மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

1.1.12

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
வாத்தியாரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
------------------------------------------------------
வாழ்க்கை வசப்பட வாழ்த்துக்கள்
--------------------------------------------
தனூர்ராசிக்காரன்

புத்தாண்டு பிறப்பது நமக்காக
புத்துணர்வு தோன்றுவதும் நமக்காக
புதுப்பாதை தேடும் என்தோழா - ஒரு
வார்த்தை உரைப்பேன் கேள்தோழா!

முட்டுக்கட்டை போடும் - எந்த
முகம்தெரியா தடை கண்டும்
மூச்சடைத்து நிற்காதே. - உன்
முடிவை மாற்றாதே.


நித்தமும் தடைகள்.
மொத்தமும் தோல்விகள் .
எதிலும் ஏமாற்றம்
எனும் சோதனையை, வேதனையை - நீ
எதிர்கொண்டால் - அவை
சொல்லாமல் ஓடிவிடும்.

விடாமுயற்சி எனும் சூத்திரங்கள்
தெரிந்து கொண்டால்
பாதைகள் பணிந்துவிடும்.

உன்னைச் சூழும் நெருப்பை - நீ
அள்ளிப் போட்டு அனைத்தால் - அங்கோர்
உலகம் உனக்கென்று தோன்றும்!

எண்ணித் துணிந்தால் கருமம்
துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு - என்னும்
வள்ளுவன் கருத்தை மனதில்வை
வாழ்க்கை உன் வசப்படும்!

-தனூர்ராசிக்காரன்

-----------------------------------------------------------


முல்லைப்பெரியாறும் மண்பானையும்!
--------------------------------------------------
கே. முத்துராமகிருஷ்ணன்!

முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமான போராட்டங்களில் அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளி விட்டு மக்களாகவே போராடத் துவங்கி விட்டனர்.5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால் யாரோ போராடட்டும் என்று கருதாமல் தாங்களாகவே கேரளாவை நோக்கி சாரி சாரியாக மக்கள் கால்நடையாகக் கிளம்பி விட்டனர். உயிருக்கும் அஞ்சாத ஒரு மனப் போக்கைக் காண முடிந்தது.

விதவிதமான போராட்டங்கள் மூலம் தங்கள் மனக் கொந்தளிப்பை மக்கள் காண்பித்தனர்.

உருவ பொம்மை எரிப்பு, கொடும்பாவி எரிப்பு இவற்றையும், மனிதச் சங்கிலி, பட்டினிப் போராட்டம், ஓலமிடும் போராட்டம், ஊர்வலம் போவது இவையெல்லாம் புரிந்து கொள்ள முடிந்தது.

இப் போராட்டங்களுக்கு நடுவே "பானை உடைப்புப் போராட்டம்" ஒன்றும் ஓர் ஊரில் நடந்ததாம். இதற்குத்தான் எனக்குப் பொருள் புரியவில்லை.
பிரதமர் "மவுனமோகன்சிங்"(நன்றி:தினமலர்)அவர்கள் வருகைக்கு எதிராக பானைகள் உடைபட்டன.ஏன் பானைகளை உடைக்க வேண்டும்? அது எப்படி அவர்கள் மன வருத்தத்தினைக் காண்பிக்கும்?

இதைப் பற்றிச் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

இந்த மனித உடலையே ஒரு மண் பாண்டமாக சித்தர்களும் ஞானிகளும் சொல்கிறார்கள்.

"என்பெற்ற தாயாரும் என்னைப்‘பிண’மென்று இகழ்ந்து விட்டார்;
பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!"

இது பட்டினத்தாரின் வரிகள்.

"மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்"

என்பது எரிக்கும் வழக்கம் உடைய சாதியார் அனைவரும் மயானத்தில் செய்யும் ஒரு சடங்காகும்.இறந்த உடலைச் சுற்றி மூன்று முறை வல‌மும் இடமுமாக இறந்தவரின் மைந்தர்கள் சுற்றி வருவர். அப்போது முன்னால் சாங்கியங்களைச் செய்யும் தனயன் தோளில் மண்குடம் நீர் நிரப்பித் தூக்கிச்செல்வார். அப்பானையில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துளை அரிவாளால் பொத்து விடப்படும்.அந்த ஓட்டையிலிருந்து நீர் குழாய் போலக் கொட்டும். மூன்று சுற்றுக்குப் பின்னர் அந்த ஓட்டைப் பானை முதுகுப் புறமாகத் தரையில் வீசப்பட்டு நீருடன் உடைக்கப்படும்.

இதைத்தான் பட்டினத்தார் 'மைந்தரும் குடம் உடைத்தார்' என்கிறார்.

"பனிக்குடம் உடைத்து வந்தவன்,மட்குடம் உடைத்துப் போகிறான்"என்பார் கவிஞர் வைரமுத்து.

"விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்."

ஆக,குடம் உடைப்பது ஒரு துக்க நிகழ்ச்சியில்தான். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மனமோகன் சிங் மவுனம் காப்பது பிடிkகாத மக்கள் அவருடைய வருகையை துக்கமாக நினைத்து, துக்கத்தின் போது செய்யும் சாங்கியத்தைச் செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நால் ஆறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைதாண்டி,.."

என்பது சித்தர்(?) பாடல்.இதில் நாலாறு மாதம் என்பது பத்து மாதங்கள்.குயவன் படைப்புக் கடவுள்.தோண்டி என்பது உட‌லுக்கான உவமை.


நாற்ற ம‌டிக்கும் பாண்டம் என்றும், சோறும் கறியும் நிரப்பும் பாண்டம் என்றும் உடலை மட்பாண்டமாகச் சொல்லுவார் பட்டினத்தார்.


பானை உடைப்பு என்பது தீட்டுப் படுதலோடு சம்பந்தப் படுகிறது. போராட்டக்காரர்கள் மனமோகன்சிங் வந்ததால் தீட்டாயிற்று என்று கருதி பானையை உடைத்துப் போராடியிருக்க‌லாம் அல்லவா?பானை உடைப்பது பற்றிச் சொல்லும் போது பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் பற்றி நினைவு வந்தது.


