மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.1.11

கற்பனைகளைக் கடந்த அதிசயங்கள்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கற்பனைகளைக் கடந்த அதிசயங்கள்!
++++++++++++++++++++++++++++
இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவர் எழுதிய அசத்தலான செய்திக் கட்டுரை ஒன்று இன்று வலையேறி உள்ளது. படித்து மகிழுங்கள். இன்று வரவேண்டிய “இலக்கியச் சோலை” பகுதி நாளை வெளியாகும்.
அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++
இன்று 12 ஜனவரி! வீரத்துறவி விவேகான‌ந்தரின் பிறந்த நாள்!.

ஆதிசங்கரரைப் போலவே 39 வயதில் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்..

துறவிகளின் நடுவில் ஒரு புரட்சியாளர். புரட்சியாளர்களின் நடுவில் ஒரு துறவி.

"எனக்கு உருவம் இல்லை. நான் உருவம் இல்லாத ஒலி!" என்று துணிந்து கூறியவர். நம் கண்ணுக்குப் புலப்படக் கூடிய உருவத்தில் அவர் இருந்தும், தனக்கு ஓர் உடல் இல்லை என்ற எண்ணத்திலேயே வாழ்ந்த சித்தர்.

வேத மந்திரமான "மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ!ஆச்சார்ய தேவோ பவ!அதிதி தேவோ பவ!" என்பவற்றுடன்,"த‌ரித்ர தேவோ பவ!மூர்கதேவோ பவ!"என்பதயும் நம்மைச் சேர்த்து வாசிக்கச் சொன்ன இளைய முதியவர்.

"இந்த இகலோகத்தில் ஒரு கவளம் சோற்றுக்கு அலைய விட்டுவிட்டு, வேறு ஏதோ சொர்க்கத்தில் எனக்கு நிரந்தர ஆனந்தம் அளிக்கிறேன் என்று ஒரு கடவுள் சொன்னால், அந்தக் கடவுள் எனக்குத் தேவையில்லை" என்று நாத்திகம் பேசிய‌ ஆன்மீக வாதி!

அந்த அபூர்வ ஆத்மாவை மஹாகவி பாரதி "விவேகானந்தப் பரமஹம்சர்" என்று அழைத்தார். அவருடைய குருநாதரை "ஸ்ரீராம‌கிருஷ்ண பரப் பிரம்மம்" என்றார்.

சுவாமிஜியின் வரலாற்றையும்,அமுத மொழிகளையும் உங்க‌ளில் பலர் படித்து இருக்கக்கூடும். நான் கீழே மொழியாக்கம் செய்து கொடுத்திருக்கும் கடிதம் பலரும் படித்திருக்க வாய்ப்புக் குறைவு. வகுப்பறை அடிப்படையில் சோதிடக்கல்வி அளிக்கும் இடமே.அதற்குத் தோதாக சுவாமிஜிக்கு ஏற்பட்ட‌ ஒரு ப்ரஸ்ன சோதிட அனுபவத்தைத் தந்துள்ளேன்.

ராஜஸ்தானத்தில் உள்ள கேத்ரி என்ற ஊரின் மஹாராஜாவிற்கு 15 பிப்ரவரி 1893 அன்று ஒரு கடிதம் எழுதியுள் ளார்.அப்போது சுவாமிஜி பரிவ்ராஜகராக பாரதம் முழுவதும் திக்விஜயம் செய்து வரும் வேளையில் நமது தமிழ்நாட்டில் கும்பகோண‌மும் வந்துள்ளார். அப்போது வலங்கைமானில் வைத்து அவருக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை,கேத்ரி அரசர் அஜித் சிங்கிற்கு எழுதிய கடிதத்தினை, மொழி பெயர்த்துத் தந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களைக் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.

"மதராஸ்
15 பிப்ரவரி (1893)

மேன்மையானவரே!

இர‌ண்டு செய்திகளைத் தங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.ஒன்று கும்பகோணம் என்ற கிராமத்தில் நான் கண்ட ஓர் அதிசயக்கத் தக்க நிகழ்வு. மற்றொன்று என்னைப் பற்றியது.

நான் குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் செட்டி சாதியைச் சேர்ந்த ஒருவர் வாழ்கிறார்.அவர் வெளிப்பார்வைக்கு 'ஒரு சோதிடர்' என்று ஒதுக்கும்படியாகவே உள்ளார்.அவரைப் பார்ப்பதற்கு இரு இளைஞர்களுடன் சென்றேன்.

அவரைப் பற்றிக் கூறப்பட்டது என்னவெனில், ஒரு மனிதன் மனதில் நினைப்பதை அப்படியே கூறக் கூடியவர் என்பதே ஆகும். ஆகவே அவரை சோத‌னை செய்து பார்க்க விரும்பினேன்.இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் ஒரு கனவு கண்டேன். அதில் என் தாயார் இறந்துவிட்டதாகத் தோன்றியது. எனவே என் தாயாரைப் பற்றிய தகவலை அறிந்து கொள்ளும் கவலையில் இருந்தேன். எனது இர‌ண்டாவது எண்ணம் என்னவெனில் என் குருநாதர் என்னிடம் கூறியதெல்லாம் உண்மைதானா என்பது ஆகும். மூன்றாவ‌தாக ஒரு சோதனைக் கேள்வி‍---- திபேத்திய மொழியில் உள்ள ஒரு புத்த மத மந்திரம்! இந்த கோவிந்த செட்டியிடம் போவத‌ற்கு இர‌ண்டு நாட்களுக்கு முன்னரே அந்த மூன்று கேள்விகளையும் மனதில் நன்கு உறுதி செய்து பதித்துக் கொண்டேன். கூட வந்த இளஞனின் மைத்துனிக்கு யாரோ விஷம் வைத்துவிட்டார்கள். மைத்துனி பிழைத்துக் கொண்டாலும், விஷம் வைத்தது  யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கு இருந்தது
.
நாங்கள் முதல் முதலாக அந்த ஆசாமியைச் சந்தித்த போது, அவ‌ர் மிகுந்த கோபத்தில் இருந்தார்.மைசூர் திவான் அழைத்து வந்த இரண்டு ஆங்கிலேயர் களால் ஏற்பட்ட கண் திருஷ்டியால் சுரத்தில் அவதியுறுவதாகவும் வாக்குச் சொல்ல முடியாது என்றும் கூறி அனுப்பப் பார்த்தார். பின்னர் ரூபாய் பத்து அளித்தால் பிரஸ்னம் சொல்ல ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.என் கூட வந்த இளைஞர்கள் கேட்ட தொகையைக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.
ஆனால் தன் அந்தரங்க அறைக்குள் சட்டென நுழைந்து உடனே வெளியில் வந்து என்னிடம் கூறினார்: "என் இந்த சுரத்தை சுவஸ்தம் செய்ய உங்கள் கையால் திருநீறு கொடுத்தால் வாக்குச் சொல்ல ஒப்புக் கொள்கிறேன்"

"எனக்கு நோய் குணமாக்கும் சக்தி ஒன்றும் கை வரப் பெறவில்லையே" என்று திட்ட வட்டமாகக் கூறினேன்.  "அதனால் ஒன்றும் இல்லை.எனக்கு வேண்டியது விபூதி மட்டுமே!' என்றார்.நான் சரி என்று ஒப்புக் கொண்டதும் எங்களை தன் அந்தரங்க அறைக்குள் அனுமதித்தார். உடனே ஒரு தாளை எடுத்து ஏதோ எழுதினார்.அதன் மீது என் கையெழுத்தை வாங்கி என்னிடம் கொடுத்து கூட வந்தவரின் சட்டைப் பையில் வைக்கச் சொன்னார்.

அதன் பின்னர் முகத்தில் அறைந்தார் போல என்னிடம் கூறினார்: "நீங்களோ சன்னியாசி! ஆனால் ஏன் உங்கள் தாயாரைப் பற்றி நினைக்கிறீர்கள்?"

நான் கூறினேன், "மதிப்பு வாய்ந்த ஆதி சங்க‌ராச்சாரியாரே தன் தாயாரை கவனித்துக்கொண்டாரே!"

"உங்க‌ள் தாயார் நலமாக உள்ளார்.அவருடைய பெயரை தங்கள் நண்பரின் சட்டைப் பையில் உள்ள தாளில் எழுதி விட்டேன்" என்றார். மேலும் கூறினார்:

"உங்கள் குரு இறந்து விட்டார்.அவர் கூறியதையெல்லாம் நீங்கள் நம்பவேண்டும். ஏனேனில் அவர் மிகமிகப்பெரிய மனிதர்" மேலும் ஆச்சரியப்படத்த‌க்க வகையில் என் குருவைப்பற்றி பல தகவல்களைக் கூறினார். "வேறு என்ன உங்கள் குருவைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பு கிறீர்கள்?" என்று கேட்டார். "என் குருவின் பெயரைக் கூறினால் திருப்தி அடைவேன்" என்றேன்."எந்தப்பெயர்? ஒரு சன்யாசிக்குப் பல பெயர்கள் கிடைக்குமே!?" என்று கேட்டார். எந்தப் பெயரால் பொது மக்களுக்கு அவர் அறிமுகம் ஆகி உள்ளாரோ அந்தப்பெயர்!" என்றேன். "ஒ!அந்த அற்புதப் பெயரா? அதை ஏற்கன்வே அந்தத் தாளில் எழுதியாயிற்று" என்றார்.

"நீங்கள் ஏதோ ஒரு திபேத்திய மந்திரத்தை எண்ணியுள்ளீர்கள்.அதையும் அந்தத் தாளில் எழுதியாயிற்று". பின்னர் "எந்த‌ மொழியிலேனும்  ஏதாவது கூறுங்கள்" என்றார்.நான் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய!" என்றேன். "சரி! இதையும் உங்கள் நண்பரின் சட்டைப்பையில் உள்ள தாளில் எழுதியாயிற்று.

“இப்போது அந்தத் தாளை எடுத்துப் படித்துப் பாருங்கள்."என்றார்.

ஆஹா!என்ன அதிசயம்! அவர் கூறிய எல்லாம் அதில் இருந்தது! என் தாயாரின் பெயரும் கூட  இருந்தது. இவ்வாறு அதில் கண்டிருந்தது: இந்தப் பெயருடைய உங்கள் தாயார் நன்றாக உள்ளார்கள்.அவர்கள் மிகவும் புனிதமானவர்கள்; நல்லவர்கள்

அவர்கள் உங்கள் பிரிவினை மரணத்துக்கு ஒப்பாக நினைத்து உணர்ச்சி வயத்தில் உள்ளார்கள்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவார்கள். எனவே அவர்களைச் சந்திக்க விரும்பினால் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திக்க வேண்டும்.

அடுத்து எழுதப் பட்டிருந்தது: உங்கள் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்துவிட்டார்; ஆனால் அவர் சூட்சுமத்தில் வாழ்கிறார் அதாவது உருவமில்லா உடலில் வாழ்கிறார்; உங்களைக் கண்காணித்து வருகிறார்.

