மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.8.09

சிறுகதை: 21st Century Avvaiyar

சிறுகதை: 21st Century Avvaiyar

ஆத்தாளுக்கும், மகளுக்கும் சண்டை. சத்தம் தெருவரை கேட்டது.
ஒண்டிக் குடித்தன வீடு. கேட்காதா பின்னே?

மாடியில் படியேறி, தங்கள் வீட்டு வாசல்வரைக்கும் ஒருவர் நடந்துவரும்
ஓசையைக்கூடக் கேட்காமல் சத்தமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

"என்னடி சொல்றே? விளங்குகிற மாதிரிச் சொல்லு!"

"உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் விளங்காது - எப்படிச் சொன்னாலும்
விளங்காது - அதனாலதான் சுருக்கமாச் சொல்றேன். பெரியப்பா பணம்
கொண்டு வந்து கொடுத்தால் - வாங்காதே. வேண்டாம் என்று சொல்லிவிடு"

"அதுதான் எப்படிச் சொல்றது?"

"உனக்கு முடியவில்லையென்றால் சொல்லு.நான் சொல்கிறேன். அய்யா,
பெரியவரே, மடியில் பணமும், மனதில் இருளும் கொண்ட மகானே! என்
தந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவாத உங்கள் பணம், இப்போது நீங்கள்
வலிய வந்து கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். உங்களிடம் பணம் வாங்கி,
அது ஒத்த ரூபாயாக இருந்தாலும் சரி அல்லது ஒரு லட்சமாக இருந்தாலும்
சரி,திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எனக்குத்
திருமணமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன் - போதுமா?"

"கிறுக்குப் பிடிச்சமாதிரிப் பேசாதே.பானை செய்றதுக்குப் பத்து நாள் ஆகும்.
போட்டு உடைக்கிறதுக்கு ஒரு நொடி போதும். முகத்தில் அறைஞ்சமாதிரி
வேண்டாம்னு சொல்லிட்டா, ஊருக்கு வந்து பத்துப் பங்காளிகள் முன்னால நின்னு
உன் கல்யாணத்தை நடத்துறது யாரு?"

"அதுக்கெல்லாம் நீ கவலைப் படாதே!.எங்க பெரியப்பாவைப்பத்தி எனக்கு
நன்றாகத் தெரியும். தலைப்பாகை வச்சிகிறதுக்கும், தேங்காய்ச் சட்டி
தூக்கிறதுக்கும் அவரை யாரும் கூப்பிடவேண்டாம். நான்தான் வீட்டிற்கு
மூத்தவன் என்று சொல்லி வம்படியா வந்து, முதல் ஆளா நின்னுடுவாரு!
பணம்னா மட்டும்தான் மனுஷன்கிட்ட பத்து ரூபாய்கூட வாங்கிறது கஷ்டம்.
ஆனா நீ சொன்ன அதுக்கெல்லாம் பி.டி.உஷா வேகத்தில அவரே ஓடி வந்து
நின்னுடுவாரு!"

"வேண்டாம்னு சொன்னா, கொண்டு வந்து கொடுக்கிறவங்களை அவமதிக்கிறது
மாதிரி ஆகாதா?"

"வேண்டாம்னு ஏன் சொல்றே - கொஞ்சம் புத்திசாலித்தனமா மாத்திச் சொல்லு.
எங்களுக்கு வேணும்ங்கிற அளவுக்கு பணம் கிடைச்சிருச்சு.இப்போது பணம்
எதுவும் வேண்டாம். தேவைப்பாட்டால் கேட்டு வாங்கிகிறோம் என்று சொல்லு!"

"அதையும் மீறி, இல்லை வச்சிக்குங்க என்று சொல்லி மேஜை மேல வச்சிட்டுப்
போனார்ன்னா என்ன செய்றது!"

"ம்..ம்..அப்படி வச்சிட்டுப் போனார்ன்னா, அவர் போன உடனே, அந்தப்
பணத்தைக் கொண்டுபோய் வடபழநி முருகன்கோயில் உண்டியல்ல போட்டுவிட்டு
வந்து விடு."

"உன் கோபத்துக்கும் வெறுப்பிற்கும் ஒரு அளவில்லையா? உண்டியல்ல
எதுக்காகப் போடணும்?"

