Astrology சந்திப்போமா இன்று சந்திப்போமா?
அலசல் பாடம்
“சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப்பற்றி சிந்திப்போமா?”
என்ற பாடல் வரிகள் சித்தி திரைப்படத்தின் பல்லவியாக வரும். காதலி, தன் காதலனிடம் வேண்டுகோள் வைப்பாள். மகிழ்ச்சியாக இருக்கும். காதல் என்றாலே மகிழ்ச்சிதானே!
ஆனால் நான் சொல்லப்போகும் சந்திப்பு வேறு. அது துன்பத்தைக் கொடுக்கக்கூடியது.
சந்திப்பில் துன்பம்கூட இருக்குமா? என்று கேள்வி கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா சந்திப்பிற்கு வேறுவிதமாக விளக்கம் சொல்கிறது. சந்திப்பு அல்லது கூட்டம் என்பது இரண்டு அல்லது அதுக்கு மேற்பட்ட நபர்கள் முன்னேற்பாட்டின் படி ஒரு நோக்குக்காக கூடிவது என்றும், நேரடியாக, அல்லது தொலைபேசி அல்லது இணையம் மூலமாக அந்த சந்திப்பு நிகழலாம் என்றும் சொல்கிறது.
சந்திப்புக்களை வகைப்படுத்தியும் அது கொடுக்கின்றது. திட்டமிடல்/ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், முடிவு செய்தல், சிக்கல் தீர்வு, அணி உருவாக்கம், வெற்றிகளைக் கொண்டாடுதல், ஆதரவு திரட்டல் போன்ற வற்றை சந்திப்பில் நடைபெறும் நிகழ்வுகளாக அது சித்தரிக்கின்றது.
நான் சொல்லவிருக்கும் சந்திப்பு முற்றிலும் மாறானது.
கிரகங்கள் (ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள்) ராசி சந்திப்பில் இருக்கும் நிலையில் பிறந்த ஜாதகனைப் பற்றியது அது.
ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் 12 ராசிகளுக்கும் சேர்த்து மொத்தம் 360 பாகைகள். ஒரு வட்டத்திற்கு 360 பாகைகள்தானே. கிரகங்கள் வட்ட வடிவில்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. நாம் நம் வசதிக்காக சதுரங்களைப் போட்டு ஜாதகங்களை எழுதுகிறோம். ஆனாலும் பாகைகள் மாறாது. ஒவ்வொரு கட்டத்திற்கும் 30 பாகைகள்தான்.
மேஷத்திற்கும் முப்பது பாகைகள்தான் மேஷம் முடிந்து அடுத்து உள்ள ரிஷபத்திற்கும் முப்பது பாகைகள் தான். அதைத் தொடந்து வரும் அத்தனை ராசிகளின் பாகை அளவும் அதுதான்.
----------------------------------------------
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ராசி சந்திப்பில் ஒரு கிரகம் இருந்தால் என்ன ஆகும்?
நெடுஞ்சாலைகளில், சாலையின் மத்தியப் பகுதியில் மஞ்சள் கோடு ஒன்றைப் பட்டையாகத் தெரியும்படி போட்டு இருப்பார்கள். அந்தக்கோடு சாலையை இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கும்.ஒன்று இடது பக்கம் செல்லும் வாகனங்களுக்கு. அடுத்து உள்ளது வலது பக்கப் பாதை. எதிரில் வரும் வாகனங்களுக்கு. keep Left
லேன் மாறி அதாவது பாதை மாறி ஓட்டினால், அல்லது நடுவில் உள்ள மஞ்சள் கோட்டின் மீதே ஓட்டினால் என்ன ஆகும்? நேரம் நன்றாக இல்லை என்றால் அடிபட நேரிடலாம். வீட்டிற்கு திரும்ப முடியாமல் போகலாம்.
ராசி சந்திப்புக்களில் கிரகங்கள் இருந்தாலும் அதே நிலைதான்.
என்ன நிலை? கிரகங்களையும், அதன் காரகத்துவத்தையும் (working nature) வைத்து அந்த நிலைப்பாடுகள் மாறுபடும். துன்பத்தின் அளவு மாறுபடும். கூடலாம் அல்லது குறைவாக இருக்கலாம்.
