மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.1.11

எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் பாருங்கள்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய வாரமலரை இரண்டு கட்டுரைகள் அலங்கரிக்கின்றன. மூத்த மாணவர்களில் ஒருவரின் கட்டுரையும், மாணவி ஒருவரின் கட்டுரையும் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் பாருங்கள்!

சென்ற வாரமலரில், துறவியுடன் என்னுடைய பயண அனுபவத்தினை எழுதியிருந்தேன். அப்போது "ஒரு பணி நிமித்தம் என்னையும் அழைத்துச் சென்றார்கள்" என்று சொல்லியிருந்தேன்.

அது என்ன பணி, அதன் மூலம் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை இப்போது சொல்கிறேன்.

தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டியில் இருந்து 3 கி.மி தூரத்தில் மனையேரிப்பட்டி என்ற குக்கிராமத்தில் அரசு மறுவாழ்வு இல்லம் ஒன்று உள்ளது. அதில் தொழு நோயாளிகளும் பிச்சைக்காரர்களும் அடைக்கலமாகி வாழ்ந்து வ‌ருகின்றனர். இன்றும் அந்த இல்லம் இயங்கி வருகிறது. அந்த இல்லத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் நான் குறிப்பிட்ட துறவியின் மடத்து முகவரியைத் தெரிந்து கொண்டு,அவருக்கு உதவி கோரி அஞ்சல் அட்டை அனுப்பி விட்டனர்.

அவரும் அந்த அட்டைகளையெல்லாம், தஞ்சைக்கு மிக அருகில் உள்ள மடமான மதுரைக்கு அனுப்பி அந்த ஏழைகளுக்கு என்ன உதவி செய்யலாம் என ஆலோசனை கூறப் பணித்தார். மதுரை மடத்துத் துறவி எங்கள் குடும்பத்தை நன்கு அறிந்தவர் ஆதலால் மறு வாழ்வு இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க எங்க‌ளைப் பணித்தார்.

என்னுடைய மூத்த சகோதரர் முனைவர் கண்ணன் அவர்கள் அப்பணிக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு மனை யேரிப்பட்டிக்குச் சென்றார். அந்த நிறுவனம் அரசு நிறுவனம் என்பதை அறிந்தார். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் இருந்தன. உணவுக்கு அது சிறைத்துறையுடன் இணைக்கப்பட்டு, அங்கிருந்து உணவுப் பண்டங்கள் எல்லாம் கிடைத்து வந்தன. எனவே நிர‌ந்த‌ரப் பணியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே ஏதும் செய்தாலும் அரசு இயந்திரத்தின் அனுமதி போன்ற நடைமுறைகள் தாமதத்தினை ஏற்படுத்தும். எனவே ஏதாவது தற்காலிக உதவி அளித்தால் போதுமானது என்று தன் ஆலோசனையை மதுரைக்கு எழுதினார்.

அது குளிர் காலமானதால் அனைவருக்கும் ஒரு போர்வை இலவசமாகக் கொடுக்கலாம் என்று  முடிவாயிற்று. அதற்கான பணத்தினை பெற்றுக்கொள்ள மதுரை வரச்சொல்லி கேட்டுக் கொண்டார்கள். அந்த மூத்த துறவியும் அச்சமயம் மதுரை வந்து இராஜபாளையம் செல்வார் என்று சொல்லப்பட்டது.

மதுரையிலேயே தானம் பெற்று தொகை அளிக்கப்படும். போதிய தானம் கிடைக்காவிடில் அவருடன் இராஜபாளையம் சென்றால் அங்கு தொகைக்கு ஏற்பாடு செய்து தரப்படும். பெற்று வந்து அந்த சேவையை மனையேரிப் பட்டியில் செய்ய வேண்டும். இதற்காக நான் மதுரை சென்று மூத்த துறவியைச் சந்தித்தேன். மதுரையில் கிடைக்கக்கூடிய தானம் பற்றாமல் இருந்ததால், தன்னுடன் இராஜபாளையம் வருமாறு பணித்தார். அப்படித்தான் அந்தப் பயண‌ம் அமைந்தது.

இராஜபாளையத்தில் சுழற்சங்க மகாநாட்டில் பேசும்போது இந்த வேண்டுகோளை வைத்தார். உடனே தேவையான தொகை சேர்ந்த்துவிட்டது. சுழற்சஙக அமைப்பாளர்கள் முறையாக வரவு வைத்து, என்னுடன் ஒரு நபரையும் அனுப்பி வைத்தார்கள். தஞ்சையில் போர்வைகளை வாங்கி மனையேரிப்பட்டியில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தோம்.

அப்போது, பல கடைகளில் ஏறி இறங்கிய போது, தஞ்சை சர்வோதய சங்கத்தில் புனித மூவரின் படங்களை வாங்கிச் சென்று  பயனாளிகளுக்குக் காண்பிப்போம் என்று நினைத்து படங்களை வாங்கினேன். படத்தினை தினமணி நாளிதழில் சுற்றிக் கொடுத்தார்கள். சுற்றியதாளைப் பிரித்தால் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நாளிதழின் பக்கங்களில் 'ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்' என்ற கட்டுரை வெளியாகி இருந்தது.

அவருடைய செய்தியை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லப்பட்ட ஆணையாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.

மதுரைப் பயணத்தின் போது மூத்த துறவியுடன் பேசிய போது ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு, அதன் தொடர்ச்சியாக சற்றும் எதிர்பாராத தருணத்தில் 'வாழ்வும் வாக்கும்' கிடைத்தது எல்லாமுமாகச் சேர்ந்து என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன.

நரசேவையே நாரயணசேவை. மக்கள் சேவையே மகேசன் சேவை. சீவ சேவையே சிவன் சேவை என்பதெல்லாம் தாரக மந்திரமானது.

அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டாம் என்றேன்.

வீட்டில் குழந்தைகள், மனைவி உறவினர்களுக்கு அளிக்க வேண்டிய நேரம் தானாகக் குறைந்தது.

சதாநேரமும் சேவை, சேவை என அலைய ஆரம்பித்தேன்.

ஒரு வெளி நோயாளிகளிக்கான மருந்தகத்தை ஆரம்பித்து 8 ஆண்டுகள் மாலைநேரத்தில் நடத்தினேன். ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி என்ற பெயர். மக்கள் அளித்தனர். வயிற்றுப் போக்கு, சொறி சிரங்கு, பருவகால சுரம் ஆகியவற்றினை எதிர்த்து 5 கிராமங்க‌ளின் குழந்தைகளைக் காத்தோம்.
 
அதே நேரத்தில் எங்கள் பகுதியில் ஒரு தரமான அர‌சு அங்கீகாரம் பெற்ற பள்ளியை நிறுவ ஒரு திட்டத்தை முன் வைத்து ராங்கியம் தெய்வத்திரு ஏ.சுப்ரமணியம் செட்டியார் அவர்களின் ஆதரவினைப் பெற்று  உயர்நிலைப் பள்ளியை நிறுவ ஆவன செய்தேன். 26 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தப் பள்ளி இன்று மேல் நிலைப் பள்ளியாக விளங்குகிறது.

என் வாழ்வில் சுமார் 10 ஆண்டுகாலங்கள் இந்த சேவைப் "பைத்தியம்" பிடித்து பசி தூக்கம் இன்றி அலைந்தேன்
.
பின்னர் என்ன ஆயிற்று?

ஒரு வேளை என் மனதில் "நான்" என்ற எண்ணம் தலை தூக்கிவிட்டது போலும்! இறையருள் என்னைப் பல சூழல்களில் கொண்டு விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலைகளிலும் இருந்து என்னைப் பின் வாங்க வைத்தது. 'சட்டிசுட்டதா கை விட்டதடா' என்ற நிலை.

அதுவும் நன்மைக்கே என்று மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.

சொந்த வேலைகளில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொருவராகப் பெண்களுக்குத் திருமணம் போன்ற வேலைகள், வீட்டினை விரிவு படுத்திக் கட்டுவது, விட்டுப்போன‌ உறவுக‌ளைப் புதிப்பது என்று என் வாழ்க்கை திசை மாறி விட்டது.

ஆனால் இயற்கையாக என் மனதில் ஊறி விட்ட சேவை மனப்பான்மை மீண்டும், இப்போது, ஓய்வு பெற்ற பின்னர், தலை தூக்குகிறது.

என்ன செய்யலாம்?

இவ்வாக்கத்தைப் படிக்கும் உங்களின் மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,  
K. முத்துராமகிருஷ்ணன் (KMRK),
தஞ்சாவூர்
மின்னஞ்சல் முகவரி: kmrk1949@gmail.com


மடத்தில் எடுக்கப்பெற்ற படம். 
ஒலி வாங்கியில் பேசுவது கட்டுரையின் நாயகர்
K. முத்துராமகிருஷ்ணன் (KMRK)

கட்டுரையின் நாயகர்  K. முத்துராமகிருஷ்ணன் (KMRK)
அவர்கள் தன் குடும்பத்தாருடன்.
கட்டுரை சம்பந்தப்பட்ட காலத்தில் எடுக்கப்பெற்ற பழைய படம்! 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
2
கர்மவினை என்பது இதுதானா?

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராமுவுக்கு செய்தி காத்துக் கொண்டிருந்தது. செய்தியுடன் காத்திருந்தது, அவனுடைய அன்பு மனைவி பிரியா. வள்ளுவர் போற்றி வகுத்தபடி குண நலன்களை எல்லாம் ஒரு சேரப் பெற்ற அருங்குணமான மனைவி பிரியா.

ராமு வீட்டிற்குவ‌ந்தவுட‌ன், ப்ரியாவின் வாடிய முக‌த்தைப் பார்த்து, “என்ன‌ ந‌ட‌ந்த‌து? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? ந‌மது செல்வ‌ங்க‌ளுக்கு ஏதேனும் உடல்நல‌க் குறைவா?” என்று வின‌வினான்.

அந்த‌ அருங்குண ந‌ங்கை இல்லை என்று கூறினாள் பிற‌கு, "என்ன‌ ந‌ட‌ந்த‌து சொல்லு" என்று கட்டாயப் படுத்திக்கேட்டவுடன் சொன்னாள். “என்ன‌ங்க‌, எங்க‌ ஊர்க்கார‌ர், அதுதான் ப‌க்க‌த்துவீட்டுகார‌ர் வந்து க‌ல்யாண‌ ப‌த்திரிக்கை வைத்துவிட்டு, என்னை க‌ட்டாய‌மா வ‌ர‌ச் சொன்னார். நாம் இருவரும் கட்டாயம் போக வேண்டும்.  என்னுடைய சிறுவ‌யது முதலே அவர்கள் எனக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ள்”

“இன்னும் ஒருவாரம்தான் இடையில் உள்ளது. பிர‌யாண‌த்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்ப‌டியே அம்மாவையும் அப்பாவையும் பார்த்த‌ மாத‌ரியும் இருக்கும்” என்றும் கூறினாள்.

“ந‌மது மூத்த‌ பைய‌னைப் ப‌ள்ளியில் சேர்க்க‌ வேண்டும். என‌க்கு அலுவ‌ல‌க‌த்தில் விடுமுறை கிடைக்காது. மேலும் ப‌ணத்தை வீண் செல‌வு செய்யாம‌ல், முக்கியமான செலவுகளை மட்டும் செய்வோம். நம் பிள்ளைகளின் ந‌ல‌னில் அக்க‌றை செலுத்துவோம். போன‌மாத‌ம்தான் ஒரு க‌ல்யாணத்திற்குச் சென்று வ‌ந்தோம் அம்மாவையும் பார்த்துவிட்டு வ‌ந்தோமில்லையா? அடுத்த‌முறை எதேனும் திரும‌ண‌ம் ந‌ட‌ந்தால் அழைத்து  செல்கிறேன்” என்று அவளுடைய கணவர் அன்பாகக் கூறினார்.

அந்த‌ புண்ணிய‌வ‌தி கேட்கவில்லை. வாதம் செய்யத் துவங்கிவிட்டாள். அருங்குணங்கள் எல்லாம் தளர்ந்துவிட்டது.

திரும‌ண‌ நாளும் வ‌ந்த‌து. ராமு வ‌ழ‌க்க‌ம்போலத் தன்னுடைய அலுவ‌லுக்குச் சென்று விட்டார்.

பிரியாவின் மனது குழப்பித்தில் ஆழ்ந்தது. வேத‌னைப் பட்டாள். ஏதோ இழக்கக் கூடாததை இழ‌ந்த‌ சோகத்தில் ஆழ்ந்து விட்டாள். தான் சொல்லியும் தன் கணவர் கேட்கவில்லையே என்ற கோபமும் ஏற்பட்டது. இனிமேல் வாழ்நாளில் திரும‌ண நிக‌ழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பே வராதோ என்றும் கவலை கொள்ளத் துவங்கினாள்.

“ச்சேய், என்ன வாழ்க்கை? இனி இவருடன் வாழ‌க்கூடாது. இப்ப‌டியொரு கணவன் தேவைதானா? பணம், பணம். சிக்கனம் என்கிறாரே ஒழிய மனைவியின் ச‌ந்தோஷ‌த்தைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறாரே!” என்று எண்ணத் துவங்கினாள்.

“அந்தத் திருமணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள். அவர்களில் பாதி எனக்குத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். போக‌வில்லையென்றால் எவ்வ‌ளவு அவ‌மான‌ம்? நாளைக்கு அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் என்னை ம‌திப்பார்களா? பேசுவவார்களா?” என்றெல்லாம் எண்ணி வேத‌னையின் உச்சத்திற்கும், குழப்பத்தின் சிகரத்திற்கும் சென்றாள்.

உணர்ச்சிப் பிரவாகத்தில் உடன் ஒரு முடிவிற்கும் வந்தாள். சாதாரண முடிவல்ல அது. அவள் வாழ்வையே சாய்க்கும் முடிவு அது!

தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள‌ பாசி படிந்த‌, பாழ‌டைந்த‌, ச‌க‌தி நிறைந்த‌, கிணற்றில் தன் இரண்டு குழ‌ந்தைக‌ளையும் தூக்கி வீசிவிட்டுத் தானும் அதில் பாய்ந்தாள். யாராலும் காப்பாற்ற‌முடிய‌வில்லை. ஒரு வ‌ழியாகத் தேடிப் பார்த்துக் கண்டுபிடித்துத் தூக்கி வ‌ந்து மேலே போட்டாபோது, மூன்று ஜீவன்களின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்திருந்தது.

தன்னைத் தவிக்க விட்டு விட்டு, இறந்து கிடந்த ம‌னைவி, மற்றும் குழந்தைகளைப் பார்த்துக் கணவன் தரையில் விழுந்து புரண்டு அழுதான். க‌த‌றினான். சென்ற உயிர்கள் மீண்டு வரவா போகிறது?

இறுதிக் க‌ட‌ன்க‌ள் எல்லாம் முடிந்தன. ராமு மட்டும் இய‌ல்பு நிலைக்கு திரும்ப‌வில்லை. அவனுடைய பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் ஒன்று கூடி ராமுவிற்குப் பலவிதங்களில் சமாதானம் சொன்னார்கள். கேட்கும் மன நிலையில் அவன் இல்லை.

அவனுடைய பெற்றோர்கள், எங்களுடன் வந்துவிடு என்று சொன்னதைக் கேட்கவில்லை. வாழ்க்கை இத்துடன் முடிந்து விடாது. இன்னொரு திருமணம் செய்து வைக்கிறோம் வா’ வென்று சொன்னதையும் அவன் தன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

தொடர்ந்து ஒருவாரம், இறந்தவர்களின் நினைவாகவே இருந்தான். மன அழுத்தம் அவனைச் சிந்திக்க விடவில்லை.