"வட பழநி முருகன் தன் பக்தைக்கு நல்லது பண்ணாம விட்டுட்டாரு. உன் சகோதரி
அதுதான் என் பெரியம்மா - எவ்வளவு நல்லவர்கள். எவ்வளவு பெரிய முருக பக்தை
அவர்களைக் கொண்டுபோய் எதுக்காக இந்தக் கஞ்சத்தனம் பிடிச்ச மனுஷன்கிட்ட
அந்த முருகன் சிக்க வச்சாரு. சீக்கிரமா அவங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.
நீ போய் உண்டியல்ல போட்டுட்டு வா. பிரார்த்தனையை நான் பண்ணிக்கிறேன்".

"அடிப் பாவி!"

"பாவி என்று சொல்லாதே, பெரியம்மாவைப் பற்றிக் காலையில் ஒரு கவிதை
எழுதினேன். அது இந்தச் சீட்டில் உள்ளது படித்துப்பார். சும்மா மனசுக்குள்ளேயே
படிக்காதே - வாய் விட்டுப் படி - அப்பொழுதுதான் அது செவி வழியாக மனதிற்குள்
போகும்!"

"உன்னைத் தமிழ் எம்.ஏ படிக்க வச்சதுக்கு இது ஒன்னுதான் மிச்சம்" என்று
முணுமுணுத்தவாறே சீட்டை வாங்கி வாய்விட்டுப் படித்தார்கள் வள்ளி அம்மையார்.

"கொடியது எதுன்னு முருகன் விளக்கமாகச் சொல்லும்படி கேட்க, 21ம் நூற்றாண்டின்
அவ்வைப்பிராட்டி பாடியது.
கொடியது கேட்கின் நெடி வெவ்வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிதே கஞ்சனுடன் வாழ்வது
அதனினும் கொடிதே அவனின் மனைவியாய் இருப்பது!"

"கிறுக்குக் கழுதை அவ்வையார் எங்கேடி இதெல்லாம் பாடினாள்?" என்று தன் தாய்
சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சீதா, தேங்காய்ப்பூத் துண்டையும், ஷாம்பூ
பாக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

வெளியே மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வள்ளியம்மை
ஆச்சியின் பெரிய கொழுதனார் சிவலிங்கம் செட்டியாருக்கு - அதுதான் சீதாவின்
பெரியப்பாவிற்கு சம்மட்டியால் அடிவாங்கியதைப் போன்று இருந்தது, ஒரு அடியல்ல,
அடுத்தடுத்து பத்து அடி வாங்கியதைப் போன்றிருந்தது!

சத்தமில்லாமல் திரும்பி, மெதுவாக நடந்து, படிகளில் இறங்கிக் கீழே தெருவிற்கு
வந்தவர், அருகில் இருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
மனதில் தாங்கவொன்னா துக்கம். கையில் தன் தம்பி மகள் திருமணத்திற்குக்
கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருந்த ஐம்பதினாயிரம் ரூபாய் பணம்.

++++++++++ ++++++++++++++++++ ++++++++++++++

அதே நேரம் தன் வீட்டில் தெய்வானை ஆச்சி கவலையுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
தன் தங்கை மகளின் குணத்தை நன்கு அறிந்தவர் அவர். அரை மனதோடு தன்
வற்புறுத்தலுக்காக வீட்டுக்காரர் போயிருக்கிறாரே - கொடுத்து விட்டு வருவாரா
அல்லது வாங்கிக் கட்டிக் கொண்டு வருவாரா? ஒன்றும் புரியவில்லை

ஆச்சியின் தவிப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. அவரின் கணவர் திருவாளர்
சிவலிங்கம் செட்டியார் காலை பத்து மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பினார்.
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தார்.சோர்வுடனும் காணப்பட்டார்.

தெய்வானை ஆச்சி மெல்லிய குரலில் கேட்டார்கள்.

"ஏன் சிக்கலாகி விட்டதா?"

"இல்லை"

"பணத்தை வாங்கிக் கொண்டார்களா - இல்லையா?"

"பணத்தை வாங்கிக் கொள்ளும் மன நிலையில் அவர்கள் இல்லை"

"என்ன சொல்கிறீர்கள்?"