ராசி சந்திப்பில் இருக்கும் கிரகம், அதாவது ஒரு ராசியின் கடைசி பாகைகளில் இருக்கும் கிரகம் பிரச்சிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
ஒரு உதாரண ஜாதகத்துடன் அதை விளக்கியுள்ளேன். படித்துப் பாருங்கள்.
லக்கினாதிபதி செவ்வாய் உச்சம். ஜாதகன் யோகத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை!
ஏன்?
செவ்வாய் திசையில் ஜாதகனுக்குப் பல பிரச்சினைகள் உண்டாகின. மேலோட்டமாகப் பார்த்துப் பலன் சொல்பவன் லக்கினாதிபதியின் திசை, அவன் உச்சம் பெற்று இருப்பதால், அற்புதமான பலன்கள் உண்டாகும் என்று தவறாகச் சொல்லியிருப்பான்.
மாறாக அந்த திசையில் ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகள். அடிக்கடி வயிற்றுக் கோளாறு. வியாபாரத்தில் கூட்டாளி செய்த மோசடியால் பணப் பிரச்சினை. பண விரையம். வருமானம் சுருங்கிப்போனது. வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலைமையில் ஜாதகன் அல்லாடினான்.
ஏன்?
தசாநாதன் உச்சமாக இருந்தாலும், அவன் அமர்ந்திருக்கும் 10ஆம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் சனி, மறுபக்கம், சூரியனும் ராகுவும். மூன்றுமே தீய கிரகங்கள். உச்சமான செவ்வாயை ஒழுங்காகச் செயல்பட விடவில்லை. அவர் 10ல் ஸ்திரமாக அமர்ந்திருந்தாலும், தொழிலில் பல பிரச்சினைகள்.. செவ்வாய் திசையில் அத்தனை கோளாறுகளும் ஏற்பட்டன.
செவ்வாய் ராசி சந்திப்பில். அத்துடன் வணிகத்திற்கு உரிய கிரகமான புதனும் ராசி சந்திப்பில். இருவரும் சொதப்பல் ஆட்டம் ஆடி ஜாதகனை‘ரன்’ அவுட்டாக்கிவிட்டார்கள்.
இருவரின் நிலைப்பாட்டைப் பாருங்கள் செவ்வாய்க்குப் பன்னிரெண்டில் புதன். புதனுக்கு அடுத்து செவ்வாய். 12/1 நிலைப்பாடு
கேட்கவும் வேண்டுமா?
ஜாதகங்களை இப்படித்தான் சர்ஃப் எக்செல் போட்டு அலச வேண்டும்!
----------------------------------------------
ராசி சந்திப்பின் வகைகள் என்ன? ராசி சந்திப்பிறகான பாகை அளவுகோள்கள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் விரிவாக நாளை அலசலாம். இங்கேயல்ல!
மேல் நிலை வகுப்பில். இங்கே அலசினால் துவைத்துக் காயப்போட்ட துணிகள் எல்லாம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு. ஆகவே மேல்நிலை வகுப்பில் அலசுவோம். வாத்தியாரின் தனி இணைய தளத்தில் அலசுவோம். அதில் உறுப்பினராக இல்லாதவர்கள் எல்லாம், புத்தக வடிவில் மேல் நிலைப் பாடங்கள் வரும்போது படித்துகொள்ளலாம். படித்துத் தெரிந்து கொள்ளலாம்.. அதுவரை பொறுத்திருங்கள்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
இரவும் பகலும் சந்திப்பது, நதியும் கடலும் சந்திப்பது,இரு நதிகள் ஓர் இடத்தில் சந்திப்பது(பவானி, அலஹாபாத்), இதுபோல சந்திப்பில் பலவகை.
ReplyDeleteஎல்லாக் கோவில் யானைகளும் ஓர் ஓய்வெடுப்பு முகாமில் ஆண்டுதோறும் சந்திக்கின்றன.
நம் வகுப்பறை மாணவர்களின் சந்திப்பை நிகழ்த்தலாம். திருச்சி தமிழகத்திற்கு மையமான ஓர் நகரம். இங்கே நிகழ்த்தினால் அடியேன் எல்லா ஏற்பாடும் செய்யக் காத்திருக்கிறேன்.
வழக்கம் போல தங்கள் கட்டுரை உங்களுக்குரிய தனிப் பாணியில் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.நன்றி.
காலை வணக்கம் ஐயா.