அப்புறம் திபெத்திய மொழியில் "லாமாலா கேப்சுசுவா" என்று நான் நினைத்து இருந்த மந்திரம் எழுதப்பட்டு இருந்தது. இதுவரை எழுதியதெல்லாம் உறுதி செய்யும் பொருட்டு,  ஒருமணி நேரம் முன்னர் நீங்கள் சொல்லிய மந்திரம் இங்கே கொடுக்கப்படுகிறது. "ஓம் நமோ பகவதே வாசுதேவாய."

என்னுட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் வெற்றிக‌ர‌மாக‌ச் சொன்னார். அப்போது தொலைவில் உள்ள‌ கிராம‌ங்க‌ளில் இருந்தெல்லாம் ம‌க்க‌ள் அவ‌ரிட‌ம் வ‌ந்து கொண்டு இருந்தார்க‌ள்.அவர்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய பெய‌ர் இன்னதென்றும் அவ்ர்களுடைய கிராமம் இன்னதென்றும், அவர்கள் வந்துள்ள காரணம் இன்னதென்றும் த‌வ‌றின்றிக் கூறினார். என‌க்கு பிர‌ஸ்ன‌ம் சொல்லி வ‌ரும்போதே சிறிது சிறிதாக‌ அமைதி அடைந்து விட்டார். அவ‌ர் கூறினார்:

"உங்க‌ளிட‌மிருந்து ப‌ண‌ம் வாங்கிக்கொள்ள‌ மாட்டேன்.மாறாக‌த் தாங்கள் தான் என்னிட‌மிருந்து ஏதாவ‌து சேவை யைப் பெற்றுக்கொள்ள‌‌ வேண்டும்."

அவ‌ர்க‌ள் இல்ல‌த்தில் அளித்த‌ பாலைச் சா‌ப்பிட்டேன். த‌ன் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரையும் அழைத்துவ‌ந்து என்னை வ‌ண‌ங்க‌ச் செய்தார். அவ‌ர் கொண்டு வ‌ந்த‌ விபூதியைத் தொட்டு அவ‌ர்க‌ளிட‌ம் அளித்தேன். அத‌ன் பின்ன‌ர் அவ‌ருக்கு சித்தியாகியுள்ள‌ இந்த‌ ச‌க்தியின் மூலாதார‌ம் என்ன‌ என்று அவ‌ரிட‌மே கேட்டேன். முத‌லில் சொல்ல‌ ம‌றுத்து வில‌கி விட்டார். சிறிது நேர‌ம் க‌ழித்துத்தானாக‌ வ‌ந்து என்னிட‌ம் சொன்னார்: "துற‌வி வேந்த‌ரே!இதெல்லாம் ம‌ந்திர‌ சித்திதேவியின் துணையால் கிடைத்த‌து!"

ஷேக்ஸ்பிய‌ர் கூறிய‌து போல‌ "த‌த்துவ‌ங்க‌ளின் க‌ற்ப‌ன‌க‌ளையெல்ல‌ம் க‌ட‌ந்து பூமியிலும், வான‌த்திலும் ப‌ல‌ அதிச‌ய‌ங்க‌‌ள் உள்ள‌ன‌ ஹொரேஷியோ"

விவேகான‌ந்த‌ரின் க‌டித‌ம் மேலும் அவ‌ருடைய‌ அமெரிக்க‌ப் ப‌ய‌ண‌த‌தினைப் ப‌ற்றித் தொட‌ர்கிற‌து. இதே அள‌வு செய்தி உள்ள‌தால் பின்ன‌ர் ஒரு முறை பார்ப்போம். பின்னூட்ட‌த்தில் உங்க‌ள் க‌ருத்துக்க‌ளைச் சொல்லுங்க‌ள்.ந‌ன்‌றி!

ஆக்கம்: K.முத்துராமகிருஷ்ணன் (kmrk), தஞ்சாவூர்
----------------------------------------------------



திருவாளர் K.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் தனது துனைவியாருடன் இருக்கும் புகைப்படம். 1980ல் எடுக்கப் பெற்றதாகும்.



இந்தப் படமும் அதே காலகட்டத்தில், அன்பர் KMRK அவர்கள் சத்சங்கத்தில் உரை நிகழ்த்தும்போது எடுக்கபெற்றதாகும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

58 comments:

  1. நரேந்திரரின்(மனிதர்களுக்கு இந்திரனைப் போன்ற தலைவர்)பிறந்த நாளை ஒட்டி என் மொழியாக்கத்தை வெளியிட்டு ஆதரவு அளித்த ஐயா வாழ்க பல்லாண்டு!
    வளர்க வளமுடன்!

    படிக்கப் போகும் இளைஞர் குழாத்துக்கு 'இளைஞர்தின' வாழ்த்துக்கள்!நன்றிகள்!

    ReplyDelete
  2. அறீயாதசெய்தி, அறீயவேண்டிய செய்தி.பலகலைகளீன் உயீர்பிடம் நமது தாயகம். நன்றீ.

    ReplyDelete
  3. உள்ளேன் ஐயா!


    பைபிளில் மிகவும் பிடித்த வசனம்.

    உன்னை விட்டு நான் விளகுதுவதும் இல்லை பிரிவதும் இல்லை போல முத்து ராமகிருஷ்ணன் ஐயா வின் ஆக்கம் உள்ளது

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம்
    நல்ல ஒரு செய்தி அருமையாக கொடுத்துள்ளீர்கள் !!!அது சரி தபோவன துறவிகளே அமைதியாக உட்கார்ந்து கேட்கும்போது நான் எம்மாத்திரம்
    போக உங்கள் பதிவுக்கு கமென்ட் போட எனக்கெல்லாம் தகுதி இல்லை சாமீ... எதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கிறேன் இது போன்று நிறையா அறிவுரைகள் கூறுங்கள் எல்லோருக்கும் பயன்படும்..
    நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம்
    அறிவுரை என்பது துறவிக்கு தாய்பாசம் ...குரு பக்தி..... வீரதுறவயின்... கடிதத்தில் இது போன்ற செய்திகள் இருக்கிறது
    அதுதான்

    ReplyDelete
  6. "இந்த இகலோகத்தில் ஒரு கவளம் சோற்றுக்கு அலைய விட்டுவிட்டு, வேறு ஏதோ சொர்க்கத்தில் எனக்கு நிரந்தர ஆனந்தம் அளிக்கிறேன் என்று ஒரு கடவுள் சொன்னால், அந்தக் கடவுள் எனக்குத் தேவையில்லை"
    இப்படிச் சொல்லுவதற்கு ஒரு மனிதனுக்கு துணிவு இருக்குமேயானால் சந்தேகமே இல்லாமல் அவர் ஒரு மாபெரும் துறவி தான். கடவுளை நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படிச் சொல்லமுடியும். இது குறித்து மைனர் அவர்களின் கருத்தை அறிய ஆவலாயுள்ளேன்.அற்புதமான அறிய தகவல்களைச் சொன்ன KMRK அவர்களுக்கு மிகுந்த நன்றி. மேலும் ஸ்ரீ விவேகானந்தரைப் பற்றி அறிய ஆவலாயுள்ளேன். அவர் குறித்த எளிய புத்தகத்தை எனக்கு பரிந்துரைப்பீரா KMRK அவர்களே.

    ReplyDelete
  7. படிக்கவே பிரமிப்பாக இருந்தது. அதுவும் நம்ம ஊர் என்பதால் ஊர்ப்பாசமும் சேர்ந்துகொண்டது. இந்த தகவல் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.
    இதைப்பற்றி ஒரு முறை எதிலேயோ படித்தேன். இந்த பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் ஒலி அலைகளில் நாம் / நமக்கு முன் இருந்தவர்கள் பேசிய / பேசப்போகும் அனைத்தும் பதிந்திருக்கிறது. அந்த சூட்சுமம் தெரிந்தவர்கள் அங்கேயிருந்து அதை எடுக்க முடியும் என்பதாக விரிவான ஒரு கட்டுரை. இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்கிறது. பார்க்கலாம்.

    ReplyDelete
  8. சுவாமியின் பிறந்தநாளான இன்று அற்புதப் பதிவு.
    இப்படியே சுவாமியின் ஒவ்வொருக் கடிதமும் வருமாயின் அது மிகவும் சிறப்பாகும்.
    நன்றி.....

    நண்பர் நந்தகோபால் சுவாமியின் சொற்பொழிவுகள் கட்டுரைகள் கவிதைகள் (தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு) என்று மொத்தம் 11 புத்தகங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது....
    புத்தகத்தின் தலைப்பு
    ஞானதீபம் 1........ 11 வரை..
    அல்லது சகோதர சகோதிரிகளே என்று மேலே கூறிய அனைத்துப் புத்தகங்களையும் உள்ளடக்கிய ஒரே ஒரு புத்தகம் இருக்கிறது அதையும் வாங்கிப் படிக்கலாம். வாங்க வாய்ப்பு இல்லை என்றால் வகுப்பறையிலேயும் படிக்கலாம்.

    You may get it by order through this site;
    Web: www.sriramakrishnamath.org
    email: srkmath@vsnl.com

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்..!

    KMRK சாருக்கும் என் வணக்கங்கள் பல.. KMRK சார் ஒரு கருத்துக் கருவூலமாக இருப்பார் போலிருக்கிறதே..! சுவாமிஜியைப்பற்றி இந்த அபூர்வ தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு அன்னாருக்கு நன்றிகள் பல.. KMRK சாருடன் நானும் ஒரு சக மாணவன் என்று நினைக்கும்போது மனம் பெருமிதம் கொள்கிறது.. அவருக்கு என் நன்றி கலந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்....

    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  10. that is true fantastic...

    below link provides more details on it.

    http://www.vivekananda.net/knownletters/1893India.html

    http://www.vivekananda.net/SwamiOnHimself/WonderfulPhenomenon.html

    also vivekanand later. he never encouraged astrology or any things like that. but he has mentioned its truth & it should be ignored. heheheheh...

    ReplyDelete
  11. அன்பேர . .
    நரேந்திரன் விவேகானந்தன் ஆனதும்
    விவேகானந்தன் சிகாகோ சொற்பொழிவு ஆற்றியதும் அனைவரும் அறிவர் . .

    ஆனால் அவருடைய கொள்கைகள் ஆன்மிக புரட்சி செய்யவில்லை . .
    சமுதாய புரட்சி செய்தது என சொல்லலாம் . .

    ஒரு சமுதாய புரட்சியாளரை ஆன்மிக புரட்சியாளர் என வருணிப்பது எப்படி சரியாக இருக்கமுடியும் . .

    அப்படி பார்த்தால் ஈரோடு வெங்கடராம இராமசாமி நாயக்கரும் சமுதாய புரட்சியாளர் தானே . .

    கசாப்பு கடை நோக்கி செல்லும் ஆடுகளாக எத்தனை நாட்கள் இருப்பது?

    விவேகானந்தருக்கு கறுப்பு கொடி காட்டவில்லை . . அவரை வேறு பக்கத்தில் நிறுத்தி பார்ப்பதைத்தான் மறுத்துச் சொல்கிறேன் . .

