மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.6.10

இருமடங்கு உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இருமடங்கு உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்?

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று
---------------------------------------------------------
இதன் துவக்கப் பகுதியும், அதற்கு அடுத்த பகுதியும்,  இதற்கு முன் உள்ள இடுகைகளில் உள்ளன. அவற்றைப்  படித்திராதவர்கள் அவற்றைப் படித்துவிட்டுப் பிறகு இதைப் படிக்கவும்!
-----------------------------------------------------------

32
வர்கோத்தமம்: ஒரு கிரகம் இராசியிலும் அம்சத்திலும் ஒரே இராசியில் காணப்படுதல் வர்கோத்தமம் எனப்படும். அது ஒருவருக்கு இருமடங்கு உயர்வு கிடைத்ததற்குச் சமமாகும்.

கிரகத்திற்கு மட்டுமல்ல, லக்கினத்திற்கும் அந்த வாய்ப்பு உண்டு. அதற்கு வர்கோத்தம லக்கினம் என்று பெயர்.
-------------------------------------------------

33
வக்கிரம் - Retrogression: ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.The backward motion of a planet.  “அவன் வக்கிரம் பிடித்தவனடா, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில் இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. 4 கிரகங்கள் வக்கிரமடைந்திருந்தால், ஜாதகன் பல தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பான். பின்லேடனின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் வக்கிரம் அடைந்துள்ளதாகச் செய்தி ஒன்றைப் படித்துள்ளேன்.
------------------------------------------------

34
அஷ்டம ராசி: எட்டாம் வீட்டைக்குறிக்கும். ஆயுள் ஸ்தானம். அத்துடன் வாழ்க்கையில் காத்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறிக்கும் வீடு. அதனால் முக்கியத்துவம் பெறுகிறது.
--------------------------------------------------------------------

35
முகூர்த்தம்: சுபகாரியங்களைச் செய்வதற்கு உகந்த நேரம். - auspecious time

நிகழும் சுபஸ்ரீ விக்ருதி வருடம் ஆனி மாதம் 31ஆம் நாள் (15-7.2010) வியாழக்கிழமை மக நட்சத்திரமும் அமிர்தயோகமும் சிம்ம லக்கினமும் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி நாழிகை 8 3/4 மேல் 111/4 நாழிகைக்குள் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் துலா லக்கின சுப முகூர்த்தத்தில் செல்வன்
சுந்தரத்திற்கும் செல்வி சுந்தரிக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப் பெற்று......” என்று திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருப்பீர்களே... அந்த சுபமுகூர்த்தம் இதுதான்.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------

36
ஜன்ம ராசி:Janma Rasi:

ஜாதகன் பிறந்த நேரத்தில் சந்திரன் குடியிருக்கும் ராசிக்கு ஜன்ம ராசி என்று பெயர்.Sign occupied by the moon at birth இந்த ஜன்ம ராசியை வைத்துத்தான் கோள்சாராப் பலன்களை அலச வேண்டும். இன்றையத் தேதியில் வானில் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்களின் நிலையைச் சொல்வதுதான் கோச்சாரம் அல்லது கோள்சாரம். அவற்றால் ஏற்படும் நன்மை தீமைகளைச் சொன்னால் அதற்குப்பெயர் கோச்சாரப் பலன்.    ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்ற தீய பலன்களும், குரு பர்வை உள்ளது போன்ற நல்ல பலன்களும் இந்த முறையில்தான் சொல்லப்படுகிறது.
--------------------------------------------------------------------
37
தசா Dasa -  Period  of  Directional  Influence.

கிரகங்கள் தங்களுடைய பங்கை ஜாதகனுக்கு வழங்கும் காலம்.
உங்களுடைய மொழியில் சொன்னால், பலர்காணப்  பெருமையுடன், நீங்கள், பல்லக்கில் செல்லும் காலம் அல்லது தோள் மற்றும் இடுப்பு எழும்பு ஒடிய பல்லக்கை நீங்கள் தூக்கிச் செல்ல வேண்டிய காலம்.

சூரியனுக்கு 6 ஆண்டுகள்
சந்திரனுக்கு 10 ஆண்டுகள்
செவ்வாய்க்கு 7 ஆண்டுகள்
ராகுவிற்கு 18 ஆண்டுகள்
குருவிற்கு 16 ஆண்டுகள்
சனிக்கு 19 ஆண்டுகள்
புதனுக்கு 17 ஆண்டுகள்
கேதுவிற்கு 7 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு 20 ஆண்டுகள்
---------------------------------------
ஆக மொத்தம் 120 ஆண்டுகள்
-----------------------------------------------
மொத்தம் 120 ஆண்டுகள்தானா? என்று யாரும் கேட்க வேண்டாம். அதுவரை வாழ்ந்தால் போதாதா? அவதிப்பட்டால் போதாதா? எத்தனை கோடி பணம் இருந்தாலும், 90 வயதிற்குமேல் உடம்பும் சொன்ன பேச்சைக் கேட்காது. கூட இருப்பவர்களும் சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்கள்.

