மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.1.12

எங்கும் தங்கட்டும் பொங்கல் மகிழ்ச்சி!

மாணவக் கண்மணிகளுக்கும், பதிவுலக நண்பர்களுக்கும் 
வாத்தியாரின்
மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து வருவது மாணவர் மலர்.
அனைவரும் படித்து மகிழுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
எங்கும் தங்கட்டும் பொங்கல் மகிழ்ச்சி!

நமது வகுப்பறையின் மேன்மைக்கு உரிய மாணவி, தன் கல்லூரி நாட்களில் வரைந்த ஓவியத்தை அனுப்பியுள்ளார். சிறப்பாக உள்ளது. நம் வகுப்பரையின் சார்பில் அனைவரும் சேர்ந்து அவருக்கு ஒரு ‘ஓ’ ஒட்டுவிடுவோம். படம் கீழே உள்ளது. அனைவரும் பார்த்து மகிழுங்கள்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
தைத் திருநாள் வாழ்த்துக்கள்
ஆக்கம் - தனுசு
*************************
பிறந்தது தை
உழவா உயர்ந்தது - உன்கை.
தோழா! - நீ
விதைத்ததை வளர்த்ததை
அறுத்ததை குவித்ததை
உழைத்ததை நான் சொல்லவா

இன்று மனம் நிறைந்து - நீ
மகிழ்வதை நெகிழ்வதை
சிரிப்பதை உரைப்பதை
உணர்ந்ததை நான் சொல்லவா

உழைத்த உன் கைகளால் - நீ
உயர்ந்ததை வளர்ந்ததை
தொட்டதை துலங்கியதை
முடித்ததை நான் சொல்லவா.

உன் உழைப்பால் நாடு
வளர்வதை வெல்வதை
ஊதியத்தை பெருக்குவதை
போற்றப்படுவதை

பெரும்செல்வத்தை நான் சொல்லவா
இன்று உன்னை
புகழ்வதை போற்றுவதை
பாடுவதை பேசுவதை பார்த்து
நன்றி சொல்லவா

உன்
அன்னத்தை உண்டதை
மறக்காமல் நாமிருப்போம்.
உன் புகழ்அதை பாட
வாய்ப்பை தந்த இயற்கை - அதை
உன்னுடன் வணங்குகிறோம்

வாழிய நீ !
தரணியில் தையைப் போல !!
--தனுசு-
++++++++++++++++++++++++++++++++
3
ஏன் கூறவில்லை கிருஷ்ணர்?

மகா பாரதத்தில், விதுரர் , கிருஷ்ணனை காண சென்றார் . கிருஷ்ணர் விதுரரை வரவேற்று நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தார். விதுரர் கிருஷ்ணனை பார்த்து, "கிருஷ்ணா , திருதராஷ்டரன் ஆசை என்ற தீயினால் துரியோதனன் வளர்க்க படுகின்றான் என்று எனக்கு தெரியும், இருந்தாலும், இந்த பாரதப் போரை நிறுத்த முடியாதா, எதிர் காலத்தில் இந்த பாரதம் எப்படி இருக்கும் " என்று ஒரு கேள்வி கேட்டார்.

கிருஷ்ணனுக்கு தெரியாததா என்ன?

பதில் எதுவும் கூறாமல் கிருஷ்ணர் சிறுது நேரம் மௌனம் சாதித்தார்.

பிறகு, இந்த பாரத போர்தான் எதிர் காலத்தில் வாழும் மக்களுக்குப் பாடமாக அமையும். மேலும், எதிர் காலத்தை பற்றி எப்பொழுதும் சிந்தித்து கொண்டு இருக்காதே விதுரா. இன்று நம்மால் எதை நன்றாகச் செய்ய முடிமோ அதை நன்றாகச் செய்வோம் என்று கூறினார்.

மேற்கொண்டு எதுவும் கூறவில்லை.

விதுரர்க்கு வருத்தம் தான் . கிருஷ்ணர் நம்மிடம் எதுவும் கூறவில்லையே என்று.

3-A

பிதாமகர் பீஷ்மர் முள்ளம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கும் பொழுது, இரவு நீண்ட நேரம் ஆனா பிறகு கிருஷ்ணர் பீஷ்மரைக் காணச் சென்றார்.

கிருஷ்ணர், பீஷ்மரின் கால் பாதத்தில் வணங்கும் பொழுது கிருஷ்ணருடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பீஷ்மரின் கால் பாதத்தில் பட்டவுடன்
பீஷ்மர் உடம்பு மெய் சிலர்த்தது.

"கிருஷ்ணா என் அருகில் வா " என்று பீஷ்மர் அன்புடன் கூப்பிட்டார்.

பீஷ்மர் கிருஷ்ணரின் கையைப் பற்றிக்கொண்டு சிறுது நேரம் மௌனமாக இருந்தார் .

பிறகு, பீஷ்மர், " கிருஷ்ணா, எனக்கு பயமாக இருக்கிறது இந்த பாரதத்தை நினைத்து, எதிர் காலத்தில் இந்த பாரதம் எப்படி இருக்கும் என்று உன்னிடமிருந்து இருந்து தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்" என்று கேட்டார்

பதில் எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் ஏன் பதில் கூறவில்லை? பதில் தெரியாதா? பதில் கூற விருப்பமில்லையா? அவசியமில்லை என்று தான் பதில் கூற வில்லை

காரணம் என்ன வென்றால், பீஷ்மர் மரண படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். பதிலைத் தெரிந்து கொள்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று தான் கிருஷ்ணர் மௌனம் சாதித்தார்

ஆசிரியர் அவர்களுக்கும், சக மாணவர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்.

ஆக்கம் : எஸ். சந்திரசேகரன். பென்சில்வேனியா, அமெரிக்கா
+++++++++++++++++++++++++++++++++++++++++
4.
நகைசுவைத் துணுக்குகள்
S..உமா, தில்லி

ஒருவனுக்கு 32 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. தன் நண்பனிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.

என்னடா? உனக்குப் பிடிச்சா மாதிரி ஒரு பெண் கூடவா உனக்குக் கிடைக்கல?

இல்லடா, நிறைய பெண்களை எனக்குப் பிடிச்சிருந்துது. ஆனா அவங்களை எங்க வீட்டுக்கு பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்த அழைச்சுட்டுப் போனா எங்க அம்மாவுக்கு யாரையுமே பிடிக்கல

சரி உனக்கு ஒரு யோசனை சொல்றேன், அது படி செய்.

சொல்லு.

உங்க அம்மா மாதிரியே ஒரு பெண்ணைக் கண்டுபிடிச்சு அழைச்சுட்டுப் போ. உங்க அம்மாவுக்குப் பிடிச்சுடும்.

அவனும் அதே மாதிரியே ஒரு பெண்ணைத் தேடிக்கண்டுபிடித்துவிட்டு நண்பனிடம் சொன்னான். இன்னிக்கு நான் அவளை வீட்டுக்கு அழைச்சுட்டுப்போறேன்.

மறுநாள் சோகத்துடன் வந்த அவனிடம் நண்பன் கேட்டான்.

'என்னடா ஆச்சு?'

எங்க அம்மாவுக்கு அந்த பெண்ணை ரொம்பப் பிடிச்சுடுச்சுடா.

பின்ன என்ன பிரச்சனை?

எங்க அப்பாவுக்கு அவளைப் பிடிக்கல!
**********
இரண்டு மாணவர்கள்:

ஒரு விஷயம் மட்டும் நடந்திருந்தா இயற்பியல் செம எளிதாக இருந்திருக்கும்டா.

எந்த விஷயம்?

நியூட்டன் தலைல ஆப்பிள் விழாம அந்த மரமே விழுந்திருக்கணும். 
**********
பெட்ரோல் பங்கில் எழுதப்பட்டிருந்த வாசகம்:

"தயவுசெய்து இங்கே புகைபிடிக்காதீர்கள். உங்கள் உயிர் உங்களுக்கு விலைமதிப்பில்லாதாக இருக்கலாம், ஆனால் பெட்ரோல் எங்களுக்கு விலைமதிப்பில்லாதது!"
*********
கடவுளையும், மருத்துவரையும் எப்போதும் பகைத்துக்கொள்ளக்கூடாது. கடவுளுக்குக் கோபம் வந்தால் மருத்துவரிடம் அனுப்பிவிடுவார், மருத்துவருக்குக் கோபம் வந்தால் கடவுளிடமே அனுப்பிவிடுவார்.
*********
எங்கே தேவையோ அங்கே மணிக்கணக்காகப் பேசவேண்டும், தேவையில்லாத இடத்தில் 'மணிரத்னம்' மாதிரிப்பேசவேண்டும்.
------
டிஸ்கி: சொந்த சரக்கல்ல
அனைவருக்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
S.உமா, தில்லி
++++++++++++++++++++++++++ 
5
உணவில் எத்தனைவகை உள்ளது தெரியுமா?
கே.முத்துராமகிருஷ்ணன்

'அன்ன விசாரம் அதுவே விசாரம்..'என்பது ஆன்மீக விசாரங்களுக்கு முன்னதாக வந்து நிற்கும்.கடவுள் இருக்கிறாரா?.. இருக்கிறார் என்றால் ஏன் மனிதனுக்கு இவ்வளவு துன்பங்களைத் தருகிறார்?..ஆன்மா என்பது என்ன?..ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே வஸ்துவா?.. வெவ்வேறா?.. இது போன்று மனத்தில் தோன்றுவதும், சிந்திப்பதும், விடைகாண முயல்வதும் ஆன்மீக விசாரங்கள் ஆகும்.

வயிறு பசித்தவனுக்கு இந்த சிந்தனையெல்லாம் வராது. அவன் 'தேடிச்சோறு தினம் தின்றாக' வேண்டும். எனவே அவனுடைய சிந்தனையெல்லாம் அன்னவிசாரம் மட்டும்தான்.

