மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.8.09

Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?

Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!"
------- -கவியரசர் கண்ணதாசன்

வாய்ப்பு எனும் சொல் ஒன்றைப் பெறுவதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு
உரிய அனுகூல நிலையைக் குறிக்கும். Opportunity என்பது அதற்குச்
சரியான ஆங்கிலச் சொல்!

எந்த நிலையிலும் அந்த ”அனுகூல’ நிலை என்பது மிகவும் முக்கியம்.

அந்த நிலை சிலருக்குத் தேடிவரும். சிலருக்குக் கண்ணாம்பூச்சி காட்டும்.

வாய்ப்பு என்று ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் ஒருவன் தன் வாழ்க்கையில்
முன்னுக்கு வரமுடியாது.

இளையராஜாவுக்கு வாய்ப்பு, கவிஞர் பஞ்சு அருணாசலம் மூலமாகக் கிடைத்தது.
பெரிய இசையமைப்பாளராக, நாடறிந்தவராக அவர் ஆனார். அவர் நுழைந்த நேரம், அன்னக்கிளி’ படம், ”மச்சானைப் பார்த்தீங்களா? மலைவாழைத் தோப்புக்குள்ளே” பாடல், அதைப் பாடிய ஜானகி அம்மாவின் குரல் என்று ஏகத்துக்கும் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்தது.

அப்படி எல்லாமும் சிறப்பாக அமைந்ததும் ஒரு வாய்ப்புதான். அதை இறைச்செயல் எனலாம். அல்லது ராஜாவின் ஜாதகப் பலன் எனலாம்.
அல்லது அவர் வாங்கிவந்த வரம் எனலாம்.

எல்லோருக்கும் அப்படிக்கிடைக்கிறதா?. எத்தனை பேர் ஆர்மீனியப்
பெட்டியோடு சென்னையில் இன்றைக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
வெறும் முயற்சி மட்டும் போதும் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும்
இசையமைப்பாளர்களாக ஏன் ஆகவில்லை?

"சார், இளையாராஜாவுக்கு ஒன்னும் எக்மோர் ஸ்டேசன்ல போய் இறங்கினவுடன
வாய்ப்புக் கிடைக்கல. லட்சியத்தை மனசுல வச்சிகிட்டு மனுசன் பத்து வருசம்
பாடுபட்டிருக்காரு. அதோட அந்த பத்துவருட காலத்தில் தன்னுடைய முயற்சியாலும், பயிற்சியாலும் இசையில ஏகப்பட்ட விஷயங்கள்ள கற்றுத் தேறியிருக்கார். அதுதான் முக்கியம். கிடைச்ச வாய்ப்பை வச்சுத்தான் அவர் முன்னுக்கு வந்தார்னு சொல்றது தப்பு. விடாமுயற்சியாலதான் அவர் வெற்றி பெற்றார். இல்லையின்னா இரண்டு படத்தோட அவர் ஊருக்குத் திரும்பியிருப்பார்!"

"தம்பி, இங்கே வாய்ப்புன்னு நான் சொல்றது அதிர்ஷ்டத்தை, தெய்வ அருளைச்
சொல்றேன். அது இல்லாமல் எப்படி ஒருவன் சாதிக்க முடியும்? ஒருத்தனுக்கு
முயற்சி செய்து வங்கியிலேயே வேலை கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.
எல்லா வங்கியிலயும் ஒரே மாதிரியாகவா சம்பளம் இருக்கு? கிராம வங்கி,
தனியார் வங்கி, அரசு வங்கி, பன்னாட்டு வங்கின்னு எத்தனை விதமான
வங்கியிருக்கு? கிராம வங்கியில சேர்ந்து கீழப்பூங்குடியிக் கிளையில் வேலை
செய்கின்ற ஒருத்தன், சிட்டி பாங்க்கோட சிங்கப்பூர் கிளையில் வேலை
கிடைகின்றவனோட வளர்ச்சியை எப்படிப் பெறமுடியும்? எல்லாத்துக்கும்
ஒரு அம்சம் வேண்டாமா?."

அந்த அம்சம் என்பதுதான் ஜாதகம்.

ஒருவருக்குப் படிக்கும்போதே, இறுதியாண்டில் வேலைக்கான நியமன
உத்தரவு கிடைக்கிறது. ஒருவருக்கு, படித்து முடித்து மூன்று நான்கு
ஆண்டுகளானாலும் வேலை கிடைப்பதில்லை. ஒருவருக்கு விரும்புகின்ற
வேலை, விரும்புகின்ற ஊரில் கிடைத்து விடுகிறது. வேறு ஒருவருக்கு
விருப்பமில்லாத துறையில் வேலை, வசதியில்லாத ஊரில் கிடைக்கிறது!
ஒருவருக்குக் கை நிறையச் சம்பளம். ஒருவருக்குக் கைக்கும் வாய்க்குமான
வருமானம்.