இறுதியில் என்ன ஆயிற்று?

அவனும் அதே பாழடைந்த கிணற்றில் தன் வாழ்க்கையை  முடித்துக் கொண்டான்.

இதை என்னவென்பது? முன் ஜென்மத்துப் பாவம் என்பதா?

அப்படிச் சொன்னால், இந்தப் பிறவியில் தன் அன்புக்கணவனுக்கு மாறாத துக்கத்தையும், மரணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்ற அந்த  இளம் மனைவிக்கு, அடுத்த ஜென்மம் எப்படி அமையும்?

நீங்களே சொல்லுங்கள்!
...............................................
ஆக்கம்: பெயரைக் குறிப்பிடாத, நமது வகுப்பறை மாணவிகளில் ஒருவர்! அவருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

113 comments:

  1. நல்லது...கிருஷ்ணன் சார்... நானும் தூரத்திலிருந்து கரம் சேர்க்கிறேன்....

    பாதை, பயணம், பயணத் தூரம் யாவையும் வகுப்பறையில் வெளியிடுங்கள் ஆதரவை கேட்டு பெறுவோம்....

    நம் நண்பர்கள் அனைவரும் தங்களது கரங்களையும் கொடுப்பார்கள்...

    நன்றி....

    ReplyDelete
  2. ////இதை என்னவென்பது? முன் ஜென்மத்துப் பாவம் என்பதா?
    பிறவியில் தன் அன்புக்கணவனுக்கு மாறாத துக்கத்தையும், மரணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்ற அந்த இளம் மனைவிக்கு, அடுத்த ஜென்மம் எப்படி அமையும்?/////
    ஆமாம், எப்படிப் பார்ப்பின் அங்கு தான் வரும்... அது தான் இருப்பவர்களுக்கும் அந்த நினைவுகளை மறக்க ஒரு ஆறுதலான விசயமும் கூட.... இந்த பூர்வ ஜென்ம கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கணக்கை தீர்க்காத நிலையில்.... புத்தியைத் துளைத்து விட்டு... உணர்ச்சிக்கு அடிமையாகி... மேலும் பல பாவங்களையும் தேடிக் கொண்டு அடுத்த ஜென்மத்திற்கு தாவி விட்டாள்.... சரி மனைவி இஅப்படி செய்து விட்டாள் அது நமது விதி என்று அந்த ஆண் மகனும் வாழ்க்கையை நகர்த்தி இருந்தால் அடுத்த ஜென்மமாவது துயரம் குறைந்தோ... இன்றியோ இருக்கலாம்.. அவரும் நடந்தவைகளுக்கு நாம் தான் காரணம் என்று இவரும் புத்தியை இழந்து உணர்ச்சிக்கு அடிமையாகி அதே தவறை செய்து விட்டார்...

    வேதத்தில் சொல்லியுள்ளதாக நான் கேள்விப் பட்டது... மனிதன் எந்த சூழ்நிலையிலும் தனது உயிரை போக்கிக் கொள்ளக் கூடாது என்பதை நாம் அறிவோம்... அது வேதம் படித்தவாளுக்கு கூட வேறு எந்த சைவ உணவும் கிடைக்காத சூழ்நிலையில் கூட அதாவது புல்பூண்டு கூட கிடைக்காத நிலையில் கூட.... மாமிசத்தை சாப்பிட்டாவது உயிர் வாழ் வேண்டும் என்பதாக.... ஆக நமது உயிரை எந்த சூழலிலும் காக்க கடைசிவரைப் போராட வேண்டும்...

    புத்தியை முன்னிறுத்த வேண்டும் ... இதைத்தான் பாரதி அறிவொன்றே தெய்வம் என்றான்...

    ReplyDelete
  3. மீண்டும் என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.என்னுடன் என் ஆக்கங்களைப் படித்து என் வாழ்க்கைப் பயணத்தில் பங்கு பற்றி ஊக்கம் அளிக்கும் அன்பு இதயங்களுக்கு மீண்டும் நன்றி.ஒரு புது வருட செயல் திட்ட உறுதியாக‌ ஏதாவது சேவைகள் செய்ய உங்க‌ள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.

    சகோதரியின் ஆக்கம் நன்றாக‌ உள்ளது.மீண்டும் சகோதரி சுந்தரிதான் இதைச் சொன்னாவரோ? தற்கொலைக்கான காரணம் மிகச் சாதாரணமாக உள்ளது. நடைமுறையிலும் கூட அற்ப காரணங்களுக்காகததான் நடைபெறுகின்றன.

    ReplyDelete
  4. ராமகிருஷ்ண பரமஹம்சர் பிற மதங்களைப் பற்றி உணர்ந்து கொள்வதறாக, அந்தந்த மதத்தவராகவே மாறி வாழ்ந்து உணர்ந்தார். அதுபோலவே நண்பர் கே.எம்.ஆர்.கே.யும் அந்த 'ஒரு ரூபாய்' மருத்துவமனையை நடத்திய காலத்தில் கிட்டத்தட்ட ஒரு ராமகிருஷ்ண மடத்துத் துறவி போல தோற்றமளித்தார். அவர் மருத்துவ நிலையத்தில் ஒரு கிறுஸ்தவ டாக்டர் வந்து மனத்திருப்தியோடு சேவை செய்ததை மறக்கமுடியாது. ஒரு இளம் பெண் டாக்டர் வந்து பணிபுரிந்த போது, அக்கம்பக்கத்து கிராமத்தார் அவரைப் பார்க்கும்போதெல்லாம் இதோ "ஒரு ரூபாய் டாக்டர்" என்று சொல்ல ஆரம்பித்ததும், அவர் பயந்து போய் இதனால் தன் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று ஓடிவிட்டார். பிறகு இதிலிருந்து விடுபட்டு மற்றவர்கள் போல சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டார் நண்பர். இரண்டாவது சம்பவத்தைப் படித்து மனம் வருந்தினேன். கேவலம் ஒரு திருமணத்துக்கு அழைத்துச் செல்லவில்லை, கணவன் பணம் சேர்ப்பதில்தான் கவனம் கொண்டிருக்கிறான் என்றால், அவன் மனத்தைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டுவர ஒரு மனைவியால் முடியாதா? இந்த சின்ன விஷயத்துக்காக இரண்டு பிள்ளைகளைக் கொன்று தானும் மடிந்த பெண் மன உறுதியில்லாதவள். அவர்களுடைய மரணத்துக்கு அந்தப் பெண்ணின் கோழைத்தனம்தான் காரணம், வேறல்ல. இதுபோன்ற மன உறுதி இல்லாத பெண் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவள்தான். ஆனால் இரண்டு கட்டுரைகளுமே மிக நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சூப்பர்!!!!!

    பெயரை கட்டுரயில் எழுத வேண்டும்...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  6. சார் வணக்கம்,
    எனது ஆக்கத்தை பதிவேற்றியதுக்கு ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  7. bhuvanar said...

    சூப்பர்!!!!!

    பெயரை கட்டுரயில் எழுத வேண்டும்...

    நன்றி

    பாண்டியன்//
    சரி ச்கோதரர்

    ReplyDelete
  8. Alasiam G said...

    ////இதை என்னவென்பது? முன் ஜென்மத்துப் பாவம் என்பதா?
    பிறவியில் தன் அன்புக்கணவனுக்கு மாறாத துக்கத்தையும், மரணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்ற அந்த இளம் மனைவிக்கு, அடுத்த ஜென்மம் எப்படி அமையும்?/////

    ஆமாம் இது முன் ஜென்மத்து பாவம்.

    ReplyDelete
  9. // kmr.krishnan said...
    சகோதரியின் ஆக்கம் நன்றாக‌ உள்ளது.மீண்டும் சகோதரி சுந்தரிதான் இதைச் சொன்னாவரோ? தற்கொலைக்கான காரணம் மிகச் சாதாரணமாக உள்ளது. நடைமுறையிலும் கூட அற்ப காரணங்களுக்காகததான் நடைபெறுகின்றன.//
    ரொம்ப நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு தங்களின் தொண்டு மனம் எனக்கு ரொம்ப பிடித்தது அதே நேரத்தில் தந்தையின் கடமையை செய்திர்கள் மிண்டும்
    தொடர்ந்து செய்யுங்கள்.

    ReplyDelete
  10. // Thanjavooraan said...

    இரண்டாவது சம்பவத்தைப் படித்து மனம் வருந்தினேன். கேவலம் ஒரு திருமணத்துக்கு அழைத்துச் செல்லவில்லை, கணவன் பணம் சேர்ப்பதில்தான் கவனம் கொண்டிருக்கிறான் என்றால், அவன் மனத்தைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டுவர ஒரு மனைவியால் முடியாதா? இந்த சின்ன விஷயத்துக்காக இரண்டு பிள்ளைகளைக் கொன்று தானும் மடிந்த பெண் மன உறுதியில்லாதவள். அவர்களுடைய மரணத்துக்கு அந்தப் பெண்ணின் கோழைத்தனம்தான் காரணம், வேறல்ல. இதுபோன்ற மன உறுதி இல்லாத பெண் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவள்தான். ஆனால் இரண்டு கட்டுரைகளுமே மிக நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்//
    ரொம்ப நன்றி தங்களின் வாழ்த்திற்கு.

    ReplyDelete
  11. அய்யா,
    இது போல தான் இன்றைய பெண்கள் பல பேர் உணர்ச்சி வயப்பட்டு, அவசரப்பட்டு,யோசித்து பார்க்காமல்,நிதானம் இழந்து தன்னையும் கெடுத்து தன்னோடு சேர்ந்தவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். பொதுவாகவே இன்றைய பெண்மணிகள் பொறுமை இழந்து காணப்படுகிறார்கள். தாங்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை அப்படியே நடத்தி காட்ட வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். ஒரு பெண்ணின் அவசர புத்தியால் ஒரு குடும்பமே சரிந்து போனதை இன்றைய பதிவில் நாம் பார்த்தோம். எனது வேண்டுகோள் எல்லாமே பெண்மணிகள் தயவு செய்து பொறுமையை கடை பிடியுங்கள்.அது நமக்கு மிக சிறப்பான வாழ்வையும் வளத்தையும் தரும்.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்
    கோயம்புத்தூர்

    ReplyDelete
  12. KMRK அவர்களின் ஆக்கம் அருமை. நமக்கே ஆண்டவன் தான் எல்லாவற்றையும் தருகிறான் நமக்கு வேறொருவர் தந்ததைத் தான் நாம் இன்னொருவருக்குத் தருகிறோம். அதனால் நாம் செய்கிறோம் என்ற நினைப்பே கூடாது. அந்த நினைவு நம்மை விட்டு அகன்றுவிட்டால் பின்னாளில் நாம் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகள் நம்மை பாதிக்காது. நாம் என்ன செய்தோம் என்பதையும் மறந்துவிடவேண்டும். மறுபடியும் மடாதிபதியாக KMRK அவர்களை காண விருப்பம்.

    ReplyDelete
  13. hello kmrk sir. you could help spread divine healing forms like and pranic healing or crystal healing. theres a gentleman that i kow from cbe and hes into free reiki healing.

    ReplyDelete
  14. his name is venkataramanan , a retired telecom engineer from coimbatore.

    ReplyDelete
  15. bhuvanar said...

    சூப்பர்!!!!!

    பெயரை கட்டுரயில் எழுத வேண்டும்...

    நன்றி

    பாண்டியன்//
    சரி ச்கோதரர்////


    நன்றி சுந்தரி அக்கா....

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா!


    முதலில் ஐயா முத்துராமக்ரிஷ்ணன் அவர்கள் தந்த கட்டுரை அருமையாக இருந்தது, அதன்பினர் வந்த கட்டுரையோ முன்னத்தின் தாக்கத்தை முற்றிலும் சிதைப்பது போல இருந்தது.

    சம்பவதீர்க்கு ஏற்ற சரியான தலைப்பு கர்மவினை என்பது இதுதானா?
    ஆனாலும் நமது வகுப்பறையில் இதனை போன்ற சம்பவங்களை இடம் பெற செய்யணுமா என்பதனை ஐயா மறு பரிசிலனை செய்யவும்

    ReplyDelete
  17. ///"நல்லது...கிருஷ்ணன் சார்... நானும் தூரத்திலிருந்து கரம் சேர்க்கிறேன்....
    பாதை, பயணம், பயணத் தூரம் யாவையும் வகுப்பறையில் வெளியிடுங்கள் ஆதரவை கேட்டு பெறுவோம்....நம் நண்பர்கள் அனைவரும் தங்களது கரங்களையும் கொடுப்பார்கள்...நன்றி...."///

    நன்றி ஹாலாஸ்யம்!உங்கள் பின்னூட்டம் நம்பிக்கை அளிக்கிறது.இறை அருள் கூடட்டும்!பார்ப்போம்!

    ReplyDelete
  18. ///"நண்பர் கே.எம்.ஆர்.கே.யும் அந்த 'ஒரு ரூபாய்' மருத்துவமனையை நடத்திய காலத்தில் கிட்டத்தட்ட ஒரு ராமகிருஷ்ண மடத்துத் துறவி போல தோற்றமளித்தார்''///.

    பின்னூட்டத்திற்கு நன்றி கோபால்ஜி!ஆம்!'துறவி போல'த்தானே தவிர துறவியாக முடியுமா? குழந்தைகள் வீட்டில் பெற்றோர் உறவினர்கள் நடந்துகொள்ளும் முறைகளைப் பார்த்துத் தானும் அது போலவே பாவனை செய்து கற்றுக் கொள்கிறது.அதுபோல நானும் பாவனைக்குத்தான் அப்படி!சுவாமி விவேகானந்தர் தன்னுடன் வைத்திருந்த ஒரு சிறிய நூல்"The imitation of Christ" நல்லவற்றை நகல் எடுத்துக் கடைப்பிடிப்பது நனமையே தரும்.நன்றி!

    ReplyDelete
  19. ///"தங்களின் தொண்டு மனம் எனக்கு ரொம்ப பிடித்தது அதே நேரத்தில்
    தந்தையின் கடமையை செய்திர்கள் மிண்டும் தொடர்ந்து செய்யுங்கள்"///

    நன்றி சகோதரி சுந்தரி!தங்க‌ளைப்போன்றோரின் ஆதரவு இருந்தால் மலையைக்கூடப் புரட்டிப் போட்டு விடலாம்.

    ReplyDelete
  20. ///"நமக்கே ஆண்டவன் தான் எல்லாவற்றையும் தருகிறான் நமக்கு வேறொருவர் தந்ததைத் தான் நாம் இன்னொருவருக்குத் தருகிறோம். அதனால் நாம் செய்கிறோம் என்ற நினைப்பே கூடாது. அந்த நினைவு நம்மை விட்டு அகன்றுவிட்டால் பின்னாளில் நாம் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகள் நம்மை பாதிக்காது. நாம் என்ன செய்தோம் என்பதையும் மறந்துவிடவேண்டும். மறுபடியும் மடாதிபதியாக KMRK அவர்களை காண விருப்பம்"///.