”சார், நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன். எனக்கு துவக்க திசை சூரிய தசை. எனக்குக் சுக்கிர மகா தசை வராதா?” என்று யாரும் வருத்தமாகக் கேட்க வேண்டாம். அதுபோல  “நான் குருவின் நட்சத்திரத்தில் பிறந்தவன், ஆகவே எனக்கு ராகுதசை வருவதற்கு வாய்ப்பில்லை” என்று யாரும் துள்ளிக் குதிக்கவும் வேண்டாம். எல்லோருக்கும் எல்லா கிரகங்களின் தசைகளும் புக்தி (Sub -periods) வடிவில் வந்து விடும். ஒவ்வொரு கிரகத்தின் புக்தி நாட்களும், மகாதசை நாட்களும் அளவில் ஒன்றானதே! அதை மனதில் கொள்க!

உங்களுக்காக தசா & தசா புக்திக் காலங்களின் அட்டவணையைக் கொடுத்துள்ளேன். உதாரணத்திற்கு சுக்கிரனை எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கிர மகா தசையின் அளவு 7,200 நாட்கள். அதேபோல மற்ற கிரகங்களின் தசைகளில் வரும் சுக்கிர புக்தியின் (Sub -periods) அளவும் 7,200 நாட்களே. இதுபோல அனைத்துக் கிரகங்களூக்கான கால அளவையும். அதாவது மகா தசையின் அளவையும், புக்திகளின் அளவையும் நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் எழுத நேரமின்மையால், இன்று, இத்துடன் நிறைவு செய்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதிகள் தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

44 comments:

  1. "தொண்ணூறுக்கு மேல் தொல்லைகள் நூறு,
    தொல்லைகள் நீங்கி கைலாயம் போக
    அவன் திருவடியை மறவா தொழுது பாரு"
    பாடத்திற்கு நன்றி! நன்றி!!

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜோதிட அருஞ்சொற்கள் பகுதி 3- ல்
    வர்கோத்தமம்,
    வக்கிரம்,
    அஷ்டம ராசி,
    முகூர்த்தம்,
    ஜன்ம ராசி,தசா பற்றிய விபரங்கள்
    யாவும் விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும்
    கொடுத்துள்ள
    தங்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-16

    ReplyDelete
  3. நீசமான கிரஹம் வர்கோத்தமம் பெற்றால் வலிமை கூடுமா குறையுமா?

    ராசியில் நீசமும் அம்சத்தில் உச்சமும் பெற்ற கிரஹம் எவ்வள‌வு வலிமை பெற்றுள்ள‌து?

    சோதிடத்தில் சந்தேகம் தீர்ந்தவர்கள் யாராவது உண்டா?

    ReplyDelete
  4. 1.ஒரு கிரகம் வக்ரமாய் இருந்து அதே சமயம் அஸ்தமனமாகவும் இருந்தால்
    வக்ரத் தன்மை நீங்குமா ?
    2. ஒரு கிரகம் வக்ரமாய் இருந்து அதே சமயம் கிருஹ யுத்தத்திலும்
    ஈடுபட்டிருந்தால், எந்த கிரஹம் வலிமை பெற்றிருக்கிறதோ அதை ஒட்டித் தான்
    நடக்குமா ?
    3. புதன் ஒரு வருஷத்தில் பல சமயம் வக்ரமாய் ஆகிறது. சூர்யனுக்கு முன் ராசியிலே அல்லது பின் ராசியிலோ அல்லது சூரியன் இருக்கும் அதே ராசியில் தான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ( அதி சாரம் என்னும் நிலைகள் உள்ளன என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டாலும்) . வக்ரமாயும் அதே சமயம் அஸ்தங்கமாயும் இருக்கும் வாய்ப்புகள் புதனுக்கு அதிகம். அப்பொழுது
    என்ன சொல்வது.?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. ////Alasiam G said...
    "தொண்ணூறுக்கு மேல் தொல்லைகள் நூறு,
    தொல்லைகள் நீங்கி கைலாயம் போக
    அவன் திருவடியை மறவா தொழுது பாரு"
    பாடத்திற்கு நன்றி! நன்றி!!////

    தொண்ணூறுக்கு மேல் என்று இல்லை, எந்த வயதிலும் நீங்கள் சொன்னதைச் செய்யலாம் ஆலாசியம்!:-))))

    ReplyDelete
  6. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜோதிட அருஞ்சொற்கள் பகுதி 3- ல்
    வர்கோத்தமம்,
    வக்கிரம்,
    அஷ்டம ராசி,
    முகூர்த்தம்,
    ஜன்ம ராசி,தசா பற்றிய விபரங்கள்
    யாவும் விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும்
    கொடுத்துள்ள
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    குறை ஒன்றும் இருக்காது கோவிந்தா! தட்சணாமூர்த்தியின் பின்னூட்டங்களில் குறை ஒன்றும் இருக்காது கோவிந்தா!