இன்று பொங்கல் திருநாள். இன்று உணவைப் பற்றிப் பேசுவது மிகவும் பொருத்தமே. ஏனேனில் இது ஓர் அறுவடைப் பண்டிகைதான். புது நெல், புத்தரிசி, புதுப்பானை, புதுவெல்ல‌ம், புது அடுப்பு என, விளைச்சலையும், அதனை அளித்த ஆதவனுக்கு நன்றி சொல்லுவதற்காகவுமே, அவன் மேல் நோக்கிப் பயணம் செய்யும் முதல் நாளில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உணவு எத்தனை வகைப்படும்? இந்தக் கேள்விக்கு நாம் பெறுகின்ற‌ பதில் 'இரண்டுவகைப்படும்' என்பதே.அவை சைவம் என்றும் அசைவம் என்றும் கூறப்படுபவை ஆகும்.

சைவமும் அசைவமும் ஒரு பெரிய திரை (பிக் கேன்வாஸ்) சித்திரங்களே. இன்னும் நுணுக்கமாகப் ஆராய்ந்தால் பலவகை (வேரியேஷ‌ன்ஸ்) கிடைக்கும். அவற்றை இங்கே விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1. வயதுக்கேற்ற உணவு:‍‍‍
--------------------------------------------
பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால மட்டுமே உணவு.வயது ஏற‌ ஏற ஏற்கும் திறன் அறிந்து உண்வின் தன்மை மாறுபடுகிறது.மீண்டும் இரண்டாம் குழந்தைத் தன்மை அடைந்த பல்லும் சொல்லும் போன கிழவருக்கு திரவ ஆகாரங்களே ஏற்கிறது, திட உணவு ஜீரணமாவதில்லை.

(பால் மிருகத்திடமிருந்து கிடைக்கும் உணவே. எனவே பாலையும் அசைவமாகவே கருத இடமுண்டு. ஜைனர்கள் இன்றும் பால் அசைவம் என தீர்மானித்து, பால் அருந்துவதில்லை.அவ்வகையில் குட்டிபோட்டு பாலூட்டும் எல்லா உயிரினங்களுமே அசைவம்தான். மனிதனும் ஒரு 'மேம்மல்'என்பதால், தாய்ப்பால் குடித்து வளர்ந்த அனைவருமே அசைவர்களாகவே வாழ்வைத் துவங்குகிறோம்.)

2. வேலைக்கேற்ற உணவு:
-----------------------------------------------
கடின உடல் உழைப்பாளிகளுக்கு எதுவும் எளிதில் செரிக்கும். அவர்கள் சைவம் அசைவம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதையும் உண்ணலாம்.

அறிவு சார் வேலை செய்பவர்கள் மூளை சுறு சுறுப்பாக இருக்க வேண்டிய உணவு வகைகளை எடுக்க வேண்டும்.தூக்கம் கொடுக்கக்கூடிய, மூளையை மந்தப்படுத்தக்கூடிய பண்டங்களை அடிக்கடி உண்ணக்கூடாது.

சில வேலையில் இருப்போர், மற்றவர்களுக்கு தடை செய்யப்பட்டதை உண்ணலாம்.இராணுவ வீரரகள் நாடு காக்கக் கொலைத்தொழில் செய்வதால் அவர்கள் மது அருந்துவது சரியே. பிணப் பகுபாய்வுக்கு உதவி செய்பவர்களும் மது அருந்துதல் வேலை சார் உணவே. அதுபோலவே சுடுகாட்டில் பிணம் எரிப்பவரும், சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்பவரும் மதுவினை வேலைக்காக ஏற்கலாம்.

3. சீதோஷ்ண,தட்பவெப்ப‌ நிலைக்கு ஏற்ற உணவு:
---------------------------------------------
குளிர்பிரதேசங்களில் வாழ்வோர் உடலின் வெப்பத்தை நிலை நிறுத்தக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டும்.வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வசிப்போர் உடலினைக் குளிர்ச்சி ஆக்கும் உணவு வகைகளை எடுக்க வேண்டும். எனவே தான் குளிர் மிகுந்த மேலை நாடுகளில் மதுவும் ஒரு உணவுப்பொருளாகவே கருதப்படுகிறது.நமது நாட்டில் இள நீர் வெப்பத்தைத் தணிக்கும். வெள்ளரிக்காயும் அது போன்ற தண்ணீர் அதிகமுள்ள காய்கனிகள் நமது நாட்டில் அதிகம் சேர்க்க வேண்டும்.

வங்க‌த்தில் உள்ள தட்ப வெப்பத்திற்கு கடுகு எண்ணையும், மீனும் அவசியமாம். அவை சேர்க்காவிட்டால் உடலில் தோல் வெடிக்குமாம்.

4.குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ற உணவு:
---------------------------------------------
பந்தயத்தில் ஓடுபவர்கள், மற்ற சாகசச் செயல் புரியும் விளையாட்டு வீரர்கள் அதற்கேற்ற உணவினை ஏற்பர். பளுதூக்கும் பயிற்சி நிலையத்தில் நாள்தோறும் ஒரு கைப்பிடி ஊற வைத்த கொண்டக் கடலை சாப்பிட்டுவிட்டு பயிற்சியைத் துவங்குவார்கள்.

திருமணம் ஆன புதுமணத் தம்பதியினர் பாதாம், முந்திரி , பேரீச்சை, கிஸ்மிஸ் திராட்சை இத்யாதிகளையும் , அதிகம் பால், வெங்காயம் முள்ளங்கி ஆகியவற்றையும் தாம்பத்தியம் கருதி சேர்க்க வேண்டும். உடலாசை இனி வேண்டாம் என்றால் இந்தப் பண்டங்களை ஒதுக்கி விட வேண்டும்.இங்கேயும் உடும்புக்கறி, சிட்டுகுருவி லேகியம் என்று மக்கள் நம்பிக்கை உள்ளது.

5.கிடைக்ககூடிய உணவு:
----------------------------------------------
எஸ்கிமோக்களுக்கு, சீல் வால்ரஸ் கொழுப்புக்களும், மீனும் சில பனிப்பிரதேச பிராணிகள் மட்டுமே கிடைக்கும். பச்சைக்காய்கனிகள் அவர்களுக்கு எட்டாக் கை. என்ன செய்ய முடியும்? கிடைத்ததை உண்பார்கள்.

நாமும் கூட பயணத்தின் போது கிடைத்த‌தை உண்கிறோம்.போக்குவரத்து நன்கு முன்னேறிவிட்ட இக்காலத்தில் எல்லாப் பொருட்களும் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. அக்காலத்தில் நிலைமையே வேறு. அந்த அந்த கிராமத்தில் என்ன கிடைகிறதோ அதை வைத்து வாழ்வை ஓட்ட வேண்டும்.

மனித மாமிசம் மட்டுமே கிடைத்த ச‌மயத்தில் இறந்த சக பயணிகளின் உடலை அறுத்துத் தின்ற நாகரீக மனிதர்களின் நிஜக்கதையை இங்கே வாசியுங்கள்.
http://www.telegraph.co.uk/culture/books/non_fictionreviews/3652636/What-could-we-eat-but-our-dead-friends.html

6.வசதிக்கேற்ற,வருமானத்திற்கு ஏற்ற‌ உணவு:
---------------------------------------------
பணம் நிறைய உடையவர்களைப் பார்த்து இல்லாதவனும் அது போலவே உண்ண ஆரம்பித்தால் ஆசை நிராசை ஆகிவிடும்.தன் வருமானத்திற்கு ஏற்றபடி, ருசியுள்ள அதே நேரம் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் சத்து கொடுக்கும் எவ்வவகை ஆகாரத்தையும் மனிதன் உண்ணலாம்.அதில் சைவம் அசைவம் என்றெலாம் பார்க்க வேண்டாம்.

7.நோய்க்கேற்ற உணவு:
------------------------------------------
நோய் வந்த போது அந்நோய் விரைவில் குணமாகத் தகுந்த உணவினை எடுக்க வேண்டும்.சொல்லப்போனால் உணவே இல்லாமல் இருந்தால் உடல் சீக்கிரம் குணமாகும் என்பார்கள் இயற்கை மருத்துவர்கள். எல்லா வைத்திய முறைகளிலுமே நோய் வாய்ப்பட்டால் எளிதில் ஜீரணம் ஆகும் திர‌வ உணவே சொல்லப்படுகிறது.

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்'

என்பார் ஐயன் திருவள்ளுவர்.

8.அழகுகேற்ற உணவு:
--------------------------------------
உடல் அழகைப் பேண நினைக்கும் சினிமா நாயக நாயகிகள் பெரும்பாலும் பழங்களிலேயே காலத்தைத் தள்ளுவர்.புளி, அரிசிச் சோறு ஆகியவை சீக்கிரம் முகத்தில் சுருக்கம் கொடுக்கும்.

9.விரதத்திற்கு ஏற்ற உணவு:
---------------------------------------------------
விரத காலத்தில் அதிகம் சுத்தமான, மனதிற்கு சமாதானத்தைக் கொடுக்கக் கூடிய சாந்தியைக் கொடுக்கக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டும். பெரும்பாலும் சைவ உணவுதான் விரதத்திற்கு ஏற்றது.

ஆனால் கிடா வெட்டு தடை செய்யப்ப‌ட்ட சமயம் மக்கள் அந்த சட்டத்தை எதிர்த்தது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.இறைவன் வழிபாடுகளிலும் பலப்பல 'வேரியேஷன்ஸ்'. படையலிலும் அவ்வாறே.
10.சமைக்காத/ சமைத்த உணவு:
--------------------------------------------------
உலகில் உணவினை சமைத்து உண்பது மனித இனம் மட்டும்தான்.மற்ற பிராணிகள் எல்லாம் பச்சையாகவே உண்ணும். மனிதனும் அவ்வாறே பச்சையாகவே உண்ணக் கூடிய நூற்றுக்கணக்கான தாவர இனங்கள் உள்ளன.

ஒரு மாமிச உண‌வையும் சமைக்காமல் சாப்பிட முடியாது.எனவே மனிதனின் இயற்கை சைவம்தான் என்று உணர முடிகிறது.

மனிதனால் சைவம்,அசைவம் இரண்டையும் செமிக்க முடிகிறது. இருப்பினும் 90% மக்கள் அசைவம் பாவச்செயல் என்பதை உணர்ந்துள்ளனர்.

(இன்னும் வரும்)

வாழ்க வளமுடன்!

ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

" God didn’t promise days without pain, laughter, without sorrow, sun,
without rain, but He did promise strength for the day, comfort for the
tears, and light for the way! ".

