மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.8.09

அவன்தான் ஒரிஜினல் வில்லன்!

அவன்தான் ஒரிஜினல் வில்லன்!

ஒரிஜினல் மிட்டாய்க் கடை அல்லது ஒரிஜினல் அல்வாக் கடை என்று
கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான நெய்யினால் செய்யப்பெற்ற இனிப்புகள்
என்பார்கள். அதுபோல வில்லன்களிலும் ஒரு ஒரிஜினல் வில்லன் இருக்கிறான்.
நீங்கள் திரைப்படங்களில் பார்க்கும் வில்லன் படத்தோடு போய்விடுவான்.
நேரில் பார்க்கும் வில்லத்தனமான ஆசாமிகளைக் கொஞ்சம் புத்திசாலித்
தனத்தோடு சமாளித்துவிடலாம்.

ஆனால் யாராலும் சமாளிக்க முடியாத வில்லன் ஒருவன் இருக்கிறான்.
அவன் பெயர் மாந்தி!

எல்லோருடைய ஜாதகத்திலும் அவன் இருப்பான். யாருக்கும் விதிவிலக்கில்லை.
ஆனால் 3,6,10 & 11ஆம் (3rd/6th/10th and 11th houses) வீடுகளில் அவன்
இருந்தால், அந்த ஜாதகர்கள் மட்டும் தப்பிப் பிழைப்பார்கள்.

"அது மட்டும் ஏன்?" என்று கேட்காதீர்கள். சில ஜோதிட விதிமுறைகளுக்குக்
காரணம் சொல்ல முடியாது. அதை வகுத்தவர்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். போய்ச் சேர்ந்தவர்களிடம் எப்படிக் கேட்பது?
அவர்கள் சொல்லி விட்டுச் சென்றதை, அப்படியே நம்பி எடுத்துக் கொள்ள
வேண்டும். அவ்வளவுதான். அது மட்டுமே நாம் செய்யக்கூடியது. அந்த வில்லனிடம்
அடி வாங்கியவர்களும் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதையும், அதாவது
அவர்கள் அனுபவித்ததையும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம் (shadow' planet)

தீயவைகளைச் செய்யக்கூடியது.It has a malefic effect.

குளிகன் என்பவனும் மாந்தி என்பவனும் ஒரே ஆள்தான். ஒரே உபகிரகம்தான்.
புராணங்கள் மாந்தியை சனியின் புதல்வன் என்கின்றன. அது நமக்குத்
தேவையில்லாதது. எந்த மருத்துவமனையில் அவர் பிறந்தார் என்றெல்லாம்
நாம் கேட்டுக் கொண்டிருப்போம். ஆகவே அது தேவையில்லாதது.

It is scientifically a satellite. There ends the matter.

சில ஜோதிடவல்லுனர்கள், இரண்டு பெயர்கள் இருந்தாலும், அவை ஒன்றுதான்
என்பார்கள் வேறு சிலர் அவை தனித்தனி என்னும் மாறுபட்ட கருத்தைக்
கொண்டுள்ளார்கள். ஆனால் பழைய ஜாதகங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால்,
ஒன்றைத்தான் குறித்து வைத்துள்ளார்கள். ஆகவே அடித்துச் சொல்லலாம், அவை
இரண்டும் ஒன்றுதான்! There is not a single chart in any book where Gulika
& Mandi are both present, so both must be the same.

ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன்
தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு
அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த
சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில்
நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம்.
ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான
இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும்,
தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின்
ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம்.

கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த,
அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன்
இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு
லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின்
வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம்.
Mandi being on the lagna gave Indrajit, a short span of life!

இந்தக்கதையை நம்புவர்கள் நம்பலாம். நம்பாதவர்கள், பின்னூட்டத்தில் சொல்ல
வேண்டாம். ஒரு குறுகுறுப்பான தகவல் என்பதற்காக அதைக் கொடுத்துள்ளேன்.
எனக்கும் அந்தக் கதையில் நம்பிக்கை இல்லை!:-))))

இன்னொரு கதையும் உண்டு, ராவணன் தன் அரசவையில், அரியணை இருக்கும்
இடத்தில் ஏறுவதற்கான படிக்கட்டில் சனியையும் கல்லில் படிக்கட்டாகி,
குப்புறப் போட்டு வைத்திருந்தானாம். அதுதான் முதல் படிக்கட்டாம். தினமும்
அதை மிதித்துக் கொண்டு, ஏறிச் சென்றுதான் தன் அரியணையில் அமர்வானாம்.

அவனுடைய கொட்டத்தை அடக்க நினைத்த நாரதர், அவனுடைய சபைக்குச்
சென்று பேசிக்கொண்டிருந்த போது சொன்னாராம், “ ராவணா, உன்னுடைய
தவவலிமை என்ன? உன்னுடைய பெருமை என்ன? நீ எதற்காக சனியை
குப்புறப் போட்டு மிதித்துக் கொண்டு செல்கிறாய்? நிமிர்த்திப்போட்டு, சனியின்
நெஞ்சில் அல்லவா நீ மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும்?”

நெகிழ்ந்துபோன ராவணன் உடனே அதைச் செய்தான்.

என்ன ஆயிற்று?

நிமிர்ந்து கிடந்த சனியின் மார்பில், அவன் கால்கள் படும்போதெல்லாம், சனியின்
பார்வை அவன் மேல் விழுக ஆரம்பித்தது.

