகு!ஆனந்தமுருகா! காப்பாற்று!

    ReplyDelete
  2. /////இயற்கைச் சம நிலையைப் பாதுக்காக்கும் காரணத்திற்காகவாவ‌து விலங்குகளைக் கொல்லாமை, தாவரங்களை அழிக்காமை ஆகியவற்றைக் கைக் கொள்ள வேண்டும்./////
    அசைவம் வேண்டாம்,சைவம் போதும்;அதுதான் இயற்கை வழி என்று சொல்லிக் காரணங்களை அடுக்கியவர் திடீரென்று மேற்கண்ட வரிகளை எழுதியதன்மூலம் சைவமும் உனக்குக் கிடையாது என்று சொல்லிவிடுகிறார்..வடக்கிருந்து ஒரேயடியாய் மேலுலகம் செல்லச் சொல்கிறாரோ?
    ஒரு கிண்டலுக்காகவே இப்படி எழுதுகிறேன்..KMRK கோபிக்க வேண்டாம்..
    ஆராய்ச்சியை அதிகம் செய்தால் முகம் சுளிக்கவைக்கும் அருவெறுக்கத் தகுந்த இடங்களுக்கெல்லாம் இட்டுச் செல்லும்..
    உணவின் சுவை அளவிலே நிறுத்தியே பழக்கமாகிவிட்டபடியால் அதனுடன் நிறுத்தி கொஞ்சம் கொஞ்சம் KMRK சொன்ன விஷயங்களையும் சேர்த்துக்கொண்டு அளவுடன் உண்டு 'எல்லாம் இன்பமயம்' என்று இனிய வாழ்வை அனுபவித்து மகிழ்வோம்..
    எனது விருப்பம் சுவையான நிறைவான வாழ்வு..
    ஆயுள் அதிகமாக இருப்பேன் என்பது எல்லோருக்குமே நம்பிக்கைதான்..

    ReplyDelete
  3. அசைவ உணவு என்றதும் ஞாபகம் வந்தது..
    சென்ற சில வாரங்களுக்குள் ஜப்பானில் ஒரு பெரிய 'மகுரோ' என்ற கடல்மீன் பிடிபட்டது..ஆங்கிலத்தில் tuna fish என்று சொல்லப்படும்
    என்ன விலைக்கு ஏலம் விடப்பட்டது தெரியுமா?
    56490000 ஜப்பான் யென்.
    இந்திய மதிப்பில் அன்றைய நிலவரப்படி இந்திய ரூபாயில்
    மூன்று கோடியே தொண்ணூற்று ஒரு லட்சத்து எழுபத்து எட்டாயிரத்து எழுநூற்று எண்பத்தி எட்டு ரூபாய்..மட்டும்..
    ஜஸ்ட்
    3,91 ,78 ,788 Rs . only /.
    ஒரே மீன்..269 கிலோ.
    டிவி நியூசில் காண்பித்தார்கள்..
    (3cr.91 Lakh 78 Thousand.788 Indiyan Rs..

    39178788.157894rs.=56490000yen @ 52.71 INR/

    USD @ 76 yen/usd

    on 5/1/2012)

    காணொளியாக மீனைத் தரிசித்து மகிழ விரும்புகிறவர்கள் இங்கே 'கிளிக்'கவும்..
    http://www.youtube.com/watch?v=kfxInHcfRJ0

    ReplyDelete
  4. எம்பியே படிக்காமலே தம்பி MBA ஆன கதை அருமை..

    நல்ல ஒரு ஆக்கத்தை அளித்த தேமொழிக்கு வாழ்த்துக்கள்.

    எழுத்தும் சொல்லவந்ததை சொல்லிய விதமும் எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தது..

    நாங்கள் ரெகுலர் B .E . என்பதால் பார்ட் டைம் B .E .
    படிக்கும் ஆட்களை ஜனதா B .E . என்று கிண்டலடிப்பதுண்டு..
    ஜனதா B .E . காரர்கள் வருந்தவேண்டாம்..நகைச் சுவையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்..

    தேமொழி தம்பி போலே சிறுவயதிலே நானும் இப்படித்தான்..
    இருந்த இடத்திலிருந்தே எம்பி எம்பியே வேலைகளை முடிக்க நினைத்தவன்..அதற்கெல்லாம் தண்டனையாகத்தான் இப்போது வெறித்தனமான உழைப்பின் ஆணிவேர் ஜப்பானில் அகப்பட்டிருக்கிறேன்..

    இதே காரணத்தால் MBA மூன்று வருடங்களுக்குமான சேர்க்கைக் கட்டணம், பயிற்றுவிப்புக்கட்டணம்.. தேர்வுக் கட்டணம்..என்று ஒன்றுக்கும் குறைவில்லாமல் பணத்தை மட்டும் கட்டினேனே தவிர ஒரே ஒரு முறை கூட வகுப்புக்குப் போனதும் இல்லை..தேர்வையும் எழுதவேயில்லை..
    மார்க் ஷீட் மட்டும் வரும்..
    முட்டை மதிப்பெண் வரலாற்றிலேயே கிடையாது..
    ஒரே 'A' மார்க்கிங் தான்..
    ஆமாம்..A கிரேட்..
    ஆப்சென்ட் இப்படித்தான் மார்க் பண்ணுவார்கள்..
    இதே கணக்கில் சட்டக்கல்வியையும் சேர்த்துக் கொள்ள'லா'ம்..
    இங்காவது மூன்று பேப்பர் அட்டென்ட் பண்ணி பாஸான கதையும் நடந்தேறியது..

    ஏதோ ஒரு ஆர்வத்தில் துவங்கிவிட்டு அப்படியே திட்டங்களைப் கிடப்பில் போட்டுவிடும் தகுதி எனக்கிருப்பதால் அரசியலுக்குப் பொருத்தமானவன் என்றே எனக்குத் தோன்றுகிறது..

    மேல்சொன்ன இரண்டு பட்டங்களையும் ஒழுங்காய் முடித்த B .E .டிகிரிக்கு பிறகு எழுதி மேலே கோடிட்டுக் கொண்டு விளம்பரம் தேடிக் கொள்ளத் தகுதி படைத்தவன் ஆகியிருக்கிறேன்..

    இதுவே சரியான தகுதியில்லையா?அரசியல் தலைவர்கள் பலருக்கும் இதே தகுதி இருக்கிறதல்லவா?

    இது கூட இல்லாத ஆட்களை லூசுலே விடுங்க.அவுங்களோட நம்மளைக் கம்பேர் பண்ணக் கூடாது..

    ஏன்னா?அவுங்களெல்லாம் பெருந்தலைவர்கள்..

    என் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டதால் நான் பெருந்தலைவராகும் தகுதியை இழக்கிறேன்..

    ReplyDelete
  5. இணையத்தைத் தம் துணையாக்கி
    எழுத்தாளர்க்கு எதிர் வினையாக்கி
    தொட்டணைத்தூறும் ஏழாம் அறிவை
    தோண்டச் சொல்லித் தூண்டிய
    தனுசுவின் முயற்சி புதுசுதான்..

    ReplyDelete
  6. ஆனந்த முருகன்
    'அலர்ட்'முருகனாகி
    அள்ளித் தெளிக்கும்
    பெப்பரை..கப்பெனப்
    பிடித்தால் தப்பலாம்
    தப்பான ஆளிடம்..

    கவிதைங்குற பேரிலே செம கடி கடிக்குறதாலே KMRK கோபப்பட்டு பெப்பரை ஸ்பிரே பண்ணாம இருந்தா சரி..
    இது ஒரு badkavifobia..

    ReplyDelete
  7. ஆலாசியம் எழுதியிருக்கும் விஷயங்கள் இந்த தடவை தெளிவாகப் புரிகிறது..
    ஆனால் மரமண்டையில் ஏறமறுக்கிறேன் என்கிறது..
    நல்லது..
    ஃபர்ஸ்ட் கிளாஸ்லே ஃபிளைட் டிக்கெட் ரிசேர்வ் பண்ணி வையுங்க பயணம் எளிதாகவும் சுகமாகவும் இருக்கும் என்று சொல்லிய செய்தியாக எடுத்துக் கொள்கிறேன்..

    பயணத்தை இன்னும் முடிவு செய்யவேயில்லை..அதனால் இப்போதைக்கு டிக்கெட் ரிசெர்வேஷன் பக்கமே போறதா இல்லை..
    கையிலே வேற காசு கம்மியா இருக்கு..அப்புடி திடீர்ன்னு ட்ரிப் அமைஞ்சா அந்த நேரத்துலே அன்ரிசெர்வ்ட்லே ட்ரை பண்ணிப் பார்க்கலாம்..
    இல்லே டாக்சியோ..பஸ்ஸோ..லாரியோ.. எதுவா இருந்தாலும் டிரைவருக்குத் தனியா டிப்ஸ் கொடுத்துக் கவனிச்சு பார்த்து போகவேண்டியதுதான்.. நன்றி..

    ReplyDelete
  8. ///ஆட்டினைக் கொல்லும் போது பாவ உணர்ச்சி ஏற்படுகிறது.அதனை ஈடுகட்டவே அதனை ஒரு காளிக்கோ, முனியப்பனுக்கோ, கருப்பண்ணசாமிக்கோ படைத்துவிட்டு பிரசாதமாக உண்கின்றனர்.

    ஓர் ஆப்பிரஹாமிக் மதத்திலும் அராபிய மந்திரம் சொல்லி ஆட்டின் கழுத்தை அறுத்துவிட்டால் பாவம் போய்விடும்!...///

    சர்ச்சைக்குரிய க(கெ)ட்டுரை..
    சமாளிக்க மன பலம் போதுமே..

    உண்பது நாழி
    உடுப்பது நாலு என்ற

    நம்பிக்கையை வேறாக திரித்து சொல்ல
    நாம் பிணம் தின்னும் கோழியல்ல

    பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்
    பார் புகழும் தமிழனின் தலைமை நெறி

    இந்திரர் அமிழ்தம் இயயவது ஆயினும்
    இது சங்கம் தந்த புறப்பாடல்

    ஏவா மக்கள்
    முவா மருந்து - இது

    அவ்வை பாட்டி சொன்ன அறிவுரை
    அன்பில்லா உணவை மறுக்க அவரே

    காணக்கண் கூசுதே கை எடுக்க நானுதே
    மாணொக்க வாய் திறக்க மாட்டாமே
    வீணுக்கு என்
    என்ப எல்லாம் பற்றி எறிகின்றதையோ
    அன்பில்லாள் இட்ட அமுது

    "ஒரு நாள் உணவை ஒழி" இப்பாடலை
    ஒன்னாம் வகுப்பில் பலர் படித்திருக்க

    வாய்ப்புக்கள் அன்றை இளைஞருக்கு
    வாய்த்திருக்கலாம்

    சிவஞானம் குழைத்து ஊட்டப் பெற்ற
    சிவஞான வள்ளல் சம்பந்த பெருமான்

    சரி சொல்ல வருவதெல்லாம் இது தான்
    சமைத்தல் என்பதன் பொருள் புரிந்தால்

    சமைத்த (அ)மைத்த என்பதற்கு
    சரியான பொருளை சொல்ல வில்லை..

    மாமிச உணவுகளை திண்ணும் பழக்கம்
    மெய்யாலுமே பிராமணர்கள் தான்

    தொடங்கி வைத்தனர் என்றால்
    தொடக்கியவரே புருவத்தை உயர்த்தி

    அதற்கு எதிர்வாதம் செய்யலாம்
    அய்யர் அதனை விரும்பவில்லை.

    ஆடையின்றி பிறந்தோமோ
    ஆசையின்றி பிறந்தோமா என
    (படம் பாவமன்னிப்பு பாடலின் முதல் வரி எல்லோரும் கொண்டாடுவோம்)

    கவிஞர் கண்ணதாசன் ஒரு
    கருத்துள்ள திரைப்பாடலில் கேட்பார்

    ஆசையில்லா மனிதர் தம்மை
    துன்பம் எங்கே நெருங்கும் என
    (பாடலின் முதல் வரி மற்றும் படம் சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே)

    இன்னொரு பாடலில்
    இதற்கு பதிலாக தருவார்

    உணவு உண்பதே ஆசையினாலே
    உள்ளபடியே பசிக்கு சாப்பிடுவது யார்

    இதிலும்
    உண்பது வேறு
    திண்பது வேறு


    சரி சொல்ல வருவது இது தான்..
    சமையலில் எல்லோரும் அசைவமே

    அசைவம் என அவர்
    அந்த குறிப்பிட்ட பொருளில்

    இஸ்லாத்தில் உணவு பற்றி
    இயல்பாக பல செய்திகள் உள்ளது

    அதனை படித்து விட்டு பதிவாளர்
    அன்பிற்குரிய குடிகாரர் தந்திருக்கலாம்

    அதனை விடுத்து அந்த மதத்தை
    அப்படி வேறு கண்ணோட்டத்தில்

    சொல்லி பதிவு இடுவதினை
    சொல் அளவில் கண்டிக்கின்றோம்.

    தொடரும் என பதிவாளர் தராததால்
    தொடர்ந்தது அய்யரின் எண்ணம்

    இன்ஷா அல்லாஹ்
    இங்கு எல்லோருக்கும் நலம் பெற

    அன்பு வணக்கங்கள்..
    ஆக்கியோருக்கும் அனைவருக்கும்

    ReplyDelete
  9. இணையம் என்றொரு உலகுண்டு
    இங்கு எல்லோருக்குமிடமுண்டு என

    வகுப்பறையின் ஆஸ்தாக கவிஞர்
    வழங்கி கவிதை யை அன்று அன்பு

    சகோதரி இணையத்திற்கு
    சாதகம் வரைந்து பலன் சொல்கிறார்

    //மந்திரலோகத்தில்யாவருக்கும் தெரிந்துவிடும்ரம்பாவின் செய்திகள்//

    நீங்கள் குறிப்பிட்ட அந்த ரம்பா
    எங்கள் (நடிகை) ரம்பா தானே என ரம்பா

    ரசிகர்களும் அன்றைய இளைஞர்களும்
    ரகளை செய்யாமலிருந்தால் சரி தான்..

