மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.1.12

Astrology திருமண வாழ்க்கை!

நேற்றைய பதிவைப் பார்த்தீர்களா? அதில் சுவையான 6 ஆக்கங்கள் உள்ளன. அதைப் படித்திராதவர்கள். அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது

http://classroom2007.blogspot.com/2012/01/blog-post_08.html
-------------------------------------------------------------------------------------------

Astrology திருமண வாழ்க்கை!

Key Points - Lesson Number 4

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.

கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”

தத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?  சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே பொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப் பயன் பெறுக!
--------------------------------------------
1
ஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

2,
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.

3.
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

4.
ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (associaton or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5.
அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந் திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.

6.
ஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.

7.
ஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

8.
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கை யைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்!

9
ஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

10.
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.

11.
செவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,

12.
ஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!

எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும், அஷ்டகவர்க்கப்பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

--------------------------------
Key Points 4 உள்ளதே - அதற்கு முந்திய பாடங்கள் எங்கே என்கிறீர்களா? அதெல்லாம் மேல் நிலை வகுப்பில் உள்ளது. மேல் நிலை வகுப்பில் சேர விரும்புவர்கள் மின்னஞ்சல் அனுப்புங்கள். வகுப்பிற்கான விதிமுறைகள் உங்களுக்குத் தெரியப்படுத்தபெறும். அது உங்களுக்கு ஒத்து வந்தால் நீங்கள அதில் சேர்ந்து படிக்கலாம். இல்லையென்றால் அவைகள் புத்தக வடிவில் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

இங்கே அவைகளைப் பதிவிட்டால், திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஜோதிடம் அனைவருக்கும் பொதுவனதுதான். பிறக்கும்போது யாரும் ஜோதிட ஞானத்துடன் பிறப்பதில்லை. அனைவரும் பழைய நூல்களைக் கற்றுத் தேறியவர்கள்தான். அனுபவ ஞானம் உள்ளவர்கள்தான். அறிந்தவர்கள், படித்தவர்கள் அனுபவசாலிகள், ஜோதிடத்தைத் தங்கள் நடையில் எழுதிப் பதிவிடலாம். அதைவிடுத்து அடுத்தவன் எழுதியதைக் cut & paste செய்து பதிவிடுவது விரும்பத்தக்கதல்ல! அடுத்தவனின் உழைப்பைத் திருடுவது எந்த விதத்தில் நியாயம்?

இணையம் ஒரு திறந்த வெளி. இங்கே எழுதுவது ஒரு பெண் திறந்த வெளியில் குளிப்பதற்குச் சமம். மறைப்பின்றி, பாதுகாப்பின்றி, ஆடைமாற்றுவதற்குச் சமம் ஆகவே அதன் சாதக பாதகங்களைத் தெரிந்துதான் இங்கே எழுத வேண்டும்!

நம் வகுப்பறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஐநூக்கும் மேற்பட்ட அடிப்படைப் பாடங்களை எழுதியுள்ளேன். புதியவர்கள் முதலில் அவற்றைப் படித்துவிட்டு மேல்நிலைப் பாடங்களைப் படிக்கலாம்.

அடுத்த பாடம்: வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா? ஜாதகத்தை வைத்து அதைத் தெரிந்து கொள்ள முடியுமா?
முடியும். அடுத்த பாடம் வெளிவரும் வரை பொறுத்திருங்கள்


வாழ்க வளமுடன்!

22 comments:

  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆவலுடன் எதிர் பார்த்த ஜோதிட பாடம் .ஆசானுக்கு மிக்க நன்றி.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.இந்த வரம் சரியாக அமையா விட்டால் வாழும் வரை நரகம் தான். இதை என் நண்பனின் வாழ்கையில் கண்ணாரக் கண்டவன் நான் .