    ReplyDelete
  7. /////kmr.krishnan said...
    நீசமான கிரஹம் வர்கோத்தமம் பெற்றால் வலிமை கூடுமா குறையுமா?//////

    நீசமான கிரகம் வர்கோத்தமம் பெற்றால் எப்படி வலிமை கூடும்? பூஜ்யத்தைப் பூஜ்யத்தால் எத்தனை முறைகள் பெருக்கினாலும் பூஜ்யம்தானே விடையாக வரும் சார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////ராசியில் நீசமும் அம்சத்தில் உச்சமும் பெற்ற கிரஹம் எவ்வள‌வு வலிமை பெற்றுள்ள‌து?/////

    உச்சத்திற்கு உள்ள வலிமை அதற்குக் கிடைக்கும். அதைத் தெரிந்துகொள்ளத்தானே அம்சம் உள்ளது!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////சோதிடத்தில் சந்தேகம் தீர்ந்தவர்கள் யாராவது உண்டா?//////

    ஜோதிடம் ஒரு கடல். கடலை முழுமையாக அறிந்தவர்கள் எவரேனும் உண்டா?

    ReplyDelete
  8. /////sury said...
    1.ஒரு கிரகம் வக்ரமாய் இருந்து அதே சமயம் அஸ்தமனமாகவும் இருந்தால்
    வக்ரத் தன்மை நீங்குமா ?//////

    நீங்காது.
    >>>>>>>>>>>>>
    2. ஒரு கிரகம் வக்ரமாய் இருந்து அதே சமயம் கிருஹ யுத்தத்திலும்
    ஈடுபட்டிருந்தால், எந்த கிரஹம் வலிமை பெற்றிருக்கிறதோ அதைஒட்டித் தான்
    நடக்குமா ?////

    ஆமாம்!
    >>>>>>>>>>>>>>>>
    3. புதன் ஒரு வருஷத்தில் பல சமயம் வக்ரமாய் ஆகிறது. சூர்யனுக்கு முன் ராசியிலே அல்லது பின் ராசியிலோ அல்லது சூரியன் இருக்கும் அதே ராசியில் தான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ( அதி சாரம் என்னும் நிலைகள் உள்ளன என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டாலும்) . வக்ரமாயும் அதே சமயம் அஸ்தங்கமாயும் இருக்கும் வாய்ப்புகள் புதனுக்கு அதிகம். அப்பொழுது
    என்ன சொல்வது.?
    சுப்பு ரத்தினம்.///////

    புதனுக்கு அஸ்தமனக் கணக்கு இல்லை என்று வாதிடுபவர்கள் உண்டு. வக்கிரம் இல்லை என்று சொல்பவர்கள் இல்லை. சூரியனுடன் புதன் சேரும்போது புத-ஆதித்யயோகம் உண்டாகும். அதை மட்டும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான். அதே யோகத்தில் புதன் வக்கிரமாக இருந்தால், ஜாதகனின் புத்திசாலித்தனம் கெட்டவழிகளில் செல்லும்! அந்த வழிகளில் அவன் கெட்டிக்காரனாக இருப்பான்.
    இதற்கு மேலும் விளக்கம் சொன்னால் பலரின் சாபத்திற்கு நான் ஆளாக நேரிடும்:-)))))

    ReplyDelete
  9. அருஞ்சொற்பொருள் பகுதி அரிய பல செய்திகளை தாங்கி வருகின்றது... ....நாளும் மிளிர்கின்றது ,,,,,,,,தங்கள் பணி போற்றுதலுக்கு உரியது .....நன்றி வணக்கம்,,,,,

    ReplyDelete
  10. ராகு கேது கேந்திரத்தில் வர்கோத்தமம் பெற்றால் நன்மையா அய்யா

    ReplyDelete
  11. ஐயா மானிடர்க்கு 90 வயது சரி....
    இந்தியாவிற்கு உள்ள ஜாதகத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு?

    மீண்டும் முதலில் இருந்து துவங்குமோ?

    ReplyDelete
  12. makara lagnam 6il,kethu 12il,ragu varkothamam petral enna balan aiya.athe makara lagnam 6kum,9kum,uriya buthan,10il,varkothamam petral enna balan aiya.kumba lagnathirku rasiyil 11il ulla sani[lagnathipathi],navamsathil mesha rasiyil neesam petral lagnathipathyin nilai, eppadi irukkum aiya

    ReplyDelete
  13. அய்யா,
    ஆண்களுக்கு குரு லக்னத்தில் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அவரை திருமணம் செய்யலாம் என்றிர்கள். ராசியில் குரு 4-லிலும் அம்சத்தில் லக்னத்திலும் இருந்தாலும் இதே பலன் தானா?

