மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

28.1.12

காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்!

காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி நான்கு

பாடல்: அவரவர் வாழ்க்கையில்

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலாக் காலம்,
கனவினில் தினம்தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலாக் காலம்,
கனவினில் தினம்தினம் உலா போகும்,

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

காற்றும்கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மழைத்துளிகூட என் தாயின்,
மடியினில் தவழ தினம் ஏங்கும்

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்த்துக் கொள்வோம்,
கத்தும் கடலும் கைக்கு எட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

தாயின் மடியில் தினம் இறந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கருவினில் காலையில் ஒளி பெயர்ந்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்

ஐய்ந்தெழுத்து புது மொழியை,
அரிய வைதாள் என் அன்னை,
அண்ணன் தங்கை அனைவருமே
நேசம் கொண்டோம் தமிழ் மன்னை,

நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொர்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்கப் பசி மறந்தோம்,
ஓற்றைக் கண்ணில் அடி பட்டால்,
பத்துக் கண்ணிலும் வலி கண்டோம்

பள்ளிக்கூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை பொல் வேறொன்றை,

கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிகப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

சேகரித்து வைப்பதற்கு,
தேவை இன்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

படம்: பாண்டவர் பூமி (2001)
பாடல் வரிகள்: கவிஞர்: சிநேகன்
இசை: பரத்வாஜ்
பாடலைப் பாடியவர்: பரத்வாஜ்
இயக்கம்: சேரன்
நடிப்பு: அருண்குமார், ராஜ்கிரன், ஷமிதா
--------------------------------------------------------------------------------


காணொளி: http://youtu.be/8YMebVMXukQ பாடல் உதவி: http://www.youtube.com/user/tube2eelam அவர்களுக்கு நமது நன்றி உரித்தாகுக!
our sincere thanks to the person who uploaded the song in the net
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

11 comments:

Ananthamurugan said...

Good morning!

iyer said...

///ஐய்ந்தெழுத்து புது மொழியை,அரிய வைதாள் என் அன்னை,அண்ணன் தங்கை அனைவருமேநேசம் கொண்டோம் தமிழ் மன்னை,///

///சேகரித்து வைப்பதற்கு,தேவை இன்று எதுவும் இல்லை,இறைவனுக்கும் எங்களுக்கும்,இடைவெளிகள் இருந்ததில்லை///

மனதை தொட்ட வரிகள் இவை
மகிழ்ச்சியாகவே பகிர்ந்து கொள்கிறோம்

வழக்கம் போல்
வாரி தருகிறோம்...

அன்பையும்
அமைதியையும்..

வணக்கம்
வாழ்த்துக்கள்

ananth said...

அருமையான பாடல். வாழ்க்கையில் கழிந்து போன தங்களது பொற்காலத்தை எண்ணி வாழ்பவர்களுக்கு உரிய பாடல். Those were the days என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அந்த நாள் ஞாபகம் என்று தொடங்கும் பழைய பாடல் ஞாபகத்திற்கு வந்தது.

தமிழ் விரும்பி said...

பாண்டவர் பூமி
ஐவரின் பாசத்தை அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருப்பார் சேரன்...
இந்தப் பாடல் அப்படத்தின் உயர்வுக்கு ஒரு சாட்சி....
"காற்றும்கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மழைத்துளிகூட என் தாயின்,
மடியினில் தவழ தினம் ஏங்கும்"

அன்னையின் அன்பின் உயர்வை நெகிழச் செய்த வரிகள்...
நல்லதொருப் பாடல் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

KANNAN said...

Well song sir. I am the first reader of todays post. How it possible sir. It is only by you this early morning you are posting regularly. Well done sir.

thanusu said...

குடும்ப பாசம் என்பதே நம் இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும் . அதிலும் முதலிடம் நம் தென்னிந்தியாவிற்கு .

குடும்ப பாசத்தை தொட்டு வந்த நல்ல பாடல் -முன்பு கேட்டு இருந்தாலும் கவனத்தில் இல்லை . இப்போது கவனத்துடன் கவனிக்கையில் இதமாக தெரிகிறது. தேடி தந்தமைக்கு நன்றிகள் அய்யா.

அன்னை ஊட்டிய பிடி சோறில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றைக் கண்ணில் அடிபட்டால்
பத்து கண்ணில் வலி கண்டோம்

கண்களும் நீர்த்துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை கருப்ப சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை

நான் மிகவும் ரசித்த வரிகள்.

srividhya said...

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்


எவ்வளவு உண்மை, எந்த காலத்திற்க்கும், அனைவருக்கும் ஏற்ற பாடல்.
ஏக்கமில்லாத மனிதரும் உண்டோ!

நிகழ் காலம் எதுவாக இருப்பினும் கடந்த காலம் பொற்காலமே.
பாடல் நினைவூட்டலுக்கு நன்றி .

kmr.krishnan said...

பாண்டவர் பூமிப்பாடல் அழகு. தாயன்பை வெளிப்படுத்தும் இப்பாடல் மஹாகவியின் கண்ணன் என் தாய் பாடலை நினைவுபடுத்தியது.

"உண்ண உண்ணத் தெவிட்டாதே -- அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக்கே -- என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,

கண்ணனெனும் பெயருடையாள், -- என்னைக்
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந் தன் மடியில் வைத்தே -- பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்."

இன்னும் 9 பத்திகள் உண்டு.

புதுமை செய்யும் ஆசிரியருக்குப் பல வந்தனங்கள்.

Maheswaran said...

அழகான பாடல் சினேகன், சேரன் மற்றும் வித்யாசாகர் அவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாத்தியாருக்கும் நன்றி.

RAMADU Family said...

Guru Vanakkam,

Kavidhya padikum podhu, idhu innnum arumai. Thanks for posting this.

RAMADU

தேமொழி said...

ஊஞ்சலாடும் உறவுகள் ?

கண்ணூஞ்சலில் ஆடிடுவோருக்கும்
பொன்னூஞ்சலில் பாடிடுவோருக்கும்
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி சுப லாலி

ஐயா, பதிவுகள் ஊஞ்சல் மயமான மாயம் என்னவோ?

தாயின் மடியை சிலாகிக்கும் நல்லதொரு பாடல், நினைவூட்டியதற்கு நன்றி.

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
...வரிகள் எனக்கும் பொருந்தும்

பள்ளிக்கூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை
...மிக அருமையான வரிகள்

சமீபத்தில் வந்த குடும்ப பாசத்தை காட்டி மனதை தொடும் பிற பாடல்கள் ...
அழகான சின்ன தேவதை - சமுத்திரம்
பச்சை கிளிகள் தோளோடு பாட்டுக் கிளியோ மடியோடு - இந்தியன்
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது - சூரிய வம்சம்

மிகச் சிறந்த நடிகை ஆச்சி வாழ்க ...ஆச்சி வாழ்க