சனியின் பார்வை படப்பட அவனுடைய வலிமை எல்லாம் நீங்கி, கெட்டவை
குடிகொள்ள ஆரம்பித்தன. கடைசியில் மாற்றான் மனைவி சீதையின் மேல்
கையை வைத்தான். வைத்த பிறகு நடந்ததைத்தான் அனைவரும் அறிவோமே!
----------------------------------------------------------------------------

படத்தின் மேல் கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்.
ஜகன்நாத ஹோரா மென்பொரு்ளில் கணிக்கபெற்ற ஜாதகத்தில் மாந்தியின்
நிலைப்பாடு அதில் தெரியவரும்
----------------------------------------------------------------------------------------------------
கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகப் பலன்களைச்
சொல்லும்போது, மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன்களைச்
சொல்வார்கள். அது சரியாகவும் இருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள்,
மாந்தியையும் பார்ப்பதில்லை. அஷ்டகவர்க்கத்தையும் பார்ப்பதில்லை.
என் கண்ணிற்கு அது ஒரு குறையாகத்தான் படுகிறது!

நான் படித்ததெல்லாம் ஆங்கில ஜோதிட நூல்கள் என்பதால், எனக்கு ஒரு விரிந்த
பார்வை கிடைத்தது. நான் கேரள ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும்
படித்திருக்கிறேன். குஜராத் ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும்
படித்திருக்கிறேன்.
---------------------------------------------------------------------------------
மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப்
பலாபலன்கள்:

1ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர்
கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச்
சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்
-----------------------------------------------------------------------
2ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால்,
சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு
இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள்
இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில்
(Dictionary)மட்டும்தான்.
---------------------------------------------------------------------
3ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன்.
யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும்
என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன்.
உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு
நல்ல உறவு இருக்காது.

சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின்
தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
----------------------------------------------------------------------
4ல் மாந்தி இருந்தால்:

ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான
நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)
-----------------------------------------------------------------------
5ல் மாந்தி இருந்தால்:

நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி
மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.
நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன்.
அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள்
தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது.
சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.
-------------------------------------------------------------------------
++++++6ல் மாந்தி இருந்தால்:

துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி.
அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes).
மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று
விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம்
ஈடுபாடுகொள்வாள் (loved by women)
-------------------------------------------------------------------------
7ல் மாந்தி இருந்தால்:

வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு
வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை
உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை
வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன்.

சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே
வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!
-------------------------------------------------------------------------
8ல் மாந்தி இருந்தால்:

கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில்
கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக்
கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன்.

துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன்.
ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.
------------------------------------------------------------------------
9ல் மாந்தி இருந்தால்:

தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள்
அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய்
விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும்.
(deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள்.
வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------
10ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன்.
சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு
இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில்
விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட
விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு
வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை
உடையவர்களாக இருப்பார்கள்.

மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்
----------------------------------------------------------------------------
11ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம்
கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான்.

சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது .
உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப்
பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.
----------------------------------------------------------------------------
12ல் மாந்தி இருந்தால்:

ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும்.
கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான
பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள்.

சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில்
இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.
-----------------------------------------------------------------------
கூறப்படுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு,
சுப கிரகங்களின் அமைப்பு, பார்வை ஆகியவற்றை வைத்து மேற்சொன்ன
பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும்
போகலாம்.

எனது அனுபவத்தை வைத்து மாந்தியின் பலன்களை மேலும் விவரமாக அலச
உள்ளேன். அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சலில் வரும். சனியை
அலசியவுடன், தொடர்ந்து மாந்தியைப் பற்றிய பகுதி வரும்.
பொறுத்திருந்து படியுங்கள்!


அன்புடன்,
வகுப்பறை
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

91 comments:

  1. கேரள ஜோதிடம் அறிந்தவன் எனும் முறையில் சொல்லுகிறேன். அனைத்து கிரகங்களை விட மாந்தி அதிபயங்கரமானது..!

    மாந்தி ப்ரேதஹா என்கிறார்கள்.

    மாந்தி லக்னம் அல்லது 7ல் இருந்தால் அவர்களின் மணவாழ்க்கையில் 24 மணிநேரமும் சண்டை சண்டையாகவே இருக்கும். ஆனால் பிரிந்து வாழவும் மாட்டார்கள். சேர்ந்து சந்தோஷமாகவும் இருக்கமாட்டார்கள்.

    இது எனது ஜோதிட ஆய்வு.

    மாந்தியை ஞாபகப்படுத்தி என்னை கிலி ஏற்படுத்தியதற்கு நன்றி வாத்தியாரே..!

    ReplyDelete
    Replies
    1. அய்யா... "லக்னத்தில் மாந்தி"க்கு பரிகாரம் (தனுசு லக்னத்தில் குருவுடன் மாந்தி ) என்ன? வாட்ஸ் ஆப் 9840197398.

      Delete
  2. ஐயா வணக்கம்.
    11ல் மாந்தி உள்ளதால் ஏற்படும் (பொது)பலன் சரிபட்டு வரவில்லயே!.
    ஒருவேளை பொதுப் பலன் என்பதாலோ?

    ReplyDelete
  3. எனக்கு மாந்தி 11ல் கேதுவுடன். எனக்கு இதனால்தானோ என்னவோ மூத்த சகோதரர் இல்லை. ஆனால் என்றும் பணவரவிற்கு குறைவிருந்ததில்லை. மோசமான தசா புத்திகளிலும் கூட (கேது புத்தி அந்தரங்ளில் இன்னும் நன்றாக இருந்திருக்கிறது). தாங்கள் சொன்ன மற்ற பலன்கள் இனி நடக்கலாம்.