    ReplyDelete
  14. அய்யா..வணக்கம்..
    இந்த astrology யை astronomy யுடன் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட பல விவரங்களை படித்த வரையில் ஜனன கால ஜாதகம் ஜனனி ( or ஜனனன்?) யின் பிறந்த இடத்தின் longitude , lattitude பொறுத்து அந்த கணத்தில் கிரகங்கள் எங்கெங்கு இருந்தன என்பதை காண்பிப்பதாகவும், கோட்சாரம் இன்றைய, / அன்றன்று கிரகங்கள் இருக்கும் நிலையை காண்பிப்பதாகவும் இவை இரண்டிலுமே உள்ள விவரங்கள்(data ) அறிவியல் பூர்வமாக telescopic ரீடிங் என்று மிகத் துல்லியமாக அறியப்பட்டிருப்பது என்பது விளங்குகிறது..
    இந்த தசா புக்தி விவரங்கள்(data ) இப்படி அறிவியல் பூர்வமாக எப்படி சம்பந்தப்படுகிறது என்று நான் இதுவரையில் படிக்கவில்லை..அது பற்றிய தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்..
    இதைப்போலவே நவாம்சதுக்காக ராசிக்கட்டத்தினை ஒன்பது பாகமாகப் பிரிப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை (முந்தைய பாடங்களில் கொடுக்கப்பட்டிருகிறது.)விவரங்கள்(data ) இப்படி அறிவியல் பூர்வமாக எப்படி சம்பந்தப்படுகிறது என்பது பற்றிய தங்களின் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  15. ////astroadhi said...
    அருஞ்சொற்பொருள் பகுதி அரிய பல செய்திகளை தாங்கி வருகின்றது... ....நாளும் மிளிர்கின்றது ,,,,,,,,தங்கள் பணி போற்றுதலுக்கு உரியது .....நன்றி வணக்கம்,,,,,/////

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  16. /////Sekar said...
    ராகு கேது கேந்திரத்தில் வர்கோத்தமம் பெற்றால் நன்மையா அய்யா//////

    நன்மைதான். ஜாதகனுக்குத் தீங்குகளைச் செய்யாமல் இருப்பார்கள். தீயவர்கள் வாயை மூடிக்கொண்டிருப்பதே நன்மைதானே?

    ReplyDelete
  17. தமிழ்மணி said...
    ஐயா மானிடர்க்கு 90 வயது சரி....
    இந்தியாவிற்கு உள்ள ஜாதகத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு?
    மீண்டும் முதலில் இருந்து துவங்குமோ?

    இல்லை தேசங்களுக்கு என்று தனியான ஜோதிடம் இருக்கிறது. அதற்குப் பெயர். Mundane Astrology. தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். அது வடமொழிச்சொல் அது relating to the world or worldly matters

    In Mundane Astrology, the Seventh House may represent diplomacy & War but in Natal Astrology, it represents the Life-Partner & love-life.

    விளக்கம்போதுமா தமிழ்மணி?

    ReplyDelete
  18. uma said...
    makara lagnam 6il,kethu 12il,ragu varkothamam petral enna balan aiya.athe makara lagnam 6kum,9kum,uriya buthan,10il,varkothamam petral enna balan aiya.kumba lagnathirku rasiyil 11il ulla sani[lagnathipathi],navamsathil mesha rasiyil neesam petral lagnathipathyin nilai, eppadi irukkum aiya

    பெரிய கட்டுரைக்கான மேட்டர் அது. தனிக்கட்டுரையாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  19. ///////Eswari said...
    அய்யா,
    ஆண்களுக்கு குரு லக்னத்தில் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அவரை திருமணம் செய்யலாம் என்றிர்கள். ராசியில் குரு 4-லிலும் அம்சத்தில் லக்னத்திலும் இருந்தாலும் இதே பலன் தானா?/////

    இல்லை லக்கினத்திற்கு மட்டும்தான் அந்தப் பலன்! (லக்கினத்தில் இருந்து 5ஆம், 7ஆம் 9ஆம் ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுவதால் ஜாதகனின் வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள்)