ஒரு குறிப்பிட்ட நாளில் மண் பிள்ளையார்களை வாங்கி முச்சந்தியில் போட்டு உடைத்தார்கள் தி க விசுவாசிகள். தங்கள் மனம் புண் பட்டு விட்டதாகவும், தங்கள் மதம் சார்ந்த கடவுளின் உருவம் இழிவு படுத்தப் பட்டு விட்டதாகவும் பெரியார் மீது வழக்கு வந்தது.பெரியாரின் வக்கீல், பெரியார் வழிபாட்டில் உள்ள எந்தக் கோவில் பிள்ளையாரையும் உடைக்கவில்லை என்றும்,தான் காசு கொடுத்து வாங்கி வழிபடப் படாத, பிள்ளையாரை, ஆவாகனம் செய்யாத மண் பிள்ளையார் பொம்மையையே உடைத்ததாகவும் எனவே யார் மனதையும் புண்படுத்த‌வோ மத நம்பிக்கையை அவமதிக்கவோ இல்லை என்றும் வாதிட்டார்.சுவார‌ஸ்யமான வழக்கு அது.
--------------------------------------------------------------------
இறுதியாக சுயபுராணம் சிறிது.

நான் ஏழாவது படிக்கும் சமயம் நடந்தது. வகுப்பறையில் ஒரு மூலையில் தண்ணீர் பானை வைத்து தினமும் தண்ணீர் முகர்ந்து வைப்பது வழக்கம். அதற்கு மாண‌வர்களுக்கு 'டூட்டி' போடுவார்கள். பானை வாங்கும் செலவு மாணவர்களுடையதே.


வருடக் கடைசியில் இறுதி நாள் தேர்வு முடிந்தவுடன் மாண‌வர்களுக்கு உற்சாகம் அதிக மாகிவிடும். இன்னது செய்கிறோம் என்று தெரியாத வானரப் படையாக மாறிவிடுவார்கள். முதலில் உடைபடுவது வகுப்பின் தண்ணீர்ப் பானைதான்.

அந்த ஆண்டு நான் பானையை மீட்டு உடை ப‌டாமல் வைக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொன்டேன். பானை அருகில் போய் அதனை அணைத்தார்ப் போல அமர்ந்து கொண்டேன்.


அவர்களோ 44 பேர்கள்.நானோ தனி ஆள். நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 10 நிமிடப் போராட்டத்திற்குப் பின்ன‌ர் பானையைப் பிடுங்கி என் தலையில் போட்டு உடைத்தனர்.பானையின் கழுத்து மட்டும் எனக்கு மாலையாகத் தொங்க ஊர்வலமாக அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டுச் சென்றனர்.

இது எப்படி இருக்கு?

வாழ்க வளமுடன்! HAPPY NEW YEAR 2012 TO ONE AND ALL !!!

ஆக்கம்:கே.முத்துரமகிருஷ்ணன்(லால்குடி)
----------------------------------------------------------------------------------------

என்னை விட்டுப் போனவை என்று வரும்?
------------------------------------------------------
கவிதை ஆக்கம்: செந்தில்குமார், புதுச்சேரி

வண்டல்மண் படுகை எங்கே
வரப்புயர்ந்த கதிர்கள் எங்கே
வண்ணமலர்ச் சோலை எங்கே
வட்டமடிக்கும் புள்ளினம் எங்கே

மாரிமழை பெய்தகாலம் எங்கே
மாடுமேய்ந்த புல்வெளி எங்கே
வேரில்பழுத்த பலா எங்கே
வேப்பமரத் தோட்டம் எங்கே

சாலையோரப் பெருமரம் எங்கே
சடுகுடுவிளையாடிய திடல் எங்கே
காளைமாடு கட்டைவண்டி எங்கே
களத்துமேட்டு நெற்குவியல் எங்கே

வயல்வெளி குலவைப்பாட்டு எங்கே
வற்றாத குளங்கள் எங்கே
கயல்விழி மீன்கள் எங்கே
கருவேல மரங்கள் எங்கே

கஞ்சிசுமந்த வஞ்சியர் எங்கே
கண்டாங்கிச் சேலைகள் எங்கே
மஞ்சள்பூசிய மங்கையர் எங்கே
மருதாணி விரல்கள் எங்கே

வஞ்சமின்றி உழைத்தவர் எங்கே
வலைவிரித்து மீன்பிடித்தவர் எங்கே
பஞ்சமின்றிவளமை தந்தவர் எங்கே
பண்புசொன்ன மூத்ததலைகள் எங்கே

அஞ்சுகாசு பொறியுருண்டை எங்கே
அந்தநாள் தோழிமார் எங்கே
பஞ்சுமிட்டாய் விற்றவன் எங்கே
பகிர்ந்துண்ட தோழன் எங்கே

தாயம்விளையாடிய தடம் எங்கே
தர்மர்களின் அரசமரம் எங்கே
தாய்பாடும் தாலாட்டு எங்கே
தாவணிக் கன்னியர் எங்கே

புளியமரத் தேநீர்க்கடை எங்கே
புங்கமரக் குயில்கள் எங்கே
கோலியாடிய சிறுவர் எங்கே
கொம்புத்தேன் ஆலமரம் எங்கே

கும்மியடித்த குமரிகள் எங்கே
கொஞ்சித்திரிந்த கிளிகள் எங்கே
அம்மியரைத்த அன்னையர் எங்கே
அதிகாலை நீராகாரம் எங்கே

கோலாட்டச் சத்தம் எங்கே
கோலமிடும் வஞ்சியர் எங்கே
வேலாட்ட வழிபாடு எங்கே
வேப்பம்பூக் குழம்பு எங்கே

கொட்டாங்குச்சி சிரப்பை எங்கே
கொடுக்காப்புளி மரங்கள் எங்கே
தொட்டாச்சிணிங்கிச் செடிகள் எங்கே
தொன்னையிலைக் கஞ்சி எங்கே

ஊணாங்கொடி ஊஞ்சலாட்டம் எங்கே
ஊத்துநீர்ப் பள்ளம் எங்கே
கோணாங்கிக் குறிசத்தம் எங்கே
கொல்லைப்புறக் குறும்புகள் எங்கே
அஞ்சறைப்பெட்டிச் சீதனம் எங்கே
அள்ளிமுடிசூடும் அழகு எங்கே
மிஞ்சியணி மனையாள் எங்கே
மின்னல் மூக்குத்தி எங்கே

கத்தும் கறவைமாடு எங்கே
கன்றுக் குட்டி எங்கே
சுத்துப்பட்டி வரலாறு எங்கே
சுள்ளிபொறுக்கும் காடு எங்கே

கம்மங்கொல்லை பரணி எங்கே
கதிராடும் சோளம் எங்கே
கம்மாக்கரை கலிங்கி எங்கே
கரைதொடும் நீரலைநுரை எங்கே

மஞ்சுவிரட்டு மாவீரன் எங்கே
மத்தளப் பறையாட்டம் எங்கே
நெஞ்சுர இளவட்டக்கல் எங்கே
நெடுந்தூர நடையாளன் எங்கே

தேரோட்டத் திருநாள் எங்கே
தெப்பக்குளத் தாமரை எங்கே
கரகாட்டம் ஒயிலாட்டம் எங்கே
கந்தன்வள்ளி நாடகம் எங்கே

பூமிதித்திருவிழா அக்கினி எங்கே
பூத்துக்குலுங்கிய வனம் எங்கே
சாமியாடிய பரம்பரை எங்கே
சாப்பிடும் அன்னதானமடம் எங்கே

எங்கே எங்கே எங்கேயென்று
என்மனம் வாடுது இங்கே
பங்குனிபோனால் சித்திரை வருமிங்கே
பழையதுகிட்டுமா எனக்கினி இங்கே?