ஒருவர் திரை உலகில் நுழைந்த அன்றே இயக்குனர் (மணி ரத்தினம்)
பலர் திரை உலகில் அடியெடுத்து வைத்துப் பல ஆண்டுகளாகியும்
இன்னும் உதவி வசனகர்த்தா அல்லது உதவி இயக்குனர்.

ஏன் அப்படி? யோசித்துப் பாருங்கள்

அதேபோல் unorganized sector எனும் ஒழுங்கின்றி இருக்கும் பல துறைகளில்
வாடிக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள்.

பேருந்து, லாரி, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள்.
ஜவுளி, மளிகைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள்.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்.
கட்டுமானத்துறையில் கொத்தனார் மற்றும் சித்தாள் பணிகளைச்
செய்பவர்கள்.
பாரம் தூக்கும் தொழிலாளர்கள்.
நூற்பாலைகள், விசைத்தறிகளில் வேலைபார்க்கும்
(வாரக் கூலித்) தொழிலாளர்கள்
வயல்களில் தினக்கூலி அடிப்படையில் உழவு வேலையில்
ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்.....இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

அவர்கள் எல்லாம் முழு விருப்பத்துடனும், முழு ஊதியத்துடனுமா அங்கே
பணி செய்கிறார்கள்?

பட்டுக்கோட்டையார் உழவுத்தொழிலாளர்களைப் பற்றி அசத்தலாக இரண்டே
வரிகளில் இப்படிச் சொன்னார்:

“ஆடிப்பாடிக் கதிரறுப்போம் ஆனந்தத்தோடு - ஆனா
அறுத்த கதிரு போற இடம் வேறொருவீடு!”

பட்டுக்கோட்டையார் இன்னொன்றையும் சொன்னார்:

“வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விடமாட்டான்”

அது அவர் வாழ்ந்த காலத்துச் சிந்தனை!

இன்று வசதி படைத்தவனுக்கு எல்லாம் நடக்கிறது.
சட்டம் உட்பட சர்வமும் வளைந்து கொடுக்கிறது!
==============================================
நமது பிறப்பிலேயே ஒரு Opportunity அமைந்திருக்கும்.

பணக்காரர் வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறக்க வேண்டும்
ஏழை வீட்டில் கடைசிப் பிள்ளையாக பிறக்க வேண்டும்
என்பார்கள்

பணக்காரர் வீட்டில் மூத்தவன் தட்டி அனுபவித்தது போக மீதி
உள்ளதுதான் இளவல்களுக்குக் கிடைக்கும்.
அதுபோல ஏழைவீட்டில் மூத்த பிள்ளையின் மேல் எல்லாபாரமும்
ஏறிக்கொண்டுவிடும். அந்த வீட்டு இளவல் தப்பித்து விடுவான்

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் பிறந்திருந்தால் நீங்கள்
எதற்காக வேலை தேட வேண்டும்?

ஷாரூக்கான் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காகச்
சம்பாதிக்க வேண்டும்?

அமிதாப் பச்சன் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காக வரன் தேட
வேண்டும்? வந்து க்யூவில் நிற்கமாட்டார்களா?

ஆகவே வாய்ப்பு முக்கியம். மற்றதெல்லாம் அடுத்தபடிதான்!
-----------------------------------------------------------------------
பத்தாம் வீடு, அதன்காரகன் சனீஷ்வரன் ஆகியவை பற்றி நிறைய
எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் அவைகள் உள்ளன.

புதிதாக வந்துள்ள மாணவர்களை, அவற்றைப் படிக்க வேண்டுகிறேன்.
------------------------------------------------------------------------
சரி, இன்றைய பாடத்திற்கு வருகிறேன்.

வேலைக்கு உரிய இடம் 10ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.

அதைப் பிறகு ஒரு நாள் அலசுவோம்.

இப்போது வேலையின்றி இருப்பவர்களுக்கும், அல்லது நல்ல வேலை
எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்துடன், ஆதங்கத்துடன் இருப்பவர்களுக்கும்
ஒரு நல்ல தீர்வைச் சொல்லும் முகமாக இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.

வேலை கிடைக்குமா?
நாம் விரும்பும் வேலை கிடைக்குமா?
எப்போது கிடைக்கும்?
எதனால் தாமதம்?
என்பது போன்ற விஷயங்களை அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும் அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.

அதென்ன சார், ஈஸியாக?

ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!

பொறுத்திருங்கள். இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாடம் உங்கள் மின்னஞ்சல்
பெட்டியில் வந்து இறங்கும்!