"என் தம்பியின் மருத்துவச் செலவிற்கு நான் பண உதவி செய்யாத கோபம்
அவர்களை விட்டு இன்னும் விலகவில்லை! என் தம்பியின் சாவிற்கு நான்தான்
காரணம் என்ற எண்ணத்தோடுதான் இன்னும் இருக்கிறார்கள்."

"சொன்னார்களா?"

"இல்லை தெரிந்து கொண்டேன்!"

"பேசினீர்களா?"

"எல்லாவற்றையும் விலாவரியாக இப்போது கேட்காதே - இரண்டு நாட்கள்
போகட்டும் சொல்கிறேன்" என்று சொன்னவர், படுக்கையறைக்குச் சென்று
படுக்கும் நோக்கத்துடன் சட்டையைக் கழற்ற ஆரம்பித்தார்.

அம்மையார் விடவில்லை. பின்னாலேயே தொடர்ந்து சென்று கேட்டார்கள்

"பணத்தைத் என்ன செய்தீர்கள்?"

அழுத்தமாகப் பதில் சொன்னார் அவர்."வடபழனிக் கோயில் உண்டியலில்
போட்டு விட்டேன்".

440 வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது அவருடைய
மனைவிக்கு.

"விளையாடாமல் சொல்லுங்கள் - உண்டியலிலா போட்டீர்கள்?"

"ஆமாம்,"

"எதற்காக?"

"சும்மா வழ வழவென்று கேட்டுக் கொண்டிருக்காதே, போடவேண்டும் என்று
தோன்றியது போட்டு விட்டேன்"

படுக்கையில் படுத்தவர், முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டார். தெய்வானை
ஆச்சியும் அத்துடன் விட்டு விட்டார்கள்.

++++++++++++++ ++++++++++++++++++++ +++++++++++++++++

நான்கைந்து நாட்கள் போகட்டும், நடந்ததைத் தெரிந்து கொள்ளலாம்
என்றிருந்த ஆச்சிக்கு மூன்றாம் நாள் காலையில் கூரியரில் வந்த கடிதம்
மேலும் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியது.

பெரிய அளவில் தர்மம் செய்யும் அறக்கட்டளை நிர்வாகத்தினரிடமிருந்து
வந்திருந்தது. அந்தக் கடிதம். ரத்தினச் சுருக்கமாக நான்கே வரிகளில் எழுதப்
பெற்றிருந்தது

எழுதப் பெற்றிருந்த வாசகம் இதுதான்

அன்புடையீர், நீங்கள் மனமுவந்து அனுப்பிய ரூபாய் நான்கு லட்சத்திற்கான
பணவோலை (Pay Order) கிடைத்தது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி
குறிப்பிட்டிருந்த குடும்பத்திற்கு உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் திருமண
உதவித் தொகையாக ரூபாய் ஒரு லெட்சத்திற்கான காசோலையை (Cheque)
அனுப்பி விட்டோம். மீதி மூன்று லெட்ச ரூபாயை எங்கள் தர்மநிதிக் கணக்கில்
வரவு வைத்துக் கொண்டு விட்டோம்.உங்களுக்கு நேரம் இருக்கும்போது
எங்கள் அலுவலகத்திற்கு ஒரு முறை வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் தர்ம சிந்தனை வாழ்க! வளர்க!

ஆச்சிக்கு ஒன்றும் புரியவில்லை! தன் கணவர் தலை கீழாக மாறிப்போய் விட்டாரே,
என்ன நடந்திருக்கும்? அவருடைய மனதைப் புரட்டிபோட்டு மாற்றியது யாராக
இருக்கும்? இருபத்தைந்து ஆண்டுகளாகத் தன்னால் செய்ய முடியாததை யார்
செய்திருப்பார்கள்?

பலத்த சிந்தனையில் ஆழ்ந்தவர்கள்,அதற்கு விடை அன்று மாலை கிடைக்கும்
என்று நினைத்தார்கள்.

ஆனால் கிடைக்கவில்லை!

கணவரிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது.