ReplyDeleteதெளிவான விளக்கத்துடன் கூடிய பதிவிற்கு எங்கள் நன்றிகள்.
-SATHISH K
அய்யா வணக்கம் என்னுடைய முதல் சந்தேகம் இது ஆனாலும் வகுப்பறையன் அமைதியான மாணவன் நான் .
ReplyDeleteலக்கனதிபதி புதன் மீனத்தில் நீசம் விரயாதிபதி சுக்ரன் அதே மீனத்தில் உச்சம்(10 -ம இடம் ) .ஆனால் நீங்கள் லக்க்னதிபதியும் விரயதிபதியும் ஒன்றாக இருந்தால் அது நல்லது அல்ல என்று கூறியுள்ளதாக ஞாபகம்.இங்கு எதை கணக்கில் கொள்ள வேண்டும் நீசபங்க ராஜயோகமா அல்லது நீங்கள் சொல்லிய CONCEPTA ? மேலும் இதில் குரு சந்திர பரிவர்தனை யோகமும் உள்ளது 10 ம் இட குரு 2 இல் 2 ம் இட சந்திரன் 10 இல் மேலும் குரு ,சுக்ரன் மற்றும் சூரியன் உச்சம் .காலசர்ப்ப தோஷமும் உள்ளது .நன்றி
///நம் வகுப்பறை மாணவர்களின் சந்திப்பை நிகழ்த்தலாம். திருச்சி தமிழகத்திற்கு மையமான ஓர் நகரம். இங்கே நிகழ்த்தினால் அடியேன் எல்லா ஏற்பாடும் செய்யக் காத்திருக்கிறேன்....///
ReplyDeleteவழி மொழிகிறோம்..
வார்த்தைகளாலும் மனதாலும்..
தேதியை குறிப்பிடவா..
தேடியே... குறிப்பு ... இடவா..?
மனந்திறந்த அழைப்பிற்கு
மனதார வாழ்த்துகிறோம்..
உரசல் பற்றிய
ReplyDeleteஅலசல் வழக்கமான பாணியில்அருமை
இப்படி பஞ்ச் கொடுத்து நிறுத்துவதுதான்
போட்டி நிறைந்த உலகிற்கு சரியானது
சொல்லவும் செய்யனும்
சொல்லவும் கூடாது
சபாஷ்...
இந்த வகை பாணிக்கு இது
இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி
sir,
ReplyDeleteit will be so helpful for us if we know when your books are available for public? when it is coming for sale?
//இருவரின் நிலைப்பாட்டைப் பாருங்கள் செவ்வாய்க்குப் பன்னிரெண்டில் புதன். புதனுக்கு அடுத்து செவ்வாய். 12/1 நிலைப்பாடு//
ReplyDeleteஅய்யா இது புரியவில்லை. புதன் செவ்வாய் நிலைப்பாட்டை வைத்து எதைச் சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை.. சற்று விளக்கினால் தேவலாம்..
நன்றி.
உள்ளேன் ஐயா,
ReplyDeleteராசி சந்திப்பில் உள்ள கிரகங்கள் சொதப்பிவிடுகின்றன எனில் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிய வீடும்(10 ம் வீடு~ரிஷபம்~9ல் சூரியன்,11ல் ராகு) மட்டும் தான் சொதப்புமா? இல்லை அதில் பாய் விரித்துப் படுத்திருக்கும் விருந்தாளியும்(புதன்~நட்பு வீடு) சேர்ந்து தான் சொதப்புமா?.அந்த வீட்டுக்கு அதிபதி(சுக்கிரன்உச்சம்) வேறு எங்கேனும் வலிமையாக இருந்தார் என்றால் கொஞ்சம் கை கொடுக்கமாட்டாரா?.
ஐயா வணக்கம்'
ReplyDeleteநல்ல கலகலப்பான தலைப்புடன் தொடங்கியுள்ளீர்கள்.எனக்கு மேல்வகுப்பிற்கு
அனுமதியில்லாத எதனையும் ஆழமாக கற்றுக்கொள்ள முடியவில்லை.உங்களின புத்தகமாவது கிடைத்தால் நன்றாக இருக்கும்.உங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.
