மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.1.12

வழிக்குத் துணை!
வழிக்குத் துணை!

வழிக்குத் துணையாக ஊஞ்சல் பாட்டு!

தைப்பூச முருகனைக் கண்டு மகிழ, காரைக்குடிப் பகுதி மக்கள், பாதயாத்திரையாக பழநிக்குச் செல்வது வழக்கம். பயண தூரம் 160 கிலோமீட்டர்கள். பயண காலம் 7 நாட்கள். பயணிப்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் பேர்கள். சிலர் காவடி எடுத்துக்கொண்டும் செல்வார்கள்.

மாலை நேரத்தில் தாங்கள் செல்லும் வழியில் உள்ள கிராமத்துத் தோட்டம் அல்லது ஊருணிக் கரையில், எடுத்துக் கொண்டு செல்லும் முருக உற்சவ
விக்கிரகத்திற்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள். அத்துடன் முருகனைப் பாலகுமாரனாக்கி உஞ்சல் வைத்து ஆட்டி மகிழ்வார்கள். தாலாட்டுப் பாடல்
ஒன்றையும் பாடி மகிழ்வார்கள். அதற்குப் பெயர் ஊஞ்சல் பாட்டு

அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ, இன்று பதிவில் ஏற்றியிருக்கிறேன். பாடலில் உள்ள எதுகை மோனை, சந்தம், சீர், சொல்விளையாட்டு என்று
எல்லாவற்றையும் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------   
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே

ஆழிப் படுக்கை கொண்டோனின்
அருமை மருகா ஆடுகவே
ஊழி தாண்டி நிற்பானின்
உத்தமச் செல்வா ஆடுகவே

வாழும் மனிதர் யாவருக்கும்
வழிக்குத் துணையாம் வேலவனே
ஆளும் கவலை ஓடிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு
அதற்கு வயிரக் கயிறுமிட்டு
கூடிடும் அடியார் ஆட்டிடவே
குமரா ஊஞ்சல் ஆடுகவே

பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்
பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவே
வாடிடும் பயிர்கள் வளம் பெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

முன்னே பின்னே சென்றாலும்
மூளையில் ஒன்றி நின்றிடுமே
என்னே வாழ்க்கை என்றாலும்
எல்லாம் உன்னைச் சுற்றியதே

குன்றாக் குடியாய் எமைகாக்கும்
குன்றக் குடியின் வேலவனே
கண்ணே மணியே கதிர்வேலா
கவினார் ஊஞ்சல் ஆடுகவே

விண்ணவர் செல்வி தெய்வானை
வேடவர் மகளாம் வள்ளியுடன்
மண்ணகம் சுற்றும் மயிலேறி
மேதகு சேவற் கொடியாட

கொண்டிடுங் காதல் உணர்வோடு
கனிந்த நெஞ்சத் தூஞ்சலிலே
அன்புடன் ஏறி இனிதமர்ந்தே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில்
மாபெரும் அருளுடை வடிவுடனே
பெண்ணின் நல்லார் இருவருடன்
பெருமயில் ஏறி வந்தவனே

கண்ணே தெரியாக் காட்டிடையே
கலங்கித் தவிக்கும் எங்களுக்கே
உன்னால் வழியும் தெரிந்துயர
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆறடி நெடிதாம் உருவுடனே
அடியார்பக்தி உறுவேற
பேரருள் கொண்டாய் பெரும்பேடா
பிள்ளைகள் நலிவினைப் போக்கிடவே

சீரடி வணங்கிட வந்துள்ளோம்
செல்வா அருளைத் தந்திடுவாய்
ஆரிருள் விலகி ஒளிபெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

22 comments:

தேமொழி said...

நல்ல எளிய பொருள் பொதிந்த பாடல். பதிவற்றியதற்கு நன்றி ஐயா.
பாடல் இயற்றியவர் பெயர் குறிப்பிடப்படாத காரணத்தினால் தொன்றுதொட்டு வழங்கி வரும் பாடல் என யூகிக்கிறேன்.
இதன் ஒலி வடிவம் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் தேடிக் கண்டு பிடித்தேன், அந்த சுட்டி கீழே:
http://www.bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=6
அன்னை வேளாங்கண்ணி படத்தில் வரும் "நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாம்" பாடலின் மெட்டில் அமைந்துள்ளது.
ஒருமுறை "வள்ளிக் கணவன் பேரை வழிப் போக்கன் சொன்னாலுமே" பாடலையும் பதிவேற்ற வேண்டுகிறேன்.
நன்றி.

kmr.krishnan said...

ஊஞ்சல் பாட்டு அருமை. எழுதியவர் 'அனானிமஸ்?'