தான் தன் தம்பி வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, பேருந்து கிடைக்காமல்,
நடந்தே வீட்டிற்கு வந்து சேர்ந்ததையும், வரும் வழியில் வடபழனிக் கோவியில்
அருகே காப்பி அருந்தும் நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றிற்குள் சென்ற
மர்ந்ததையும், அங்கே சுவற்றில் மாட்டப்பெற்றிருந்த படத்தில் இருந்த
வாசகங்களைப் படிக்க நேர்ந்ததையும், தன்தம்பி மகளின் தர்ம அடிச் சொற்களால்
தன் மனதில் பாதி ஏற்பட்டிருந்த மாற்றத்தையும், அந்தப் படத்தில் எழுதப்
பெற்றிருந்த வாசகங்கள் முழு மாற்றத்தை ஏற்படுத்தியதையும் அவர்
யாரிடமும் சொல்லவில்லை.

சிலவற்றைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டு!

அந்த வைர வரிகள் இதுதான்

"ஒரு மாதத்தில் பயன்பெற கீரையை பயிர்செய்
ஒரு வருடத்தில் பயன்பெற வாழையைப் பயிர்செய்
ஏழு வருடத்தில் பயன்பெற தென்னையைப் பயிர்செய்
இருபது வருடத்தில் பயன்பெற தேக்கைப் பயிர்செய்
பெற்ற பிறவியின் பயன்பெற தர்மத்தைப் பயிர்செய்!"

****************** **************
’பயிர்களும் பயன்களும்' எனும் தலைப்பில் அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில்
வெளிவந்த சிறுகதை! நீங்கள் படித்து மகிழ இங்கே பதிந்தேன்.


வாழ்க வளமுடன்!

48 comments:

  1. Pathivu nanru.........

    Ayya oru kelvithaan................


    Valar pirai "chandira horaiyil" pen(girl) paarthal nanru enreergale???


    For example.....chandira horai enbathu monday morng 6-7AM and again in afternun......

    EX:mapillai veedu madras enraal girl veedu coimbatore yenraal.......

    question is???......antha 6-7Am madraasil irunthu purappadanumma or 6-7Am coimbtreil
    avargal veetukul intha 6-7Am nuzhayavenduma(Entering???

    ReplyDelete
  2. sir, excellent story sir by this story we can understand the power of GOD (making the needed changes in people mind).
    I pray for you to write more like this.
    Thanks & regards. Sakthi ganesh.

    ReplyDelete
  3. pathivu arumai ayyaa ...
    dhodaratdum ungaL ezuththu payaNam... vaazththukkaL

    ReplyDelete
  4. ////Blogger Bala said...
    Pathivu nanru.........
    Ayya oru kelvithaan................
    Valar pirai "chandira horaiyil" pen(girl) paarthal nanru enreergale???/////

    பெண் கிடைப்பதே அரிது.
    ஆகவே எப்போது கிடைத்தாலும் பார்க்கலாம்.
    பேசி முடிக்கலாம்.
    மண்டபத்தைப் பிடிக்கலாம்.
    திருமணத்தை ஜமாய்க்கலாம்.
    வாத்தியாரையும் அழைக்கலாம்!

    ReplyDelete
  5. ///Blogger அமர பாரதி said...
    Excellent article Sir.////

    நன்றி அமரபாரதி! (எதற்கு வம்பு? முழுப்பெயரையுமே சொல்லிவிடுகிறேன்)

    ReplyDelete
  6. ////Blogger Sakthi Ganesh said...
    sir, excellent story sir by this story we can understand the power of GOD (making the needed changes in people mind).
    I pray for you to write more like this.
    Thanks & regards. Sakthi ganesh.////

    அதிலென்ன சந்தேகம். That is why we are calling him as Almighty
    other wise he will become ordinary mighty!

    ReplyDelete
  7. ///Blogger seenu said...
    pathivu arumai ayyaa ...
    dhodaratdum ungaL ezuththu payaNam... vaazththukkaL///

    நன்றி சீனு. நம் வகுப்பறையில் எக்கச்செக்கமான சீனூக்கள் மற்றும் சுரேஷ்கள்.
    அவர்களில் 80% புனைப் பெயர் இல்லாதவர்கள். அவர்களை எப்படி அடையாளம் காண்பேன்?

    ReplyDelete
  8. ஆமா சார்,

    எங்க பெரியப்பாவை உங்களுக்கு எப்பிடி தெரியும்? அப்டியே அவுரு characterரை உரிச்சு வெச்சுட்டீங்களே?
    ஆனா என்ன, அவருக்கொரு வடபழனி கோவில்தான் இன்னும்ன் அமையலை.
    பேச்சு வார்த்தைதான் இல்லாம போச்சு.