இங்கே ஏன் ஏழுதக் கூடாது?

தேவையில்லாத கேள்விக் கணைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்!
அதோடு அது மேல் நிலைப் பாடம். புதிய வரவுகளுக்கு அது பிடிபடாது!

வகுப்பறையில் இது என்னுடைய 350வது பதிவு!
உங்களைப் போன்ற ஆத்மார்த்தமான வாசகர்கள் எனக்குக் கிடைத்ததும்
Opportunity தான். அதனால்தான் 30 மாதங்களில் என்னால்
350 இடுகைகளை வலையேற்ற முடிந்தது.

அன்புடன்,
வாத்தியார்
--------------------

வாழ்க வளமுடன்!

63 comments:

gokul said...

sir please send your lesson to my mail id is texgokul@gmail.com

gokul said...

i saw my name is in the list but i not able to received your lesson so i wrote to many of the member in our class but nobody send

SP.VR. SUBBIAH said...

////Blogger gokul said...
i saw my name is in the list but i not able to received your lesson so i wrote to many of the member in our class but nobody send it/////

Enrolment Listல் இருப்பவர்கள் 649 பேர்கள். உங்கள் அததனை பேருக்கும் Mail Lessons வந்ததா? வந்திருக்காது! ஏன்? வாத்தியாருக்குத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தவர்கள் 400 பேர்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே வந்திருக்கும். தராதவர்களின் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?யோசித்துப் பாருங்கள்!

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

ஒரு வரியில் எழுதுங்கள்!

gokul said...

I HAVE SEND MY MAIL ID TO YOUR MAIL ADDRESS THANK YOU FOR QUICK REPLY

ananth said...

நல்ல வாய்ப்பு வந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கும் வாய்ப்புகள் வந்தன. அதை நன்றாக பயன்படுத்தி இருக்கிறேன். அப்படி நினைக்காத போது அதில் பிடித்து தள்ளி விடப் பட்டிருக்கிறேன்.

நிற்க, சொந்த தொழிலா செய்பவரா பணியில் இருப்பவரா என்று அறிந்து கொள்வதற்கும் ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா.

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
நல்ல வாய்ப்பு வந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கும் வாய்ப்புகள் வந்தன. அதை நன்றாக பயன்படுத்தி இருக்கிறேன். அப்படி நினைக்காத போது அதில் பிடித்து தள்ளி விடப் பட்டிருக்கிறேன்.
நிற்க, சொந்த தொழிலா செய்பவரா பணியில் இருப்பவரா என்று அறிந்து கொள்வதற்கும் ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா?////
------------------
இருக்கிறது. அதுவும் பாடத்தில் வரும்!

arumuga nainar said...

Dear Sir,

Recd your book and done the needful today.

Rgds
Nainar

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///"தம்பி, இங்கே வாய்ப்புன்னு நான் சொல்றது அதிர்ஷ்டத்தை, தெய்வ அருளைச் சொல்றேன். அது இல்லாமல் எப்படி ஒருவன் சாதிக்க முடியும்? ஒருத்தனுக்கு
முயற்சி செய்து வங்கியிலேயே வேலை கிடைக்குதுன்னு வச்சுக்குவோம். எல்லா வங்கியிலயும் ஒரே மாதிரியாகவா சம்பளம் இருக்கு? கிராம வங்கி,
தனியார் வங்கி, அரசு வங்கி, பன்னாட்டு வங்கின்னு எத்தனை விதமான வங்கியிருக்கு? கிராம வங்கியில சேர்ந்து கீழப்பூங்குடியிக் கிளையில் வேலை செய்கின்ற ஒருத்தன், சிட்டி பாங்க்கோட சிங்கப்பூர் கிளையில் வேலை
கிடைகின்றவனோட வளர்ச்சியை எப்படிப் பெறமுடியும்? எல்லாத்துக்கும்
ஒரு அம்சம் வேண்டாமா?."///

நச்சுன்னு சொல்லியிருக்கீங்க வாத்தியாரே..!

அந்த அம்சம்தான்.. அந்த அதிர்ஷ்டம்தான்.. அந்த தெய்வக் கிருபைதான்.. அந்த வாய்ப்புதான் கிடைக்க அனைவரும் ஏங்கிக்கிட்டிருக்காங்க..!

ஒவ்வொருத்தருக்கும் அந்த வாய்ப்பு வருவதற்கான கால நேரம் கூட குறைய இருப்பதுதான் வாழ்க்கையின் ஒரு சுவாரஸ்யம்..!

நன்றி வாத்தியாரே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

350-வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் வாத்தியாரே..