பெரிய கூடத்தில் அழகிய ஊஞ்சலில் தலை வைக்க ஒரு மடியும், கால்பிடிக்க ஒரு மடியும் கிடைத்தால் ஆகா....! முருகன் என்றும் அழகன்; இளைஞன்; கேட்காமலேயே கிடைக்கும்.நான் கேட்டால் மூலையில் உள்ளதுதானே வெளியில் வ‌ரும்?! என்ன மைனர்வாள்...?

Sathish K said...

காலை வணக்கம் ஐயா..

அழகான ஒரு பாடல்.

நேற்று பழனி செல்லத் திட்டமிட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை.

இருப்பினும் எங்கள் பகுதியில் இருக்கும் தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமியை தரிசித்து வந்தோம்.

-Sathish K

iyer said...

நன்றி...
மெய் மறந்து நிற்கிறோம்
எழுத எழுத்துக்கள் முட்டுகின்றன...
முருகா... முருகா....
நன்றி...

தமிழ் விரும்பி said...

அருமையானப் பாடல்... அதை அனுபவித்தே பாடும் பொது தான் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்... தெய்வ சிந்தனையிலே சிந்தையெல்லாம் சிலிர்க்கும் அற்புத உணர்வை அள்ளிக் கொடுக்கும்... ஆன்ம பலம் கூட்டியே ஆறுமுகன் அருளும் கிடைக்கும்....
ஊஞ்சலில் தால்லாட்டு
உமைபாலகனுக்கு பெரும் பாராட்டு,
அதனாலே என் சிந்தையிலே
ஊறிய சிறு தாலாட்டு
அதை இங்கே தருகிறேன்
அவனின் திருப் பாதம் தொட்டு...
*******************************************
சூரனை அழித்த மாவீரனே!
சூட்சுமம் அவிழ்க்கும் தேவனே!!
சுடரே மெஞ்ஞான பேரொளியே!!!

உயிரே! உயிரின் உயிரே!!
உயிரெல்லாம் தொழும் நாதனே!!!
உயிரினிலே உறைவாய் அன்பனே!!!!

மயிலேறி வருவோனே அந்த
கயிலை மலை குமரனே!
வெயிலும் குளிருதையா கந்தா!!
மயில் காவடியாடி வருகையிலே

கருணைக் கடவுளே! கவின்மிகு
கறுத்த வள்ளியின் கருத்தே
உறுத்தும் துன்பமதை உரைத்திடுவேன்
முருகா!! விரைந்தே எனைகாப்பாய்

ஆறுமுகனே! ஞானவேலனே!! அழகினழகே!!!
பார்வதி புதல்வனே! சரவணனே !!
பார்போற்றும் நாயகனே! ஏழையெனை
பார்த்திடுவாய் நின்பாதம் பணிகின்றேன்!.

பதிவிற்கு நன்றிகள் ஆசிரியரே!
அன்புடன்
ஆலாசியம் கோ.

Ananthamurugan said...

Super murugan song thanks...

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் 
உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை 
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் 
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற 

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் 
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அஹம் பிரம்மாஸ்மி

krishnar said...

ஊஞ்சல் பாட்டை வலையேற்றிய வாத்தியாருக்கும், அதனை தேடும்போது புது இணையம் ஒன்றை தேடித்தந்த சகோதரி தேமொழிக்கும் நன்றிகள்.ஊஞ்சல் பாட்டுக்கு தம்பி ஆலாச்சியம் வரைந்த பாடல் கனதி தருகின்றது. தம்பிக்கும் நன்றிகள்.

srividhya said...

முருகன் பாடல் கேட்க கேட்க இனிமை, பாடல் பதிவு அருமை.
நன்றி.

SP.VR. SUBBAIYA said...

///Blogger தேமொழி said...
நல்ல எளிய பொருள் பொதிந்த பாடல். பதிவற்றியதற்கு நன்றி ஐயா.
பாடல் இயற்றியவர் பெயர் குறிப்பிடப்படாத காரணத்தினால் தொன்றுதொட்டு வழங்கி வரும் பாடல் என யூகிக்கிறேன்.
இதன் ஒலி வடிவம் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் தேடிக் கண்டு பிடித்தேன், அந்த சுட்டி கீழே:
http://www.bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=6
அன்னை வேளாங்கண்ணி படத்தில் வரும் "நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாம்" பாடலின் மெட்டில் அமைந்துள்ளது.
ஒருமுறை "வள்ளிக் கணவன் பேரை வழிப் போக்கன் சொன்னாலுமே" பாடலையும் பதிவேற்ற வேண்டுகிறேன்.
நன்றி./////