சுதன்.க
/////kmr.krishnan said...இரவும் பகலும் சந்திப்பது,
ReplyDeleteஇரவும் பகலும் சந்திப்பது, நதியும் கடலும் சந்திப்பது,இரு நதிகள் ஓர் இடத்தில் சந்திப்பது(பவானி, அலஹாபாத்), இதுபோல சந்திப்பில் பலவகை.
எல்லாக் கோவில் யானைகளும் ஓர் ஓய்வெடுப்பு முகாமில் ஆண்டுதோறும் சந்திக்கின்றன.
நம் வகுப்பறை மாணவர்களின் சந்திப்பை நிகழ்த்தலாம். திருச்சி தமிழகத்திற்கு மையமான ஓர் நகரம். இங்கே நிகழ்த்தினால் அடியேன் எல்லா ஏற்பாடும் செய்யக் காத்திருக்கிறேன்.வழக்கம் போல தங்கள் கட்டுரை உங்களுக்குரிய தனிப் பாணியில் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.நன்றி./////
உங்களின் மேலான அன்பிற்கும் யோசனைக்கும் நன்றி. எனது புத்தகங்களை வெளியிடும் சமயத்தில் நம் வகுப்பறைக் கண்மணிகளின் சந்திப்பை வைத்துக்கொள்ளளாம் என்றுள்ளேன். இடத்தை அப்போது முடிவு செய்துகொள்வோம்!
////Sathish K said...காலை வணக்கம் ஐயா. தெளிவான விளக்கத்துடன் கூடிய பதிவிற்கு எங்கள் நன்றிகள்.
ReplyDelete-SATHISH K/////
நல்லது. நன்றி நண்பரே!
////ANAND said...
ReplyDeleteஅய்யா வணக்கம் என்னுடைய முதல் சந்தேகம் இது ஆனாலும் வகுப்பறையின் அமைதியான மாணவன் நான் .
லக்கனதிபதி புதன் மீனத்தில் நீசம் விரயாதிபதி சுக்ரன் அதே மீனத்தில் உச்சம்(10 -ம இடம் ) .ஆனால் நீங்கள் லக்க்னதிபதியும் விரயாதிபதியும் ஒன்றாக இருந்தால் அது நல்லது அல்ல என்று கூறியுள்ளதாக ஞாபகம்.இங்கு எதை கணக்கில் கொள்ள வேண்டும் நீசபங்க ராஜயோகமா அல்லது நீங்கள் சொல்லிய CONCEPTA ?////
இரண்டு வெவ்வேறு விதமான மாத்திரைகளைச் சாப்பிடும்போது ஏற்படும் விளைவுகள்தான் இதுபோன்ற நிலையிலும் உண்டாகும். That is mixed reult!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////மேலும் இதில் குரு சந்திர பரிவர்தனை யோகமும் உள்ளது 10 ம் இட குரு 2 இல் 2 ம் இட சந்திரன் 10 இல் மேலும் குரு ,சுக்ரன் மற்றும் சூரியன் உச்சம் .காலசர்ப்ப தோஷமும் உள்ளது .நன்றி////
தங்களின் மேலதிக அலசல்களுக்கு நன்றி ஆனந்த்!
/////iyer said...
ReplyDelete///நம் வகுப்பறை மாணவர்களின் சந்திப்பை நிகழ்த்தலாம். திருச்சி தமிழகத்திற்கு மையமான ஓர் நகரம். இங்கே நிகழ்த்தினால் அடியேன் எல்லா ஏற்பாடும் செய்யக் காத்திருக்கிறேன்....///
வழி மொழிகிறோம்..
வார்த்தைகளாலும் மனதாலும்..
தேதியை குறிப்பிடவா..
தேடியே... குறிப்பு ... இடவா..?
மனந்திறந்த அழைப்பிற்கு
மனதார வாழ்த்துகிறோம்..////////
நல்லது உங்களின் மனப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!
/////iyer said...உரசல் பற்றிய
ReplyDeleteஅலசல் வழக்கமான பாணியில் அருமை
இப்படி பஞ்ச் கொடுத்து நிறுத்துவதுதான்
போட்டி நிறைந்த உலகிற்கு சரியானது
சொல்லவும் செய்யனும்
சொல்லவும் கூடாது
சபாஷ்...
இந்த வகை பாணிக்கு இது
இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி/////
உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான் விசுவநாதன். நன்றி!