    தங்க‌ள் வழிகாட்டுதலுக்கு நன்றி நந்தகோபாலரே!இந்த 'நான்' இருக்கிறதே ரொம்பப் பொல்லாதது.நான்," 'நான்' என்ற உணர்வை ஒழித்துவிட்டேன்"என்று சொல்லும் போதே முதுகுப் பக்கம் நின்று கொண்டு சிரிக்கும்.சன்னியாசி ஆனால் கூட"நான் ஒரு சன்னியாசி!எனக்கு எல்லோரும் மரியாதை செய்ய வேண்டும்"என்று எண்ண வைத்துக் குழியில் தள்ளிவிடும்.அணுசக்திக்குப் பயன்படும் தோரியம், புலுடொனியம் போன்றவைகளை உபயோகத்திற்குப் பின்னர் அழிக்க வழியில்லை என்கிறார்கள்.எதிர்காலத்தில் அவற்றை அழிக்க வழிகண்டாலும் காணுவர்;ஆனால் யாராலும்"நான்" என்ற அணுகுண்டை அழிக்க முடியவே முடியாது.இந்த ஆன்மாவுக்கு இப்பிறவி போதும் என்று ஆண்டவனாக எண்ணிக் கொண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டாலே "நான்" போக முடியும்.'என‌க்கு ஓர் உடல் இருக்கிறது' என்ற எண்ணம் இருக்கும் வரை'நான்' போகாது.சுவாமி விவேகானந்தரைப் போல"I am a voice without a form" என்று சொல்ல முடியுமா?உங்கள் அறிவுரையை ஏற்று முயற்சிக்கிறேன்.இப்போது ஆரம்பித்தால் இன்னும் 100 பிறவிக்குப்பின்னர் ஒரு வேளை வெற்றி பெறலாம்.நன்றி!

    ReplyDelete
  21. சேவையில் ஊறித் திளைத்த பெரியவரின்(KMRK) கதை இந்த வகை அர்ப்பணிப்பு வழி என்று
    வாழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தை எவ்விதம் செலவழித்தார் என்று நன்கு விளக்கியது..
    எனக்கு அன்பே சிவம் படத்தில் கமலஹாசனின் பாத்திரம்தான் நினைவுக்கு வந்தது..அந்தப் படத்தைத் தவிர இப்படி ஒரு பாத்திரம் இதுவரை சித்தரிக்கப்பட்டு நான் பார்த்தது இல்லை..
    நேரிலும் இத்தகைய மனிதர்களை சந்தித்ததுமில்லை..கோவில் காரியங்களைச் சொல்லி நன்கொடை வசூலித்து விட்டு ஆண்டுக்கணக்கில் பார்க்கும் போது என் தந்தையார் கொடுத்த பணம் வரவில் வைக்கப்படாது போனது போன்ற சம்பவங்கள் பொதுக்காரியங்களில் ஈடுபடுவோரின் நாணயத்தை பொதுவாகவே சந்தேக மனப்பான்மைக்குள்ளாக்கியது..
    KMRK போன்றோர் இது போன்ற விஷயங்களை தன்னடக்கம் கருதி வெளியிடாது விட்டுவிட்டால் இப்படி எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் தன் சுயதேவைப் பணிகளை விட்டுவிட்டு யாரென்றே முன்பின் தெரியாதோருக்கு செலவிடும் நேரம், தொகை சரியான வழிக்குப் போய்ச் சேரும் சாத்தியமே இல்லை என்று நினைக்கும் என் போன்றோருக்கு ஒரு மாற்று சிந்தனையை, தாக்கத்தை ஏற்படுத்தும்..ஏற்படுத்தியிருக்கிறது...
    நிலையானதாகச் செய்யப்படவேண்டும் என்று கனவுகள் விரியுமானால் சொந்தமாக டிரஸ்ட் ரெஜிஸ்ற்றேஷன், சொந்த அலுவலகம், நிர்வாக ஊழியர்கள், தளவாடச் சாமான்கள் என்று செலவுக் கணக்குகளும் விரியும்....இதற்குத் தோதாக வசூல் நடந்தாக வேண்டும்..சேவைப்பணிகள் யாருக்குச் செய்யவேண்டும், எதற்கு, எப்போது,எப்படி செய்யவேண்டும் என்று சரியாகத் திட்டமிடும் குழு அமைய வேண்டும்..நடந்தால் நல்லதே..நம்பிக்கையுடன் பெரியவர் தன் முயற்சிகளைத் தொடர்ந்து திட்டங்களைப் பட்டியலிட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை பொதுப் பார்வைக்கு வைப்பாரேயானால் பலரின் ஆதரவுக்கரங்களும் நீளும் வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன்..

    ReplyDelete
  22. ///"BAlu said...
    hello kmrk sir. you could help spread divine healing forms like and pranic healing or crystal healing."///

    Thank you Mr.Balu for your good suggestion.I had some heaaling powers earlier. That is why the dispensary run ealier was very succeessful.The poor people would want me only to distribute the medicines.By my touching the medicines,they had belief that my heaaling powers only gave the relief;and not the medicines.

    Pranic heaaling, reiki all that need deep meditation. It is doubtful whether I get that amount of concentration,leave alone meditation.

    ReplyDelete
  23. சுந்தரி அவர்கள் எழுதியிருந்த கதை அவரின் எழுதும் ஆர்வத்துக்கும் அதிலே அவர் தொடர்ந்து சீர் பெற்று வருவதும் படிக்கும் போது புலனாகிறது..

    நடக்கக் கூடாதது, முட்டாள் தனமானது, கோழைத்தனமானது என்றெல்லாம் விமர்சிக்கத்தகுதியான சம்பவம்தான்..

    தகுதியான காரணங்கள் இருந்தாலுமே தற்கொலை ஒருபோதும் சரியான தீர்வல்ல எனும்போது இப்படிக் காரணத்துக்கு மெத்தப் படித்தவர்களும் கூட சில சமயங்களில் உணர்ச்சி வேகத்துக்கு ஆட்பட்டு இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் அவர்களின் நேரம் சரியில்லையோ என்றெண்ணி ஜாதகம் தொடர்பான எட்டாமிடப் பக்கங்களை நோக்கி வாசகர்களை இழுக்கும்..

    தவறான கோணத்திலே சிந்தனையைத் தூண்டிவிட்டால் உலக இயக்கம் முற்று முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு கெட்ட காரியங்கள் நடந்தேறும் வாய்ப்பு உள்ளதால்

    நல்ல இனிமையான எண்ணங்கள் மட்டுமே மனதில் சூழ இடம் கொடுப்போம்..

    ReplyDelete
  24. ///"kannan said...வணக்கம் ஐயா!முதலில் ஐயா முத்துராமக்ரிஷ்ணன் அவர்கள் தந்த கட்டுரை அருமையாக இருந்தது, அதன்பினர் வந்த கட்டுரையோ
    முன்னத்தின் தாக்கத்தை முற்றிலும் சிதைப்பது போல இருந்தது///

    பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன் சார்!நீங்கள் இரண்டு கட்டுரைகளையும்
    எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
    "சிதைப்பது" போல எதுவும் எழுதவில்லை என்று நானாக எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.உங்கள் கோணம் என்ன என்பது அறிய ஆவல். இங்கே சொல்லக் கூடிய அளவில் இருந்தால் சொல்லுங்கள்.ஏதாவது மடத்தைப் பற்றியோ சன்னியாசத்தைப் பற்றியோ ஆன விமர்சனமாக இருந்தால் இங்கே வேண்டாம்.என் மின் அஞ்சல் முகவரிக்கு
    எழுதுங்கள்.நன்றி!kmrk1949@gmail.com

    ReplyDelete
  25. KMRK பல்கலைக்கழகத்தின் சீனியர் ஸ்டுடென்ட் (அதான் உங்க பெரிய பொண்ணு) போட்டோவுக்குப்
    போஸ் கொடுக்காமல்
    எதேச்சையாக வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் அழகோ அழகு..

    ReplyDelete
  26. ///"இதனை போன்ற சம்பவங்களை இடம் பெற செய்யணுமா என்பதனை ஐயா மறு பரிசிலனை"///
    ஐயா அனுமதியுடன் தான் என் வாழ்க்கைக் கதையின் சம்பவங்களை எழுதி வருகிறேன். ஒவ்வொரு முறை கட்டுரையை அனுப்பும் போதும், 'தகுதியிருப்பின் வெளியிடவும்' என்று ஐயாவைக்கேட்டுக் கொள்கிறேன்.என் ஓர் ஆக்கத்தைத் தகுந்த காரணத்தைச் சொல்லி ஐயா வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.தங்கள் ஆலோசனையை ஏற்று ஐயா என் ஆக்கத்தை
    வெளியிடவில்லை என்றாலும் மகிழ்ச்சி அடைவேன்.ஏனெனில் சொன்னதை விட சொல்லாமல் விட்டதிலேயே நிறைய சுவாரஸ்யம் உள்ளது.அவற்றை மனத்துக்குள் அசைபோட்டு சொச்ச காலத்தைக் கடத்திவிட்டு அடுத்த பிறவிக்குத் தயாரகி விடுவேன்.

    ReplyDelete
  27. ///"சேவைப்பணிகள் யாருக்குச் செய்யவேண்டும், எதற்கு, /////////எப்போது,எப்படி செய்யவேண்டும் என்று சரியாகத் திட்டமிடும் குழு அமைய வேண்டும்..நடந்தால் நல்லதே..நம்பிக்கையுடன் பெரியவர் தன் முயற்சிகளைத் தொடர்ந்து திட்டங்களைப் பட்டியலிட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை பொதுப் பார்வைக்கு வைப்பாரேயானால் பலரின் ஆதரவுக்கரங்களும் நீளும் வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன்.."///

    நம்பிக்கையூட்டும் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி மைனர்வாள்!அதிக சம்பளம் அளிக்க வேண்டிய வேலையாட்கள் இல்லாத, அமைப்புச் செலவுகள் மிகக்
    குறைவாக இருக்கக் கூடிய,பயன், பயனாளிகளுக்கு இடைத்தரகர் இல்லாமல்
    நேரடியாகச் சென்று அடையும் படிக்குச் செய்ய வேண்டும்." தினம் ஒரு மீனை தானமாகக் கொடுப்பதை விடவும், மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது அதிக‌ நன்மை அளிக்கும்" என்ற கொள்கை எனக்கு ஏற்புடையது.இப்போது அன்னதானம் செய்வது எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.தனிப்பட்ட முறையில் பலர் கிளம்பிச் செய்கிறார்கள்.நாமும் அதைச் செய்வது திரும்பச் செய்வது போலவே அமையும்.
    ஏதாவது பயிற்சி அளிக்கும் நிலையம், அல்லது நன்கு படிக்கும் பிள்ளைகளுக்குகல்வி உதவி,தாய் தந்தை அற்ற, ஏழைப்பிள்ளைகளுக்கான விடுதி,பள்ளி போன்று துவங்கலாம்.உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

    மன நோயாளிகளை வைத்துப் பராமரிப்பது, அன்பு செலுத்தி சிகிச்சை அளிப்பது
    எனக்குப் பிடித்த ஒரு சேவை!வளர்ந்த மனநோய் உள்ள பெண்களை பராமரிக்கும் அமைப்புக்கள் மிகக் குறைவு.வயதுக்கு வந்த பெண் என்றாலே எல்லா இடத்திலும் நிராகரிப்புதான். நாம் அந்த 'ரிஸ்க்' எடுக்கலாமா?

    ReplyDelete
  28. மாமா, உங்களுக்குள்ள ஒரு தேடல் சின்ன வயதிலேருந்தே இருந்திருக்குன்னு தெரியறது.

    வாழ்க உங்க சேவை மனப்பான்மை! ஐடியாஸ் எங்கிட்ட நிறைய இருக்கு. பயங்கரமா ஏதேதோ யோசிச்சு என்னோட சிஸ்டம்ல எனக்குப்பிடிச்ச / நான் செய்ய விரும்புவதை future plans ங்கற பேர்ல save பண்ணிருக்கேன். இன்னும் பிசினஸ் ஆரம்பிக்கற ஐடியாவும் கூட. ஆனா என்னோட / உங்களோட wavelength வேற வேறன்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேணும்னா மெயில்ல அனுப்பறேன். அப்படி இல்லைன்னாலும் நீங்க முடிவு செய்யும் பணிக்கு என்னோட ஆதரவு என்னால் முடிந்த வரையில் கண்டிப்பாக இருக்கும்.

    ReplyDelete
  29. Dear KMR Sir,

    Thanks for your wonderful article! I am really blessed to meet you in person! You are so amazing!

    -Shankar

    ReplyDelete
  30. சுந்தரி, இது என்ன நிஜமாக நடந்ததா இல்லை கதையா? நிஜமாக இருந்தால் அந்தப் பெண் / ஆண் எடுத்த முடிவுகள் படு அபத்தம்.

    எனக்கென்னவோ இந்த சிறிய பிரச்சனைக்காக அந்தப் பெண் இந்த முடிவை எடுத்திருப்பார் எனத்தோன்றவில்லை. நீண்ட நாட்களாக அடி மனதில் சில/பல காரணங்களுக்காக படிந்திருந்த வெறுப்பு இந்த ஒரு நிகழ்ச்சியின் போது வெடித்துக் கிளம்பி தற்கொலைக்கு அவளைத் தூண்டியிருக்ககூடும். அந்த ஆண் காரணமாக வெளியுலகிற்கு இதைக் கூறியிருக்கலாம். பின்னர் குற்ற உணர்ச்சியில் தானும் அந்த முடிவை எடுத்திருக்கலாம். ஒன்றுமறியாக் குழந்தைகளைக்கொன்றதும் எந்த விதத்திலும் ஏற்க முடியாதது. எனக்கு இதைப்படித்தவுடன் சிவாஜி நடித்த 'முதல் தேதி' படம்தான் நினைவு வந்தது. அந்தப் படத்தின் ட்விஸ்ட் அருமையா இருக்கும்.

    ReplyDelete
  31. அய்யா அவர்களுக்கு வணக்கம்

    நான் பொதுவாகத்தான் சொல்லியிருந்தேன். தனிப்பட்ட முறையில் என் அனுபவத்திலிருந்து நான் உணர்ந்ததையே சொன்னேன். ஒரு சீடன் குருவிடம் கேட்டான். "குருவே எனக்கு எப்போது ஞானம் கிட்டும் ' என்று. அதற்கு அந்த குரு சொன்னாராம் ' நான் போனால் கிட்டும் ' என்று. உடனே சீடன் கேட்டானாம் 'குருவே நீங்கள் எப்போது போவீர்கள் என்று. அதற்கு அர்த்தம் நான் என்ற அகந்தை நம்மை விட்டு அகன்றால் ஞானம் கைவரப்பெறலாம் என்பதே. நிற்க.

    அன்னதானம் நீங்கள் குறிப்பிட்டபடி எல்லோரும் செய்வதே. நாம் வேண்டுமானால் அநாதை ஆசிரமங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் ஏழை பெண்ணின் திருமணத்திற்கும் உதவலாம். குளிர் காலத்தில் கம்பளிகள் வெய்யில் காலத்தில் மின் விசிறி முடிந்த அளவு புத்தாடைகள் ஆரோக்கியமான குடி நீர் காலணிகள் தொலைக்காட்சி பெட்டிகள் குளிர் சாதன பெட்டிகள் போன்றவற்றைகளை தரலாம்.

    மற்றபடி, தலைவர் தங்களின் உத்தரவிற்கும் தளபதி மாவீரரின் ஆலோசனைக்கும் காத்திருக்கும்,

    நந்தகோபால்

    ReplyDelete
  32. எது எப்படி இருந்தாலும் தற்கொலை எந்தப் பிரச்சனைக்குமே சரியான முடிவு கிடையாது. வாழ்க்கையில் எவ்வளவோ மன உளைச்சலுக்கு நான் ஆளானபோதும் / பிரச்சனைகளைச் சந்தித்தபோதும் நம்பிக்கையை என்றுமே இழந்ததில்லை. எனது தன்னம்பிக்கை ஜீரோ லெவலுக்குப் போன காலத்தில் கூட என்னை நானே சுதாரித்துக்கொண்டு மீண்டு வந்திருக்கிறேன்.