Kannan Seetharaman, Bahrain
++++++++++++++++++++++++++
7
G Ananthamurugan (G_Ananthamurugan@whirlpool.com)
  
India 's Total Population 118 Crores.
Daily Death - 62389
Daily Birth - 86853
Total Blinds - 682497
If Daily Dead People Donate their Eyes,
within 11 Days all Blinds will be able to See.

Then in India there will be NO Blinds.
Don't Delete this message without Sending Atleast to 1 Person
KINDNESS Costs GREATNESS
+++++++++++++++++++++++++++++++

மகிழ்ச்சியான செய்தி


பொங்கலை முன்னிட்டு வகுப்பறைக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை.

18.1.2012 புதன்கிழமையன்று மீண்டும் வகுப்பறை துவங்கும். ஒரு நல்ல தலைப்பில் ஜோதிடப்பாடம் ஒன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தி (யார்)

வாழ்க வளமுடன்!

61 comments:

  1. ஆசிரியருக்கும் வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும்
    என்இனிய தமிழர்திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ஆசிரியற்கும் ,
    சக மாணவர்களுக்கும் , எனது இனிய பொங்கல் வாழ்த்துகள் .
    ஓவியம் மிக நன்றாக உள்ளது.
    ஓவியம் வரைந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துகள் .
    ஓ ! ஓ ! ஓ !
    தனுசுவின் தை திருநாள் வாழ்த்துகள் நன்றாக உள்ளது.
    // இன்று மனம் நிறைந்து - நீ
    மகிழ்வதை நெகிழ்வதை
    சிரிப்பதை உரைப்பதை
    உணர்ந்ததை நான் சொல்லவா//
    இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி
    என்னுடைய ஆக்கத்தை வெளியிட்ட ஆசிரியர் அவர்களுக்கும்
    மிக்க நன்றி .
    எஸ். சந்திரசேகரன்

    ReplyDelete
  3. 1 .
    ஓவியத்துக்கு ஒரு 'ஓ'.

    2 .
    தனுசுவின் கவிதை புனையும் தணியாத தாகத்துக்கு
    'வாழிய நீ !தரணியில் தையைப் போல !!--'
    என்று ஒரு 'ஓ'..

    3 .
    பென்சில்வேனியாக் காரர் பென்சில்மேனியாக் ஆகி
    தொடர் கதைகள் கொடுக்கிறார்..
    குருஷேத்திரத்தில் அருகிலிருந்து பார்த்தது போலே
    எழுதியிருக்கிறார்..
    அவருக்கும் ஒரு 'ஓ'..

    (அய்யர் இதுகுறித்து பழனியிலே பஞ்சாயத்து வைக்காமல் இருந்தா சரி..
    பொதுவா பழனின்னா பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும்..
    அய்யர் தயவாலே இப்போ பஞ்சாயத்துதான் நினைவுக்கு வருது..)

    4 .
    உமையவளின் பொங்கலில் சிரிப்புச் சர்க்கரை..
    முதல் ஒன்றைத்தவிர மற்றெல்லாம் நன்று..
    பொங்கலில் இட்ட முந்திரியும் கரும்புமாய்..
    கடைசி இரண்டும் என்மனங்கவர்ந்தது இன்று..

    சிரிப்பைச் சமைத்த உமையவளுக்கு
    என்இனிய பொங்கல் நல்வாழ்த்து..

    பஹ்ரைன் கண்ணனுக்கும் சேர்த்து..


    5 .
    என் கண்களைக் கவர்ந்தது..
    அனந்தமுருகனின் எழுத்தது..

    ReplyDelete
  4. இடைச்சேர்க்கை!

    மகிழ்ச்சியான செய்தி

    பொங்கலை முன்னிட்டு வகுப்பறைக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை. அடுத்து 18.1.2012 புதன்கிழமையன்று மீண்டும் வகுப்பறை துவங்கும். அன்று ஒரு நல்ல தலைப்பில் ஜோதிடப்பாடம் ஒன்று வெளியாகும்

    அன்புடன்
    வாத்தி (யார்)

    ReplyDelete
  5. ////Blogger minorwall said...
    ஆசிரியருக்கும் வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும்
    என்இனிய தமிழர்திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்./////.

    மைனர், நீங்கள்தான் முதல் தொன்னையைக் கொடுத்திருக்கிறீர்கள் - சர்க்கரைப் பொங்கலுடன்! நன்றி மைனர்!

    ReplyDelete
  6. ////Blogger csekar2930 said...
    ஆசிரியற்கும் ,
    சக மாணவர்களுக்கும் , எனது இனிய பொங்கல் வாழ்த்துகள் .
    ஓவியம் மிக நன்றாக உள்ளது.
    ஓவியம் வரைந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துகள் .
    ஓ ! ஓ ! ஓ !
    தனுசுவின் தை திருநாள் வாழ்த்துகள் நன்றாக உள்ளது.
    // இன்று மனம் நிறைந்து - நீ
    மகிழ்வதை நெகிழ்வதை
    சிரிப்பதை உரைப்பதை
    உணர்ந்ததை நான் சொல்லவா//
    இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி
    என்னுடைய ஆக்கத்தை வெளியிட்ட ஆசிரியர் அவர்களுக்கும்
    மிக்க நன்றி .
    எஸ். சந்திரசேகரன்/////

    நன்றி நண்பரே! உங்களுக்கும் வகுப்பறையின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. /////Blogger minorwall said...
    1 .
    ஓவியத்துக்கு ஒரு 'ஓ'.
    2 .
    தனுசுவின் கவிதை புனையும் தணியாத தாகத்துக்கு
    'வாழிய நீ !தரணியில் தையைப் போல !!--'
    என்று ஒரு 'ஓ'
    3 .
    பென்சில்வேனியாக் காரர் பென்சில்மேனியாக் ஆகி
    தொடர் கதைகள் கொடுக்கிறார்..
    குருஷேத்திரத்தில் அருகிலிருந்து பார்த்தது போலே
    எழுதியிருக்கிறார்..
    அவருக்கும் ஒரு 'ஓ'..
    (அய்யர் இதுகுறித்து பழனியிலே பஞ்சாயத்து வைக்காமல் இருந்தா சரி..
    பொதுவா பழனின்னா பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும்..
    அய்யர் தயவாலே இப்போ பஞ்சாயத்துதான் நினைவுக்கு வருது..)
    4 .
    உமையவளின் பொங்கலில் சிரிப்புச் சர்க்கரை..
    முதல் ஒன்றைத்தவிர மற்றெல்லாம் நன்று..
    பொங்கலில் இட்ட முந்திரியும் கரும்புமாய்..
    கடைசி இரண்டும் என்மனங்கவர்ந்தது இன்று..

    சிரிப்பைச் சமைத்த உமையவளுக்கு
    என்இனிய பொங்கல் நல்வாழ்த்து..
    பஹ்ரைன் கண்ணனுக்கும் சேர்த்து..
    5 .
    என் கண்களைக் கவர்ந்தது..
    அனந்தமுருகனின் எழுத்தது///////..

    ஓ சுடச்சுட இரண்டாவது தொன்னையா?

    பழநி என்றால் உண்மையின் வடிவாக நிற்கும் முருகப்பெருமான்தான் என் நினைவிற்கு வருவார். உண்மையான பக்தர்களுக்கு அவர் உதவத் தவறுவதே இல்லை.
    உண்மையான கோரிக்கைகளை அலசி தீர்ப்பளிப்பதுதான் பஞ்சாத்து ஆகும். நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் இந்தக் கணக்கில் வராது. அதனால் அய்யர் அங்கே சென்றது தவறில்லை. வைத்த கோரிக்கையில் அவர் வெற்றி பெற்றதும் நியாயமானதே. அதில் ஏதோ உண்மை இருக்கிறது. நமது கண்களுக்கு அது தெரியவில்லை. மேட்டர் அவ்வளவுதான் மைனர்!

    ReplyDelete
  8. ஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப்
    பாராட்டுக்கள்.

    மாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.

    முழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியின் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

    கண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட?)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை.

    ReplyDelete
  9. ஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப்
    பாராட்டுக்கள்.

    மாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.

    முழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியின் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

    கண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட?)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை.

    ReplyDelete
  10. எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

    -SATHISH K

    ReplyDelete
  12. ஆசிரியருக்கும்
    வகுப்பறை என் சக மாண‌வருக்கும்
    என் இனிய தமிழர் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. வகுப்பறை அன்பர்களுக்கெல்லாம் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! இன்றைய பதிவுகள் அனைத்தும் அருமை. தேன்மொழியின் ஓவியம் கைதேர்ந்த ஒவியரின் கைவண்ணம் போல் இருக்கிறது. கவிஞர் புருனேய் தனுசு நாளுக்கு நாள் கவிதைகளில் மெருகேற்றி வருகிறார். சந்திரசேகரின் மகாபாரத நிகழ்வின் உட்கருத்து சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார். பொங்கலுக்கென்று இன்று பல்சுவை நிகழ்ச்சி. இவைகளுக்கு பின்னூட்டம் இட்டிருப்பவர்களில் மைனர் அவர்களின் நகைச்சுவை மின்னுகிறது.

    ReplyDelete
  14. மாணவச் செல்வங்களின் ஓவியம் ஒன்றும் வருவதில்லையே எனும் ஆதங்கத்தை போக்கிய
    ஆசிரியருக்கு நன்றி.
    மாணவி தேமொழிக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. எதிர்காலத்தினைப் பற்றி பெரிதும் சிந்தித்துக்கொண்டே இராது
    இன்று என்ன கடமையோ செய்யவேண்டிய செயலோ அதைச்
    செய்துகொண்டே இரு என்று விதுரனுக்குச் சொன்ன கண்ணனின்
    அறிவுறை இன்றைய காலைப்பொழுதில் எனக்கு நல்லதொரு
    செய்தியாகத் தோன்றியது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்
    Welcome to See your own Pongal Greetings in
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  16. ஆசிரியருக்கும்,அனைத்து நண்பர்களுக்கும் பொங்க‌ல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஐயா பொங்கல் எங்கே கோவையிலா (அ) தேவகோட்டையிலா?

