மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.6.10

சில பெயர் விநோதங்கள்!



=================================================
சில பெயர் விநோதங்கள்!

சில பெயர்கள் விநோதமாக இருக்கும்.அதாவது அந்தப் பெயரை உடையவர்கள் பெயருக்குச் சம்பந்தமில்லாமல் விநோதமாக இருப்பார்கள். அன்னபூரணி என்று பெயர்வைப்பார்கள். அம்மணி வாழ்க்கைமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவராக இருப்பார். ஆரோக்கியசாமி என்று பெயர் வைப்பார்கள். ஆசாமி எப்போதும் (மருந்து) பாட்டிலும் கையுமாக இருப்பார். ஆண்டி என்று பெயர் வைப்பார்கள். அதாவது மாயண்டி, வேலாண்டி என்று பெயர் வைப்பார்கள், ஆசாமி பென்ஸ் காரில் போய்க்கொண்டிருப்பார். செல்வம் என்று பெயர் வைப்பார்கள். பையன் கூலி வேலைபார்க்க நேரிடும். அதாவது எதிர்மறையான பலன் இருக்கும்.

ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!

யார் அவர்?

வாருங்கள் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூர்

நவக்கிரகக் கோவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!

சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!

செல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரனின் ஆசி வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் சொல்லாமலேயே கிடைக்கும். தேடாமலேயே நாடிவரும்!

ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும், சுக்கிரனை மனமுருக வணங்குவது நன்மை பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரனைப் பற்றிய கதைகள்:

அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம் இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகளைப் பெற்றார் (He acquired great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரம்.
அந்த மந்திரத்தின் பெயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.

கதையின் திருப்புமுனை அதாவது டர்னிங் பாயிண்ட் என்னவென்றால், ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தபோது, சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி இறந்த அசுரர்களையெல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். தேவர்கள் யுத்தத்தை நிறுத்திவிட்டு, சிவனாரிடம் சென்று நிலைமையைச் சொல்லி, தங்களைக் காக்கவேண்டி, மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முறையற்ற செயலைக்
கண்ணுற்ற சிவனார் கோபமுற்று, சுக்கிராச்சாரியாரை ஒரே போடாகப் போட்டு, விழுங்கிவிட்டார். ஆமாம் swallowed him (எப்படி என்று கேட்கக்கூடாது. வரலாற்றிற்கெல்லாம் விளக்கம் சொல்ல ஆளில்லை. நம்பவேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திலேயே கதை என்று சொல்லிவிட்டேன்.) அங்கேயும், அதாவது, சிவானாரின் திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், பெயிலில் வாரமல், விடுதலை பெற்றே
வந்துவிட்டார்.

இன்னொரு கதையும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்கேட்டு, அதில் சுக்கிராச்சாரியார் தலையை நுழைத்த கதையும் உண்டு. பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் அதை விவரிக்கவில்லை!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. இந்த ஆலயம் சுக்கிர பகவான் உறையும் இடமாகும். மதுரை ஆதினத்தின் கீழ் இக்கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம், திருவாடுதுறை, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் என்று பசுமையான ஊர்கள். சோழநாட்டின் வடபகுதியில் உள்ள பல தேவார ஸ்தலங்களில் கஞ்சனூரும் ஒன்றாகும்.

சுக்கிரனுக்கென்று இங்கே தனியாக கருவறையோ அல்லது உருவச்சிலையோ இல்லை. சுக்கிரனின் அருளை வேண்டிவருபவர்கள், தங்கள் வேண்டுகோளை சிவனாரிடமே சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவபெருமானே அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின் சிறப்பு!

There is no idol for Sukran here. Shiva blesses those who come with their prayers to Sukran.

கஞ்சனூர் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்தான். மாயவரத்தில் இருந்தும், ஆடுதுறை, மற்றும் திருவிடைமருதூரில் இருந்தும் பேருந்துகள்
உள்ளன!