    என்னோட குணம் சின்ன வயசுலேருந்தே எந்த விஷயத்தையும் பாதில பயந்து விடறது பிடிக்காது (அது நல்ல விஷயமா இருந்தாலும் சரி, பிரச்சனையா இருந்தாலும் சரி). சாதகமோ / பாதகமோ எதாவது முடிவு கிடைக்கற வரையில் அதை ஒரு கை பார்த்து விடுவேன். இது ஒவ்வொருவரின் மனவலிமையைப் பொறுத்ததுன்னு சொல்லலாம். இங்கதான் நம்ம ஆள் சந்திரன் வர்றாரு. (நான் கிரகத்தைச் சொன்னேன். நீங்க வேற எதாவது யோசிக்காதீங்க). என்னதான் நம்ம ஆளு ராகு கூட இருந்தாலும் சுய பரல் 6 ங்கறதால இது சாத்தியப்பட்டதுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. பாண்டியன், என்ன ஒரு கவிதையோட எழுதறதை நிறுத்திட்டீங்க? தொடர்ந்து எழுதலாமில்ல?

    ReplyDelete
  34. "சிதைப்பது" போல எதுவும் எழுதவில்லை என்று நானாக எண்ணிக் கொண்டு இருக்கிறேன்//

    கண்ணன், அதன்பின் வந்த கட்டுரையில்னு தெளிவா சொல்லிருக்கரதைப் பார்த்தால் அது சுந்தரியின் கதையைப் பத்தின கமெண்டுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  35. வளர்ந்த மனநோய் உள்ள பெண்களை பராமரிக்கும் அமைப்புக்கள் மிகக் குறைவு.வயதுக்கு வந்த பெண் என்றாலே எல்லா இடத்திலும் நிராகரிப்புதான். நாம் அந்த 'ரிஸ்க்' எடுக்கலாமா?//

    நீங்க என்கிட்டே இதைக் கேக்கலைன்னாலும் பதில் சொல்றேன். இது கண்டிப்பாக நல்ல விஷயம்தான்.

    நான் கும்பகோணத்தில் படிக்கும்போது ஒரு அம்மா / பெண் 2 பேரும் மனநிலை சரியில்லாதவர்கள். அந்த பகுதியில் இருந்த நிறைய பேர் அவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டு சாப்பிட மட்டும் ஏதாவது தருவார்கள். பார்க்கவே பாவமாக இருக்கும். என் அம்மாவும் அவ்வப்போது சாப்பாடு தருவார்கள் (எங்கள் வீட்டில் எதுவும் வேலை வாங்க மாட்டோம்). அதில் அந்தப் பெண் நல்ல சிவந்த நிறத்துடன் பார்க்க அழகாக இருப்பாள். பார்த்தால் மனநிலை தவறியவர் போல் தெரியாது. அவர்கள் மட்டும் தனியாக ஒரு வீட்டில் இருந்தனர். எதனால் அவர்கள் இப்படி ஆனார்கள் என்று தெரியாது.

    ReplyDelete
  36. திடீரென்று ஒரு நாள் அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிய வந்தது. யார் காரணம் என்பதும் இன்று வரை தெரியாது. ஆனால் அந்தப் பகுதியில் இருந்த அனைத்து ஆண்களுமே இந்த விஷயத்தை வைத்து ஒருத்தரை ஒருத்தர் சீண்டிய கொடுமையும் நடந்தது. அந்தப் பெண் அதை உணரும் நிலையில் கூட இல்லை. பிரசவ சமயத்தில் யாரோ பரிதாபப்பட்டு அரசாங்க ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். ஆனால் குழந்தை பிறக்கும் முன் அந்தப் பெண் நல்ல தெளிவாக பேச / நடந்து கொள்ள ஆரம்பித்தாள். அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அதை ஒரு தம்பதிகள் வாங்கிச் சென்று விட்டனர். அதன்பின் அந்தப் பெண் பழைய மாதிரி ஆகிவிட்டாள். இது ஒரு எ.கா. தான்.

    ஆனா அவர்களைப் பராமரிக்கறதுக்கு சேவை மனப்பான்மை / கருணை / பொறுமை இருக்கிற ஆட்கள் இன்றைய தேதியில் கிடைப்பது கடினம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  37. ஐயா!

    பாசமலர்களின் புரிந்து கொள்ளும் மன ஒற்றுமையை பார்த்தீர்களா ஐயா!

    அக்கா உமா கூறியது தான் மிகவும் சரி.

    இவர்களின் ஆககம்கள் மிகவும் அருமை. ஆனால், முன்னது மோட்சதீர்க்கான அல்லது ஆத்ம முன்னேற்றதீர்க்கும் ஒரு வழி
    காட்டியாக உள்ளது ஆனால் பின்னதோ அவ நம்பிக்கை அல்லது முன்னதில் உள்ள ஒரு புனித தன்மையை மறைக்கும் அல்லது கெடுக்கும் வகையில் உள்ளது என்பது எமது கருத்து .

    மருந்துக்கு கூட நமக்கு தெரிந்து கெட்டதை அல்லது விசத்தை ஒப்பிடுவது தவறு ஆகும்.

    >>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<

    கண்ணன், அதன்பின் வந்த கட்டுரையில்னு தெளிவா சொல்லிருக்கரதைப் பார்த்தால் அது சுந்தரியின் கதையைப் பத்தின கமெண்டுன்னு நினைக்கிறேன்.

    Monday, January 03, 2011 11:34:00 AM

    --

    ReplyDelete
  38. /////////////
    G.Nandagopal said... ஏழை பெண்ணின் திருமணத்திற்கும் உதவலாம். குளிர் காலத்தில் கம்பளிகள் வெய்யில் காலத்தில் மின் விசிறி முடிந்த அளவு புத்தாடைகள் ஆரோக்கியமான குடி நீர் காலணிகள் தொலைக்காட்சி பெட்டிகள் குளிர் சாதன பெட்டிகள் போன்றவற்றைகளை தரலாம். ///////////

    மாம்ஸ்..படைப்பாளிகள் சங்கப் பொதுத்தேர்தல்ன்னு நான் சொன்னதை நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டு சட்டசபைக்கான தேர்தல்ன்னு நினைச்சுட்டீங்கன்னு தெளிவாத் தெரியுது..கோட்டையைப் புடிச்சு அரசியல் பண்றவுங்களே இன்னும் சொன்னபடி எல்லோருக்குமே டிவி தந்து முடிக்கலைன்னு எங்க ஊருலே ஒரே தகராறு..
    இதுலே இவுக டிவி, பிரிட்ஜ், எல்லாம் தருவாங்களாமே..ஏன் வாஷிங் மெஷினை விட்டுட்டீங்க..

    ReplyDelete
  39. /////////////
    ////G.Nandagopal said...
    தொலைக்காட்சி பெட்டிகள்... குளிர் சாதன பெட்டிகள்..../////////////

    ஒ..நீங்க அட்டைபெட்டிகள் பத்தி சொல்றீங்களா?ஆமாமா..வீடு இல்லாதவுங்க ரோட்டோரம் விரிச்சுப் போட்டு படுத்துக்க வசதியா இருக்கும்..
    (கிண்டலுக்காக சொன்னேன்..அடுத்த கமேன்ட்டிலே சீரியஸ் ஐடியா சொல்றேன்)

    ReplyDelete
  40. //அப்படிச் சொன்னால், இந்தப் பிறவியில் தன் அன்புக்கணவனுக்கு மாறாத துக்கத்தையும், மரணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்ற அந்த இளம் மனைவிக்கு, அடுத்த ஜென்மம் எப்படி அமையும்?

    நீங்களே சொல்லுங்கள்!//

    நீங்கள் தான் சொல்லனும் ......
    ஒருவேளை இந்தக் கணவன் சென்ற பிறவியில்... அந்தப் பெண் கணவனாக இருக்க, இவர் மனைவியாக இருக்க இதே போல் நடத்திக் காட்டி இருந்தால்.......விதி (இத்தோடு முடிந்தது) தொடராது என்பீர்களோ....இடையில் வந்து போன குழந்தைகள் ?

    ReplyDelete
  41. // kannan said...

    சம்பவதீர்க்கு ஏற்ற சரியான தலைப்பு கர்மவினை என்பது இதுதானா?
    ஆனாலும் நமது வகுப்பறையில் இதனை போன்ற சம்பவங்களை இடம் பெற செய்யணுமா என்பதனை ஐயா மறு பரிசிலனை செய்யவும்//

    கண்ணா மன்னித்துவிடு இது உண்மை சம்புவம் வாத்தியார் பரிசிலணை செய்ய வேண்டாம் இனிமே நான் எழுத மாட்டேன் என்று உறுதியளிகிறேன்

    ReplyDelete
  42. இல்லையில்லை மைனர்வாள் (ல்). நான் சில அநாதை ஆசிரமங்களுக்கும் முதியோர் விடுதிகளுக்கும் சென்றிருந்தபோது அறிந்தவை தான் நான் சொல்லியிருந்தது. அடைக்கலம் கொடுத்தவர்களினால் குளிர் காலத்திற்கு வேண்டிய கம்பளிகள் வெய்யில் காலத்திலேயே மின்விசிறிகள் அல்லது மின்விசிறிகள் இருந்தாலும் பழுதாய் இருந்து அதை பழுதுபார்க்க வசதி இல்லாமை மின் கட்டணம் கட்டாததால் மின் கட்டண இணைப்பு துண்டிப்பு போன்ற விஷயங்களில் நம் கவனத்தைச் செலுத்தலாம் என்பதே என் அபிப்பிராயம். மேலும் அவர்களுக்கு என்று வைத்திருக்கும் உணவுப் பண்டங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வசதி பொழுது போக்கிற்கு என்று தொலைக்காட்சி போன்றவற்றிக்காக இவற்றை நாம் வழங்கலாமே என்றுதான் யோசித்தேன். மற்றபடி இந்த விசயத்தில் குருவின் உத்தரவும் அவரின் மிகுந்த நம்பிக்கைக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான தளபதியாரின் ஆலோசனையும் தான் பெருமளவில் எடுபடும் என்று எனக்குத் தெரியாதா என்ன.

    ReplyDelete
  43. எதெற்கெடுத்தாலும் ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதில் ஒரு பதவியையும் பெற்றுவிட வேண்டும் என்கின்ற மைனர்வாள் அவர்களின் முனைப்பும் அதற்கு அவர் குருவின் ஆசிர்வாதமும் கண்டனத்திற்குறியதே .

    ReplyDelete
  44. ஐயா!

    ஆமாம் "கண்ணா!" மன்னித்து விடு,

    எமது அருமை சகோதரி தவறு என்று தெரிந்தே தவறு செய்து இருந்தால் மாத்திரம் மன்னித்து விடு.

    அது அல்லாது சமுகத்தில் நடக்கும் தவறை வெளியில் கொண்டு வரனும் என்ற நல்ல நோக்கத்துடன் கூறி இருப்பின் அதற்க்கு உரிய

    புண்ணியத்தை சகோதரிக்கு தந்து விடு "கண்ணா!"தந்து விடு எமது "மாய கண்ணா!

    >>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<,

    sundari has left a new comment on the post "எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் பாருங்கள்!":


    கண்ணா மன்னித்துவிடு இது உண்மை சம்புவம் வாத்தியார் பரிசிலணை செய்ய வேண்டாம் இனிமே நான் எழுத மாட்டேன் என்று உறுதியளிகிறேன்

    ReplyDelete
  45. Uma said...
    பாண்டியன், என்ன ஒரு கவிதையோட எழுதறதை நிறுத்திட்டீங்க? தொடர்ந்து எழுதலாமில்ல?/////

    அக்கா அடுத்த கவிதை தாய்மையை பற்றி.... அனைவரையும் அழ வைக்காமல் விடுறது இல்ல....

    ReplyDelete
  46. கண்ணா மன்னித்துவிடு இது உண்மை சம்புவம் வாத்தியார் பரிசிலணை செய்ய வேண்டாம் இனிமே நான் எழுத மாட்டேன் என்று உறுதியளிகிறேன்////

    சுந்தரி அக்கா எழுதுறத நிறுத்ததீர்கள் ....

    நண்பர் கண்ணா.... தாய் குளங்களை மன்னித்து விடுங்கள்...பொங்கி ஏல வேண்டாம்...

    ReplyDelete
  47. ///////////// G.Nandagopal said... எதெற்கெடுத்தாலும் ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதில் ஒரு பதவியையும் பெற்றுவிட வேண்டும் என்கின்ற மைனர்வாள் அவர்களின் முனைப்பும் அதற்கு அவர் குருவின் ஆசிர்வாதமும் கண்டனத்திற்குறியதே.\\\\\\\\\\\\\\\\\\\
    படைப்பாளின்னு வந்துட்டாலே இப்பிடி எதிர் கட்சித் துடைப்பாளிகள் வளரத்தான் செய்வாங்க..ஆனா உங்களுக்கு இது செட் ஆகாது..
    நீங்க same சைடு goal ட்ரை பண்றீங்கோ மாமூ..உங்க கருத்தை வாபஸ் வாங்கிடுங்க..

    ReplyDelete
  48. அக்கா அடுத்த கவிதை தாய்மையை பற்றி.... அனைவரையும் அழ வைக்காமல் விடுறது இல்ல....//

    பாண்டியன், அவ்......... நான் இப்பயே அழறேன். விட்டுடுங்க.

    (சும்மா தமாஷ்தான், நீங்க எழுதுங்க)

    ReplyDelete
  49. தாய் குளங்களை மன்னித்து விடுங்கள்...//

    வெறும் தாய் குளங்களை மன்னித்தால் போதுமா? தாய் ஏரிகள் / ஆறுகள் / கடல்களை யார் மன்னிப்பது?

    ReplyDelete
  50. /////////////
    G.Nandagopal said...தொலைக்காட்சி பெட்டிகள்... குளிர் சாதன பெட்டிகள்..../////////////
    மாம்ஸ் சீரியசாதான் சொல்லிருக்கீங்கன்னு புரியுது..நான் சீரியஸ் கமென்ட் சொல்றேன்னு சொன்னேன்..அது இதுதான்..இண்டர்நஷனல் நெட்வொர்க் நம்ம அமைப்புக்கு பலமா இருக்குறதாலே எதாவுது exim ரிலேடேட் பிசினஸ் ட்ரை பண்ணலாம்..கிளியர் டைட்டில்
    கிடைக்கும்..எதுனா பெரிசா செட் ஆனா profit லேருந்து some percentage சோசியல் அக்டிவிடீஸ்க்கு fund transfer dedikate பண்ணலாம்..இதுதான் feasible கான்செப்ட் டாப் படுது..
    ஏற்கனவே well established நிர்வாகங்கள் கையாளும் முறையும் இதுதான்..
    சேவைக் காரியங்களுக்கு செலவு பண்றதுக்கு கூடுற volunteers விட இன்வெஸ்ட்மென்ட்க்கு ரிடர்ன் மேலே உள்ள இண்டரெஸ்ட்(விருப்பம்) அடிப்படையில் கூடுற நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்..வழக்கம் போலே யார் யாரு office bearers ங்குற இடம் எந்த முறையிலே தீர்மானம் பண்றது..? முதல்லே இந்த ஐடியா எப்பிடி இருக்கு?