    475 பாடங்களையும் படித்து முடித்து விட்டேன். இப்போது இரண்டாம் சுற்றாக படித்து வருகிறேன். அதனை இன்னும் இரண்டு சுற்றி படித்து விட்டு அதன் பின் மேல் நிலை பாடங்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன்

    எனக்கு ஜோதிடத்தின் மீது ஒரு ஆர்வம் வந்தபின் அதை தெரிந்துகொள்ளவும் கற்றுக் கொள்ளவும்தான் வகுப்பறைக்கு வந்தேன்.வந்த பின்புதான் தெரிந்தது கற்றுக்கொள்வது சாதாரண காரியமல்ல என்று.அதற்கு நிறைய அர்ப்பணிப்புகள் தேவை.நினைவாற்றல் தேவை . பலன்களை பார்க்கும் போது கரணம் தப்பினால் மரணம் என்பது போன்று பல நுண்ணிய விஷயங்களும் விதிகளும் இருக்கின்றன. அதனை மிக சிரத்தை யோடு கணித்து என் போன்றோருக்கு மிக தெளிவாக புரியும் படி செய்யும் தாங்களின் பனி மிக சாதாரணது அல்ல.

    வகுப்பறைக்கு நான் வரும்போது தாங்கள் மீது வைத்த மரியாதைவிட இப்போது நூறு மடங்கு அதிகமாக வைத்திருக்கிறேன் .

    காரணம் தாங்களின் மிகப்பெரிய அர்ப்பணிப்பு விஷயத்தை, பணியை எவ்வித எதி பார்ப்பும் இல்லாமல் .யாரென்றே முகம் கூட தெரியாதா என்போன்றோருக்கு பிரதிபலனை பார்க்காமல் செய்யும் தாங்களின் பனி மிகப் பெரியது அய்யா.

    ReplyDelete
  2. ஐயா,வெளியூர் பயணம் எப்படியிருந்தது.ஹூப்ளியில் ராணி சென்னம்மாவின் சிலை முன்பாக நீங்கள் இருந்த படம் அருமை.இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முதல் பெண்மணி சிவகங்கைச் சீமை தந்த ராணிவேலுநாச்சியார் போல் அவரும் இந்திய சுதந்திரத்திற்காகப் போரடியவர்.

    ReplyDelete
  3. Dear annan,

    You have posted info on two out of three nakshatra that belong to Chandran. I am awaiting for your post on the third nakshatra-Mirugasera as it is mine!

    Nandri,
    KC

    ReplyDelete
  4. dear Subbiah sir

    i would like to join the advanced class. I have finished reading all your basic lessons for the past 3 months. could you please enroll me in it ?

    ReplyDelete
  5. sir, pathivu nantraka irunthathu. nan viruchika rasi, meenam laknam, 7m athipan puthan mesha veetil kethuvudan irukkiran. sukkiran lakkanathil suryanudan irukkiran. 3l irunthu guru 7m veetai parkirar. 7m veetu paral 31, lakinam paral 31. ippothu 71/2 sani nadanthukondi irukirathu, ippothu sukkira thasiyil viyalzhan puthi 2013 varai nadakkirathu, piraku sani puthi, idam vanki tharpothu veedu kattalama. pls. mudinthal parthu sollunkal sir

    Thankyou

    Valzhka valamudan

    k. chithra

    ReplyDelete
  6. ஐயா,
    ////ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால்//// இதில் ஒரு குறிப்பிட்ட லக்கினத்தின்{உதாரணம்-சிம்மம்-செவ்வாய்} பிரதான யோககாரகன் அசுபகிரகம் எனில் ஏதாவது விலக்கு அளிக்கப்படுமா?.

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா வணக்கம்,
    எனது முன்னைய கோரிக்கை தங்களின் நினைவில் இருக்கும் நம்புகிறேன். மேற்பாடங்களுக்கான உங்களின் விதிமுறைகளை தயவுசெய்து எனக்கு அறியத்தரவும்.என் பணிவான இந்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றிகள்.
    சுதன்.க‌
    கனடா.

    ReplyDelete
  8. வாத்தியார் ஐயா வணக்கம்,
    எனது முன்னைய கோரிக்கை தங்களின் நினைவில் இருக்கும் நம்புகிறேன். மேற்பாடங்களுக்கான உங்களின் விதிமுறைகளை தயவுசெய்து எனக்கு அறியத்தரவும்.என் பணிவான இந்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றிகள்.
    சுதன்.க‌
    கனடா.