தங்களுடைய பெருந்தொண்டிற்கு வலையுலகம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது..!

sundar said...

வணக்கம் ஐயா

350 வது பதிவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Neengal Engalukku Asanaga (Sir) Irupadhu "ENGAL OPPURTUNITY" Endru Ninaikiraen..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Mari said...

Dear SP.VR.Subbiah,

I like to read all of your articles very much. I am Chandra, from Singapore.Please add my mail id in your list. sekarm@gmail.com

RajeshEra said...

நான் அந்த மின்னஞ்சல் பகுதியை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.நானும் வேலை கிடைக்காமல் தேடி கொண்டிருக்கிறேன்.
தனுசு லக்னம்.கும்ப ராசி.
எனக்கு லக்ன -பத்தில் கேது .சந்திர ராசிக்கு பத்தில் சனி பகை.பத்தாம் அதிபதி புதன் பதினொன்றில் சூரியனுடன்.
யாருகாவது விளக்கம் தெரிந்தால் பதில் அளியுங்கள்..

தம்பி கிருஷ்ணா said...

வணக்கம் ஐயா
350 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்.

SP.VR. SUBBIAH said...

///Blogger arumuga nainar said...
Dear Sir,
Recd your book and done the needful today.
Rgds
Nainar////

நன்றி நைனா(ர்)
புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள். மேலும் அதில் உள்ள 20 கதைகளில் எது மிகவும் சிறப்பாக உள்ளது என்று எழுதுங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
///"தம்பி, இங்கே வாய்ப்புன்னு நான் சொல்றது அதிர்ஷ்டத்தை, தெய்வ அருளைச் சொல்றேன். அது இல்லாமல் எப்படி ஒருவன் சாதிக்க முடியும்? ஒருத்தனுக்கு
முயற்சி செய்து வங்கியிலேயே வேலை கிடைக்குதுன்னு வச்சுக்குவோம். எல்லா வங்கியிலயும் ஒரே மாதிரியாகவா சம்பளம் இருக்கு? கிராம வங்கி,
தனியார் வங்கி, அரசு வங்கி, பன்னாட்டு வங்கின்னு எத்தனை விதமான வங்கியிருக்கு? கிராம வங்கியில சேர்ந்து கீழப்பூங்குடியிக் கிளையில் வேலை செய்கின்ற ஒருத்தன், சிட்டி பாங்க்கோட சிங்கப்பூர் கிளையில் வேலை
கிடைகின்றவனோட வளர்ச்சியை எப்படிப் பெறமுடியும்? எல்லாத்துக்கும்
ஒரு அம்சம் வேண்டாமா?."///
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க வாத்தியாரே..!
அந்த அம்சம்தான்.. அந்த அதிர்ஷ்டம்தான்.. அந்த தெய்வக் கிருபைதான்.. அந்த வாய்ப்புதான் கிடைக்க அனைவரும் ஏங்கிக்கிட்டிருக்காங்க..!
ஒவ்வொருத்தருக்கும் அந்த வாய்ப்பு வருவதற்கான கால நேரம் கூட குறைய இருப்பதுதான் வாழ்க்கையின் ஒரு சுவாரஸ்யம்..!
நன்றி வாத்தியாரே..!/////

எழுதிய கருத்தை சுத்தமாக உள்வாங்கியிருக்கிறீர்கள். அதுதான் உனா தானா என்பது! நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
350-வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் வாத்தியாரே..
தங்களுடைய பெருந்தொண்டிற்கு வலையுலகம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது..!////

என்னை வளர்த்த அன்னைத் தமிழுக்கு என்னுடைய சிறு தொண்டு அது!

SP.VR. SUBBIAH said...

////Blogger sundar said...
வணக்கம் ஐயா
350 வது பதிவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.////

நன்றி சுந்தர்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Neengal Engalukku Asanaga (Sir) Irupadhu "ENGAL OPPURTUNITY" Endru Ninaikiraen..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

அதுவும் மகிழ்ச்சிக்கு உரியதுதான் ராஜாராமன்!நன்றி!

SP.VR. SUBBIAH said...

Blogger Mari said...
Dear SP.VR.Subbiah,
I like to read all of your articles very much. I am Chandra, from Singapore.Please add my mail id in your list. sekarm@gmail.com

Enrolment Listல் இருப்பவர்கள் 649 பேர்கள். உங்கள் அததனை பேருக்கும் Mail Lessons வந்ததா? வந்திருக்காது! ஏன்? வாத்தியாருக்குத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தவர்கள் 400 பேர்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே வந்திருக்கும். தராதவர்களின் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?யோசித்துப் பாருங்கள்!

