மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.1.12

மாதங்களில் மார்கழி


மாதங்களில் மார்கழி

மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்றார் கண்ண பரமாத்மா. நாளையுடன் மார்கழி முடியப்போகின்றது. அத்துடன் இன்று மார்கழி வெள்ளிக்கிழமை. இன்றைய மலரில் நம் மனம் கவர்ந்த கள்வன் அந்தக் கண்ணனுக்காக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியஒரு பாடலைப் பதிவு செய்துள்ளேன். பாடலைப் படித்தும், கேட்டும் மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------------
ஆயர்பாடி மாளிகையில்

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணையள்ளி மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ

(ஆயர்பாடி)


பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

(ஆயர்பாடி)

நாகப்பதம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - அவன்
மோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும்
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ

கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகைக் காண்பதற்கும் போதைமுத்தம் கேட்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ

(ஆயர்பாடி)
------------------------

குரல்: S P பாலசுப்ரமணியம்
வா¢கள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்காணொளி: http://youtu.be/9aAKw8vEOzI
++++++++++++++++++++++++++++++++++++++++

இடைச் சேர்க்கை

வகுப்பறைக்கு வருபவர்கள் மூன்று வகை:

1. அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வதில் ஆர்வம் உள்ளவர்கள் (இந்த வகையில் வருகிறவர்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே!)

2. ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதற்கு நேரம் இல்லை. ஆனால் வெளியாகும் பாடங்களில் தங்கள் ஜாதகத்துடன் தொடர்புள்ள செய்திகள், குறிப்புக்கள்
வருகின்றனவா என்று பார்க்க வருகிறவர்கள் (70% பேர்கள் இந்தக் கணக்கில் வருவார்கள்)

3. வாத்தியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பெற்று, வெளியாகும் பொது ஆக்கங்களைப் படிக்க வருகிறவர்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்றைய வகுப்பறையில், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய பேப்பர் கட்டிங்குகள் வேண்டுமென்றால் எழுதுங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வகுப்பறையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 2,938 பேர்கள்
நேற்று வந்து விட்டுப்போனவர்கள் 1,550 பேர்கள் (Hit counter மூலம் எண்ணிக்கை தெரியும்)
Paper Cutting குகளைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா?

வெறும் 45 பேர்கள் மட்டுமே!

நாட்டின் மீது உள்ள அக்கறையைப் பார்த்தீர்களா?

இந்த லட்சணத்தில் நாட்டின் ஜாதகத்தை எதற்காக அலச வேண்டும்? அப்படியே அலசினாலும் அந்த 45 பேர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் போதுமா?

யாரையும் குறை சொல்ல முடியாது. பொருளாதார நெருக்கடி நிறைந்த இன்றையச் சூழ்நிலையில் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? யாருக்கு நேரம்உள்ளது?  நாளொன்றிற்கு 24 மணி நேரம் என்பதை நாளொன்றிற்கு 48 மணி நேரமாக இறைவன் மாற்றினால் எல்லாம் சாத்தியப்படும்!

இறைவா, அதை எப்போது செய்வாய்?

நட்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

28 comments:

தேமொழி said...

ஐயா,
எனக்கு மிகவும் பிடித்த பாடலை பதிவிட்டதற்கு நன்றி. மெல்லிசை மன்னரும் கவியரசரும் இணைந்தால் இனிமைக்கு கேட்கவா வேண்டும்?!!! அத்துடன் கண்ணனைப் பற்றி கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை. கல்லூரி நாட்களில் வீணை வகுப்பாசிரியை கற்றுக்கொடுத்து இந்தப் பாடலை வாசித்ததுண்டு. இப்பொழுது பழக்கம் விட்டுப்போய் எதுவும் நினைவில்லை. இனிமையான எஸ்.பி. பாலாவின் குரல் மனதை மயக்கும். எனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாட்டாக இருந்ததால் என் குழந்தைளுக்கு பாடியதுண்டு. என் பாடல் அவர்களை தூங்க வைத்தததா இல்லையா என்பது சர்ச்சைக்குரியது.
மீண்டும் நன்றி.

Sathish K said...

காலை வணக்கம் ஐயா..

பாடலைக் கேட்டுக் கொண்டே பின்னூட்டமிடுகிறேன். சில நேரங்களில் S.P.B. அவர்களின் குரலில் பாடலைக் கேட்கும் போது கண்ணபிரான் அருகில் இருப்பதாய் உணர்வு ஏற்படும்.