    ReplyDelete
  51. Uma said...
    தாய் குளங்களை மன்னித்து விடுங்கள்...//

    வெறும் தாய் குளங்களை மன்னித்தால் போதுமா? தாய் ஏரிகள் / ஆறுகள் / கடல்களை யார் மன்னிப்பது?///


    English Medium-ல் படித்ததால் தாய் மொழியில் புலமை இல்லை...மன்னித்து விடுங்கள் அக்கா...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  52. ///"பயங்கரமா ஏதேதோ யோசிச்சு என்னோட சிஸ்டம்ல எனக்குப்பிடிச்ச / நான்செய்ய விரும்புவதை future plans ங்கற பேர்ல save பண்ணிருக்கேன்"///

    நானே கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன்.நீங்கள் வேறு பயங்கர விஷயம் எல்லாம் யோசிக்கிறீஙன்னு சொல்றீங்க.மறுபடியும் பூத் பங்களா,ஒய்ஜாப்பலகை,
    ஆவி உலகம் என்று எதுவும் இல்லையே!? எதுவாக‌ இருந்தாலும்
    சொல்லுங்க.தைரியமா படிக்கிறேன்.ஜி3 அலைவரிசை விஷயமெல்லம் படித்து அனுபவம் இருப்பதால், உங்கள் அலைவரிசை எனக்குப் பிடிபடும் என்றேநினைக்கிறேன்.பின்னூட்டத்திற்கு நன்றி உமா!

    ReplyDelete
  53. ///"Dear KMR Sir,Thanks for your wonderful article! I am really blessed to meet you in person! You are so amazing!-Shankar"///

    Thank you Shankar for your kind words.I also enjoyed your company when we met.

    ReplyDelete
  54. பாண்டியன், நான் சும்மா ஜாலியாதான் கிண்டல் பண்ணினேன். நீங்க என்ன இவ்ளோ சீரியஸா எடுத்துக்கிட்டு?

    ReplyDelete
  55. ///"KMRK பல்கலைக்கழகத்தின் சீனியர் ஸ்டுடென்ட் (அதான் உங்க பெரிய பொண்ணு) போட்டோவுக்குப் போஸ் கொடுக்காமல் எதேச்சையாக வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் அழகோ அழகு.."///

    எங்கள் பகுதியில் பள்ளி நிறுவ ஊர்ப் பெருந் தனக்காரர்கள்,சான்றோர்கள் ஆகியோரைக் கூட்டி ஓடும்பிள்ளை பணி செய்தேன்.பள்ளி துவங்கியவுடன்
    என் மகளை முதல் மாணவியாகச் சேர்த்தேன்.தமிழ் வழிக் கல்வி என்பதால் மனைவி, உறவினர் அனைவரும் எதிர்ப்பு.அந்தப் பள்ளியின் முதல் மாணவிதான் படத்தில் காணும் என் மூத்த பெண். இன்று பாரத ஸ்டேட் வ்ங்கியின் ஊழியர்.
    மடியில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பெண் யு எஸ் பாஸ்டனில் மென்பொருள்
    பொறியாளர்.நன்றி மைனர்!

    ReplyDelete
  56. எதுவாக‌ இருந்தாலும்
    சொல்லுங்க.தைரியமா படிக்கிறேன்//

    உங்களுக்கு மெயில்ல அனுப்பறேன், பார்த்துட்டு சொல்லுங்கோ.

    ReplyDelete
  57. நானே கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன்.நீங்கள் வேறு பயங்கர விஷயம் எல்லாம் யோசிக்கிறீஙன்னு சொல்றீங்க.மறுபடியும் பூத் பங்களா,ஒய்ஜாப்பலகை,
    ஆவி உலகம் என்று எதுவும் இல்லையே!? எதுவாக‌ இருந்தாலும்
    சொல்லுங்க.தைரியமா படிக்கிறேன்.ஜி3 அலைவரிசை விஷயமெல்லம் படித்து அனுபவம் இருப்பதால், உங்கள் அலைவரிசை எனக்குப் பிடிபடும் என்றேநினைக்கிறேன்.////////

    KMRK சார்,

    ஆக இதுவிசயமா டெல்லிக்கார அம்மா சொன்னதெல்லாம் வெறும் கதையிலேதான் போய் முடியும்ன்னு எப்படி இவ்வளவு கரெக்ட் ஆ
    ஜட்ஜ் பண்ணினேள் ....இதுலே நீங்க பயந்த சுபாவம் உள்ளவன் வேற நீங்களே சொல்லிக்கறேள்... இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் தைரியம் எனக்கு எல்லாம் வராது சார் ...

    ReplyDelete
  58. "அந்த குரு சொன்னாராம் ' நான் போனால் கிட்டும் ' என்று."

    நமக்கெல்லாம் 'நான்"போவது மிகவும் கடினம். வித்யா நான், அவித்யா நான் என்று இர‌ண்டு உள்ளன.நான் இறைத் தொண்டன்,நான் பக்தன், நான் சிஷ்யன்,போன்ற‌வை வித்யா நான்.நான் பணக்காரன், நான் அதிகாரி, நான் அந்தஸ்து உள்ளவன் என்பது எல்லாம் அவித்யா நான். என்னால் நானை விட முடியவில்லை. எனவே வித்யா நானை வைத்துக்கொள்கிறேன் அனுமதி
    வழங்குங்கள், நந்த கோபால் !

    ReplyDelete
  59. எல்லார்த்தையும் பாத்திட்டு கடைசியில் என்னால் இதுதான் சொல்லமுடியும் மைனர்வாள்...

    'எப்படி இருந்தவன்
    இப்படி ஆயிட்டேன் பாருங்கள்'

    ReplyDelete
  60. ///"மற்றபடி, தலைவர் தங்களின் உத்தரவிற்கும் தளபதி மாவீரரின் ஆலோசனைக்கும் காத்திருக்கும்///

    இதுக்குப் பேர்தான் கழுவுற மீனுல நழுவற மீன்! இன்னும் கொஞ்சம் யோசித்து நல்ல யோசனைகளைக்கொண்டு வாருங்கள் நந்தகோபால்.

    ReplyDelete
  61. இண்டர்நஷனல் நெட்வொர்க் நம்ம அமைப்புக்கு பலமா இருக்குறதாலே எதாவுது exim ரிலேடேட் பிசினஸ் ட்ரை பண்ணலாம்.//////
    ஐயோ மாப்பு,

    இதைத்தானே நான் வந்தது முதல் கீச் கீச்சென்று கத்தி சொல்லிட்டு இருந்தேன். அப்பெல்லாம் அதைப்பத்தி ஒண்ணும் கண்டுக்காமே விட்டிட்டு எங்கெங்கோ போயிட்டு இப்ப வந்து EXIM பண்ணலாமான்னு கேட்குறீங்க. நீங்களே ஆபீஸ் BEARERS யார் யார்னு ஒரு ஐடியா குடுங்க. நான் அதைபாத்திட்டு ஒரு யோசனை சொல்றேன். பிற்பாடு FINALISE பண்ணிடலாம்.

    ReplyDelete
  62. ////kmr.krishnan said...
    ஜி3 அலைவரிசை விஷயமெல்லம் படித்து அனுபவம் இருப்பதால், உங்கள் அலைவரிசை எனக்குப் பிடிபடும் என்றேநினைக்கிறேன்.\\\\
    ஆஹா.. செமை டாபிக்கை கோர்த்து டச் பண்ணினீங்க KMRK சார்..
    2G ,3G லேயே இந்தப் போடு போடுற நம்ம ஆளுங்க 4G லே என்னென்னெல்லாம் பண்ணுவாங்களோ?
    உழைக்கும் கரங்கள் துடிக்கும் கரங்களாவே இருந்து வேடிக்கை பார்க்க திருடி ஒளிக்கும் கரங்கள் மட்டுமே கரன்சியில் ஜொலிக்குதே..

    ReplyDelete
  63. English Medium-ல் படித்ததால் தாய் மொழியில் புலமை இல்லை...மன்னித்து விடுங்கள் அக்கா...////////

    அக்கா அவர்கள் மன்னிப்பது இருக்கட்டும் . முதலில் KMRK அவர்களை சமாதானப்படுத்துங்கள். ஆங்கில மீடியம் என்று வேறு சொல்கிறீர்கள் .சிலசமயம் அதிலேயே பின்னூட்டமிடுகிறீர்கள்.. என்ன பாண்டியன் சார் நலமா ..எப்படி இருக்கிறீர்கள் ..எங்கே போன் கூட பண்ணவில்லை..

    ReplyDelete
  64. ///"வாழ்க்கையில் எவ்வளவோ மன உளைச்சலுக்கு நான் ஆளானபோதும்//"

    ராகு+சந்திரன் என்றால் அதுபோலத்தான் உமாஜி!

    ReplyDelete
  65. ///"திடீரென்று ஒரு நாள் அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிய வந்தது."///‍‍== உமாஜி
    கிட்டத்தட்ட எல்லோரிட்மும் இப்படிப்பட்ட ஒரு க‌தையாவது
    இருக்கும். இதைப் போன்ற‌ காரணங்களால்தான் பெண் மன நோயாளிகளுக்கு நிறுவனங்கள் மிகக் குறைவு.மிகவும் கவனம் எடுத்து நடத்த வேண்டும். நடத்துபவர்களே பழிச்சொல் ஏற்க வேண்டிவரும். சென்னையில் 'பன்யன்' என்ற அமைப்பு உள்ளது.அனுமதி கிடைப்பதுதான் கடினம்

    ReplyDelete
  66. ///"இண்டர்நஷனல் நெட்வொர்க் நம்ம அமைப்புக்கு பலமா இருக்குறதாலே எதாவுது exim ரிலேடேட் பிசினஸ் ட்ரை பண்ணலாம்..கிளியர் டைட்டில்
    கிடைக்கும்..எதுனா பெரிசா செட் ஆனா profit லேருந்து some percentage சோசியல் அக்டிவிடீஸ்க்கு fund transfer dedikate பண்ணலாம்..இதுதான்
    feasible கான்செப்ட் டாப் படுது.."///

    மாத்திதான் யோசிக்கிறீங்க மைனர்.எப்படி முன்னேறுதுன்னு பார்ப்போம்.

    ReplyDelete
  67. //////////kmr.krishnan said...
    எனவே வித்யா நானை வைத்துக்கொள்கிறேன் அனுமதி
    வழங்குங்கள், நந்த கோபால் !\\\\

    இந்த வசனத்தை நான் வேறமாதிரியாப் படிச்சுட்டேன்..கீழ்கண்டபடி..
    'எனவே வித்யாவை நானே வைத்துக்கொள்கிறேன் அனுமதி
    வழங்குங்கள், நந்த கோபால்! '
    'இதுக்கு மாம்ஸ் கிட்டே ஏன் பெர்மிஷன் கேக்கணும்?ஒருவேளை இதுக்கு முன்னாடி அவுரு வெச்சுருந்துருப்பாரோ?' ன்னு கரகாட்டக்காரன் படத்து கார் தள்ளும் சீன் வசனம் போலே காட்சிகள் வந்து வந்து ரொம்பவே குழம்பிட்டேன்..வயசு வேற கிட்டத்தட்ட ஒத்துப் போகுதா? ஏக கன்ஃப்யூஷன் போங்க..

    ReplyDelete
  68. //////////kmr.krishnan said...
    வித்யா நான், அவித்யா நான் என்று இர‌ண்டு உள்ளன.\\\\\\\\\\\\

    எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்ரீ வித்யா மட்டும்தான்..
    அப்புறம்.... (butter) பட்டர் நான் தெரியும்..ரொம்பப் புடிக்கும்..

    ReplyDelete
  69. ///"2G ,3G லேயே இந்தப் போடு போடுற நம்ம ஆளுங்க 4G லே என்னென்னெல்லாம் பண்ணுவாங்களோ?உழைக்கும் கரங்கள் துடிக்கும் கரங்களாவே இருந்து வேடிக்கை பார்க்க திருடி ஒளிக்கும் கரங்கள் மட்டுமே கரன்சியில் ஜொலிக்குதே.."///

    ஆட்களுக்கு இடையில் தூது போய் தரகு வேலை பார்த்த பெண்மணிக்கு மட்டும் 60 கோடி ரூபாய் தரகுப்பணம் என்றால்,கிடைத்த கொள்ளைப் பணம் மிகக் குறைந்த அளவாக 600 கோடி இருக்காதா? கேட்டால் 'முந்திரா ஊழலில் ஏன் விள‌ம்பரம் செய்யவில்லை?'என்கிறார்கள்.முந்திரா ஊழலில் நேருஜிக்குப் பெரிய தலை வலி கொடுத்தவர் அவருடைய மாப்பிள்ளை ஃபெரோஸ் காந்திதான்.யார் சொல்வதற்கும் முன்னால் டிடிகே பதவியைத் துறந்து விசாரணைக்குத் தயார் என்றார்.இப்போது ஊழல் செய்வதற்குக் கூட இட ஒதுக்கீடு உண்டு என்று சொல்ல ஆரம்பித்த கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? வேண்டுமானால் பாருங்கள்
    தேர்தல் பிராசாரத்தில்,"மக்களே!உங்களுக்குத் தலைக்கு 5000 ரூபாய் கொடுப்பதற்காக நாங்கள் செய்த உன்னதமான திட்டம்தான் ஸ்பெக்ட்ரெம்!இது பொறுக்காமல் எங்க‌ளை ஏசுகிறார்கள் தமிழ் இனத் துரோகிகள்! வந்தேறிகள்"
    என்று பேசப்படும்.

    ReplyDelete
  70. //////////G.Nandagopal said...

    நீங்களே ஆபீஸ் BEARERS யார் யார்னு ஒரு ஐடியா குடுங்க. நான் அதைபாத்திட்டு ஒரு யோசனை சொல்றேன். பிற்பாடு FINALISE பண்ணிடலாம்.\\\\\\\\\\\\\

    இதிலே pvt . ltd . கம்பெனியா estabilish பண்ணிட்டு product identification phase ஐத் தாண்டி buyer - seller - viable sourcing க்கு யாரெல்லாம் எந்தந்த contries லேருந்து சப்போர்ட் கொடுக்குறாங்கன்னு certain period of target deadline செட் பண்ணி வெயிட்பண்ணி எப்பிடி proceed ஆகுதுன்னு பார்க்கலாம்..corporate officeக்கு port - shipping oriented C & F formalities க்கு வசதியா சென்னை based டா arrange பண்ணிக்கலாம்..,இது வரைக்கும் volunteers ஆ செயல்பட யாருக்கு இண்டரெஸ்ட் இருக்கோ அவுங்க எல்லாம் மெயில் பண்ணுங்க..shareholders யாரு யாரு interested வர்றாங்கன்னு பார்த்திட்டு அந்த டீம்லேருந்து ஒரு 'வட்டமேசை - டீ' சாப்பிட்டுட்டு percentage of sharing based டாவோ இல்லே வேற meansலே we can arrive out a common consenses in deciding CEO and other office bearers .

    இப்பிடி strategical லா plan பண்ணலாம்ன்னு தோணுது.. initial expenses ங்குற பூனைக்கு யாரு மணி கட்டுவா?volunteers ஆகுற miscellaneous expenses upto finding a reliable source க்கு head of accounts calculate பண்ணி proposed project ஒண்ணு great cost engineer ரெடி பண்ணுவாரா?

    இல்லே...இதெல்லாம்... கொஞ்சம் நஞ்சம் கிளாஸ் ரூம் பக்கம் எட்டிப் பார்க்குற டீமையும் காலி பண்றதுக்கான ஐடியாவா? எப்பிடித் தோணுது?இந்த டோபிக்லே இண்டரெஸ்ட் உள்ள எல்லோரும் ஆலோசனைகளை சொல்லலாம்..

