மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.6.10

சோகமும் சுகமானதுதான்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சோகமும் சுகமானதுதான்
---------------------------------------

தலைப்பைப் பார்த்துவிட்டு, 'சோகம் எப்படி சுகத்தைத் தரும்? என்று கேட்டு எவரும் வாதம் செய்ய வேண்டாம்.

இசைமேதை பீத்தோவனின் கதையைச் சொல்லியிருக்கிறேன்.கடைசி வரி வரை படியுங்கள்.அப்புறம் தெரியும் சோகம் எப்படி சுகப்படுமென்று!

நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்தமனிதர் ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர்தான் இசை மேதை பீத்தோவன்!

உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா? சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்! உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவது
இடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)

விதி எப்பொழுதும் எதிர் அணியில்தான் ஆடும் எண்பார்கள். பீத்தோவனுக்கு விதி எதிர் அணியில் ஆடியதோடு, அவரைப் பல முறை காயப்படுத்தியும், ஒருமுறை ஆட்டத்தை விட்டு வெளியேற்றவும் முயன்றிருக்கிறது.

ஆமாம்! ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல் தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார். பீத்தோவனுக்கு இளம் வயதில் பசியே பாடமாகவும், வறுமையே வாய்ப்பாடாகவும், இருந்திருக்கிறது.

ஒருபக்கம், தினமும் குடித்துவிட்டு அகால நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிவந்து அனைவரையும் அடித்துத் துவைக்கும் தந்தை. மறுபுறம், ஏழு குழந்தைகளைப் பெற்று அதில் மூன்று குழந்தைகளை வறுமைக்குத் தாரைவார்த்துவிட்டு, மிச்சம் இருக்கும் குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் தாய் மரியா. சந்தோஷத் தையே அறியாத வாழ்க்கை!

பீத்தொவனின் தந்தை ஜோஹன் ஜெர்மெனி நாட்டின் பான் (Bonn) நகரில் இருந்த இசை அரங்கம் ஒன்றில் வாத்தியக்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக் கிறார். அது ஒன்றுதான் சற்று ஆறுதலான விஷயம். தன் தந்தையிடம், அவர் நல்ல மன நிலையில் இருக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட பீத்தோவன், தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு இசையில் ஒரு மேதைத்தனத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்

17.12.1770 ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன், தனது 20வது வயதில் ஜெர்மெனியைவிட்டுக் குடிபெயர்ந்து, வீயன்னா நகருக்குத் (Vianna, Austria) தன் நண்பன் ஒருவனுடன் போய்ச்சேர்ந்திருக்கிறார். அங்கே பல அரங்கங்களில் வாசித்ததோடு, இசைக்கான 'இசைக் குறிப்பேடுகளை' (Notes) எழுதிக் கொடுத்தும்
பிரபலமடைந்திருக்கிறார்.அவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பியானோ இசைக்கலைஞன், இசையமைப்பாளர், இசைப் பயிற்சியாளர் என்று தன்னுடைய பல்முனைத் திறமைகளை வெளிக்காட்டி மக்களை அசரவைத்தவர் அவர். அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்களைப் போல தேவாலயம் (Church) எதிலும் வேலைக்குச் சேர்ந்து பிழைப்பைக் கவனிக்காமல், கடைசிவரை
தன்னிச்சையாகவே இருந்து வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளோடு போராடிய மாமனிதர் அவர். இசைப் புரவலர்களால் (Patrons) அவருடைய பணத்தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர் பிறந்த தேதி தெரிய வந்ததில் கூட ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது. அவர் மிகவும் பிரபலமானவுடன், அவருடைய பிறந்த நாளைத் தெரிந்து கொள்ள விரும்பிய ரசிகர்களுக்கு, அவர் பிறந்த கிராமத்தையும், வருடத்தையும், மாதத்தையும் மட்டுமே சொல்ல ஆள் இருந்திருக்கிறது. தேதியைச் சொல்ல
ஆளில்லை. விடுவார்களா ரசிகர்கள்? பிறந்த குழந்தைக்கு அது பிறந்து 24 மணி நேரங்களுக்குள் ஞானஸ்தானம் செய்யும் வழக்கம் இருந்ததால், அவர் பிறந்த கிராமத்திலுள்ள தேவாலயத்தின் பதிவேடுகளில் இருந்து, அவருடைய பெற்றோர்களின் பெயரைச் சொல்லித் தேதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விபத்து ஏற்பட்டால் எப்படி இருக்கும்? பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்தமாதிரி என்பார்கள் - அதாவது பனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி தவறித் தடால் என்று விழுந்தவனை, அவன் என்ன ஏது என்று நிலைப்படும் முன்பாக, அந்தப் பக்கம் தெறிகெட்டுப் பாய்ச்சலில்
ஓடிவந்த காளை மாடு ஒன்று மிதித்து விட்டுப் போனதாம். அப்படி ஒரு இரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில் ஏற்பட்டது.

மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல் போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். அவளுடைய பெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின் காதல் காணாமல் போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும் முழுவதும் பழுதாகிவிட்டன.

எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்கு அது இல்லாமல் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டது என்றால் அவன் எப்படி இசைப்பான்?

ஆனாலும் இசைத்தார். அதுதான் பீத்தோவனின் மன வலிமை.

காது கேட்ட காலத்தில் அவர் இசைத்த இரண்டு சிம்பொனிகளை விட, காது பழுதான பிறகு அவர் இசைத்த மூன்று புது சிம்பொனிகள் அற்புதமாக அமைந்தன. அவருக்கு சரித்திரத்தில் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன!

கட்டுரையின் நீளம் கருதி அவர் முத்தாய்ப்பாய் தன்னைப் பற்றித் தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்த முக்கியமான வரியைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"

நிதர்சனமான உண்மை!

மெழுகுவர்த்தி உருகித்தான், தன்னை எரித்துக்கொண்டுதான் ஒளியைக் கொடுக்கிறது பீத்தோவனும் அப்படித்தான் தன்னுடைய உருக்கத்தில்தான் இந்த உலகிற்கு அற்புதமாக இசையைக் கொடுத்துவிட்டுப் போனார். அவருடைய சோகங்கள்தான் சுகமான இசையாக வெளிப்பட்டன!.

16.3.1827ம் தேதியன்று, தனது இசையரங்கில் சேர்த்துக்கொள்ளக் காலன் அவரைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.

சோகத்திலும் ஒரு சுகம் உண்டு. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!
-------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23 comments:

  1. good morning sir...

    suvai mikka isai thantha manithanin soga mayamana marupakkam sirappana pathivu .........


    thank you sir

    ReplyDelete
  2. He is more than great. enna oru manavalimai...

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு,
    சோகங்களும் சுகமாக ஆகுவதுண்டு. தங்கள் விளக்கம் அருமை. மாற்றுதிறன் கொண்ட குழந்தையை பெற்ற தாய்க்கு சோகம். ஆனாலும் சுகம். பலரது வாழ்க்கையில் இதுபோன்று எத்தனையோ? செல்வத்தை விட இத்தகைய தாங்கும் மனதை தரும் கிரக அமைப்புகளை தெரிவித்தால் மகிழ்வோம். நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    சோகத்திலும் சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!
    உண்மைதான்--------.
    சோகமும் சுகமானதுதான்.
    மனதை நெகிழ வைக்கும் வரலாறு -அளித்தமைக்கு .
    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-01

    ReplyDelete
  5. நன்றி ஐயா. அவர் இளமையிலிருந்தே செவிடு என்று நினைத்திருந்தேன். தெளிவுப்டுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. உண்மைதான்....நாம் எல்லோரும் கலைத்துறையில் பிரகாசிபதர்க்கு கடவுளின் அனுக்ரகம் வேண்டும் என்று சொல்வோம்...ஒரு முறை பீதொவனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார்...சரியான பயிற்சி இருந்தால் போதும் என்னை போல யார் வேண்டும் ஆனாலும் சாதிக்கலாம் என்று...மேலும் இசையில் அவருக்கு சிறுவயதில் நாட்டம் இருந்ததோ இல்லயோ அவருடைய தந்தைக்கு தன்னுடைய மகன் இன்னொரு மொசார்ட் மாதிரி வரவேண்டும் என்ற எண்ணம் வெகு தீவிரமாக இருந்ததால் அவருக்கு பியோனோ பயிற்சி அளித்ததாக சொல்வதுண்டு ....(அப்பொழுதே மொசார்ட் அவ்வளவு பிரபலம்)