----புதுகை செந்தில் குமார்.செந்தில் குமார், புதுச்சேரி

+++++++++++++++++++++++++++++++++++++++

46 comments:

csekar2930 said...

எல்லோருக்கும் எனது இனிய 2012 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் .
"எல்லோரும் இன்புற்றி இருக்க நினைப்பதுமே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே "
சந்திரசேகரன்

RAMADU Family said...

Guru Vanakkam,

HAPPY NEW YEAR
LET THIS NEW YEAR 2012 continue to bring happiness and prosperity to all

Ramadu

தேமொழி said...

ஐயா,
புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஐயா எழுத்துருவைப் பெரிதாக்க இயலுமா?
control (and) + போட்டு படிக்கிறேன்.
படித்து முடித்து கருத்து சொல்ல வருகிறேன்.
நன்றி

தேமொழி said...

தனுசுவின் பொருத்தமான புத்தாண்டுக் கவிதை, வாழ்க்கை வசப்படட்டும் ...எழுச்சியூட்டும் வார்த்தைகள், தக்க அறிவுரைக்கு நன்றி (அடுத்த முறை தோழிகளுக்கும் சேர்த்து பாடல் எழுதக் கூடாதா? :)))

தேமொழி said...

KMRK ஐயா உங்கள் கட்டுரை தற்குறிப்பேற்ற அணியைச் சார்ந்ததோ? உண்மையில் இவ்வளவு செய்திகளா பானை உடைப்பதில்? நான் ஏதோ "தண்ணியே இல்லையாம் இந்தப் பானையெல்லாம் எதுக்கு?" அப்படின்னு தூக்கிப் போட்டு உடைத்துக் குறிப்பால் உணர்த்தினார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

தேமொழி said...

எங்கே எங்கே என சுந்தராம்பாள் பாணியில் ஏங்கித் தவிக்கும் கவிஞர் செந்தில்குமார் கவிதை மிக நன்றாக இருக்கிறது. முன்னாள் வாழ்ந்தவர்கள் ஐந்து நூற்றாண்டுகளில் காணாத மாற்றத்தை வெறும் ஐம்பது ஆண்டுகளில் நாம் நம் வாழ்கையில் பார்த்துவிடுவோம் போலிருக்கிறது. வழக்கொழிந்த பலவற்றை உங்கள் கவிதையில் இனம் கண்டேன், சிறிது ஏக்கம்தான். அதனால் என்ன நாம் பலப் புதுமைகளைப் பார்த்துவிட்டோம் இல்லையா, "கண்டேன் புதுமை" என அதைப் பார்த்து திருப்தி அடைய வேண்டியதுதான். நீங்கள் எந்த ஊர் என விளங்கவில்லை (புதுவை = புதுச்சேரி, புதுகை = புதுக்கோட்டை). நீங்கள் இரண்டையுமே குறிபிட்டுள்ளீர்கள்.

thanusu said...

ஞாயிறில் புலரும்
புத்தாண்டே
நீ
அதனனைப் போலவே
யாவருக்கும் பிரகாசமாய் இருக்க
வாழ்த்துக்கள்.

thanusu said...

எனது ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி அய்யா.

kmrk அவர்களே உங்களின்"பானை " பற்றிய படைப்பு நன்று.பானையை காப்பாற்ற நடந்த போராட்டத்தில் தோற்றாலும், அந்த பானை நன்றி மறவாமல் உங்களுக்கு மாலை அனிவித்துள்ளது.

முல்லை பெரியார் பிரச்சனை நிச்சயம் தீரும் அந்த நாள் தொலைவில் இல்லை.சிலரின் சுய லாபத்திற்காகவே இந்த பிரச்சனை தற்போது நடக்கிறது .சுய லாபம் அடைபவர் யார் என்று யாவருக்கும் தெரியும். சிக்கலை உருவாக்கி அதில் இடியாப்பம் செய்து சாப்பிடுபவர்கள் இவர்கள்.

செந்தில் குமார் அவர்களே,

இத்தனைநாள் இருந்தது எங்கே ?
ஏனிந்த தாமதம் இங்கே?
முழங்குது புது சங்கே!
வகுப்பில் தொடங்கட்டும் உன் பங்கே!

நீங்கள் சொன்னது யாவும்,முன்பு ஒரு காலத்திலே..... என்று பழங்கால கதை சொல்வார்கள்.அதுபோல் நாமும் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.நல்ல கவிதை.

minorwall said...

இன்றைக்கு ஹிட் கொடுத்திருக்கும் புதுச்சேரிக் காரர் எங்கே எங்கே என்று ஏங்கித் தவிக்கும் விஷயங்களை புத்தாண்டு கொண்டுவந்து சேர்க்கட்டும்..

தனுசுவின் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி..

உடைஞ்ச பானைத் தலையருக்கு ஸ்பெஷல் புத்தாண்டு வாழ்த்துக்களும்..நன்றிகளும்..

minorwall said...

சக வாசகர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

வாத்தியாருக்கு ஒரு ஸ்பெஷல் புத்தாண்டுப் பூங்கொத்தை அளித்து வாழ்த்தி மகிழ்கிறேன்..

sriganeshh said...

எல்லோருக்கும் எனது இனிய 2012 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

@தனூர்ராசிக்காரன்,
தங்கள் புத்தாண்டு கவிதை சிறியது ஆனால் கருத்து மற்றும் ஊக்கம் மிகப் பெரிது. நன்றி இது போல் நிறைய எழுத இப்புத்தாண்டில் வாழ்த்துக்கள்.

@minorwall,
happy new year to u also.

suthank said...

வாத்தியார் ஐயா மற்றும் வகுப்பறை மாணவர்கட்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுதன்.க‌
கனடா.

thanusu said...