    தொடரட்டும் உமது கட்டளைகள்..
    தொடட்டுவிடலாம் சிகரத்தை..

    ReplyDelete
  10. சோம்பேறிகளை நாங்கள்
    சேம்பேறிகள் என குறிப்பிடுவோம்..

    ஏன் தெரியுமா..?
    துணை எழுத்து எழுதக் கோட அவர்
    துணை வேண்டி சோம்பி இருப்பதால்..

    நிர்வாகத் திறனுக்காக தகுதி யை
    நிஜமாக தெரிந்து கொள்ள விரும்புபவர்

    புத்தமதத்தின் (மஹாயனம்) TEACHINGs
    படித்து பயன் பெறலாம்..

    இயலாதவர்கள்..
    கவுடில்யர் தந்த அர்த்த சாத்திரம் பார்க்கலாம்

    அதுவும் புரிந்து கொள்ள இயலாதவர்
    வள்ளுப்பெருமகனாரின் குறிப்பிட்ட

    சில அதிகாரங்களை படிக்கலாம்
    எங்கே சார் நேரமிருக்கு என்பவர்கள்..

    கண்ணதாசன் வாரி வழங்கிய
    திரையிசை பாடல்களை படிக்கலாம்

    ஆழ்ந்து கேட்கலாம்..
    அப்புறம் பாருங்கள்..

    உங்கள் பதிவுக்கு நன்றிகள்
    உளம் உவந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சிங்கை செல்வரின் நீண்ட நாளுக்குபின்
    சிறப்பான பதிவினை படிக்கிறோம்..

    அந்தபதிவில் சில கேள்விகள்
    ஆ(த)னால் நண்பரே.. பல

    ஆனந்தாக்கள் சொன்னது போல்
    கோவிந்த(சாமி)யும் சொல்லனுமா..

    கேள்விளை குறித்துக் கொள்ளுங்கள்..

    1) ஆன்மா என்பது என்ன உயிர் என்பது என்ன இரண்டும் ஒன்றா வேறா

    2) எதற்காக ஒருவன் கரையேற வேண்டும்

    3)கரை ஏறுவதற்கு முன் அவன் எங்கிருந்தான்

    4) அவனை கடலில் தள்ளியது யார்

    5) அவன் என சொன்னதால் ஆனினம் மட்டும் கரையேறாது பெண்னினம் ஏறிடும் என பொருள் கொள்ளலாமா
    6) பக்தி என்பது என்ன?
    7) அறிவது உணர்வது என விளக்கிய அன்பரே.. பார்ப்பது பகிர்வது மகிழ்வது என சித்தர் சொல்வதும் இது தானா அல்லது வேறா.
    8) பிறப்பதற்கு முன் அதாவது முதல் பிறவியில் இருப்பதற்கு முன் எங்கிருந்தோம்
    9) கர்மம் என குறிப்பிடுவது எதை
    10) முதல் பிறவியில் நமக்கு கர்மம் எப்படி ஏற்படும்
    11) விடு தலை என குறிப்பிடுவது எதை
    12) தேடுங்கள் கண்டு அடைவீர் என
    சொன்ன ஏசு தேடச் சொன்னது எதை
    13) வழிபாடு என்றால் என்ன
    14) பிறப்பவன் இறக்கிறான் என்றால் ஏன் முதலில் பிறக்கின்றான்..
    15) இயற்கையை எப்படி இறைவனோடு வேறுபடுத்துகின்றீர்கள்..

    கிருஷ்ணரையும் விவேகானந்தரையும்
    துணைக்கு அழைத்து வந்த பதிவினால்
    இத்தனை கேள்விகள்..

    தவறாக எண்ண வேண்டாம்
    தாங்கள் வேறு பக்கம் நின்று படியுங்கள்

    உங்கள் தாக்கம் மட்டுமல்ல
    உங்கள் தாகமும் குறையும்..

    கேரட் அல்லவா சாப்பிட முடியும்
    மட்டன் அல்வா செய்யவே முடியாது

    அதை-இதை சேர்த்து கொண்டால்
    அது சுவைக்குமா தோழரே..

    ஆட்டுக்கால் சூப்பிற்கு
    சர்க்கரை போட்டா சாப்பிட முடியும்

    கவாப்புக்கு கூட தொட்டுக்கொள்ள
    கார சட்ணி தான் தருவார்கள்..

    குலோப் ஜாமுனை சாப்பிடுவது போல்
    கிரில் சிக்கனை எப்படி சாப்பிடலாமா


    ஏசு தட்டச் சொன்னதால் பலரும் பூட்டிய கதவை அல்லவா தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்

    உங்கள் பதிவுக்கு நன்றிகள்..
    வாழ்த்துக்கள் தருவதுடன்
    கேள்விகளையும் தந்துள்ளோம்..

    ஆழமாக யோசியுங்கள்..
    அதிகாலையில் பதில் வரும்

    ReplyDelete
  12. கவிதை ..
    கட்டுரை ..அத்துடன் சுயபுராணம் ...
    காண் ஒளி-ஒலி ... பின் எச்சரிக்கை
    கருத்து (கண்தானம் பப்பர் ஸ்பேரே) என

    மலருக்கு மணம் சேர்க்கும் முயற்சியில்
    மலரை அலங்கரித்த தோழமையை

    பாராட்டுகிறோம்..
    பார் வியந்து நிற்கும் தமிழால்..

    மலரை தொடுத்து..
    மனதை தொட்டு விட்டு..
    மாணவர்களுக்கே
    மாலை சூட்டிய
    மண்ணவரே.. எங்கள்

    வகுப்பறை
    வாத்தியாரே

    வாழ்க பல்லாண்டு..
    வையகம் போற்றிடவே...

    ReplyDelete
  13. //மாமிச உணவுகளை திண்ணும் பழக்கம்
    மெய்யாலுமே பிராமணர்கள் தான்
    தொடங்கி வைத்தனர் என்றால்
    தொடக்கியவரே புருவத்தை உயர்த்தி
    அதற்கு எதிர்வாதம் செய்யலாம்
    அய்யர் அதனை விரும்பவில்லை.//

    புருவம் உயர்த்தும் குணம் ஏதும் இல்லை. அறியாததை அறிந்து கொள்ளும் மனநிலைதான் உள்ளது.

    அது தெரியுமா இது தெரியுமா என்று அறைகுறைத் தகவல்களோடு நிற்காமல்
    த‌ங்கள் கோணங்களை எல்லோரும் அறியத் தருவது தான் விரும்பத்தக்கது.

    இக்கட்டுரைகளே தங்களின் குற்றம் சாட்டும் தொனியில் அனுப்பிய ஒரு மின் அஞ்சலின் தாக்கமேயாகும்.

    மீண்டும் மீண்டும் உங்களை வேண்டுவது எல்லாம் தாங்கள் பிறருடைய கட்டுரைகளில் இருந்து மாறுபட்டால், அக்கருத்துக்களை விமர்சனக் கட்டுரைகளாகவோ,அல்லது ஆக்கமாகவோ கொடுப்பது அனைவருக்கும் பயன் அளிக்கும்.

    சொற்களின் மீது அதிக நாட்டம் உடையவர் என்பது தெரிகிறது.மேலும் தாங்கள் கொண்டிருப்பதே முடிந்த முடிபாகவும், தங்கள் முடிபுகள் சாதாரணர்களால் புரிந்து கொள்ள முடியாதவை போலவும், விவாதங்களுக்கு ஆட்படுத்தக் கூடாதவை போலவும் தொடர்ந்து கருத்தோட்டத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  14. அன்பு ஆசிரியருக்கு மாணவர் சார்பில்
    அய்யர் தரும் வேண்டுகோள்..

    மாணவ மலரின் பதிவாகும்
    மதிப்பு மிக்க பதிவுகளுக்கு

    வாத்தியாரும் தமது கருத்தை
    வாரி வழங்க வேண்டும்..

    ஒரு பதிவராக இல்லாமல்
    ஒரு வாசமிகு வலைப்பூவின்வாசகனாய்

    இந்த மலரில் இருந்தே அல்லது
    இனிவரும் மலரில் இருந்து..

    நாளை என்பதை தள்ளிப்போடு
    நாளும் செய்ய நல்லதை நாடு

    என்ற அறிஞர் வாக்கை
    எண்ணிக்கொண்டே..

    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கம் போல்...

    ReplyDelete
  15. ///இக்கட்டுரைகளே தங்களின் குற்றம் சாட்டும் தொனியில் அனுப்பிய ஒரு மின் அஞ்சலின் தாக்கமேயாகும்.///

    பணி செய்திருக்கும் எமக்கு அப்படி ஒரு
    தொனியா.. எந்த மின்னஞ்சல் ...?

    தாக்கத்தை வெளிப்படுத்தியதால் என்றீர்
    தாகம் குறைந்ததா தோழரே..!!

    ///சொற்களின் மீது அதிக நாட்டம் உடையவர் என்பது தெரிகிறது.///

    சொல் என்பது ஒரு
    கல் ..அதனை கவணமாக கொள்ளனும்

    எறியப்படும் கல்லினால்
    எழுவது சுவராகலாம் பாலமுமாகலாம்

    ///மேலும் தாங்கள் கொண்டிருப்பதே முடிந்த முடிபாகவும், தங்கள் முடிபுகள் சாதாரணர்களால் புரிந்து கொள்ள முடியாதவை போலவும், விவாதங்களுக்கு ஆட்படுத்தக் கூடாதவை போலவும் தொடர்ந்து கருத்தோட்டத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்....///

    இருப்பதை தானே நண்பரே
    இ(எ)ங்கும் ஏற்படுத்த முடியும்

    God is NO WHERE என படிப்பவரை
    God is NOW HERE என படிக்க சொல்வது

    தவறு என்கின்றீரா..
    தப்பியும் அப்படி சொல்லாகது என்பீரா?

    முடிந்த முடிபாக இருப்பது
    முன்னர்சொன்ன மெய்கண்ட சாத்திரமே

    படிப்பவரும் அதனையே
    பழக்கத்தில் கொள்பவரும்

    அப்படித்தானே இருப்பார்கள்..மீண்டும்
    அதனால் அப்பர் வாக்கினை தருகிறோம்

    "அவ்வளவில் அவன் மகிழ்க.. "
    என்றும்

    "இன்பமே எந்நாளும் துன்மமில்லை "
    என்றும் தந்து உங்களுக்காக

    இந்த sermonயை உரக்க படிக்கின்றோம்
    இன்புற்று வாழ்க..

    Life is not about finding the right person, but
    creating the right relationship.

    It's not about how we care in the beginning, but
    how much we grow and nourish one another in a relationship.

    Some people always throw stones in your path.
    it depends on you what you do with them
    - build a wall or a bridge?
    Remember you are the
    architect of your life.

    Search a beautiful heart,
    not a beautiful face, because

    beautiful things won't last forever, but
    a golden heart does and

    will prosper you and add value to yourself.

    It's not important to hold
    all the good cards in life. But

    it's important how well you play
    the cards which you hold.

    Often when we lose all hope and
    think this is the end,

    GOD whispers,
    "RELAX.., IT's JUST A BEND, NOT THE END."

    Have faith, keep faith and see
    what God will do for you.

    One of the basic differences between
    GOD and man is,

    GOD gives, gives, gives and FORGIVEs. But
    human gets, gets, gets and FORGETs.

    God bless u..!!

    ReplyDelete
  16. kmrk அவர்களே புலால் உண்ணாமை நமது இந்திய மரபு. திரை கடலோடி திரவியம் தேடும் என் போன்றோருக்கு. இதனை பின் பற்றுவதில் மிகவும் சிரமமாக உள்ளது.

    lettuce,carrot, cucumber, போன்றவை பச்சையாகவே சாப்பிடலாம். மேலும் காய்கறிகளை சாப்பிடும் போது இதில் அதிகஅளவு நார்ச்சத்து இல்லை என்பதால்,விரைவில் செரிமானம் ஆகிவிடுகிறது. மீண்டும் சாப்பாடு மீண்டும் பசி என்று தொடர்கிறது இதனால் நம் இந்திய வம்சா வாளிகளை பார்க்கும் போது வயிறு பெருத்து இருக்கும் .

    மாமிச உணவில் மீண்டும் சாப்பாடு மீண்டும் பசி என்ற நிலை இல்லை.

    நான் கொஞ்சம் அசைவ பிரியன்

    என்னுடன் பணிஎடுக்கும் சிலரின் சாப்பாடு விவரங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன்

    ஆங்கிலேயர்கள்,பிலிப்பினோக்கள்,தாய்லான்த்தியர்கள்,சீனர்கள், கொரியர்கள் முதலானோர் mackarel (வஞ்சிறை மீன் ) போன்ற மீனை தோலை சீவி விட்டு கருமிளகுதூள், எலுமிச்சை சாறு ,உப்பு போட்டு பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். french காரர்கள் "சல்மோன்" என்ற மீனை வெங்கையா தாள் அளவில் மெலிதாக சீவி" french dressing" தொட்டு பச்சையாகவே சாப்பிடுகிறார்கள்.

    ஐரோப்பியர்கள் மாட்டின் நடுமுதுகு தண்டின் அடிப்பக்கம் இருக்கும் (tenderloin) மாமிசத்தை சமைக்காமல் பச்சையாகவே salad செய்து சாப்பிடுவார்கள்.

