மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.1.11

இலக்கியச் சோலை - பகுதி இரண்டு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலக்கியச் சோலை - பகுதி இரண்டு!

நம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.

கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது வைத்துக்கொள்ளலாம் இல்லையா?

உங்களுக்காக வாரம் ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைத் தரலாம் என்றுள்ளேன். இன்று, இரண்டாவது பாட்டைக் கொடுத்துள்ளேன். தொடர்ந்து வாரம் ஒரு பாடல் இனி வரும். படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டிருந்த சமண முனிவர்கள், ஒரு பஞ்ச காலத்தில் இடம்பெயர்ந்து, பாண்டிய நாட்டிற்குச் சென்று, அன்று அரசாட்சி செய்து கொண்டிருந்த உக்கிரப் பெருவழுதி என்னும் மன்னனிடம்  தஞ்சம் அடைந்தனர்.

மன்னனும் அவர்களை, அரசவைப்புலவர்களாக அமர்த்தி தஞ்சம் அளித்தான்.

பின்னர் சில மாதங்கள் கழித்து, அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்செல்ல விரும்பி, மன்னனிடம் விடை கேட்டனர்.  அவர்களைப் பிரிய மனமில்லாத மன்னன், “இல்லை, இங்கேயே நீங்கள் இருங்கள்” என்று கூறிவிட்டான்.

இந்நிலையில், அச்சமண முனிவர்கள் ஒவ்வொருவரும், பனை ஏடுகளில் ஒவ்வொரு வெண்பாவை இயற்றி, அவரவர் இருக்கைகளில் வைத்துவிட்டு, அன்று நள்ளிரவே சொல்லிக்கொள்ளாமல் பாண்டிய நாட்டைவிட்டு அகன்றனர்.

முனிவர்கள் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதை, மறுநாள் காலையில் அறிந்த மன்னன் மிக்க மனவருத்த முற்றான். அத்துடன் அவர்கள் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்த எட்டாயிரம் ஓலைகளையும் வைகை ஆற்றில் வீசி ஏறிந்தான்.

வியக்கும் வகையில், வீசி எறிந்த ஓலைகளில் 400 ஓலைகள் மட்டும், வெள்ளத்தை எதிர்த்துக் கரை சேர்ந்தன. அதைக் கண்டு வியந்த மன்னன். அவற்றைத் தொகுத்து, நாலடி நானூறு’ என்னும் பெயரில் நூலாக்கினான். இது நடந்தது கி.பி.முதலாம் நூற்றாண்டு. அதை மனதில் கொள்க,

அந்த நாலடியார் நானூறிலிருந்து ஒரு பாடல்:

நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின வொன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.


பொருள்: வாழ்நாட்கள் கழிந்து கொண்டே போகின்றன. சினம் கொண்ட காலன் நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறான். உள்ள செல்வங்கள் யாவும் நிலையற்றவை என அறிந்து, நிலையான தர்மங்களை, விரைவாகச் செய்ய முன் வர வேண்டும்!

வாழ்க வளமுடன்!

17 comments:

  1. இலக்கிய இளஞ்சோலை பூத்தது அது
    இனிய பாமாலை கோர்த்தது
    நன்றி....

    ReplyDelete
  2. "வேத நூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவ‌ரேனும்
    பாதியும் உறங்கிப்போகும் நின்றதில் பதினை ஆண்டு
    பேதைபால் அதனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
    ஆதலால் பிறவி வேண்டேன் அரஙமா நகருளானே!"

    =====================ஆழ்வார் திருமொழி ஐயா!

    நாலாடியார் அருமை ஐயா!நன்றி

    ReplyDelete
  3. இந்த பாடலில் சொல்லியது போல் புண்ணியம் தேடிக் கொள்வதானால் அது இந்த மனித உடலில் இருந்தால்தான் சாத்தியம். இறந்த பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இல்லாவிட்டால் இன்னொரு பிறவி எடுத்துதான் இதை சாத்தியமாக்க முடியும்.

    ReplyDelete
  4. அறிவோமா நாம்........ மனிதநேயம் கொண்ட நல்ல மனிதர்களே எப்படி இருந்த மக்கள் இப்படி ஆனதேன்... நீர்க்குமுழி போன்றதொரு நிலையில்லாதது வாழ்க்கை என்பான் கம்பன்.... அந்த நிலையில்லா வாழ்வைப் பெரிதென்று எண்ணி இத்தனைக் கொடிய பாவத்தை செய்தவர்கள் பற்றிய அரசியல் பேச வேண்டாம்... ஆனால் இந்த அவலம் தீர வழி கூறும் புதுமைப் பெண்ணை பாராட்டாமல் இருக்க முடியாது....
    Thursday, January 13,2011 01:55 AM, Ram said:
    ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா:::: ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ. இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது. இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன். இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில், பெண்​களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன். எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில் மாங்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன். அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்... சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?’ என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை...'' என்றவர், ''அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா? அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளை​களைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?’ என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள். மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந்தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் இராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன். தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை.. இங்கே கூட்டம் போட்டுப் பேசுவது​போல இலங்கையின் வடக்கில், கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள். போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந்தது இல்லை. போரால் வாழ்வு இழந்த​வர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயி​களாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள். அரசனாகவோ அரசியாகவோ வாழா​விட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும் மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரம்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்​தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உரு​வாகிறது. அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் நடக்​கிறது. தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்கு​கிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள். இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்து நாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷ வெளியேறும்.....