    ReplyDelete
  71. ///"இதுக்கு மாம்ஸ் கிட்டே ஏன் பெர்மிஷன் கேக்கணும்?"///

    உங்க மாம்ஸ்தான், நானெல்லாம் 'வைத்து'க்கொள்ளக் கூடாது என்கிறார். இப்படி போலீஸ் வேலை பார்ப்பதால் அவரிடம் கொஞ்சம் மாமூல் கொடுத்து தன்னைக் கட்டிக் கொண்டு, நானை' வைத்து'க் கொள்ள நினைத்தேன்.நீங்கள்
    கரகாட்டக்காரன் ஜோக்காக மாற்றி விட்டீர்கள்

    ReplyDelete
  72. ///"இல்லே...இதெல்லாம்... கொஞ்சம் நஞ்சம் கிளாஸ் ரூம் பக்கம் எட்டிப்
    பார்க்குற டீமையும் காலி பண்றதுக்கான ஐடியாவா? எப்பிடித் தோணுது"///

    ஆமாம்!நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கே கண்ணைக் கட்டுதே!சும்மா நேரக் கடத்தலாக(டைம் பாஸ்)வருபவர்களுக்கு எப்படி இருக்குமோ?!

    ReplyDelete
  73. வணக்கம் கே எம் ஆர் சார்.
    மிகவும் வியப்பாகவும்,
    சந்தோஷமாகவும்
    இருக்கிறது. உங்கள் பக்கத்திலே
    கிட்டதட்ட பத்தாண்டுகள்
    இருந்திருக்கிறேன் ஒன்றும்
    அறியாமல். இதை தலை குனிந்து
    கொண்டேதான் எழுதுகிறேன்.
    தேவையில்லாத எவ்வளவோ விஷயங்கள் இங்கே முன்னிலை
    படுத்தப் படும் போது உங்களின்
    மறுபக்கம் தெரியாமலே போய்விட்டது.
    எல்லோரிடம் கிடைக்காத ஓர்
    அபூர்வ விஷயம் உங்களிடம்
    மிகுந்து உள்ளது.உங்களுக்கு
    ஒரு சல்யூட்.

    ReplyDelete
  74. kmr.krishnan said...
    ///"இதுக்கு மாம்ஸ் கிட்டே ஏன் பெர்மிஷன் கேக்கணும்?"///

    உங்க மாம்ஸ்தான், நானெல்லாம் 'வைத்து'க்கொள்ளக் கூடாது என்கிறார்.///////

    உங்காத்து மாமி வாத்தியார் வலைப்பூவெல்லாம் படிக்குறதில்லையோ?
    உங்க சேவை மனப்பான்மை தெரிஞ்சா உங்களுக்கு அவுங்க உதவியாயிருப்பாங்கலேன்னு ஒரு ஆர்வத்துலே சொன்னேன்..
    மத்தபடி மாம்ஸ் சொன்ன 'நான்' பத்தி..சொல்லனுமின்னா 'நான்' ரொம்ப கொழுப்பைக் கூட்டும்..நான் ஒரு பெரிய பருப்பு என்கிற எண்ணத்தை உண்டு பண்ணும்..
    நெய்யிலே செய்யுறதில்லையா?
    இன்னும் பருப்பு அதிகமா சாப்புடுற ஆளுங்களை அதிகமா அட்டாக் பண்ணும்..அதுனாலே நான் என்ன சொல்றேன்னா இந்த 'நான்' வேண்டாமே?
    (கிரேசி மோகனும் கமலஹாசனும் சேர்ந்து பண்ணுற தாக்கம் நம்மளையும் எந்த அளவுக்கு பாதிசுருக்கு பாருங்க..)

    ReplyDelete
  75. ///// kmr.krishnan said...
    வேண்டுமானால் பாருங்கள்
    தேர்தல் பிராசாரத்தில்,"மக்களே!உங்களுக்குத் தலைக்கு 5000 ரூபாய் கொடுப்பதற்காக நாங்கள் செய்த உன்னதமான திட்டம்தான் ஸ்பெக்ட்ரெம்!இது பொறுக்காமல் எங்க‌ளை ஏசுகிறார்கள் தமிழ் இனத் துரோகிகள்! வந்தேறிகள்"
    என்று பேசப்படும்./////////

    'தமிழ்நாட்டு பொலிடிகல் ஜோக்கர்ஸ்' என்று பொன்சேகா சொன்னது என்றென்றும் உண்மைதான்..தமிழகத்துக்கு என்று இல்லை..வேறெந்த மாநிலத்து அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்தும்..போக்கிடம் இல்லாதவர்கள் என்று கூட சொல்லலாம். தலைவர்களுக்கே இது என்றால் தொண்டர்களுக்கு, வாக்களிக்கும் மக்களுக்கு என்ன பெயர் வைப்பது?
    மத்திய அரசைப் பிரிந்து ஒரு மாநில அரசு..தனி நாடு..சாத்தியமானால் தவிர இந்த போக்கிடமற்ற நிலை தொடர்வது தவிர்க்கமுடியாதது..


    இதனால்தான் இந்த சமீபத்திய மெகா ஊழல்அமைச்சரின் மேல் நடவடிக்கை கோரிய தமிழக முன்னாள் முதல்வர் அம்மா 'தேவையான எம்.பி.க்கள் ஆதரவை நிபந்தனையற்ற முறையில் காங்கிரசுக்கு வழங்குவோம்' என்றார். மத்திய அரசின் ஊழலைத் தட்டிக் கேட்கும் தார்மீக பொறுப்பு இங்கே ஏதாவது தென்படுகிறதா?அதே ஊழல் அரசுடன் இருக்கிற ஊழல் கூட்டணியை கழற்றிவிட்டுவிட்டு தான் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் பங்கு வகிப்பது எப்படி? என்கிற ஆர்வ மேலீடுதான் தெரிகிறது.

    ஹட்கோ,கார்கில், UTI , டேஹெல்கா, பொதுத்துறையை தாரை வார்த்தது என்று ஊழலில் கொஞ்சமும் குறையாது போட்டியிடும் பிஜேபி ஏனோ இப்போது வலுவில்லாததால் இப்படி காங்கிரசுக்கே மவுசு..
    என்ன இருந்தாலும் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி எங்கே?அதுனாலே பவர் பொலிடிக்ஸ் பண்ணணுன்னா அது காங்கிரசோட சேர்ந்தால்தான்னு தெளிவாத் தெரிஞ்சு அரசியல் போகுது..

    இந்த வகை சிக்கலான தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகும் எண்ணற்ற இந்திய அரசியல் கட்சிகளுக்குள் ஏதாவதொன்றுக்கு ஓட்டுப்போடும் நிலைமையில் பழகிப்போன மக்களை குறை சொல்ல முடியாதுதான்..

    ReplyDelete
  76. மாப்பு,
    நீங்க சொன்ன பிசினஸ் பார்மாலிடீஸ் எல்லாம் பார்த்து செஞ்சு செஞ்சு ஒய்ந்து போயிட்டேன். எல்லாம் வட்ட மேஜையில் உக்கார்ந்து நெய்யில் வறுத்த முந்திரியும் மைசூர் போண்டாவையும் உள்ளே தள்ளிட்டு சூடா ஒரு பில்ட்டர் காபி சாப்பிடறவரைக்கும் தான். அப்புறம் எழுந்து போனார்கள் என்றால் அடுத்த வட்ட மேஜைக்கு என்ன மெனு இன்னு தெரிஞ்சுட்டு தான் வருவார்கள். ஆகையால் நான் இப்போதே சொல்லிடறேன் நான் தயார். என்னுடைய வாழ்க்கையின் ஒரே கனவு EXIM பிசினஸ் தான். அதிலே எனக்கு நல்ல அனுபவம் இருக்கு. RBI CODE , IE CODE , C &F , DUTY DRAW BACK ETC . எல்லாம் மத்தவங்களுக்காக செய்து காசு சேர்ந்ததோ இல்லையோ நல்ல அனுபவம் சேர்ந்துள்ளது. இதுலே ஏதாவது செய்து மேலுக்கு வரலாம்னா விடமாட்டீங்கறீங்களே. அதுக்குள்ளே எதுக்கு வித்யாவை ஞாபகப்படுத்தறீங்க

    ReplyDelete
  77. அடுத்த வட்ட மேஜைக்கு என்ன மெனு இன்னு தெரிஞ்சுட்டு தான் வருவார்கள்//

    நந்தகோபால், அடுத்த வட்ட மேஜைக்கு என்ன மெனு / எங்கன்னு விவரம் சொன்னீங்கன்னா பயணச் சீட்டு முன்பதிவு செய்ய வசதியா இருக்கும். எதுக்கு இவ்ளோ முன்னாடியே கேக்கறேன்னா, அதுக்கு முன்னாடி என்னோட பாஸ்போர்ட் க்கு வேற apply பண்ணனும். அது ஒண்ணும் பிரச்சனையில்லைன்னு வெச்சுக்குங்க. அதான் மன்மோகன் சிங் இருக்கவே இருக்காரு. ஒரு போன் அடிச்சா போதும், உடனே வேலையாயிடும்.

    ReplyDelete
  78. சரி சரி. ஏன் எல்லாருமா சேர்ந்து தமிழ்நாட்டைப் பத்தி இவ்ளோ கவலைப்படறீங்க?

    வரும் 2011 சட்டசபைத் தேர்தலில் என்னோட கட்சியை ஜெயிக்க வெச்சு, என்னை முதலமைச்சரா ஆக்கி, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் மண்ணைக் கவ்வ வச்சுட்டீங்கன்னு வையுங்க. இப்படி ஆளாளுக்குப் புலம்பற நிலைமை வரவே வராது என்று தாய்த் தமிழகத்தின் மீது ஆணையிட்டுக் கூறிக் கொள்கிறேன். தேர்தல் வாக்குறுதிகள் இப்போதுதான் டைப்பப்பட்டுக் கொண்டிருப்பதால் கூடிய சீக்கிரம் வெளியிடப்படும். (2011 முதலமைச்சர் கனவுடன் தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்னு தெரியலையே)

    (அது யாருப்பா கட்சி பேர் என்னன்னு சவுண்டு விடறது. அட இப்போதானே ரூம் போட்டு யோசிச்சிட்டிருக்கோம், சொல்லுவோமில்ல?)

    ReplyDelete
  79. உமா மேடம்
    பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் கலந்துகொள்ள இருப்பதால்
    இந்த தடவை மெனு நல்லாவே ரிச்சா (RICH ) இருக்கனும்ன்னு பெரியவர் சொல்லிட்டார்.மீட்டிங் சுவிட்சர்லாந்திலே வின்டர் முடிந்திருக்கவும் இல்லாத சம்மர் ஆரம்பித்திருக்கவும் இல்லாத சீசனிலே ஆரம்பிக்கப்போகிறது. location அண்ட் மெனு FINAL பண்ணுகிற மாபெரும் பொறுப்பை மிகுந்த வேலைப்பளுவுக்கிடையே மைனர்வாள் முடிவு செய்ய ஒத்துண்டார். உறுப்பினர் எல்லோருக்கும் லுப்தான்சா விமானம் மூலம் தம் சொந்த செலவில் போக்குவரத்து ஏற்பாடுகளை கத்தார் கண்ணன் செய்கிறார். வரவேற்பு ஏற்பாடுகளை முன்னின்று செய்யும் பஹ்ரைன் பாண்டியன் பாங்காக்கில் இது குறித்து தமது சகாக்களுடன் விவாதித்துகொண்டுள்ளார். ஓய்விற்காக ஹானலூலூ சென்றுள்ள தலைவர் நாடு திரும்பியதும் இதுகுறித்து இறுதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இத்தாலிய சமையல் கலைஞர்களுடனும் பிரெஞ்சு சமையல் வல்லுனர்களுடனும் உணவுவகைகளை முடிவு செய்யும் முகமாக தீவிர விவாதத்திலே மைனர் அவர்கள் ஈடுபட்டு இருந்தபோதிலும் கூட்ட ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அவ்வப்போது பெரியவரிடம் சேர்பித்துக்கொண்டு உள்ளார். இப்படி ஏற்பாடுகள் தடபுடலா நடந்திட்டிருக்கு நீங்க என்னடான்னா இனிமேல்தான் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கணும் அப்பிடிங்கறீங்க.
    என்னமோ போங்க.
    பெரியவர் இதை கேள்விபட்டால் நீங்கள் கலந்துகொள்வது சந்தேகமே.

    ReplyDelete
  80. //////////G.Nandagopal said...
    எல்லாம் வட்ட மேஜையில் உக்கார்ந்து நெய்யில் வறுத்த முந்திரியும் மைசூர் போண்டாவையும் உள்ளே தள்ளிட்டு சூடா ஒரு பில்ட்டர் காபி சாப்பிடறவரைக்கும் தான். அப்புறம் எழுந்து போனார்கள் என்றால் அடுத்த வட்ட மேஜைக்கு என்ன மெனு இன்னு தெரிஞ்சுட்டு தான் வருவார்கள்.\\\\\\\\\\ //////////G.Nandagopal said...
    எல்லாம் வட்ட மேஜையில் உக்கார்ந்து நெய்யில் வறுத்த முந்திரியும் மைசூர் போண்டாவையும் உள்ளே தள்ளிட்டு சூடா ஒரு பில்ட்டர் காபி சாப்பிடறவரைக்கும் தான். அப்புறம் எழுந்து போனார்கள் என்றால் அடுத்த வட்ட மேஜைக்கு என்ன மெனு இன்னு தெரிஞ்சுட்டு தான் வருவார்கள். ////////
    முதல் வட்டமேசை வரைக்குமே தாங்குமா மாம்ஸ்..எனக்கென்னவோ..ம்ஹூம்..என் வாயால அத சொல்லவேணாம்..
    நம்ம ஒரு நாலஞ்சு பேரைத்தவிர(வேலையில்லாதவுங்க) மத்தவுங்கஎல்லாம் மூச்....
    'அதுனாலேதான் நான் சொந்தமா செய்யுறேன்...அப்பிடி..இப்பிடி'ன்னு ஏகமா 'வை..சார்..வை..அஞ்சு வெச்சா பத்து..பத்து வெச்சா இருவது'ன்னு கிடந்து கூவாம கையிலே இருக்குற தொகையிலே வாய்ப்பு கிடைக்கும் போது சேவை தொடர்பா ஏற்கனவே செயல்பட்டுட்டிருக்கிற ஸ்தாபனங்களுக்கு முடிஞ்சா தொகையை வழங்கி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ள மத்தவுங்களைப் போலே சராசரிகளில் நானும் ஒருவனாக இதுவரை இருந்து வந்துருக்கிறேன்.. இது தப்பா?
    இல்லே..தில்லா இறங்கி தன்னந்தனியா காசை இறக்கி பீல்டிங் பண்ணிப் பார்த்துற வேண்டியதுதான்..தொலைநோக்குப் பார்வை(எட்டப் பார்வை) யிலே நிரந்தரமா நிறுவணும்..ன்னு சொன்னால் கொஞ்சம் அகலமா காலை அகட்டி வெச்சுத்தான் பாக்கோணும்..