தங்குவதற்கு வசதியான இடம் தேடுவோர், கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.

கஞ்சனூரில் நல்ல உணவு, கோவிலில் கிடைக்கும் பிரசாதம் மட்டுமே!

கோவிலில் சன்னதி திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணிவரை.

முக்கிய விழாக்கள்: ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, ஆருத்ராதரிசனம், ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானவையாகும்!

உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நிறம்: வெள்ளை வஸ்திரம், வெள்ளைத்தாமரை
நவரத்தினம்: வைரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: மொச்சை
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் ராஜதபாய வித்மஹே
பிருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!

("Om Rajadabaaya vidmahe,
Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
வேதகால மந்திரம்:

Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்கையுடனும், அலைபாயும் மனமின்றி, தன்முனைப்புடனும், குறைந்தது 108 முறைகளாவது சொல்லிப் பிரார்த்திக்கப்படவேண்டும். அப்போதுதான் பலன். இல்லையென்றால், உங்களுடைய பொன்னான நேரம்
வீணாகும். அது மட்டுமே பலனாக இருக்கும். அதை மனதில் கொள்க!

மேலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife, own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments, indigestion, and impotency, loss of appetite and skin problems.

ஒருமுறை கஞ்சனூர் சென்று வாருங்கள். சுக்கிரனின் அருளை வென்று வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

22 comments:

  1. அய்யா இனிய காலை வணக்கம்....

    சுக்ர பகவான் தலம் குறித்த விளக்கம் அருமை....

    நன்றி வணக்கம்....

    ReplyDelete
  2. Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
    sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham

    ஹிம குந்த ம்ருணாளாபம் தைத்யாநாம் பரமம் குரும் |
    ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாமி அஹம் ||

    (பனி, மல்லிகை, தாமரைத்தண்டின் உட்புறம் இவைபோல் வெண்மை நிறம் கொண்டவரும், அஸுர குருவும், நூலறிவு பெற்றவரும், ப்ருகு முனிவரின் வழித்தோன்ற லுமான சுக்ர பகவானை நான் வணங்குகிறேன்)

    கஞ்சன் – கம்ஸன்
    கம்ஸன் வழிபட்ட லிங்கம் திருச்சுற்றில் உள்ளது.கம்ஸன் வழிபட்டதால் கஞ்சனூர்


    தேவ்

    ReplyDelete
  3. Sir, thank you so much for the lesson about Sukran.

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியருக்கு

    சுக்கிர பகவான் குச்சனூர் விளக்கம் அருமை. எனக்கு 10இல் சூரியனுடன் சுக்கிரன் விருச்ஷிக லக்னம்.

    நன்றீ ஸார்.

    அன்புள்ள மாணவன்
    அருள்குமார் ராஜாராமன்

    ReplyDelete
  5. வாத்தி (யார்) ஐயா!

    வணக்கம்.

    நல்லது ஐயா!
    அப்படியே ஆகட்டும்.

    உலகிற்கு பொதுமறை தந்த

    ஐயன் ' திருவள்ளுவன்'!
    'உலக பொது மறையில் கூறியது போல்

    அறம்! பொருள்! இன்பம்! கிடைக்க
    உள்ளன்போடு அடியவனை ஆசிர்வதிக்க வேண்டும் ஐயா!

    ReplyDelete
  6. சுக்ராச்சாரியார் வயிற்றுக்குள் இருந்தா போது சிவன் பள்ளி கொண்ட தலம் என்று சொல்லு வதுண்டு அதனாலேயே சுக்கிரனுக்கு தனி சந்நிதி கிடையாது அதனால் வயிற்ருக்குள் இருந்த படியே தரிசனம் !!!!!!!
    சுக்கிரன் வயிறுக்குள் இருந்த படி பார்வதியை பிரார்த்திக்க பார்வதி சிவன் அருகில் வந்து சிவனை மகிழ்விக்க சிவனின் சுக்கிலம் வழியே வெளிவந்தராம் அதனால்தான் இவருக்கு சுக்கிரன் என்று பெயராம் . (எல்லாம் செவி வழி செய்தி ஆசிரியரே ) நம் கணக்கு படி சுக்கிரன் வெள்ளியை குறிக்கும் என்று நினைக்கிறேன் " அதனால்தான்" வெள்ளி (சுக்கிரன்) வெள்ளையாய் இருக்கிறதாம்