தேமொழி said...தக்க அறிவுரைக்கு நன்றி (அடுத்த முறை தோழிகளுக்கும் சேர்த்து பாடல் எழுதக் கூடாதா? :)))

உங்களுக்கு (தாய்குலத்திற்கு ) இல்லாத முன்னுரிமையா ? லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் என்று பேசும் ஆங்கிலேயர்களுடன் அதிகமாக பழகும் நான் உங்களை மறப்பேனா? தாங்கள் மட்டும் "புறப்படும் என் தோழமையே " என்று திருத்தி வாசிக்கவும்..

நன்றி தோழி அவர்களே.

ஆமாம் நீங்களும் வாத்தியார்போல் எங்கும் வெளியூர் பயணமா? இரண்டு வாரங்களாக கைவண்ணம் ஏதும் காண வில்லையே.

iyer said...

இது
வருகை பதிவு.

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
//புத்தாண்டு பிறப்பது நமக்காக
புத்துணர்வு தோன்றுவதும் நமக்காக//
புத்தாண்டில் புத்துணர்வூட்டும் கவிதை தந்த தனூர்ராசிக்காரன் அவர்களுக்கு நன்றிகள்...இந்த கவிதைக்கு எம்ஜிஆர் பாடல் ஒன்றின் பல்லவி மிகவும் பொருந்துகிறது...

அர‌சிய‌ல்வாதிக‌ள் செய்கின்ற‌ துரோக‌த்திற்கு மக்க‌ள் செய்கின்ற நியாயமான "நாக‌ரிக‌" எதிர்ப்பான‌ இத‌ற்கு பின்னால் இவ்வ‌ளவு பொருள் இருப்ப‌து என‌க்கு இன்று தான் புரிந்த‌து...
ஒரு மண்பானை க‌தைக்கு kmrk ஐயாவின் "சுய‌புராண‌மே" ப‌த‌ம்...

R.Srishobana said...

செந்தில் குமார் அவர்களின் கவிதை மிக அருமை...இன்று நகரத்தில் வாழும் கிராமத்தில் வளர்ந்தவர்களின் ஏக்கமாய் அமைந்திருந்தது கவிதையின் கரு...எந்தவொரு கிராமத்து நிகழ்வுகளையும் விடாது அழகான கவிதையாய் ஆதங்கத்துடன் வடித்துள்ள தங்களுக்கு நன்றிகள்...

ஜடம் said...

பானை உடைத்து பழமையை
நினைவூட்டி
சாங்கியம் என்ற சகாப்தம்
தொடரும் எழுத்து அருமை!
எதிர்ப்புக்கு இப்படி ஒரு
விளக்கம்

தேமொழி said...

thanusu said...
///ஆமாம் நீங்களும் வாத்தியார்போல் எங்கும் வெளியூர் பயணமா? இரண்டு வாரங்களாக கைவண்ணம் ஏதும் காண வில்லையே.///

இதைப் படித்தால் விட்டில் பூச்சிகள் ஏனோ நினைவுக்கு வருகிறதே!!!
நீங்கள் எல்லோரும் எழுதும் கவிதைகள் பார்த்து நானும் கவிதை எழுத முயன்று கொண்டிருக்கிறேன் (கான மயிலாட கண்டிருந்த வான் கோழி, புலியைப் பார்த்து சூடு போட்ட பூனை).
சும்மா என் தட்டச்சு அதிருதுல்ல... சரியான வார்த்தை கிடைக்காம. ஏதாவது உருப்படியா வந்தா வாத்தியார் பார்வைக்கு அனுப்பி வைக்கலாம், ஹ்ம்ம், எல்லாம் போறாத காலம்தான் (எனக்கு என்று சொல்லவில்லை, அதைக் கவனிக்கவும்).

kannan said...

வணக்கம் ஐயா!

வகுப்பறை வாத்தியார் முதல் சக தோழர்! தோழிகள் ! அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

kmr.krishnan said...

எங்கே எங்கே என்று பட்டியல் இட்ட புதுக்கோட்டைக்கார‌ரே!நல்ல ஆற்றல்தான் உங்களுக்கு.இத்தனை நாள் தாங்கள் இருந்தது எங்கே?

மேரு போன்ற நேரு இறந்த போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எங்கே எங்கே என்று இரங்கற்பா பாடினார்கள்.அதனை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார்கள்.அதனை நினைவு படுத்துவது போல் உள்ளது உங்கள் கவிதை.மேலும் எழுதுங்கள்.வரவேற்கிறோம்.

வில்லின் பெயர் பூண்டாலும் அன்பான சொல்லம்பு வழக்கமாக விடும் தனுசுக்கு
வாழ்த்துக்கள்.

என்னுடைய ஆக்கத்தை ஐயா எடிட் செய்யாமல் வெளியிட்டு வந்தார்கள். தற்சமயம் எடிட் செய்யத் துவங்கி விட்டார்கள்.ஆகவே பானை உடைப்பைப் பற்றிய மேலும் ஓர் ஆய்வுச்செய்தி உங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

பானையை யாகம் செய்யும் போது மட்பாண்டம் என்று சொல்ல மாட்டார்கள்.
'சொர்ண பாத்திரம்' என்று மரியாதையாகச் சொல்வார்கள்.திருமணம், இறப்பு,
கோவில் பூசை அனைத்துக்கும் மண்பாண்டங்கள் பயன் படும்.அந்த‌ந்த செயல்களுக்கான தனி அடையாளப் பாண்ட‌ங்கள் உண்டு.கோட்டு சூட்டு ஆசாமைகள் பானை விற்கும் பாட்டியம்மாவிடம் போனால் எந்தச் செயலுக்காகப் பானை வாங்குகிறாய் என்று கேட்டு அந்த வகைப் பாண்ட‌ங்களைத் தருவார்கள்.பானைக்குப் பின்னால் நமது கலாச்சாரமே இருக்கிறது.

மட்பாண்ட சில்லுகளை வைத்தே நமது புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் அக்கால நாகரீகத்தை எழுதுகிறார்கள். முதுமக்கள் தாழி ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுமே!என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கும் வாசித்த நண்பர்களுக்கும் நன்றி!மீண்டும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

thanusu said...

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்

செய்தி; ஜப்பானில் நிலநடுக்கம் பாதிப்பு ஏதமில்லை. மைனர் அவர்களே தாங்கள் நலமா.

minorwall said...