    ReplyDelete
  17. ஐயரின் கேள்விகள் இங்கே.

    //1) ஆன்மா என்பது என்ன உயிர் என்பது என்ன இரண்டும் ஒன்றா வேறா
    2) எதற்காக ஒருவன் கரையேற வேண்டும்
    3)கரை ஏறுவதற்கு முன் அவன் எங்கிருந்தான்
    4) அவனை கடலில் தள்ளியது யார்
    5) அவன் என சொன்னதால் ஆனினம் மட்டும் கரையேறாது பெண்னினம் ஏறிடும் என பொருள் கொள்ளலாமா
    6) பக்தி என்பது என்ன?
    7) அறிவது உணர்வது என விளக்கிய அன்பரே.. பார்ப்பது பகிர்வது மகிழ்வது என சித்தர் சொல்வதும் இது தானா அல்லது வேறா.
    8) பிறப்பதற்கு முன் அதாவது முதல் பிறவியில் இருப்பதற்கு முன் எங்கிருந்தோம்
    9) கர்மம் என குறிப்பிடுவது எதை
    10) முதல் பிறவியில் நமக்கு கர்மம் எப்படி ஏற்படும்
    11) விடு தலை என குறிப்பிடுவது எதை
    12) தேடுங்கள் கண்டு அடைவீர் என
    சொன்ன ஏசு தேடச் சொன்னது எதை
    13) வழிபாடு என்றால் என்ன
    14) பிறப்பவன் இறக்கிறான் என்றால் ஏன் முதலில் பிறக்கின்றான்..
    15) இயற்கையை எப்படி இறைவனோடு வேறுபடுத்துகின்றீர்கள்..//

    திரு ஐயர் அவர்களுக்கு ஏ.பி.நாகராஜன் வந்துதான் பதிலளிக்க வேண்டும். அவருக்கும் தெரியாவிட்டால் திருமுருக கிருபானந்த வாரியாரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும். இருந்தாலும் என் உளறலையும் இங்கே தருகிறேன். 1) ஆன்மாவும் உயிரும் வெவ்வேறானவை. பெளதிக உடல் செயல்பட உதவுவது மூச்சுக் காற்று அது ஓடும் வரை உயிர் இருக்கும். ஆன்மா என்பது அந்த பெளதிகக் கூண்டில் வந்து குடியேறிய பரம்பொருளின் ஒரு துகள். அது நிரந்தரமானது இந்தக் கூண்டைவிட்டு நீங்கினால் மீண்டும் பரம்பொருளோடு ஐக்கியமாகும், தேவையென்றால் மீண்டுமொரு கூண்டைத் தேர்ந்தெடுக்கும். 2) கரையேறுதல் என்பது இயற்கையின் நியதி. பரமாத்மா எனும் ஒளிப்பிழம்பிலிருந்து உதிர்ந்த ஒரு சிறு துளி மீண்டும் அந்தப் பேரொளியுடன் சேர்வது இயற்கையின் விதி 3)கரையேறுமுன் அந்த ஜீவன் ஒரு கூண்டில் அடைபட்டிருந்தது. அந்த ஜீவன் அந்த உடலோடு செய்த வினைப் பயன்களுக்கு ஏற்ப அதற்கு விமோசனம் கிடைக்கும். கரையேறுமுன் அந்த உயிர் இருந்த இடம் ஒரு கூடு. 4)பிறவிப் பெருங்கடலில் அந்த ஜீவனின் வீழ்ச்சி முயற்சியின்றி பரம்பொருளால் நிச்சயிக்கப்பட்டது. ஆகவே அந்தப் பணியைச் செய்தது பரம்பொருள். 5)இங்கு பால் வேற்றுமை இல்லை. பரம்பொருளை அவன் எனலாம், அவள் அனலாம், அது எனவும் கூறலாம். ஆகவே இங்கு பால் குறிப்பிடப்படவில்லை. (ஆணாகி பெண்ணாகி அலியுமாகி)
    6)பக்தி என்பது பிறவியெடுத்த ஜீவாத்மா பரமாத்மாவிடம் காட்டும் உறவு 7)ஒன்றை பார்க்கலாம், பகிர்ந்து கொள்ளலாம், அதனால் மகிழ்ச்சியடையலாம் ஆனால் அறிவது என்பது எல்லா பரிமாணங்களாலும் ஓர் முடிவுக்கு வருவதுதான் அறிவது என்பது 8) முதல் பிறவி எடுப்பதற்கு முன் பரமாத்மாவிற்குள் ஓர் துகளாக இருந்தோம் 9)எந்தவொரு செயலுக்கும் இயற்கையாக உண்டான பலனே கர்மம் 10)முதல் பிறவிக்கு 'சிந்தித கர்மா'(பூர்வ பிறவியின் விட்டகுறை வினைப்பயன்) கிடையாது. ஆனால் அந்தப் முதல் பிறவியின் பலனின் ஒட்டுமொத்த பலன் வரவு வைக்கப்பட்டிருக்கும். 11)விடுதலையாவது மனம், வாக்கு, காயம், ஐம்பொறிகளின் ஆட்சி இவற்றை விட்டு நீங்கி இருப்பது அல்லது கூண்டைவிட்டுப் பறக்கும் பறவையின் நிலைமை 12)ஒன்றை அடைய முயற்சி தேவை. எதை அடைய வேண்டும் என உறுதி ஏற்படுமாயின், அதனை அடைய மார்க்கங்கள் தென்படும். அந்த வழியில் பயணித்தால் இலக்கை அடையலாம் 13) நம்மினும் மேம்பட்டதான ஒன்றை, நம்மால் எட்டமுடியாத இடத்திலுள்ள பேரருள் சக்தியை வணங்குவதே வழிபாடு 14)இறப்பதற்காகப் பிறக்கிறான் 15)ஒருவன் ஒளி என்கிறான், மற்றொருவன் வெளிச்சம் என்கிறான். ஒன்றை பல சொற்களால் அழைத்தாலும் அந்தப் பொருளின் இயற்கை குணத்தைக் குறிப்பிடும் பல சொற்களாகக் கருத வேண்டுமே தவிர வெவ்வேறாக அல்ல.

    ஐயர் மன்னிக்க வேண்டும். தமிழ்விரும்பிதான் உங்கள் கேள்விகளுக்கு பதில் தரவேண்டும். என் மனதில் குறுகுறுத்த பதில்களை (சரியான விடைகளாக இல்லாமல் இருக்கலாம்) கொடுத்து வைப்போமே என்று எனது அறைகுறை அறிவைப் பயன்படுத்தி பதில் எழுதியிருக்கிறேன். குறை இருந்தால் மறந்து விடுங்கள். எங்காவது ஒரு சிறிது உண்மை இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே! நன்றி. அதிகப்பிரசங்கத்துக்காக மன்னித்து விடுங்கள்.

    ReplyDelete
  18. தேமொழி அவர்களே மற்றவர்களை வேலை வாங்க வேண்டிய தகுதி சொம்பேறிதனம். இந்த தனம் இருந்துவிட்டால் நமக்கு தனம் பிரச்சனை வராது. நல்ல பாலிசி.
    நடைமுறை படுத்துங்கள் பலனை அனுபவித்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கையும் வேறு.

    நறுக்கென்று கச்தமாக எழுதி இருந்திர்கள் .

    kmrk போன்று பல விசயங்களையும் எழுதுகிறிர்கள். வரவேற்கிறேன் தொடருங்கள்.

    ஏறக்குறைய நானும் உங்கள் தம்பி போல் தான் இருந்தேன்.

    ReplyDelete
  19. இறை வணக்கத்தையும் இறை பயத்தையும் இறை பக்தியையும் விரிவாக கொடுத்த ஆலாசியம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. yer said..தொடரட்டும் உமது கட்டளைகள்..
    தொடட்டுவிடலாம் சிகரத்தை.. மிக்க நன்றி iyer avarkae .

    iyer saidவாத்தியாரும் தமது கருத்தை
    வாரி வழங்க வேண்டும்..

    இதனை நானும் ஆமோதிக்கிறேன் .

    ReplyDelete
  21. .iyer said.. பூட்டிய கதவை அல்லவா தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்

    பூட்டிய வீட்டுக்குள் இருந்துக் கொண்டே "வீடு பூட்டி இருக்கிறது" என்று சொன்னால் என்ன செய்வது.

    ReplyDelete
  22. ////Blogger iyer said...
    அன்பு ஆசிரியருக்கு மாணவர் சார்பில்
    அய்யர் தரும் வேண்டுகோள்..
    மாணவ மலரின் பதிவாகும்
    மதிப்பு மிக்க பதிவுகளுக்கு
    வாத்தியாரும் தமது கருத்தை
    வாரி வழங்க வேண்டும்..
    ஒரு பதிவராக இல்லாமல்
    ஒரு வாசமிகு வலைப்பூவின்வாசகனாய்
    இந்த மலரில் இருந்தே அல்லது
    இனிவரும் மலரில் இருந்து../////

    மாணவர் மலரைப் பொறுத்தவரை வாத்தியார் ஒரு தாய். தன் மக்களின் செயல்களை (குறை, நிறை இருப்பினும் கூட) எந்தத் தாயும் விமர்சிக்க மாட்டாள்
    மலருக்கு வரும் ஆக்கங்களை மறுப்பதோ அல்லது தணிக்கை செய்வதோ கிடையாது. அதுபோல வாத்தியாரின் விமர்சனமும் இருக்காது. ஏதிர்பாப்பவர்கள் மன்னிக்கவும்

    ReplyDelete
  23. @Iyer,
    எனக்கு தங்கள் கேள்விக்களுக்கு பதில் சொல்லக் கூடிய அளவிற்கு ஞானம் இல்லை என்றாலும் தங்கள் வினாக்களினால் ஏற்பட்ட சிந்தனைகளின் அடிப்படையை வைத்து பதில்கள்....
    //1) ஆன்மா என்பது என்ன உயிர் என்பது என்ன இரண்டும் ஒன்றா வேறா
    2) எதற்காக ஒருவன் கரையேற வேண்டும்
    3)கரை ஏறுவதற்கு முன் அவன் எங்கிருந்தான்
    4) அவனை கடலில் தள்ளியது யார்
    5) அவன் என சொன்னதால் ஆனினம் மட்டும் கரையேறாது பெண்னினம் ஏறிடும் என பொருள் கொள்ளலாமா
    6) பக்தி என்பது என்ன?
    7) அறிவது உணர்வது என விளக்கிய அன்பரே.. பார்ப்பது பகிர்வது மகிழ்வது என சித்தர் சொல்வதும் இது தானா அல்லது வேறா.
    8) பிறப்பதற்கு முன் அதாவது முதல் பிறவியில் இருப்பதற்கு முன் எங்கிருந்தோம்
    9) கர்மம் என குறிப்பிடுவது எதை
    10) முதல் பிறவியில் நமக்கு கர்மம் எப்படி ஏற்படும்
    11) விடு தலை என குறிப்பிடுவது எதை
    12) தேடுங்கள் கண்டு அடைவீர் என
    சொன்ன ஏசு தேடச் சொன்னது எதை
    13) வழிபாடு என்றால் என்ன
    14) பிறப்பவன் இறக்கிறான் என்றால் ஏன் முதலில் பிறக்கின்றான்..
    15) இயற்கையை எப்படி இறைவனோடு வேறுபடுத்துகின்றீர்கள்..//

    பதில்கள்
    1) ஆத்மா மற்றும் உயிர் (ஜீவன்) இரண்டும் ஒன்றே தான்.
    2) கரையேறுதல் என்பது மறுபிறவி இல்லாத நிலைக்கு செல்லுதல் (அ) உயருதல்.
    3) கரை இறங்குவதற்கு முன் எங்கிருந்ததோ அங்கே....
    4) உருவாக்கியவன் எவனோ அவனே அதை கடலில் தள்ளினான்...
    5) ஆத்மா விற்கு பால் வேறுபாடு இல்லை.
    6) பக்தியை குறிப்பிட்டு சொல்ல இயலாது...இருந்தாலும் கேள்விக்கு பதில் என்ற வகையில் பக்தி என்பது ஆத்மாவினுள் உறைந்திருக்கும் பிரம்மத்தை அடையும் ஒரு வழி எனச் சொல்லாமா...? சொல்லலாம் என்றால் இரண்டு வார்த்தையில் " தன்னை அறிதல்"
    7) அறிவில்லாமல் உணர்வு அல்லது உணர்வில்லாமல் அறிவு ஏது ,,,,அய்யர் தங்களின் இந்த கேள்விக்கு பதில் இல்லை.
    8) இந்த கேள்விக்கு பதில் கேள்வி 3 உரிய பதில் தான்.
    9) கர்மம் எனப்படுவது செயல்கள், செயல்களின் விளைவுகள்
    10) பிறவியே கர்மத்தினால் எனப்படும் போது இதில் முதல் கடைசி என பாகுபாடு சரியாக படவில்லை. இதன் தொடர்ச்சியாக விளைவது கரை இறங்குவதற்கு முன் எங்கிருந்ததோ அங்கே ஆத்மாவின் (கர்மம் எனப்படும்) செயல்களின் விளைவு ...
    11) இதற்கான பதில் கேள்வி 2 பதில் தான்.
    12) பதில் கேள்வி 6 பதில் தான்
    13) வழிபாடு என்று தமிழ் சொல்லுக்கு அர்த்தம் வணங்குதல், பிரார்த்தனை செய்தல் என்று சொல்லலாம். ஆனால் கேள்வி எழுப்பப்பட்ட சூழ் நிலையைக் கருத்தில் கொண்டால் பதில் எதுவாக இருக்க முடியும் ...தெரியவில்லை.
    14) இக்கேள்விக்குக்கான பதில் கேள்வி 10 பதில்
    15) எங்கும் இறைவன் எதிலும் இறைவன் என்றால் இறைவனும் இயற்கையும் ஒன்று. இல்லை இயற்கை இறைவனால் படைக்கப்பட்டது என்றால் இரண்டும் ஒன்றல்ல. ஆக நாம் திரும்பவும் தங்களின் கேள்வி 1 வந்து நிற்கிறோம் என்று நினைக்கிறேன்.