    எப்பிடியாவுது எங்கேயாவுது டச் பண்ணிடுறீங்களே சார்,

    அன்புடன்,

    K.G.N

    ReplyDelete
  9. கதை அருமையாகவும் கருத்துடனும் இருந்தது:.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. அருமையான கதை. கதையில்தான் இந்த மாதிரி திருப்புமுனையெல்லாம். நிஜ வாழ்க்கையில் பார்ப்பதே அபூர்வமாகி வருகிறது. என் அனுபவத்தில் அல்ல பிறர் அனுபவத்தில் பார்த்தது. நல்லவர்களைத்தான் இதுவரை சந்தித்து வந்திருக்கிறேன். போலிகளை உடனே இனங்கண்டு ஒன்று கழன்று கொண்டு விடுவேன். இல்லை கழற்றி விட்டு விடுவேன்.

    நிற்க, எனக்கு ஜோதிட நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. நல்ல நேரம் பார்த்து பிறக்கவில்லை. நல்ல நேரம் பார்த்துப் போகப் போவதில்லை. இருக்கும் வரைதான் ராகு, எமகண்டம் எல்லாம்.

    ReplyDelete
  11. typical வாத்தியார் நீதிக்கதை. Super.

    ReplyDelete
  12. Nanri ayya..........

    பெண் கிடைப்பதே அரிது
    திருமணத்தை ஜமாய்க்கலாம்.
    வாத்தியாரையும் அழைக்கலாம்!

    Kandippaaaga neengal varuveergal yenru sonna piragu enaku romba santhosham...........

    kandippaaga e-mailil azhaippu varum ayya suspensaaga.........


    Neengal vara vendum......
    guru paarvaiyai vida thangal paarvai yen thirumanathin meethu vizha vendum....

    enaku rendu guruvum mukiyam......

    bcoz...."DevaGuru" for Luck

    "Subbaiyaguru" for gnaanam...

    ReplyDelete
  13. ayya .......

    Neengal sonnathu corrctu thaan
    .......girl already readia irukku..

    this year avanga veetuku senru pen ketka vendum......atharku thaan nann ketten........

    kilambrathu chandira horaiyila or avrgal veetukul entering antha horaiyila????

    naan thavaraaga kettal mannikavum.....???

    ReplyDelete
  14. ஒவ்வொரு மனிதனும் தர்மம் தன்னால் இயன்ற அளவு
    செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் கதை.
    அருமையான கதை அய்யா.
    நன்றி.

    ReplyDelete
  15. ////Blogger minorwall said...
    ஆமா சார்,
    எங்க பெரியப்பாவை உங்களுக்கு எப்பிடி தெரியும்? அப்படியே அவுரு characterரை உரிச்சு வெச்சுட்டீங்களே? ஆனா என்ன, அவருக்கொரு வடபழனி கோவில்தான் இன்னும்ன் அமையலை.
    பேச்சு வார்த்தைதான் இல்லாம போச்சு.
    எப்பிடியாவுது எங்கேயாவுது டச் பண்ணிடுறீங்களே சார்,
    அன்புடன்,
    K.G.N////

    எல்லாம் அனுபவம்தான். நானும் பல பெரியப்பாக்களைப் பார்த்துவந்தவன்தான். அதில் ஒரு அதிரடி பெரியப்பா இருக்கிறார். அவருடைய காரெக்டர் சூப்பராக இருக்கும். அவரை வைத்தும் ஒரு கதை இருக்கிறது.
    ஏற்கனவே என்னுடைய கதை ஒன்றுல் சும்மா தலையை மட்டும் அவர் காட்டியிருக்கிறார். வகுப்பறைப் பதிவிலேயே அந்தக் கதை இருக்கிறது. தலைப்பு, துருவன் அய்யரும் வெண்பொங்கலும்.
    தேடிப் பிடித்துப் படியுங்கள்.சுவையாக இருக்கும்

    ReplyDelete
  16. ////Blogger வேலன். said...
    கதை அருமையாகவும் கருத்துடனும் இருந்தது:.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி வேலன். கோரல் டிரா செயல் முறைகளைப் பற்றி ஒரு தொடர் எழுதுங்கள்!
    வாத்தியாரின் வேண்டுகோள்

    ReplyDelete
  17. Dear Sir,

    உங்களுடைய ஒவ்வொரு சிறுகதையும் heart touching என்ன
    ஆத்மாவையே உலுப்பி எடுக்கிறது.