அடுத்ததாக புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்கின்றது. TMS மற்றும் கண்ணதாசன்.

பாடலுக்கு நன்றிகள் பல.
-Sathish K

SP.VR. SUBBAIYA said...

இடைச் சேர்க்கை

வகுப்பறைக்கு வருபவர்கள் மூன்று வகை:

1. அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வதில் ஆர்வம் உள்ளவர்கள் (இந்த வகையில் வருகிறவர்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே!)

2. ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை. ஆனால் வெளியாகும் பாடங்களில் தங்கள் ஜாதகத்துடன் தொடர்புள்ள செய்திகள், குறிப்புக்கள்
வருகின்றனவா என்று பார்க்க வருகிறவர்கள் (70% பேர்கள் இந்தக் கணக்கில் வருவார்கள்)

3. வாத்தியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பெற்று, வெளியாகும் பொது ஆக்கங்களைப் படிக்க வருகிறவர்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்றைய வகுப்பறையில், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய பேப்பர் கட்டிங்குகள் வேண்டு மென்றால் எழுதுங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வகுப்பறையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 2,938 பேர்கள்
நேற்று வந்து விட்டுப்போனவர்கள் 1,550 பேர்கள் (Hit counter மூலம் எண்ணிக்கை தெரியும்)
Paper Cutting குகளைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா?

வெறும் 45 பேர்கள் மட்டுமே!

நாட்டின் மீது உள்ள அக்கறையைப் பார்த்தீர்களா?

இந்த லட்சணத்தில் நாட்டின் ஜாதகத்தை எதற்காக அலச வேண்டும்? அப்படியே அலசினாலும் அந்த 45 பேர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் அனுப்பினால்
போதுமா?

யாரையும் குறை சொல்ல முடியாது. பொருளாதார நெருக்கடி நிறைந்த இன்றையச் சூழ்நிலையில் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? யாருக்கு நேரம் உள்ளது? நாளொன்றிற்கு 24 மணி நேரம் என்பதை நாளொன்றிற்கு 48 மணி நேரமாக இறைவன் மாற்றினால் எல்லாம் சாத்தியப்படும்!

இறைவா, அதை எப்போது செய்வாய்?

நட்புடன்
வாத்தியார்

தமிழ் விரும்பி said...

கவியரசரின் வரிகளில் தான் கண்ணனேத் தவழ்கிறானே பாருங்களேன்!...

நீலநிறக் கண்ணனவன் தாமரை முகத்தின்
கோலவிழியும் கொஞ்சும் மொழியும்!...

பாலகனே பாரளந்த பரந்தாமனே -உனை
தாலேலோ என்றுப் பாடும்போதே

செந்தாள் நான் பணியும் முன்னமே
மாலேஎன் மனம்உன் மத்தமானதே!..

கானமும், காட்சியும் கவிஞர்தம் சொல்லாட்சியும்
அதனாலே அவரின் தமிழின் மாட்சியும்
அதனோடே கோலோச்சி நிற்கும் இசையும்
இரண்டையும் இதமாய், இனிமையாய் தெய்வீகமாய்,
இதயம் குளிர செய்த அவரின் குரலும்...
இந்தப் பாடலை அதிகாலையிலே
இதயம் கண்டுணர செய்த உங்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

thanusu said...

M .S விஸ்வநாதன்&கண்ணதாசன் கூட்டில் சோடை போனது எதுவுமில்லை.இதில் இளையமையான s .p ,p ,குரல் கூடுதல் போதை.
தேடி தந்தமைக்கு நன்றிகள் அய்யா.

அய்யா கொடுத்த அழைப்பை ஏற்று பலரும் மின்னஞ்சல் முலமாக இந்திய ஜாதகஅலசலை பெற்றிருப்பார்கள் என நினைக்கிறேன்.ஆனால் நான் மின்னஞ்சல் அனுப்பவில்லை. அதனை வகுப்பறையிலேயே படிக்க விரும்புகிறேன்.முடியும் என்றே காத்திருக்கிறேன்.

"தட்டாத கதவு திறக்காது" -பிரஞ்ச் மொழி.

கதவை தட்டிவிட்டு காத்திருக்கிறோம்
திறப்பார் பொறுத்திருப்போம்.