    ReplyDelete
  20. minorwall said...
    அய்யா..வணக்கம்..
    இந்த astrology யை astronomy யுடன் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட பல விவரங்களை படித்த வரையில் ஜனன கால ஜாதகம் ஜனனி ( or ஜனனன்?) யின் பிறந்த இடத்தின் longitude , lattitude பொறுத்து அந்த கணத்தில் கிரகங்கள் எங்கெங்கு இருந்தன என்பதை காண்பிப்பதாகவும், கோட்சாரம் இன்றைய, / அன்றன்று கிரகங்கள் இருக்கும் நிலையை காண்பிப்பதாகவும் இவை இரண்டிலுமே உள்ள விவரங்கள்(data ) அறிவியல் பூர்வமாக telescopic ரீடிங் என்று மிகத் துல்லியமாக அறியப்பட்டிருப்பது என்பது விளங்குகிறது..
    இந்த தசா புக்தி விவரங்கள்(data ) இப்படி அறிவியல் பூர்வமாக எப்படி சம்பந்தப்படுகிறது என்று நான் இதுவரையில் படிக்கவில்லை..அது பற்றிய தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்..
    இதைப்போலவே நவாம்சதுக்காக ராசிக்கட்டத்தினை ஒன்பது பாகமாகப் பிரிப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை (முந்தைய பாடங்களில் கொடுக்கப்பட்டிருகிறது.)விவரங்கள்(data ) இப்படி அறிவியல் பூர்வமாக எப்படி சம்பந்தப்படுகிறது என்பது பற்றிய தங்களின் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்../////

    அறிவியல்வாதிகள் இறைவனையும் ஏற்றுக்கொள்வதில்லை. கிரகங்கள் மனிதனை மேய்க்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை. அவை இரண்டுமே நம்பிக்கை மற்றும் அனுபவ அடிப்படையில்தான் கடைப் பிடிக்கப்படுகின்றன மைனர்.

    ReplyDelete
  21. //இல்லை லக்கினத்திற்கு மட்டும்தான் அந்தப் பலன்!//
    ராசி கட்டத்தில் லக்னத்தில் குரு இருந்தால் மட்டும் தான் அந்த பலனா?

    ReplyDelete
  22. ஐயா - எனக்கு அஷ்டம சனி நடக்கிறது, நட்சத்திரம் - பூரட்டாதி. எனக்கு வரும் ஒரு வருடம் எப்படி இருக்கும்? தயவு செய்து சொல்ல முடியுமா? நன்றி!

    ReplyDelete
  23. ////Eswari said...
    //இல்லை லக்கினத்திற்கு மட்டும்தான் அந்தப் பலன்!//
    ராசி கட்டத்தில் லக்னத்தில் குரு இருந்தால் மட்டும் தான் அந்த பலனா?////

    ஆமாம்!

    ReplyDelete
  24. /////Software Engineer said...
    ஐயா - எனக்கு அஷ்டம சனி நடக்கிறது, நட்சத்திரம் - பூரட்டாதி. எனக்கு வரும் ஒரு வருடம் எப்படி இருக்கும்? தயவு செய்து சொல்ல முடியுமா? நன்றி!/////

    உங்கள் ஜாதகத்தில் கன்னி வீட்டில் எத்தனை பரல்கள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து மாறுபடும். 30ம், 30ற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் பாதிப்பு இருக்காது. 28ற்குக் குறைவாக இருந்தால், தாமதம், தடங்கல்கள், எதிர்ப்புக்கள், ஏமாற்றங்கள், தொல்லைகள் என்று அஷ்டமத்துச் சனி படுத்தி எடுக்கும்.

    ReplyDelete
  25. நன்றி அய்யா.
    ஒரு விண்ணப்பம். ஜாதக ரீதியாக இந்தியாவின் பொருளாதார, வெளிவிவகாரம் (சீனா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா - பிரச்சனைகள் ) குறித்த பலன்களை ஓர் பதிவு தருவீர்களா?

    ReplyDelete
  26. எனக்கு டிசம்பர் முதல் வேலை இல்லை. வருமானம் கிடையாது.
    இன்ன தேதியில் தான் ஒருவருக்கு வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? பாடங்களை படித்து புரிந்துகொண்ட கேள்வி கேட்கவும் என்று சொல்ல வேண்டாம். அந்த மாதிரி சொல்லக்கூடிய ஆட்கள் இருந்தால் சொல்லவும். இடையில் நான் ஏதாவது படிக்க செல்லலாம்.

    ReplyDelete
  27. நன்றி..எனக்கு புதன் டபுள் கிரெடிட் (லக்கினத்திலே இருந்து) ஆகியுள்ளார்..(11ஆம் ஆதி ) சுய வர்க்கம் 7 ..

    ReplyDelete
  28. உள்ளேன் ஐயா. (இன்று பிறருடைய பின்னூட்டத்தையும் தங்களுடைய பதில்களையும் ரசித்து படித்ததால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என் மூளை அல்லது சிந்தனைக்கு இன்று விடுமுறை).

    ReplyDelete
  29. /////தமிழ்மணி said...
    நன்றி அய்யா.
    ஒரு விண்ணப்பம். ஜாதக ரீதியாக இந்தியாவின் பொருளாதார, வெளிவிவகாரம் (சீனா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா - பிரச்சனைகள் ) குறித்த பலன்களை ஓர் பதிவு தருவீர்களா?///////

    நம் விவகாரங்களைப் பார்ப்பதற்கே நமக்கு நேரம் போதவில்லை. வெளிவிவகாரம் எல்லாம் எதற்கு சுவாமி?
    உங்கள் ஆர்வம் புரிகிறது. நாடுகளுக்கான் ஜோதிடப் பாடங்கள் (Mundane Astrology), பின்னால் வரும். அதாவது எழுதலாம் என்றிருக்கிறேன். அப்போது பார்க்கலாம்!