    ReplyDelete
  7. நிலத்திற்கு செவ்வாய் காரகர் எனினும் அதன் மேல் அமையும் வீட்டிற்கு சுக்கிரன் தான் காரகர். தாங்கள் சொல்லியிருப்பது போல். சுக்கிரனுக்கு ஒரு கண்தான் என்றும் அதற்கு விஷ்ணுவின் வாமன அவதாரம்தான் காரணம் என்று படித்திருக்கிறேன். (பதிவின் நீளம் கருதி தாங்கள் சொல்லாமல் விட்ட கதையில் இதுவும் உண்டு). நம் உடலில் சுக்கிலத்தை ஆட்கொள்வதால் சுக்கிரன் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது. இவர் ஜாககத்தில் கெட்டிருந்தால் துறவரம் தான் சரி வரும் போலிருக்கிறது. சக்தி பீடம் நிறுவுபவர்கள், சக்தி உபாசகர்கள் இவர்களெல்லாம் சுக்கிரனின் அருள் பெற்றவர்கள் என்றும் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. ‌சுக்ராசாரியாருக்கு சஞ்ஜீவினி வித்தை, அதாவது போரில் இறந்த வீரர்களை உயிர்ப்பிக்கும் தந்திரம் தெரியும். இதை வைத்து அசுரர்களுக்கு வெற்றிக் கனியை சுலபமாகப் பெற்று தந்து வ‌ந்தார்.போரில் அசுர‌ர்க‌ளை வெல்ல‌ முடியாத‌ தேவ‌ர்கள் ப்ரஹஸ்பதியின் புத்திரன் கசனை சுக்ராச்சாரியாரிடம் சீடனாக அனுப்பினர்.கசனும் தன் குருசேவையால் சுக்ர‌ரை
    க‌வர்ந்துவிட்டான்.க‌ச‌னுக்கு சஞ்ஜீவினியை சுக்ர‌ர் சொல்லிக்கொடுத்துவிடுவார் என்ப‌தால் அசுர‌ர்க‌ள் க‌ச‌னின் உயிருக்கு அடிக்கடி உலை வைத்தார்க‌ள்.ப்ர‌ஹஸ்ப‌தியின் பெண் தேவ‌யானி க‌ச‌னை ஒருதலையாகக் காதலிக்கிறாள். ஒவ்வொரு முறையும் க‌ச‌ன் உயிரை சுக்ர‌ரை வேண்டி தேவ‌யானி மீட்டு எடுக்கிறாள்.க‌டைசி முறையாக‌ க‌ச‌னின் சாம்ப‌லை ம‌துவில் க‌லந்து சுக்ர‌ருக்குக் கொடுத்துவிடுகிறார்க‌ள் அசுர‌ர்கள்.க‌ச‌னைக் காணா‌து, சஞ்ஜீவினியைச் சொல்கிறார் சுக்ர‌ர்."குருவே உங‌க‌ள் வ‌யிற்றில் உள்ளேன்!"என்கிறான் க‌ச‌ன். வேறு வ‌ழியின்றி ச‌ஞ்ஜீவினியை வ‌யிற்றில்
    உள்ள‌ க‌ச‌னுக்கு உப‌தேசித்து வ‌யிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியில் வந்து
    இறந்த‌ த‌ன் உட‌லை உயிர்பிக்குமாறு க‌ச‌னுக்குச் சொல்கிறார் சுக்ர‌ர். க‌ச‌னும்
    அதுபோல‌வே சுக்ர‌ர் உயி‌ரைத் தான் க‌ற்ற‌ ச‌ஞ்ஜீவினியால் உயிர்பித்துவிடுகிறான்.சுக்ர‌ர் ம‌க‌ளிட‌ம் தான் சுக்ர‌ர் வ‌யிற்றில் பிற்ந்ததால் இருவரும் சகோதர‍ ‍‍‍சகோதரி உற‌வு என்று கூறி அவ‌ள் காத‌லை நிராகரித்து
    தேவ‌லோக‌த்திற்குப் ப‌றந்து விடுகிறான்.