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Dear Sir,

    அப்போ நாம அனவசியமகதான் சனி, ராகு மீது சந்தேகம்
    பட்டோம் main villain இந்த மாந்திதான். இவரை தன வசப்படுத்த
    எதாவது பரிகாரம் உண்டா, இல்லை கஷ்டத்தை அனுபவித்துதான்
    ஆகவேண்டுமாம்.

    ReplyDelete
  6. மாந்தி எனக்கு லக்னத்தில் உள்ளது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அதனால் ஸ்வாமிகள் சொன்னது போல பலன் தெரியவில்லை :-)

    மற்றபடி பாடத்தில் சொல்லப்பட்டிருப்பது எனக்கு பொருந்தவில்லை. பொதுக்கருத்துக்கள் தானே!!

    மற்றுமொரு கருத்தாக, லக்னத்தில் மாந்தி இருந்தால் பணம் அவனை விட்டுப் போகாது என்றும் சொல்கின்றனரே!

    ReplyDelete
  7. ////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
    கேரள ஜோதிடம் அறிந்தவன் எனும் முறையில் சொல்லுகிறேன். அனைத்து கிரகங்களை விட மாந்தி அதிபயங்கரமானது..!
    மாந்தி ப்ரேதஹா என்கிறார்கள்.
    மாந்தி லக்னம் அல்லது 7ல் இருந்தால் அவர்களின் மணவாழ்க்கையில் 24 மணிநேரமும் சண்டை சண்டையாகவே இருக்கும். ஆனால் பிரிந்து வாழவும் மாட்டார்கள். சேர்ந்து சந்தோஷமாகவும் இருக்கமாட்டார்கள்.
    இது எனது ஜோதிட ஆய்வு.
    மாந்தியை ஞாபகப்படுத்தி என்னை கிலி ஏற்படுத்தியதற்கு நன்றி வாத்தியாரே..!////

    என்ன ஸ்வாமீஜி இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? உங்களுக்கு கிலி ஏற்படுமா? அல்லது ஏற்படுத்தத்தான் முடியுமா? நீங்கள் சாதாரண மனித உணர்வுகளூக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இல்லையா? அவற்றை அடக்கும் கலை தெரிந்த துறவியல்லவா? மற்றவர்கள் சொன்னால் பரவாயில்லை. நீங்கள் சொன்னால்................?
    முதல் பின்னூட்டம் இட்டு மாந்தியின் வருகைக்கு மலர் தூவியமைக்கு நன்றி ஸ்வாமிஜி!

    ReplyDelete
  8. ////Blogger தியாகராஜன் said...
    ஐயா வணக்கம்.
    11ல் மாந்தி உள்ளதால் ஏற்படும் (பொது)பலன் சரிபட்டு வரவில்லயே!.
    ஒருவேளை பொதுப் பலன் என்பதாலோ?////

    Yes, Thiayagarajan, You are correct!

    ReplyDelete
  9. vanakkam aiya

    enaku maandhi 4 il anaal guru
    12 il irundhu paarkirathu.athanal
    theemaigal kuraiyuma?

    ReplyDelete
  10. ////Blogger ananth said...
    எனக்கு மாந்தி 11ல் கேதுவுடன். எனக்கு இதனால்தானோ என்னவோ மூத்த சகோதரர் இல்லை. ஆனால் என்றும் பணவரவிற்கு குறைவிருந்ததில்லை. மோசமான தசா புத்திகளிலும் கூட (கேது புத்தி அந்தரங்ளில் இன்னும் நன்றாக இருந்திருக்கிறது). தாங்கள் சொன்ன மற்ற பலன்கள் இனி நடக்கலாம்.////

    அதெல்லாம் நடக்கும் ஆனந்த்! நடக்கும்போது எங்களையும் கவனித்துக் கொள்ளூங்கள்!

    ReplyDelete
  11. ////Blogger துபாய் ராஜா said...
    நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.///

    ராஜா சொன்னால் சரிதான். நன்றி ராஜா!

    ReplyDelete
  12. /////Blogger arumuga nainar said...
    Dear Sir,
    அப்போ நாம அனவசியமகாத்தான் சனி, ராகு மீது சந்தேகம்
    பட்டோம் main villain இந்த மாந்திதான். இவரை தன வசப்படுத்த
    எதாவது பரிகாரம் உண்டா, இல்லை கஷ்டத்தை அனுபவித்துதான்
    ஆகவேண்டுமாம்.///

    பரிகாரம் இறைவழிபாடு ஒன்றுதான்.

    ReplyDelete
  13. Respected Sir,

    Then why didn't our ancestors build temple for Manthi?

    ReplyDelete
  14. /////Blogger ரிஷி said...
    மாந்தி எனக்கு லக்னத்தில் உள்ளது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அதனால் ஸ்வாமிகள் சொன்னது போல பலன் தெரியவில்லை :-)
    மற்றபடி பாடத்தில் சொல்லப்பட்டிருப்பது எனக்கு பொருந்தவில்லை. பொதுக்கருத்துக்கள் தானே!!
    மற்றுமொரு கருத்தாக, லக்னத்தில் மாந்தி இருந்தால் பணம் அவனை விட்டுப் போகாது என்றும் சொல்கின்றனரே!////

    சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிறகு பாருங்கள். பணம் போகிறதா இல்லையா என்று?:-))))

    ReplyDelete
  15. ///Blogger sundar said...
    vanakkam aiya
    enaku maandhi 4 il anaal guru
    12 il irundhu paarkirathu.athanal
    theemaigal kuraiyuma?////

    ஆமாம். குரு பார்த்தால், சூரியனைக் கண்ட பனிபோல தீமைகள் விலகிவிடும்!