உங்களின் விருப்பம் நிறைவேறும். குறிப்பிட்டுள்ள பாடலைத் தேடிப்பிடிக்கிறேன். அல்லது நீங்கள் தேடிக்கொடுத்தாலும் சரிதான். நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
ஊஞ்சல் பாட்டு அருமை. எழுதியவர் 'அனானிமஸ்?'
பெரிய கூடத்தில் அழகிய ஊஞ்சலில் தலை வைக்க ஒரு மடியும், கால்பிடிக்க ஒரு மடியும் கிடைத்தால் ஆகா....! முருகன் என்றும் அழகன்; இளைஞன்; கேட்காமலேயே கிடைக்கும்.நான் கேட்டால் மூலையில் உள்ளதுதானே வெளியில் வ‌ரும்?! என்ன மைனர்வாள்...?//////

கால்பிடிக்க கைகள் அல்லவா வேண்டும். காலைக்கிடத்த வேண்டுமென்றால் மடி போதும். சரிதானே சுவாமி?
மூலையா அல்லது மூளையா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Sathish K said...
காலை வணக்கம் ஐயா..
அழகான ஒரு பாடல்.
நேற்று பழனி செல்லத் திட்டமிட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை.
இருப்பினும் எங்கள் பகுதியில் இருக்கும் தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமியை தரிசித்து வந்தோம்.
-Sathish K/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger iyer said...
நன்றி...
மெய் மறந்து நிற்கிறோம்
எழுத எழுத்துக்கள் முட்டுகின்றன...
முருகா... முருகா....
நன்றி.../////

மனம் உருகி நீங்கள் பாடலை ரசித்தமைக்கும், அதனைப் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியதற்கும் நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger தமிழ் விரும்பி said...
அருமையானப் பாடல்... அதை அனுபவித்தே பாடும் பொது தான் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்... தெய்வ சிந்தனையிலே சிந்தையெல்லாம் சிலிர்க்கும் அற்புத உணர்வை அள்ளிக் கொடுக்கும்... ஆன்ம பலம் கூட்டியே ஆறுமுகன் அருளும் கிடைக்கும்....
ஊஞ்சலில் தால்லாட்டு
உமைபாலகனுக்கு பெரும் பாராட்டு,
அதனாலே என் சிந்தையிலே
ஊறிய சிறு தாலாட்டு
அதை இங்கே தருகிறேன்
அவனின் திருப் பாதம் தொட்டு...
*******************************************
சூரனை அழித்த மாவீரனே!
சூட்சுமம் அவிழ்க்கும் தேவனே!!
சுடரே மெஞ்ஞான பேரொளியே!!!
உயிரே! உயிரின் உயிரே!!
உயிரெல்லாம் தொழும் நாதனே!!!
உயிரினிலே உறைவாய் அன்பனே!!!!
மயிலேறி வருவோனே அந்த
கயிலை மலை குமரனே!
வெயிலும் குளிருதையா கந்தா!!
மயில் காவடியாடி வருகையிலே
கருணைக் கடவுளே! கவின்மிகு
கறுத்த வள்ளியின் கருத்தே
உறுத்தும் துன்பமதை உரைத்திடுவேன்
முருகா!! விரைந்தே எனைகாப்பாய்
ஆறுமுகனே! ஞானவேலனே!! அழகினழகே!!!
பார்வதி புதல்வனே! சரவணனே !!
பார்போற்றும் நாயகனே! ஏழையெனை
பார்த்திடுவாய் நின்பாதம் பணிகின்றேன்!.
பதிவிற்கு நன்றிகள் ஆசிரியரே!
அன்புடன்
ஆலாசியம் கோ.//////

நெகிழ்ச்சிதரும் உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Ananthamurugan said...
Super murugan song thanks...
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே/////

நான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். அதில் வந்த பாடலைத் தந்தமைக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger krishnar said...
ஊஞ்சல் பாட்டை வலையேற்றிய வாத்தியாருக்கும், அதனை தேடும்போது புது இணையம் ஒன்றை தேடித்தந்த சகோதரி தேமொழிக்கும் நன்றிகள்.ஊஞ்சல் பாட்டுக்கு தம்பி ஆலாச்சியம் வரைந்த பாடல் கனதி தருகின்றது. தம்பிக்கும் நன்றிகள்./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger srividhya said...
முருகன் பாடல் கேட்க கேட்க இனிமை, பாடல் பதிவு அருமை. நன்றி.////

முருகு என்றால் அழகு. அழகு எப்போதும் இனிமையாகத்தான் இருக்கும். முருகன் பாடல்கள் எப்போதுமே இனிமைதான் சகோதரி!

kmr.krishnan said...