    ReplyDelete
  9. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நவக்கிரகக் கோவில்கள் வரிசையில்,
    சுக்கிரனுக்கான ஸ்தலம் கஞ்சனூர் ஆலயம் படங்கள்
    நன்றாக உள்ளது.சுக்கிரன் பற்றிய விளக்கம்,ஸ்தலம் குறித்த
    விபரங்களையும்,அருமை யாக கொடுத்துள்ள தங்களுக்கு மிக்க
    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-02

    ReplyDelete
  10. Dear Sir,
    Thanks for the informations and slogams.

    ReplyDelete
  11. //ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!//

    சுக்ர ஸ்தலம் கஞ்சனூர் !!
    சரிதானே !! எப்படி ?
    காஞ்சன் என்றால் தங்கம் என்றும் பொருள் உண்டு.
    காஞ்சனூர், கஞ்சனூர் ஆகியிருப்பதற்கும் வாய்ப்பு உண்டல்லவா ?

    அது இருக்கட்டும்.
    சுக்ரன் இருக்கும் இடம், தன் இடமா நண்பர்கள், விரோதிகள் இடமா என்றெல்லாம் பார்க்கலாம்.
    இருந்தாலும் சுக்ரன் தன் இடத்திலேயே அதாவது ரிஷபம், துலாம் ஆகிய இடங்களில் இருந்தாலும்
    அது ஏழாவது இடமாகிவிடின், காரகோ பாவ நாசாய எனும் வசனப்படி, சரியில்லை என்றும்
    சொல்கிறார்களே ?
    அய்யா விளக்கம் எனக்கு விளக்காக அமையும்.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  12. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்....
    சுக்ர பகவான் தலம் குறித்த விளக்கம் அருமை....
    நன்றி வணக்கம்..../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  13. /////R.DEVARAJAN said...
    Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
    sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
    ஹிம குந்த ம்ருணாளாபம் தைத்யாநாம் பரமம் குரும் |
    ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாமி அஹம் ||
    (பனி, மல்லிகை, தாமரைத்தண்டின் உட்புறம் இவைபோல் வெண்மை நிறம் கொண்டவரும், அஸுர குருவும், நூலறிவு பெற்றவரும், ப்ருகு முனிவரின் வழித்தோன்ற லுமான சுக்ர பகவானை நான் வணங்குகிறேன்)
    கஞ்சன் - கம்ஸன்
    கம்ஸன் வழிபட்ட லிங்கம் திருச்சுற்றில் உள்ளது.கம்ஸன் வழிபட்டதால் கஞ்சனூர்
    தேவ்/////

    உங்களுடைய விளக்கத்திற்கு நன்றி தேவராஜன்

    ReplyDelete
  14. /////Alasiam G said...
    Sir, thank you so much for the lesson about Sukran./////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. ////Arulkumar Rajaraman said...
    அன்புள்ள ஆசிரியருக்கு
    சுக்கிர பகவான் குச்சனூர் விளக்கம் அருமை. எனக்கு 10இல் சூரியனுடன் சுக்கிரன் விருச்ஷிக லக்னம்.
    நன்றி ஸார்.
    அன்புள்ள மாணவன்
    அருள்குமார் ராஜாராமன்/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  16. /////kanna said...
    வாத்தி (யார்) ஐயா!
    வணக்கம்.
    நல்லது ஐயா!
    அப்படியே ஆகட்டும்.
    உலகிற்கு பொதுமறை தந்த
    ஐயன் ' திருவள்ளுவன்'!
    'உலக பொது மறையில் கூறியது போல்
    அறம்! பொருள்! இன்பம்! கிடைக்க
    உள்ளன்போடு அடியவனை ஆசிர்வதிக்க வேண்டும் ஐயா!///////

    நம் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் எப்போதும் உண்டு!