/////arul said...sir,
ReplyDeleteit will be so helpful for us if we know when your books are available for public? when it is coming for sale?/////
ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் வெளியிட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. முதலில் இரண்டு தொகுப்புக்கள் வெளிவரும்!
Govindasamy said...
ReplyDelete//இருவரின் நிலைப்பாட்டைப் பாருங்கள் செவ்வாய்க்குப் பன்னிரெண்டில் புதன். புதனுக்கு அடுத்து செவ்வாய். 12/1 நிலைப்பாடு//
அய்யா இது புரியவில்லை. புதன் செவ்வாய் நிலைப்பாட்டை வைத்து எதைச் சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை.. சற்று விளக்கினால் தேவலாம்.
நன்றி./////
ஒரு கிரகம் இருக்கும் வீட்டில் இருந்து - அந்த வீட்டையும் சேர்த்து எண்ணும் போது 12வது எண்ணைகையில் வரும் வீடுதான் அது. சுக்கமாகச் சொன்னால் குறிப்பிட்ட கிரகம் இருக்கும் வீட்டிற்குப் பின் வீடுதான் 12ஆம் வீடு. விளக்கம் போதுமா சாமி?.
////உள்ளேன் ஐயா,
ReplyDeleteராசி சந்திப்பில் உள்ள கிரகங்கள் சொதப்பிவிடுகின்றன எனில் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிய வீடும்(10 ம் வீடு~ரிஷபம்~9ல் சூரியன்,11ல் ராகு) மட்டும் தான் சொதப்புமா? இல்லை அதில் பாய் விரித்துப் படுத்திருக்கும் விருந்தாளியும் (புதன்~நட்பு வீடு) சேர்ந்து தான் சொதப்புமா?.அந்த வீட்டுக்கு அதிபதி(சுக்கிரன்உச்சம்) வேறு எங்கேனும் வலிமையாக இருந்தார் என்றால் கொஞ்சம் கை கொடுக்கமாட்டாரா?./////
பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்ட அனைத்து கிரகங்களுமே சொதப்பத்தான் செய்யும்
//// suthank said...ஐயா வணக்கம்' நல்ல கலகலப்பான தலைப்புடன் தொடங்கியுள்ளீர்கள்.எனக்கு மேல்வகுப்பிற்கு
ReplyDeleteஅனுமதியில்லாத எதனையும் ஆழமாக கற்றுக்கொள்ள முடியவில்லை.உங்களின புத்தகமாவது கிடைத்தால் நன்றாக இருக்கும்.உங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.
சுதன்.க/////
ஆர்வமுள்ளவர்களுக்கு ஏன் அனுமதியில்லை? வாத்தியாரிடம் கேட்டு விடுவோம். மின்னஞ்சல் அனுப்புங்கள் நண்பரே
சில சந்திப்புகள் தித்திக்கும்,
ReplyDeleteசில சந்திப்புகள் பத்திக்கும்
எனினும் வெகு சில ஊத்திக்கும்...
இன்றைய சந்திப்புகள் பதிவு
மூன்றாவது வகையை விளக்க வந்தப் பாடம்...
பதிவிற்கு நன்றிகள் ஐயா!
புத்தக வெளியீடு அறிவிப்பை எதிர்நோக்கியே...
அன்புடன்,
ஆலாசியம் கோ.
அபப்பபா,ஒன்னு மட்டும் புரியுது ,யாரும் எல்லார்கிட்டயும் , எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடியாது,கிரகங்கள் மூடு கூட மாருது ,பக்கத்தில் இருப்பவர் பார்த்து,என்ன செய்வது ?
ReplyDeleteSir,
ReplyDeleteI am finding it difficult to learn the advanced level. Please allow me to view your advanced level lessons.
my mail id gaya3mages@gmail.com. I am eagerly waiting for your books. Please do remember to invite me for publications.
நல்லதொரு தகவல் ஐயா..! ஒரு ராசியில்(30 டிகிரியில்) 4 கிரகங்கள் இருக்க மட்டுமே வாய்பு என நினைக்கிறேன் அப்படிஎன்றால் யார் வலிமையானவர் என்று கண்டறிவது பற்றியும் விளக்குங்கள் ஐயா...!
ReplyDeleteஐயா எப்போது உங்கள் தனி இணைய தளம் வெளிவரும். அதற்கு நான் உதவலாமா?