    ReplyDelete
  81. /// என்னுடைய வாழ்க்கையின் ஒரே கனவு EXIM பிசினஸ் தான். அதிலே எனக்கு நல்ல அனுபவம் இருக்கு. RBI CODE , IE CODE , C &F , DUTY DRAW BACK ETC . எல்லாம் மத்தவங்களுக்காக செய்து காசு சேர்ந்ததோ இல்லையோ நல்ல அனுபவம் சேர்ந்துள்ளது. இதுலே ஏதாவது செய்து மேலுக்கு வரலாம்னா
    விடமாட்டீங்கறீங்களே///

    நந்தகோபாலரே! தமாஷ் எல்லாம் மூட்டைகட்டி விட்டு இதெல்லாம் என்ன என்றுசொல்லுங்கள்.
    நம்முடைய முதலீடு எவ்வளவு? என் வயதுக்கு எவ்வளவு நேரம் , அலைச்சல் நான் கொடுக்க வேண்டி வரும்? எல்லாவற்றையும் சொல்லுங்கள்.எனக்கு சுத்தமா வியாபரம் தெரியாது.வெறும் மத்தியதர மனோபாவம் கொண்ட,
    தவறுகளுக்கு அஞ்சுகிற, சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் அசட்டுத்தனமான பிடிவாதம் கொண்ட என்னைப் போன்றவர்களால் தாக்குப் பிடிக்க முடியுமா?
    மாமி கேட்பதற்கு பதில் சொல்லும் விதமாக கொஞ்சம் எளிய நடையில் எழுதுங்கள்.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  82. ///" Madumitha said...
    வணக்கம் கே எம் ஆர் சார்.மிகவும் வியப்பாகவும்,சந்தோஷமாகவும்இருக்கிறது. உங்கள் பக்கத்திலேகிட்டதட்ட பத்தாண்டுகள் இருந்திருக்கிறேன் ஒன்றும்அறியாமல். இதை தலை குனிந்துகொண்டேதான் எழுதுகிறேன்.
    தேவையில்லாத எவ்வளவோ விஷயங்கள் இங்கே முன்னிலை
    படுத்தப் படும் போது உங்களின் மறுபக்கம் தெரியாமலே போய்விட்டது.
    எல்லோரிடம் கிடைக்காத ஓர்அபூர்வ விஷயம் உங்களிடம்
    மிகுந்து உள்ளது.உங்களுக்குஒரு சல்யூட்"///
    பாராட்டுக்களுக்கு நன்றி மதுமிதா சார்!. பாருங்கள்! கூடவே அலுவலகத்தில் இருந்து பழகிய உங்க‌ளிடம் கூட என் புராணத்தையெல்லாம் சொல்லாமல்தான் இருந்து இருக்கிறேன்.இருந்தாலும் என் சேவைகளை நான் நிறுத்தக் காரணமாக இருந்தது, நான் சேவை என்ற போர்வையில் என் சொந்தச் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்கிறேன் என்ற புகார் மேல் இடத்திற்கு சொல்லப்பட்டு, அவர்களும் அதை விசாரணை இன்றி ஏற்றுக் கொண்டதுதான்.போகட்டும். அமைப்பு ரீதியாகச் செயல்படும் போது அமைப்புதான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.தனி நபர் பின்னணியில்தான் இருக்க வேண்டும்.எங்கோ என் மீதும் தவறு இருந்து இருக்கலாம்.தோல்வி மனப்பான்மை எனக்கு இல்லை. கிடைத்த அனுபவங்களை பெரிய முதலீடாக நினைக்கிறேன்.நன்றி!
    பி.கு:உங்கள் கதை ,கவிதைகளை வகுப்பறையில் வெளியிடுங்கள்.இது என் வேண்டுகோள்.

    ReplyDelete
  83. ///'இதனால்தான் இந்த சமீபத்திய மெகா ஊழல்அமைச்சரின் மேல் நடவடிக்கை கோரிய தமிழக முன்னாள் முதல்வர் அம்மா 'தேவையான எம்.பி.க்கள் ஆதரவை நிபந்தனையற்ற முறையில் காங்கிரசுக்கு வழங்குவோம்' என்றார். மத்திய அரசின் ஊழலைத் தட்டிக் கேட்கும் தார்மீக பொறுப்பு இங்கே ஏதாவது தென்படுகிறதா?அதே ஊழல் அரசுடன் இருக்கிற ஊழல் கூட்டணியை கழற்றிவிட்டுவிட்டு தான் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் பங்கு வகிப்பது எப்படி? என்கிற ஆர்வ மேலீடுதான் தெரிகிறது.'///

    அம்மாவுக்கு என்ன நோக்கம் இருந்தாலும், அவர்களுடைய அந்த அறிவிப்புதான் மெகா ஊழல்பற்றிய எல்லாத் தகவல்களும் வெளிவர வாய்ப்பு ஆயிற்று.இன்று
    "அவர் ஒரு கனவான். லஞ்சம் வாங்கினாலும் சொன்னபடி வேலையை முடித்துக் கொடுத்துவிடுவார்" என்ற மனநிலைக்கு என்னையும் சேர்த்து எல்லோரும் வந்தபின்னர், ஊழல் அற்ற அரசு என்பதெல்லம் குதிரைக் கொம்புதான்

    ReplyDelete
  84. "///(அது யாருப்பா கட்சி பேர் என்னன்னு சவுண்டு விடறது. அட இப்போதானே
    ரூம் போட்டு யோசிச்சிட்டிருக்கோம், சொல்லுவோமில்ல?"///

    உங்கள் கட்சிக்குப் பெயர்:

    "அகில உலக ஆவிகள் ஐக்கியக் கட்சி"

    ReplyDelete
  85. ///கையிலே இருக்குற தொகையிலே வாய்ப்பு கிடைக்கும் போது சேவை தொடர்பா ஏற்கனவே செயல்பட்டுட்டிருக்கிற ஸ்தாபனங்களுக்கு முடிஞ்சா தொகையை வழங்கி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ள மத்தவுங்களைப் போலே சராசரிகளில் நானும் ஒருவனாக இதுவரை இருந்து வந்துருக்கிறேன்..
    இது தப்பா?///
    தப்பே இல்லை மைனர்! அது பல வேண்டாத தொல்லைகளைக் குறைக்கும்.அதே நேரத்தில் புதிய சிந்தனைக்கு/தன் முனைப்புக்கு அதுவே தடையாகவும் இருக்கலாம்.மக்கள் தொகைப் பெருக்கத்தில் எவ்வளவு அமைப்புக்கள் வந்தாலும் எல்லாமும் தேவையாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  86. நம்முடைய முதலீடு எவ்வளவு? என் வயதுக்கு எவ்வளவு நேரம் , அலைச்சல் நான் கொடுக்க வேண்டி வரும்? எல்லாவற்றையும் சொல்லுங்கள்.எனக்கு சுத்தமா வியாபரம் தெரியாது.//////////

    தலைவர் (KMRK ) அவர்களுக்கு,
    EXIM குறித்த அனைத்து விவரங்களையும் தங்களுடைய தனிப்பட்ட மெயில் ID க்கு அனுப்பிவைக்க உள்ளேன். எந்த ஒரு வியாபாரம் செய்வதற்கும் முதலீடு, கட்டமைப்பு வசதிகள், முன்னனுபவம் இவற்றைவிட முனைப்பும், ஆர்வமும் மற்றும் சமயோசிதம் மட்டுமே போதும் என்பதற்கு ஏற்கெனவே இதில் சாதித்தவர்களின் வரலாறே சான்று.
    இதற்கு முக்கிய தேவை என்று பார்த்தால் அயல்நாட்டு தொடர்புகளும், வியாபார நுணுக்கமுமேயாகும். உள் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் சற்று அதிக அளவில் மேற்கொள்ளவேண்டியிருக்கும். மற்றபடி தற்கால நவீன தகவல் பரிமாற்றங்கள் குறித்த அடிப்படை அறிவு ஒரு விரும்பத்தக்க தகுதியாகும்.
    விரிவான அஞ்சலில் தங்களுக்கு அனைத்தையும் தெரிவிக்கிறேன். இது குறித்து ஏற்கெனவே மைனர் அவர்களிடமும் சில பூர்வாங்க ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  87. உங்கள் கட்சிக்குப் பெயர்://

    கட்சிக்குப் பேர் வைக்கிறது இருக்கட்டும். நான் உங்களுக்கு மெயில் அனுப்பினேனே, படிச்சேளா, அதுக்கு உங்களோட அபிப்பிராயம் என்ன?

    ReplyDelete
  88. நீங்க என்னடான்னா இனிமேல்தான் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கணும் அப்பிடிங்கறீங்க.
    என்னமோ போங்க//

    இதெல்லாம் எனக்கு ஜுஜுபிங்கற மாதிரிதான் எழுதிருந்தேனே. நீங்க கவனிக்கலையா?

    ReplyDelete
  89. /////////////G.Nandagopal said...
    இது குறித்து ஏற்கெனவே மைனர் அவர்களிடமும் சில பூர்வாங்க ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறேன்\\\\\\\\\\\

    'பூர்வாங்க ஆலோசனை'..ஆஹா..
    பயங்கர பில்ட்அப்பா
    இருக்கே மாம்ஸ்...
    இந்த ஒரு வார்த்தையைப் போட்டதும்.
    ச்சும்மா.. ரேஞ்சே ஒரு தூக்கலாத் தெரியுதே..மாம்ஸ்..கலக்கிட்டீங்க..
    ஆமா..ஒண்ணு கவனிச்சீங்களா? நம்ம அமைப்பு உலகமெங்கிலும் பரவி வலுவா இருக்குறதாலே அந்தந்த நாட்டு ஆளுங்க அட்ரஸ் போட்டு 'பிரான்ச் ஆபீஸ்'ன்னு சைட்டுலே காமிச்சுட்டா ஒரு 'இன்ஸ்டன்ட் MNC ' ப்ரோஃபைல் கிரியேட் ஆகிடுமே?
    past performance கேக்காத, ஒரிஜினல் அட்றஸ்சே இல்லாத டப்பா லெட்டர்ஹெட் கம்பனிக்கேல்லாம் 2G லைசென்ஸ் issue ஆகியிருக்குது..நாம நினைச்சா 4G வரைக்கும் போலாம் போலிருக்கே?

    ReplyDelete
  90. /////////////G.Nandagopal said...
    சுவிட்சர்லாந்திலே location அண்ட் மெனு FINAL பண்ணுகிற மாபெரும் பொறுப்பை மிகுந்த வேலைப்பளுவுக்கிடையே மைனர்வாள் முடிவு செய்ய ஒத்துண்டார். ////////// எல்லோருமா குரூப் டான்ஸ் சீனையும் இங்கேயே வெச்சுக்கலாம்..
    ரெட் ஒன் காமெராலேயே ஷூட் பண்ணிக்கலாம்..அத மட்டும் மறக்காம எடித்துட்டு வந்துடுங்க மாமூ..
    ////////லுப்தான்சா விமானம் மூலம் தம் சொந்த செலவில் போக்குவரத்து ஏற்பாடுகளை கத்தார் கண்ணன் செய்கிறார்\\\\\\\\\
    பொண்ணு செட் ஆன சந்தோஷத்துலே மாப்பிளே செய்ய மாட்டாரா என்ன?
    /////////பஹ்ரைன் பாண்டியன் பாங்காக்கில்\\\\\\\\\
    இளைய தளபதி அவுரு ஏன் அங்க போனாரு..assign பண்ணவே இல்லையே..அது ஒரு மாதிரி இடமாச்சே..
    இளைய தளபதி...இவரு வேற கொஞ்சம் துடிப்பான ஆளாச்சே..assign பண்ணவே இல்லையே..டிஸ்கஷ்ஷன்னாலே கொஞ்சம் வில்லங்கம்ஆச்சே..
    ////////ஹானலூலூ சென்றுள்ள தலைவர்\\\\\\\\\ 'சூடு கண்ட பூனை' எப்பிடி இருக்குன்னு அவரு வந்து சொல்வாரு..
    ////////இத்தாலிய சமையல் கலைஞர்களுடனும் பிரெஞ்சு சமையல் வல்லுனர்களுடனும் உணவுவகைகளை முடிவு செய்யும் முகமாக தீவிர விவாதத்திலே மைனர் அவர்கள் ஈடுபட்டு இருந்தபோதிலும்\\\\\\\\\\\
    உப்பு பார்க்கப் போனேன்..அதுக்குள்ளே மோப்பம் பிடிச்சு...PTI நியூஸ் ஆயிடுச்சாக்கும்?விக்கிலீக்ஸ் வழியா லீக் ஆகியிருக்குமோ?

    ReplyDelete
  91. பஹ்ரைன் பாண்டியன் பாங்காக்கில்\\\\\\\\\
    இளைய தளபதி அவுரு ஏன் அங்க போனாரு..assign பண்ணவே இல்லையே..அது ஒரு மாதிரி இடமாச்சே../////////

    மைனர்,

    பாண்டியன் எடுத்துக்கொண்ட பொறுப்பை கவனித்தீரா 'வரவேற்பு ஏற்பாடுகள்' . பாங்காக் போகாமே வேற எங்கே போவாங்களாம். எல்லாம் அவருக்குத்தெரியும். அவர் பார்த்துப்பார். நீங்க அதிலே தலையிடாதீங்க. ஹானலுலு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. தங்களுக்கு எந்தப் பொறுப்பையும் தலைவர் குடுக்கலையேன்னு டெல்லி பக்கம் புகையிறதா தகவல் வந்திருக்கே பார்த்தீங்களா.

    ReplyDelete
  92. மாப்பு,

    நான் சீரியஸ் ஆ சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா சும்மா ஜல்லி அடிச்சிட்டு இருக்கீங்களே. கொஞ்சம் சீரியஸ் பாருங்க மாப்பு. அதான் மார்ச் லே இந்தியா போறேனில்லே. அதுக்குள்ளே எதுனாச்சும் ஸ்கெட்ச் போட்டு வச்சா தானே ஆகும்.

    ReplyDelete
  93. ///////// kmr.krishnan said...
    RBI CODE , IE CODE , C &F , DUTY DRAW BACK ETC ..எனக்கு சுத்தமா வியாபரம் தெரியாது.///////////

    RBI CODE , IE CODE , எல்லாம் EXIM கம்பெனி ஆரம்பிக்க DGFT லேயும் RBI லேயும் registration பண்ணி வாங்க வேண்டிய code numbers. -formalities..

    C & F ன்னா clearing & forwarding agencies - சரக்கை கப்பலிலேருந்து இறக்கி ஏற்றிக் கொடுக்கும் வேலையை, அதற்கான documentation வேலையை செய்யும்..
    DUTY DRAW BACK -இது ஒரு வகை எக்ஸ்போர்ட் இன்சென்டிவ்..
    கஸ்டம்ஸ் & எச்சைஸ் டூட்டி கட்டி வியாபாரத்தை முடித்தபின் கட்டிய பணத்தை அரசிடமிருந்து திரும்பப் பெறும் முறை..இது எந்த commodity என்பதைப் பொறுத்து மாறும்..சில சமயம் இல்லாமலும் போகும்..
    அரசின் அவ்வப்போதைய சுற்றறிக்கைகள் மூலம் அறியலாம்..இதுபோன்ற விஷயங்கள் தொடர்பான P .G . Diploma in Export Management படித்திருக்கிறேன்..ஆனாலும் இப்போது பண்ணிக்கொண்டிருக்கும் அனுபவசாலிகளே களத்தில் இறங்கி விளையாடத் தகுதியானவர்கள் என்பது எனது அபிப்பிராயம்..
    அதனாலே தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் google ஆண்டவர் தான் எப்போதும் ரெடியா இருக்கிறாரே..நந்தா சார் வேற தனது அனுபவங்களை வழங்கத் தயாரா இருக்கும்போது என்ன பிரச்சினை..?

    ReplyDelete
  94. பஹ்ரைன் பாண்டியன் பாங்காக்கில்\\\\\\\\\
    இளைய தளபதி அவுரு ஏன் அங்க போனாரு..assign பண்ணவே இல்லையே..அது ஒரு மாதிரி இடமாச்சே../////////

    பாண்டியன பாங்காக்கில (மப்புல... மஜாவ ?..) டிஸ்கசன்ல இருக்க விடுங்க மாம்ஸ்... அப்பரும் அந்த 'வரவேற்பு ஏற்பாடுகள்' ல அவரு நல்ல கவனிசிப்பாறு... இந்த மாதிரி அனுபவம் அவருக்கு முன்னடியே நெறைய இருக்கு... நீங்க வேணுமுன கத்தார் கண்ணன அனுப்பி வையுங்க... அவருக்கும் நெறைய அனுபவம் இருக்கு....