    ReplyDelete
  30. /////Rangan Kandaswamy said...
    எனக்கு டிசம்பர் முதல் வேலை இல்லை. வருமானம் கிடையாது.
    இன்ன தேதியில் தான் ஒருவருக்கு வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? பாடங்களை படித்து புரிந்துகொண்ட கேள்வி கேட்கவும் என்று சொல்ல வேண்டாம். அந்த மாதிரி சொல்லக்கூடிய ஆட்கள் இருந்தால் சொல்லவும். இடையில் நான் ஏதாவது படிக்க செல்லலாம்.//////

    பத்தாம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில் கோச்சாரசனி இருக்கும் போது அல்லது ஆறாம் இடத்து அதிபதியின் தசையில், சுயவர்க்கப் பரல் குறைவாக இருக்கும் சனியின் புத்தியில் அப்படி நடக்கும். அலசினால்தான் தெரியும். எனக்கு அதற்கெல்லாம் (தனிப்பட்டவர்களின் ஜாதகத்தை அலசுவதற்கு) நேரமில்லை. இருக்கும் ஊரிலேயே நல்ல ஜோதிடராகப் பாருங்கள்.

    ReplyDelete
  31. ////minorwall said...
    நன்றி..எனக்கு புதன் டபுள் கிரெடிட் (லக்கினத்திலே இருந்து) ஆகியுள்ளார்..(11ஆம் ஆதி ) சுய வர்க்கம் 7 ////

    அதனால்தான் உங்களுக்கு மைனர் பட்டம்...

    ReplyDelete
  32. ///ananth said...
    உள்ளேன் ஐயா. (இன்று பிறருடைய பின்னூட்டத்தையும் தங்களுடைய பதில்களையும் ரசித்து படித்ததால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என் மூளை அல்லது சிந்தனைக்கு இன்று விடுமுறை).//////

    கொடுத்துவைத்த மகராசன்!

    ReplyDelete
  33. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கரணங்கள் பதினொன்று அவைகளாவன:-

    1. பவம்*, 2.பாலவம்*, 3.கௌலவம்* 4.தைதுலம்*, 5.கரசை*, 6.வணிசை,
    7.பத்திரை, 8.சகுனி, 9.சதுஷ்பாதம்,10. நாகவம், 11.கிம்ஸ்துக்கினம்.

    இவைகளில், * குறி போட்டவைகள் சுபகரனங்கள் ஆகும்.

    கரணத்தின் பலன்:- முக்கியமாக பயிர்த் தொழிலுக்குப்
    பார்க்கப்படும்.

    இதனை வாசன் பஞ்சாங்கத்தில் 79 ஆம் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.
    = = = = = = = = = == = = = = = = = = = = = =

    தாங்கள் பஞ்சாங்கத்தினை ஞாபகப்படுத்தியுள்ளதைப் பார்த்துவிட்டு,தேட ஆரம்பித்தேன்.
    28 ஆம் நம்பர் பஞ்சாங்கத்தில் இல்லை.
    வாசன் பஞ்சாங்கத்தைப் பார்த்த போது இருந்தது.
    தங்களின் தகவலுக்காக அனுப்பியுள்ளேன்.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-15

    ReplyDelete
  34. பாடம் அருமை ஐயா. நான் கேட்க நினைத்ததெல்லாம் மற்றவர்கள் கேட்டுவிட்டதால், விடு ஜூட்.

    அன்புடன்,
    செங்கோவி

    ReplyDelete
  35. ///////Eswari said...
    அய்யா,
    ஆண்களுக்கு குரு லக்னத்தில் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அவரை திருமணம் செய்யலாம் என்றிர்கள். ராசியில் குரு 4-லிலும் அம்சத்தில் லக்னத்திலும் இருந்தாலும் இதே பலன் தானா?/////

    இல்லை லக்கினத்திற்கு மட்டும்தான் அந்தப் பலன்! (லக்கினத்தில் இருந்து 5ஆம், 7ஆம் 9ஆம் ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுவதால் ஜாதகனின் வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள்

    அய்யா ,
    பெண்களுக்கு குரு லக்னத்தில் இருந்தால் ???

    ReplyDelete
  36. ////SP.VR. SUBBAIYA said...
    தமிழ்மணி said...
    ஐயா மானிடர்க்கு 90 வயது சரி....
    இந்தியாவிற்கு உள்ள ஜாதகத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு?
    மீண்டும் முதலில் இருந்து துவங்குமோ?