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

ஒரு வரி எழுதுங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger RajeshEra said...
நான் அந்த மின்னஞ்சல் பகுதியை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.நானும் வேலை கிடைக்காமல் தேடி கொண்டிருக்கிறேன்.
தனுசு லக்னம்.கும்ப ராசி.
எனக்கு லக்ன -பத்தில் கேது .சந்திர ராசிக்கு பத்தில் சனி பகை.பத்தாம் அதிபதி புதன் பதினொன்றில் சூரியனுடன்.
யாருகாவது விளக்கம் தெரிந்தால் பதில் அளியுங்கள்../////

நடப்பு தசா புத்தி, அஷ்டகவர்க்கம், காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா, போன்ற விவரங்கள் இல்லை. send full birth details to my mail ID: classroom2007@gmail.com

SP.VR. SUBBIAH said...

////Blogger தம்பி கிருஷ்ணா said...
வணக்கம் ஐயா
350 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்.////

நன்றி நண்பரே!

செல்லி said...

வணக்கம்
வகுப்புக்கு நானும் வந்திட்டேன், சார்.
350 வத் பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

achukichan said...

I cannot receive any special class lesson

chaks said...

350 பதிவுகளுக்கு வாழ்த்துகள் சார். பின்னூட்டங்களில் நீங்கள் கொடுத்த செய்திகளையும் விளக்கங்களையும் சேர்த்தால் இன்னும் ஒரு 50 பதிவுகள் கூடும்.

minorwall said...

விடாமல் முயற்சி செய்துகொண்டே இருப்பவனுக்கு தோல்விகளிலிருந்து பாடம் நிறையக் கிடைக்கும். அப்படியே எதை செய்யக்கூடாது, எதை எப்படி செய்தால் வெற்றி என்ற ஞானமும் கிடைக்கும். சோர்ந்து விடாமல் தொடர்ந்து (வெற்றி கிட்டும் வரை) விடாமல் முயற்சி செய்துகொண்டே இருப்பவனுக்கு கோசாரம்,தசா புக்தி சாதகமாக அமையும்போது அந்த வெற்றி வாய்ப்பு வந்துவிடுகிறது..அதுக்குள்ளே போர்டிங் பாஸ் கிடைச்சுட்டால் கதை அம்பேல்தான்.

உன்னைசொல்லி குத்தமில்லை.என்னைசொல்லி குத்தமில்லை.காலம் செய்த
கோலமடி.கடவுள் செய்த குற்றமடின்னு பாடிட்டு போக வேண்டியதுதான்.

சரியா வாத்தியார் அய்யா?

யப்பா .ஒருவழியா வுடாம சொல்லி முடிச்சுட்டேன். நான்தான் ஞானி2009..

Rathinavel.C said...

Dear Sir.
Congrats for your 350th post......May you live long to post 500th ...1000th...10000th post and so on...... :-)

May the god shower HIS blessing on you to continue this work......

Anbudan
Adiyaen Rathinavel.C

ரிஷப்-நாகராஜன் said...

////இப்போது வேலையின்றி இருப்பவர்களுக்கும், அல்லது நல்ல வேலை
எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்துடன், ஆதங்கத்துடன் இருப்பவர்களுக்கும்
ஒரு நல்ல தீர்வைச் சொல்லும் முகமாக இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.////

////வகுப்பறையில் இது என்னுடைய 350வது பதிவு!////

அது எங்களுக்கு ஒரு Opportunity.

வாழ்த்துக்கள் வாத்தியாரே..

அன்புடன்,
ரிஷப்-நாகராஜன்

Emmanuel Arul Gobinath said...

350 பதிவுக்கு வாழ்த்துக்கள் , உங்களை போல ஒரு நல்ல மனிதன் தன் நேரத்தை மற்றவர்களுக்காக செலவழிப்பதும் எங்களுக்கு கிடைத்த வரம் தான். இல்லாவிட்டால் நமக்கு இந்த கலையை பற்றிய அறிவு கிடைக்காமலே போயிருக்கும் அல்லவா.. ம்ம் எல்லாம் அவன் செயல்..

SP.VR. SUBBIAH said...

////Blogger செல்லி said...
வணக்கம்
வகுப்புக்கு நானும் வந்திட்டேன், சார்.
350 வத் பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!////

நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger achukichan said...
I cannot receive any special class lesson/////

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தொடர்ந்து பாடங்களும் வரும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger chaks said...
350 பதிவுகளுக்கு வாழ்த்துகள் சார். பின்னூட்டங்களில் நீங்கள் கொடுத்த செய்திகளையும் விளக்கங்களையும் சேர்த்தால் இன்னும் ஒரு 50 பதிவுகள் கூடும்.////

இருக்கலாம். அதைக் கணக்கிட முடியாது அல்லவா? நன்றி சக்ஸ்!