    Anyway enjoyed ஆலாசியம் அவர்களின் கட்டுரையும் and your various comments.

    waiting to know right answers for your questions...

    ReplyDelete
  24. //kmrk அவர்களே புலால் உண்ணாமை நமது இந்திய மரபு. திரை கடலோடி திரவியம் தேடும் என் போன்றோருக்கு. இதனை பின் பற்றுவதில் மிகவும் சிரமமாக உள்ளது.//

    நடைமுறைச் சிக்கல்களை நன்கு அறிந்தவன் நான். என்னுடைய இக்கட்டுரையின் நோக்கம் அசைவச் சாப்பாட்டைக் கண்டிப்பது அல்ல.
    வேறு உணவே கிடைக்காத போது இறந்த‌ சக பயணிகளின் மனித மாமிசத்தை உண்ட விமானப் பயணிகளின் உண்மைக் கதையையெல்லாம் சுட்டியிருந்ததைக் காணுங்கள்.மேலும் எஸ்கிமோக்களுக்கு தாவர உணவு கிடைக்காது என்பதையெல்லாம் சுட்டியுள்ளேன்.எனவே நீங்கள் சொல்லும் சிரமம் நிதர்சனம்.

    ஒரு முறை 'இன்றைய சூழலில் வெளி நாடு சென்று பொருளீட்ட வேண்டிய பிராமண இளைஞர்களின் தாய்மார்கள், தன் பிள்ளைகள் வயிறு வாடிவிடக் கூடாதே என்ற ஏக்கத்தில், எல்லாவகை உணவுகளுக்கும் அவர்களைப் பழக்குகிறார்கள்'என்பதாகச் சொல்லியிருந்தேன்.இதற்கு வந்த விமர்சனத்தால் இயக்கப்பட்டே என் உணவைப் பற்றிய இவ்விரு கட்டுரைகள் எழுதப்பட்டன.

    என் கட்டுரையை ஆழ்ந்து படித்தால் அசைவ உணவுப் பழக்கத்தைக்
    கண்டிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். முதல் பாகத்தில் வந்த உணவின் வகைகளிலும் 'கிடைக்ககூடிய உணவு' என்ற பகுதியும், 'வருமானத்திற்கேற்ற உணவு' என்ற பகுதியும் உங்களின் நடைமுறைச் சிக்கல்களை மனதில் வைத்தே எழுதப்பட்டவை. நன்றி!

    ReplyDelete
  25. //இஸ்லாத்தில் உணவு பற்றி
    இயல்பாக பல செய்திகள் உள்ளது
    அதனை படித்து விட்டு பதிவாளர்
    அன்பிற்குரிய குடிகாரர் தந்திருக்கலாம்//

    தாங்கள் விடுபட்டச் செய்தியை எடுத்துக் கூறி நிறைவு செய்ய‌ அழைக்கிறோம்.

    ReplyDelete
  26. வாஞ்சை மிகு அன்பு
    தஞ்சை சகோதரருக்கும்..

    ஆர்வத்தினால் பதில்களை
    அள்ளி தந்த தோழர் கணேஷூக்கும்

    நன்றிகள்..
    நல்வாழ்த்துக்கள்..

    பதில்களை நமது தோழர்
    பதிவாளர் ஆலாசியம் தரட்டடும் என

    காத்திருக்கின்றோம் உங்களைப் போல்
    கட்டாயம் இதற்கான பதில்களை

    நாமே தருகிறோம்..
    நாம் கேட்டது பதிவாளரின் கருத்தில்

    மாறுபட்ட சிந்தனைகளை
    மாற்றியமைக்கவே அன்றி

    வேறுபட்டு நிற்க அல்ல என்பதை
    கூறுபோட்டு காட்டியதே இக்கேள்விகள்

    திருவாளர் கனேஷ் தமது முகவரியை தரு விரும்பினால் பதிலை

    முன்னதாக அறிய அனுப்புகிறோம்
    முக்கியமானதாக கொண்டு..

    மாசில்லா அன்பினை
    மனமுவந்து அளிக்கின்றோம்..

    ReplyDelete
  27. மாற்று மதத்தினை
    வேறுபடுத்தி பேசுவதனை

    வார்த்தைகளால்
    வன்மையாக கண்டிக்கின்றோம்..

    இனி இப்படி வராது என இனி வரும்
    இந்த பதிவில் சொல்லும் வரையில்


    "ஒருவரையும் பொல்லாங்கு
    சொல்ல வேண்டாம்"

    என்ற முதுமொழியை மனதில் கொண்டு
    அமைதி கொள்கின்றோம்..

    ReplyDelete
  28. ////////Blogger iyer said...
    அன்பு ஆசிரியருக்கு மாணவர் சார்பில்
    அய்யர் தரும் வேண்டுகோள்..
    மாணவ மலரின் பதிவாகும்
    மதிப்பு மிக்க பதிவுகளுக்கு
    வாத்தியாரும் தமது கருத்தை
    வாரி வழங்க வேண்டும்..
    ஒரு பதிவராக இல்லாமல்
    ஒரு வாசமிகு வலைப்பூவின்வாசகனாய்
    இந்த மலரில் இருந்தே அல்லது
    இனிவரும் மலரில் இருந்து../////

    மாணவர் மலரைப் பொறுத்தவரை வாத்தியார் ஒரு தாய். தன் மக்களின் செயல்களை (குறை, நிறை இருப்பினும் கூட) எந்தத் தாயும் விமர்சிக்க மாட்டாள்
    மலருக்கு வரும் ஆக்கங்களை மறுப்பதோ அல்லது தணிக்கை செய்வதோ கிடையாது. அதுபோல வாத்தியாரின் விமர்சனமும் இருக்காது. ஏதிர்பாப்பவர்கள் மன்னிக்கவும்//////

    Objection Sustained..!!

    ReplyDelete
  29. @Iyer

    my email id - sriganeshh at the rate of yahoo dot com

    ReplyDelete
  30. As a zoologist, here are my2cents on the human diet article:
    According to biologists; the anatomy and physiology of humans show that humans are historically omnivores who eat a variety of foods, that determined by nature and availability of the food.
    Humans' canine teeth are relatively short when compared with other carnivores. So we are not morphologically designed to be exclusive carnivores. On the other hand, vestigial appendix is another example to show that we are not exclusively herbivore either. [A vestigial structure is a structure that has lost all or most of its original function through the process of evolution. The vermiform appendage is the shrunken remainder of the cecum that was found in a remote ancestor of humans. Ceca, which are found in the digestive tracts of many extant herbivores, house mutualistic bacteria which help animals digest the cellulose molecules that are found in plants. As the human appendix no longer houses a significant amount of these bacteria, and humans are no longer capable of digesting more than a minimal amount of cellulose per day, the human appendix is considered a vestigial structure…this part is from Wiki]
    Anthropologists who study our anatomy and our evolutionary history also support this view.

    ReplyDelete
  31. மீண்டும் தனுசு கட்டளைகள் ஆரம்பம் ....இப்பொழுது இணையத்திற்கு ...
    "தொழில் நுட்ப உலகின் அணுகுண்டே -உன்
    ஆட்டத்தை நல் ஆற்றலுக்கு மட்டுமே அளித்திடு"
    மனிதனின் மூன்றாம் கண் என்ற தலைப்பும் நல்ல பொருத்தமே.

    தனசு, உங்கள் ஆரம்ப வரிகளைப் பார்த்ததும் அதிர்ந்தேன், என் முன் குறிப்பு பகுதி உங்கள் கவிதையை எட்டிப் பார்த்து காப்பி அடித்ததல்ல ... just our great minds think alike. ஹி. ஹி. ஹீ

    ReplyDelete
  32. சகோதரர் ஆலாசியம் தமிழில்தான் கலக்குவார் என்றால் சமஸ்கிரதத்திலும் வீடு கட்டி விளையாடுகிறார். ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதில் வல்லவர் போலிருக்கிறது. எனக்கு இந்த அளவு ஆன்மீக ஞானம் எல்லாம் இல்லாததால், நான் புரிந்து கொண்டது .... தன்னை ஆட்டுவிக்கும் சக்தியின் மேன்மை உணர்ந்து, தன்னலமில்லாமல் , பிரதிபலன் எதிர்பாராமல், பாசாங்கு செய்யாமல் வணங்குபவர்களே உண்மையான பக்தர்கள் என சொல்லுகிறீர்கள் என்று விளங்கிக் கொண்டேன். பஹுஜன -ஹிட்டயா பஹுஜன -சுக்ஹாயா ("For the benefit of all, for the comfort of all") என்ற இலட்சியத்துடன் எழுதியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  33. ஆனந்தமுருகன் எழுதினால் அதன் மூலம் சிறந்த மனிதநேய கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் என எண்ணுகிறார். வாழிய உங்கள் தொண்டுள்ளம்.

    ReplyDelete
  34. ஐயா என் ஆக்கத்தையும் வெளியிட்டதற்கு நன்றி. மாணவர் மலரில் விமர்சனத்தை தவிர்க்கும் உங்கள் கொள்கையின் காரணமும் புரிகிறது, கொள்கையும் பிடித்திருக்கிறது. நன்றி.
    வாசகர்களுக்கும், அத்துடன் படித்து கருத்து தெரிவிக்க நேரம் எடுத்துக் கொண்டவர்களுக்கும் நன்றி, நன்றி.

    ReplyDelete
  35. Uma S umas1234@gmail.com
    to me

    கிருஷ்ணன் சாரின் கட்டுரையில் நிறைய தகவல்கள் 'விக்கிபீடியா' என்ற பெயர் பொருத்தம்தான்.
    தனுசுவின் கவிதை இந்த முறை மிக அருமை, வாழ்த்துக்கள்!
    தேமொழி உண்மைக்கதை நல்ல தெளிவான எழுத்து நடையுடன், சுவாரசியமாக இருந்தது. இதே கருத்தை வலியுறுத்தும் ஒரு புத்தகம் படித்த நினைவு வருகிறது. முன்னர் சோம்பேறியாக இல்லாமல் இருந்த நான் அதைப்படித்ததும் 'சோம்பேறி' ஆகிவிட்டேன். நான்தான் எதோ படிக்க ஆரம்பித்து பாதியில் விட்டோம்னு நினைச்சா பின்னூட்டத்தில் மைனரும் அதையே சொல்லியிருக்கிறார்.
    வழக்கமாக இரண்டு முறை படித்தால் மட்டுமே புரியும் ஆலாசியத்தின் கட்டுரை இந்த முறை ஒரு தடவையிலேயே நன்கு புரிந்தது.
    பேப்பர் ஸ்ப்ரே பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    S. உமா, தில்லி

    ReplyDelete
  36. ///////பேப்பர் ஸ்ப்ரே பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    S. உமா, தில்லி//////

    பேப்பர் ரோஸ்ட் ஞாபகத்துலேயே இருந்தா இப்படித்தான்..

    பெப்பர் ஸ்ப்ரே..

    ReplyDelete
  37. sriganeshh said...
    @Iyer
    my email id - sriganeshh at the rate of yahoo dot coம்//

    தூண்டிலில் ஒரு மீன்!

    விதி வ‌லியது!விதி யாரை விட்ட‌து?

    குருவிட‌ம் பெற்ற‌ ம‌ந்திர‌த்தை அனைவ‌ரின் ந‌ல‌ம் க‌ருதி திருக்கோஷ்டியூர் கோபுர‌த்தில் மேல் இருந்து அனைவருக்கும் வாரி வழங்கினாராம் ராமானுசர்.

    அப்படி ஏதாவது ஸ்ரீகணேஷும் செய்தாதால்தான் தேவலை!

    ReplyDelete
  38. ஏன் தஞ்சாவூராருக்குத் தனி அழைப்பு இல்லை?

    அப்படியானால் தஞ்சாவூரார் அளித்த பதில்கள் ஏற்புடையனவா?
    ஸ்ரீ கணேஷுக்குத்தான் 'கரெக்ஷன்' தேவைப்படுகிறதா? த‌ஞ்சாவூரார் கூறிய‌ ப‌தில்க‌ளில் தவ‌றேதும் இல்லையா?

    முன்பு இதே போல் தஞ்சாவூரார் பாரதியாரைப் பற்றி கேள்விகள் கேட்டு இருந்தாரே? அந்தக்கேள்விகளுக்கு பதில் இப்போது எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  39. ஆனந்தாக்கள் சொன்னது போல்
    கோவிந்த(சாமி)யும் சொல்லனுமா..//

    அத்வைத‌ப‌ர‌மாகச் சொல்லுவ‌தும், சைவ சித்தாந்த‌ப‌ர‌மாகச் சொல்லுவ‌தும் சிறிது வேறுப‌டும்.

    ஹாலாஸ்ய‌ம் சொல்லியிருப்ப‌து அத்வைத‌ப‌ர‌மாக‌ இருக்க‌க்கூடும்.

    அவ‌ருக்கு வைக்க‌ப்ப‌ட்ட‌ வினாக்க‌ள் மெய்க‌ண்ட‌ சாத்திர‌ப்ப‌டி சைவ‌ சித்தாந்த‌ம் கூறும் ப‌தில்க‌ளை எதிர்பார்த்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌ நினைக்கிறேன்

    இர‌ண்டு த‌த்துவ‌ங்க‌ளுக்குமான‌ ச‌ம்வாத‌ம் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌வே ப‌ல‌ரும் பேசி, எழுதியுள்ளார்க‌ள்.