    ReplyDelete
  17. தனுசு கவிதை சுண்டி இழுக்கு தையா தையா
    அதில் 32 தை இருக்குதையா
    தைய தைய தைய தையா
    தக தைய தைய தைய தையா
    ______
    பாரதத்தில் தர்மம்...பாரதத்தின் எதிர்காலம் பற்றி தெரியமுடியாமல் போனது நம் பாரதத்தின் தர்மம் என எஸ். சந்திரசேகரன் அவர்கள் மிக சரியான சமயத்தில் எடுத்துச் சொல்லியுள்ளார். அவருக்கு நன்றி.
    ______
    உமாவின் நகைச்சுவை துணுக்குகள் தொகுப்பு ...
    ஆஹா, ஆஹா ஹா
    ஹி ஹி ஹீ ...ஹி ஹி ஹீ ....
    இது மணிரத்தினம் பாணி விமர்சனம்
    மிகவும் சிறப்பானது: "எங்க அப்பாவுக்கு அவளைப் பிடிக்கல!" :)))))
    (வாத்தியாருக்கும் அது மிகவும் பிடித்துள்ளது என சிறப்பு வண்ணம் கொடுத்து காண்பிதுள்ளார்)
    ______
    KMRK ஐயா சின்ன வயசில "இலையில உட்கார்ந்திட்டு சாப்பாட சாப்பிடாம அதுல அப்படி என்ன ஆராய்ச்சி?" அப்படின்னு நிறைய திட்டு வாங்கியிருப்பார் என எனக்குத் திட்ட வட்டமாகத் தெரிகிறது.
    ______
    கண்ணனும், ஆனந்த முருகனும் சொன்ன செய்திகள் நம் கண்ணைத் திறக்கும், நன்றி நண்பர்களே.
    ______
    என் ஓவியத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி...நன்றி...
    அதை வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றி...நன்றி...

    மீண்டும் .....பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ////////Thanjavooraan said...
    வகுப்பறை அன்பர்களுக்கெல்லாம் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! இன்றைய பதிவுகள் அனைத்தும் அருமை. தேன்மொழியின் ஓவியம் கைதேர்ந்த ஒவியரின் கைவண்ணம் போல் இருக்கிறது. கவிஞர் புருனேய் தனுசு நாளுக்கு நாள் கவிதைகளில் மெருகேற்றி வருகிறார். சந்திரசேகரின் மகாபாரத நிகழ்வின் உட்கருத்து சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார். பொங்கலுக்கென்று இன்று பல்சுவை நிகழ்ச்சி. /////

    தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ///////////இவைகளுக்கு பின்னூட்டம் இட்டிருப்பவர்களில் மைனர் அவர்களின் நகைச்சுவை மின்னுகிறது.///////////

    சிறப்பு நன்றி..

    ReplyDelete
  19. தேமொழி அவர்களின் ஓவியம் என்று ஓவியத்தை உற்றுப் பார்த்துக் கண்டுபிடித்துச் சொன்ன KMRK அவர்களுக்கும் ஒரு சிறப்புப் பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    அதன்பின் ஓவியத்தை ஆராய்ந்தால் சகலகலாவல்லவியாகத்தான் இந்த வேலையைச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது..

    தேமொழிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்..

    கடலோரக் கவிதையாக இந்தப் போட்டி நடக்கிறது என்று தோன்றுகிறது..

    ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை இன்னும் சற்று வடிவமாக வரைந்திருக்கலாம்..ஓவியர் கவனம் என்னவோ காளைமாட்டின் மேலேயே இருந்திருக்கிறது..
    காளையின் திமில் மைனர் விருமாண்டியின் கைகளுக்குள் அடங்கிவிட கொஞ்சம் மட்டுமே வெளியில் தெரியும் வண்ணம் வண்ணமிட்டிருப்பது ஒரு 3D படம் பார்க்கும் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
    காளையின் கால்களிலும் குளம்புகளிலும் இருக்கும் வலிமை மாட்டை அடக்க வந்தவரின் கால்களில், விரல்களில் காணோம்..
    ஒருவேளை அன்னலச்சுமி இறக்கிவிட்ட காளையோ? அதனால் படத்தை வரைந்த ஓவியர் அன்னலச்சுமிக்குச் சாதகமாக ஓரவஞ்சனை செய்திருப்பதாகவே தோன்றுகிறது..

    ReplyDelete
  20. kmr.krishnan said...
    ஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப் பாராட்டுக்கள்.
    மாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.
    முழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியின் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.
    கண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட?)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை.

    அப்போ பிரமுகர்கள் பெருகி வருவது வளர்ச்சி இல்லையா? தில்லி அக்காவை செங்கோட்டை அளவிற்கு உயர்த்திவிட்டது என்னமோ வளர்ச்சிதான்!

    ReplyDelete
  21. ////kmr.krishnan said...
    ஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப்
    பாராட்டுக்கள்.
    மாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.
    முழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியின் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.
    கண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட?)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை///////.

    அதற்கு எதாவது இலவச்திட்டம் அறிவிக்கலாமா கிருஷ்ணன் சார்? இலவசத்திடஙகளை அறிவித்து ஆட்சியையே பிடிக்கும் வாய்ப்புள்ள நாட்டில், கண்களைப் பிடிக்கமுடியாதா?

    ReplyDelete
  22. /////Rathnavel said...
    எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.////

    நல்லது. நன்றி நண்பரே! உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. ////Sathish K said...
    ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!////

    நல்லது. நன்றி நண்பரே! உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. ////krishnar said...
    ஆசிரியருக்கும், வகுப்பறை என் சக மாண‌வருக்கும் என் இனிய தமிழர் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்../////

    நல்லது. நன்றி நண்பரே! உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. ////Thanjavooraan said...
    வகுப்பறை அன்பர்களுக்கெல்லாம் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! இன்றைய பதிவுகள் அனைத்தும் அருமை. தேன்மொழியின் ஓவியம் கைதேர்ந்த ஒவியரின் கைவண்ணம் போல் இருக்கிறது. கவிஞர் புருனேய் தனுசு நாளுக்கு நாள் கவிதைகளில் மெருகேற்றி வருகிறார். சந்திரசேகரின் மகாபாரத நிகழ்வின் உட்கருத்து சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார். பொங்கலுக்கென்று இன்று பல்சுவை நிகழ்ச்சி. இவைகளுக்கு பின்னூட்டம் இட்டிருப்பவர்களில் மைனர் அவர்களின் நகைச்சுவை மின்னுகிறது.////

    நல்லது. உங்களின் வருகைக்கும் மேலான பின்னூட்டங்களுக்கும் நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  26. ////krishnar said...
    மாணவச் செல்வங்களின் ஓவியம் ஒன்றும் வருவதில்லையே எனும் ஆதங்கத்தை போக்கிய ஆசிரியருக்கு நன்றி. மாணவி தேமொழிக்கு பாராட்டுக்கள்.////

    ஆதங்கத்தைப் போக்கியவர் சகோதரி தேமொழிதான். ஆகவே நன்றிகள் அவருக்கே உரியவை!

    ReplyDelete
  27. ////sury said...
    எதிர்காலத்தினைப் பற்றி பெரிதும் சிந்தித்துக்கொண்டே இராது இன்று என்ன கடமையோ செய்யவேண்டிய செயலோ அதைச் செய்துகொண்டே இரு என்று விதுரனுக்குச் சொன்ன கண்ணனின் அறிவுறை இன்றைய காலைப்பொழுதில் எனக்கு நல்லதொரு செய்தியாகத் தோன்றியது.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    சுப்பு ரத்தினம்
    Welcome to See your own Pongal Greetings in
    http://vazhvuneri.blogspot.com/////

    வராது வந்த மாமணியே, அன்பர் சுப்புரத்தினம் அவர்களே, உங்கள் வரவால் இந்தப் பொங்கல் இரண்டு மடங்கு இனிப்பானது.. நன்றி! நீங்கள் வகுப்பறைக்கு வந்து செல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும் பின்னூட்டம் மூலம் உங்கள் வருகையைப் பதிவு செய்யும்போதுதான் நாங்கள் உங்கள் வருகையைக் கண்ணால் காண முடியும்.மகிழ முடியும். அடிக்கடி உங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  28. ////Rajaram said...
    ஆசிரியருக்கும்,அனைத்து நண்பர்களுக்கும் பொங்க‌ல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஐயா பொங்கல் எங்கே கோவையிலா (அ) தேவகோட்டையிலா?//////

    ஊரில் என்ன இருக்கிறது? எல்லா ஊர்களும் ஒன்றுதான். நீங்கள் அனைவரும் வந்து செல்லும் இணையம்தான் எனது ஊர்! அதாவது எனக்குப் பிடித்த ஊர்!

    ReplyDelete
  29. ///////////////////////தேமொழி said...
    தனுசு கவிதை சுண்டி இழுக்கு தையா தையா
    அதில் 32 தை இருக்குதையா
    தைய தைய தைய தையா
    தக தைய தைய தைய தையா
    ______
    பாரதத்தில் தர்மம்...பாரதத்தின் எதிர்காலம் பற்றி தெரியமுடியாமல் போனது நம் பாரதத்தின் தர்மம் என எஸ். சந்திரசேகரன் அவர்கள் மிக சரியான சமயத்தில் எடுத்துச் சொல்லியுள்ளார். அவருக்கு நன்றி.
    ______
    உமாவின் நகைச்சுவை துணுக்குகள் தொகுப்பு ...
    ஆஹா, ஆஹா ஹா
    ஹி ஹி ஹீ ...ஹி ஹி ஹீ ....
    இது மணிரத்தினம் பாணி விமர்சனம்
    மிகவும் சிறப்பானது: "எங்க அப்பாவுக்கு அவளைப் பிடிக்கல!" :)))))
    (வாத்தியாருக்கும் அது மிகவும் பிடித்துள்ளது என சிறப்பு வண்ணம் கொடுத்து காண்பிதுள்ளார்)
    ______
    KMRK ஐயா சின்ன வயசில "இலையில உட்கார்ந்திட்டு சாப்பாட சாப்பிடாம அதுல அப்படி என்ன ஆராய்ச்சி?" அப்படின்னு நிறைய திட்டு வாங்கியிருப்பார் என எனக்குத் திட்ட வட்டமாகத் தெரிகிறது.
    ______
    கண்ணனும், ஆனந்த முருகனும் சொன்ன செய்திகள் நம் கண்ணைத் திறக்கும், நன்றி நண்பர்களே.
    ______
    என் ஓவியத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி...நன்றி...
    அதை வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றி...நன்றி..
    மீண்டும் .பொங்கல் வாழ்த்துக்கள்/////

    மீண்டும் நன்றி
    மீட்டுமே இன்றையப் பதிவு - அனைவரின்
    இதயங்களையும்
    மீட்டட்டும் இன்றையப் பதிவு!