    ReplyDelete
  17. /////பாலா said...
    சுக்ராச்சாரியார் வயிற்றுக்குள் இருந்தா போது சிவன் பள்ளி கொண்ட தலம் என்று சொல்லு வதுண்டு அதனாலேயே சுக்கிரனுக்கு தனி சந்நிதி கிடையாது அதனால் வயிற்ருக்குள் இருந்த படியே தரிசனம் !!!!!!!
    சுக்கிரன் வயிறுக்குள் இருந்த படி பார்வதியை பிரார்த்திக்க பார்வதி சிவன் அருகில் வந்து சிவனை மகிழ்விக்க சிவனின் சுக்கிலம் வழியே வெளிவந்தராம் அதனால்தான் இவருக்கு சுக்கிரன் என்று பெயராம் . (எல்லாம் செவி வழி செய்தி ஆசிரியரே ) நம் கணக்கு படி சுக்கிரன் வெள்ளியை குறிக்கும் என்று நினைக்கிறேன் " அதனால்தான்" வெள்ளி (சுக்கிரன்) வெள்ளையாய் இருக்கிறதாம்////////

    உங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி பாலா!

    ReplyDelete
  18. /////ananth said...
    நிலத்திற்கு செவ்வாய் காரகர் எனினும் அதன் மேல் அமையும் வீட்டிற்கு சுக்கிரன்தான் காரகர். தாங்கள் சொல்லியிருப்பது போல். சுக்கிரனுக்கு ஒரு கண்தான் என்றும் அதற்கு விஷ்ணுவின் வாமன அவதாரம்தான் காரணம் என்று படித்திருக்கிறேன். (பதிவின் நீளம் கருதி தாங்கள் சொல்லாமல் விட்ட கதையில் இதுவும் உண்டு). நம் உடலில் சுக்கிலத்தை ஆட்கொள்வதால் சுக்கிரன் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது. இவர் ஜாககத்தில் கெட்டிருந்தால் துறவரம் தான் சரி வரும் போலிருக்கிறது. சக்தி பீடம் நிறுவுபவர்கள், சக்தி உபாசகர்கள் இவர்களெல்லாம் சுக்கிரனின் அருள் பெற்றவர்கள் என்றும் படித்திருக்கிறேன்.////

    ஆமாம். சுக்கிரன் கெட்டிருந்தால், துறவறம்தான்!