    ReplyDelete
  12. ///////////சுவாமிஜியின் வரலாற்றையும்,அமுத மொழிகளையும் உங்க‌ளில் பலர் படித்து இருக்கக்கூடும். நான் கீழே மொழியாக்கம் செய்து கொடுத்திருக்கும் கடிதம் பலரும் படித்திருக்க வாய்ப்புக் குறைவு.\\\\\\\\\\\\\சொன்ன மாதிரி இதுவரை படித்ததில்லை..மிகவும் ஆச்சரியத்தக்க விஷயங்கள்...இப்போ இதுமாதிரி மனசிலே நினைக்குறதை சொல்லுற ஆட்கள் எங்கேயாவுது இருக்காங்களா? சொந்த அனுபவத்தில் தெரிந்தவர்கள் வகுப்பறையில் யாராவது இருந்தால் தெரிவித்தால் ஆர்வமுள்ள அனைவருக்கும் உதவியாக இருக்குமே....

    ReplyDelete
  13. அரிய தகவலுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. ////////////G.Nandagopal said...
    "இந்த இகலோகத்தில் ஒரு கவளம் சோற்றுக்கு அலைய விட்டுவிட்டு, வேறு ஏதோ சொர்க்கத்தில் எனக்கு நிரந்தர ஆனந்தம் அளிக்கிறேன் என்று ஒரு கடவுள் சொன்னால், அந்தக் கடவுள் எனக்குத் தேவையில்லை"
    இது குறித்து மைனர் அவர்களின் கருத்தை அறிய ஆவலாயுள்ளேன்./////////////

    துறவி என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் விவேகானந்தரும் ஒரு மனிதர்..உயிர் வாழ உணவு அவசியம் என்பதும் இதனை அடைய மனிதன் படும் பாடும் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்பதை எண்ணி சொன்ன கருத்துதான்..பல சமயங்களில் எனக்கும் இதே கேள்விதான் எழுகிறது..அடிப்படையில் எழும் ஒரு கேள்வி..என்னதான் முயற்சி செய்தாலும் காரிய வெற்றி என்பது கோட்சாரத்தை வைத்துதான் எனும் போது(ஜனன ஜாதகம்தான் ஃபிக்ஸ்ஸட் ஆச்சே) மனித முயற்சியே இல்லாவிட்டாலும் அவனுக்கு கிரகசார அடிப்படையில் ஏதாவது பலன்கள் நடந்துதானே ஆகவேண்டும்?இப்படி மனித முயற்சி இல்லாமல் நடந்த விஷயம் ஏதாவது ஒன்றை யாராவது சொல்ல முடியுமா?ஏதோ ஒரு வடிவத்தில் மனித முயற்சி அதனுள் பொதிந்து கிடக்கும்..உடலை உகுத்து பரவெளியில் ஐக்கியமாகும் முயற்சி எடுக்கும் தீவிர சந்நியாசிகள் முயற்சி இல்லா நிலையில் கடவுளைத் தேடி தன்னை மறந்து மெய்யுணர்வு நிலை என்று சொல்லப்படும் நிலையை எண்ணி கற்பனையில் சாவை நோக்கி போகிறார்களோ? இறப்புக்குப் பின் எல்லா மனிதனையும் போலே இவர்களும் ஒன்றுமில்லாமல் போகிறார்களே தவிர யாராவது சொர்க்கம் நரகம் பற்றியெல்லாம் பார்த்து விட்டு வந்து சொல்ல முடியுமா?அப்படி சொன்னாலும் நம்பத்தான் முடியுமா?இருக்கும் இந்த வாழ்க்கைதான் நிச்சயம்..நிதர்சனம்.. அப்படி இருக்கும்போது ஏனிந்த வாழக்கையையை இப்படி உதறித் தள்ளுகிறார்கள் இவர்கள்? விஷம் குடித்து தற்கொலை முயல்பவன் செய்யும் முயற்சிக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே?வாழ தைரியம் இல்லாத கோழை வழிப்பாதையா இது?என்றெல்லாம் கூடத் தோன்றும்..

    ReplyDelete
  15. //இந்த பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் ஒலி அலைகளில் நாம் / நமக்கு முன் இருந்தவர்கள் பேசிய / பேசப்போகும் அனைத்தும் பதிந்திருக்கிறது. அந்த சூட்சுமம் தெரிந்தவர்கள் அங்கேயிருந்து அதை எடுக்க முடியும் என்பதாக விரிவான ஒரு கட்டுரை.//

    நானும் இது போல் படித்திருக்கிறேன். இதன் சூட்சுமம் தெரிய வேண்டுமானால் அதற்கு கிரக நிலைகள் ஒத்துழைக்க வேண்டுமே. Intuition power 11ம் இடம், அதன் அதிபதி, Supernatural power, பிறருக்குத் தெரியாமல் மறைந்திருப்பதை வெளிகொணர்வது, 8ம் இடம், அதன் அதிபதி, ஆராய்ச்சி 5ம் இடம், அதன் அதிபதி, இவர்கள் ஒத்துழைத்தால்தான் முடியும்.

    ReplyDelete
  16. I agree with Minor..!!

    But there is a difference in your approach..!!

    I think we can have debate on this.. if classroom permits..

    I am available at
    visuiyer@yahoo.com
    or any online (skype/yahoo/win-live) VISUIYER

    ReplyDelete
  17. ஐயா!

    மைத்துனர் மைனர் வால் கேட்பது போன்ற இரு சந்நியாசிகள் ஒரு சமயத்தில் மயமாக வந்து மந்திர உபதேசம் செய்தனர் அதில் ஒருவர் எதிர்கால வாழ்க்கையில் நடக்க போவதை இரத்தின சுருக்கமான கூறியும் சென்றுள்ளார் அதுவும் அப்படியே நடக்கின்றது.

    ஆனால் அவர் கொடுத்த முகவரியை 13 வருடதீர்க்கு முன்னர் நீச சுக்கிர
    திசை நாதனின் திசையில்,
    ராகு புத்தியின் தாக்கத்தால் தவற விட்டு விட்டேன் .

    இதனில் ஒரு பெரிய அழகு என்ன வென்றால் அவர் தந்த முகவரியை தவற விட்ட பின்னர் தான் தீர்க்க தர்சி கூறியது அப்படியே நடந்ததை எம்மால் உணரமுடிந்தது.

    உணர ஆரம்பித்தபின்னர் இன்றுவரை
    எமது குருநாதரை தேடுகின்றேன் என்றுதான் கிடைப்பாரோ ?

    குருநாதருக்கே வெளிச்சம் .



    இப்போ இதுமாதிரி மனசிலே நினைக்குறதை சொல்லுற ஆட்கள் எங்கேயாவுது இருக்காங்களா? சொந்த அனுபவத்தில் தெரிந்தவர்கள் வகுப்பறையில் யாராவது இருந்தால் தெரிவித்தால் ஆர்வமுள்ள அனைவருக்கும் உதவியாக இருக்குமே....
    Posted by minorwall to வகுப்பறை at Wednesday, January 12, 2011 5:00:00 PM
    --

    ReplyDelete
  18. ஐயா!

    மைத்துனர் மைனர் வால்க்கு
    தாங்கள் எந்த அளவீர்க்கு எதிர் பார்கின்றீர்கள் என்று எமக்கு தெரியாது
    ஆனால் தாங்கள் நினைப்பது போல் சக்தி உள்ளவர்கள் இன்றும்உள்ளார்கள்
    என்பது யாம் கண்ணார் பார்த்து அனுபவித்த உண்மை மாப்ஸ்.

    திறமையான ஜோதிடர்கள் ஜாதகத்தை பார்த்து ( திசை, புத்தி முதல் ) காலகிரகம் அனைத்தையும் கணித்து கூறும் பலனை, முகத்தை பார்த்த சில நொடியில் பலன் கூறியவர்களில்
    இருவர் இன்றும் உயிருடன் ஜீவித்து இருப்பது உண்டு.

    ஒருவர்

    அம்மா —

    "ஸ்ரீ மாத அம்ரீதானந்தாமாயி தேவி!"

    {எமது ஜாதகத்தை தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னரே வகுப்பில் கொடுத்துள்ளேன். அதனில் பார்த்தீர்கள் என்றால் தெரியும் லக்னாதிபதி(சனி)ஆறில் உள்ளார்
    (கடகத்தில்) .அவ்வாறு இருப்பின்
    தைரிய குறைச்சல் இயற்கையாக
    இருக்கும் என்று ஒரு மலையாள சகோதரி கூறிய ஜாதக கூற்றும்
    நடைமுறைக்கும் பார்த்தால் எமக்கும் சரியாக தான் தோன்றுகின்றது.

    இந்த பிரச்சனையை எம்மை பார்த்த மாத்திரதிலையே சரியாக அறிந்து மாற்று மருந்தாக ஒரு மந்திரத்தையும்
    என்னுடைய காதில் போதித்தவர்தான் மேலே யாம் கூறிய அம்மா!

    இரண்டாமவர் சென்னையில் உள்ள மைலாபூரின் தெற்கு பாகத்தில் மசூதி தெருவில் அமைந்து உள்ள
    "ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி!" கோவிலில் உள்ள அந்தன மகான்.

    மூன்று கிராமத்தில் ராக்கொடாங்கி என்று கூறப்படும் கம்பளத்து நாக்கமார்களில் நிறைய நபர்கள் ராத்திரி நேரத்தில் அவர்களின் குல
    "தெய்வம் மான தேவி சக்கமாவின்!" உத்தரவின் படி குறி சொல்ல வருவது வழக்கமாக இன்றும் உள்ளது.

    அந்த ராக்கொடாங்கி குறிப்பிட்ட வீட்டை நோக்கி கூறும் பலாபலன் அல்லது அவர்கள் கூறுவது சரியாக நடக்கின்றது. ( மிகவும் அதிசயக்க வேண்டிய ஒன்று ஆகும் )

    --

    ReplyDelete
  19. இந்தமாதிரி அரியகலைகள் பலகற்றுத் தேர்ந்தவர்கள் இந்தியர்கள். இருந்தாலும் அதை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லவில்லை தன்னுடனே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதனாலேயே பல கலைகள் அழிந்துவிட்டன. இளைய தலைமுறையும் அதைக் கிண்டலடிப்ப்தில் காட்டிய சிரத்தையை அந்தக் கலையை கற்றுக் கொள்வதற்க்கு காட்டவில்லை

    ReplyDelete
  20. பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் நன்றி.கருத்துக்கள் கருத்துக்களாகவே
    இருக்க‌ட்டும்.அதன் மீது விவாதம் வேண்டாம். ஏனெனில் சுவாமிஜி
    போன்றவர்களைப் பற்றி விவாதிக்கும் தகுதி எனக்கு இல்லை.

    அது சரி, செய்தியின் தாக்கத்தால் என்னை யாரும் கவனிக்கவில்லை.என் கடந்தகால புகைப்படத்தைப்பற்றி எந்த விமர்சனமும் இல்லயா? பல புகைப் படங்களை இதுவரை வெளியிட்டாச்சு.உங்களுக்குப் பிடித்ததை சொல்லலாமுல்ல?