    ReplyDelete
  30. நன்றி மைனர்வாள். நீங்கள் சிறந்த விமர்சகர்தான். படத்தை இவ்வளவு கூர்ந்த கவனித்து கருத்து சொல்லியதற்கு நன்றி.
    என் அப்பாவிற்கு அவர் நண்பர் ஒருவர் பொங்கல் வாழ்த்தாக தீட்டிய ஓவியத்தை பார்த்து வரைந்தது. அந்த நண்பர் ஒரு ஜமீன்தார் (மைனர் இல்லை :-))))
    அப்பா அதை என்னிடம் கொடுத்து இதே போல் உன்னால் வரைய முடியுமா என சொன்ன பொழுது அதை சவாலாக எடுத்துக்கொண்டு வரைந்த படம்.

    என் ஓவிய ஆர்வத்தை வளர்த்தவர் என் அப்பாதான். எதையாவது கொடுத்து இதே போல் வரை என்று சொல்லி அதை ஒப்பிட்டு மதிப்பெண் கூட போடுவார். ஒரு தமிழக அரசு நடத்திய போட்டியில் (பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களுக்கு படம் வரையும் போட்டி)ஓவியக் கல்லூரி மாணவியாக இல்லாமலிருந்தாலும் தமிழக அளவில் ஆறுதல் பரிசு வாங்கினேன். பாரதியாரின் "காணிநிலம் வேண்டும் பராசக்தி" பாடலுக்கும், பாரதிதாசன் பாடல் ஒன்றிக்கும் (அது என்ன என்பது இப்பொழுது மறந்துவிட்டது) வரைந்தேன். அவை கற்பனை ஓவியங்கள். பெரும்பாலும் மனதைக் கவரும் படங்களைப் பார்த்துதான் வரைவேன்.

    படத்தை ஸ்கேன் செய்த பிறகு, வாழ்த்து எழுதுவதற்கு மேலும் கீழும் ஒத்த வண்ணங்களில் பட்டை சேர்த்தவுடன் எதிர்பார்க்காமல் கடலோர காட்சியமைப்பு ஏற்பட்டுவிட்டது. உங்கள் நீண்ட விமர்சனத்திற்கு நன்றி. படம் இந்த அளவிற்கு பிடித்துவிட்டால் சேகரித்து வைத்துள்ள என் ஓவியங்களை ஒன்றொன்றாக மாணவர் மலருக்கென வாத்தியார் பாவைக்கு அனுப்பி விடலாமா?

    ReplyDelete
  31. அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
    இன்றைய மாணவர் மலரில் வந்த ஆக்கங்கள் யாவும் அருமை...
    அதை வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றிகள்.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  32. பொங்கல் என்றதுமே.. பாலோடு தமிழும்
    பொங்கும் என்றே மங்கல வாழ்த்ததை

    மகிழ்ச்சியோடு சேர்ப்பிக்கின்றோம்
    மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களுடன்..

    தையை வைத்து தை மகளை தமிழில்
    தைத்த கவிதை விதையல்ல சதை

    வாழ்த்துவதால் நாங்கள் உங்களோடு
    வாழ்கிறோம் மகிழ்ச்சி பொங்கியபடியே
    ...

    கூறாத காரணத்தை
    கூறியபடி கூறாமல் சொன்ன

    வடமொழி வள்ளல்
    வணக்கத்திற்குரிய தோழர் சந்துருக்கு

    சிரம் குவித்து தருகிறோம்
    சிறப்பான வணக்கங்கள்..
    ...

    துணுக்கிலும்
    மினுக்கிடும் சகோதரிக்கு ம்..ம்..!

    ராஜேஷ் குமாரின் மறுவடிமல்லவா
    சபாஷ் போடும் பேய் கதைகளை

    எதிர்பார்த்தபடி
    ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்
    ...

    அண்ணத்தை பட்டியலிட்டஅண்ணாச்சி
    அன்னாந்து பார்க்க வைத்துன்னாச்சி

    இறைவன் வழிபாட்டில் என்ற
    இடத்தில் கடவுள் வழிபாட்டில் என

    உங்கள் அனுமதியுடன்
    உள்ளபடியேதிருத்திவாசித்து விட்டோம்

    உணவுகளே உணர்வுகள்; மற்றதை
    உரைத்து சொன்னபின் சொல்லுகிறோம்

    மாசில்லா அன்புகள்
    மதிப்பிற்குரிய குடிகாரருக்கு..
    ....

    கண்ணனுக்கு தராமலிருப்போமா
    கனிவான வாழ்த்துக்களை...

    எண்ணங்களும் எழுத்துக்களும்
    எப்போதும் கண்ணனுக்காகவே..
    ...

    அனுந்துவின் "அந்த" எண்ணதிற்கு
    அன்பான வாழ்த்துக்கள்
    ...

    படத்தை சொல்லாமல் விடுவோமா..
    (காணொலி) படம் கடைசியில் வரும்

    மனதை கவரும் படமல்லவா.. இது
    முதலில் வருவதால் வாழ்த்துக்கள்

    கடைசியில் வருகிறது..
    கல் ஊரி நாட்களை மலர்ந்ததற்கு நன்றி
    ...

    மலரை அலங்கரித்த அத்துனை
    மாணவ தோழர்களுக்கும் நன்றிகள்..

    உங்கள் நேரத்தை நாங்கள் மதிப்பதால்
    எங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும்

    பின் ஊட்டமிட்டு எண்ணத்திற்கு
    மின் ஊட்டம் தந்து மகிழ்கிறோம்..

    மாறுபட்ட கருத்துக்கள்
    மனம் திறந்து பார்க்க மட்டுமல்ல

    மற்றவர் மனநிலையிலிருந்தும் பார்க்க
    மதித்து வாழ்வோம் மனம் போல்

    மாசில்லா அன்போடு
    மனம் கசிந்து இப்பாடலை பாடுகிறோம்

    மண்ணின் நல்ல வண்ணம்
    வாழலாம் வைகலும்
    எண்ணின் நல்லகதிக்கி
    யாதுமோர் குறைவிலை
    கண்ணினல் லஃதுறுங்
    கழுமல வளநகர்ப்
    பெண்ணினல் லாளொடும்
    பெருந்தகை யிருந்ததே.

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா,
    இன்றைய பொங்கல் மாணவர் மலர் ஸ்பெஷல் போஸ்டராக அமைந்திருக்கிறது தேமொழி அவர்களின் ஓவியம்...பன்முக திறமைசாலியின் திறமைக்கு என் பாராட்டுக்கள்...

    தனுசு அவர்களின் "தை"பொங்க‌ல் க‌விதை அருமை..."தை"க்கு தை(கை)க்கொண்டு க‌விதை பாடி அச‌த்திய‌ உங்க‌ளுக்கு என் பாராட்டுக‌ள்...

    //கிருஷ்ணர் ஏன் பதில் கூறவில்லை? பதில் தெரியாதா? பதில் கூற விருப்பமில்லையா? அவசியமில்லை என்று தான் பதில் கூற வில்லை
    காரணம் என்ன வென்றால், பீஷ்மர் மரண படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். பதிலைத் தெரிந்து கொள்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று தான் கிருஷ்ணர் மௌனம் சாதித்தார்"//
    பகவத் கீதை"க்கு இன்று ஏற்பட்ட சோதனைக்கு காரணம் கிருஷ்ண பரமாத்மாவிற்கு அன்றே தெரிந்ததாலும் இருக்குமோ?

    ReplyDelete
  34. ///அய்யர் இதுகுறித்து பழனியிலே பஞ்சாயத்து வைக்காமல் இருந்தா சரி..
    பொதுவா பழனின்னா பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும்..
    அய்யர் தயவாலே இப்போ பஞ்சாயத்துதான் நினைவுக்கு வருது..///

    அன்பு தோழர் மைனருக்கு
    அய்யர் பதிலேதும் தாராமல்

    இனிமையான இந்த பாடலினை
    இங்கே சுழல விடுகிறோம்..

    முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
    முற்றிய வினை தீருமே
    முருகா

    உடல் பற்றிய பிணி ஆறுமே
    வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று
    இனிதுற மெத்த இன்பம் சேருமே

    குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு
    குறைகள் யாவும் போகுமே- அவர்
    குடும்பம் தழைத்தோங்குமே

    உர சமர வேலாயுதம்
    பக்கத் துணை கொண்டால்
    சகல பயம் தீருமே

    அறுமுகனை வேண்டி ஆறாதனை செய்தால்
    "அறுதி ஓடி வருவார் - அன்பு
    பெருகி அருள் புரிவார்"

    அந்த கருணை உருவான
    குருபரன் என்றுமே
    கைவிடாமல் ஆடுவார்

    கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
    காரியம் கை கூடுமே
    "பகை மாறி உறவாடுமே"

    சிவ மைந்தன் அருளாலே
    "மெய்றிவு உண்டாக்கி"
    மேன்மை உயர்வாகுமே

    அப்பன் முருகனை கூப்பிட்டு....

    ReplyDelete
  35. அன்பான வணக்கமும்
    அளவற்ற வாழ்த்துக்களும்..

    அன்பெனும் வெல்லத்தை
    (அன்பு வெல்லத்தை போல் கசிவதால் )
    அறிவென்னும் பாலோடு சேர்த்து
    (பால் போல தெளிவதே அறிவு)

    பொங்கி வைத்த பொங்கல் மட்டுமல்ல
    பொங்கல்.. எண்ணி எழுதும் போது

    எழுந்து வரும் ஒவ்வொரு
    எழுத்துக்களுமே பொங்கி வருவதால்

    உங்களுக்கும் (வகுப்பறை பின் ஊட்டத்திற்கு) எழுதும் ஒவ்வொரு நாளும்
    உண்மையிலேயே பொங்கல்..