    ReplyDelete
  16. ////Blogger MAHARAJAN said...
    Respected Sir,
    Then why didn't our ancestors build temple for Manthi?////

    சிவனையும், ராமனையும் தீவிரமாக வழிபட்டவர்கள் நமது முன்னோர்கள். திருநள்ளாறு, ஆலங்குடி போன்ற ஸ்தலங்களில் Main Deity is only Lord Siva. கிரகங்கள் ஒரு சைடில்தான் உள்ளன. அதை மனதில் வையுங்கள்!

    ReplyDelete
  17. மாந்தியை பற்றி இவ்வளவு குறிப்புகள் வேறு எங்கும் இவ்வளவு
    தெளிவாக இல்லை அய்யா.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Dear Sir,

    When u started to write about the Mars, I expected that u will go into the area of manglik/ Chevvai dosam, as this is playing a very big role in match making, I like to know why this is happening.

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா ..
    "மாந்தி" நான் இதுவரை படித்த ஜோதிடப் புத்தகங்களில் குறிப்பிடப்படாத ஒரு விஷயம். பாடத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  22. வணக்கம் வாத்தியாரே
    எனக்கு மூன்றில் மாந்தி. முன் கோபம். கூடப் பிறந்தவர் இருந்தாலும் நல்லுறவு இருக்காது. இவை எனக்கு பொருந்துகின்றது.

    ReplyDelete
  23. வில்லனின் அறிமுகத்துக்கு நன்றி

    ReplyDelete
  24. ஒரு முறை கேட்டதற்கு மாந்தியும் குளிகனும் வேறு என்று ஆந்திர சோதிடர்கள் கருதுவதாக நரசிம்மராவ் கூறினார். அவர்கள் பரம்பரையில் மாந்தியை கணக்கில் எடுப்பதில்லை.

    ReplyDelete
  25. ராசியில் 10லும், நவாம்சத்தில்8லும். தஸாம்சத்தில் 11லும் மாந்தி நின்றால்
    என்ன பலன் சொல்வது?
    KMR.KRISHNAN

    ReplyDelete
  26. Hi Sir,
    Topic about mandi is great..can u please tell wat can happen if mandi is in 3rd house taurus and gulika in 2d house aries but good thing is has guru's 5th aspect. Waiting for ur reply sir...

    ReplyDelete
  27. sir, now u have sent a missile i.e. about Maandhi, what all u have in ur storage like this, please tell us how to safe guard from these type of missile's along with the lesson if it is placed in a unfavorable place.
    Thanks, Sakthi ganesh.

    ReplyDelete
  28. ////Blogger thirunarayanan said...
    மாந்தியை பற்றி இவ்வளவு குறிப்புகள் வேறு எங்கும் இவ்வளவு
    தெளிவாக இல்லை அய்யா.
    நன்றி அய்யா.////

    எல்லாம் உங்களுக்காகத்தான் திருநாராயணன்.!

    ReplyDelete
  29. /////Blogger Shyam Prasad said...
    மாந்தி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி .
    தாங்கள் உதாரணத்திற்கு எடுத்துக்க் கொண்ட ஜாதகத்தில் "ஜகன்னாத் ஹோரவில்" ஏன் குளிகன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. திரு.கலைஞர் அவர்களுடைய ஜாதகத்தை "ஜகன்னாத ஹோர" பதிவு செய்த பொழுது , மாந்தி (Md) மற்றும் குளிகன் (Gk) என்று "லக்னத்தில்" குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதை இங்கு இணைத்து உள்ளேன் .
    http://khtshyam.googlepages.com/kalignar_horoscope.jpg
    மிக்க நன்றி/////

    மொத்தம் 9 உப கிரகங்கள் இருப்பதாக ஆந்திரர்கள் சொல்வார்கள். நமக்கு ஒன்பது கிரகங்களை வைத்தே பாடாக இருக்கிறது. மாந்தியை மட்டும் எடுத்துக் கொள்வோம். கேரளர்கள் அதைத்தான் சிபாரிசு செய்கிறார்கள். பிறகு உங்கள் செளகரியம். நீங்கள் எங்கே வேண்டுமென்றாலும் பெண் (உப கிரகங்கள்) எடுத்துக்கொள்ளூங்கள்:-))))

    மாந்தியார் தான் இயக்குனர். குளிகன் துணை இயக்குனர். உங்கள் செளகரியத்திற்கு நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் டைட்டிலில் போட்டுக் கொள்ளூங்கள்.

    ReplyDelete
  30. /////Blogger Shyam Prasad said...
    http://khtshyam.googlepages.com/kalignar_horoscope.jpg/////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  31. /////Blogger Ram said...
    Dear Sir,
    When u started to write about the Mars, I expected that u will go into the area of manglik/ Chevvai dosam, as this is playing a very big role in match making, I like to know why this is happening.////

    இந்த மாதம் சுபவரம் பத்திரிக்கையில் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் அதைப் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார்கள். வாங்கிப் படியுங்கள்!

    ReplyDelete
  32. ////Blogger தம்பி கிருஷ்ணா said...
    வணக்கம் ஐயா ..
    "மாந்தி" நான் இதுவரை படித்த ஜோதிடப் புத்தகங்களில் குறிப்பிடப்படாத ஒரு விஷயம். பாடத்துக்கு நன்றி ஐயா./////

    எல்லாம் நமது வகுப்பறை செல்வங்களுக்காகத்தான்!