    உங்கள் பணி தொடர மனமார வாழ்துக்கள்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  18. Blogger ananth said...
    அருமையான கதை. கதையில்தான் இந்த மாதிரி திருப்புமுனையெல்லாம். நிஜ வாழ்க்கையில் பார்ப்பதே அபூர்வமாகி வருகிறது. என் அனுபவத்தில் அல்ல பிறர் அனுபவத்தில் பார்த்தது. நல்லவர்களைத்தான் இதுவரை சந்தித்து வந்திருக்கிறேன். போலிகளை உடனே இனங்கண்டு ஒன்று கழன்று கொண்டு விடுவேன். இல்லை கழற்றி விட்டு விடுவேன்.
    நிற்க, எனக்கு ஜோதிட நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. நல்ல நேரம் பார்த்து பிறக்கவில்லை. நல்ல நேரம் பார்த்துப் போகப் போவதில்லை. இருக்கும் வரைதான் ராகு, எமகண்டம் எல்லாம்./////

    ஆமாம் பள்ளிக்கூடத்தில் தேர்வை எல்லாம் நேரம் பார்த்தா எழுத முடியும்? இயற்கை உபதைகளுக்கு நேரம் பார்த்தா போக முடியும்? நண்பனின் வற்புறுத்தலுக்காக, சரக்கடிக்கப் போகும்போது நேரம் பார்த்தா போகமுடியும்? தலை போகிற விஷயஙகளுக்கு மட்டும் நேரம் பார்த்து செய்தால் போதும்:-)))))

    ReplyDelete
  19. ////Blogger chaks said...
    typical வாத்தியார் நீதிக்கதை. Super.///

    நன்றி சக்ஸ்!

    ReplyDelete
  20. ////Blogger Bala said...
    Nanri ayya..........
    பெண் கிடைப்பதே அரிது
    திருமணத்தை ஜமாய்க்கலாம்.
    வாத்தியாரையும் அழைக்கலாம்!
    Kandippaaaga neengal varuveergal yenru sonna piragu enaku romba santhosham...........
    kandippaaga e-mailil azhaippu varum ayya suspensaaga.........
    Neengal vara vendum......//////

    ஆகா, வருவேன்! எந்த ஊரில் நடக்க உள்ளது என்று சொல்லவில்லையே?

    ReplyDelete
  21. ///Blogger Bala said...
    ayya .......
    Neengal sonnathu corrctu thaan
    .......girl already readia irukku..
    this year avanga veetuku senru pen ketka vendum......atharku thaan nann ketten........
    kilambrathu chandira horaiyila or avrgal veetukul entering antha horaiyila????
    naan thavaraaga kettal mannikavum.....???////

    நல்ல ஹோரையிலேயே புறப்பட்டுச் சென்று அதே ஹோரையிற்குள்ளாவே பார்த்து விடுங்கள். ஒரு மணி நேரம் போதாதா?

    ReplyDelete
  22. ///Blogger thirunarayanan said...
    ஒவ்வொரு மனிதனும் தர்மம் தன்னால் இயன்ற அளவு
    செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் கதை.
    அருமையான கதை அய்யா.
    நன்றி.///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ///Blogger arumuga nainar said...
    Dear Sir,
    உங்களுடைய ஒவ்வொரு சிறுகதையும் heart touching என்ன
    ஆத்மாவையே உலுப்பி எடுக்கிறது.
    உங்கள் பணி தொடர மனமார வாழ்துக்கள்.
    Rgds
    Nainar////

    நன்றி நைனார்!
    இரண்டு புத்தகங்கள் மொத்தம் 40 கதைகள் வெளிவந்துள்ளன.
    உங்கள் முகவரியைக் (மின்னஞ்சலில்) கொடுங்கள். அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
  24. Dear Sir,

    i am already sent my detail address to your e-mail id
    please send your sirukadal books

    Rgds
    Nainar

    ReplyDelete
  25. Respected Sir your story touch my heart, very thanks for u!