    'ஆன‌ந்தா'க்க‌ள் தாங்க‌ள் பிடித்த‌ முய‌லுக்கு மூன்றே கால்க‌ள் என்று நிற்ப‌தில்லை.

    ReplyDelete
  40. ஒருவன் ஒளி என்கிறான், மற்றொருவன் வெளிச்சம் என்கிறான். ஒன்றை பல சொற்களால் அழைத்தாலும் அந்தப் பொருளின் இயற்கை குணத்தைக் குறிப்பிடும் பல சொற்களாகக் கருத வேண்டுமே தவிர வெவ்வேறாக அல்ல.///

    அதெப்ப‌டி? ஒளி என்றால் பொருள் என்ன‌ தெரியுமா?

    ஒளி என்றால் போதுமா? க‌ளி தின்ற‌தாக‌ ஆகுமா?
    க‌ளி உண்டா‌ல் வெளியாகுமா?

    இத‌ற்கு ஒரு பாட‌லை 'சுற்றி'விட்டு 'அமைதி' கொள்கிறோம்!

    என்ன‌ ஒன்றும் விள‌ங்க‌ வில்லையா? த‌னியாக‌ மின் அஞ்ச‌ல் அனுப்புங்க‌ள் புரிய‌ வைக்கிறோம்.

    ReplyDelete
  41. /தேமொழி said...
    As a zoologist, here are my2cents on the human diet article:
    According to biologists; the anatomy and physiology of humans show that humans are historically omnivores who eat a variety of foods, that determined by nature and availability of the food. //

    ந‌ன்றி தேமொழி! த‌ங்க‌ள் க‌ருத்தை ஒட்டியே என் க‌ட்டுரையும் அமைந்துள்ள‌து. அசைவ‌ம் முற்றிலுமாகக் க‌ண்டிக்க‌ப்ப‌ட‌வில்லை.என் சென்ற‌வார‌ முத‌ல் க‌ட்டுரையில் 'கிடைக்க‌க்கூடிய‌ உண‌வு'(available food) ப‌ற்றியெல்லாம்
    குறிப்பிட்டுள்ளேன்.

    பின்னூட்ட‌ங்க‌ள் இதுபோல‌த்தான் தான் அறிந்த‌தை எல்லோருட‌னும் ப‌கிர்ந்து கொள்வ‌தாக‌ அமைய‌ வேண்டும்.த‌க‌வ‌ல்க‌ளுக்குப் பாராட்டுக்க‌ள்.

    ReplyDelete
  42. ///த‌னியாக‌ மின் அஞ்ச‌ல் அனுப்புங்க‌ள் புரிய‌ வைக்கிறோம்....///

    மின்னஞ்சல் அனுப்பி வைதுள்ளோம்
    மிகு விரைவில் பதிலை எதிர்பார்த்தபடி..

    மாசில்லா அன்பினை
    மணம் கமழ தந்தபடியே..

    ReplyDelete
  43. ///குருவிட‌ம் பெற்ற‌ ம‌ந்திர‌த்தை அனைவ‌ரின் ந‌ல‌ம் க‌ருதி திருக்கோஷ்டியூர் கோபுர‌த்தில் மேல் இருந்து அனைவருக்கும் வாரி வழங்கினாராம் ராமானுசர்.///

    மாற்று மதத்தை குறைந்து பேசும்
    மாறுபட்ட புத்தி நமக்கு இல்லை தானே

    பொறுமை காத்தபடி
    அமைதிகொள்வோமே,,
    பொ

    ReplyDelete
  44. ///அப்படியானால் தஞ்சாவூரார் அளித்த பதில்கள் ஏற்புடையனவா?///

    அவரவர் பதில்கள்
    அவரவருக்கு சரியே...

    அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய
    ஆடுகளா... நாம்...?


    ///ஸ்ரீ கணேஷுக்குத்தான் 'கரெக்ஷன்' தேவைப்படுகிறதா? த‌ஞ்சாவூரார் கூறிய‌ ப‌தில்க‌ளில் தவ‌றேதும் இல்லையா?///

    யாரப்பா அங்கே...
    பக்கத்து இலைக்கு பாயாசம் போடு...

    ReplyDelete
  45. ///அத்வைத‌ப‌ர‌மாகச் சொல்லுவ‌தும், சைவ சித்தாந்த‌ப‌ர‌மாகச் சொல்லுவ‌தும் சிறிது வேறுப‌டும்.///

    தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம்

    இது கண்ணதாசன் பாடல்
    படம் அவள் ஒரு தொடர்கதை
    பாடலின் முதல் வரி தெய்வம் தந்த வீடு

    ///அவ‌ருக்கு வைக்க‌ப்ப‌ட்ட‌ வினாக்க‌ள் மெய்க‌ண்ட‌ சாத்திர‌ப்ப‌டி சைவ‌ சித்தாந்த‌ம் கூறும் ப‌தில்க‌ளை எதிர்பார்த்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌ நினைக்கிறேன் ...////

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
    தெய்வம் ஏதுமில்லை... நடந்ததையே
    நினைத்திருந்தால் என்றும் அமைதி இல்லை

    இது கண்ணதாசன் பாடல்
    படம் நெஞ்சில் ஓர் ஆலயம்
    இதுவே பாடலின் முதல் வரி

    ///இர‌ண்டு த‌த்துவ‌ங்க‌ளுக்குமான‌ ச‌ம்வாத‌ம் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌வே ப‌ல‌ரும் பேசி, எழுதியுள்ளார்க‌ள்.///

    வாதத்திற்கு அழைப்பவர்களா
    நாம். இல்லைவாழ்த்துக்களை தருபவர்

    //'ஆன‌ந்தா'க்க‌ள் தாங்க‌ள் பிடித்த‌ முய‌லுக்கு மூன்றே கால்க‌ள் என்று நிற்ப‌தில்லை.///

    ஆம் ஒன்று இரண்டு மூன்று என
    எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்..

    நீங்கள் சொல்லுவது போலவே.அவர்கள்
    நீதி மன்ற தீர்ப்பை எதிர்பார்த்தபடி

    ReplyDelete
  46. //மாற்று மதத்தை குறைந்து பேசும்
    மாறுபட்ட புத்தி நமக்கு இல்லை தானே//

    மாற்று மதமா? மாற்றும் மதமா?

    உங்களுக்குத்தான் அது மாற்று மதம்.
    அவர்களுக்கு நீங்கள் வேற்று மதம்.

    புலால் ஹ‌லால் ஆவது எப்போது?
    புலால் ஹராம் ஆவது எவ்வாறு?

    72 வகையான புரிதல்களில்
    எந்தப் புரிதல் உங்களுடையது?

    நீங்கள் சொல்வதோ கைவம்(caivam)
    அவர்கள் சொல்வது கைமா

    ReplyDelete
  47. //தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம் //

    இந்தப்பாடல் சோக மனத்துடன் , மனநிலை தடுமாறிய ஒருவர், குடித்துவிட்ட ஒருவர் பாடுவதாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். 'சிசுவேஷனு'க்குப் பாட்டு எழுதும் சினிமாப் பாடல் ஆசிரியர்களை அதுதான் அவர்கள் தேர்ந்து அறிந்த‌ கருத்து என்பது போல சித்தரிப்பது அவர்களுக்கு நீங்கள் செய்யும் அவமரியாதை.

    நான் சங்கரன் கோவில் சென்ற சமயம் இங்கு வந்து கொண்டிருந்த நண்பர் திரு.நடராஜனின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் ஒரு சைவ சித்தாந்தி.

    'சங்கற்ப நிராகரண'த்தை அளித்தார். 2 பக்கங்களுக்கு மேல் ஒரு சமயத்தில் படிக்க முடியவில்லை. அவ்வளவு தெளிவு.

    ReplyDelete
  48. //ஆம் ஒன்று இரண்டு மூன்று என
    எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்..

    நீங்கள் சொல்லுவது போலவே.அவர்கள்
    நீதி மன்ற தீர்ப்பை எதிர்பார்த்தபடி//

    இது கொஞ்சம் ஓவர். என்னமோ எல்லா இந்து சந்நியாசிகளும் சிறையில் இருப்பது போலச் சொல்கிறீர்களே.

    இங்கேதான் பயமின்றி இப்படியெல்லாம் சொல்லலாம்.அவ்வளவு கருத்துச் சுதந்திரம்

    ReplyDelete
  49. வணக்கம் ஐயா,
    இணையம் கோளாரால் இந்த வாரம் வகுப்பறைக்கு வர இயலவில்லை... kmrk அவர்களின் "விருந்து" சுவையாக இருந்தது...நான் என் சிறு வயதிலிருந்தே "அசைவம்" விரும்பாதவள்...ஆனால் என் பெற்றோரின் வற்புறுத்தலால் மட்டுமே எப்போதாவது சாப்பிட்டுவேன்...இன்று வரை தங்கள் கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்ட காரணங்களையும் சில ஆராய்ச்சி கட்டுரைகளையும் காட்டி என் அம்மாவிடம் அசைவத்தை தவிர்க்கும்படி கூறினால்,"செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு தானே...அதுவும் பாவம் ஆகாதா?" என்று பதிலடி கூறி "விஞ்ஞானியாகி" விடுகிறார் என் அம்மா...

    //அசைவ உணவை சமைக்காமல் சாப்பிட முடியாது என்று சென்ற பதிவில் கூறியிருந்தேன்.அதற்கு ஜப்பான் மைனர்வாள் எதிர்வினை ஆற்றியிருந்தார்.//
    நானும் "சுஷி" போன்ற ஜப்பானிய உணவுகளில் மெலிதான மீன்,இறைச்சிகளை சமைக்காமல் சாதத்துடன் உண்பதை பார்த்திருக்கிறேன்...அதை அவர்கள் ரசித்து ருசித்து உண்பது தான் கொடுமை...

    ReplyDelete
  50. தனுசு அவர்களின் கவிதையின் புது நடை மிகவும் அருமையாக இருந்தது...இன்று இணையற்றதாக மாறியுள்ள இணையம் பற்றி சிறப்பாக அமைந்திருந்தது கவிதை...இதில் "ஜக்கம்மா" நடை கலக்கல்...தொடரட்டும் தங்களின் "மாயா பஜார்"

    தேமொழி அவர்களின் சொந்த அனுபவ கட்டுரை மிகவும் அருமை...உங்கள் பேராசிரியரின் கூற்றுபடி "சிறந்த நிர்வாகி" பட்டத்தை என் அண்ணனுக்கும் அதற்கு நேர்மாறான பட்டத்தை எனக்கும் தரலாம் என்று நினைக்கின்றேன்...

    அலோசியம் அவர்கள் ஒரு ஆன்மிக "பிரசங்கம்" தந்துள்ளார்...
    //'மாறாத ஒன்றை அறிய உதவுவதே உண்மையானக் கல்வி, படிப்பாலோ, நம்பிக்கையாலோ, ஆராய்ச்சியாலோ, அதைப் பெற முடியாது; அது உணர்வு கடந்த நிலையிலும், சமாதி நிலையிலும் பெறக் கூடிய ஒன்றாம். அந்த நிலையை ஒருவன் அடையும் பொது அவன் சகுனக் கடவுள் நிலையை (தெய்வம்) நிலையை அடைகிறான்; நானும் என்பிதாவும் ஒன்றே; தனிப் பரம்பொருளான பிரமத்துடன் (இறைவனுடன்) தான் ஒன்றி இருப்பதை அவன் அறிகிறான். சகுனக் கடவுள் ஆகிறான் என்பார் சுவாமி விவேகானதர்.//
    அருமையான வரிகள்...புரியாத புதிர்க்கு இந்த வரிகளே பதில்களாகின்றன என்று நினைக்கின்றேன்...நல்ல கருத்தை பகிர்ந்துக் கொண்ட தங்களுக்கு என் நன்றிகள்...
    "பெப்பர் ஸ்ப்ரே" பற்றி ஆங்கில படங்களிலும் செய்திகளிலும் பார்த்திருக்கிறேன்...ஆனால் சென்னையில் இப்பொழுது கிடைக்கின்றது என்பது புதிய தகவல்...விலை சற்று அதிகமானாலும் வாங்கிக் கொண்டு என் சகோதரர்களை "அழ" வைத்து விடுகிறேன்...எப்பொழுதும் என்னை அழ வைத்த என் சகோதரர்களை இப்பொழுது நான் அழ வைக்க போகின்றேன்...ஹிஹிஹி...மிகவும் உபயோகமான தகவலை தந்த ஆனந்த முருகனுக்கு நன்றிகள்...என் போன்றவர்களுக்கு இது வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருள்...

    ReplyDelete
  51. Uma

    to me
    பேப்பர் ரோஸ்ட் ஞாபகத்துலேயே இருந்தா இப்படித்தான்..பெப்பர் ஸ்ப்ரே..//

    வீட்டில இன்னும் எவ்வளவு விளக்கெண்ணை ஸ்டாக்ல இருக்கு????

    S.உமா, தில்லி

    ReplyDelete
  52. //இன்று வரை தங்கள் கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்ட காரணங்களையும் சில ஆராய்ச்சி கட்டுரைகளையும் காட்டி என் அம்மாவிடம் அசைவத்தை தவிர்க்கும்படி கூறினால்,"செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு தானே...அதுவும் பாவம் ஆகாதா?" என்று பதிலடி கூறி "விஞ்ஞானியாகி" விடுகிறார் என் அம்மா...//

    எச்சரிக்கை:

    கீழ்க்கண்ட விடியோக்களை மனதில் துணிவு இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும்

    ttp://www.youtube.com/watch?v=mWaBx95Hjwk

    http://www.youtube.com/watch?v=zhlhSQ5z4V4&feature=related

    http://www.youtube.com/watch?v=C-dIMkZFrIw&feature=endscreen

    தாவரங்களுக்கும் உயிர் உண்டுதான். ஆனால் அவைகளின் அழிவு ரத்தமும் நிணமுமாக இவ்வளவு மோசமாகவா உள்ளது?