    வாழ்க செழித்து வளர்க மனித நேயம்.... (நன்றி மாலைமலர்)

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா

    தானம் தர்மம் செய்யும் அளவிற்கு வரம் ( பூர்வ புண்ணியம் ) வாங்கி வராதவர்களைப்பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா


    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    பொருள்: வாழ்நாட்கள் கழிந்து கொண்டே போகின்றன. சினம் கொண்ட காலன் நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறான். உள்ள செல்வங்கள் யாவும் நிலையற்றவை என அறிந்து, நிலையான தர்மங்களை, விரைவாகச் செய்ய முன் வர வேண்டும்!

    ReplyDelete
  7. அய்யா மிக்க நன்றி..

    இந்த நாலடியாரைப் பற்றியே ஒரு தொடர் போல எழுதுவீர்களானால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் தற்காலச் சூழலுக்கு இந்தப் பாடல்கள் மிக முக்கியத்துவம் பெற்றதால் எனது இந்த வேண்டுகோள்.

    பழனியப்பன் உங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் தந்தருள்வாராக.

    ReplyDelete
  8. நல்ல பாடல், பதிவிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  9. இத்தனைக் கொடிய பாவத்தை செய்தவர்கள் பற்றிய அரசியல் பேச வேண்டாம்//

    பேசினாலும் பிரயோஜனமில்லை என்பதுதான் உண்மை. எது எப்படியோ இவங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது.

    ReplyDelete
  10. பாடல் அருமை

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  11. அருமையான‌ பாடல்,

    மிக எளிமையான நடை

    நன்றி ஐயா.

    ReplyDelete
  12. ஐயா எமதர்மராஜரின் புதிய படம் Super!

    எமனின் பெயர்களே அவன் பெருமையை
    பறைசாற்றும் என்பார்கள்

    ஏழை பணக்காரன் என பாராமல் எல்லோர் உயிரையும் உரிய நேரத்தில் எடுப்பதால - நடுவன்..

    உடல் வேறு உயிர் வேறு என பிரிப்பதால் - கூற்றுவன்

    உரிய காலத்தில் வந்துவிடுவதால்
    - காலன்

    ReplyDelete
  13. Thamby Alasiam

    Thanks for the article from Malai Malar.at present unable to type in Tamil, Sorry.
    Could you please give the Relevent link to the said article.Unable to search from www.malaimalar.com

    ReplyDelete
  14. மஹாகவி பாரதி இந்தப் பாடலை ஒபாமாவிற்காகவே பாடியிருப்பான் போலும்....

    "சொற்றது கேளீர்! புவிமிசை யின்று
    மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்
    தர்மமே உருவமாம் மோஹன தாஸ்
    கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்
    அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே

    தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
    அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும்
    வெற்றி தருமென வேதம் சொன்னதை
    முற்றும் பேண முற்பட்டு நின்றார்
    பாரத மக்கள் இதனால் படைஞர் தம்

    செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
    கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே" மஹாகவி பாரதியார்.

    "அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகளான நிக்கி ஹாலே, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்.38 வயதான நிக்கி, அமெரிக்க வாழ் முதல் இந்தியப் பெண் கவர்னர் என்ற பெருமையை பெறுகிறார்."

    இது காந்தியை அரசியல் முன்னோடியாக கொண்டவர் ஆளும் நாட்டில் தான் சாத்தியமாகிறது....
    இதை உண்மை ஜனநாயகம் என்பதைவிட! இது மனித நாகரிகத்தின் முதிர்ச்சி என்றால் தான் சாலப் பொருந்தும்.....
    வாழ்க ஜனநாயகம்... வளர்க மனித நாகரிகம்....
    யாதும் ஊரே யாவரும் கேளீர்!
    நமக்குப் புரிந்ததோ இல்லையோ! அமெரிக்கர்களுக்குப் புரிந்துள்ளது....

    ReplyDelete
  15. ///krishnar said...
    Thamby Alasiam

    Thanks for the article from Malai Malar.at present unable to type in Tamil, Sorry.
    Could you please give the Relevent link to the said article.Unable to search from www.malaimalar.com////

    Hi Anna, I am sorry.. I have tried to find out that link just now; though I can't get it.

    I couldn't locate it back again for you... It was in the comment section at one of the news...By the way its so nice to see you here..in the class room...

    Tks.

    ReplyDelete
  16. ///"இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது. இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது."///

    ஆம்! உலக அளவில் பெண்கள் தான் உரிமைப் போராளிகளாக உருமாறி வருகிறார்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com