மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.1.12

அப்பனுக்குப் பாடம் சொன்னவன்

-------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
 அப்பனுக்குப் பாடம் சொன்னவன்

இந்த ஆண்டின் முதல் பதிவு இது. பழநிஅப்பன் இல்லாமல் வாத்தியார் இல்லை. என்னை எழுதப்பணிக்கின்றவன் அவன். எனக்கு எழுதும் வல்லமையையும் ஊக்கத்தையும் கொடுப்பவன் அவன்தான். அவன் தாளை வணங்கி, இன்றையப் பதிவாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய முருகன் பாமாலை ஒன்றைப் பதிவிடுகிறேன். அனைவரும் படித்து மகிழுங்கள்

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜோதிடப் பாடங்கள் 9.1.2012 திங்கட்கிழமை முதல் தொடர்ந்து வெளிவரும்.

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா!

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா - வெறும்
ஆண்டியாகிப் பழனிவந்த வேலய்யா
கற்பனையைத் தாண்டி நிற்கும் கந்தய்யா - உனைக்
காண்பதற்கு நடந்துவந்தோம் நாமய்யா.

மலையினிலே அரசமைத்த மன்னனே - எங்கள்
மடியினிலே குழந்தையான கந்தனே
தலைஇருக்கும் வரையிலுன்னை வணங்குவோம் - உன்
சந்நிதியில் பாடிபாடி மயங்குவோம்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனம் - அங்கு
கந்தனையே எண்ணி வாழ்ந்தனம்
பூவிரித்த பாண்டினாட்டில் வாழ்ந்தனம் - உன்
பொன்னடியைக் கண்டுகண்டு மகிழ்ந்தனம்.

ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்விலே - மயில்
ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
மாறிவரும் நாகரீக உலகிலே - நாங்கள்
மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே

இலங்கையிலும் உனதுகோவில் கட்டினோம் - பர்மா
எங்கணுமே உனதுசிலை நாட்டினோம்
மலையநாட்டில் உனதுகோவில் ஆக்கினோம் - எங்கள்
மனதிலுள்ள பயத்தையெல்லாம் போக்கினோம்

தண்டபாணி கோவிலின்றி ஊருண்டோ - உன்னைத்
தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டோ
கொண்டுவிக்கப் போனஎங்கள் கொள்கையே - உனைக்
கொண்டுவைக்கப் போனகொள்கை யல்லவா

செந்திலாளும் பழனியாண்டி முருகவேள் - எங்கள்
செட்டிமக்கள் தருமங்காக்க வருகவே
அந்தமிலா அழகுத்தெய்வம் கந்தவேள் - உன்
அன்புமக்கள் வாழ்வுகாக்க வருகவே.

ஆண்டுதோறும் ஆண்டுதோறும் வருகிறோம் - நீ
ஆண்டுவரும் பழநிநோக்கி வருகிறோம்
வேண்டிவரும் நலங்களெல்லாம் அருளுவாய் - உன்
வீட்டுமக்கள் போல எமை ஆளுவாய்.


பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் செட்டிநாட்டுப் பகுதி மக்களுக்காக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிக்கொடுத்தபாடல்.
-------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

39 comments:

  1. "தலை இருக்கும் வரை உன்னை வணங்குவோம்."

    காலை வணக்கம் ஐயா. பாடலுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  2. "ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்விலே - மயில்
    ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
    மாறிவரும் நாகரீக உலகிலே - நாங்கள்
    மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே"

    இவை மிக அருமையான வரிகள். தான் பிறந்து வளர்ந்த சமூகத்தின் பெருமையை கவிஞர் மேம்பட உரைத்துள்ளார். பதிவிட்டதற்கு நன்றி ஐயா.
    டி. எம். எஸ் பாடி இந்த பாடலைக் கேட்டதாக நினைவு.

    ReplyDelete
  3. இந்த வருடத்திற்கான முதல் பதிவை சக்தி உமை பாலனின் பாடலுடன் துவக்கியிருக்கிறீர்கள். இனி அனைத்தும் இனிதே நடக்க அவர் அருள் புரிவாராக.

    ReplyDelete
  4. "ஏறுகிறோம் இறங்குகிறோம் மலையிலே..."