ReplyDeleteGuru vanakkam,
ReplyDeleteSuperb , one more information to go into our minds while analyzing the chart. will keep learning.
RAMADU.
//இருவரின் நிலைப்பாட்டைப் பாருங்கள் செவ்வாய்க்குப் பன்னிரெண்டில் புதன். புதனுக்கு அடுத்து செவ்வாய். 12/1 நிலைப்பாடு//
ReplyDeleteஇது 12/2 நிலைபாடு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஜோதிடத்தில் விதிகள் என்று இருக்கும் போது விதிவிலக்குகளும் இருக்கின்றன. அதைச் சொல்லும் பாடம் இது. விளக்கம் நன்று.
மேல் நிலை பாடங்களுக்கான வகுப்பில் நுழைவு தள்ளுபடி விலையில் கிடைக்குமா? (சும்மா தமாஷ்).
///ஆனால் நான் சொல்லப்போகும் சந்திப்பு வேறு. அது துன்பத்தைக் கொடுக்கக்கூடியது?????///
ReplyDeleteஹி..ஹி ..ஹீ ... ஏதும் அரசியல் பின்னணியோ? கோபாலபுரமும் மன்னையும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
///கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா சந்திப்பிற்கு வேறுவிதமாக விளக்கம் சொல்கிறது///
இன்று விக்கிக்கு இருட்டடிப்பு நாள்.
///ராசி சந்திப்புக்களில் கிரகங்கள் இருந்தாலும் அதே நிலைதான்.
என்ன நிலை? கிரகங்களையும், அதன் காரகத்துவத்தையும் (working nature) வைத்து அந்த நிலைப்பாடுகள் மாறுபடும். துன்பத்தின் அளவு மாறுபடும். கூடலாம் அல்லது குறைவாக இருக்கலாம்.///
ஐயா, ஒரு சந்தேகம்...ராசி சந்திப்புக்களில் கிரகங்கள் இருந்தால், துன்பத்திற்கு பதிலாக இன்பம் கிடைக்கக் கூடுமா? தீய கிரகங்களுக்கு checkmate ஏற்பட்டு தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று என்ற கதையாக நடக்க வாய்ப்புள்ளதா?
எனக்கு மேலோட்டமாகத்தான் பார்க்கத் தெரிகிறது, லக்கினாதிபதி உச்சம், சனியும் ஆட்சி ...அடடா பத்தாவது வீட்டில் அஷ்டவர்கப் பரல் 35 அல்லது 40 இருக்கும் ஜாதகம் போலிருக்கிறது, ஆனால் நன்மை செய்யும் கிரகங்கள் மறைவிடத்தில் இருக்கிறதே என்று மட்டுமே தோன்றியது.
பாபகர்த்தாரி யோகம், 12/1 அமைப்பு ஆகியவை நீங்கள் சுட்டிக்காட்டும் வரை கண்ணில் படவில்லை.
அலசல் பாடங்கள் புதுப் புது கோணத்தைக் காட்டுகிறது. நன்றி ஐயா.
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteசில சந்திப்புகள் தித்திக்கும்,
சில சந்திப்புகள் பத்திக்கும்
எனினும் வெகு சில ஊத்திக்கும்...
இன்றைய சந்திப்புகள் பதிவு
மூன்றாவது வகையை விளக்க வந்தப் பாடம்...
பதிவிற்கு நன்றிகள் ஐயா!
புத்தக வெளியீடு அறிவிப்பை எதிர்நோக்கியே...
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நல்லது. நன்றி ஆலாசியம். புத்தகங்கள் ஏபரல் மாதம் வெளிவரும். அச்சமயம் முறையான அறிவிப்பு பதிவில் வெளியாகும்!
//////Blogger Kalai said...
ReplyDeleteஅபப்பபா,ஒன்னு மட்டும் புரியுது ,யாரும் எல்லார்கிட்டயும் , எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடியாது,கிரகங்கள் மூடு கூட மாருது ,பக்கத்தில் இருப்பவர் பார்த்து,என்ன செய்வது?//////
கிரகங்களுக்கு ஏது மூட்? தங்கள் பணியை அவைகள் செவ்வனே செய்யும்?
////Blogger GAYATHRI said...
ReplyDeleteSir,
I am finding it difficult to learn the advanced level. Please allow me to view your advanced level lessons. my mail id gaya3mages@gmail.com. I am eagerly waiting for your books. Please do remember to invite me for publications.