    ReplyDelete
  21. /// iyer said... அன்பேர . .
    நரேந்திரன் விவேகானந்தன் ஆனதும்
    விவேகானந்தன் சிகாகோ சொற்பொழிவு ஆற்றியதும் அனைவரும் அறிவர் . .
    ஆனால் அவருடைய கொள்கைகள் ஆன்மிக புரட்சி செய்யவில்லை . .
    சமுதாய புரட்சி செய்தது என சொல்லலாம் . .
    ஒரு சமுதாய புரட்சியாளரை ஆன்மிக புரட்சியாளர் என வருணிப்பது எப்படி சரியாக இருக்கமுடியும் . .////

    திரு விசுஐயர் அவர்களே.... இது கூட ஒரு வித்தியாசமான சிந்தனையாக இருக்கிறதே.....
    இதைப் பற்றிய தங்களின் பார்வையில் நரேந்திரர் செய்தது ஆன்மீகப் புரட்சி அல்ல... ஈ.வெ.ரா. செய்தது போன்றதொரு சமுதாய புரட்சியே என்று தங்களின் பார்வையில்... இருவேறு கருத்துக்களையும் ஒட்டியும் வெட்டியும் ஒரு அருமையான கட்டுரையை வகுப்பறைக்கு அனுப்புங்களே....
    விரைவில் வரும் என்ற மிகுந்த நம்பிக்கை மற்றும் எதிர் பார்ப்புடன்....
    நன்றி.....

    ReplyDelete
  22. ஆமாம் திரு ஆலாசியம் அவர்களே . .

    அப்படி எழுதுவது நமது வகுப்பறையின் பார்வையை வேறு பக்கம் திரும்ப வைக்கும் . .

    வகுப்பறை விவாத மேடையாகிவிடும் .

    பட்டி மண்டபம் என ஒரு blog தொடங்கி வையுங்கள் . .
    அதில் இப்படி ஒரு தலைப்பையும் தாருங்கள் . .

    தொடங்குகிறேன் என் விவாதத்தை பல பக்கங்களுக்கு . .

    ஆன்மிக ஆத்திக வாழ்க்கைக்காக ஞானியாரிடம் தொடங்கிய ஈவேரா நாத்திகரானதும்

    நாத்திகராக தன் வாழ்க்கையினை தொடங்கிய நரேந்திரன் விவேகானந்தன் ஆனதும் . .

    ஆண்டவனின் ஆசிர்வாதங்கள் . .

    உள்ளதை உள்ளபடி
    உணர்தியதை உணர்த்தியவாறு

    புரிந்து கொள்ளாமல்
    கசாப்பு கடை நோக்கி செல்லும்
    ஆடு மந்தைகளா நாம் என கேட்டு விழித்தால் . .

    வேறுபக்கம் பார்க்கின்றனர் . .
    அவரவர் நிலையில் அவரவர் சரியே..

    ஆனாலும்
    நெஞ்சு பொறுக்குதில்லையே
    இந்த
    நிலைகெட்ட மானிடரை . .


    என பாரதி பாடலுக்கு தாளம் போட்டபடி..

    ReplyDelete
  23. மனித முயற்சியே இல்லாவிட்டாலும் அவனுக்கு கிரகசார அடிப்படையில் ஏதாவது பலன்கள் நடந்துதானே ஆகவேண்டும்?இப்படி மனித முயற்சி இல்லாமல் நடந்த விஷயம் ஏதாவது ஒன்றை யாராவது சொல்ல முடியுமா?//

    நான் சொல்லப்போவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான். இந்தக் கேள்விக்குப் பொருந்துமா என்றும் தெரியாது. நீங்களே இதுபற்றி முடிவு செய்து கொள்ளலாம்.

    நான் கல்லூரிப்படிப்பை முடித்தபின் ஒரு 6 மாதம் ஒரு தனியார் பள்ளியில் கும்பகோணத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தேன். ஆனால் அவர்கள் கொடுத்த சம்பளம் மிக மிகக் குறைவு என்பதால் ஒரு கட்டத்தில் நானாகவே முடிவு செய்து வேலையை விட்டுவிட்டேன். அப்போது எனக்கு இருந்த மனக்குழப்பங்கள் / பிரச்சனைகள் அதிகம். எப்போது என்ன நடக்குமோ என்பது மாதிரியான ஒரு பயம் கலந்த சூழல். அதை விவரிக்க விரும்பவில்லை. சுருங்கச் சொன்னால் வீட்டைவிட்டு எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் விட மாட்டோமா என்று நினைத்ததுண்டு. வேறு வேலைக்கும் நான் முயற்ச்சிக்கவில்லை. சரி சென்னையில் வேலைக்கு முயற்சி செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேனே தவிர அதற்கான ஒரு முயற்சியும் கிஞ்சித்தும் செய்யவில்லை.

    ReplyDelete
  24. எந்தப் பிரச்சனையானாலும் என் சித்தியிடம் மனம்விட்டுப் பேசுவது என் வாடிக்கை. நன்றாக ஜோதிடம் தெரிந்தவர். அவரிடம் சொல்லி வருந்தியபோது அவர் சொன்னது 'இன்னும் 3 மாதத்திற்குள் நீ இந்த ஊரை விட்டு வெகு தொலைவிற்குச் சென்றுவிடுவாய்' என்று. அப்போது இருந்த மனநிலையில் நான் அதை சுத்தமாக நம்பவில்லை. அவர் எனக்கு ஆறுதல் சொல்கிறார் என்றே நினைத்தேன். என் சித்தப்பா ஒருவர் இருக்குமிடம் 7 வருடங்களாக எங்களுக்குத் தெரியாமலே இருந்தது (அது ஒரு தனிக்கதை). 7 வருடங்களுக்குப்பின் திடீரென்று ஒரு நாள் சித்தி மட்டும் அவர் பெண்களை அழைத்துக்கொண்டு எங்களைப் பார்க்க வந்தார். அப்போதுதான் நானும் / அம்மாவும் / தங்கையும் பாட்டி வீட்டிற்குப் போயிருந்தோம். தம்பி மட்டுமே வீட்டில் இருந்தான். அவர் சாதாரணமாக என்னைப்பற்றி விசாரித்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார். பெரியம்மா வீட்டிற்குப் போனபோது அவரும் சுருக்கமாக எல்லாவற்றையும் விவரித்திருக்கிறார். 15 நாளில் சித்தப்பாவிடமிருந்து போன், என்னை ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்குமாறு. திருப்புமுனை என்றால் அதுதான். இதுமாதிரி நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில். விதியை தீர்க்கமாக நம்ப ஆரம்பித்ததும் அன்றிலிருந்துதான்.

    ReplyDelete
  25. இதன் சூட்சுமம் தெரிய வேண்டுமானால் அதற்கு கிரக நிலைகள் ஒத்துழைக்க வேண்டுமே.//

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனந்த்.

    ReplyDelete
  26. //////iyer said...ஆமாம் திரு ஆலாசியம் அவர்களே . .
    அப்படி எழுதுவது நமது வகுப்பறையின் பார்வையை வேறு பக்கம் திரும்ப வைக்கும் . .
    வகுப்பறை விவாத மேடையாகிவிடும் . பட்டி மண்டபம் என ஒரு blog தொடங்கி வையுங்கள் . .அதில் இப்படி ஒரு தலைப்பையும் தாருங்கள் . . தொடங்குகிறேன் என் விவாதத்தை பல பக்கங்களுக்கு . .ஆன்மிக ஆத்திக வாழ்க்கைக்காக ஞானியாரிடம் தொடங்கிய ஈவேரா நாத்திகரானதும் நாத்திகராக தன் வாழ்க்கையினை தொடங்கிய நரேந்திரன் விவேகானந்தன் ஆனதும் . .ஆண்டவனின் ஆசிர்வாதங்கள் . .உள்ளதை உள்ளபடி உணர்தியதை உணர்த்தியவாறுபுரிந்து கொள்ளாமல் கசாப்பு கடை நோக்கி செல்லும் ஆடு மந்தைகளா நாம் என கேட்டு விழித்தால் . .
    வேறுபக்கம் பார்க்கின்றனர் . .அவரவர் நிலையில் அவரவர் சரியே..ஆனாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை . . என பாரதி பாடலுக்கு தாளம் போட்டபடி../////
    ////திரு விசுஐயர் அவர்களே.... இது கூட ஒரு வித்தியாசமான சிந்தனையாக இருக்கிறதே.....
    இதைப் பற்றிய தங்களின் பார்வையில் நரேந்திரர் செய்தது ஆன்மீகப் புரட்சி அல்ல... ஈ.வெ.ரா. செய்தது போன்றதொரு சமுதாய புரட்சியே என்று தங்களின் பார்வையில்... இருவேறு கருத்துக்களையும் ஒட்டியும் வெட்டியும் ஒரு அருமையான கட்டுரையை வகுப்பறைக்கு அனுப்புங்களே....////

    தாங்கள் உங்கள் பார்வையில் ஒருக் கட்டுரையை அனுப்புங்கள்..... அதுவும் தங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது உங்கள் பெயரே அதைக் கூறும் ஆக தணிக்கைப் பிரச்சனை இருக்காது... வாத்தியார் வெளியிடுவார்.... விவாதமா!!! தேவையிருக்காது என உறுதியாக நான் நம்புகிறேன்.... அதோடு தங்களின் கருத்தை வெட்டி பேச யாரும் வருவதாகத் தெரியவில்லை.... காரணம் நீங்கள் என்ன விளக்க வருகிறீர்கள் என்பதே தெரியவில்லை.... ஒருவேளை யாவரும் கூறவருவதும் உங்கள் கருத்தாக இருந்தால் எப்படி விவாதம் நடக்கும்..... அதோடு என் போன்ற பார்வையாளர்கள் யாரை ஆதரிப்பது என்பதும் தெரிய வில்லை... ஆக உங்கள் பார்வையை எழுதுங்கள்.... வகுப்பறையில் தங்கள் கருத்தை கூறுங்கள்.... அது குன்றின் மற்றது இட்ட விளக்காகும்.... ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்....

    ReplyDelete
  27. /////// iyer said...
    I agree with Minor..!!
    But there is a difference in your approach..!!
    I think we can have debate on this.. if classroom permits..\\\\\
    /////kmr.krishnan said... பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் நன்றி.கருத்துக்கள் கருத்துக்களாகவே
    இருக்க‌ட்டும்.அதன் மீது விவாதம் வேண்டாம்.\\\\\\\\\\\
    தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் சிந்தனை ஓட்டங்கள் அவ்வப்போது வெளிப்பட்டு விடுகிறது..உண்மையில் துறவியாகி உண்மையில் முற்றும் துறந்து எமக்கு புலப்படாத பாதையில் பயணிப்போரைப் புண்படுத்திருந்தால் வருந்துகிறேன்..எனது நோக்கம் அதுவல்ல..புரிதலுக்கான தேடல்தான்..
    Dear Visu,
    Thanks for your initiation..In considreation of the willingness of today's author,I think it is better to stop further comenting this topic today in this classroom..
    please mail me your views to my mail id..
    minorwall@gmail.com

    ReplyDelete
  28. நீண்ட சுய அனுபவ விவரங்களைப் பகிர்ந்து கொண்ட வகுப்பறை அன்பர்களுக்கு நன்றி..