    என்ற வரிகளில் வாழ்வின் ஏற்ற இறக்கத்தை நன்கு கூறிவிட்டார் கவிஞர்.
    நல்ல கவிதை. பாடுவதற்கு ஏற்ற காவடிச்சிந்து.வெளியிட்ட உங்களுக்கு நன்றியும் வந்தனமும்.

    ReplyDelete
  5. அய்யா, காலை வணக்கம். அந்த முருகன் படம், எங்கள் ஊரின் கல்யாண சுப்ரமணிய சுவாமி படம். எங்கள் ஊர் ஜலகண்டபுரம், சேலம் மாவட்டம். இந்த படத்தை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.
    சிவா

    ReplyDelete
  6. ///மாறிவரும் நாகரீக உலகிலே - நாங்கள்
    மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே"///

    ///தண்டபாணி கோவிலின்றி ஊருண்டோ-‍‍உன்னைத்
    தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டோ///

    என்னை கவர்ந்த வரிகள்; ஏனைய வரிகளும்தான்.
    நன்றி.

    ReplyDelete
  7. முருகன் அருளோடு இந்த வருடம் எல்லோருக்கும் நன்மையாக அமையட்டும்.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,
    முருகப்பெருமானின் அருளாசியோடு ஆண்டு முழுவதும் அனைவருக்கும் சிறப்பாக வேண்டி முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றேன்...

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்,

    மிகவும் ஆவலுடன் உங்களை எதிர்பார்த்து இருக்கிறோம்.

    ReplyDelete
  10. On behalf of Student of Classroom, We prey the Almighty to give you the good health,happiness and serenity through out your life.

    To the class room students: Wish you all fabulous 2012 with full of great achievements and experiences.

    ReplyDelete
  11. இந்த ஆண்டின் பதிவு முருகன் பாமாலையுடன் துவங்கியதற்கு வாழ்த்துக்கள்!

    நன்றி

    ReplyDelete
  12. Guru vanakkam,

    a very good beginning to 2012.

    Regards
    RAMADU.

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா!

    அடியவனும் ஒற்றையாக பாத யாத்திரை செல்லுவதற்கு வேண்டிய வழி முறைகளை கூறியவரும் தங்களது ஊரை ( காரைக்குடியை ) சார்த்தவர் தான் .

    திருவாவடுதுறை ஆதினம் திரு குமாரசாமி தம்பிரான் ஐயா!.

    இன்று நினைத்தாலும் மிகவும் வியப்பாக உள்ளது எமக்கே எப்படி சுமார் 225 km செருப்பு இல்லாமல் சென்றோம் என்பதனை நினைத்து பார்த்தால் ஐயா .

    நான்கு பகல் , மூன்று ராத்திரி யில் அடைந்த தூரம் ஐயா!

    ReplyDelete
  14. ஐந்தெழுத்து மந்திரத்தை
    ஐயமின்றி சொல்லி தந்த வள்ளல்

    வள்ளியின் கணவன் "வள்ளல்" என்றே
    வாரியார் சுவாமிகள் சொல்வார்

    வந்தாரை வாழவைக்கும் தலை
    வணங்கும் தலையாய தலைவன்

    அய்யன் தொடங்கிய தமிழ் சங்க நாயகன்
    மெய்யாலுமே தரணி போற்றும்முருகன்

    தேடிச் சென்று வணங்குவோருக்கு
    நாடி வந்து அருள் புரியும் வேந்தன்

    கந்த கடவுள் நம்
    சொந்த கடவுள் என

    துதி செய்யும் அனைவருக்குமே
    மதி திருத்தி வாழ்வு தரும்

    அப்பெருமானை எங்கள்
    அப்பன் முருக பெருமானை போற்றும்

    அய்யருக்கு இஷ்டமான இந்த
    அருமையான கந்தரலங்கார பாடலை

    ஏற்றுகிறோம்.. இங்கு
    போற்றுவோம் கந்தனை வாருங்கள்


    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச்
    செந்தமிழ் நுல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனை கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
    சாந்துணைப் போது மறவாதவர்கு
    ஒரு தாழ்வில்லையே