////////thanusu said...
பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்

செய்தி; ஜப்பானில் நிலநடுக்கம் பாதிப்பு ஏதமில்லை. மைனர் அவர்களே தாங்கள் நலமா.///////

இந்தமுறை எப்போதும் போல வழக்கமாக வரும் இடத்தில் மையம் கொள்ளாமல் எதிர்த் திசையிலே டோக்யோவிலிருந்து தென்கிழக்கிலே 495 கி.மீ. தூரத்திலே அமைந்த ஹச்சியோஜி-izu தீவுகளில் நேற்று மதியம் 2 .28 JST லே நன்கு உணர முடிந்தது..
கடுமையாக சுவர்கள் அசைவை உணர்ந்தேன்..
டேபிளில் இருந்த 40 இன்ச் டிவி சில நிமிடங்கள் பலமாக ஆடி அசைந்தது..அப்புறமாகத்தான் 7 மக்நிட்யுட் என்று நெட்டிலே தேடித் தெரிந்துகொண்டேன்..சம்பவத்தை உணர்ந்த ஒரு நிமிடத்துக்குள்ளேயே டிவியிலே ஃபிளாஷ் நியூஸ் வந்தது.. அந்தந்த ப்ரிஃபெக்சுரல் இடங்களைக் குறிப்பிட்டு ஆங்காங்கே எந்தளவு மக்நிட்யுட் அளவிலே உணரப்பட்டது என்று தெரிந்துகொள்ள முடியும்..
விசாரித்தமைக்கு நன்றி தனுசு அவர்களே..

redfort said...

Dear all,

Wish you a blessing new year 2012.

தேமொழி said...

மைனரின் பின்னூட்டத்தைப் படித்ததால் மனதுக்கு நிம்மதி வந்தது.
உடனே வந்து நிலைமையை அறிவித்ததற்கு நன்றி மைனர்வாள்.

thanusu said...

தேமொழி said...சும்மா என் தட்டச்சு அதிருதுல்ல...

ஆமாம் ஆமாம்
அதிருது அதிருது -கூடவே
என் கைகால் உதறுது உதறுது.

தேமொழி said..நானும் கவிதை எழுத முயன்று கொண்டிருக்கிறேன்

உங்களைப் பார்த்து நான் ஒரு கதை எழுதினால் என்ன என்று யோசித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் நீங்கள் இப்படி .இதற்குத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதா ?

தேமொழி said...உருப்படியா வந்தா வாத்தியார் பார்வைக்கு அனுப்பி வைக்கலாம், ஹ்ம்ம், எல்லாம் போறாத காலம்தான் (எனக்கு என்று சொல்லவில்லை, அதைக் கவனிக்கவும்).

இப்பத்தான் உண்மையிலேயே அதிருது.

இது ரொம்ப ரகசியம் யாருக்கும் சொல்லாதிர்கள்
வார்த்தைகளை தேடாதிர்கள்.வரும் வார்த்தைகள் அனைத்தையும் போடுங்கள். பின் அதிலிருந்து பொருத்தமானதை தேடுங்கள் பிறகு தொடுத்து விடுங்கள்.நான்கு வரிகள் எழுத நாற்பது வரிகளை கண்ணா பின்னா என்று எழுதுங்கள் நமக்கு தேவையான நான்கு வரிகள் அதிலிருந்து கிடைத்துவிடும்.

minorwall said...இந்தமுறை எப்போதும் போல வழக்கமாக வரும் இடத்தில் மையம் கொள்ளாமல்.............

பின்னூட்டம் அனுப்பிவிட்டு அதன் பின் தான் முழுமையாக செய்திகள் பார்த்தேன். ஆள் இல்லாத தீவில் நடந்தது என்று அறிந்து கொண்டேன்

kmr.krishnan said...

http://vagupparai.blogspot.சொம்/

மேற்கண்ட பெயரில் உள்ள‌ ஒரு வலைப்பூவின் மேல் தடுக்கி விழுந்தேன். நல்ல வேளையாக இங்கிருந்து கட்டுரைகளைச் சுடும் ஆட்கள் அல்ல.மேலும் 'கிளாஸ்ரூம்' என்றபெயரில் பல தளங்கள் உள்ளன.


ஜப்பானில் மைனருக்கு பாதிப்பு இல்லை என்று கேட்ட‌தில் மகிழ்ச்சி.அவரை சுனாமியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. நிலநடுக்கமெல்லாம் அவரை நெருங்கவே முடியாது. என்ன சொகிறீர்கள் உமா, தேமொழி &கம்பெனி?

முருகராஜன் said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

தனூர்ராசிக்காரன் கவிதைக்கு வாழ்த்துக்கள்!

மண்பானை பற்றிய செய்தியை தந்த சீனியர் மணவருக்கு வாழ்த்துக்கள்!

தொலைந்து போய்கொண்டிருக்கின்ற தமிழர்களின் வாழ்க்கை சுவடுகள் எங்கே என்று கவிதை வடித்த செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள்!

நன்றி

minorwall said...

////// kmr.krishnan said...
ஜப்பானில் மைனருக்கு பாதிப்பு இல்லை என்று கேட்ட‌தில் மகிழ்ச்சி.அவரை சுனாமியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. நிலநடுக்கமெல்லாம் அவரை நெருங்கவே முடியாது. என்ன சொகிறீர்கள் உமா, தேமொழி &கம்பெனி?/////

அதானே..நாமெல்லாம் யாரு?

இன்னும் எவ்வளோ கதையெல்லாம் விட வேண்டியிருக்கு..எத்தினி பேரை அவுட் ஆக்க வேண்டியிருக்கு..

புதுசா கவிதையெல்லாம் வேற எழுதச் சொல்லி அண்ணன் சிங்கைக் கவிஞர் ஆலாசியம் அவர்கள் வேற ரெம்ப பிரஷர் கொடுத்துக்கிட்டுருக்காக..

இப்படி எழுத்துப் பணி எவ்வளோ பாக்கி இருக்கு..தமிழ் இலேகியத்துத்தூணை
ச்சே..டைப்பிங் மிஸ்..
தமிழ் இலக்கியத்துத் தூணை அவ்வளோ சீக்கிரம் அசைச்சுட முடியுமா?

அதுக்கு முன்னாலே நாமலே
நடுங்கினா எப்புடி.?

minorwall said...

////தேமொழி said...
மைனரின் பின்னூட்டத்தைப் படித்ததால் மனதுக்கு நிம்மதி வந்தது.
உடனே வந்து நிலைமையை அறிவித்ததற்கு நன்றி மைனர்வாள்.////

ஜப்பானியர் மீது பாசம் கொண்டு அக்கறையுடன் நலம் விசாரித்த அன்பு தேமொழி அவர்களுக்கு ஸ்பெஷல் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் நன்றிகளும்..

iyer said...