    ReplyDelete
  29. ///"அவர் குறித்த எளிய புத்தகத்தை எனக்கு பரிந்துரைப்பீரா KMRK அவர்களே"///


    வெளிநாடுக‌ளில் பார‌தப் பெருமைக‌ளை எடுத்து உரைத்த‌ சுவாமிஜி,நம் நாடு திரும்பியதும்,ராமேஸ்வ‌ரத்தில் துவங்கி இமாசலத்தில் அல்மோரவரை ஒவ்வொரு ஊராகச் சென்று உரை ஆற்றினார்.அந்த உரைகளில் தான் எதிர் பார்க்கும் பாரதத்தினைப் பற்றி அருவிபோல கருத்துக்களைப் பொழிந்தார்.முக்கியமான கருத்துக்கள் தமிழகத்தில்தான் சொல்லப்பட்டன.அவர் பேசிய உரைகள் அனைத்தையும், மிஸ்டர் குட்வின் என்ற ஆங்கிலேயர் குறுக்கெழுத்தில் எழுதி புத்தகம் ஆக்கினார்.அது LECTURES FROM COLOMBO TO ALMORA என்ற பெயரில் வெளியாகி உள்ளது. எல்லாமே ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகள்தான். என் அபிப்ராயத்தில்
    இளைஞர்கள் படிக்க வேண்டிய முதல் நூல் இதுதான்.

    ReplyDelete
  30. வணக்கம்.
    சில மாதங்கலுக்கு முன் தந்தி ஆன்மீக மலரில் தாங்களது மலர் அதில் வந்தது.ஆனால் தாங்கள் எப்போது,எங்கே அந்தவிவரம் அதில் இல்லை.
    உங்கள‌து கட்டுரையை வரவேர்க்கிரேன்,மேலும் தங்கலது புகை படங்கலும்
    தங்களது முகவரியை காட்டும்படி இருக்கிரது நன்றி சார்.
    ஆனந்த் சார் சரியாக சொன்னீர்கள்.11,8,5 இந்த வீட்டு அதிபதிகல் தொடர்பு
    இன்டிசன் செய்ய முக்கியம்.அதோடு இதையும்(1,12ம்)சேர்த்தாள் கனவுகல் மூலமும் சொல்லலாம்.தனக்கும்,பிரருக்கும் சொல்லமுடியும்.எனக்கு மிகவும்
    சாத்தியமே.நிரைய சம்பவங்கள் நடந்தும் இருக்கிரது.இதேபோல் தியானத்திலும்
    சில எதிர்பாரத செய்திகல் வருகிரது.அதுவும் நடந்து இருக்கிரது.தூக்கத்துக்கும்,
    தியானத்துக்கும் நான் என்கிர ஒரு வித்தியாசம் உண்டு.
    நன்றி வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  31. ///"உள்ளதை உள்ளபடி உணர்தியதை உணர்த்தியவாறு புரிந்து கொள்ளாமல் கசாப்பு கடை நோக்கி செல்லும் ஆடு மந்தைகளா நாம் என கேட்டு விழித்தால் . .வேறுபக்கம் பார்க்கின்றனர் . .அவரவர் நிலையில் அவரவர் சரியே..ஆனாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை . ."///


    ஒரு விவாதம் என்பது ஒரு செய்தியின் இர‌ண்டு பக்கங்களையும் அல‌சி ஆராய்தல்;அவ்வளவே;இதில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் கிடையாது.
    ஒரு விவாத‌த்தில் வென்றே ஆக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக ஏற்படும் போது எந்த நிலைக்கும் கீழே இறங்கி விதண்டாவாதம் ஆகி விடும் அபாயம் உள்ளது.இது ஒரு குழந்தைத்தனமான மனப்போக்கு.


    "நிலை கெட்ட மனிதர்";"ஆட்டு ம‌ந்தை" என்ற‌ ப‌தப் பிர‌யோக‌த்துட‌ன் விவாத‌த்தைத் துவ‌ங்கினால் விவாத‌ம் எங்கே போய் நிற்கும் என்ப‌தை எண்ணிப் பார்ப்போம்.

    விவேகான‌ந்த‌ர் போன்ற‌வ‌ர்கள் எல்லாம் பன்முகம்(facets) கொண்டவர்கள். நான் கூற வந்தது சுவாமிஜியின் ஒரு முகம் என்றால், அவரைப்பற்றி வேறு பார்வை கொண்டவர்கள் அவர்கள் கோணத்தில் இருந்து ஒரு ஆக்கத்தைத் தருவதுதான்
    ஆரோக்யமாக இருக்க முடியும்.

    அரசியல் ஒன்றுக்கு மட்டுமே ஒருவரை ஒருவர் காலை வாருதல் சரியாக இருக்கலாம். அதே பாணி இங்கே சரியாகுமா?

    சிந்தித்து செயலாற்றுவோம்.
    யாருடைய மனமும் புண்படாத வகையில் சொற்றொடர்களை அமைப்போம். செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதும்,
    அதிர்வேட்டுக்களை விலக்குவதும் அவசியம் என்பதை உணர்வோம்.

    சுவாமிஜி பற்றிய விவாதத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன். மற்றபடி
    வேறு யாரும் விவாதம் செயவதற்கு நான் எந்த வகையில் தடை போட முடியும்? எனக்கு எந்த உரிமையும் கிடையாது.

    ReplyDelete
  32. ///"..... அதுவும் தங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது உங்கள் பெயரே அதைக் கூறும் ஆக தணிக்கைப் பிரச்சனை இருக்காது... வாத்தியார் வெளியிடுவார்."///


    யாருடைய பெயரைப் பார்த்துமட்டும், தமது கடமையான தணிக்கையை கைவிடும் அளவுக்கு வாத்தியார் இல்லை என்று பணிந்து சுட்டிக் காட்டுகிறேன்.

    என்னுடைய‌ சுவாமிஜி ஆக்க‌த்தில் கூட‌ சுவாமிஜி தேக‌ வியோக‌ம் செய்த‌து 32 வ‌ய‌தில் என்று த‌வ‌றாக‌ எழுதிவிட்டேன். ஆசிரிய‌ர் அத் த‌வ‌ற்றை நாசுக்காக‌ மாற்றி ச‌ரியான‌ த‌க‌வ‌லை (ஆதார‌த்தினை என‌க்கு அனுப்பி விட்டு)மாற்றி என் மான‌த்தை காப்ப‌ற்றி விட்டார்.என‌வே இன்னார் இனிய‌ர் என்றெல்லாம் இல்லாத‌ ந‌டுவு நிலையாள‌ர் ஆசிரிய‌ர்.என‌வே எந்த‌ப்பெய‌ர் கொண்ட‌வ‌ர்க‌ள் எழுதினாலும், தேவைப்ப‌ட்டால் வாத்தியார் த‌ணிக்கை செய்துதான் வெளியிடுவார்.

    ReplyDelete
  33. யாருடைய பெயரைப் பார்த்துமட்டும், தமது கடமையான தணிக்கையை கைவிடும் அளவுக்கு வாத்தியார் இல்லை என்று பணிந்து சுட்டிக் காட்டுகிறேன்/////
    .
    இதை மீண்டும் படித்துப் பாருங்கள்...
    /////தாங்கள் உங்கள் பார்வையில் ஒருக் கட்டுரையை அனுப்புங்கள்..... அதுவும் தங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது உங்கள் பெயரே அதைக் கூறும் ஆக தணிக்கைப் பிரச்சனை இருக்காது/////
    உங்களின் பெயரே நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்டும்...... அது எனது நம்பிக்கை என்று.... அவருக்கு ஒரு நேர்மறையான ஒரு உத்வேகத்தை தரும் வார்த்தையை.... கூறியிருந்தேன்.... இதில் என்னமோ வாத்தியாருக்கு இது போன்றதொரு பெயர்களில் மயக்கம் போலும் அதனால் அவர் தணிக்கை இல்லாமல்.... இந்தப் பெயரை பார்த்த மாத்திரத்தில் தணிக்கை செய்யாமல் போட்டுவிடுவார் என்ற அர்த்தத்தில் நான் கூறியதாக கற்பனை செய்து கொண்டு குழந்தைத்தனமாக (கோபப்படாதீர்கள்.... வேறுவிதத்தில் எழுதுவது நாகரிகமாகாது... பொது இடம் என்பதால் இதை தவிர்க்க முடியவில்லை...) எழுதி இருப்பது... வியப்பாக இருக்கிறது... குழந்தைத் தனமா?.... இல்லை?????

    எதுனாலும் சரி முதலில் நான் யார் கூறுவதையும் வெட்டி ஒட்டி பேசவில்லை.... அவர் வந்து அவர் கருத்தை கூறுவதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என்றால்..... தாங்கள் இது பற்றி மீண்டும்... எழுதி இருக்க வேண்டாமே... விவேகானந்தர் நாம் அனைவருக்கும் பொது வானவர்... இதில் அவர் ஏதோ சொல்ல வந்தார்... சரி எழுந்துங்கள் என்றால் வாத்தியார் அனுமதிக்க மாட்டார் என்றார்... இல்லை அனுமதிப்பார் என்று கூறினால் வேறு பேச்சு இல்லை..... இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் வருவார்.... பழைய அவரின் பின்நூட்டகளைப் பார்த்தல் தெளிவாகத் தெரியும் பாராட்டு என்பது அத்திபூத்தது போல் இருக்கும்....... நான் இதில் உங்களை இழுக்கவே இல்லையே..... அவரைத்தானே எழுதச் சொன்னேன்.... விவாதிப்பதற்கு வேளை இருக்காது.... அதில் உங்களுக்கு பிரியம் இல்லை (எனக்குத் (உங்களுக்கு) தகுதி இல்லை என்று எழுதிவிட்டீர்கள்).... அதன் பிறகு.... மறுத்துக் கூறியவரைப் பேச கூப்பிடுவது தவறாகாதே.... ஒரு வேளை நீங்கள் உங்களுக்குத் தகுதி இல்லை என்பதை.... எல்லோருக்கும் என்று எடுத்துக் கொள்ள நினைத்து எழுதி இருப்பீர்களோ எனத் தோன்றுகிறது.... அந்தத் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது இப்போது அவசியமும் இல்லை.... அவர் ஆட்டு மந்தைகளை என்று எழுதியதற்கு காரணம் உண்டு (1896 நவம்பர் 1 லண்டனில் இருந்து மேரிக்கு எழுதியக் கடிதம் இருந்தால் படித்துப் பாருங்கள்) அதை அவரேக் கூறட்டுமே என்று தான் எதிர் பார்த்தேன் அவர் எஸ்கேப்...... நீங்கள் வேறு எங்கோ சென்று.... வாத்தியாரையும் இழுத்து திசை திருப்பீர்கள்.... இதுவும் நீங்கள் அவரின் பின்னூட்டத்திற்கு நான் தந்த பதிலுக்கு நீங்கள் எழுதவந்ததால் நான் இப்போது எழுதுகிறேன்.... வேறு காரணம் இல்லை... என் போன்றவர்கள் பலகண்டங்களில் இருந்து வந்தவர்களைப் பார்த்து பேசி வேளை செய்யவேண்டியதுள்ளது இந்த அளவுக்கு மற்றவர் திசை திருப்புன் பேச்சுக் களை புரிந்து கொள்ளக் கூட அடிப்படை அறிவு இல்லை என்றால்... மூன்றே நாளில் திரும்பி வந்திருப்போம்... உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி...