SP.VR. SUBBIAH said...

////Blogger minorwall said...
விடாமல் முயற்சி செய்துகொண்டே இருப்பவனுக்கு தோல்விகளிலிருந்து பாடம் நிறையக் கிடைக்கும். அப்படியே எதை செய்யக்கூடாது, எதை எப்படி செய்தால் வெற்றி என்ற ஞானமும் கிடைக்கும். சோர்ந்து விடாமல் தொடர்ந்து (வெற்றி கிட்டும் வரை) விடாமல் முயற்சி செய்துகொண்டே இருப்பவனுக்கு கோசாரம்,தசா புக்தி சாதகமாக அமையும்போது அந்த வெற்றி வாய்ப்பு வந்துவிடுகிறது..அதுக்குள்ளே போர்டிங் பாஸ் கிடைச்சுட்டால் கதை அம்பேல்தான்.
உன்னைசொல்லி குத்தமில்லை.என்னைசொல்லி குத்தமில்லை.காலம் செய்த
கோலமடி.கடவுள் செய்த குற்றமடின்னு பாடிட்டு போக வேண்டியதுதான்.
சரியா வாத்தியார் அய்யா?
யப்பா .ஒருவழியா வுடாம சொல்லி முடிச்சுட்டேன். நான்தான் ஞானி2009..////

போர்டிங் பாஸ் கிடைத்தபிறகு, பாடுவதற்கு ஏது வாய்ப்பு?
பாடாமல் போக வேண்டியதுதான்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Rathinavel.C said...
Dear Sir.
Congrats for your 350th post......May you live long to post 500th ...1000th...10000th post and so on...... :-)
May the god shower HIS blessing on you to continue this work......
Anbudan
Adiyaen Rathinavel.C/////

உங்கள் அன்பிற்கு நன்றி (ரத்தின) வேலவரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger ரிஷப்-நாகராஜன் said...
////இப்போது வேலையின்றி இருப்பவர்களுக்கும், அல்லது நல்ல வேலை
எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்துடன், ஆதங்கத்துடன் இருப்பவர்களுக்கும்
ஒரு நல்ல தீர்வைச் சொல்லும் முகமாக இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.////
////வகுப்பறையில் இது என்னுடைய 350வது பதிவு!////
அது எங்களுக்கு ஒரு Opportunity.
வாழ்த்துக்கள் வாத்தியாரே..
அன்புடன்,
ரிஷப்-நாகராஜன்/////

உங்கள் அன்பிற்கும், அதை வெளிப்படுத்தியதற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Emmanuel Arul Gobinath said...
350 பதிவுக்கு வாழ்த்துக்கள் , உங்களை போல ஒரு நல்ல மனிதன் தன் நேரத்தை மற்றவர்களுக்காக செலவழிப்பதும் எங்களுக்கு கிடைத்த வரம் தான். இல்லாவிட்டால் நமக்கு இந்த கலையை பற்றிய அறிவு கிடைக்காமலே போயிருக்கும் அல்லவா.. ம்ம் எல்லாம் அவன் செயல்../////

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அமைப்பிருந்திருக்கிறது. நான் எழுதாதிருந்தாலும், வேறு யாரையாவது இறைவன் எழுதப் பணித்திருப்பான் இமானுவேல்!

குறும்பன் said...

350 வது இடுகைக்கு வாழ்த்துகள்.

\\அமிதாப் பச்சன் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காக வரன் தேட
வேண்டும்? வந்து க்யூவில் நிற்கமாட்டார்களா?\\

என்ன இப்படி சொல்லிட்டிங்க. அபிசேக் டாவடிச்ச பொண்ணு (கரீசுமா கபூர்) சிக்கலை அப்படிங்கற சங்கதி உங்களுக்கு தெரியாதா. நிச்சயதார்த்தம் வரை போயி அப்பறம் நின்னுடிச்சி.

அப்புறமாதான் ஐச புடிச்சாங்க.

krish said...

Congrats for the 350 post.

kimu said...

ஐயா வணக்கம்,

350 வது பதிவுக்கு எங்கள் நன்றி

-கிமூ-

kimu said...

ஐயா வணக்கம்,

350 வது பதிவுக்கு எங்கள் நன்றி

-கிமூ-

SP.VR. SUBBIAH said...