    ReplyDelete
  53. //வீட்டில இன்னும் எவ்வளவு விளக்கெண்ணை ஸ்டாக்ல இருக்கு????//

    இந்த ஜோக் எனக்குப்புரியலயே!

    பேப்ப்பர் ரோஸ்டை விளக்கெண்ணை விட்டு வார்க்கணுமோ?

    ஒஹோ! மைனர் கண்ணுல விளக்கெண்ணை விட்டுண்டு உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கிறாரோ? அப்ப சரி!

    மைனர்! விளக்கெண்ணை நான் ஃப்ரியா அனுப்பித்தரேன்! ஸ்டாக் தீர்ந்தவுடன் ஒரு மெயில் அனுப்புங்காணும்!

    ReplyDelete
  54. ///இந்தப்பாடல் சோக மனத்துடன் , மனநிலை தடுமாறிய ஒருவர், குடித்துவிட்ட ஒருவர் பாடுவதாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.///

    /// 'சிசுவேஷனு'க்குப் பாட்டு எழுதும் சினிமாப் பாடல் ஆசிரியர்களை அதுதான் அவர்கள் தேர்ந்து அறிந்த‌ கருத்து என்பது போல சித்தரிப்பது அவர்களுக்கு நீங்கள் செய்யும் அவமரியாதை....///

    நீங்கள்
    கவிஞரை குறைத்து சொன்ன அந்த
    கவிதை வரிகள் முழுமையாக..

    இதில் எது (உங்கள் பாணியில்
    குடிகார உளறல் ... குடிகாரரே...

    வகுப்பறை தோழர்களே இதில்
    வன்மம் தெளித்த உளறல் உள்ளதா,?

    தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
    இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
    ஞானப் பெண்ணே

    வாழ்வின் பொருள் என்ன
    வாழ்வின் பொருள் என்ன
    நீ வந்த கதை என்ன ?

    நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா
    இல்லை என் பிள்ளை
    எனை கேட்டு பிறந்தானா

    தெய்வம் செய்த பாவம் இது
    போடி தங்கச்சி
    கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

    "ஆதி வீடு அந்தம் காடு"
    இதில் நான் என்ன
    அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருள் என்ன
    நீ வந்த கதை என்ன ?

    வெறும் கோவில்
    இதில் என்ன அபிஷேகம்

    உன் மனம் எங்கும் தெரு கூத்து
    பகல் வேஷம்

    கள்ளிக்கென்ன முள்ளில் வேலி
    போடி தங்கச்சி

    காற்றுக்கேது தோட்டக்காரன்
    இதுதான் என் கட்சி

    கொண்டதென்ன கொடுப்பதென்ன
    இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன
    ஞானப் பெண்ணே

    வாழ்வின் பொருள் என்ன
    நீ வந்த கதை என்ன ?

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
    அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

    மண்ணைத் தோண்டி
    தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

    உண்மை என்ன பொய்மை என்ன
    இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருள் என்ன
    நீ வந்த கதை என்ன ?...

    ReplyDelete
  55. மாற்று மதத்தினரை
    வேறுபடுத்தி இழிவாக பேசுவது...

    இயேசு காவியம் தந்த
    இன் தமிழ் வேந்தரை

    கவிஞரை தரம் தாழ்த்தி பேசுவது தான்
    கண்டது(?) போல் பேசுவது..

    இவையெல்லாம் என்ன..?
    இதை இங்குசொல்வதென்ன?

    அறிவின் நிலைப்பாடா..?
    ஆணவத்தின் வெளிப்பாடா,,?

    சிறுகூடல்பட்டியே
    சிந்தனை ஒன்று கூட்டி திரண்டு வருக

    ReplyDelete
  56. ///இந்தப்பாடல் சோக மனத்துடன் , மனநிலை தடுமாறிய ஒருவர், குடித்துவிட்ட ஒருவர் பாடுவதாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். 'சிசுவேஷனு'க்குப் பாட்டு எழுதும் சினிமாப் பாடல் ஆசிரியர்களை அதுதான் அவர்கள் தேர்ந்து அறிந்த‌ கருத்து என்பது போல சித்தரிப்பது அவர்களுக்கு நீங்கள் செய்யும் அவமரியாதை.///

    கவிஞரை அவமானப் படுத்துவதை
    கடுகளவும் பொறுக்க முடியாது..

    மற்றவர்களை குறைத்துப் பேச
    மதிநிறைந்தவர்களால் முடியாது

    உங்களுக்காக இந்த பாடலினை
    உள்ளத்திலிருந்து சுழல விடுகிறோம்

    நீங்கள் சொன்ன அந்த பாடலினையும் அடுத்த பின்ஊட்டத்தில்..

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவச் சிரிப்பு இங்கே

    நீ சிரிக்கும் புன் சிரிப்போ
    ஆனந்தச் சிரிப்பு

    நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்
    நாள் வரும்போது,

    அங்கே சிரிப்பவர் யார்
    அழுபவர் யார் தெரியும் அப்போது


    வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள்
    மனித ஜாதி

    பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள்
    மிருக ஜாதி

    மனிதன் என்ற போர்வையில்,
    மிருகம் வாழும் நாட்டிலே

    நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....

    நாணல் போல
    வளைவதுதான் சட்டமாகுமா?

    அதை வளைப்பதற்கு
    வழக்கறிஞர் பட்டம் வேணுமா?

    தர்மத் தாயின் பிள்ளைகள்
    தாயின் கண்ணை மறைப்பதா?

    உண்மைதன்னை ஊமையாக்கி
    தலைகுனிய வைப்பதா?


    தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ

    அதைக் கேள்வி கேட்க
    ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..

    நான் ஒரு கை பார்க்கிறேன்
    நேரம் வரும் கேட்கிறேன்

    பூனை அல்ல புலி தான் என்று
    போகப் போகக் காட்டுகிறேன்

    ReplyDelete
  57. //இயேசு காவியம் தந்த
    இன் தமிழ் வேந்தரை //

    பிற‌ந்த வீட்டுப் பெருமையை உடன் பிற்ந்தோரிடம் சொல்ல வேண்டாம்.
    இயேசு காவியம் எழுத வைத்த‌வர்கள் செய்த தந்திரம் எல்லாம் புரியாத மந்திரம் அல்ல!
    பூனை எப்போதோ புலி என்று காட்டியிருக்க வேண்டும்.
    பல கேள்விகள் இன்னும் தொங்ல்களில்தான் உள்ளன‌. 'கைவம்' வரை!

    ReplyDelete
  58. நேரடியாகக் கேள்விகள்:

    1.ஹலால் புலால் என்பது என்ன?
    2.அரபு மந்திரம் சொல்லி கழுத்து அறுக்கப்படாத ஆட்டினை நீங்கள் பெரிதும் கொண்டாடும் மா(வே)ற்று மதத்தவர் வாங்கி உண்பார்களா?
    3.ஓர் இந்துவின் கசாப்புக்கடையில் மா(வே)ற்று மதத்த‌வர் ஆட்டிறைச்சி வாங்குவாரா?
    4. நீங்கள் கொண்டாடும் அந்த அர‌பு நூலில் இறைச்சி பற்றி 'இயல்பாகக்'கூறும் கருத்துக்கள் யாவை?
    5. அந்த நூல் 72 வகையாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகையில் புரிந்து கொண்டுள்ளீர்கள்?
    6.அந்தணர்கள் தான் இறைச்சி உண்பதை முதலில் கற்பித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
    7.சித்தாந்தம் உங்களுக்கு நன்கு விளங்குகிறதா?
    8.நீங்கள் எந்த வகைச் சைவர்? பாசுபதம்? மாவிரதம்? காபாலம்? வாமம்? வயிரவம்? ஐக்கியவாதம்?
    பாடாணவாதம்? பேதவாதம்? சிவ சமவாதம்? சங்கிராந்த வாதம்?
    ஈசுர அவிகாரவாதம்? சிவாத்துவிதம்?
    9. வேதாந்தம்(உபநிடதங்கள்) உங்களுக்கு விளங்கவில்லையா?
    10.கண்ணதாசனின் உண்மையான சொரூபம் 'வனவாசம்', 'அர்த்தமுள்ள இந்து மதம்' ஆகியவற்றில் வெளிப்ப‌டுமா? அல்லது 'சிசுவேஷனு'க்கு எழுதிய சினிமாப் பாடல்களிலா?
    11. கண்ணதாசன் தன்னை சைவ சித்தாந்தி என்று சொல்லியுள்ளாரா?
    12. கண்ணதாசன் அத்வைதக் கருத்துக்கள், அல்லது வேதாந்தக் கருத்துக்கள் (சைவ சித்தாந்தம் தனக்குப் புரிவது போல்) புரியவில்லை என்று சொல்லியுள்ளாரா?
    13. கண்ணாதாசனின் மதக் கருத்துக்கள் முடிவானவையா? இந்துமதம், இயேசு மதம் இரண்டைப் பற்றியும் அவர் சொல்லியுள்ளவை கேள்வி கேட்காமல் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
    11.'ஆனந்தா'க்கள் அனைவரும் கம்பி எண்ணுகிறார்கள் என்பது போல் சொன்னது அவர்களுக்குச் சொல்லிய பாராட்டா?

    தமிழ்ப் பாட்டால் அடிக்காமல், ஹாலாஸ்யத்தை உரை நடையில் கேட்டதைப் போல உரைந‌டையில் தெளிவான நேரடியான பதில்கள் அனுப்பவும்.

    புலி இப்போது பாயட்டும்.

    ReplyDelete
  59. ///பல கேள்விகள் இன்னும் தொங்ல்களில்தான் உள்ளன‌.///3////////////////////

    கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது
    கேட்டு வைத்த சட்டமா..?

    மாற்று மதத்தினரை ஏளனம் பேசி
    மதிக்காமலிருப்பதை சொல்வது குற்றமா?

    கவிஞரையும் இழித்துப் பேசி, நான்
    கற்றதே சரியென சொல்லும் திட்டமா?

    "அறிவில் ஆதவன் நான்" என்பதை
    அப்படி சேர்த்து பெற்ற பட்டமா?

    தமக்கு சாதகமானதை கொண்டு
    தன்னை அப்படி காட்டினால் பதவி ஏதும் கிட்டுமா?

    வாழுங்கள் நண்பரே.....
    நல்ல்ல்ல்ல்ல்லா வாழுங்கள்..

    Meaningful SILENCE is always better than
    MeaningLESS WORDS என்ற வாக்கியதை

    மனதில் கொண்டு
    இது போன்ற விமர்சனங்களை ignore செய்தபடி அமைதி கொள்கிறோம்..

    இந்த பாடலை உ(ரை)ரக்க தந்தபடி

    கண் போன போக்கிலே
    கால் போகலாமா

    கால் போன போக்கிலே
    மனம் போகலாமா

    மனம் போன போக்கிலே
    மனிதன் போகலாமா

    மனிதன் போன பாதையை
    மறந்து போகலாமா

    நீ பார்த்த பார்வைகள்
    கனவோடு போகும்

    நீ சொன்ன வார்த்தைகள்
    காற்றோடு போகும்

    ஊர் பார்த்த உண்மைகள்
    உனக்காக வாழும்

    உணராமல் போவோர்க்கு
    உதவாமல் போகும்

    பொய்யான சிலபேர்க்கு
    புது நாகரீகம்

    புரியாத பலபேர்க்கு
    இது நாகரீகம்

    முறையாக வாழ்வோர்க்கு
    எது நாகரீகம்

    முன்னோர்கள் சொன்னார்கள்
    அது நாகரீகம்

    "திருந்தாத உள்ளங்கள்
    இருந்தென்ன லாபம்"

    "வருந்தாத உள்ளங்கள்
    பிறந்தென்ன லாபம்"

    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்

    இவர் போல யார் என்று
    ஊர்சொல்ல வேண்டும்

    ReplyDelete
  60. எனது கட்டுரையை பதிவிட்ட ஆசிரியருக்கும் அதனை பொறுமையாக படித்தும், அதற்கு பின்னூட்டம் இட்ட எனது சகோதர சகோதிரிகளுக்கும் நன்றிகள்....
    நான் குடும்பத்தோடு மலேசிய நாட்டிற்கு மூன்று நாட்கள் (இங்கு சீனப் புத்தாண்டு விடுமுறை) சுற்றுலா சென்று முக்கியமாக எனது ஐந்தாம் அதிபதி செவ்வாய் அவனின் திசை அவனின் புத்தியில் ... பத்துமலையில் நிற்று அருளும் தங்க மகன் அப்பனுக்கு உபதேசித்த எம்பெருமான்... நமது அப்பன் முருகனை தரிசித்து விட்டு நேற்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தேன்... அதனால் ஐயரின் கேள்விகளுக்கு பதில் உடன் எழுத முடியவில்லை... அன்பிற்கினிய கோபாலன் ஐயாவும்... நண்பர் கணேசும் பதில் களைத்தந்து இருக்கிறார்கள்.... மொழி மாறும், நடைமாரும் பெருபாலும் பொருள் ஒன்றே ஆகும் என்பது தான் இன்றைய மதங்களில் கடைபிடிக்கும் வேதங்களின் சாரம் இதுவும் அவ்வாறே!.. உங்களுக்கும் எனது நன்றிகள்...

    ஐயரின் கேள்விகளை நான் புரிந்து கொண்டிருக் கிறவைகளை கொண்டு பதில் தர முயன்று இருக்கிறேன்.... அவரும் அவர் தம் விளக்கத்தை கூற வேண்டு கிறேன்...