    ReplyDelete
  34. ///"உங்களின் பெயரே நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்டும்...... அது எனது நம்பிக்கை என்று.... அவருக்கு ஒரு நேர்மறையான ஒரு உத்வேகத்தை தரும் வார்த்தையை.... கூறியிருந்தேன்...."///


    பெயரை வைத்து மட்டும் ஒருவரை புத்திசாலி என்று முடிவுக்கு வரக்கூடிய
    கலையை நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.அவர் பெயர் என்ன என்பதையும், நீங்கள் ஏன் அப்படி எழுதினீர்கள் என்பதையும் குழந்தைகூடப் புரிந்துகொள்ளும்.


    முன்பே ஒருமுறை நான் கூறியுள்ளது போல் மகான்கள் எல்லோரும் எதிரில் வருகின்ற நபருக்கு என்ன உபதேசம் தேவையோ அதனை மட்டும் செய்வார்கள். மேரிக்கு எழுதியது க்யுரிக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.

    விவேகானந்தர் பொதுவானவர்தான். எல்லா சன்னியாசிகளுமே எல்லோருக்கும் வேண்டப் பட்டவர்களே!ஒரு சார்பு உடையவர்களாக இருப்பது
    அவர்களுடைய சன்னியாசத்திற்கே இழுக்காக முடியும்.

    உங்களைப் போன்றவர்கள் ஏழு கண்டங்களுக்கும் சென்று அனுபவ அறிவு பெற்று உள்ளீர்கள் என்பதில் என்னைப் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு
    மகிழ்ச்சிதான்.

    தாராளமாக அவரை நீங்கள் கருத்துச் சொல்லச் சொல்லலாம்.அவருடன் நீங்களும் விவாதிக்கலாம்.எல்லாம் ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும்.நாம் விவாதிப்பது,ஒரு மகானைப் பற்றி என்பதையும்,பலரும் அவரைப் போற்றுபவர்கள் என்பதையும்,நமது நோக்கம் செய்தியைத் தெரிவிப்பது மட்டுமே என்பதையும்,விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பதைத் தவிர்த்தல் நலம் என்பதையும் மனதில் கொண்டு விவாதம் செய்யுங்கள்.நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை. ஜூட்!


    விவேகானந்தரின் ஆக்கங்கள் 10000 பக்கங்களுக்கு மேல் உள்ளன. ஒரு கருத்தை அவர் கூறியுள்ளதாகக் கூறினால், அதற்கு நேர் மாறான கருத்தை
    விவேகானந்தர் கூறியுள்ளதை எடுத்துக்காட்ட முடியும்.மகான்களை "உள்ளது உள்ளபடி புரிந்து கொண்டவர்கள்" விவாதம் செய்ய மாட்டார்கள்.மகானாக என்றோ மாறியிருப்பார்கள்.நான் இன்னும் விவேகானந்தரை புரிந்து கொள்ள முடியவில்லை."புரிந்து கொண்டவர்கள்' விவாதம் செய்வதை ஒரு முட்டாள்
    எப்படி தடை செய்ய முடியும்.எப்படி இருந்தாலும் ஏதோ என் ஒப்புதல் இல்லாததால்தான் உங்கள் விவாதம் நின்று விட்டது என்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்த வேண்டாம்.


    வடிவேலு தமாஷ்:"பேச்சு பேச்சோடு இருக்கணும்...ஆமா.. சொல்லிப்புட்டேன்"

    ReplyDelete
  35. ///"உங்களின் பெயரே நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்டும்...... அது எனது நம்பிக்கை என்று.... அவருக்கு ஒரு நேர்மறையான ஒரு உத்வேகத்தை தரும் வார்த்தையை.... கூறியிருந்தேன்...."///


    பெயரை வைத்து மட்டும் ஒருவரை புத்திசாலி என்று முடிவுக்கு வரக்கூடிய
    கலையை நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.அவர் பெயர் என்ன என்பதையும், நீங்கள் ஏன் அப்படி எழுதினீர்கள் என்பதையும் குழந்தைகூடப் புரிந்துகொள்ளும்.


    முன்பே ஒருமுறை நான் கூறியுள்ளது போல் மகான்கள் எல்லோரும் எதிரில் வருகின்ற நபருக்கு என்ன உபதேசம் தேவையோ அதனை மட்டும் செய்வார்கள். மேரிக்கு எழுதியது க்யுரிக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.

    விவேகானந்தர் பொதுவானவர்தான். எல்லா சன்னியாசிகளுமே எல்லோருக்கும் வேண்டப் பட்டவர்களே!ஒரு சார்பு உடையவர்களாக இருப்பது
    அவர்களுடைய சன்னியாசத்திற்கே இழுக்காக முடியும்.

    உங்களைப் போன்றவர்கள் ஏழு கண்டங்களுக்கும் சென்று அனுபவ அறிவு பெற்று உள்ளீர்கள் என்பதில் என்னைப் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு
    மகிழ்ச்சிதான்.

    தாராளமாக அவரை நீங்கள் கருத்துச் சொல்லச் சொல்லலாம்.அவருடன் நீங்களும் விவாதிக்கலாம்.எல்லாம் ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும்.நாம் விவாதிப்பது,ஒரு மகானைப் பற்றி என்பதையும்,பலரும் அவரைப் போற்றுபவர்கள் என்பதையும்,நமது நோக்கம் செய்தியைத் தெரிவிப்பது மட்டுமே என்பதையும்,விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பதைத் தவிர்த்தல் நலம் என்பதையும் மனதில் கொண்டு விவாதம் செய்யுங்கள்.நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை. ஜூட்!


    விவேகானந்தரின் ஆக்கங்கள் 10000 பக்கங்களுக்கு மேல் உள்ளன. ஒரு கருத்தை அவர் கூறியுள்ளதாகக் கூறினால், அதற்கு நேர் மாறான கருத்தை
    விவேகானந்தர் கூறியுள்ளதை எடுத்துக்காட்ட முடியும்.மகான்களை "உள்ளது உள்ளபடி புரிந்து கொண்டவர்கள்" விவாதம் செய்ய மாட்டார்கள்.மகானாக என்றோ மாறியிருப்பார்கள்.நான் இன்னும் விவேகானந்தரை புரிந்து கொள்ள முடியவில்லை."புரிந்து கொண்டவர்கள்' விவாதம் செய்வதை ஒரு முட்டாள்
    எப்படி தடை செய்ய முடியும்.எப்படி இருந்தாலும் ஏதோ என் ஒப்புதல் இல்லாததால்தான் உங்கள் விவாதம் நின்று விட்டது என்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்த வேண்டாம்.


    வடிவேலு தமாஷ்:"பேச்சு பேச்சோடு இருக்கணும்...ஆமா.. சொல்லிப்புட்டேன்"

    ReplyDelete
  36. ////பெயரை வைத்து மட்டும் ஒருவரை புத்திசாலி என்று முடிவுக்கு வரக்கூடிய
    கலையை நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.அவர் பெயர் என்ன என்பதையும், நீங்கள் ஏன் அப்படி எழுதினீர்கள் என்பதையும் குழந்தைகூடப் புரிந்துகொள்ளும்////

    குழந்தைக்கு கூடப் புரியும் உங்களுக்கு (இன்னும் கற்றுக்கொள்ளவில்லை)

    ReplyDelete
  37. //////முன்பே ஒருமுறை நான் கூறியுள்ளது போல் மகான்கள் எல்லோரும் எதிரில் வருகின்ற நபருக்கு என்ன உபதேசம் தேவையோ அதனை மட்டும் செய்வார்கள். மேரிக்கு எழுதியது க்யுரிக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.//////

    அட....!!! அப்படியா! அப்படின்னா ஆளாளுக்கு வேறு வேறு உபதேசம்... அது ஆளுக்குத் தகுந்த மாதிரி மாறும்... ஒருவருக்கு ஆம் என்பது ஒருவருக்கு இல்லை என்றாகும் என்கிறீர்கள்!!???

    ReplyDelete
  38. /////விவேகானந்தர் பொதுவானவர்தான். எல்லா சன்னியாசிகளுமே எல்லோருக்கும் வேண்டப் பட்டவர்களே!ஒரு சார்பு உடையவர்களாக இருப்பது
    அவர்களுடைய சன்னியாசத்திற்கே இழுக்காக முடியும்./////

    அவர் சந்நியாசியாக இருப்பதால் மட்டுமே பொதுவானவராக இருக்க வேண்டியக் கட்டாயம் வந்துவிட்டது... இல்லைஎன்றால் அவர் அப்படி இருக்க மாட்டார்.... என்பது உங்களின் கருத்து..... சந்நியாசிகள் மாத்திரமே பொதுவானவர்கள் என்றால்..... சமூக ஏற்றத்தாழ்வுக்குப் பாடுபட்ட (பொதுவான சமூக நோக்குக் கொண்ட) மகாத்மாவும்... மகாகவியும்.... ஒத்த மாமனிதர்கள் எல்லாம் சன்னியாசிகளா??? இல்லை கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்கு தக. என்று அவர்கள் மெத்தப் படித்தவர்கள்..... நல்ல மனிதன் மட்டுமே பாகுபாடு கருதாது.... நடுநிலையோடு வாழ்வான்....

    ReplyDelete
  39. /////உங்களைப் போன்றவர்கள் ஏழு கண்டங்களுக்கும் சென்று அனுபவ அறிவு பெற்று உள்ளீர்கள் என்பதில் என்னைப் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு
    மகிழ்ச்சிதான்./////

    எங்களைப் போற்றவர்களை பாராட்டியதால் அவர்களின் சார்பாக உங்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  40. /////தாராளமாக அவரை நீங்கள் கருத்துச் சொல்லச் சொல்லலாம்.அவருடன் நீங்களும் விவாதிக்கலாம்.எல்லாம் ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும்.நாம் விவாதிப்பது,ஒரு மகானைப் பற்றி என்பதையும்,பலரும் அவரைப் போற்றுபவர்கள் என்பதையும்,நமது நோக்கம் செய்தியைத் தெரிவிப்பது மட்டுமே என்பதையும்,விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பதைத் தவிர்த்தல் நலம் என்பதையும் மனதில் கொண்டு விவாதம் செய்யுங்கள்.நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை. ஜூட்!/////

    நான் முதலில் விவாதிப்பதா இல்லை அவரின் புதியக் கருத்திற்கு நன்றி சொல்வதா என்பதே பிறகு தான்... எதற்கும் தாங்களின் அனுமதிக்கு மிக்க நன்றி.... ஏனென்றால் உங்களைக் கேட்காமல் விவேகானந்தரை பற்றி விவாதிக்கக் கூடாது போலும் "காபி ரைட்" பாய்ந்தால்.... அதற்காக முன்கூட்டியே தாங்கள் மனமிரங்கி அனுமதி தந்துள்ளீர்கள்....