    ReplyDelete
  9. அனைத்து படங்களுயும் ஒரு முறை படித்து விட்டேன்... கையில் சில ஜாதகங்களை வைத்து கொண்டு குறிப்பு எடுத்து கொண்டே படித்தேன்.. மீண்டும் ஓரிரு முறை படிக்க வேண்டும்.. இப்பொழுதெல்லாம் படுத்து கண்ணை மூடினால் கட்டம் கட்டமாக தெரிகிறது.. :)

    பாடங்கள் எளிதாய் புரிகிறது.. மிக்க நன்றி ஐயா!!!

    மேல்நிலை பாடங்கள் பெற விதிமுறைகளை தர முடியுமா??

    ReplyDelete
  10. Dear Guruji...Namasthe !!!

    thanks for re-opening the astrology class .

    yrs truly
    kannan

    ReplyDelete
  11. ///வகுப்பறைக்கு நான் வரும்போது தாங்கள் மீது வைத்த மரியாதைவிட இப்போது நூறு மடங்கு அதிகமாக வைத்திருக்கிறேன் .///

    உண்மை.. உண்மை.. உண்மை..
    உங்களைப் போலவே 100ஆயிரம் பேர்


    ///காரணம் தாங்களின் மிகப்பெரிய அர்ப்பணிப்பு விஷயத்தை, பணியை எவ்வித எதி பார்ப்பும் இல்லாமல் .யாரென்றே முகம் கூட தெரியாதா என்போன்றோருக்கு பிரதிபலனை பார்க்காமல் செய்யும் தாங்களின் பனி மிகப் பெரியது அய்யா.///

    வாத்தியார் என்ற சொல்லுக்கு
    உண்மையான இலக்கனம்

    அன்புள்ள நண்பனாக....
    தோழமைகொண்ட ஆசானாக...

    அறிவுறுத்தும் ஞானியாக..
    பக்தியை வளர்க்கும் பரந்தாமனாக..

    மாணவர்களின் எழுத்தார்வத்தை வளர்க்கும் வான் மதியாக..

    கலாச்சாரத்தை பேணும் காவலனாக
    கண்டு சொன்ன தவறுகளை ஏற்கும் கனவானாக

    நகைச்சுவையிலும் நல்ல கருத்து
    சொல்லும் இயக்குனராக

    எண்ணங்களை வரைந்தெடுக்கும் கவிஞனாக..
    பழனியப்பனே தந்த தமிழ் இவருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது,,

    நட்பிற்கும் பண்பிற்கும் வாஞ்சைக்கும் அடிக்கல் நாட்டி வரும் நல்லமனிதநேயர்

    சோதிடத்தையும் தாண்டி மானுடத்தை வளர்க்கும் பேரன்பு கொண்ட தந்தையாக

    கலை ஞானத்தை வாரி வழங்கும் கர்ணனாக இன்னமும்... இன்னமும்

    மனித உறவுகள் எத்தனை உண்டோ அத்தனைக்கும் "ஒரே......ஒரு"

    எடுத்துக்காட்டாக..மனித நேயம் கொண்ட மா ... மனிதர்..

    "உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை "
    என்ற பாரதியின் கூற்றினை சொல்லி

    அவர் வாக்கினால் வரைந்ததை தந்து
    அன்பு வாத்தியாரை பற்றி எழுதும்

    சிந்தனையை துண்டிய கவிபேரரசே சித்திரகவி அன்பு "தனுசாரரே.."

    உமது "முரசொலி"யின் ஓசையிலே
    உண்மையிலே எனது கானம்

    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழியவே!

    வானமளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழிய வே

    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசை கொண்டு வாழியவே!

    எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
    என்றென்றும் வாழிய வே

    சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
    துலங்குக வையகமே!

    தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ் நாடே!

    வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
    வாழ்க தமிழ் மொழி யே!

    வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர் மொழி வாழிய வே

    (வாத்தியாரை தமிழ் மொழியாக உருவகம் செய்து எண்ணுக..)