//மூலையா அல்லது மூளையா?//

மூலையேதான்! அதென்ன? மைனர் வந்து இந்த விடுகதையை அவிழ்ப்பார் பாருங்கள்.

minorwall said...

kmr.krishnan said...
//பெரிய கூடத்தில் அழகிய ஊஞ்சலில் தலை வைக்க ஒரு மடியும், கால்பிடிக்க ஒரு மடியும் கிடைத்தால் ஆகா....! முருகன் என்றும் அழகன்; இளைஞன்; கேட்காமலேயே கிடைக்கும்.நான் கேட்டால் மூலையில் உள்ளதுதானே வெளியில் வ‌ரும்?! என்ன மைனர்வாள்...?///

////மூலையா அல்லது மூளையா?//

மூலையேதான்! அதென்ன? மைனர் வந்து இந்த விடுகதையை அவிழ்ப்பார் பாருங்கள்./////

"மாமி வீடு சுத்தம் பண்றதை ஆயுதமாக்கி வூடு கட்டி அடிப்பாரோ?" என்ற பயத்தை உள்ளடக்கிய வாசகம்..

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே..

ananth said...

வெள்ளிக் கிழமைகளை தாங்கள் இங்கு பதிவேற்றும் பாடலால் பக்தி பரவசத்துடன் ஆரம்பிக்க முடிகிறது. நான் பின்னூட்டம் இடுவது மாலை/ இரவு வேளைகளில் என்றாலும் காலையில் ஒரு முறை இங்கு வந்து விட்டுதான் வேலைக்கு செல்வேன். முடியாவிட்டால் அலுவலகத்தில் சிறிது நேரம் ஒதுக்கி படித்து விடுவேன்.

இந்நாட்டில் தைப்பூசம் முருகன் மூலவராக இருக்கும் பலத் திருத்தளங்களில் வெகு விமரிசையாக நடைபெறும். சில மாநிலங்களில் இந்நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு இதுதான் இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

minorwall said...

இந்தப் பதிவு வந்திருக்கும் நன்னேரம் இதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்..

நேற்று இரவு வேலை நேரம் எட்டு மணியளவிலே எதார்த்தமாக ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தேன்..

சந்திர சுக்கிரன் இணைந்து மிக அழகாக எனக்குக் காட்சியளித்தனர்..மிகுந்த அழகுடன் காணப்பட்டன.

கிரகண காலத்திலே டைமண்டு ரிங் போன்ற தோற்றம் தரும் அமைப்பை ஒத்த சந்திரன் முழு வளைய விளிம்பும் தெரிய பிறைச் சந்திரன்
மிக அருகிலே வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவிலே இருந்த சுக்கிரன் என்று எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட இந்த இரண்டு கிரகங்களையும் இந்த நெருக்கத்தில் ஒருசேரக் கண்டதில் ஓர் ஆனந்தம்..

சுக்கிரன் சொன்ன காதல் கவிதையை சந்திரன் ரசித்து வெட்கத்தில் தலை குனிந்தது போன்றதோர் அற்புதக் காட்சியது..

இரண்டு நிமிடங்கள் ரசித்துத் தரிசித்தேன்.. சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட இந்த செய்தியை இன்றுதான் தெரிந்துகொண்டேன்..
தமிழகம்//சந்திரன் அருகே வெள்ளி கோள்: இன்று மாலை காணலாம்

First Published : 26 Jan 2012 01:08:15 AM IST
சென்னை,ஜன.25: வானில் சந்திரன் அருகே மிகவும் பிரகாசமான வெள்ளி கோள் இருப்பதை வியாழக்கிழமை (ஜன.26) மாலை 7 மணிக்குமேல் வானத்தின் மேற்குப் பகுதியில் காணலாம் என சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் அய்யம் பெருமாள் புதன்கிழமை தெரிவித்தார்.////////

kmr.krishnan said...

//"மாமி வீடு சுத்தம் பண்றதை ஆயுதமாக்கி வூடு கட்டி அடிப்பாரோ?" என்ற பயத்தை உள்ளடக்கிய வாசகம்..

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே..//

பலே பாண்டியா! சபாஷ்! அதேதான்!

சிறிய மாமியார் சொன்ன சொல்லடைவுகளில் ஒன்று "அறுபதில் வரும் புறுபுறுப்பு...." இதைச் சொன்னால் வருகிறது பாருங்கள் ஆவேசம்...முருகா, முருகா....

kmr.krishnan said...

//வானில் சந்திரன் அருகே மிகவும் பிரகாசமான வெள்ளி கோள் இருப்பதை வியாழக்கிழமை (ஜன.26) மாலை 7 மணிக்குமேல் வானத்தின் மேற்குப் பகுதியில் காணலாம் என சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் அய்யம் பெருமாள் புதன்கிழமை தெரிவித்தார்.//

நானும் கண்டு மெய்மறந்து நின்றேன்.அதனால் வீடு வந்து சேர நேரமாயிற்று.
பாட்டும் வாங்கினேன்.