    அன்பு நிறைந்த பொங்கள் வாத்துக்கள்
    அத்துனை குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கும்..

    ReplyDelete
  36. சாப்பாட்டு ராமன் என்பார்கள்..இனிமேல் அப்படிக் கூப்பிட முடியாது..
    கிருஷ்ணன் என்றுதான் கூப்பிடமுடியும்.ராமன் பெயரைத் தட்டிச் சென்றுவிட்டார் கிருஷ்ணன்..
    தாமதத்திற்கு வருந்துகிறேன்..

    நீண்டதாக ஏதோ எழுதப்பட்டும் கதையாக இல்லாததால் செய்தியாக இருந்ததால் மெதுவாகப் படிப்போம் என்று இருந்துவிட்டேன்..

    இதிலே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் குளிர் நாடுகளில் வசிப்போருக்கென்று மதுவை உணவில் சேர்க்க வலியுறுத்தியிருப்பதால் KMRKஅவரை வணங்குகிறேன்..நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..

    ஆனால் ஒரு விஷயம் கடைசியில் இழுக்காமல் இருந்திருக்கலாம்..

    /////////உலகில் உணவினை சமைத்து உண்பது மனித இனம் மட்டும்தான்.மற்ற பிராணிகள் எல்லாம் பச்சையாகவே உண்ணும். மனிதனும் அவ்வாறே பச்சையாகவே உண்ணக் கூடிய நூற்றுக்கணக்கான தாவர இனங்கள் உள்ளன.
    ஒரு மாமிச உண‌வையும் சமைக்காமல் சாப்பிட முடியாது.எனவே மனிதனின் இயற்கை சைவம்தான் என்று உணர முடிகிறது.////////

    ஜப்பானியரும் மனித இனம்தான்..இங்கே மீன் மற்றும் மாட்டுக்கறி பன்றிக்கறியை (குதிரைக்கறிகூட) எல்லாம் சமைக்காமல் பச்சையாக துண்டு போட்டுச் சாப்பிடுகிறார்கள்..பெரும்பான்மையவர் இப்படியே சாப்பிடுகிறார்கள்..

    எனவே நமது வழக்கத்தைக் கொண்டு மற்ற வழக்கமுள்ளோரை மனித இனமே அல்ல என்று சொல்லிவிடமுடியாது..

    (தமிழகத்தில் சமீபத்தில் உணவு சம்பந்தமாக சர்ச்சைக்கு உள்ளான செய்தியை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கியிருக்கும் பத்திரிகைச் செய்திக்கு இப்படியான வழக்கத்துக்கு மாறான உணவு உண்டால் ஆதாரமே வைத்திருந்தாலும் அது குற்றமல்ல.அவரவர் விருப்பம்..இதை செய்தியாக்கி ஆதாயம் தேட முயன்றதுதான் தவறு..அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள் என்று அவர்களது ஆன்லைன் பக்கத்தில் கமென்ட் இட்டிருந்தேன்..ஏனோ வெளியிடவில்லை..)

    ReplyDelete
  37. தமிழர் திருநாளில்
    தமிழனெனைக் குறித்து
    தமிழ்க்கடவுள் புகழ்பாடி
    வளம்பொங்க வாழ்த்திய
    அய்யருக்கு நன்றிகள்..

    ReplyDelete
  38. உமா அவர்களின் நகைச்சுவை துணுக்குகளில் நான் கேட்டிடாத கடைசி மூன்றும் நன்றாகயிருந்தது...

    ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கட்டுரைகளை தந்து அசத்தும் kmrk அவர்களுக்கு நன்றிகள்...

    வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  39. வாத்தியார் ஐயா வணக்கம்.!

    வாத்தியார் முதல் வாத்தியார் ஆக போகின்றவர்கள் வரை மற்றும் முதல் பென்ச் முதல் மாணவர் முதல் கடைசி பென்ச் கடைசி மாணவர்கள் வரை அனைவருக்கும் உள்ளம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் .

    ReplyDelete
  40. //ஜப்பானியரும் மனித இனம்தான்..இங்கே மீன் மற்றும் மாட்டுக்கறி பன்றிக்கறியை (குதிரைக்கறிகூட) எல்லாம் சமைக்காமல் பச்சையாக துண்டு போட்டுச் சாப்பிடுகிறார்கள்..பெரும்பான்மையவர் இப்படியே சாப்பிடுகிறார்கள்..//

    நன்றி மைனர்வாள்!நானும் பச்சையாக அசைவம் சாப்பிடும் இனக் குழுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாலும், அவை 'எக்ஸெப்ஷன்ஸ்'
    என்று எண்ணியிருந்தேன். ஜப்பானில் 'பெரும்பான்மையானவர்கள்' அப்படி பச்சை மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பது எனக்குப் புதிய செய்தியே.

    'ஃபிளைட் 571'நிகழ்ச்சியைச் சுட்டியிருந்தேன். நாகரிக மனிதன் செய்த 'கேனிபலிசம்'! அதைப் பற்றித்தான் உங்கள் விமர்சனம் வரும் என எண்ணியிருந்தேன். அல்லது தேவைக்கேற்ற உணவு என்பதில் நான் சுட்டிய புது மணத் தம்பதியினரின் தேவைகளை வைத்துக் கிண்டல் அடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.வேறு ரூட்டில் போய் பன்ச் கொடுத்துவிட்டீர்கள். ரிடர்ன் பன்ச் கொடுக்காமல் தங்கள் கருத்தை ஏற்று என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். தொடரும் என் உணவுக் கட்டுரையில் உங்கள் கருத்தை சுட்டிவிட்டு மேலே செல்கிறேன். நீங்கள் மட்டுமே என் கட்டுரையை ஆழ்ந்து படித்திருப்ப‌தாகத் தெரிகிறது. அதற்காக ஒரு சல்யூட்!

    ReplyDelete
  41. //KMRK ஐயா சின்ன வயசில "இலையில உட்கார்ந்திட்டு சாப்பாட சாப்பிடாம அதுல அப்படி என்ன ஆராய்ச்சி?" அப்படின்னு நிறைய திட்டு வாங்கியிருப்பார் என எனக்குத் திட்ட வட்டமாகத் தெரிகிறது.//

    காந்திய நெறிகளில் திளைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் இயற்கை உணவு, இய்ற்கை மருத்துவம்,சைவத்தினை அறிவியல் சார்ந்து நிறுவுதல் ஆகியவற்றில் மிகச் சிறு வயது தொடங்கியே பயிற்சியுள்ளவன். எனவே என் உணவு ஆய்வு என் தாய் வீட்டில் விமர்சனத்தைக் கொண்டு வந்ததில்லை.
    காப்பி பற்றிய என் ஆக்கத்தில் என் 25 வயதுவரை காப்பி குடிக்காமல், கேழ்வரகுப் பால் பாயசமே சாப்பிட்டு வளர்ந்ததைக் குறிப்பிட்டு இருந்தேன்.
    அதன் பின்னர் தலையணை மந்திரம் காப்பி குடிகாரனாக மாற்றிவிட்டது.

    ReplyDelete
  42. ///சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார்.///

    அதுவும் உண்மைதான்.சர்க்கரை நோய் அதிகம் ஆகிவிட்ட நிலையில் சர்க்கரைப் பொங்கல் அதிகம் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிக் கோளாறு கொடுக்கும்.பின்னூட்டத்திற்கு நன்றி கோபால்ஜி!

    ReplyDelete
  43. //ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை இன்னும் சற்று வடிவமாக வரைந்திருக்கலாம்..ஓவியர் கவனம் என்னவோ காளைமாட்டின் மேலேயே இருந்திருக்கிறது..
    காளையின் திமில் மைனர் விருமாண்டியின் கைகளுக்குள் அடங்கிவிட கொஞ்சம் மட்டுமே வெளியில் தெரியும் வண்ணம் வண்ணமிட்டிருப்பது ...//

    நைசாக மாடுபிடிப்பது தான் தான் என்று சந்தடி சாக்கில் க்ரெடிட் வாங்கப் பார்க்கீறீரோ மைனர்வாள்? ஓவியர் கவனம் காளை மாட்டின் மீது இருக்கிறது என்பது மைனரின் மேல் கவனம் செலுத்தவில்லையே என்ற ஏக்கத்தை தூக்கலாகவே காட்டுகிறது.மாடுபிடியில் மாடுதான் காணும் ஹீரோ!அதனால்தான் மாட்டின் மீது அதிக கவனம்.என்ன உமாஜி நான் சொல்வது சரிதானே?

    ReplyDelete
  44. ///தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்//

    தங்களுக்கும் அவ்வாறே எங்கள் குடும்பத்தாரின் சங்கராந்தி நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    உங்கள் பின்னூட்டத்தின் மூலம் தாங்கள் வகுப்பறையின் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்திவிட்டீர்கள்.
    என் சுய புராணக் கட்டுரைகள், பின்னூட்டங்களை வாசித்து "இவனெல்லாம் எழுத வந்துட்டான்..."என்று உதட்டோரச் சிரிப்புடன் நீங்கள் மாமியிடம் சொல்வது அசரீரியாகக் கேட்கிறது. விருப்பம், நேரம் இருப்பின் மின் அஞ்சல் அனுப்ப வேண்டுகிறேன்.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  45. //அதற்கு எதாவது இலவச்திட்டம் அறிவிக்கலாமா கிருஷ்ணன் சார்? இலவசத்திடஙகளை அறிவித்து ஆட்சியையே பிடிக்கும் வாய்ப்புள்ள நாட்டில், கண்களைப் பிடிக்கமுடியாதா?//

    ஆம்! வாத்தியார் ஐயா! ஏதாவது இன்சென்டிவ் கொடுத்தாலதான் நம் மக்களை இயங்க வைக்க முடியும்.