    ReplyDelete
  33. /////Blogger வெள்ளையன் said...
    வணக்கம் வாத்தியாரே
    எனக்கு மூன்றில் மாந்தி. முன் கோபம். கூடப் பிறந்தவர் இருந்தாலும் நல்லுறவு இருக்காது. இவை எனக்கு பொருந்துகின்றது./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. /////Blogger chaks said...
    வில்லனின் அறிமுகத்துக்கு நன்றி/////

    அடுத்து கதாநாயகியை அறிமுகம் செய்யவா?
    யார் கதாநாயகி என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

    ReplyDelete
  35. /////Blogger krish said...
    ஒரு முறை கேட்டதற்கு மாந்தியும் குளிகனும் வேறு என்று ஆந்திர சோதிடர்கள் கருதுவதாக நரசிம்மராவ் கூறினார். அவர்கள் பரம்பரையில் மாந்தியை கணக்கில் எடுப்பதில்லை./////

    மொத்தம் 9 உப கிரகங்கள் இருப்பதாக ஆந்திரர்கள் சொல்வார்கள். நமக்கு ஒன்பது கிரகங்களை வைத்தே பாடாக இருக்கிறது. மாந்தியை மட்டும் எடுத்துக் கொள்வோம். கேரளர்கள் அதைத்தான் சிபாரிசு செய்கிறார்கள். பிறகு உங்கள் செளகரியம் நீங்கள் எங்கே வேண்டுமென்றாலும் பெண் எடுத்துக்கொள்ளூங்கள்:-))))

    மாந்தியார் தான் இயக்குனர். குளிகன் துணை இயக்குனர். உங்கள் செளகரியத்திற்கு நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் டைட்டிலில் போட்டுக் கொள்ளூங்கள்.

    ReplyDelete
  36. /////Blogger kmr.krishnan said...
    ராசியில் 10லும், நவாம்சத்தில்8லும். தஸாம்சத்தில் 11லும் மாந்தி நின்றால்
    என்ன பலன் சொல்வது?
    KMR.KRISHNAN////

    10ஆம் இடம் தொழில்/வேலைக்கு உரிய இடம். அதை fine tuning செய்வதற்கு உதவுவது தசாம்சம்
    Dasamsa is to find out the rise and fall in Career. ஆகவே இந்தக் கேசில் நீங்கள் 11ல் இருக்கும் அமைப்பையே எடுத்துக்கொள்ளூங்கள். 11ல் இருப்பது அதிக நன்மையல்லவா? பயனடைந்தீர்களா?
    இல்லையா? சொல்லுங்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  37. /////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா.////

    நன்றி அமர்!

    ReplyDelete
  38. ////Blogger Thanuja said...
    Hi Sir,
    Topic about mandi is great..can u please tell wat can happen if mandi is in 3rd house taurus and gulika in 2d house aries but good thing is has guru's 5th aspect. Waiting for ur reply sir...////

    9 கிரகங்களை வைத்தே நாம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். உபரியாக நமக்கு மாந்தி மட்டும் போதும். குளிகனைத் திருப்பி அனுப்பி விடுங்கள்!; -))))))))

    ReplyDelete
  39. /////Blogger Sakthi Ganesh said...
    sir, now u have sent a missile i.e. about Maandhi, what all u have in ur storage like this, please tell us how to safe guard from these type of missile's along with the lesson if it is placed in a unfavorable place.
    Thanks, Sakthi ganesh./////

    கவலையே படாதீர்கள். anti missile சக்தி எல்லாம் ஜாதகத்தில் வைத்துத்தான் ஒவ்வொரு மனிதனும் படைக்கப் பெற்றிருக்கிறான்.கடவுள் கருணை மிக்கவர். ’ஜியா உல் ஹக்’கிற்கு 337 பரல்கள்தான் உங்களுக்கும் 337தான்
    மிஸில்ஸ் என்றவுடன் அவருடைய ஞாபகம் வந்து விட்டது. வேறு ஒன்றுமில்லை!:-))))))

    ReplyDelete
  40. DEAR SIR,

    ஏன் மாந்தி நவக்ரகங்கள்ல் ஒன்றாக கோவில் சன்னதியில் இல்லை. கந்தர் சழ்டி அண்ட் கோளாறு பதிகம் நுலீல் மாந்தி பற்றி ஒரு குறிப்பும் இல்லை. பிறகு இதற்கு நாம் ஏன் முக்யத்வம் கொடுக்கவெனும்?

    அன்புடன்
    மாலா

    [ps: This is my first attempt in Tamil typing. Sorry for the spelling mistakes]

    ReplyDelete
  41. ////Blogger MALA said...
    DEAR SIR,
    ஏன் மாந்தி நவக்கிரகங்களில் ஒன்றாகக் கோவில் சன்னதியில் இல்லை. கந்தர் சஷ்டி மற்றும் கோளாறு பதிகம் நுலீல் மாந்தி பற்றி ஒரு குறிப்பும் இல்லை. பிறகு இதற்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?////

    பானிபூரி, பேல் பூரி, பாவ்பாஜி எல்லாம் தமிழர்களின் உணவு இல்லை.
    பாட்டியாலா சூடிதார் எல்லாம் தமிழர்களின் உடை இல்லை
    பானக்கம் மட்டும்தான் நமது கூல் டிரிங்!
    பெப்ஸி கோக்கையெல்லாம் குடிக்கவில்லையா?
    அப்படி இதையும் ஏற்றுக்கொள்ளுங்கள் சகோதரி!

    தமிழர்கள் அல்லாத பிற முனிவர்கள் எழுதிய ஜோதிட நூல்களில் மாந்தி பற்றி உள்ளது. அஷ்டகவர்க்கத்தை எடுத்துக் கொண்டோம் இல்லையா? அதுபோல இதையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  42. வணக்கம் ஐயா,
    very good title sir :))

    ராசியில் 11லும், நவாம்சத்தில் 12லும் மாந்தி நின்றால் என்ன பலன்?

    ReplyDelete
  43. Pathivu nanru Ayya..........