    ReplyDelete
  15. அருவம் , உருவம், அரு உருவம் ஆக உள்ள சிவன் தன் 6 சிரசுகளிளிருந்து தோன்றிய சக்திப் பொறிகளினால் ஆறு தலை பன்னிரண்டு கரங்கள் கொண்டு பூமியில் வரத்தகுந்த உருவம் கொண்டு சிவனே நம் தமிழர்களுக்குத் தெய்வமாக நம் நாட்டில் நின்று காத்து வரும் ஷண்முகனின் அருள் வேண்டி என்றும் நிற்போம்.
    அருணாசலம்

    ReplyDelete
  16. தமிழன் அந்த காலத்திலருந்தே வடக்கால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்
    (கயிலாயத்தில் ராஜ்ஜியம் செய்பவர் பழத்தை டிஸ்ட்ரிபீட் பண்ணின கதை ) என்பதை உணர்த்தும் தமிழ்க்கடவுள் முருகனை வாழ்த்தி இந்த புதுவருடப் பதிவை ஆரம்பித்திருக்கும் அழகே தனி..

    பொதுவா எல்லோரும் பிள்ளையார் சுழிதான் போடுவாங்க..

    வாத்தியார் விசுவாசமே தனிதான்..வித்தியாசம்தான்..

    என்னதான் பழம் அவருக்கு கிடைத்தாலும்..

    'பழம்நீ' என்று பெயர் வாங்கி தனக்கென தனி இடத்தை ஸ்தாபித்து பக்தர்க்கெலாம் அருள்பாலிக்கும் வள்ளல் முருகக் கடவுள்..

    தமிழனின் தனித்தன்மையின் முன்னோடி..

    அந்தவகையில் அவன்தாள் பணிவோம்..

    ReplyDelete
  17. //தமிழன் அந்த காலத்திலருந்தே வடக்கால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்
    (கயிலாயத்தில் ராஜ்ஜியம் செய்பவர் பழத்தை டிஸ்ட்ரிபீட் பண்ணின கதை ) என்பதை உணர்த்தும் தமிழ்க்கடவுள் முருகனை வாழ்த்தி....//

    என்ன மைனர்ஜி! நம்ப உள்ளூர் பாலிடிக்ஸையெல்லாம் முருகன், பிள்ளையார் மேல் ஏற்றுகிறீர்!?

    முருகனுக்கு வள்ளியை மணம் புரிய அந்த வடக்கத்திப் பிள்ளையார்தான் துணை புரிந்தார்.அது மறந்துவிட்டதா?

    அவ்வைதான் பிள்ளையார் வழிபாட்டை தென்னகத்தில் நன்கு வேர் ஊன்றச் செய்தவர்.

    சிவனோ தென்னாடுடையவர்!

    அப்புறம் எப்படி இந்த தெற்கு வடக்குப் பிரச்சனை?

    ReplyDelete
  18. //தமிழன் அந்த காலத்திலருந்தே வடக்கால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்
    (கயிலாயத்தில் ராஜ்ஜியம் செய்பவர் பழத்தை டிஸ்ட்ரிபீட் பண்ணின கதை ) என்பதை உணர்த்தும் தமிழ்க்கடவுள் முருகனை வாழ்த்தி....//

    பாலிடிக்ஸ் இல்லாத வாழ்க்கை
    பாலமா.. (அ) வாழ்க்கை பயணமா

    அலுவலகத்தில்
    corporate politics

    குடும்பத்தில்
    family politics

    நாட்டில்
    social politics..

    கடவுள் ஒருவரே எனும் போது
    (politicsல் இருந்து நாம்)
    கடந்தல்லவா இருக்கிறோம்

    எங்கே கடவுளை வேறுபடுத்துகிறோமோ
    அங்கே நாம் தனிமை படுத்தப்படுகிறோம்

    தமிழ்சங்கத்தை அமைத்தவரே அவர்
    தனியாக அவரை தென்னாடுடையவர்

    என்றாலும் அவர்
    எந்நாட்டர்க்கும் இறைவன்..

    இது தான்
    மாணிக்க வாசகரின்
    மணியான வாசகம்..

    வடக்கும் தெற்கும் இருந்தால் தான்
    எண்திசைக்கு அவர் இறைவன் என்பது மெத்தப் பொருந்தும்..