    ReplyDelete
  26. Vanakkam iyya,

    Good story for cross this piravi,

    let me know your story books and astrology books name & details,


    rds,
    vineeth

    ReplyDelete
  27. தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் கதை மாந்தர்கள் எல்லாருமே செட்டியாராகவே இருக்கிறார்களே ஏன்?............

    ReplyDelete
  28. Iyya,

    kindly clarify the dasa.....for example raghu dasa starts from meenam to ends dhanus...also clarify other planets,


    regards
    vineeth

    ReplyDelete
  29. நல்ல ஒற்றுமை உண்டு.. சீட்டாட்டம். ..
    என்ன ஒரு வித்தியாசம். நிச்சயமா டிக்க் அடிச்சுட்டு அந்த காசிலேதான் அன்னிக்கு குடியல்..

    பெரியப்பா கதையிலே வந்த துருவன் ஐயரின் பாதாம் அல்வா,கேசரி, வடை, இட்லி,
    இட்லி சாம்பார், தேங்காய் சட்னி, மசால் தோசை, வெள்ளைப்பணியாரம் .....எல்லாத்துக்கும் மேலாக நெய்,முந்திரிப்பருப்பு
    வெண் பொங்கல்ன்னு........ நீங்க பாட்டுக்கு எழுதிட்டுப் போய்ட்டீங்க.

    நான் இங்கே டோக்கியோ டு சென்னை டிக்கெட் புக் பண்ணலாமான்னு என் மனைவிகிட்டே கேட்டுட்டு இருக்கேன்.(இங்கே இதெல்லாம் கிடைக்காது.காசு )மட்டும்தான் கிடைக்கும்..)

    ReplyDelete
  30. உங்க பெரியப்பா பவுன் மாணிக்கம் செட்டியாருக்கும் என் பெரியப்பாவுக்குமே கூட நல்ல ஒற்றுமை உண்டு.. சீட்டாட்டம். ..
    என்ன ஒரு வித்தியாசம். நிச்சயமா டிக்க் அடிச்சுட்டு அந்த காசிலேதான் அன்னிக்கு குடியல்..

    பெரியப்பா கதையிலே வந்த துருவன் ஐயரின் பாதாம் அல்வா,கேசரி, வடை, இட்லி,
    இட்லி சாம்பார், தேங்காய் சட்னி, மசால் தோசை, வெள்ளைப்பணியாரம் .....எல்லாத்துக்கும் மேலாக நெய்,முந்திரிப்பருப்பு
    வெண் பொங்கல்ன்னு........ நீங்க பாட்டுக்கு எழுதிட்டுப் போய்ட்டீங்க.

    நான் இங்கே டோக்கியோ டு சென்னை டிக்கெட் புக் பண்ணலாமான்னு என் மனைவிகிட்டே கேட்டுட்டு இருக்கேன்.(இங்கே இதெல்லாம் கிடைக்காது.காசு )

    ReplyDelete
  31. Here is one saying in English similar to one you have written:

    "If you want to be happy for one hour,take a nap;
    If you want to be happy for one day, go fishing;
    If you want to be happy for week, take a vaation;
    If you want to be happy for one month,get married;
    If you want to be happy for one year, inherit a wealth;
    If you want to be happy for ever
    HELP SOME ONE!"

    KMR.KRISHNAN
    http;//parppu.blogspot.com

    ReplyDelete
  32. /////Blogger arumuga nainar said...
    Dear Sir,
    i am already sent my detail address to your e-mail id
    please send your sirukadal books
    Rgds
    Nainar/////

    புத்தகத்தை இன்று உங்களுக்கு அனுப்பி விட்டேன் நண்பரே!

    ReplyDelete
  33. ////Blogger vineeth said...
    Vanakkam iyya,
    Good story for cross this piravi,
    let me know your story books and astrology books name & details,
    rds,
    vineeth/////

    மின்னஞ்சலில் கேளுங்கள்.தருகிறேன்!

    ReplyDelete
  34. ////Blogger நேசன்..., said...
    தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் கதை மாந்தர்கள் எல்லாருமே செட்டியாராகவே இருக்கிறார்களே ஏன்?............/////

    It is only for the nativity of the story. Nothing wrong in it!