    Ayya enaku raasiyil 12il maanthi......but chandiranin paarvai ullathu(from 6th house).........

    Konjamaavathu help pannuvaara ayya.........???

    ReplyDelete
  44. ம்ம் எனக்கு நாலாம் இடம் , நானும் நாலாம் இடம் தாய் உரிய இடம் என்டதால் தாய்க்கு எதாவது பிரச்சனையை குடுக்குமோ என்டு பார்த்தன் ஒரேவரியில் சொல்லிவிட்டீர்கள். பொது பலன் தானே.. அதுவும் குரு லக்கினத்தில் இருந்தால் நல்லம் என்டு மேல்நிலை பாடத்தில் ஒரு பாலை வார்த்துவிட்டு சென்று விட்டீர்கள்.. :--))நன்றி..

    ReplyDelete
  45. ஐயா எனக்கு 2ல், செவ்வாய்(உ‌ச்ச வீட்டில்)இருக்கு. அதனுடன் மாந்தியும் சேர்ந்துள்ளது. செவ்வாயும் மாந்தியும் சேர்ந்தால் நல்லதா?

    ReplyDelete
  46. ayaa ellarudaya jathakattilum manthi irukkuma ennudaya jadhakathil eppadi erukkunu thirinthu kolvathu en jhothakathil manthi enkaum illai

    ReplyDelete
  47. ஐயா பொதுவாக குரு எங்கு இருந்தாலும் நல்லது என்றும், தன்னுடைய 5,7,9 ஆ‌ம் பார்வையால் தீய கிரகங்களின் வலுவைகுறைத்துவிடும். ஆனா‌‌‌ல் வக்கிர குரு தீய கிரகங்களின் வலுவை அதிகரிக்குமா?

    ReplyDelete
  48. ///Blogger seenu said...
    வணக்கம் ஐயா,
    very good title sir :))
    ராசியில் 11லும், நவாம்சத்தில் 12லும் மாந்தி நின்றால் என்ன பலன்?////

    நவாம்சம் என்பது fine tuning of a position. 12 என்றே வைத்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  49. /////Blogger Bala said...
    Pathivu nanru Ayya..........
    Ayya enaku raasiyil 12il maanthi......but chandiranin paarvai ullathu(from 6th house).........
    Konjamaavathu help pannuvaara ayya.........???/////

    ராசியில் 12ல் ஆ? என்ன குழப்புகிறீர்கள்?
    லக்கினத்தில் இருந்து அல்லவா பாடத்தை நடத்தியிருக்கிறேன்!
    பெஞ்சுமேல் ஏறி நில்லுங்கள்!

    ReplyDelete
  50. /////Blogger Emmanuel Arul Gobinath said...
    ம்ம் எனக்கு நாலாம் இடம் , நானும் நாலாம் இடம் தாய் உரிய இடம் என்டதால் தாய்க்கு எதாவது பிரச்சனையை குடுக்குமோ என்டு பார்த்தன் ஒரேவரியில் சொல்லிவிட்டீர்கள். பொது பலன் தானே.. அதுவும் குரு லக்கினத்தில் இருந்தால் நல்லம் என்டு மேல்நிலை பாடத்தில் ஒரு பாலை வார்த்துவிட்டு சென்று விட்டீர்கள்.. :--))நன்றி../////

    பாலை வார்த்தமைக்கு கட்டணம் வசூல் செய்து கொள்ளலாமா?
    உலகப் புகழ் பெற்ற கொழும்புத் தேங்காய் ஐந்தோ அல்லது பத்தோ அனுப்பிவையுங்கள்!

    ReplyDelete
  51. /////Blogger Sripathi Balaji said...
    ஐயா எனக்கு 2ல், செவ்வாய்(உ‌ச்ச வீட்டில்)இருக்கு. அதனுடன் மாந்தியும் சேர்ந்துள்ளது. செவ்வாயும் மாந்தியும் சேர்ந்தால் நல்லதா?/////

    நம்பியாரும், வீரப்பாவும் சேர்ந்தால் நல்லதா?

    ReplyDelete
  52. /////Blogger dbalaas said...
    ayaa ellarudaya jathakattilum manthi irukkuma?////

    பதிவை மீண்டும் பத்து முறை படியுங்கள்:-))))))
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ennudaya jadhakathil eppadi erukkunu thirinthu kolvathu en jhothakathil manthi enkaum illai////

    ஜகன்னாதஹோரா மென்பொருளில் கணித்துப் பாருங்கள். ஆசாமி அகப்பட்டு விடுவான்!

    ReplyDelete
  53. ////Blogger Sripathi Balaji said...
    ஐயா பொதுவாக குரு எங்கு இருந்தாலும் நல்லது என்றும், தன்னுடைய 5,7,9 ஆ‌ம் பார்வையால் தீய கிரகங்களின் வலுவைகுறைத்துவிடும். ஆனா‌‌‌ல் வக்கிர குரு தீய கிரகங்களின் வலுவை அதிகரிக்குமா?/////

    நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவன்தான்.
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
    சங்கு சுட்டாலும் வெண்மைதரும்.
    வக்கிரமான குருவால் பலன்கள் தாமதப்படும் அவ்வளவுதான்!
    குருவின் பார்வையால் தீய கிரகங்களின் வலு அதிகரிக்குமா? யார் சொன்னது?
    நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளாதீர்கள்! குழம்பாதீர்கள். குழப்பாதீர்கள்!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  54. Dear Sir,

    Exellent writeup....