    பிரச்சனை எதற்கு என்று
    பிரச்சனை வேண்டுமா...

    சர்ச்சை
    சர்ச்சைக்குரிய பிரச்சனையாகக்லாமா?

    ReplyDelete
  19. /////Blogger Sathish K said...
    "தலை இருக்கும் வரை உன்னை வணங்குவோம்."
    காலை வணக்கம் ஐயா. பாடலுக்கு நன்றிகள் பல./////

    அப்படியே வணங்குங்கள். நன்றி!

    ReplyDelete
  20. /////Blogger தேமொழி said...
    "ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்விலே - மயில்
    ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
    மாறிவரும் நாகரீக உலகிலே - நாங்கள்
    மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே"
    இவை மிக அருமையான வரிகள். தான் பிறந்து வளர்ந்த சமூகத்தின் பெருமையை கவிஞர் மேம்பட உரைத்துள்ளார். பதிவிட்டதற்கு நன்றி ஐயா.
    டி. எம். எஸ் பாடி இந்த பாடலைக் கேட்டதாக நினைவு./////

    இன்னும் பல பாடல்கள் உள்ளன. பின்னர் அவற்றை உங்களுக்கு அறியத்தருகிறேன் சகோதரி!

    ReplyDelete
  21. /////Blogger ananth said...
    இந்த வருடத்திற்கான முதல் பதிவை சக்தி உமை பாலனின் பாடலுடன் துவக்கியிருக்கிறீர்கள். இனி அனைத்தும் இனிதே நடக்க அவர் அருள் புரிவாராக./////

    உங்களின் வாழ்த்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  22. //////Blogger kmr.krishnan said...
    "ஏறுகிறோம் இறங்குகிறோம் மலையிலே..."
    என்ற வரிகளில் வாழ்வின் ஏற்ற இறக்கத்தை நன்கு கூறிவிட்டார் கவிஞர்.
    நல்ல கவிதை. பாடுவதற்கு ஏற்ற காவடிச்சிந்து.வெளியிட்ட உங்களுக்கு நன்றியும் வந்தனமும்.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. /////Blogger Siva said...
    அய்யா, காலை வணக்கம். அந்த முருகன் படம், எங்கள் ஊரின் கல்யாண சுப்ரமணிய சுவாமி படம். எங்கள் ஊர் ஜலகண்டபுரம், சேலம் மாவட்டம். இந்த படத்தை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.
    சிவா/////

    அப்படியா? மிக்க சந்தோஷம். உங்கள் ஊரைச் சேர்ந்த மிகவும் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவரைத் தெரியுமா உங்களுக்கு?

    ReplyDelete
  24. /////Blogger arul said...
    good start for the year 2012/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. //////Blogger krishnar said...
    ///மாறிவரும் நாகரீக உலகிலே - நாங்கள்
    மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே"///
    ///தண்டபாணி கோவிலின்றி ஊருண்டோ-‍‍உன்னைத்
    தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டோ///
    என்னை கவர்ந்த வரிகள்; ஏனைய வரிகளும்தான்.
    நன்றி.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger sundar will meet God said...
    முருகன் அருளோடு இந்த வருடம் எல்லோருக்கும் நன்மையாக அமையட்டும்./////

    நல்லது. உங்களின் ஏகோபித்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    முருகப்பெருமானின் அருளாசியோடு ஆண்டு முழுவதும் அனைவருக்கும் சிறப்பாக வேண்டி முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றேன்.../////

    உங்களின் பிரார்த்தனைகள் பலிக்கட்டும் சகோதரி!

    ReplyDelete
  28. ////Blogger arumuga nainar said...
    ஐயா வணக்கம்,
    மிகவும் ஆவலுடன் உங்களை எதிர்பார்த்து இருக்கிறோம்.//////

    நல்லது. உங்கள் ஆவல் நிறைவேறும் நைனா(ர்)!