இன்று அவசர பனி நிமித்தம் வியட்நாம் பயணம்.முடித்துவிட்டு மனைவி மகளுடன் மலேசியா இரண்டு தினங்கள்.அதையும் முடித்துவிட்டு திங்கள் அன்று சென்னை.அங்கிருந்து வகுப்புக்கு வருகிறேன்.

விதைத்ததை
வளமாய் வெற்றிகொண்டான் விவசாயி.
விதைக்காமல் முளைக்காது.
அவன்
வழியில் வெற்றிகொள்ள
நாமும் விதைப்போம்........
இயற்கை திருநாள்
வாழ்த்துகள்
வாத்தியாருக்கும்
வகுப்பறை தோழமைக்கும்.

Ananthamurugan said...

அன்பு அய்யா,
மிகவும் அருமையான பாடல்.Ananthamurugan.G

Ananthamurugan said...

Wish you all very Happy Harvest Festival

suthank said...

வாத்தியார் ஐயா வண‌க்கம்,அருமையான கிருஸ்ணகானம் இத்துடன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,டாக்டர். பாலமுரளிகிருஸ்ணாவின்'சின்னக் கண்ணண் அழைக்கிறான் போன்ற80களில்பிரபலமான பாடல்களை இன்றும் கேட்க இனிமையானவை. நாட்டின் ஜாதகம் பற்றிய அலசலை முத‌லில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.அப்பொழுதும் ஐயர் அவர்களின் மறுப்பு பின்னூட்டங்களைப் வாசித்தபோது என்மனதில் ஏதோ இனம் தெரியாதசிக்கல் இருப்பது போன்று தோன்றியது.நீங்கள் இருவரும் முருகப்பெருமானின் பக்த்தர்கள் ஆனபடியாலும்மற்றும் உங்களின் மற்றோறின் நியாயமான கருத்துக்களை மதிக்கின்ற உயர்ந்தபண்பிணாலும் எந்தசிக்கலுமின்றித் தீர்க்கப்பட்டது.உங்களால் நாட்டின் ஜாதகம் அலசப்படவேண்டும் என்று எல்லாம்வல்ல முருகப்பெருமான் நினைப்பானாயின் இன்று இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் நிறைவேற்றியே தீருவான்.நீங்கள் அறியாததல்ல எதோ என் மனதில் பட்டது எழுதிவிட்டேன்.நானும் ஒரு முருகபக்தன்.ஏதும் தவறாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.முடிந்தால் உங்களிடம் உள்ள ப்த்திரிகை தகவல்களை எனக்கும் அனுப்பவும்.நன்றிகள்.
சுதன்.க‌
கனடா.

Kalai said...

thanks for sharing this song sir.
enjoying the music. MS, kannadasan , spb amazing. god blessed those human beings in his super hand.....
kalai seattle

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
///////////////////////// வகுப்பறையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 2,938 பேர்கள்
நேற்று வந்து விட்டுப்போனவர்கள் 1,550 பேர்கள் (Hit counter மூலம் எண்ணிக்கை தெரியும்)
Paper Cutting குகளைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா?

வெறும் 45 பேர்கள் மட்டுமே! /////////////////////////////////
படிக்கும்போது வருத்தமாக உள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறைக்கு வந்துள்ளேன்.வாத்தியார் அவர்களின் எண்ணத்தின் வலிமை எண்னை வகுப்பறைக்கு வரவழைத்துள்ளதாகவே எண்ணுகிறேன்.
Paper Cutting எனக்கும் அனுப்பி வைக்குமாறு,வேண்டுகிறேன்.

minorwall said...

சென்ற வாரம்தான் எதார்த்தமாக இந்தப்பாடலை டிவியில் யூடியூப் லே லயித்துப் பார்த்தேன்..மனதுக்கினிமையான அருமையான பாடல்..

///////அவன்பொன்னழகைக் காண்பதற்கும் போதைமுத்தம் கேட்பதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோ(ஆயர்பாடி)---------////////

கவனித்துக் கேட்டால்
'பொன்னழகைப் பார்ப்பதற்கும்' என்று பாடப்பட்டுள்ளது..

minorwall said...

பேப்பர் கட்டிங் பார்த்தேன்..மிக்க நன்றி..ஆசிரியரே..

காலசர்ப்ப தோஷம் பாதிப்பில் இருந்து எந்தெந்த கிரகங்கள் பாதிப்பில் என்னென்ன நடக்கும் என்றும் கடைசியில் தேசப்பற்றுமிக்க மாவீரன் ஒருவனின் முயற்சியால் எல்லாம் தூக்கி நிறுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது..