    Regards
    Vineeth

    ReplyDelete
  55. ///Blogger vineeth said...
    Dear Sir,
    Exellent writeup....
    Regards
    Vineeth////

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!
    இந்தப் பாராட்டுக்கள்தான் என்னை மீண்டும் மீண்டும் குடிக்க...ஸாரி எழுத வைக்கிறது!
    அதிகமான கிக்’கைத் தருவது பாராட்டுக்கள்தான்:-))))))

    ReplyDelete
  56. ஐயா மாந்தி நான்கில் அதுவும் சனியோடு ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க சொன்னது சரி தான் படுத்தி எடுக்குறார் என்னை...என்ன செய்வது வங்கி வந்த வரம்.......

    ReplyDelete
  57. ஐயா, மிகவும் உபயோகமாக இருக்கும் பதிவு. நான் இணையத்தில் தேடிப்படித்த அளவில் இவ்வளவு எளிமையாகவும்,உள்ளடக்கத்தோடும் கட்டுரைகள் கிடைக்கவில்லை. மிக்க நன்றி. ஒரு சந்தேகம்... தமிழில் ஜாதகம் கணிக்கும் மென்பொருளில் மாந்தி எனது ஜாதகத்தில் 11ஆம் இடத்தில் ராகுவுடன் இருப்பதாகக் காட்டுகிறது. ஜகன்னாதஹோராவில் 10ஆம் வீட்டில் தனித்து இருப்பதாகக் காட்டுகிறது. எது சரி? துல்லியமான ஜாதகக் கணிப்பிற்கு இரண்டில் எந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்? நன்றி.

    ReplyDelete
  58. sry ayya.......

    Lagnathil irunthu thaan naan solgiren.........(Am Mesha lagnam)

    Enaku 12il maanthi......but chandiranin paarvai ullathu(from 6th house).........(Kanni raasi)

    Konjamaavathu help pannuvaara ayya........

    ReplyDelete
  59. ////Blogger DD said...
    ஐயா மாந்தி நான்கில் அதுவும் சனியோடு ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க சொன்னது சரி தான் படுத்தி எடுக்குறார் என்னை...என்ன செய்வது வங்கி வந்த வரம்......./////

    எத்ற்கு ம்ம்ம்ம்ம்ம்ம்? நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும். ஜாதகத்தைப் பாருங்கள்

    ReplyDelete
  60. /////Blogger RVC said...
    ஐயா, மிகவும் உபயோகமாக இருக்கும் பதிவு. நான் இணையத்தில் தேடிப்படித்த அளவில் இவ்வளவு எளிமையாகவும்,உள்ளடக்கத்தோடும் கட்டுரைகள் கிடைக்கவில்லை. மிக்க நன்றி. ஒரு சந்தேகம்... தமிழில் ஜாதகம் கணிக்கும் மென்பொருளில் மாந்தி எனது ஜாதகத்தில் 11ஆம் இடத்தில் ராகுவுடன் இருப்பதாகக் காட்டுகிறது. ஜகன்னாதஹோராவில் 10ஆம் வீட்டில் தனித்து இருப்பதாகக் காட்டுகிறது. எது சரி? துல்லியமான ஜாதகக் கணிப்பிற்கு இரண்டில் எந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்? நன்றி.////

    கால சந்திப் பிறப்புக்களுக்கு (முன் பாடத்தைப் படிக்கவும்) இப்படி வருவது இயற்கைதான். நீங்கள் நமது வகுப்பறை மாணவர் திலகம் தியாகராஜன் அவர்கள் கொடுத்துள்ள மென்பொருளில் வாக்கியம் எனும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கணித்துப் பாருங்கள். அந்த மென்பொருள் வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஜிப் பைலாக அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
  61. /////Blogger Bala said...
    sry ayya.......
    Lagnathil irunthu thaan naan solgiren.........(Am Mesha lagnam)
    Enaku 12il maanthi......but chandiranin paarvai ullathu(from 6th house).........(Kanni raasi)
    Konjamaavathu help pannuvaara ayya......../////

    உங்கள் லக்கினத்திற்குச் சந்திரன் 4ற்கு உரியவர். அதோடு நட்புக் கிரகம். அவர் பார்வை படுவது நல்லதுதான். மாந்தியின் விளையாட்டுக்களுக்கு அவர் தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார். கவலையை விடுங்கள்.

    ReplyDelete
  62. vanakkam ayya........

    Vakiramaana guruvin palan thamathapadum yenraal.......

    Samam petra guruvirku eppadi irukum sollungal mandai vedithu vidum???..............

    ReplyDelete
  63. ///Blogger Bala said...
    vanakkam ayya........
    Vakiramaana guruvin palan thamathapadum yenraal.......
    Samam petra guruvirku eppadi irukum sollungal mandai vedithu vidum???..............////

    இதற்கு அடுத்த கேள்வி இப்படி இருக்கும். சமம் பெற்ற கிரகம் இப்படியென்றால், நட்பு நிலையில் உள்ள கிரகம் என்ன செய்யும்?
    அடுத்த கேள்வி. அது அப்படியென்றால் நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?
    இப்படி மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது?
    முதலில் பழைய பாடங்கலைப் படியுங்கள். ஆக்க பூர்வமான கேள்விகளை மட்டும் கேளுங்கள். அடிப்படை விஷயங்களுக்கான பதில்கள் பழைய பாடங்களில் உள்ளன. அவற்றைப் படிக்காமல் புதிய கேள்விகள் கேட்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன்!