    ReplyDelete
  29. //////Blogger GAYATHRI said...
    On behalf of Student of Classroom, We prey the Almighty to give you the good health,happiness and serenity through out your life.
    To the class room students: Wish you all fabulous 2012 with full of great achievements and experiences.//////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  30. /////Blogger முருகராஜன் said...
    இந்த ஆண்டின் பதிவு முருகன் பாமாலையுடன் துவங்கியதற்கு வாழ்த்துக்கள்!
    நன்றி/////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. /////Blogger RAMADU Family said...
    Guru vanakkam,
    a very good beginning to 2012.
    Regards
    RAMADU.//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. //////Blogger kannan said...
    வணக்கம் ஐயா!
    அடியவனும் ஒற்றையாக பாத யாத்திரை செல்லுவதற்கு வேண்டிய வழி முறைகளை கூறியவரும் தங்களது ஊரை ( காரைக்குடியை ) சார்த்தவர் தான் .
    திருவாவடுதுறை ஆதினம் திரு குமாரசாமி தம்பிரான் ஐயா!.
    இன்று நினைத்தாலும் மிகவும் வியப்பாக உள்ளது எமக்கே எப்படி சுமார் 225 km செருப்பு இல்லாமல் சென்றோம் என்பதனை நினைத்து பார்த்தால் ஐயா
    நான்கு பகல் , மூன்று ராத்திரியில் அடைந்த தூரம் ஐயா!/////

    பழநியப்பன் நடக்க வைத்தான். வைப்பான்! அதை உணருங்கள் கண்ணன்!

    ReplyDelete
  33. ///////Blogger iyer said...
    ஐந்தெழுத்து மந்திரத்தை
    ஐயமின்றி சொல்லி தந்த வள்ளல்
    வள்ளியின் கணவன் "வள்ளல்" என்றே
    வாரியார் சுவாமிகள் சொல்வார்
    வந்தாரை வாழவைக்கும் தலை
    வணங்கும் தலையாய தலைவன்
    அய்யன் தொடங்கிய தமிழ் சங்க நாயகன்
    மெய்யாலுமே தரணி போற்றும்முருகன்
    தேடிச் சென்று வணங்குவோருக்கு
    நாடி வந்து அருள் புரியும் வேந்தன்
    கந்த கடவுள் நம்
    சொந்த கடவுள் என
    துதி செய்யும் அனைவருக்குமே
    மதி திருத்தி வாழ்வு தரும்
    அப்பெருமானை எங்கள்
    அப்பன் முருக பெருமானை போற்றும்
    அய்யருக்கு இஷ்டமான இந்த
    அருமையான கந்தரலங்கார பாடலை
    ஏற்றுகிறோம்.. இங்கு
    போற்றுவோம் கந்தனை வாருங்கள்
    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச்
    செந்தமிழ் நுல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனை கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
    சாந்துணைப் போது மறவாதவர்கு
    ஒரு தாழ்வில்லையே/////

    ஆகா, பின்னூட்டத்தில் அசத்திவிட்டீர்கள். நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  34. ////Blogger VCTALAR said...
    அருவம் , உருவம், அரு உருவம் ஆக உள்ள சிவன் தன் 6 சிரசுகளிளிருந்து தோன்றிய சக்திப் பொறிகளினால் ஆறு தலை பன்னிரண்டு கரங்கள் கொண்டு பூமியில் வரத்தகுந்த உருவம் கொண்டு சிவனே நம் தமிழர்களுக்குத் தெய்வமாக நம் நாட்டில் நின்று காத்து வரும் ஷண்முகனின் அருள் வேண்டிஎன்றும் நிற்போம்.
    அருணாசலம்/////

    ஆகா, அப்படியே வணங்குங்கள் நண்பரே!. நன்றி!

    ReplyDelete
  35. /////Blogger minorwall said...
    தமிழன் அந்த காலத்திலருந்தே வடக்கால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்
    (கயிலாயத்தில் ராஜ்ஜியம் செய்பவர் பழத்தை டிஸ்ட்ரிபீட் பண்ணின கதை ) என்பதை உணர்த்தும் தமிழ்க்கடவுள் முருகனை வாழ்த்தி இந்த புதுவருடப் பதிவை ஆரம்பித்திருக்கும் அழகே தனி..
    பொதுவா எல்லோரும் பிள்ளையார் சுழிதான் போடுவாங்க..
    வாத்தியார் விசுவாசமே தனிதான்..வித்தியாசம்தான்..
    என்னதான் பழம் அவருக்கு கிடைத்தாலும்..
    'பழம்நீ' என்று பெயர் வாங்கி தனக்கென தனி இடத்தை ஸ்தாபித்து பக்தர்க்கெலாம் அருள்பாலிக்கும் வள்ளல் முருகக் கடவுள்..
    தமிழனின் தனித்தன்மையின் முன்னோடி..
    அந்தவகையில் அவன்தாள் பணிவோம்../////

    ஆகா, அப்படியே உங்கள் வழியில் நாங்களும் அவன் தாள் பணிகின்றோம் மைனர்!