    ReplyDelete
  95. /////////////// G.Nandagopal said... பாண்டியன் எடுத்துக்கொண்ட பொறுப்பை கவனித்தீரா 'வரவேற்பு ஏற்பாடுகள்' .\\\\\\\\\\\\\\\\

    'ஏற்பாடு' பலமாத்தான் இருக்கும் போலே..அவரு முழுப்பேரு தெரியுமா உங்களுக்கு?

    அதிவீர பாண்டியன்..

    'கொக்கோகம்'ன்னு ஒரு கிரேட் தமிழ்நூலை எழுதினவரு..(நீங்க அதெல்லாம் கரெக்டாப் படிச்சுருப்பீங்களே? இது மாதிரி பொஸ்தகமெல்லாம் படிக்கச் சொல்றதில்லை..சொம்மா..பகவத் கீதை படி..கந்தர் சஷ்ட்டி கவசம் படின்னுட்டு..)வாத்தியாரும் இப்பிடி பழைய பாடல்களுக்கு செய்யுள் விளக்கம் எழுதுறதே இல்லை..மாணவர்கள் எப்பிடித் தேர்றது?

    ReplyDelete
  96. ////அதிவீர பாண்டியன்..
    'கொக்கோகம்'ன்னு ஒரு கிரேட் தமிழ்நூலை எழுதினவரு.////

    இல்லையே!?... நண்பர் நந்தகோபால் அவர்களே!

    கி.மு. 12 -ஆம் நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க கொக்கோக முனிவர் அவர் இருந்த அரசவைக்கு விரகதாபத்தோடு (காமத் தீ காயத்தில் பற்றி எரிய) வந்த ஒரு பெண்ணை சாந்திப் படுத்தி அந்த அனுபவத்தை "ரதியின் ரகசியம்" என்று ஒரு நூலாக எழுதியதாகவே தானே அறிகிறேன்...

    ReplyDelete
  97. எந்தப் பொறுப்பையும் தலைவர் குடுக்கலையேன்னு டெல்லி பக்கம் புகையிறதா//

    அச்சச்சோ, உங்களுக்கு விவரம் தெரியாம ஏதேதோ பேசறீங்க. ஒரு மிக மிக முக்கியமான பொறுப்பு என்கிட்டதான் இருக்கு. ஆனா, அதைப் பத்தி யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாதுன்னு தலைவர் சொல்லிருக்கறதால நோ மூச்.

    ReplyDelete
  98. இது மாதிரி பொஸ்தகமெல்லாம் படிக்கச் சொல்றதில்லை..சொம்மா..பகவத் கீதை படி..கந்தர் சஷ்ட்டி கவசம் படின்னுட்டு..)/////////

    மாப்பு,

    நாம இனிமேப்பட்டு புஸ்தகம் படிச்சு தெரிஞ்சுட்டா அதன்படி நடக்கறோம்..

    நாம புஸ்தகம் எழுதற ரேஞ்சுலே இருக்கோம் ..இப்படி எதையெடுத்தாலும் தப்பு தப்பாவே சொல்லித்தான் நீங்க பெரியவர் கிட்டே வாங்கி கட்டிக்கறீங்க ...

    ReplyDelete
  99. ம்ம் (சும்மாதான் ஒரு மொக்கை கமெண்ட் போடலாம்னு)

    ReplyDelete
  100. என்ன ஒரு ஊசலாட்டம் பாருங்கள்.சேவையில் இருந்து கொக்கோகம் வரை.கடைசியில் சேவையைப்பற்றிக் கருத்துப் பரிமாற்றம் மிகக்குறைந்து விட்டது.சரி!ஆகட்டும் பார்க்கலாம்.

    ReplyDelete
  101. //////Alasiam G said...
    http://ta.wikipedia.org/wiki 'அதிவீரராம பாண்டியர்' என்ற பெயரிலே தமிழ் விக்கிபீடியாவில் தேடினால் கீழே கண்ட தகவல் கிடைக்கிறது..அவர் கொக்கோக முனிவரின் நூலின் விளக்க நூலாக கவிதை வடிவில் எழுதியதாக வேறு சில தேடல்களில் பதில்கள் கிடைக்கின்றன..சூரசம்ஹாரம் திரைப்படத்தின் நாயகனின் பெயராக அதிவீர பாண்டியன் பெயர் வைக்கப்பட்டிருந்தது..
    அப்போதிலிருந்தே இந்த விஷயம் மனதில் பதிந்துவிட்டதுதான் என்றாலும் நண்பர் ஆலாசியம் அவர்களின் கேள்விக்குப் பின் விவரங்களை தேடி கீழ்கண்ட விஷயங்கள் அறிந்தேன்..

    'அதிவீரராம பாண்டியர் 14 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் எனக் கருதப்படும் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவர் சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும், தமிழிலும் தோன்றிய, நளன் கதை கூறும் நூல்களைத் தழுவி நைடதம் என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் வெற்றி வேற்கை என்னும் நூலையும், காசி காண்டம், கூர்ம புராணம், இலிங்க புராணம் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் கொக்கோகம் எனப்படும் காமநூலும் இவர் இயற்றியதே.

    மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல கோயில்களையும் கட்டுவித்துள்ளார். தென்காசியில் இருக்கும் சிவாலயம் ஒன்றும் விஷ்ணு ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.'

    இதுலே முக்கியமான 'மேட்டர்' நம்ம பாண்டியனுக்கு இந்தப் பெயர் பொருந்திப் போவதுதான்..உண்மையில் அவர் பெயர் அதிவீர பாண்டியன்தான்..

    ReplyDelete
  102. ஒரு பெண்ணை சாந்திப் படுத்தி அந்த அனுபவத்தை "ரதியின் ரகசியம்" என்று ஒரு நூலாக எழுதியதாகவே தானே அறிகிறேன்.../////////

    நல்லது... திரு. ஆலாசியம் சார். இதை சொன்னவர் மைனர் தான். அவரளவிற்கு எனக்கு இதிலெல்லாம் பாண்டித்தியம் கிடையாது நான் ஒப்புக்கொண்டு ஆக வேண்டும். உங்கள் விளக்கத்திற்கு நன்றி சார்.

    ReplyDelete
  103. இதுலே முக்கியமான 'மேட்டர்' நம்ம பாண்டியனுக்கு இந்தப் பெயர் பொருந்திப் போவதுதான்..உண்மையில் அவர் பெயர் அதிவீர பாண்டியன்தான்////

    ஆஹா...விளக்கம் அற்புதம். அதற்காக தாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு யாம் தலை வணங்குகிறோம். பாண்டியருக்கே பாண்டியரை அறிமுகப்படித்தியத்தில் அவரைவிட யாமே அதிக மகிழ்ச்சியடைகிறோம். மேலும் எமது முந்தைய பின்னூட்டமும் இதையே உறுதிப்படுத்துகிறது.

    ReplyDelete
  104. இப்படி எதையெடுத்தாலும் தப்பு தப்பாவே சொல்லித்தான் நீங்க பெரியவர் கிட்டே வாங்கி கட்டிக்கறீங்க /////

    என்ன ஒரு ஊசலாட்டம் பாருங்கள்.சேவையில் இருந்து கொக்கோகம் வரை.கடைசியில் சேவையைப்பற்றிக் கருத்துப் பரிமாற்றம் மிகக்குறைந்து விட்டது//////

    பார்த்தீர்களா மைனர்வாள்,
    நான் சொன்னது சரியாகப் போய்விட்டதை.

    ReplyDelete
  105. ///////// G.Nandagopal said...
    அவரளவிற்கு எனக்கு இதிலெல்லாம் பாண்டித்தியம் கிடையாது நான் ஒப்புக்கொண்டு ஆக வேண்டும்.\\\\\\\\\\
    இதத்தான் கோயமுத்தூர் குசும்புங்குறதோ?உண்மையிலே பாண்டியனின் ஜாதகத்தில் அவரது முழுப் பெயர் கண்டதனால் இங்கே கோர்த்து விளையாடிவிட்டேன்..
    இன்னிக்கு மேட்ச் எப்படியும் சென்ச்சுரி வரைக்கும் போகும்ன்னு நினைச்சேன்...அப்பிடியே ஆச்சு..

    ReplyDelete
  106. சேவையை மட்டுமே பேசாமல் பாவை பக்கமாத் தாவுறீங்களேன்னு பெரியவர் கோவிச்சுக்குறார்..
    அதுனாலே திரும்பவும் அவருக்கு ஒரு வணக்கம் வெச்சு இப்படி விஷயங்களை பகிர்ந்துகொள்ள, நாமெல்லாம் தெரிந்து கொள்ள ஆக்கம் எழுதிய அவரின் முயற்சி தொடர்ந்து நம்மையெல்லாம் இணைக்கும் பாலமாக இருந்து உண்மையில் சேவை தேவைப்படுவோருக்கு
    உதவும் கரங்களாய் நம்மை மாற்றுருப் படுத்துமானால் அதுதான் இந்த ஆக்கத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொண்டு விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு நேரமாகிக் கொண்டிருப்பதால் இந்த நன்றியுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்..நன்றி..வணக்கம்..

    ReplyDelete
  107. KMRK சார்,

    நமது மைனர் அவர்கள் EXIM பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளார். கொக்கோக ஆராயசிக்கிடையேயும் இதை மிகச் சர்வசாதரணமாக எடுத்துரைத்தவிதம் அவரது பன்முகத் திறமையை பறைசாற்றுகிறது. இதை நான் சொல்லியிருந்தால் கூட இந்த அளவுக்கு எளிதாக சொல்லியிருக்கமுடியுமா என்பது சந்தேகமே. ஆனால் தாங்கள் அது குறித்து ஒன்றும் உரைக்காமல் கொக்கேகம் பற்றி மட்டும் விமர்சித்தது தான் என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்திவிட்டது .

    ReplyDelete
  108. minorwall said...
    ///// அவர் கொக்கோக முனிவரின் நூலின் விளக்க நூலாக கவிதை வடிவில் எழுதியதாக வேறு சில தேடல்களில் பதில்கள் கிடைக்கின்றன..////

    என்னிடம் இருக்கும் புத்தகத்திலும் இப்படி இருந்தது.. மைனர்வாள்...

    /////இவற்றுடன் கொக்கோகம் எனப்படும் காமநூலும் இவர் இயற்றியதே.//////

    இருந்தும் தங்களின் தகவலுக்கும் நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  109. G.Nandagopal said...
    /////நல்லது... திரு. ஆலாசியம் சார். இதை சொன்னவர் மைனர் தான். அவரளவிற்கு எனக்கு இதிலெல்லாம் பாண்டித்தியம் கிடையாது நான் ஒப்புக்கொண்டு ஆக வேண்டும். உங்கள் விளக்கத்திற்கு நன்றி சார்./////

    கண்டதைப் படித்தால் பண்டிதனாகலாம்.... யாவரும் அறிந்ததே..
    நாம் தொடாத பாகம் இருக்கக் கூடாது..... ம்கூம்..... நான் கற்கும் அறிவைச் சொன்னேன்.. களவியலும் கற்று மறக்கச் சொல்லியுள்ளார்கள் இல்லையா நண்பரே!!!.. நவரசமும் தானே வாழ்க்கை!!!... வாய்ப்பு கிடைத்தால் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்... ஆனால் கேட்பவர் மனதை அறியாமல்.. படித்தவைகளைச் சொல்லி விடாதீர்கள் பிறகு விவகாரமாகி விடும்... நன்றி நண்பர் நந்தகோபால்....

    ReplyDelete
  110. ///"நமது மைனர் அவர்கள் EXIM பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளார். கொக்கோக ஆராயசிக்கிடையேயும் இதை மிகச் சர்வசாதரணமாக எடுத்துரைத்தவிதம் அவரது பன்முகத் திறமையை பறைசாற்றுகிறது. இதை நான் சொல்லியிருந்தால் கூட இந்த அளவுக்கு எளிதாக சொல்லியிருக்கமுடியுமா என்பது சந்தேகமே."///

    என் கணினியில் அடிக்கடி bloger.com
    catch பிரச்சனை வந்து விடுகிறது.மைனருக்கு மேல் தக‌வலுக்கு நன்றி தெரிவித்துப் போட்ட பதிவு அழிந்துவிட்ட்து போலும் அல்லது வாத்தியாருக்குப் போய்ச் சேரவில்லை.நானும் தானத்திற்குக் கையேந்துவதை விட ஏதாவது உருப்படியாக வருமானத்திற்கு ஏற்ற தொழில் செய்து சம்பாதித்து
    சேவைக்குப் பயன் படுத்தாலாம் என்பதில் உடன்பாடு உள்ள‌வனே! அதற்கான வழியைச் சொல்லிக் கொடுத்தால், ஒரு மத்தியதர, ஓய்வு பெற்றவன் கையைச்சுட்டுக் கொள்ளாமல் எவ்வளவு முதல் போட முடியுமோ அவ்வளவு போட்டு அல்லது வங்கிக் கடன் எடுத்துச் செய்யத் தயாரக உள்ளேன். என் வயது, உடல் நிலை, என் இருப்பிடம் ஆகியவையும் கணக்கில் கொள்ள வேண்டும்.எனக்குக் கடகராசி, கடக‌ லக்ன்ம் ஆனதால் எல்லாம் கொஞ்சம் குறுகிய கால ஆர்வக் கோளாராகவே முடிந்து விடுகிறது. மாற்றங்கள் வெகு சீக்கிரம் வ‌ந்துடுகின்றன‌.விரயத்தில்=12ல் 29 பரல்கள்.எனவே நிறையப் பணவிரயம். யோககரகன் செவ்வாய் 12ல் மறைந்ததால்(5,10க்கு உடையவரான செவ்வாய்)பார்த்த வேலையில், வளர்ச்சி இல்லாமல் முட்டுக்கட்டைகள் பல வந்துவிட்ட‌ன.

    ReplyDelete
  111. //சேவையை மட்டுமே பேசாமல் பாவை பக்கமாத் தாவுறீங்களேன்னு பெரியவர் கோவிச்சுக்குறார்..
    அதுனாலே திரும்பவும் அவருக்கு ஒரு வணக்கம் வெச்சு இப்படி விஷயங்களை பகிர்ந்துகொள்ள, நாமெல்லாம் தெரிந்து கொள்ள ஆக்கம் எழுதிய அவரின் முயற்சி தொடர்ந்து நம்மையெல்லாம் இணைக்கும் பாலமாக இருந்து உண்மையில் சேவை தேவைப்படுவோருக்கு
    உதவும் கரங்களாய் நம்மை மாற்றுருப் படுத்துமானால் அதுதான் இந்த ஆக்கத்துக்குக் கிடைத்த வெற்றி //

    இது.. இதுதான் மைனர் சரியான பார்வை.என் கட்டுரையைத் தொடர்ந்து நல்ல‌ ஒரு விவாதம் நடந்தது மகிழ்ச்சி.கொஞ்சமாவது விழிப்புணர்வு வந்து இருக்கலாம்.என் சார்பிலும் விவாத மேடைக்கு வந்த அனைவருக்கும் நன்றி,நன்றி, நன்றி. இந்த இடத்துப் பின்னூட்டம் இத்தோடு முடித்துக்கொண்டு வேறுஇடத்தில் தொடரலாம்.நன்றி வணக்கம்

    ReplyDelete
  112. செஞ்சுரி அடித்த தலைவிக்கு வாழ்த்துக்கள்னு யாருப்பா போஸ்டர் அடிக்கத் தயாராகிறது? நமக்குத்தான் இந்த விளம்பரம்லாம் புடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமில்ல?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com