எப்போது இதெல்லாம் நடக்கும்? யாரந்த மாவீரன்?
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன்..?அதுவரை ஜனநாயக அமைப்பாகவே இந்தியா இருக்குமா?
முதலில் ஒருங்கிணைந்த அமைப்பாக இருக்குமா?
அண்டை நாடுகள் பலமிகுந்து பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனவே?
இதுகுறித்து குறிப்பாக சைனா மூன்று பக்கங்களில் இருந்தும் அந்நிய எதிரி நாடுகளைத் தன்வசமாக்கி வேலைகளை துரிதப்படுத்தி தீவிரமாக இயங்கிவரும் இந்த வேளையில் இந்த ஒன்றுக்கும் உதவாத ஜனநாயக அமைப்பு இந்தியாவுக்குத் தேவைதானா?
இந்த வழவழ கொழகொழ ஜனநாயகஅமைப்பு நீடிக்குமா?
இல்லை இன்னும் பழைய பஞ்சசீலக் கொள்கையைக் கட்டிக்கொண்டு அழுவதுதான் இந்தியாவின் தலையெழுத்தா?..
நேட்டோ கூட்டணிக்குள் இந்தியா என்ற அளவுக்கு வந்துவிட்ட பின்னும் எதற்கு இந்த தேவையற்ற மிதவாதம்?பொருளாதார அளவிலே மட்டுமே வளர்ந்துவிட்டால் போதுமா?அதிலே கூட சைனாவை மிஞ்ச நிச்சயம் முடியாதுபோன்ற நிலைதான் உள்ளது..பொருளாதாரத்திலே ஒன்றுமேயில்லாத பாகிஸ்தான்,இலங்கை போன்ற சில்லுண்டிகளை எதிர்க்கும் துணிச்சலோ முதுகெலும்புடன் கூடிய செயல்களையோ இந்தியா எதிர்காலத்திலாவது செய்யுமா?
சராசரி மக்களுக்கு வளர்ந்தவெளிநாடுகளில் இருப்பது போன்றதொரு நிம்மதியான சோசியல் செக்யூரிட்டி இந்தியாவில் வர ஏதும் வாய்ப்பு இருக்கிறதா?
இதைப் பற்றியெல்லாம் வெவ்வேறு தளங்களில் தசா புத்தி விவரங்கள் கொண்டு இன்னும் அந்த பேப்பர் கட்டிங்கில் ஏதும் அலசப்படவில்லை..

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அலசுங்கள்.. பேப்பர் கட்டிங்கில் உள்ள விவரங்களை அய்யர் படித்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்..அந்த அடிப்படையிலே அவர் இந்த அவலங்களைப் பட்டியலிட வேண்டாமே என்று தடுத்துக் குரல் எழுப்பியிருக்கலாம்..

நடைமுறையில் எளிதில் நடக்காத விஷயங்களைக் கற்பனையில் எதிர்காலத்திலாவது நடக்காதா என்கிற ஆர்வ மேலீட்டின் அடிப்படையிலேதான் ஒவ்வொருவரும் சோதிடத்தின் பக்கம் பார்வையைத் திருப்புகிறோம்..அந்த விதத்தில் இந்தியாவில் குறைகளைக் களையும் அமைப்பு எந்தவிதத்தில் சாத்தியப்படும் ?என்னென்ன யோகங்கள் இருக்கின்றன?பரல் படி என்ன பலன்கள் என்றெல்லாம் அலசவேண்டும் என்பதே என் அவா.

லக்கினத்தில் 44 பரல்களும் லாபத்தில் 36 பரல்களும் ஐந்தாமிடத்தில் 30 பரல்களும் இருக்கின்ற அருமையான விஷயங்களே என் கண்ணில் படுகின்றன..சனி, செவ்வாயைத் தவிர மற்றெல்லா கிரகங்களுக்கும் சராசரியாக நான்குக்கும் மேல் பரல் இருப்பதுவும் சிறப்பைக் காண்பிக்கிறது..