பதிவில் இன்றுவரை உள்ள 512 பாடங்களையும் முதலில் படியுங்கள் சகோதரி! மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். புத்தகங்கள் ஏபரல் மாதம் வெளிவரும். அச்சமயம் முறையான அறிவிப்பு பதிவில் வெளியாகும்!
Blogger daran said...
ReplyDeleteவாத்தியார் அவர்களே,
சந்திரன் 12 இல் (விரைய ஸ்தானத்தில் ) இருப்பதாலும் ஜாதகருக்கு யோகம் இல்லாமல் இருக்கலாம் அல்லவா?. மேலும் புதன் வீட்டில் கேது.- புதனும் .கேதுவும் பார்த்து கொள்கிறார்கள். 8 இல் சுக்கிரன் மறைந்து விடுகிறார். இவற்றை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சந்திரன் நான்காம் அதிபதி. இந்த ஜாதகத்தில் அவருடைய பணி வேறு. அதுபோன்றே மற்ற கிரகங்களுக்கும். அவற்றை எல்லாம் விவரித்தால் கட்டுரை 3 பக்கங்களுக்கு மேல் நீண்டுவிடும். முக்கியமான செய்திகளை மட்டுமே தந்துள்ளேன்!
/////Blogger vidya pathi said...
ReplyDeleteநல்லதொரு தகவல் ஐயா..! ஒரு ராசியில்(30 டிகிரியில்) 4 கிரகங்கள் இருக்க மட்டுமே வாய்பு என நினைக்கிறேன் அப்படிஎன்றால் யார் வலிமையானவர் என்று கண்டறிவது பற்றியும் விளக்குங்கள் ஐயா...!///////
அதுபற்றி விவரமாக முன்பு எழுதியுள்ளேன் சாமி. பழைய பாடங்களில் உள்ளது. வரிசையாக அத்தனை பாடங்களையும் முதலில் படித்து முடியுங்கள். இதுபோன்ற அடைப்படை சந்தேகங்கள் வராது
/////Blogger Pugazhenthi said...
ReplyDeleteஐயா எப்போது உங்கள் தனி இணைய தளம் வெளிவரும். அதற்கு நான் உதவலாமா?/////
இணைய தளம் ஏற்கனவே உள்ளது சாமி. ஒரு ஆண்டாக உள்ளது. நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை மின்னஞ்சல் மூலம் கொடுங்கள். அவ்வப்போது இணைய தளத்தைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்!
/////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru vanakkam,
Superb , one more information to go into our minds while analyzing the chart. will keep learning.
RAMADU./////
அது உண்மையே! நானும் மாணவன்தான். பலவற்றைப் புதிது புதிதாக (ஜோதிடத்தில்) கற்றுக்கொண்டுதான் வருகிறேன். ஜோதிடம் பெரிய கடல். அதை முழுதாக அறிந்தவர் யாருமில்லை!
/////Blogger ananth said...
ReplyDelete//இருவரின் நிலைப்பாட்டைப் பாருங்கள் செவ்வாய்க்குப் பன்னிரெண்டில் புதன். புதனுக்கு அடுத்து செவ்வாய். 12/1 நிலைப்பாடு//
இது 12/2 நிலைபாடு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஜோதிடத்தில் விதிகள் என்று இருக்கும் போது விதிவிலக்குகளும் இருக்கின்றன. அதைச் சொல்லும் பாடம் இது. விளக்கம் நன்று.//////
6/8, 1/12 என்று சொல்வதுதான் வழக்கம் நண்பரே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////மேல் நிலை பாடங்களுக்கான வகுப்பில் நுழைவு தள்ளுபடி விலையில் கிடைக்குமா? (சும்மா தமாஷ்).//////
தமிழ் நாட்டில் ஆடித்தள்ளுபடி மிகவும் பிரபலம். ஆடி மாதம் எல்லாவற்றிற்கும் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் ஆடி மாதம்வரை காத்திருக்கத் தயாரா?
(இதுவும் சும்மா தமாஷ்தான்)
Uma S umas1234@gmail.com
ReplyDeleteto me
உங்களின் இன்றைய பாடம் இதுவரை அறியாதது. உண்மையில் ஜோதிடம் ஒரு கடல்தான்!
S.உமா, தில்லி