    ஹஜ் யாத்திரை, ஜெருசலம் யாத்திரை ஆகியவற்றிற்குப் பயணம் செல்ல அரசு மானியம் போல, கண் தானம் செய்வோருக்கு ஒருமுறை அவர்கள் விரும்பும் புனித ஸ்தலத்திற்கு யாத்திரை இலவசமென்பதுபோல அறிவிக்கலாம்.அல்லது கண் கோளாறுக்கான சிகிச்சையை, கண்ணாடியை இலவசமாக அளிக்கலாம்.
    இப்போதே பல கண் மருத்துவ முகாம்கள் இலவசமாக நடை பெறுகின்ற‌ன. அவற்றில் பங்கெடுப்போரிடம் பிரச்சாரம் செய்து அவர்களின் கண்தான ஒப்புதலை கையொப்பமாகப்பெறலாம். முக்கியமாக உறவினர்கள் இறப்பை 6 மணி நேரத்திற்குள் கண் வங்கியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தல் வேண்டும்.

    அரிமா ச‌ங்கத்தார் சிறப்பான பணியாற்றி வருகிறார்கள்.

    ஒரு சாவு செய்தி கிடைத்தவுடன் "கண்களை தானம் செய்யலாமா?"என்ற கேள்வியை யாராவது ஒருவர் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களிடம் கேட்க வேண்டும்.
    ஒப்புதல் கிடைத்தால் உடனே கண் வங்கியைத் தொடர்புகொள்ள வேண்டும்.

    முதியோர் இல்லங்கள் நடத்துவோரிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
    அதுபோலவே ஆதறவு அற்றோர் இல்லங்கள், மன நோயாளிகள் இல்லங்கள் ஆகியவற்றில் பணி புரிவோரிடம் கண் தானத்தின் நடைமுறைகளை அடிக்கடி நினைவூட்டலாம்.

    ReplyDelete
  46. //தில்லி அக்காவை செங்கோட்டை அளவிற்கு உயர்த்திவிட்டது என்னமோ வளர்ச்சிதான்!//

    டெல்லியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று செங்கோட்டையில் கொடியேற்றும் கவுரவமும் உமாஜிக்கு நாங்கள் அளித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதே ஐயா! கவனிக்கவில்லையா நீங்கள்? நந்தகோபால் பின்னூட்டம் இட்டு வந்தபோதே டெல்லி உமாஜி பிரமோஷன் ஆகிவிட்டாரே!
    (ஆமாம், அந்த நந்தகோபர் இப்போது எங்கே?)

    ReplyDelete
  47. //படம் இந்த அளவிற்கு பிடித்துவிட்டால் சேகரித்து வைத்துள்ள என் ஓவியங்களை ஒன்றொன்றாக மாணவர் மலருக்கென வாத்தியார் பாவைக்கு அனுப்பி விடலாமா?//

    இதற்கெல்லாமா அனுமதி கேட்பார்கள்? அனுப்புங்கள் தேமொழி! ரசிக்கக் காத்திருக்கிறோம்.

    பார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்.

    ReplyDelete
  48. //தமிழகத்தில் சமீபத்தில் உணவு சம்பந்தமாக சர்ச்சைக்கு உள்ளான செய்தியை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கியிருக்கும் பத்திரிகைச் செய்திக்கு இப்படியான வழக்கத்துக்கு மாறான உணவு உண்டால் ஆதாரமே வைத்திருந்தாலும் அது குற்றமல்ல.அவரவர் விருப்பம்..இதை செய்தியாக்கி ஆதாயம் தேட முயன்றதுதான் தவறு..அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள் என்று அவர்களது ஆன்லைன் பக்கத்தில் கமென்ட் இட்டிருந்தேன்..ஏனோ வெளியிடவில்லை..)//

    நக்கீரனின் அந்த கவர் ஸ்டோரி முதல்வரை மட்டுமே தாக்குவது அல்ல. அதற்கு சாதிக் காழ்ப்புணர்வு சார்ந்த ஒரு அவலப் பின்னணியும் உண்டு.இன்று சாதியினை தூக்கிப் பிடிப்பவர்களே சாதியை ஒழிப்பேன் என்று சபதம் செய்பவர்கள்தான், மைனர்வாள்!

    ReplyDelete
  49. //ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கட்டுரைகளை தந்து அசத்தும் kmrk அவர்களுக்கு நன்றிகள்...//

    நன்றி ஸ்ரீஷோபனா அவர்களே!

    உங்களுக்கு இப்படித் தோன்றுவது வேறோரு மனதில் இப்படித் தோன்றுகிறது:

    "எல்லாவற்றை பற்றியும் சிறிதாவது தெரிந்து இருக்கவேண்டும்
    சிலவற்றை பற்றியாவது முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் "

    "பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
    பண்புடையோராய் ஆவாரா?"

    எனக்கு அத் தகுதிகள் இல்லை என்று கூறாமல் கூறி வந்த பொங்கல் வாழ்த்துச் செய்தி இது.

    ReplyDelete
  50. வாத்தியார் ஐயா மற்றும் வகுப்பறை மாணவர்கள் எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    க‌.சுதன்.

    ReplyDelete
  51. ////பார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்////

    வழிமொழிகின்றேன்.
    Yes I second above.
    வழிமொழிவதில் ஓர் மகிழ்வு.

    ReplyDelete
  52. ///அண்ணத்தை பட்டியலிட்டஅண்ணாச்சி
    அன்னாந்து பார்க்க வைத்துன்னாச்சி

    இறைவன் வழிபாட்டில் என்ற
    இடத்தில் கடவுள் வழிபாட்டில் என

    உங்கள் அனுமதியுடன்
    உள்ளபடியேதிருத்திவாசித்து விட்டோம்

    உணவுகளே உணர்வுகள்; மற்றதை
    உரைத்து சொன்னபின் சொல்லுகிறோம்//

    "அன்னத்தை பட்டியலிட்ட அண்ணாச்சி
    அண்ணாந்து பார்க்க வைத்தது..."என்று இதனை வாசிக்க வேண்டும் என்று
    நினைக்கிறேன்.'வைத்துன்னாச்சி' என்பதற்கு எவ்வளவோ முயன்றும் பொருள் புரியவில்லை.

    இறைவன், கடவுள், தெய்வம் என்பவை பற்றி மீண்டும் மீண்டும் எல்லோரையும் திருத்தி வருகிறீர்கள். அவற்றினைப் பற்றி ஒரு விளக்கக் கட்டுரை அளித்தால் எல்லோருக்கும் அது பயனுடையதாக அமையும்.
    வழக்கம் போல் ஏதாவது பாடலைச் சுழலவிடாமல்(சுத்தி விடாமல்) என் கோரிக்கையை அய்யர் ஏற்க வேண்டுகிறேன்.

    உண்ணும் உணவுதான் மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது என்பது கீதையிலும் மற்ற மற்ற நூல்களிலும் சொல்லியிருப்பது சரிதான். அதனை நீங்கள் எடுத்துச் சொல்வதற்கு முன்பே அறிவோம்.என்னுடையது செயல் முறையிலான கட்டுரை.மனித மாமிசம் உண்பது காட்டுமிராண்டித்தனம் என்பது நாகரிக மனிதனின் கொள்கை.ஆனால் நாகரிக மனிதன் உணவுப் பஞ்ச நெருக்கடியில் தள்ளப்படும் போது மனித மாமிசத்தையும் உண்டதையும் சுட்டியுள்ளேன்.

    இயற்கை உணவு முறைகள் நேரமும், பொருளும், குறைந்த உடல் உழைப்பும் உள்ளவர்கள் 'ஃபேஷனாக' கடைப் பிடிக்கலாம்.

    சும்மாக் கிடைத்துக் கொண்டிருந்த கொய்யாப்பழம் இன்று கிலோ 50 ரூபாய் என்னும் போது, சீப்பட்டுக் கொண்டிருந்த பப்பாளி இன்று கிலோ 30 ரூபாய் என்னும் போது ஏழைக்கு நான் இயற்கை உணவின் மேன்மையைச் சொல்ல மாட்டேன். உன் வயிறு பசிக்காமல் நிரப்பிக் கொள்ள ஆனதைப்பார் என்பேன்.


    'ஆபத்து தர்மம்'என்பது ஒன்று உண்டு. அடுத்த வேளை உணவு எப்படி, எங்கிருந்து,எந்த வடிவத்தில் ,யாரிடமிருந்து கிடைக்கும் என்று அறியாத
    ஏழைக்கு நமது சைவம் அசைவம்,அதனால் உண்டாகும் மன இயல்புகள் எல்லாம் போதிப்பது ....?

    ReplyDelete
  53. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. //////// kmr.krishnan said...
    //ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை இன்னும் சற்று வடிவமாக வரைந்திருக்கலாம்..ஓவியர் கவனம் என்னவோ காளைமாட்டின் மேலேயே இருந்திருக்கிறது..
    காளையின் திமில் மைனர் விருமாண்டியின் கைகளுக்குள் அடங்கிவிட கொஞ்சம் மட்டுமே வெளியில் தெரியும் வண்ணம் வண்ணமிட்டிருப்பது ...////
    நைசாக மாடுபிடிப்பது தான் தான் என்று சந்தடி சாக்கில் க்ரெடிட் வாங்கப் பார்க்கீறீரோ மைனர்வாள்? ஓவியர் கவனம் காளை மாட்டின் மீது இருக்கிறது என்பது மைனரின் மேல் கவனம் செலுத்தவில்லையே என்ற ஏக்கத்தை தூக்கலாகவே காட்டுகிறது.மாடுபிடியில் மாடுதான் காணும் ஹீரோ!அதனால்தான் மாட்டின் மீது அதிக கவனம்.என்ன உமாஜி நான் சொல்வது சரிதானே?////////

    ////////பார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்.//////

    இதுதான் 'எடுக்கவோ..கோர்க்கவோ' வேலையா KMRK சார்?

    ReplyDelete
  55. ////////krishnar said...
    ////பார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்////

    வழிமொழிகின்றேன்.
    Yes I second above.
    வழிமொழிவதில் ஓர் மகிழ்வு./////

    நீங்களுமா? சரி..முடிஞ்சா வரையட்டுமே..
    ஜப்பானில் நிக்கோ என்கிற மலைப் பிரதேசத்துக்கு டூர் அடிச்சுத் திரும்பும் வழியில் ட்ரெயினில் ஒரு முன்பின் தெரியாத ஆர்ட்டிஸ்ட் சும்மா..பொழுதுபோக்க எங்களிடம் கேட்டுக்கொண்டு 'கேரிகேச்சர்' படம் வரைந்து கொடுத்தார்.. நினைவுக்கு வந்துவிட்டது..கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும்..