    ReplyDelete
  7. வலியை உனர்ந்தவர்க்கு இந்த பாடம் ஒரு நல்ல இதமான மருந்து அய்யா....நன்றீ

    ReplyDelete
  8. this is extremely niZzZzzz... thanks a lot 4 sharing dis valuable great story with us....

    ReplyDelete
  9. ////astroadhi said...
    good morning sir...
    suvai mikka isai thantha manithanin soga mayamana marupakkam sirappana pathivu .........
    thank you sir////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  10. /////Jack Sparrow said...
    He is more than great. enna oru manavalimai.../////

    அந்த மனவலிமையைச் சொல்வதற்காகத்தான் இந்தப் பதிவு. நன்றி!

    ReplyDelete
  11. ////india allday said...
    மதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு,
    சோகங்களும் சுகமாக ஆகுவதுண்டு. தங்கள் விளக்கம் அருமை. மாற்றுதிறன் கொண்ட குழந்தையை பெற்ற தாய்க்கு சோகம். ஆனாலும் சுகம். பலரது வாழ்க்கையில் இதுபோன்று எத்தனையோ? செல்வத்தை விட இத்தகைய தாங்கும் மனதை தரும் கிரக அமைப்புகளை தெரிவித்தால் மகிழ்வோம். நன்றி! வணக்கம்!//////

    ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, மனகாரகன் சந்திரன், 3ஆம் அதிபதி, ஆறாம் வீடு, அதன் அதிபதி போன்றவைகளின் கூட்டுக் கலவைதான் இந்த மனவலிமைக்குக் காரணம்!

    ReplyDelete
  12. ////satchitanand said...
    நன்றி ஐயா. அவர் இளமையிலிருந்தே செவிடு என்று நினைத்திருந்தேன். தெளிவுப்டுத்தியமைக்கு நன்றி.////

    பிறவியில் அந்தக் குறைபாடு என்றால், இசையை அவர் சிறுவயதில் கற்றுக்கொண்டிருக்க முடியாது! சோகம் இடையில் ஏற்பட்டதுதான்!

    ReplyDelete
  13. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    சோகத்திலும் சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!
    உண்மைதான்--------. சோகமும் சுகமானதுதான்.
    மனதை நெகிழ வைக்கும் வரலாறு -அளித்தமைக்கு .
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  14. /////Nattu said...
    உண்மைதான்....நாம் எல்லோரும் கலைத்துறையில் பிரகாசிபதர்க்கு கடவுளின் அனுக்ரகம் வேண்டும் என்று சொல்வோம்...ஒரு முறை பீதொவனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார்...சரியான பயிற்சி இருந்தால் போதும் என்னை போல யார் வேண்டும் ஆனாலும் சாதிக்கலாம் என்று...மேலும் இசையில் அவருக்கு சிறுவயதில் நாட்டம் இருந்ததோ இல்லயோ அவருடைய தந்தைக்கு தன்னுடைய மகன் இன்னொரு மொசார்ட் மாதிரி வரவேண்டும் என்ற எண்ணம் வெகு தீவிரமாக இருந்ததால் அவருக்கு பியோனோ பயிற்சி அளித்ததாக சொல்வதுண்டு ....(அப்பொழுதே மொசார்ட் அவ்வளவு பிரபலம்)////

    ந்ல்லது. உங்களின் கருத்திற்கும், தகவலுக்கும் நன்றி நட்டு!

    ReplyDelete
  15. /////Ram said...
    வலியை உனர்ந்தவர்க்கு இந்த பாடம் ஒரு நல்ல இதமான மருந்து அய்யா....நன்றி!///////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ///Chandri said...
    this is extremely niZzZzzz... thanks a lot 4 sharing dis valuable great story with us....////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. அன்புள்ள ஆசிரியருக்கு

    ஸோகம் கூட சுகம் ‍என்பது அருமையான விளக்கம்.