///இது ரொம்ப ரகசியம் யாருக்கும் சொல்லாதிர்கள்
வார்த்தைகளை தேடாதிர்கள்.வரும் வார்த்தைகள் அனைத்தையும் போடுங்கள். பின் அதிலிருந்து பொருத்தமானதை தேடுங்கள் ///

பொருத்தமானதை தேடச் சொல்வது சரி
நெருக்கமில்லாதவைகளை நீக்கு

என்பதே அய்யரின் ஆலோசனை..
எளிமையாக பையவே சொல்கிறோம்..

கல்லில் தேவையில்லாதவையை நீக்கி
கண்கவர் சிற்பம் வடிப்பது போல்

கல்லைக் கொண்டு கட்டிடம் கட்டுவது
சொல்லைக் கொண்டு கவிதை வடிப்பது

இரண்டிலும் இருக்கும் போது தான்
இன்பம் ரசிக்கும் போதும் இன்பம்..

க(வி)தை மழை பொழியட்டும்
கவிதாயினிகள் வ(ள)ரட்டும்

வாழ்க.. வாழ்க.. என வாழ்த்துவதால்
வாழ்கிறோம் உங்களுடன்(தமிழுடன்)


எழுதுங்கள்.. எழுதுங்கள்..

kmr.krishnan said...

//புதுசா கவிதையெல்லாம் வேற எழுதச் சொல்லி அண்ணன் சிங்கைக் கவிஞர் ஆலாசியம் அவர்கள் வேற ரெம்ப பிரஷர் கொடுத்துக்கிட்டுருக்காக..//

அப்படியா? சரிதான். எதையும் தாங்கும் இத‌யம் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.உங்க பிரஷரை எங்க மேலே எப்போ மாற்றி விடப் போறீங்க?

அந்தக் காலத்தில் "காற்று வாங்கப் போனேன் ஒரு 'கவிதை' வாங்கி வந்தேன்" என்று ஒரு பாடல் உண்டு.இதில் 'கவிதை'யை உற்றுக் கேட்காவிட்டால் 'கழுதை' என்று காதில் ஒலிக்கும்.கவிதையைப் பற்றி அறியாத, கழுதையைப் பற்றி அறிந்த சிறுவர்களாகிய நாங்கள் 'காற்று வாங்கப் போனேன் ஒரு கழுதை வாங்கி வந்தேன்' என்று பாட்டுப் பாடுவோம். "அடேய்! கழுதை உதைக்கும்டா,
அதைப் போய் ஏண்டா வாங்குறீங்க?"என்று சாலையோடு செல்பவர்கள் கூறுவார்கள்.

புருனை வில்லாளன் (எ) சொல்லாளன் கூட வாக்கிங் போகும் போதுதான் கவிதையைக் கவனம் செய்வாராம். நீங்களும் வாக்கிங் போங்க மைனர். கழுதையோடு,சீ சாரி, கவிதையோடு வாருங்கள்.

thanusu said...

தேமொழி said...நானும் கவிதை எழுத முயன்று கொண்டிருக்கிறேன்

iyer said...க(வி)தை மழை பொழியட்டும்
கவிதாயினிகள் வ(ள)ரட்டும்எழுதுங்கள்.. எழுதுங்கள்..

minorwall said...கவிதையெல்லாம் வேற எழுதச் சொல்லி அண்ணன் சிங்கைக் கவிஞர் ஆலாசியம் அவர்கள் வேற ரெம்ப பிரஷர் கொடுத்துக்கிட்டுருக்காக..

kmr.krishnan said...மைனர் கவிதையோடு வாருங்கள்.

ஆகாஹா.... வரும்வாரம் மாணவர் மலர் கவிதைமலராக கனியும் என்று காத்திருக்கிறேன்.

vprasana kumar said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

Bala.N said...

அனைவருககும் புத்தாண்டு வாழ்த்துகள்

SP.VR. SUBBAIYA said...

Uma S umas1234@gmail.com
to "SP.VR.SUBBIAH"
date 3 January 2012 10:42
subject comment
mailed-by gmail.com
Signed by gmail.com
Important mainly because of your interaction with messages in the conversation.

hide details 10:42 (7 hours ago)

இந்த வார வாரமலரில் வெளியான ஆக்கங்கள் அனைத்தும் அருமை. விருச்சிக ராசிக்காரர்கள் பழமையை விரும்புவர்கள் என்ற வகையில் செந்தில்குமாரின் கவிதையை மிகவும் ரசித்தேன். பெருமூச்சுதான் விடமுடிந்தது. ஏதாவது விட்டுப்போயிருக்கிறதா என்று தேடினேன், ம்ஹூம், ஒன்றுமே விட்டிருப்பதாகத் தெரியவில்லை. புத்தாண்டில் ஒரு புதிய கவிஞர் கிடைத்திருக்கிறார். இதுபோன்ற தளம் அமைத்துக்கொடுத்த வாத்தியாருக்கு நன்றி சொல்லவேண்டும். தனுசுவின் கவிதை வழக்கம்போல நன்றாகவே இருந்தது. கிருஷ்ணன் சாரின் ஆக்கத்தைப்படித்த பிறகு அவர் தலைமேல் பானையைப்போட்டு உடைத்த நிகழ்வைக்காண அப்போது நான் பிறக்காமல் போய்விட்டேனே என்ற வருத்தம் மேலிட்டது. ஒரு போட்டோவாவது எடுத்து வெச்சிருந்தா நாங்க எல்லாரும் கண்டுகளித்திருப்போம்.
--------------------------------
வாத்தியாருக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்கள் / தோழிகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!
----------------------------------
புதுசா கவிதையெல்லாம் வேற எழுதச் சொல்லி அண்ணன் சிங்கைக் கவிஞர் ஆலாசியம் அவர்கள் வேற ரெம்ப பிரஷர் கொடுத்துக்கிட்டுருக்காக..//

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி......................?????????????????????????????????????

S.உமா, தில்லி

kmr.krishnan said...

///கிருஷ்ணன் சாரின் ஆக்கத்தைப்படித்த பிறகு அவர் தலைமேல் பானையைப்போட்டு உடைத்த நிகழ்வைக்காண அப்போது நான் பிறக்காமல் போய்விட்டேனே என்ற வருத்தம் மேலிட்டது. ஒரு போட்டோவாவது எடுத்து வெச்சிருந்தா நாங்க எல்லாரும் கண்டுகளித்திருப்போம்.///

ஆமாம்! நாங்க அரசியல்வாதி! எப்பவும் போட்டோக்கு ஏற்பாடாயிடுச்சான்னு விசாரித்துக் கொண்டுதான் வெளியிலேயே கிளம்புவோம்! அவ்விடத்திலே அப்படித்தான் வழக்கமோ, உமாஜி?

krishnar said...

அணைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

minorwall said...

///புதுசா கவிதையெல்லாம் வேற எழுதச் சொல்லி அண்ணன் சிங்கைக் கவிஞர் ஆலாசியம் அவர்கள் வேற ரெம்ப பிரஷர் கொடுத்துக்கிட்டுருக்காக..//

///Uma said
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி......................?????????????????????????????????????

S.உமா, தில்லி////

கொலைவெறியுடன் கூடிய உங்க டைமிங் அட்டாக்கே ஒரு கவிதைதான்..

krishnar said...

///ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி......................?????????????????????????????????????

S.உமா, தில்லி///


யாழில் நடிகர் தனுஷ் க்கு எதிராகக் கிளம்பியுள்ள கொலைவெறி

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1465மானமுள்ள யாழ்ப்பாணத் தமிழன் வெளியிட்டுள்ள கொலைவெறிப்பாடல்: இப் பாடல் தனுஷ் பாடிய பாடலுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளது. தமிழை ஏன் இவ்வாறு கொலைசெய்கிறீர்கள் எனக் கேட்டு இப் பாடல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வந்து பாருங்கள் தமிழ் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரியும் என அதில் சேர்க்கப்பட்டுள்ள வசனங்கள் தூள் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. பாடலைக் கேளுங்கள் !

ananth said...

இது வருகைப் பதிவு என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.

minorwall said...

தமிழன் ஏற்கனவே பல துண்டுகளாய்ச் சிதறிக்கிடக்கும் வேளையில் ஏதோ அத்தி பூத்தாற்போல
ஆங்காங்கே வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது வெகுண்டெழுகிறான்..இப்போது
இதிலே இந்தப் பாடலைக் கையிலெடுத்துக் கொண்டு தமிழனை இலங்கைத்தமிழன்
என்றும் இந்தியத்தமிழன் என்றும் பிரிக்க நினைக்கும் சக்திகளுக்குத் தெரியாமல் துணை போகவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..

யாழ் தமிழ்ப் பாடல் கேட்டேன்..நன்றாக இருந்தது..தமிழ் மேலுள்ள ஆர்வத்தை காட்டும் விதமாய் இருந்தது..அதே நேரம் தனுசுவுக்கு எதிராக ஏவப்பட்டிருப்பது சரியாகப் படவில்லை..


ஆனால் தனுசுவின் கொலைவெறி பாடல் கேட்டதில்லை..ஒருமுறைகூட கேட்கவில்லை..படு ஹிட் ஆகியிருக்கிறது என்பது வரை தெரிந்திருந்தும் ஏனோ நாட்டமில்லை..
ஆனாலும் பெருமளவில் இணையத்தில் தமிழுக்கு எதிராக பாடப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறபடியால் அப்படி என்னதான் இருக்கிறது என்று இப்போதுதான் கேட்டேன்..

எனக்கென்னவோ தமிழை இழிவுபடுத்தி அதிலே ஏதும் வசனங்கள் இருப்பதாக தெரியவில்லை..

'ஒன்லி இங்கிலீஷ்' என்று சொல்லி இருக்கும் இடத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அதை தமிழை இழிவுபடுத்தியதாக நான் நினைக்கவில்லை..வேறெங்கும் ஏதும் உள்ளதா என்று அன்பர்கள் தெரிவித்தால் தெரிந்துகொள்கிறேன்..

வெறும் பாடல்கள் என்ன பெரிய மாற்றத்தைக் கொடுக்குமென்று எனக்குத் தோன்றவில்லை..

நாடாளுமன்றத்துக்கு பலமாக நுழைய பிரதமர் கனவோடு அம்மா அடிஎடுத்துவைத்திருக்கும் பொதுக்குழு விஷயங்கள்தான் தமிழகத்தின் எதிர்வரும் காலத்தின் எதிர்காலம் நோக்கிய பார்வையாக இருக்கமுடியும்..இந்தியாவிலே தொடர்ந்து தமிழன் எந்த நிலையில் இருக்கமுடியும் என்பதற்கு தமிழனின் தற்போதைய ஒட்டுமொத்த பிரதிநிதி அம்மாவின் இந்த எதிர்காலக் கனவுதான் நிதர்சனமான பதில்....
ஒன்றுமே பிரகாசமாகத் தோன்றவில்லை..

ananth said...

நெல்லாடிய நிலம் எங்கே..??
சொல்லாடிய அவை எங்கே..??
வில்லாடிய களம் எங்கே...??
கல்லாடிய சிலை எங்கே...??
தாய்த்தின்ற மண்ணே....??

இந்த பாடலை நினைவுப்படுத்தியது செந்தில் குமார் அவர்களின் கவிதை. இருப்பினும் அவர் கவிதை நன்றாகதான் இருக்கிறது.

//நாற்ற ம‌டிக்கும் பாண்டம் என்றும், சோறும் கறியும் நிரப்பும் பாண்டம்//

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென் என்று
உடம்பினை யானிருந்(து) தோம்புகின் றேனே.
- திருமந்திரம்

இந்த உடலைப் பற்றி இதுதான் சரியான கருத்தாக இருக்க முடியும். இது குறித்த விஷயத்தில் பட்டிணத்தாரின் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. அக்கால ரிஷி முனிவர்கள் முதல் இக்கால சித்தர்கள் வரை இந்த உடலை வைத்துதான் ஆன்மீக சாதனை புரிந்துள்ளார்கள்.

அடுத்து தனுர் ராசிக்காரரின் கவிதை அருமை. புத்தாண்டுக்கு பொருத்தமான கவிதை

kmr.krishnan said...

இங்கே நாள்தோறும் கோவிலில் ஒரு சிறுமியைச் சந்திக்கிறேன். அவள் பேசும் திறனற்றவள். செய்கை மொழிதான். ஆனாலும் அவள் உள்ளக் கிடக்கையை அழகுற வெளிப்படுத்துகிறாள்.எனவே மொழி என்பது அவசியமா, அதிலும் தாய் மொழி என்ற 'கொலைவெறி'யெல்லாம் தேவையா என்று ஆழ்ந்து நினைக்கிறேன். தமிழ் என்னை மீண்டும் 'தமிழ்சாதிய'உணர்விலும், பிராந்திய‌
உணர்விலும் (பிராந்து என்றால் பைத்தியம் என்றும் பொருள் படும்)
த‌ள்ளும் எனில் தமிழை நான் கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லுவேன்.