    நன்றிகளும் வணக்கமும்.

    ReplyDelete
  61. ஐயரின் கேள்விகளும் அதற்கான எனது புரிந்துணர்வில் பெற்றப் பதில்களும்..

    ///1) ஆன்மா என்பது என்ன உயிர் என்பது என்ன இரண்டும் ஒன்றா வேறா////

    ஆன்மா - அவன்..... உயிர் - அவள்... அவன் நிரந்தரன் / அவள் அவனுள் நிரந்தரம்...

    2) எதற்காக ஒருவன் கரையேற வேண்டும்

    கடலில் இருந்து ஆவியான நீர் கடலைச் சென்று சேர்வது தானே இயல்பு....

    3)கரை ஏறுவதற்கு முன் அவன் எங்கிருந்தான்

    முன் / பின் என்றெல்லாம் இல்லை இருந்தான்? என்பதே நியதிக்கு மாறுபட்டக் கேள்வி இல்லையா?...
    இந்தப் பதிலுக்காகத் தான் அந்தக் கேள்வியா!
    எப்போதும், எங்கும் தான் நிரந்தரமாகவே தான் இருக்கிறான்...

    4) அவனை கடலில் தள்ளியது யார்

    ஐம்புலன் சார்ந்த இந்த அழியும் உடல்...

    5) அவன் என சொன்னதால் ஆனினம் மட்டும் கரையேறாது பெண்னினம் ஏறிடும் என பொருள் கொள்ளலாமா

    இவைகள் எல்லாம் அதனுள் அடக்கம்.... அனைத்துமானவன் அவன்... காதல் என்பது எப்படி திணை / பால் கடந்ததோ! அதைப் போன்றதே!
    எந்த வரையறையும், அவனுக்குள் தான் அடக்கம்.... அவன் இடம், பொருள் காரண காரியத்திற்கும் காலத்திற்கும் அப்பாற் பட்டவன்.

    6) பக்தி என்பது என்ன?

    எந்த அன்பு உண்மையானதோ எந்த அன்பு செலுத்தப் பட வேண்டியதோ.. எந்த அன்பு இரண்டல்லாத ஒன்றானதோ அது...

    7) அறிவது உணர்வது என விளக்கிய அன்பரே.. பார்ப்பது பகிர்வது மகிழ்வது என சித்தர் சொல்வதும் இது தானா அல்லது வேறா.

    ஆம், இவைகள் புலன், புத்தி, அறிவு இவைகளின் செயல்கள்...

    8) பிறப்பதற்கு முன் அதாவது முதல் பிறவியில் இருப்பதற்கு முன் எங்கிருந்தோம்

    இங்கே தாங்கள் கூறுவது உடலை என்று தான் கொள்ள வேண்டும் ஏனென்றால் அது தான் பிறக்கிறது... எதனால் உடல் ஆனதோ அதன் தத்துவமே அது தான்...

    ReplyDelete
  62. 9) கர்மம் என குறிப்பிடுவது எதை

    மனத்தால் செய்த காரியங்கள் யாவும்...

    10) முதல் பிறவியில் நமக்கு கர்மம் எப்படி ஏற்படும்

    கர்மம் என்பதே நமக்கு நாமேத் தேடிக் கொள்வது தானே... அப்படி இருக்க எப்போது ஆத்மா, உடல் எடுத்ததோ! அப்போதே கர்மத்தை ஏற்படும் காரண காரியத்தை உடல் செய்துவிடுமல்லவா.. அது தானே அதன் இயல்பு...

    11) விடு தலை என குறிப்பிடுவது எதை

    உடலின் இயல்பு எது என மேலேக் கூறி இருக்கிறோம் அல்லவா! அந்த இயல்பை வெல்வது ; அதனின் முன் செயலால் விளைந்த பலனை அனுபவிப்பது... மொத்தத்தில் இயற்கையை எதிர்ப்பது அல்லது அதன் வசமாகாது அதனோடு வாழ்ந்து உய்வது...

    அதாவது, எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்வது... அதற்கான தளைகலான விலங்குகளை அறுத்தெறிந்து விடுபடுவது...


    12) தேடுங்கள் கண்டு அடைவீர் என
    சொன்ன ஏசு தேடச் சொன்னது எதை

    யார் என்னை எப்படிப் பார்க்க விரும்பி முயல்கிறார்களோ அப்படி அவர்களுக்கு ஆவேன் என்பது தான் அவருக்கு முன்பும் சொல்லப் பட்டதே!...

    உலகில் உள்ள மதங்களை பின்பற்றுவோர்.. யாவரும் புனிதர்கள் கூற்றை போற்றாது அவர்களையே போற்றித் திரிவதால் தான் எல்லாக் கொளறு படியும்...

    13) வழிபாடு என்றால் என்ன

    பசிக்கும் குழந்தை அழுவது போன்றதொரு உணர்வின் வெளிப்பாடு...

    14) பிறப்பவன் இறக்கிறான் என்றால் ஏன் முதலில் பிறக்கின்றான்..

    பிறப்பது உடலே... முதல் உடல் எப்படி ஏற்பட்டது என்பது தான் கேள்விஎன்றால்... எல்லாமமும் ஆன.... அதாவது காரண காரியங்களுக்கு அப்பார்ப் பட்டவனுக்கு எது காரணம்....

    சங்கல்ப்பம், ஊழி யாவும் அவனின் இயல்பு... (காரணத்திற்கு அப்பாற் பட்டவன்)

    15) இயற்கையை எப்படி இறைவனோடு வேறுபடுத்துகின்றீர்கள்..

    இறைவன் என்பது ஆண் பாலாகவல்லவா சொல்லி இருக்கிறீர்கள்.... சரி, கேள்விக்கு வருவோம்.

    இயற்கை அவனின் உடல் (அதாவது அவனின் உடலின் ஒருத் துளி போன்றதொரு அளவே தான் இந்த பிரபஞ்சம் என்கிறது கீதை..)அதனுள் இருக்கும் இயக்கமும் அவனே ஆனால், அதுவும் ஆத்மாவைப் போன்று அவனில் இருந்து தோன்றியது அவனுள்ளே சென்றும் அடங்கும் (ஊழியில்) பிறகு மீண்டும் வெளிப்படும் அது அவனின் இயல்பு... இயற்கை இருக்கும், மறையும், தோன்றும் ஆனால் என்றும் ஆதி அந்தமில்லாமல் எங்கும் நிறைந்து இருக்கும் (இருக்கும் என்பதே தவறு ஏன்? என்றால் இருக்கும் என்றால் அது ஒரு இட வரையறைக்குள் வந்துவிடும் அதனால் அதை அப்படிக் கூறுவதும் புரிந்து தெளிவு பெரவேண்டியதே!) இப்படியே இயற்கை அதனில் இருந்து வேறுபடுகிறது...

    ReplyDelete
  63. ////தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்////

    அப்படி......

    ////அது தெரியாமல் போனாலே வேதாந்தம்/////

    ////மண்ணைத் தோண்டி
    தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி////

    நீ மண்ணைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும்... உண்மைதான் நீ எண்ணித் தோண்டுவது அதைத் தானே... ஆனால் நான்...

    ////என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி/////

    எதைப் புரியாது என்பதாக நாம் புரிந்துக் கொண்டுள்ளோமோ அதை தான் ஒரே வரியில் கவியரசர் அடுத்த வரியிலே கூறுகிறார்... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் என்று இது தான் வேதாந்தம்...

    நாம் தவறாகப் புரிந்துக் கொண்டதை தர்க்க ரீதியில் கொண்டால்... புரிதல் என்பது அவரின் புரியும் புத்தியைப் பொறுத்ததே... முயன்றால் பரமனையே புரிந்துணரும் பொது ... இவைகள் எல்லாம் அவனுள்ளே அடக்கம் தானே!!! இது என்ன ஐயருக்கு புரியாததா! ஏன்? அடுத்த வரியை ஐயர் குறிப்பிடவில்லை என்று எனக்குப் புரியவில்லை... கவியரசர் அனுபவக் கவியோகி... எதை வேண்டுமானாலும் சொல்லுவான் அவன் எண்ணியதை!. அதே நேரம் அது தவறென்று அவனே கூறுவான் அவன் வாழ்ந்ததை ஒருபாடமாகக் கொண்டு.... அவன் மற்ற யாவரிலும் வேறுபட்டக் கவி.... என்பதே எனது எண்ணம்....

    படித்து ஞானிகள் பலர் அதனுள் சற்று மாறுபட்ட ஞானி இவர்... பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றவனும் இவனே!... இவன் தமிழுக்கு சொந்தக் காரன் அதனாலே எங்களுக்கு உடன்பிறந்தவன் அதனாலே ஒருமையில் அழைக்க உரிமை உண்டு.. அவனிடம் நாங்கள் அன்னியப் படவிரும்பவில்லை... மாறாக அன்நோன்யப் படவே விழைகிறோம்..

    ReplyDelete
  64. நண்பர், பெரியவர், நட்புக்கு சலிப்பில்லா நல்லத் தோழர்... அன்பர் நமது கே.எம்.ஆர்.கே அவர்களின் ஆக்கங்கள் தேர்ந்த சிற்பி செத்துகிய சிலைகளாய்ப் பேசுகிறது... பொதுவாக உணவு என்பது சூழலில் அமைவது... அது அவரவரின் தேவைக்கு (உடலின்) ஏற்றார் போல் இருந்தால் நல்லது என்ற தங்களின் கருத்து தான் எதார்த்தம்... ஆக்கம் நன்று...
    எனது சகோதிரி தேமொழி... அனுபவத்தை அர்த்தமுள்ளதாக தந்தும் அழகிய நடையில் சிறப்பித்து இறக்கிறார்... ஆக்கம் நன்று...

    கவிஞர் தனுசு ஈடுஇணையற்ற இணையத்திற்கு விடுத்த வேண்டுகோளில் கோலோச்சுகிறார்...
    எம் பாராதி கூறுவது போல்... எழுக புலவா!

    பாப்பாவை!... ரெளத்திரம் பழகச் சொன்னான் பாரதி...
    அது சரித்திரத்தோடு நின்றதால்
    ஜான்சி ராணிகள் இப்போது
    பேன்ஸியாக உமிழும் குடுவையை
    உடம்போடு சுமக்கிறார்கள்!...

    ஆனந்த முருகனின் நடப்பு விவகாரம்,
    நாட்டுவிவகாரமும் தந்த ஆக்கம் நன்று.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  65. Happy pray Haalaasyam!Kudos to you and your answers.Keep it up!

    ReplyDelete
  66. ///kmr.krishnan said...
    Happy pray Haalaasyam!Kudos to you and your answers.Keep it up!

    Wednesday, January 25, 2012 11:25:00 AM////

    நன்றிகள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  67. மா(வே)ற்று மதம் எதையும் இழிவு படுத்தவில்லை.

    உணவுக்காக உயிரைக்கொல்லும் போது ஏற்படும் பாவ உணர்ச்சியை நமது மக்கள் படையிலிட்டும், மா(வே)ற்று மதத்தவர் அரபு மந்திரம் சொல்லியும் மனச் சமாதானம் அடைகின்றனர் என்று சொல்லியுள்ளேன்.இதில் மா(வே)ற்று
    மதத்தவரை எங்கே இழிவு செய்துவிட்டேன்?

    ஐயர் உட்பட அந்த மதத்த‌வர்களுக்கு நாம் அனைவருமே 'காஃபிர்'தான். நாசுக்காக 'காஃபிர் என்றால் தங்கள் மதம் சாராதவர்கள் என்றுதான் பொருள் படும்' என்பார்கள்.ஆனால் அதற்கு உள் அர்த்தம் பல உண்டு.

    'புரியாதது வேதாந்தம், என்றும் புரிந்தது சித்தாந்தம்' என்று கண்ணதாசன் முடிந்த முடிவாகக் கூறிவிட்டதைப்போல ஒரு சித்திரத்தைக் கூறியுள்ளார்.

    என் கருத்துப்படி கண்ணதாசனின் மதக் கருத்துக்களை, தத்துவக்கருத்துக்களை தேட வேண்டிய இடம் அர்த்தமுள்ள இந்துமதத்தில்தான்.சினிமாப்பாடல்கள் கொடுக்கும் சிசுவேஷனுக்குத் தகுந்தாற் போல எழுதப்பட்டவை. அவை கண்ணதாசனின் உள்ளக்கிடக்கையை முழுவதும் கூறுவதாகக்கொள்ளமுடியாது.
    இதில் நான் எந்தவகையிலும் கண்ணதாசனை தரம் தாழ்த்திவிடல்லை.
    அவர் கவிஞர்,சினிமாப் பாடலாசிரியரும்தான்.இப்படிச்சொல்வதில் என்ன தவறு? சினிமாப் பாடலாசிரியர் என்று சொல்லிவிட்டதே பெரிய குற்றம் போல
    'பில்ட் அப்'கொடுக்கப்படுகிறது

    ReplyDelete
  68. //கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது
    கேட்டு வைத்த சட்டமா..?//

    கேள்வி கேட்டுத்தான் பழக்கமா?
    பதில் சொல்லிப் பழக்கம் இல்லையா?

    திருவிளையாடல் தருமியோ தாங்கள்?

    "நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?"

    "நானே கேட்கிறேன்? கேட்டுத்தான் பழக்கம்"

    ReplyDelete
  69. நீங்கள் சொல்லும் மா(வே)ற்று மதத்தார் தூண்டுதலில் தாய் மதத்தினை
    இழிவு செய்யும் செய்திகளை ஊதிப் பெரிதுபடுத்தி, எல்லா துறவிகளையும் ஒரே தராசில் வைத்து கம்பி எண்ணச் சொல்கிறீர்களே, அந்தக் கயிலை நாதனுக்குக் காதில் கங்கை நீர் சென்று அடைத்து விட்டதால் நீங்கள் உர(ரை)க்கச் சொல்வது கேட்காது என்ற துணிச்சலா?