    ReplyDelete
  19. /////kmr.krishnan said...
    ‌சுக்ராசாரியாருக்கு சஞ்ஜீவினி வித்தை, அதாவது போரில் இறந்த வீரர்களை உயிர்ப்பிக்கும் தந்திரம் தெரியும். இதை வைத்து அசுரர்களுக்கு வெற்றிக் கனியை சுலபமாகப் பெற்று தந்து வ‌ந்தார்.போரில் அசுர‌ர்க‌ளை வெல்ல‌ முடியாத‌ தேவ‌ர்கள் ப்ரஹஸ்பதியின் புத்திரன் கசனை சுக்ராச்சாரியாரிடம் சீடனாக அனுப்பினர்.கசனும் தன் குருசேவையால் சுக்ர‌ரை
    க‌வர்ந்துவிட்டான்.க‌ச‌னுக்கு சஞ்ஜீவினியை சுக்ர‌ர் சொல்லிக்கொடுத்துவிடுவார் என்ப‌தால் அசுர‌ர்க‌ள் க‌ச‌னின் உயிருக்கு அடிக்கடி உலை வைத்தார்க‌ள்.ப்ர‌ஹஸ்ப‌தியின் பெண் தேவ‌யானி க‌ச‌னை ஒருதலையாகக் காதலிக்கிறாள். ஒவ்வொரு முறையும் க‌ச‌ன் உயிரை சுக்ர‌ரை வேண்டி தேவ‌யானி மீட்டு எடுக்கிறாள்.க‌டைசி முறையாக‌ க‌ச‌னின் சாம்ப‌லை ம‌துவில் க‌லந்து சுக்ர‌ருக்குக் கொடுத்துவிடுகிறார்க‌ள் அசுர‌ர்கள்.க‌ச‌னைக் காணா‌து, சஞ்ஜீவினியைச் சொல்கிறார் சுக்ர‌ர்."குருவே உங‌க‌ள் வ‌யிற்றில் உள்ளேன்!"என்கிறான் க‌ச‌ன். வேறு வ‌ழியின்றி ச‌ஞ்ஜீவினியை வ‌யிற்றில்
    உள்ள‌ க‌ச‌னுக்கு உப‌தேசித்து வ‌யிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியில் வந்து
    இறந்த‌ த‌ன் உட‌லை உயிர்பிக்குமாறு க‌ச‌னுக்குச் சொல்கிறார் சுக்ர‌ர். க‌ச‌னும்
    அதுபோல‌வே சுக்ர‌ர் உயி‌ரைத் தான் க‌ற்ற‌ ச‌ஞ்ஜீவினியால் உயிர்பித்துவிடுகிறான்.சுக்ர‌ர் ம‌க‌ளிட‌ம் தான் சுக்ர‌ர் வ‌யிற்றில் பிற்ந்ததால் இருவரும் சகோதர‍ ‍‍‍சகோதரி உற‌வு என்று கூறி அவ‌ள் காத‌லை நிராகரித்து
    தேவ‌லோக‌த்திற்குப் ப‌றந்து விடுகிறான்./////

    உங்களூடைய மேலதிகத்தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நவக்கிரகக் கோவில்கள் வரிசையில்,
    சுக்கிரனுக்கான ஸ்தலம் கஞ்சனூர் ஆலயம் படங்கள்
    நன்றாக உள்ளது.சுக்கிரன் பற்றிய விளக்கம்,ஸ்தலம் குறித்த
    விபரங்களையும்,அருமையாகக் கொடுத்துள்ள தங்களுக்கு மிக்க
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி///////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  21. ////vidhya said...
    Dear Sir,
    Thanks for the informations and slogams./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ////sury said...
    //ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!//
    சுக்ர ஸ்தலம் கஞ்சனூர் !!
    சரிதானே !! எப்படி ?
    காஞ்சன் என்றால் தங்கம் என்றும் பொருள் உண்டு.
    காஞ்சனூர், கஞ்சனூர் ஆகியிருப்பதற்கும் வாய்ப்பு உண்டல்லவா ?
    அது இருக்கட்டும்.
    சுக்ரன் இருக்கும் இடம், தன் இடமா நண்பர்கள், விரோதிகள் இடமா என்றெல்லாம் பார்க்கலாம்.
    இருந்தாலும் சுக்ரன் தன் இடத்திலேயே அதாவது ரிஷபம், துலாம் ஆகிய இடங்களில் இருந்தாலும்
    அது ஏழாவது இடமாகிவிடின், காரகோ பாவ நாசாய எனும் வசனப்படி, சரியில்லை என்றும்
    சொல்கிறார்களே? அய்யா விளக்கம் எனக்கு விளக்காக அமையும்.
    சுப்பு ரத்தினம்.////

    நிறையக்காரகர்கள் இருக்கிறார்கள். பொதுவிதி ஒத்துவராது. இதுபற்றி விவரமாகப் பின்னால் எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com