    அன்பான வணக்கமும்
    அளவற்ற வாழ்த்துக்களும்

    ReplyDelete
  12. ஐயா!
    மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறேன்
    விதிமுறைகளை அனுப்பவும்.
    விதி இருந்தால் கற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
  13. அடியேனின் ஜாதகத்தில் 7ம் வீட்டுக்காரரான சனீஸ்வரர் சூரியனால் அஸ்தங்தப்பட்டு 2ம் இடத்தில். கூடவே 3ம்வீட்டுக்குரிய புதன் 2ல்.சுக்கிரன் 3ம்வீடு கன்னியில் நீசமடைந்து கேதுவுடன் கூட்டு.6க்குரிய குருபகவான் 7ல் நீசமாக இருந்து 11,லக்னம், 3க்குப் பார்வை. எனவே க‌ளத்திரகாரகன் சுக்கிரன் குருபார்வை பெற்றது, லக்கினத்திலேயே உள்ள் சந்திரனுக்கு குருபார்வை என்பது நல்ல அம்சங்களாக உள்ளன.எனவே பொதுப்பலனில் ஐயா கூறியுள்ளபடி என்னுடைய மண வாழ்க்கை மோசமாக இருக்கவில்லை.நவாம்சத்தில் சுக்கிரன் உச்சத்தை அடைந்து, சாமியார் ஆகாமல் தப்பித்தேன்.62 த் தாண்டியும் 'புருபுரு'ப்புடன் காலம் ஓடுகிறது.


    ஜாதகம் இவ்வாறு உள்ளது என்பதை அறிந்ததால் மனைவியுடன் மோதல் தவிர்த்து, சொன்னபடி கேட்டு 'மதுரைக்கார'னாக மண வாழ்க்கையை 37 ஆண்டுகள் ஓட்டிவிட்டேன்

    ReplyDelete
  14. ஐயா என்னை சிறப்பு வகுப்பறையில் சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு வேண்டுகிறேன். தனி மடலிலும் விவரம் அனுப்பியுள்ளேன் ஐயா.

    ReplyDelete
  15. ஐயா,
    வணக்கம். 7 இல் சனி வீட்டில் ராகு இருக்க அதனை குரு 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் கேது புதன் கூட்டணியமைத்துள்ளர்கள்.நவாம்சத்தில் சனி சூரியன் வீட்டில் 12 இல் இருக்கிறார். இது சர்வ கட்சி கூட்டணியாக தெரிகிறதே?? ஆட்சியை பிடிக்குமா இல்லை டேப்பாசிட் போகுமா?

    நன்றி

    V.பாரதிதாசன் B.E

    ReplyDelete
  16. அய்யா,
    என்னையும் தங்களுடைய மேல் நிலை வகுப்பு அறையில் மாணவனாக சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுக்கு மின் அஞ்சலும் அனுப்பி உள்ளேன்.


    --
    Regards,
    Natarajan

    ReplyDelete
  17. உம்.... என்னோவோ போங்க வாத்தியரே நமக்கு ஏழாம் இடத்து அதிபதி சூரியன் , ஒன்பதில் நீசம் . நான் கும்ப லக்னம். மிதுன ராசி.
    திருமண வாழ்வு ஒருநாள் top gear உள்ளது . மறுநாள் flat tyre ஆக உள்ளது . ஆத்துக்கராருக்கோ ஏழாம் அதிபதி சந்திரன், உச்சம் அதுவும் அவர் ஏழாம் இடத்திலே கூடவே குருவும் சேர்ந்து கொண்டு . குரு சந்திர யோகமாய் .....அவர் மகர லக்னம் கடக ராசி .

    thanusu அவர்கள் சொன்னதை அப்பிடியே நானும் வழி மொழிகிறேன். இந்த பின்னூடத்தை ஒரு மணி நேரமாய் டைப் செய்கிறேன் . நீங்கள் எப்படித்தான்
    time create செய்கிறேகள்?

    ReplyDelete
  18. ஐயா,
    என் ஜோதிட ஆர்வத்திற்கு தங்களது வலை பதிவு பயனுள்ளதாக உள்ளது. என்னை மேல்நிலை பாடத்திற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  19. great work sir. Way of teaching wonderful sir.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com