    "திருந்தாத ஜன்மங்கள்.." என்று மற்றவரை நீங்கள் உரக்கச்சொன்னால் அது
    கயிலையில்பட்டு உங்களிடமே வந்து சேரும்.

    பலமுறை என்னை 'குடிகாராரே' என்று விளித்துள்ளீர்கள். நான் அதற்கு எந்த எதிர் வினையும் ஆற்றவில்லை. ஒரு சம்வாதம் செய்யும் போது 'பெர்சனல்' ஆக யார் முதலில் அட்டாக் செய்கிறார்களோ அவர்கள் அமைதி இழந்துவிட்டதாகப் பொருள். தாங்கள் அடிக்கடி சொல்லும் அமைதி உங்களுக்கு அந்தக் கயிலைவாசன் அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  70. செடி கொடிகளுக்கு உயிர் இருப்பதால் அதை உண்பது பாவமாகுமா என்பதற்கு எனக்குத் தோன்றிய சிந்தனை:

    நெல் பயிரையோ, கீரைகளையோ, காய்கறிச் செடிகளையோ பருவத்தே அறுவடை செய்யாவிட்டால் அவை வாடி வதங்கி அழுகிப் போய் விடும். அறுவடை காலம் தாண்டி சில மாதங்கள் கூட அத்தகைய செடிகள் தாக்கு பிடிக்காது. ஆனால் ஒரு ஆடோ, மாடோ, கோழியோ கொல்லப்படாவிட்டால் பல வருடம் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

    ஆதலால் இயற்கை மனிதனுக்காகப் படைத்த உணவு சைவம் என்பதே என் கருத்து.

    பைபிளின் பழைய ஏற்பாடும் இதையே சொல்கிறது:

    //அப்பொழுது கடவுள், மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும். //

    ReplyDelete
  71. //அறுவடை காலம் தாண்டி சில மாதங்கள் கூட அத்தகைய செடிகள் தாக்கு பிடிக்காது.//

    ஆம்! நீங்கள் கூறுவது சரிதான்.பழ மரங்களில் கிடைக்கும் பழங்கள் நாமோ அல்லது பற‌வைகளோ உண்ணாவிட்டால் வீணாகிவிடுகின்றன. மேலும் பல தாவரங்கள் தன் இனப்பெருக்கத்திற்குப் பறவைகளையும், மனிதனையுமே நம்பியுள்ளன. ஆனால் ஒரு ஆடோ மாடோ தாங்களே, மனிதனின் உதவி இன்றியே தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

    சிங்கம் போன்றவை பசி நேரம் தவிர மற்ற நேரத்தில் தன் இரையே ஆனாலும் சாது மிருகங்களுக்குத் தொந்திரவு கொடுப்பதில்லை.மனிதன் தேவையில்லாமல் வணிக ரீதியில், சாப்பிடுவதற்காகவே வளர்த்துக் கொல்கிறான்.மிருகங்கள் பசிக்காக மட்டுமே கொல்கின்றன. மனிதனோ ருசிக்காகக் கொல்கிறான்.

    ReplyDelete
  72. ///எல்லா துறவிகளையும் ஒரே தராசில் வைத்து கம்பி எண்ணச் சொல்கிறீர்களே, ///

    கம்பி எண்ணுவ்தாக சொல்லவில்லை
    நீவிர் முயலுக்கு மூணு கால் என்றீர்

    ஆமாம் அதை 1,2,3 என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்றோம்

    இப்படி மாறுபட்டே பொருள் கொண்டு மற்றவர்களை அப்படி பார்த்தால் என்ன பயன்,,?

    அப்படி இனி மாறுபட்ட கோணத்தில் பார்ப்பதில்லை என பின்ஊட்டத்தில் வேறு வாக்குமூலம் தந்தீர்..

    நீயா... நானா.. என்பதல்ல..
    நிதானமாக யோசியுங்கள்...

    தொடங்கியது யார்..
    தொடக்கியது யார்..

    சுவற்றின் மீது எவ்வளவு வேகமாக பந்து எரியப்படுகிறதோ அது அத்தனை வேகமாக எரிந்த திசையிலேயே வரும் என்பதை சொல்வது பிறந்த வீட்டு கதையை உடன் பிறந்தவருக்கு சொல்வது தானே..

    ///பலமுறை என்னை 'குடிகாராரே' என்று விளித்துள்ளீர்கள். நான் அதற்கு எந்த எதிர் வினையும் ஆற்றவில்லை....////

    தாங்கள் லால் குடிகாரர் அதனால் அன்புடன் குடிகாரர் என்றோம்..

    வாத்தியாரை கோட்டைக்காரர் என்கிறோம்..

    பாகப்பிரிவினை படத்தில் எம் ஆர் ராதாவை (சிங்கப்பூரில் இருந்தது வந்ததால்) சிங்கப்பூரான் என்றே கிராமத்து சிவாஜி அழைப்பதாக வருவது தெரியும் தானே தோழரே

    அந்த ஊரை சொல்லி அழைப்பது நடைமுறையில் உள்ளது தானே..

    மேலும் இந்த அடையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவே பின்ஊட்டத்தில் பதிலாக தந்தமையால் தொடர்ந்தோம்..

    நீங்கள் விரும்பவில்லை என்றால் அப்படி விளிப்பதை தவிர்க்கின்றோம்
    அதை வெளிப்படையாகவே சொல்லி இருக்கலாமே நண்பரே..

    /// ஒரு சம்வாதம் செய்யும் போது 'பெர்சனல்' ஆக யார் முதலில் அட்டாக் செய்கிறார்களோ அவர்கள் அமைதி இழந்துவிட்டதாகப் பொருள்....///

    நீங்கள் சொல்வது சரிதான்..
    பெர்சனலாக அட்டாக் செய்(வ)தது யார்

    ///தாங்கள் அடிக்கடி சொல்லும் அமைதி உங்களுக்கு அந்தக் கயிலைவாசன் அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்//

    உங்கள் பிரார்த்னைக்கு நன்றி..
    ஏற்கனவே (தந்து) உள்ளது நிறைய இருக்கிறது அதனால் தான் மற்றவர்களுக்கு அன்புடன் அள்ளித் தருகிறோம்..

    மாசில்லா அன்பினை
    மனவுந்த தந்தபடியே..

    வழக்கம் போல்
    வணக்கமும் வாழ்த்துக்களும்..

    பாடலை நீங்கள் விரும்பாததால்
    பதிவு செய்யவில்லை இங்கு...

    ReplyDelete
  73. //'ஆன‌ந்தா'க்க‌ள் தாங்க‌ள் பிடித்த‌ முய‌லுக்கு மூன்றே கால்க‌ள் என்று நிற்ப‌தில்லை.///
    //ஆம் ஒன்று இரண்டு மூன்று என
    எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்..
    நீங்கள் சொல்லுவது போலவே.அவர்கள்
    நீதி மன்ற தீர்ப்பை எதிர்பார்த்தபடி///

    இதற்குப் பொருள் முயலின் காலை எண்ணுகிறார்கள் என்று கொள்ள வேண்டுமோ? 'நீதிமன்ற'த்தையும் 'எண்ணு'வதையும் கூட்டிப்பார்த்தால்...?
    முயலின் காலா? சிறைக் கம்பியா?

    நீங்கள் விவரமான உரை நடையில் எழுதாதவரை இந்தக்குழப்பங்கள் தவிர்க்க முடியாதவையே.

    ReplyDelete
  74. //இதில் எது (உங்கள் பாணியில்
    குடிகார உளறல் ... குடிகாரரே...//

    இதை நான் லால்குடிக்காரன் என்றபொருளில் எடுத்துக்கொள்ள வேண்டுமோ?

    குடியைப்பற்றிச் சொல்ல வந்த இடத்தில் என்னையும் 'குடிகாராரே' என்று
    அழைத்தால்...? சரி சரி! அவ்வளவு கவிதாநயம் புரிந்து கொள்ள நமக்கு அறிவு இல்லைங்கோ..!

    ReplyDelete
  75. //அப்படி இனி மாறுபட்ட கோணத்தில் பார்ப்பதில்லை என பின்ஊட்டத்தில் வேறு வாக்குமூலம் தந்தீர்..//

    ஆம் உண்மைதான்! நீங்கள் கைலை யாத்திரை சென்று வந்தவர் என்பதால் ஒரு மன நெகிழ்ச்சியில் அப்படிக் கூறினேன்.அது நிரந்தரமாக உங்களூக்கு அளிக்கப்பட்ட 'லைசனஸ்' அல்ல.

    என் வாக்குமூலத்தை நான் கடைப்பிடிக்க வேண்டிய சூழலை உருவாக்கித்தரும் பொறுப்பு உங்களுக்கும் உண்டு.

    வெளிப்படையாகச் சொல்கிறேன். கண்ண‌தாசானின் பாடல்களை ஒரு 'அட்டாக்' ஆகவே பயன் படுத்துகிறீர்கள்.

    உங்களைப் பற்றியோ, உங்கள் கொள்கைகள் இன்னதென்று முழுமையாகத் தெரியாதவர்களிடம், குழப்ப நடையில் விமர்சனம் செய்து வருவதாலேயே
    என் நேரத்தையும் சொற்களையும் வீணடிக்க வேண்டியுள்ளது.

    இந்தப் பின்னூட்டங்களில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், கவனத்தை வேறுபக்கம் திருப்புவது, சம்வாதத்தில் தன் சொல்
    கடைசிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பதான யுக்தியாக இருக்கலாம்.அது அறிவு வளர்ச்சிக்கு உதவாது.

    ஒரு முறை இதுபோல உங்களுக்கு ஒரு செய்தி அதிகம் தெரிந்துள்ளது என்று கருதி, அதனை விரித்துக் கூறலாமே' என்று கேட்ட போது'ஏன் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போகவா?' என்று தாராள மனத்துடன் பதில் அளித்தீர்கள்.போகட்டும் விடுங்கள்.

    மையப்புள்ளிக்கு மீண்டும் அழைக்கிறேன்.

    1.ஹலால் புலால் என்பதைப் பற்றிக் கூறுங்கள்.
    2.உணவைப் பற்றி அந்த அரபு நூல் கூறுவது என்ன?
    3.அந்த அரபு நூலினை 72 வகையாகப் புரிந்து கொண்டுள்ளனர். தங்கள் புரிதல் எந்த தத்துவப் பள்ளியைச் சார்ந்தது?
    4. சைவ சமயம் பலவகைப் படுகிறது.தாங்கள் சார்ந்துள்ள சைவ சமயக் கோட்பாடு எது?
    5. கண்ணதாசன் தன்னை சைவசித்தாந்தி என்று கூறியுள்ளாரா?
    6. கண்ணதாசனுக்கு அத்வைதம், உபநிடதம் புரியவில்லையா?
    7. வேதாந்தம் உங்களுக்குப் புரியவில்லையா?

    கூறுவது கூறல்( கேட்டதையே கேட்டல்) தவிர்க்க இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
  76. //தாவரங்களுக்கும் உயிர் உண்டுதான். ஆனால் அவைகளின் அழிவு ரத்தமும் நிணமுமாக இவ்வளவு மோசமாகவா உள்ளது?//
    உண்மையே...ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்ற ஆண்டு சென்ற போது ஒரு ஆடு பலியிடப்படுவதை பார்த்து நான் அழுததைப் பார்த்து என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் சிரித்தனர்...அதனால் மாமிசத்தை முற்றிலுமாக வெறுக்கின்றேன்,ஆயினும் வேறென்ன செய்ய முடியும் என்னால்?!!!

    ReplyDelete
  77. //அதனால் மாமிசத்தை முற்றிலுமாக வெறுக்கின்றேன்,ஆயினும் வேறென்ன செய்ய முடியும் என்னால்?!!!//

    வருந்த வேண்டாம். உலகத்தோடு ஒட்டித்தான் வாழவேண்டும். அதுவும் உறவினர்களை விட முடியாது. 'ஆட் வும‌ன் அவுட்' என்ற பெயரை ஒரு கூட்டத்தில் வாங்கிக்கொண்டு சகஜ வாழ்வு நடத்த முடியாது.எனவே 'நான் தனி'
    என்ற உணர்வினை அவர்களுக்குத் தோற்றுவிக்காமல், அதே நேரம் புலாலாலை
    கூடியவரை எடுக்காமல் 'பாலன்ஸ்' பண்ணுங்கள்.

    ReplyDelete
  78. கைலாஷ் ஐயர்( ஹாஜி போல கைலாஷ்) அவர்கள், அவருடைய 10 கேள்விகளுக்கு மூன்று பேருடைய பதில்களைப் பெற்று உள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது. இவற்றில் எவை சரி, அவற்றில் உள்ள குறை நிறை என்ன? கைலாஷ்ஜியின் கருத்து என்ன? ஆகியவை பற்றி அவர் விளக்கமாகக் கூறுவது வகுப்பறை மாணவர்கள் அனவருக்கும் பயனுள்ளதாக அமையும்.என் மேல் ஏற்படும் வருத்தங்களுக்கு வகுப்பறையின் அறிவு ஊற்றினைத் தடுக்க வேண்டாம் என்று பணிந்து வேண்டுகிறேன்.

    ஐயரின் வினாக்களுக்கு பதில் கூறிய மூவருக்கும் ஐயர் தனிப்பட்ட மின் அஞ்சல் அனுப்பியிருந்தால் அதனை இங்கே பொதுவில் வைத்தாலே அவர் கருத்தினை நாம் அறிய இயலும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com