இன்னும் சொல்லப்போனால் இந்த முண்டேன் அஸ்ட்ரோலஜி படி எந்த விதத்திலே அலசமுடியும் என்பது பற்றி பொது விஷயங்களைப் பற்றி எழுதுவதில் என்ன தவறு?இந்தியாவின் நிலை பற்றி அலசுவதைத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டிருந்தாலும் ஏன் வேறு ஒரு நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகளின் ஜாதகங்களை எடுத்து அலசிப் பார்க்கக் கூடாது?என்று தோன்றுகிறது.. இப்படிச் செய்தால் சுய ஜாதக அலசல் என்றல்லாது போவதால் அய்யர் பச்சைக் கொடி அசைக்க வாத்தியார் மேல்வகுப்பைத் தொடங்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது..

vprasana kumar said...

Arumaiyana paadal, thanks for your effort sit

ananth said...

வேலை பளு காரணமாக சில நாட்களாக வகுப்பறைக்கு வர முடியவில்லை. இந்தியாவின் ஜாதகத்தை அலசினால் மட்டும் என்ன பெரிதாக மாற்றம் வந்து விடப் போகிறது. எல்லாமே எப்போதும் போல்தான் நடக்கும். இருப்பினும் இந்தியாவின் ஜாதகத்தை அலசுவதால் யாருக்கு என்ன கெடுதல்கள் வந்து விடும் என்று தெரியவில்லை. குறிப்பாக ஐயர் அவர்களுக்கு என்ன கெடுதல் நேரும் என்று தெரியவில்லை. ஒரு காரணம் சொல்கிறார். அதை வைத்து சப்பைக் கட்டு கட்டுவதற்கு இன்னும் ஏதேதொ சொல்கிறார். அவர் சொல்வதை வைத்து ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். I'm still not convinced.

SP.VR. SUBBAIYA said...

இன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது. உங்களுடைய பாராட்டுக்களும் நன்றிகளும் அவரையே சேர வேண்டும்.
இன்றையப் பதிவிற்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரும் எனது நன்றி. தனித்தனியாக பதில் பின்னூட்டம் இட நேரமில்லை. மன்னிக்கவும். வெளியூர் பயணத்தில் இருக்கிறேன். நாளைக் காலையில் பதிவின் மூலமாக மீண்டும் சந்திப்போம்

இந்திய ஜாதக அலசலைப் பற்றிய மைனரின் கருத்திற்கும் திருவாளர் ஆனந்தின் கருத்திற்கும் எனது நன்றி. காலம் கனியட்டும் அலசுவோம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்

SP.VR. SUBBAIYA said...

இன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது. உங்களுடைய பாராட்டுக்களும் நன்றிகளும் அவரையே சேர வேண்டும்.
இன்றையப் பதிவிற்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரும் எனது நன்றி. தனித்தனியாக பதில் பின்னூட்டம் இட நேரமில்லை. மன்னிக்கவும். வெளியூர் பயணத்தில் இருக்கிறேன். நாளைக் காலையில் பதிவின் மூலமாக மீண்டும் சந்திப்போம்

இந்திய ஜாதக அலசலைப் பற்றிய மைனரின் கருத்திற்கும் திருவாளர் ஆனந்தின் கருத்திற்கும் எனது நன்றி. காலம் கனியட்டும் அலசுவோம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
நான் கேட்ட இந்த பாடலை பார்த்ததில்லை...காணொளி மூலம் இன்று தான் கண்டு ரசித்தேன்...மிக்க நன்றி ஐயா...
பேப்பர் கட்டிங்களை தந்தமைக்கி மிக்க நன்றிகள்...பேப்பர் கட்டிங்கில் வரும் வெள்ளிமணியில் வெளியான செய்தியை நானும் முன்பு படித்திருந்தேன்...ஆனால் அந்த மாவீரன் யார் என்று சிறிதளவு கூட யூகிக்க முடியவில்லையே?பலர் அந்த மாவீரன் ராகுல் காந்தி என்றும் கூறுகின்றனர்...ஆனால் நிச்சயம் அவராக இருக்க வாய்ப்பேயில்லை காரணம் அவரிடம் நேர்மையில்லை.அத்துடன் அவர் செயல்கள் எல்லாம் எனக்கு போலியாகவே தோன்றுகிறது...பின்பு யார் அந்த மாவீரன் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது!!!

R.Srishobana said...

//நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகளின் ஜாதகங்களை எடுத்து அலசிப் பார்க்கக் கூடாது?என்று தோன்றுகிறது.. //
இதுவும் நல்ல யோசனையாக தான் உள்ளது...அதைப் போலவே மேலை நாடுகளோடு கீழை நாடுகளின் குறிப்பாக பல இன்னல்களை சந்திக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் ஜாதகங்களை அலசலாம் என்பது என் அபிப்பிராயம்...
எல்லாம் சரி,அந்தந்த நாடுகளின் சுதந்திர நாள்கள் வேண்டுமானால் கிடைக்கலாம் ஆனால் அந்த நாடுகள் சுதந்திரம் அடைந்த‌ நேரத்தை எப்படி சேகரிப்பது?இங்கேயும் ஒரு முட்டிக்கட்டை?

iyer said...

//கதவை தட்டிவிட்டு காத்திருக்கிறோம்
திறப்பார் பொறுத்திருப்போம்.//

வாழ்த்திற்கு நன்றிகள் தனுசுகாரரே..
வாழட்டும் வெற்றிப் பொங்கல்..

கதவை தட்டி காத்திருப்பது சரி.. பூட்டிய
கதவுளாயிருந்தால் திறக்காளிருப்பாரோ

இறைவனின் திருமுன்
இன்றும் வேண்டியபடி,,

iyer said...

///பேப்பர் கட்டிங்கில் உள்ள விவரங்களை அய்யர் படித்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்..அந்த அடிப்படையிலே அவர் இந்த அவலங்களைப் பட்டியலிட வேண்டாமே என்று தடுத்துக் குரல் எழுப்பியிருக்கலாம்.....///

அன்பு தோழர் மைனர் அவர்களின்
அந்த கருத்துக்களுக்கு பதில்...

மௌனம்...

iyer said...

///ஐயர் அவர்களுக்கு என்ன கெடுதல் நேரும் என்று தெரியவில்லை. ஒரு காரணம் சொல்கிறார். அதை வைத்து சப்பைக் கட்டு கட்டுவதற்கு இன்னும் ஏதேதொ சொல்கிறார். அவர் சொல்வதை வைத்து ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். I'm still not convinced.///

நன்றி சகோதரர் ஆனந்து அவர்களே..
நாம் சொல்வது அது அது தான்..

சப்பையையும் கட்ட வில்லை
சரியாக படும் படி சொல்ல

அய்யருக்கு கெடுதல் என்பதை வேறுவிதமாய்
அப்படி பாருங்கள் என்கிறோம்..

வணக்கமும்
வாழ்த்துக்களும்

149 said...

மனது மிகவும் வ்லிக்கிறது நேற்று செய்த தவுறுக்காக.


தீனா

149 said...

மிகவும் அற்புதமான பாடல்

தீனா

SP.VR. SUBBAIYA said...

Uma S umas1234@gmail.com

to me
எனக்கு மிகவும் விருப்பமான பாடல். இடைச்சேர்க்கை பற்றி: நானும் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற்றமடைந்ததால் மின்னஞ்சல் அனுப்பவில்லை. தனுசுவின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன். இந்தியாவின் ஜாதக அலசலை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.

எஸ். உமா, தில்லி.

kannan said...

அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு அன்பு மாணவனின் தை பொங்கல் நல் வாழ்த்துகள் .

தாயிடம் இருந்து பிள்ளையை பிரித்து விட்டால் தாய் பிள்ளை உறவு இல்லாமல் போகிவிடுமா என்ன ?.

அதை போலதான் பின்னுட்டம் விடுபவர்களும் ஐயா!

எல்லாம் அறிந்த தாங்களும் மன கலக்கம் அடைந்தாள் மாணவர்களாகிய எங்களுக்கு யார் ஐயா ஆறுதல் கூறுவது?

தாங்களே கூறுங்கள் ஐயா!

ஜடம் said...

ஐயா!

பேப்பர் கட்டிங் .....
நாட்டின் மீதுள்ள அக்கறை என்று தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
Paper Cutting குகளை நம்ப மனமில்லை. தங்கள் அலசலில் நம்பிக்கை வைத்தே பலர்
Paper Cutting குகளை கேட்கவில்லை என்பதே நிஜம்!

Ram said...

Dear Sir,

Kindly think if you flooded with 1500 mails, r u able to go for everyone. and ur mail box also totally flooded with thane cyclone.

so you are escaped from such a bad thing, so if possible pls upload it in blog or your website.

kmr.krishnan said...

"கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்..."என்று இருக்க வேண்டும். 'காற்றினியே'என்று காண்கிறது.