    நன்றீ ஸார்

    அன்பு மாணவன்
    அருள்குமார் ராஜாராமன்

    ReplyDelete
  18. //சோகமும் சுகமானதுதான்//

    சுகமான சுமை என்பதைப் போல, தனிமையிலே இனிமை என்பதைப் போல. எனக்கு அதிகமான சோகம் என்ற அளவிற்கு என்றும் மனம் வெறுத்ததில்லை. கஷ்டம் யாருக்குத்தான் இல்லை.

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்.

    என்னால், எதுவும் சிரமம் அடைந்து இருந்தால் மன்னிக்கவும்

    (இன்னமும் எனக்கு என்னை சுற்றி என்ன நடக்குன்னு தெரியவில்லை ஐயா )

    ஜபான் நல்ல நாடு தானே ? வாழ வேண்டிய சூழல் மற்றும்
    எதிர்காலம் + கல்வி தரம் உயர வழி வகை உண்டா ஐயா

    தவளை! மாடு மாதிரியாக உழைத்து, தனது வாயால் ( வலி தாங்கமுடியாமல் தான் வேறு எந்தவிதமான உள்நோக்கம் கிடையாது ஐயா) கெடும் என்பதனை இன்றுதான் உணர்த்தேன் ஐயா

    தவறாக கேட்டு இருப்பின் மன்னிக்கவும்

    மற்றவருக்கு நான் தெருவிக்க வேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கின்றாகள் என்று நினைக்கின்றேன்.

    அதனால் தான் இந்த பதிவி கூட

    ReplyDelete
  20. ///// Blogger Arulkumar Rajaraman said...
    அன்புள்ள ஆசிரியருக்கு
    ஸோகம் கூட சுகம் ‍என்பது அருமையான விளக்கம்.
    நன்றி ஸார்
    அன்பு மாணவன்
    அருள்குமார் ராஜாராமன்////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  21. ///Blogger ananth said...
    //சோகமும் சுகமானதுதான்//
    சுகமான சுமை என்பதைப் போல, தனிமையிலே இனிமை என்பதைப் போல. எனக்கு அதிகமான சோகம் என்ற அளவிற்கு என்றும் மனம் வெறுத்ததில்லை. கஷ்டம் யாருக்குத்தான் இல்லை.//////

    இழப்பினால் உண்டாகும் சோகம் பற்றிச் சொல்லியிருக்கிறேன் ஆனந்த்! சிலபேர் இழப்பையும் சலனமின்றி
    ஏற்றுக்கொள்வார்கள். அதற்குத்தான் அதிக மனவலிமை வேண்டும்!

    ReplyDelete
  22. ////Blogger kanna said...
    ஐயா வணக்கம்.
    என்னால், எதுவும் சிரமம் அடைந்து இருந்தால் மன்னிக்கவும்
    (இன்னமும் எனக்கு என்னை சுற்றி என்ன நடக்குன்னு தெரியவில்லை ஐயா )
    ஜப்பான் நல்ல நாடு தானே ? வாழ வேண்டிய சூழல் மற்றும்
    எதிர்காலம் + கல்வி தரம் உயர வழி வகை உண்டா ஐயா
    தவளை! மாடு மாதிரியாக உழைத்து, தனது வாயால் ( வலி தாங்கமுடியாமல் தான் வேறு எந்தவிதமான உள்நோக்கம் கிடையாது ஐயா) கெடும் என்பதனை இன்றுதான் உணர்த்தேன் ஐயா
    தவறாக கேட்டு இருப்பின் மன்னிக்கவும்
    மற்றவருக்கு நான் தெருவிக்க வேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கின்றாகள் என்று நினைக்கின்றேன்.
    அதனால் தான் இந்த பதிவி கூட////

    எல்லா நாடுமே நல்ல நாடுதான். மனிதர்கள்தான் மாறுபடுகிறார்கள் கண்ணன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com