    இல்லை தேசங்களுக்கு என்று தனியான ஜோதிடம் இருக்கிறது. அதற்குப் பெயர். Mundane Astrology. தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். அது வடமொழிச்சொல் அது relating to the world or worldly matters

    In Mundane Astrology, the Seventh House may represent diplomacy & War but in Natal Astrology, it represents the Life-Partner & love-life.

    விளக்கம்போதுமா தமிழ்மணி?////

    it is interesting to say both these Mundane & Natal astrologies are designating the 7th place to take care of
    external affairs-Mundane
    Love affairs-Natal...
    In your quote love-life is equated to war..what a nice co-incidence..

    சரி..சார்..மேட்டருக்கு வருவோம்..mundaneவெளிவிவகாரம் போகட்டும்..Natal வெளி விவகாரம் பத்தி, அதான் சார் 7ஆம் இடம் பத்தி இன்னும் class எடுக்கலையே..எப்போ சார்..?
    pre -marital affairs, extra - marital affairs அப்புடி- இப்புடின்னு ஏகப்பட்ட வெளி விவகாரம் புடிச்ச interesting subject ஆச்சே..

    ReplyDelete
  37. SHEN said...
    பாடம் அருமை ஐயா. நான் கேட்க நினைத்ததெல்லாம் மற்றவர்கள் கேட்டுவிட்டதால், விடு ஜூட்.
    அன்புடன்,
    செங்கோவி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. /////லட்சுமி said...
    ///////Eswari said...
    அய்யா,
    ஆண்களுக்கு குரு லக்னத்தில் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அவரை திருமணம் செய்யலாம் என்றிர்கள். ராசியில் குரு 4-லிலும் அம்சத்தில் லக்னத்திலும் இருந்தாலும் இதே பலன் தானா?/////
    இல்லை லக்கினத்திற்கு மட்டும்தான் அந்தப் பலன்! (லக்கினத்தில் இருந்து 5ஆம், 7ஆம் 9ஆம் ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுவதால் ஜாதகனின் வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள்
    அய்யா ,
    பெண்களுக்கு குரு லக்னத்தில் இருந்தால் ???////

    அதே பலன்கள்தான் சகோதரி. நல்ல கணவன் அமைவான். மனைவி சொல்லே மந்திரம் என்பான்!

    ReplyDelete
  39. ///V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கரணங்கள் பதினொன்று அவைகளாவன:-
    1. பவம்*, 2.பாலவம்*, 3.கௌலவம்* 4.தைதுலம்*, 5.கரசை*, 6.வணிசை,
    7.பத்திரை, 8.சகுனி, 9.சதுஷ்பாதம்,10. நாகவம், 11.கிம்ஸ்துக்கினம்.
    இவைகளில், * குறி போட்டவைகள் சுபகரனங்கள் ஆகும்.
    கரணத்தின் பலன்:- முக்கியமாக பயிர்த் தொழிலுக்குப்
    பார்க்கப்படும்.
    இதனை வாசன் பஞ்சாங்கத்தில் 79 ஆம் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.
    = = = = = = = = = == = = = = = = = = = = = =
    தாங்கள் பஞ்சாங்கத்தினை ஞாபகப்படுத்தியுள்ளதைப் பார்த்துவிட்டு,தேட ஆரம்பித்தேன்.
    28 ஆம் நம்பர் பஞ்சாங்கத்தில் இல்லை.
    வாசன் பஞ்சாங்கத்தைப் பார்த்த போது இருந்தது.
    தங்களின் தகவலுக்காக அனுப்பியுள்ளேன்.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    உங்களின் உதவிக்கும் மேலதிகத்தகவலைத் தேடிப்பிடித்துக்கொடுத்தமைக்கும் நன்றி .தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  40. ////minorwall said...
    ////SP.VR. SUBBAIYA said...
    தமிழ்மணி said...
    ஐயா மானிடர்க்கு 90 வயது சரி....
    இந்தியாவிற்கு உள்ள ஜாதகத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு?
    மீண்டும் முதலில் இருந்து துவங்குமோ?
    இல்லை தேசங்களுக்கு என்று தனியான ஜோதிடம் இருக்கிறது. அதற்குப் பெயர். Mundane Astrology. தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். அது வடமொழிச்சொல் அது relating to the world or worldly matters
    In Mundane Astrology, the Seventh House may represent diplomacy & War but in Natal Astrology, it represents the Life-Partner & love-life.
    விளக்கம்போதுமா தமிழ்மணி?////
    it is interesting to say both these Mundane & Natal astrologies are designating the 7th place to take care of
    external affairs-Mundane Love affairs-Natal...
    In your quote love-life is equated to war..what a nice co-incidence..
    சரி..சார்..மேட்டருக்கு வருவோம்..mundaneவெளிவிவகாரம் போகட்டும்..Natal வெளி விவகாரம் பத்தி, அதான் சார் 7ஆம் இடம் பத்தி இன்னும் class எடுக்கலையே..எப்போ சார்..?
    pre -marital affairs, extra - marital affairs அப்புடி- இப்புடின்னு ஏகப்பட்ட வெளி விவகாரம் புடிச்ச interesting subject ஆச்சே..//////

    திகட்டத் திகட்ட எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களைப் புரட்டிப் பாருங்கள் மைனர்!