    ReplyDelete
  35. ////Blogger vineeth said...
    Iyya,
    kindly clarify the dasa.....for example raghu dasa starts from meenam to ends dhanus...also clarify other planets,
    regards
    vineeth/////

    குழப்புகிறீர்களே? தசாபுத்திகள் நட்சத்திரங்களை வைத்துத்தான், ராசிகளை வைத்தல்ல!
    திருவோண நட்சத்திர ஜாதகனுக்கு பிறப்பு தசா சந்திர தசா. பூர நட்சத்திர ஜாதகனுக்குப் பிறப்பு தசா சுக்கிரதசை. பழைய பாடங்களில் உள்ளது. முதலில் அவற்றை எல்லாம் படியுங்கள்

    ReplyDelete
  36. /////Blogger minorwall said...
    நல்ல ஒற்றுமை உண்டு.. சீட்டாட்டம். ..
    என்ன ஒரு வித்தியாசம். நிச்சயமா டிக்க் அடிச்சுட்டு அந்த காசிலேதான் அன்னிக்கு குடியல்..
    பெரியப்பா கதையிலே வந்த துருவன் ஐயரின் பாதாம் அல்வா,கேசரி, வடை, இட்லி,
    இட்லி சாம்பார், தேங்காய் சட்னி, மசால் தோசை, வெள்ளைப்பணியாரம் .....எல்லாத்துக்கும் மேலாக நெய்,முந்திரிப்பருப்பு, வெண் பொங்கல்ன்னு........ நீங்க பாட்டுக்கு எழுதிட்டுப் போய்ட்டீங்க.
    நான் இங்கே டோக்கியோ டு சென்னை டிக்கெட் புக் பண்ணலாமான்னு என் மனைவிகிட்டே கேட்டுட்டு இருக்கேன்.(இங்கே இதெல்லாம் கிடைக்காது.)காசு மட்டும்தான் கிடைக்கும்..)/////

    ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறமுடியும்:-)))))))

    ReplyDelete
  37. ////Blogger kmr.krishnan said...
    Here is one saying in English similar to one you have written:
    "If you want to be happy for one hour,take a nap;
    If you want to be happy for one day, go fishing;
    If you want to be happy for week, take a vaation;
    If you want to be happy for one month,get married;
    If you want to be happy for one year, inherit a wealth;
    If you want to be happy for ever
    HELP SOME ONE!"
    KMR.KRISHNAN
    http;//parppu.blogspot.com////

    இதைத்தான் அனுபவம் என்கிறது. நன்றாக உள்ளது. நன்றி சார்!

    ReplyDelete
  38. ///Blogger 'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
    Pinniteenga VAATHIYAAR!!/////

    நன்றி மணி அண்ணே!

    ReplyDelete
  39. ஆஹா.. அற்புதமான கதை வாத்தியாரே..

    அவசியமான கதையும்கூட..!

    இந்தப் பாடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்.

    "நான் ஒரு தடவை சொன்னா கோடி முறை சொன்னது போல.."

    ReplyDelete
  40. ////Blogger மிஸ்டர் அரட்டை said...
    Kadhai Alla Nijam !!!////

    மனம் திறந்த உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஹா.. அற்புதமான கதை வாத்தியாரே..
    அவசியமான கதையும்கூட..!
    இந்தப் பாடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்.
    "நான் ஒரு தடவை சொன்னா கோடி முறை சொன்னது போல.."/////

    என்னோட நேரம் நான் ஆயிரம் முறை சொன்னாத்தான் அது ஒருமுறை சொன்ன கணக்காகிறது:-)))))
    உங்கள் அன்பிற்கு நன்றி உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  42. ////Blogger Mohan said...
    Nice article Sir////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. Dear Sir
    I am a new student, sir and like to get your lessons through emai. so I have become your one of followers.
    my email address id valluvan.sri@gmail.com
    blogspot ID : Valluvan
    thank you
    regards
    Valluvan

    ReplyDelete
  44. ///Blogger Valluvan said...
    Dear Sir
    I am a new student, sir and like to get your lessons through emai. so I have become your one of followers.
    my email address id valluvan.sri@gmail.com
    blogspot ID : Valluvan
    thank you
    regards
    Valluvan////

    மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பாருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com