    ReplyDelete
  36. //////Blogger kmr.krishnan said...
    //தமிழன் அந்த காலத்திலருந்தே வடக்கால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்
    (கயிலாயத்தில் ராஜ்ஜியம் செய்பவர் பழத்தை டிஸ்ட்ரிபீட் பண்ணின கதை ) என்பதை உணர்த்தும் தமிழ்க்கடவுள் முருகனை வாழ்த்தி....//
    என்ன மைனர்ஜி! நம்ப உள்ளூர் பாலிடிக்ஸையெல்லாம் முருகன், பிள்ளையார் மேல் ஏற்றுகிறீர்!?
    முருகனுக்கு வள்ளியை மணம் புரிய அந்த வடக்கத்திப் பிள்ளையார்தான் துணை புரிந்தார்.அது மறந்துவிட்டதா?
    அவ்வைதான் பிள்ளையார் வழிபாட்டை தென்னகத்தில் நன்கு வேர் ஊன்றச் செய்தவர்.
    சிவனோ தென்னாடுடையவர்!
    அப்புறம் எப்படி இந்த தெற்கு வடக்குப் பிரச்சனை?/////

    இதெல்லாம் தெரியாதவரா மைனர்? எல்லாம் அறிந்தவர் அவர்!

    ReplyDelete
  37. //////Blogger iyer said...
    //தமிழன் அந்த காலத்திலருந்தே வடக்கால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்
    (கயிலாயத்தில் ராஜ்ஜியம் செய்பவர் பழத்தை டிஸ்ட்ரிபீட் பண்ணின கதை ) என்பதை உணர்த்தும் தமிழ்க்கடவுள் முருகனை வாழ்த்தி....//
    பாலிடிக்ஸ் இல்லாத வாழ்க்கை
    பாலமா.. (அ) வாழ்க்கை பயணமா
    அலுவலகத்தில்
    corporate politics
    குடும்பத்தில்
    family politics
    நாட்டில்
    social politics..
    கடவுள் ஒருவரே எனும் போது
    (politicsல் இருந்து நாம்)
    கடந்தல்லவா இருக்கிறோம்
    எங்கே கடவுளை வேறுபடுத்துகிறோமோ
    அங்கே நாம் தனிமை படுத்தப்படுகிறோம்
    தமிழ்சங்கத்தை அமைத்தவரே அவர்
    தனியாக அவரை தென்னாடுடையவர்
    என்றாலும் அவர்
    எந்நாட்டர்க்கும் இறைவன்..
    இது தான்
    மாணிக்க வாசகரின்
    மணியான வாசகம்..
    வடக்கும் தெற்கும் இருந்தால் தான்
    எண்திசைக்கு அவர் இறைவன் என்பது மெத்தப் பொருந்தும்..
    பிரச்சனை எதற்கு என்று
    பிரச்சனை வேண்டுமா...
    சர்ச்சை
    சர்ச்சைக்குரிய பிரச்சனையாக்கலாமா?/////

    வகுப்பறையில் பிரச்சினை எதுவும் ஏற்படாது. பழநிஅப்பனும் வகுப்பறைக்கு வந்து போகிறான்! கவலையை விடுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  38. அய்யா, 

    தற்போது திரு ராஜா திருவேங்கடம் என்பவர் விகடன் பதிப்பகத்தில் பத்திரிக்கையாளராக இருக்கிறார். அவர் என்னுடைய நண்பர் தான். மேலும் பா.கண்ணனார் என்பவர் எங்கள் ஊரில் பதிப்பாளராக இருந்தார்.

    தங்கள் நினைப்பது யார் என்று சொன்னால் எனக்கு தெரியுதா என்று சொல்கிறேன்.  

    நன்றி 
    சிவா  

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com