    ReplyDelete
  41. ///// விவேகானந்தரின் ஆக்கங்கள் 10000 பக்கங்களுக்கு மேல் உள்ளன. ஒரு கருத்தை அவர் கூறியுள்ளதாகக் கூறினால், அதற்கு நேர் மாறான கருத்தை
    விவேகானந்தர் கூறியுள்ளதை எடுத்துக்காட்ட முடியும்./////

    ஒருபோதும்.... இருக்காது..... இது புரிதலின் கோளாறு.....
    திருக்குறளிலே ஒரு இடத்திலே .... கல்வி வேறிடத்திலே செவி...... பொருள்..... அறம்..... வாய்மை..... ஊக்கம்.... என்று இது தான் முக்கியம்... அது தான் முக்கியம்.... என்பான் அதற்கு ஒன்றுக்கு ஓன்று கருத்து வேறு பாடு என்று அர்த்தம் இல்லை.... இதுவும் வேண்டும்... அதுவும் வேண்டும்... என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்....

    ReplyDelete
  42. //////."புரிந்து கொண்டவர்கள்' விவாதம் செய்வதை ஒரு முட்டாள்
    எப்படி தடை செய்ய முடியும்.எப்படி இருந்தாலும் ஏதோ என் ஒப்புதல் இல்லாததால்தான் உங்கள் விவாதம் நின்று விட்டது என்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்த வேண்டாம்.///////

    அது எனக்குத் தெரியாது......
    உங்கள் ஒப்புதல் இல்லாமல் நின்று போனதாக யார் கூறினார்கள்.... (நீங்கலாகவா??!!) அதோடு விவாதித்தாலும் அதுக்கு உங்களுடைய ஒப்புதல் எதற்கு..... உங்கள் கட்டுரை மட்டும் விவாதித்தால் அப்போது ஒருவேலைத் தேவைப்படலாம் .... அதுவும் பொது இடத்திற்கு வந்த பிறகு அவசியமா.... என்பது வேறு...

    கவுண்டமணி தமாஷ்: ஒன்னு இங்க இருக்கு...
    இன்னொன்னு எங்கே? அதாண்ணே இது....

    ReplyDelete
  43. ///அட....!!! அப்படியா! அப்படின்னா ஆளாளுக்கு வேறு வேறு உபதேசம்... அது ஆளுக்குத் தகுந்த மாதிரி மாறும்... ஒருவருக்கு ஆம் என்பது ஒருவருக்கு இல்லை என்றாகும் என்கிறீர்கள்!!???///

    நீங்கள் என்னைக் கிண்டல் அடித்தாலும் சரி.நடைமுறயில் அப்படித்தான். பொது மனிதர்கள் எல்லோருமே அவ்வாறுதான். அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடிகள் போன்றவர்கள்."அடுத்தது காட்டும் ப‌ளிங்கு" அவர்கள்.

    திருக்குறளைப்பற்றிச் சொல்லும் போதுகூட, அது ஏழே சொற்களில் ஏழு கடல்களைப் புகுத்தி சிறிதாக உள்ளது என்ப‌து ஒரு கருத்து.'இன்னும் அதை சிறிதாகச் செய்திருக்கலாமே. அதிகார‌ங்களின் தலைப்பு மட்டுமே கருத்தைச் சொல்லிய பின்னர், ஏன் மேற்கொண்டு 70 சொற்கள் கொண்ட குற்ட்பாக்கள்?'
    என்ற ஒரு கருத்து ஒரு முதியவர் கேட்டார்.(தந்தைப் பெரியாரோ?=== தெரியவில்லை)10 குறட்பாக்களும் 10 வித மன இயல்பு கொண்டவர்களுக்காக எழுதியுள்ளதை உற்று நோக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

    விவேகானந்தர் போன்றோர் எதிரில் வந்தவருடைய "நான்" எங்கே, எதில் போய் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்பதை உடனே அறிந்து கொள்ளுவார்கள்.
    அதற்குத் தகுந்தபடி பேசுவார்கள்.தொகுத்துப் புத்தகமாக நாம் வைத்துக் கொண்டு "உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டு விட்டேன்" என்றும், 'பிச்சு பிச்சு'ஆராய்வோம் என்றோ எதிர்பார்த்து அவர்கள் பேசுவதில்லை.

    விவேகான‌ந்தரை "முழுமையாக"ப் புரிந்து கொண்டவர்கள் தாராளமாக விவாதியுங்கள்.

    எலி த‌ன் வாலை காயப் போட்டால் சரி.எலிப் புழுக்கையும் ஏன் வெய்யில் காய வேண்டும்?

    ReplyDelete
  44. A very good article. I thought I have read the complete works of Swami Vevekananda a few times over and over again, along with the writings about Bagavan Sri Paramahamsa by one of his disciples.
    Looks like there are more diamonds to be dug out from the works of Swamiji's writings.
    I would appreciate if Mr KMRK would give the reference to his writings, so, I would be able to read them.

    Thank you. With kind regards
    Arunachalam

    ReplyDelete
  45. //இதுவும் வேண்டும்... அதுவும் வேண்டும்... என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்...//

    இது, இது தான் சரி.வள்ளுவரிடம் மட்டுமில்லை எல்லாப் பெரியவர்களிடமும்
    இதேதான்.'சமுதாய மாற்றம் கொண்டு வந்தவர் என்பது மட்டுமே சரி', வேறு கோணத்தில் சொல்லியவர்கள் "நிலைகெட்டவர்கள்" 'ஆட்டுமந்தைகள்'உள்ளபடி புரிந்து கொள்ளாதவர்கள்'என்றெல்லாம் சொல்லுவேன் என்றால், அது சரி என்று தோன்றினால் தாராள‌மாக ஏற்றுக் கொண்டு கொண்டாடுங்கள்.

    மஹாகவியை பொதுவுடமை வாதிகளும் கொண்டாடுவார்காள்.பக்தி மார்கத்துக்காரர்கள் கண்ணன் பாட்டுக்காக அவ‌ரை ஆழ்வார் என்றே சொல்லுவார்கள்.இந்துக்கள் நம்மவர் என்பார்கள்.அவரை சன்மார்கி என்பவர்கள்
    உண்டு.வேதாந்தி என்பவ‌ர்கள் உண்டு.எல்லாமும் சரிதான்.எல்லோரும் கொண்டாடுவதலாலேயே அவர்கள் பெரியவளர்களாக உருவாகிறார்கள்.

    ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை, யானையை ஒவ்வொரு இடத்தில் தொட்டுப் பார்த்து தங்க‌ளுக்குத் தோன்றிய அபிப்ராயம் சொன்ன விழிப்புலன் இல்லாதவர்களைப் போல, விவேகானந்தர் சமுதாயப்புரட்சியாளர் மட்டுமே என்பது ஒரு கோணமாக மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.இன்னும் பல வீச்சுக்கள் உள்ளவரை ஒரு தீப்பெட்டிக்குள் அடைப்பேன் என்பது சரியா?

    ReplyDelete
  46. ///I would appreciate if Mr KMRK would give the reference to his writings, so, I would be able to read them.

    Thank you. With kind regards
    Arunachalam///
    Thank you Mr.Arunachalam.The letter translated by me does not find a place in the complete works.
    you may find that in the web site of "Viveekananda Vedanta Network--
    Ramakrishna Vedanta society of Boston"
    http://www.vivekananda.org/newSVLetters.asp

    ReplyDelete
  47. ///அட....!!! அப்படியா! அப்படின்னா ஆளாளுக்கு வேறு வேறு உபதேசம்... அது ஆளுக்குத் தகுந்த மாதிரி மாறும்... ஒருவருக்கு ஆம் என்பது ஒருவருக்கு இல்லை என்றாகும் என்கிறீர்கள்!!???///

    ////நீங்கள் என்னைக் கிண்டல் அடித்தாலும் சரி.நடைமுறயில் அப்படித்தான். பொது மனிதர்கள் எல்லோருமே அவ்வாறுதான். அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடிகள் போன்றவர்கள்."அடுத்தது காட்டும் ப‌ளிங்கு" அவர்கள்.///

    அட இதப் பாருங்கையா... சொல்லவே இல்லை..... இது கூட புதுசா இருக்கே.... இப்படி ஒரு விசயத்தை அந்த மூன்று பேரும் (மாதா, பிதா, குரு) கூட இதுநாள் வரைக்கும் சொல்லவில்லையே.....

    ReplyDelete
  48. ////10 குறட்பாக்களும் 10 வித மன இயல்பு கொண்டவர்களுக்காக எழுதியுள்ளதை உற்று நோக்கினால் தெரிந்து கொள்ளலாம்./////

    எப்படி... ஒவ்வொரு ஆளின் சைசுக்குத் தகுந்தமாதிரி தனிதனி சட்டை மாதிரியா!..... நான் நினைச்சேன்.. முதல் குரலில்...... அப்படின்னா என்ன?... அடுத்து மாத்தினா என்னாகும்... மாத்தாம இருப்பதற்கு என்ன செய்யணும்.. அப்படிச் செய்யாதவன் யாரு... அவன் கதி என்னாகும்... செய் இல்லைன்னா செத்து தொலை.. இப்படி மெது வாக ஆரம்பித்து...

    கடைசிவரைக்கும்.. நான் புரிஞ்சுக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறவனுக்கு ஒரு புடுங்க முடியாத ஆப்பாக வைப்பான் வள்ளுவன்னு நினைச்சேன்.... ஆனால் நீங்க ஒரே விஷயத்தை... அதுவும் பத்து விதமாக... வேறுவேறு ஆளுக்குத் தகுந்த மாதிரி எழுதியிருக்காருன்னு.. அதிலும் அதை உற்று நோக்கினால் தான் தெரியும்னு வேற சொல்றீங்க.... ஏன்... சும்மா காமடி பன்றீங்க.... என்னது உண்மையாகவா!!!???... சரி ஏத்துகிறேன் நீங்க செயிச்சு புட்டீங்க....

    ReplyDelete
  49. ////தொகுத்துப் புத்தகமாக நாம் வைத்துக் கொண்டு "உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டு விட்டேன்" என்றும், 'பிச்சு பிச்சு'ஆராய்வோம் என்றோ எதிர்பார்த்து அவர்கள் பேசுவதில்லை./////

    போறபோக்குல.. ஏதோ, அந்த நேரத்தில தோன்றத... அவுத்து விட்டிட்டு போறதுன்னு சொல்றீங்க...
    நான் நினைத்தேன்... எப்படி பிச்சாலும்... அது ஒன்னு தான், மாறாததுன்னு.... பிச்சுப் பார்த்தால் வேதிவினையாகிவிடும்னு கிறது... எனக்குப் புதுசு தான்... சரி உங்க சந்தோசத்தை ஏன்? கெடுப்பானேன்!