சென்னைத் தமிழும் ஓர் அழகுதான்.நெல்லைத் தமிழும் மற்றோர் அழகு.இலங்கைத் தமிழ் பிறிதோர் அழகு.ஒரே பொருளுக்குப் பலப்பல சொற்களை
வெவ்வேறு ஊர்க்காரரகள் பயன் படுத்துவர்.வட்டார வழக்கு என்பது எல்லா மொழிகளிலும் உண்டு. ஆங்கிலத்திலும் உண்டு.எனவே ஒரு வட்டார வழக்குதான் சிறந்தது என்பது குறுகிய கண்ணோட்டம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

kmr.krishnan said...

இது குறித்த விஷயத்தில் பட்டிணத்தாரின் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. அக்கால ரிஷி முனிவர்கள் முதல் இக்கால சித்தர்கள் வரை இந்த உடலை வைத்துதான் ஆன்மீக சாதனை புரிந்துள்ளார்கள்.//

உண‌மைததான் ஆன‌ந்த்! எங்க‌ள் இல்ல‌த்திலும் சிறுவ‌ய‌தின‌ரைப் ப‌ட்டின‌த்தார் பாட‌ல்களைப் படிக்க விட மாட்டார்கள். 'குட்டி வேதாந்தம் குடியைக் கெடுக்கும்' என்று கூறி புத்தகத்தைப் பிடுங்குவார்கள்.

இக் க‌ட்டுரையில் உட‌லை ம‌ட் பாண்ட‌மாக‌ உருவ‌கித்துள்ளதைச் சுட்ட‌வே ப‌ட்டின‌த்தார். அவ‌ருடைய‌ விரக்தி ந‌ம‌க்கு வான‌ப்பிர‌ஸ்த‌ நிலையில் வ‌ந்தால் போதுமான‌து

kmr.krishnan said...

நாடாளுமன்றத்துக்கு பலமாக நுழைய பிரதமர் கனவோடு அம்மா அடிஎடுத்துவைத்திருக்கும் பொதுக்குழு விஷயங்கள்தான் தமிழகத்தின் எதிர்வரும் காலத்தின் எதிர்காலம் நோக்கிய பார்வையாக இருக்கமுடியும்..இந்தியாவிலே தொடர்ந்து தமிழன் எந்த நிலையில் இருக்கமுடியும் என்பதற்கு தமிழனின் தற்போதைய ஒட்டுமொத்த பிரதிநிதி அம்மாவின் இந்த எதிர்காலக் கனவுதான் நிதர்சனமான பதில்....
ஒன்றுமே பிரகாசமாகத் தோன்றவில்லை..///


என்ன‌திது மைன‌ர்வாள்? நான் காண்ப‌து க‌ன‌வா அல்ல‌து நினைவா?

அம்மாதான் தமிழனின் ஒட்டு மொத்தப் பிரதிநிதியா? அப்போ 'அவரு'டைய பாத்திரம் என்ன? ஒண்ணுமே புரிய‌ல‌ உல‌க‌த்திலே!ம‌ர்ம‌மா இருக்குது...

த‌ள‌ப‌தி வேறு புது வியூக‌மாம்! பாண்டிநாட்டு சிற்ற‌ர‌ச‌ர் வேறு உருமுகிறாராம்.

காராகிர‌க‌ப்பிர‌வேச‌ம் செய்து க‌ட்சிக்குப் 'பெருமை' சேர்த்த‌ க‌ண்ம‌ணிப் பெண்ம‌ணி வேறு இனி தாத்தா த‌ன் கைப்பாவை என்று சொல்கிறாராம்.

என்ன‌மோ போங்க‌ள். க‌டைசியில் மாண்டியாவா த‌மிழ‌னுக்கு வ‌ழிகாட்ட‌ப் போகிற‌து?

minorwall said...

////kmr.krishnan said...
நாடாளுமன்றத்துக்கு பலமாக நுழைய பிரதமர் கனவோடு அம்மா அடிஎடுத்துவைத்திருக்கும் பொதுக்குழு விஷயங்கள்தான் தமிழகத்தின் எதிர்வரும் காலத்தின் எதிர்காலம் நோக்கிய பார்வையாக இருக்கமுடியும்..இந்தியாவிலே தொடர்ந்து தமிழன் எந்த நிலையில் இருக்கமுடியும் என்பதற்கு தமிழனின் தற்போதைய ஒட்டுமொத்த பிரதிநிதி அம்மாவின் இந்த எதிர்காலக் கனவுதான் நிதர்சனமான பதில்....
ஒன்றுமே பிரகாசமாகத் தோன்றவில்லை..///


என்ன‌திது மைன‌ர்வாள்? நான் காண்ப‌து க‌ன‌வா அல்ல‌து நினைவா?

அம்மாதான் தமிழனின் ஒட்டு மொத்தப் பிரதிநிதியா? அப்போ 'அவரு'டைய பாத்திரம் என்ன? ஒண்ணுமே புரிய‌ல‌ உல‌க‌த்திலே!ம‌ர்ம‌மா இருக்குது...///////

அந்தர் பல்ட்டியெல்லாம் இல்லை.. ஓட்டுப் போட்டு மெஜாரிட்டி அரசமைக்க ஆதரவு தெரிவித்த பெரும்பான்மை மக்களின் கருத்துதான் ஆள்கிறது..அந்த அடிப்படையில் சொன்னேன்..அவர்கள்தான் தமிழ்நாட்டின் தலைவிதி, தமிழனின் தலைவிதியைத் தீர்மானிக்கிறார்கள்..

திமுக எதிர்க்கட்சியாகக் கூட இருக்கமுடியாத நிலைக்குத் துரத்தியதும் அவர்கள்தான்..என் ஒரு ஒட்டு பாழானது கூட இந்த வகையிலேதான்..

அம்மையார் முன்பெல்லாம் எப்போதுமே திமுக அரசை மைனாரிட்டி அரசு என்றே குறிப்பிடுவார்..அப்போதெல்லாம்
'தோற்று வீழ்ந்திருக்கும் நிலையில் இந்த மைனாரிட்டியாகக் கூட வாக்குப் பெறமுடியாதவர் ஏனிந்த பேச்சு பேசுகிறார்' என்று கொஞ்சம் இளக்காரமாகவேதான் எனக்குத் தோன்றும்..
ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழ்..
உண்மை எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வது என் பண்பு..

அதனாலேதான் 'அம்மையாரின் பிரதமர் கனவுதான் தமிழனின் தற்போதைய எதிர்காலம்' என்று விமர்சித்திருந்தேன்..