////Blogger குறும்பன் said...
350 வது இடுகைக்கு வாழ்த்துகள்.
\\அமிதாப் பச்சன் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காக வரன் தேட
வேண்டும்? வந்து க்யூவில் நிற்கமாட்டார்களா?\\
என்ன இப்படி சொல்லிட்டிங்க. அபிசேக் டாவடிச்ச பொண்ணு (கரீசுமா கபூர்) சிக்கலை அப்படிங்கற சங்கதி உங்களுக்கு தெரியாதா. நிச்சயதார்த்தம் வரை போயி அப்பறம் நின்னுடிச்சி.
அப்புறமாதான் ஐச புடிச்சாங்க./////

உங்களாலும், என்னாலும் ஐசை (அல்லது ஐஸ்போன்ற பெண்னைப்) பிடிக்க முடியுமா? முடியாது அல்லவா? ஏன் முடியாது என்பதற்கு காரணங்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!:-)))

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
Congrats for the 350 post.////

நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

////Blogger kimu said...
ஐயா வணக்கம்,
350 வது பதிவுக்கு எங்கள் நன்றி
-கிமூ-////

நன்றி கிருஷ்ணமூர்த்தி!

kimu said...

வணக்கம் ஐயா
///Thursday, August 13, 2009 3:24:00 AM///
தூக்கத்தை குறைத்துக்கொண்டு,
பதிவிற்காக விடியற்காலையில்
எழுந்து பதில்!!!???

-கிமூ-

SP.VR. SUBBIAH said...

///வணக்கம் ஐயா
///Thursday, August 13, 2009 3:24:00 AM///
தூக்கத்தை குறைத்துக்கொண்டு,
பதிவிற்காக விடியற்காலையில்
எழுந்து பதில்!!!???
-கிமூ-/////

ஆமாம். தூக்கம் ஒரு பொருட்டல்ல!
செய்வன திருந்தச் செய்; அதுதான் தாரக மந்திரம்!
பதிவில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக நேரம் காலம் பார்ப்பதில்லை!

குறும்பன் said...

//உங்களாலும், என்னாலும் ஐசை (அல்லது ஐஸ்போன்ற பெண்னைப்) பிடிக்க முடியுமா? முடியாது அல்லவா? ஏன் முடியாது என்பதற்கு காரணங்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!:-)))//

நமக்குன்னு அம்சம் இருந்தா ஐசு என்ன 5 ஐசே நமக்கு கிடைப்பாங்க இஃகிஃகி

Thanuja said...

Sir, I was waiting for this lesson and I don't see it on my mailbox.....i am still eagerly for this topic..

SP.VR. SUBBIAH said...

////Blogger குறும்பன் said...
//உங்களாலும், என்னாலும் ஐசை (அல்லது ஐஸ்போன்ற பெண்னைப்) பிடிக்க முடியுமா? முடியாது அல்லவா? ஏன் முடியாது என்பதற்கு காரணங்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!:-)))//
நமக்குன்னு அம்சம் இருந்தா ஐசு என்ன 5 ஐசே நமக்கு கிடைப்பாங்க இஃகிஃகி////

அதான்....அதேதான்..அதேதான். அந்த அம்சம் கொஞ்சமாவது நமக்கு இருக்கிறதா? இருந்திருந்தால் நான் ஏன் பதிவில் எழுதிக் கொண்டிருக்கப் போகிறேன்....நீங்கள் வந்து வேலைமெனக்கெட்டு அவற்றை ஏன் படித்துக் கொண்டிருக்கப்போகிற்றிர்கள்...இஃகிஃகி கிக்கிக்கீஈஈஈஈஈஈ....!:-)))

SP.VR. SUBBIAH said...

///Blogger Thanuja said...
Sir, I was waiting for this lesson and I don't see it on my mailbox.....i am still eagerly for this topic..///

நாளைக் காலையில் பதிவிட உள்ளேன் சகோதரி! சற்றுப் பொருத்தருளுங்கள்!

நேசன்..., said...

அய்யா நீங்கள் மெகா சீரியல் டைரக்டராக முயற்சிக்கலாம்.நல்ல கற்ப்பனை வளம்,கை நிறைய்ய அனுபவம்,சிறந்த எழுத்து நடை என எல்லாம் இருக்கிறது.அதை விட எந்த இடத்தில் தொடரும்......போடா வேண்டும் என நன்றாய்த் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்..........

இண்டர்வியூவ் சென்று வந்து விட்டு வேலை கிடைக்குமா என அவர்களிடம் கேட்டால் அவர்கள் கூலாக போஸ்ட்ல பதில் வரும் என்பார்கள் அது போல........................

SP.VR. SUBBIAH said...