    ReplyDelete
  41. sorry சார். சுத்தமா படிச்ச ஞாபகமே இல்லை..7ஆம் இடம் சம்பந்தப்பட்டஅந்த பாடத்தை கூடுதுறையாரின் தொகுப்பில் தேடி எடுத்து அந்த படத்தை பார்த்ததுமே எனக்கு நினைவு வந்து விட்டது..ஆனாலும் மீண்டும் ஒரு முறை படித்தேன்.
    ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் தென்படுகின்றன..கேள்விகளும் எழுகின்றன..விளைவுகள் என்ன என்ன ஆகும் என்று இன்னும் விளக்கமாக இருந்திருக்கலாம்..அடுத்து வரும் பதிவுகளில் வந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..உதாரணத்திற்கு திருமண யோகத்துக்கு எதிரான அமைப்புகள் என்று ஒரு 12 விஷயங்களைப் பட்டியலிட்டு இருக்கிறீர்கள்..அப்படி இருந்தால் திருமணமே ஆகாதா?அல்லது ஆனா திருமணம் வேலைக்காகாதா?எந்த வகையில் விளைவுகள் அமையும் என்று அனுபவ அடிப்படையிலான ஜாதகங்களை மேற்கோள் காட்டி விளக்குவீர்களேயானால் இன்னும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்..திகட்டுவது என்பது என்றுமே ஏற்படாது..வெவ்வேறு சுவைகளில் ஆசிரியரின் கைவண்ணத்தில் வெளிவரும் பாடங்கள் திகட்டுமா என்ன?

    ReplyDelete
  42. /////minorwall said...
    sorry சார். சுத்தமா படிச்ச ஞாபகமே இல்லை..7ஆம் இடம் சம்பந்தப்பட்டஅந்த பாடத்தை கூடுதுறையாரின் தொகுப்பில் தேடி எடுத்து அந்த படத்தை பார்த்ததுமே எனக்கு நினைவு வந்து விட்டது..ஆனாலும் மீண்டும் ஒரு முறை படித்தேன்.
    ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் தென்படுகின்றன..கேள்விகளும் எழுகின்றன..விளைவுகள் என்ன என்ன ஆகும் என்று இன்னும் விளக்கமாக இருந்திருக்கலாம்..அடுத்து வரும் பதிவுகளில் வந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..உதாரணத்திற்கு திருமண யோகத்துக்கு எதிரான அமைப்புகள் என்று ஒரு 12 விஷயங்களைப் பட்டியலிட்டு இருக்கிறீர்கள்..அப்படி இருந்தால் திருமணமே ஆகாதா?அல்லது ஆனா திருமணம் வேலைக்காகாதா?எந்த வகையில் விளைவுகள் அமையும் என்று அனுபவ அடிப்படையிலான ஜாதகங்களை மேற்கோள் காட்டி விளக்குவீர்களேயானால் இன்னும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்..திகட்டுவது என்பது என்றுமே ஏற்படாது..வெவ்வேறு சுவைகளில் ஆசிரியரின் கைவண்ணத்தில் வெளிவரும் பாடங்கள் திகட்டுமா என்ன?////////

    வாத்தியாரைப்பற்றிய உங்களுடைய நல்ல அபிப்பிராயத்திற்கு நன்றி. நீங்கள் சொல்லியபடி நேரம் கிடைக்கும்போது பின்னால் எழுதுகிறேன். பொறுத்திருங்கள் மைனர்!

    ReplyDelete
  43. Dear sir,

    today is just seen the status of various plant again in my horoscope, i surprised to see that 4 planets 1. Guru in 7th house (Mithunam) 2. Mercurry in Lagnam, 3.Mars in Kadagam, 4. Satruan in Simmam are in Retrogression or Vakkiram. Is it will affect the life badly, like osama (u have mentioned he had 4 planets are in vakkiram.

    ReplyDelete
  44. ////Ram said...
    Dear sir,
    today is just seen the status of various plant again in my horoscope, i surprised to see that 4 planets 1. Guru in 7th house (Mithunam) 2. Mercurry in Lagnam, 3.Mars in Kadagam, 4. Satruan in Simmam are in Retrogression or Vakkiram. Is it will affect the life badly, like osama (u have mentioned he had 4 planets are in vakkiram. /////

    இதைத் தனி மின்னஞ்சலிலும் கேட்டிருந்தீர்கள். அதற்குப் பதில் எழுதியுள்ளேன். அதைப் பாருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com