    ReplyDelete
  56. ஆசிரியருக்கும் வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும்(சகோதர சகோதரிகளுக்கும்)என்இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    கண்ணா நீ நல்லாயிருக்கிறீயா ரொம்ப நாட்களா நீங்க வகுப்புக்கு வரவில்லையா
    சீதாராமன் கண்ணா உடம்பு நல்லாயிருக்குதா உடம்பை பார்த்துகொள்

    ReplyDelete
  57. ///இறைவன், கடவுள், தெய்வம் என்பவை பற்றி மீண்டும் மீண்டும் எல்லோரையும் திருத்தி வருகிறீர்கள். அவற்றினைப் பற்றி ஒரு விளக்கக் கட்டுரை அளித்தால் எல்லோருக்கும் அது பயனுடையதாக அமையும்.///

    இயல்பாக சொல்வதனையே
    இங்கு நம்மவர் மாற்றாக சிந்திக்கையில்

    விளக்கம் சொல்வது மற்றவர்களுக்கு
    விவரமாக ஏற்க முடியாததே..

    அப்படி சில உண்மைகள் கசந்தாலும்
    அந்த வகையில் பழகியமையால்

    ஏற்க விரும்பாது அதனால்
    எமது எண்ணத்தை அவ்வப்போது

    எழுதி வைக்கின்றோம்
    பின் ஊட்டத்திலும்.


    ///யாரிடமிருந்து கிடைக்கும் என்று அறியாத ஏழைக்கு நமது சைவம் அசைவம்,அதனால் உண்டாகும் மன இயல்புகள் எல்லாம் போதிப்பது ....?///

    யாருக்கும் போதிக்க தேவையில்லை..
    யாவருக்கு விருப்பமோ அவர்கள்

    விரும்பியபடியே எடுத்துக்கட்டும்
    விவரங்கள் தருவோம் அது போதும்

    சர்க்கரை நோயாளிக்கு
    மருத்துவர் ஆலோசனை சொல்வதுபோல்

    ReplyDelete
  58. ///உங்களுக்கு இப்படித் தோன்றுவது வேறோரு மனதில் இப்படித் தோன்றுகிறது:

    "எல்லாவற்றை பற்றியும் சிறிதாவது தெரிந்து இருக்கவேண்டும்
    சிலவற்றை பற்றியாவது முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் "

    "பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
    பண்புடையோராய் ஆவாரா?"

    எனக்கு அத் தகுதிகள் இல்லை என்று கூறாமல் கூறி வந்த பொங்கல் வாழ்த்துச் செய்தி இது..///

    நிச்சயமாக வாழ்த்துச் செய்தியில் இருக்க வாய்ப்பில்லை..

    தங்களை கூறியதாக ஏன்
    தாழ்வு மனப்பாண்மை உள்ளவர்போல்
    எண்ண வேண்டும்..?

    உளவியலில் முதுகலை பெற்றவர் நீங்கள்-? உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டுமோ தோழரே...

    இரண்டாவதாக குறிப்பிட்டது திரைப்பாடலின் கடைசி வரிகள்..
    இது அனுப்பியவரின் மனதை கவர்ந்த வரிகளாக இருக்கலாம் ..


    தெரிந்து இருக்க வேண்மும் என சொன்ன முதல் வரிகள்..யாருக்குமே தெரியாது என்பதன் உண்மையை சொல்வது தான்.. அதைச் சொன்னவருக்கும் சேர்த்து..

    இது அய்யருக்கு வந்திருந்தால் .....(?)

    சுட்ட பழம் வேண்டுமா..?
    சுடாத பழம் வேண்டுமா..? என

    ஔவைக்கு அறிவுறுத்திய
    கந்தனைப் போல்
    கல்வி நிலையில் இருந்து அறிவு நிலையை தட்டிப்பார்க்க தந்து வரிகள் அல்லவோ என எண்ணி
    பழகியவராய் இருந்தால் நன்றி சொல்வோம்.
    மற்றவராக இருந்தால் அமைதி கொள்வோம்..

    எங்களுக்கு சொல்லும் உங்களுக்கு தெரியம் என்றே நம்புகிறோம்..

    மாசில்லா அன்பினை வழக்கம் போல்
    மனம் நிறைய தந்து மகிழ்கிறோம்

    ReplyDelete
  59. ///இயற்கை உணவு முறைகள் நேரமும், பொருளும், குறைந்த உடல் உழைப்பும் உள்ளவர்கள் 'ஃபேஷனாக' கடைப் பிடிக்கலாம். ///

    ஆம்
    நாக்கிற்கு மட்டும் இரண்டு வேளைகள்
    பேசுவதும் சுவைப்பதும்..

    எப்படி பழக்குகின்றோமோ அது
    அப்படியே செயல்படும்..

    தாங்கள் பட்டியலிட்ட பழத்தை போல
    உலர் பழ விலைகளும் எகிறி விட்டது

    முந்திரி கிலோ ரூ500
    பாதாம் கிலோ ரூ 550
    பிஸ்தா கிலோ ரூ 1000
    சார பருப்பி கிலோ ரூ1500

    காய்கறிகளும் இப்படியே...
    என்ன செய்ய..?

    விலை மலிவாக இருப்பது மாமிச உணவுகள் தான் போலிருக்கு...

    ReplyDelete
  60. Uma S umas1234@gmail.com
    to me

    1
    ஆக்கத்தை வெளியிட்டதற்கு வாத்தியாருக்கு நன்றி!

    தேமொழி உங்கள் ஓவியத்தைப் பார்க்க இயலவில்லை. எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன் umas1234@gmail.com
    தனுசுவின் டைமிங் கவிதை நன்று. சந்திரசேகரன் அவர்கள் எழுதிய மகாபாரத நிகழ்வும் டைமிங் செய்தியோடு வந்திருக்கிறது. கிருஷ்ணன் சார் இன்னும் எந்த தலைப்பைத் தொடாமல் விட்டிருக்கிறார் என்று யோசித்துப்பார்க்க வேண்டும். (உங்களையும், இன்னும் சிலரையும் வைத்து ஒரு காமெடி ஆக்கம் கூட யோசித்து வைத்திருக்கிறேன், விரைவில் எழுதுகிறேன்). கண்ணன் சீதாராமன் நீண்ட நாட்கள் கழித்து தலைகாட்டுகிறார். உங்கள் உடல்நிலை தற்போது எப்படியிருக்கிறது கண்ணன்? அனந்தமுருகனின் விழிப்புணர்வூட்டும் செய்திக்கு நன்றி!

    S. உமா, தில்லி
    >>>>>>>>>>>>>>>>
    2
    நகைச்சுவையை ரசித்த மைனர், கிருஷ்ணன் சார், தேமொழி, ஆலாசியம், ஐயர் (நீங்கள் பேய்க்கதை ரசிகரோ??) மற்றும் ஷோபனாவுக்கு (இந்த 'அவர்கள்' வேண்டாமே!) எனது நன்றிகள்!

    பொங்கலில் இட்ட முந்திரியும் கரும்புமாய்.//

    பொங்கலில் கரும்பு கூட போடுவாங்களா? இல்லை திராட்சை எனச் சொல்லவந்து கரும்பாகிவிட்டதா?

    ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை//

    இதப்பார்றா! ஜல்லிக்கட்டில் காளையை நீங்கள் அடக்கினீர்களா அல்லது காளை உங்களை அடக்கியதா என்று நாங்கள் மனக்கண்ணிலேயே கண்டு ரசித்துவிட்டோம் (நிஜமாவே கண்கொள்ளாக்காட்சியா இருந்தது). எவ்வளவு முட்டு, உதை வாங்கினீர்கள், எவ்வளவு பேர் சேர்ந்து உங்களைத் தூக்கி உட்கார வைத்தார்கள், எவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தீர்கள் என்று தெரியாவிட்டால், என் தலை வெடித்துவிடும். சீக்கிரமா சொல்லுங்க!

    அந்த நந்தகோபர் இப்போது எங்கே?//

    அவருடைய சொந்த ஊரான கோவையில் செட்டிலாகி சில மாதங்கள் ஆகின்றன.

    ஜப்பானில் நிக்கோ என்கிற மலைப் பிரதேசத்துக்கு டூர் அடிச்சுத் திரும்பும் வழியில் ட்ரெயினில் ஒரு முன்பின் தெரியாத ஆர்ட்டிஸ்ட் சும்மா..பொழுதுபோக்க எங்களிடம் கேட்டுக்கொண்டு 'கேரிகேச்சர்' படம் வரைந்து கொடுத்தார்..//

    நீங்க பாட்டுக்கு அதை வாரமலருக்கு அனுப்பி கினுப்பி வெச்சுடாதீங்க! ஏதோ உங்க கவிதையைப்படிச்சதுக்கு அப்புறமும் நல்லா இருக்கோமேன்னு ஆச்சரிய அதிர்ச்சியில் இருக்கேன்!!!!!!

    S. உமா, தில்லி

    ReplyDelete
  61. ///////Uma said,
    இதப்பார்றா! ஜல்லிக்கட்டில் காளையை நீங்கள் அடக்கினீர்களா அல்லது காளை உங்களை அடக்கியதா என்று நாங்கள் மனக்கண்ணிலேயே கண்டு ரசித்துவிட்டோம் (நிஜமாவே கண்கொள்ளாக்காட்சியா இருந்தது). எவ்வளவு முட்டு, உதை வாங்கினீர்கள், எவ்வளவு பேர் சேர்ந்து உங்களைத் தூக்கி உட்கார வைத்தார்கள், எவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தீர்கள் என்று தெரியாவிட்டால், என் தலை வெடித்துவிடும். சீக்கிரமா சொல்லுங்க!//////

    இதப்பார்றா..விருமாண்டி படத்த இன்னும் பார்க்கலே போல..

    'லேட் உமா'..ன்னு பேர் வாங்கிடாதீங்க..

    சீக்கிரம் படத்தைப் பாருங்க..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com