///நேசன்..., said...
அய்யா நீங்கள் மெகா சீரியல் டைரக்டராக முயற்சிக்கலாம்.நல்ல கற்ப்பனை வளம்,கை நிறைய்ய அனுபவம்,சிறந்த எழுத்து நடை என எல்லாம் இருக்கிறது.அதை விட எந்த இடத்தில் தொடரும்......போடா வேண்டும் என நன்றாய்த் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்..........
இண்டர்வியூவ் சென்று வந்து விட்டு வேலை கிடைக்குமா என அவர்களிடம் கேட்டால் அவர்கள் கூலாக போஸ்ட்ல பதில் வரும் என்பார்கள் அது போல........................////

இப்பொது என்ன செய்கிறேன்? ஜோதிடத்தை மெகா சீரியலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். போரடிக்காமல் இருக்கிறதா?

VIJAYAKUMAR.R said...

hello sir,
i also request you to send the details to my email id. thanks.

SP.VR. SUBBIAH said...

///Blogger VIJAYAKUMAR.R said...
hello sir,
i also request you to send the details to my email id. thanks.////

What is your mail ID?

Enrolment Listல் இருப்பவர்கள் 675 பேர்கள். உங்கள் அததனை பேருக்கும் Mail Lessons வந்ததா? வந்திருக்காது! ஏன்? வாத்தியாருக்குத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தவர்கள் 400 பேர்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே வந்திருக்கும். தராதவர்களின் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?யோசித்துப் பாருங்கள்!

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

Inform your mail ID through an email message! ஒரு வரி எழுதுங்கள்!

முருகன் அடிமை said...

வாத்தியார் ஐயா

நானும் எதிர் பாத்திட்டு இருக்கேன் மின்னஞ்சல் பாடத்திற்காக. என்னைய மறந்திடாதீங்க சார்.

muruganadimaisaravanan@gmail.com

முருகன் அடிமை said...

இசைஞானி என்றால் அது இளையராஜா

ஜோதிட ஞானி என்றால் அது சுப்பு ஐயா

(ஒடனே ஆரம்பிச்சிராதீங்க சார் "என் தொழில் ஜோதிடம் இல்லைன்னு")

SP.VR. SUBBIAH said...

////Blogger முருகன் அடிமை said...
வாத்தியார் ஐயா
நானும் எதிர் பாத்திட்டு இருக்கேன் மின்னஞ்சல் பாடத்திற்காக. என்னைய மறந்திடாதீங்க சார்.
muruganadimaisaravanan@gmail.com//////

new enrolment is under process - arranging the names & other details in the contact folder for sending lessons. please wait!

SP.VR. SUBBIAH said...

/////Blogger முருகன் அடிமை said...
இசைஞானி என்றால் அது இளையராஜா
ஜோதிட ஞானி என்றால் அது சுப்பு ஐயா
(உடனே ஆரம்பிச்சிராதீங்க சார் "என் தொழில் ஜோதிடம் இல்லைன்னு")//////

ஜோதிடம் என்பது பெரிய கடல். அதில் எவரும் ஞானம் பெற முடியாது.
ஞானி என்று பெருமைப்பட முடியாது. உங்கள் மொழியில் சொன்னால் பீற்றிக்’ கொள்ள முடியாது. நான் ஒரளவிற்கு ஜோதிடம் அறிந்தவன் அவ்வளவுதான்.
இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

Siva said...

valuthukkal sir

natraj said...

"Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?"

any body send me that articlel.

natraj said...

Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?"

any body send me that articlel.jininataraj@gmail.com

natraj said...

Enrolment Listல் இருப்பவர்கள் 675 பேர்கள். உங்கள் அததனை பேருக்கும் Mail Lessons வந்ததா? வந்திருக்காது! ஏன்? வாத்தியாருக்குத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தவர்கள் 400 பேர்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே வந்திருக்கும். தராதவர்களின் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?யோசித்துப் பாருங்கள்!

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

Inform your mail ID through an email message! ஒரு வரி எழுதுங்கள்!

sir
what r the details we send to your mail id to join member pl inform sir thanks you..

Example ;
1.our email id
2.Name

thanks

SP.VR. SUBBIAH said...

Blogger natraj said...
Enrolment Listல் இருப்பவர்கள் 675 பேர்கள். உங்கள் அததனை பேருக்கும் Mail Lessons வந்ததா? வந்திருக்காது! ஏன்? வாத்தியாருக்குத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தவர்கள் 400 பேர்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே வந்திருக்கும். தராதவர்களின் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?யோசித்துப் பாருங்கள்!
வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Inform your mail ID through an email message! ஒரு வரி எழுதுங்கள்!
sir
what r the details we send to your mail id to join member pl inform sir thanks you..
Example ;
1.our email id
2.Name thanks////

+ வயது + வசிக்கும் ஊர் ஆகியவற்றையும் சேர்த்து எழுதுங்கள்!

natraj said...

மிக்க நன்றி செர்ந்துவிட்டேன்

அன்புடன்
nataraj