    ReplyDelete
  50. ////எலி த‌ன் வாலை காயப் போட்டால் சரி.எலிப் புழுக்கையும் ஏன் வெய்யில் காய வேண்டும்?/////

    நிச்சயமாக, இதைப் பத்தி எனக்கு எதுவுமேத் தெரியாது... அதோடு எனக்கு சம்பந்தப் பட்டதாக தோன்றவில்லை... விளக்கமும் எதிர்பார்க்கல! நன்றி....

    ReplyDelete
  51. /////மஹாகவியை பொதுவுடமை வாதிகளும் கொண்டாடுவார்காள்.பக்தி மார்கத்துக்காரர்கள் கண்ணன் பாட்டுக்காக அவ‌ரை ஆழ்வார் என்றே சொல்லுவார்கள்.இந்துக்கள் நம்மவர் என்பார்கள்.அவரை சன்மார்கி என்பவர்கள்
    உண்டு.வேதாந்தி என்பவ‌ர்கள் உண்டு.எல்லாமும் சரிதான்.எல்லோரும் கொண்டாடுவதலாலேயே அவர்கள் பெரியவளர்களாக உருவாகிறார்கள்./////

    அது தானே இங்கே விவகாரம்.... படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோயில்..... கதைக் கட்டுரை மேடைப் பேச்சு... இவைகளுக்கு ஆளாளுக்கு வேணும் கிறது மட்டும் உபயோகப் படுத்தி விட்டு... சிலது புரியாத மாதிரியும்... சிலது தெரியாத மாதிரியும்.... என்னத்தச் சொல்ல.. நல்லவேளை... அவனை 39 வயசுலே அந்த பிரம்மம் ஐக்கியமாக்கிகிச்சு..

    ReplyDelete
  52. தீய செயல்களை தவிர்க்க சமூகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரும்... அப்படி ஒரு நல்ல சமூகத்தில் வாழும் சூழ்நிலையில் வாழ வேண்டும்... ஆக அதை அறிந்தோ அறியாமலோ.. சரி செய்ய சுத்தம் செய்யத் துணிந்த யாவரும் ஆன்மீகப் புரட்சி செய்தவர்கள் தாம்... இதில் சமுதாயம் வேறு.. ஆன்மிகம் வேறு என்பது ஒருக்காலும் அல்ல.....

    மனிதன் வாழ்வில் இரண்டு நிலையை இறைவன் வைத்திருப்பதாக உபநிஷதம் கூறுகிறது... ஒன்று செய்யத் தகுதியானது... மற்றொன்று.... சுகத்தைத் தருவது... முதாலவது நற்கதிக்கு.... ஆக புத்தியுள்ளவன் முதலாவதை விரும்புவான்...

    ஆக, இவர்கள் ஒரு தவறான புரிதலில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் அந்த சுக வாழ்விற்கு பங்கம் வரும் படி செய்தால்.. அதை சமுதாயப் புரட்சி.... ஆன்மிகத்திற்கு எதிரானது என்று அவதூறு செய்வார்கள்.... இது அத்தனையும்... அவனால் நடத்தப் படுகிறது.... என்பதை அறியாதவர்கள்... ஆன்மீகம் உயிர் அதைத் தாங்கியுள்ள உடல்கள் தான் சமுதாயம்... உடல் கெடும் போது.... ஆன்மீகம் தழைக்காது... உடலைக் காக்க முயற்சி செய்யும் யாவரும்... ஆன்மீக வாதிகள் தான்... அதை அவர்கள் ஏற்காவிட்டாலும்...

    இங்கு பூஜா புனஷ்காரம் என்பதெல்லாம்... போலீஸ் வேலைக்குப் போகும் முன் செய்யும் உடற்பயிற்சி எப்படி அவசியமானதோ அது போன்று தான்..... பயிற்சி முடிந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்... மேலும் அங்கு பார்க்கப் போகும் வேலையும் வேறு என்றும் உணர வேண்டும்.... ஆன்ம அநுபூதி பெற... பூசை புனஷ்காரம் அது வெறும் பாலர் பள்ளி என்பார் நரேந்தர்... அவைகள் படிக்காமலும் சற்று சிரமத்தோடு அவனின் ஆசியோடு... கர்ம யோகத்தால்....(பட்டம் பெறலாம்) அவனை அடையலாம்... அதோடு பாலர் பள்ளியில் உள்ள பாடம் அத்துபடி யாகிவிட்டதால் மாத்திரமே பெரிய ஆள் என்ற எண்ணமும் இருக்க கூடாது....

    ஒரு சின்ன தகவல் மாத்திரமே... வாரியார் சொல்வார்கள்... நாவுக்கரசர்... சைவத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது... 4 ஆண்டுகள் தான்... அப்போது அவருக்கு வயது..77 ....

    வெறும் 6 நாட்கள் தான் பக்தராக முழு அடியவராக இருந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார்.... சுந்தரமூர்த்தி நாயனார்.. 2 வருடம் மாத்திரமே... சுந்தரரை தடுத்தாண்டது 16 -ல் அவனை அடைந்தது 18 -ல்....

    ஆக எலியோ புலியோ... ஆன்ம சுத்தி (சித்தி) யோகத்தில் வருவது... அதை நடத்த உதவும் புறக் கருவியாகிய சமுதாயம் சுத்தமாக இருக்க வேண்டும்...

    இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.... முதலில் நம்ம வாத்தியாருக்கு நன்றி....

    ReplyDelete
  53. /////ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை, யானையை ஒவ்வொரு இடத்தில் தொட்டுப் பார்த்து தங்க‌ளுக்குத் தோன்றிய அபிப்ராயம் சொன்ன விழிப்புலன் இல்லாதவர்களைப் போல, விவேகானந்தர் சமுதாயப்புரட்சியாளர் மட்டுமே என்பது ஒரு கோணமாக மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.இன்னும் பல வீச்சுக்கள் உள்ளவரை ஒரு தீப்பெட்டிக்குள் அடைப்பேன் என்பது சரியா?/////

    அது சரிதான் இதப் பாருங்க..

    ////ஆனால் அவருடைய கொள்கைகள் ஆன்மிக புரட்சி செய்யவில்லை . .
    சமுதாய புரட்சி செய்தது என சொல்லலாம் . .
    ஒரு சமுதாய புரட்சியாளரை ஆன்மிக புரட்சியாளர் என வருணிப்பது எப்படி சரியாக இருக்கமுடியும் . .
    அப்படி பார்த்தால் ஈரோடு வெங்கடராம இராமசாமி நாயக்கரும் சமுதாய புரட்சியாளர் தானே . . /////

    ஆன்மம் என்றால் என்ன.... ஆன்மீகம் என்றால் என்ன... சமுதாயம் என்றால் என்ன.... இதைப் பற்றிய புரிதல் இல்லாது எழுதிய பின்னூட்டம்... "அதை கூர்ந்து கவனிக்காமல் ஏன்? உணர்ச்சிவசப் படவேண்டும்"....

    எங்கே அவரிடம் கேட்பது.... விட்டால் தானே பிடிப்பதற்கு.... போனவர் போனர்வர் தான்... அடுத்தக் கப்பல் வரும் போது தான் வருவார்.... அதுவும் வேறு ஒரு மூட்டை (பதரோ... வெங்காயத் தோலோ சுமந்து வந்து நங்குன்னு போட்டுவச்சிட்டு போயிடுவார்) பிறகு என்ன கண்ணை மூடிக்கிட்டவுங்க.... தப்பிச்சுகலாம்... சரி போட்டவரை புடிச்சு.... ஏதாவது செய்யச் சொல்லலாம்ன்ன... அதுக்கு...... என்னத்தச்ச சொல்ல...

    ReplyDelete
  54. ஆன்ம சுத்தம்... அநுபூதி... சரி அது வேண்டாம்... கட உபநிஷத்தில் சுலோகம் 23 , 24 , 25 இதில் கடைசியாக இருப்பதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.. 24 . தீயசெயல்களைத் தவிர்காதவனும்... அமைதியற்றவனும்.. மன ஒருமை இல்லாதவனும்.. மனதை ஒருநிலைப் படுத்தாதவனும்.. தன் அறிவைக்கொண்டு ஆன்மாவை அறிவதற்கில்லை..... 25 . சமய அறிவும்.. உயர் பண்பும் யாருக்கு உணவாக உள்ளதோ.. மரணம் யாருக்கு உணவுடன் சேர்த்து உண்ணப்படும் குழம்பாக உள்ளதோ.. அது எத்தகையது என்பதை யார் அறிவார்... ஆனால், இவ்விரண்டும் ஆமாவிற்கு உணவு மாத்திரமே... இவ்விரண்டாலும் ஆன்மாவை அறிய முடியாது.. என்பதாகும்..

    தீய செயல்களை தவிர்க்க சமூகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரும்... அப்படி ஒரு நல்ல சமூகத்தில் வாழும் சூழ்நிலையில் வாழ வேண்டும்... ஆக அதை அறிந்தோ அறியாமலோ.. சரி செய்ய சுத்தம் செய்யத் துணிந்த யாவரும் ஆன்மீகப் புரட்சி செய்தவர்கள் தாம்... இதில் சமுதாயம் வேறு.. ஆன்மிகம் வேறு என்பது ஒருக்காலும் அல்ல.....

    ReplyDelete
  55. ஒரு சின்ன தகவல் மாத்திரமே... வாரியார் சொல்வார்கள்... நாவுக்கரசர்... சைவத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது... 4 ஆண்டுகள் தான்... அப்போது அவருக்கு வயது..77 ....

    வெறும் 6 நாட்கள் தான் பக்தராக முழு அடியவராக இருந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார்.... சுந்தரமூர்த்தி நாயனார்.. 2 வருடம் மாத்திரமே... சுந்தரரை தடுத்தாண்டது 16 -ல் அவனை அடைந்தது 18 -ல்....

    ஆக எலியோ புலியோ... ஆன்ம சுத்தி (சித்தி) யோகத்தில் வருவது... அதை நடத்த உதவும் புறக் கருவியாகிய சமுதாயம் சுத்தமாக இருக்க வேண்டும்...

    இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.... முதலில் நம்ம வாத்தியாருக்கு நன்றி....

    ReplyDelete
  56. ///"இதில் சமுதாயம் வேறு.. ஆன்மிகம் வேறு என்பது ஒருக்காலும் அல்ல....."///

    ந‌ன்றி!ஹாலாஸ்ய‌ம்!ஆன்மாவைக் கொன்று விட்டால் அப்புறம் சமுதாயமாவது ஒன்றாவது!

    உங்க‌ளுடைய முடிவுரை மூத்தவுரை‌யாக‌ப் பரிண‌மிக்கிற‌து.உங்க‌ளின் ஆழ‌ம் கொஞ்ச‌ம் புல‌னாகிய‌து.மீண்டும் ந‌ன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com