    இலையென்றால் தொடர்ந்து பெஞ்சுமேல் நிற்க வேண்டியதிருக்கும்:-))))

    ReplyDelete
  64. வணக்கம் குருவே ,
    மாந்திக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்கள் தான், என்கிறார் BV.RAMAN.வாத்தியார் தான் கீழே உள்ளதைப் பார்த்துச் சொல்ல வேண்டும் ....
    //from B.V. Raman, A Catechism of Astrology:

    "Ancient writers have not attached much significance to Gulika. Reference to this is mostly to be found in Tamil books on astrology. //

    ReplyDelete
  65. வாத்தியார் ஐயா அவர்கலுக்கு,
    மாந்தி பட்ரி விவரங்கலுக்கு நன்ட்ரி.
    தூமாதியர் ஐவர், குலிகாதியர் நால்வர் என படித்திருக்கிரேன்.
    தூமாதியர் :
    தூமன்,வியாதீபாதன்,பரிவேடன்,இந்திர தனுசு,தூமகேது
    குலிகாதியர் :
    குலிக‌ன், எம‌க‌ன்ட‌ன், அர்த்த‌பிர‌க‌ர‌ன‌ன்,காலன்

    இவர் சூர்யாதிகோல்கல் 9 பேருக்கும் புத்திரர்கலாவர்

    இவர்கலை உபகோல்கல் என்பர்.

    ReplyDelete
  66. SIR,

    Whats the pariharam for 12th place mandi with no graha dhristi or combination for thulam lagna...?

    ReplyDelete
  67. Thanks for this great lesson Vathiyar.

    ReplyDelete
  68. //நன்றி அமர்!// அமர்ந்து விட்டேன் அய்யா.

    ReplyDelete
  69. Blogger மதி வேங்கை said...
    வணக்கம் குருவே ,
    மாந்திக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்கள் தான், என்கிறார் BV.RAMAN.வாத்தியார் தான் கீழே உள்ளதைப் பார்த்துச் சொல்ல வேண்டும் ....
    //from B.V. Raman, A Catechism of Astrology:
    "Ancient writers have not attached much significance to Gulika. Reference to this is mostly to be found in Tamil books on astrology. //

    தகவலுக்கு நன்றி, ஆனால் தற்போதுள்ள நம் தமிழக ஜோதிடர்கள் மறந்துவிட்டார்கள்.

    ReplyDelete
  70. Blogger T.SHANMUGANANDAN said...
    வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
    மாந்தி பற்றிய விவரங்களுக்கு நன்றி.
    தூமாதியர் ஐவர், குலிகாதியர் நால்வர் என படித்திருக்கிறேன்.
    தூமாதியர் :
    தூமன்,வியாதீபாதன்,பரிவேடன்,இந்திர தனுசு,தூமகேது
    குலிகாதியர் :
    குலிக‌ன், எம‌க‌ன்ட‌ன், அர்த்த‌பிர‌க‌ர‌ன‌ன்,காலன்
    இவர் சூர்யாதிகோல்கள் 9 பேருக்கும் புத்திரர்களாவர்
    இவர்களை உபகோள்கள் என்பர்./////

    கீழே கொடுத்துள்ளேன். சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே!
    Upagrahas:
    Dhuma
    Vyatipaata
    Parivesha
    Kaala,
    Mrityu,
    Arthaprahaara,
    Yamaghantaka,
    Gulika
    and Maandi

    ReplyDelete
  71. Blogger Vinodh said...
    SIR,
    Whats the pariharam for 12th place mandi with no graha dhristi or combination for thulam lagna...?

    பரிகாரம் - இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்வதுதான்!

    ReplyDelete
  72. ///Blogger Ram said...
    Thanks for this great lesson Vathiyar.////

    நன்றி ராம்!

    ReplyDelete
  73. /////Blogger அமர பாரதி said...
    //நன்றி அமர்!// அமர்ந்து விட்டேன் அய்யா.//////

    அடுத்த பாடம் பதிவாகிவிட்டது. எழுந்து வகுப்பறைக்குச் சென்று அதைப் படியுங்கள்!

    ReplyDelete
  74. பாடம் மிக மிக அருமை, சார். நன்றி
    மாந்தி எனக்கு லக்னத்தில் உள்ளது. ஆனால் குரு பார்வையுடன் இருப்பதால் இறைவனருளால் நன்றாகவே வாழ்க்கை போகிறது.
    //லக்னத்தில் மாந்தி இருந்தால் பணம் அவனை விட்டுப் போகாது என்றும் சொல்கின்றனர//
    ஆனா நான் படு செலவாளியுமில்ல: கஞ்சல்தனம் பண்ணுற ஆளுமில்லை.காரணம் குரு பார்வை என நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  75. ////Blogger செல்லி said...
    பாடம் மிக மிக அருமை, சார். நன்றி
    மாந்தி எனக்கு லக்னத்தில் உள்ளது. ஆனால் குரு பார்வையுடன் இருப்பதால் இறைவனருளால் நன்றாகவே வாழ்க்கை போகிறது.
    //லக்னத்தில் மாந்தி இருந்தால் பணம் அவனை விட்டுப் போகாது என்றும் சொல்கின்றனர//
    ஆனா நான் படு செலவாளியுமில்ல: கஞ்சத்தனம் பண்ணுகிற ஆளுமில்லை.காரணம் குரு பார்வை என நினைக்கிறேன் :-)///

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  76. 'பாலை வார்த்தமைக்கு கட்டணம் வசூல் செய்து கொள்ளலாமா?
    உலகப் புகழ் பெற்ற கொழும்புத் தேங்காய் ஐந்தோ அல்லது பத்தோ அனுப்பிவையுங்கள்!' இந்தியாவுக்கு வரும் போது வாங்கி வருகிறேன்.. :) உங்களுக்கு இல்லாமலா.. ஆனால் அடுத்த வருடம் தான் வருவதாக உத்தேசம்.

    ReplyDelete
  77. ////Blogger Emmanuel Arul Gobinath said...
    'பாலை வார்த்தமைக்கு கட்டணம் வசூல் செய்து கொள்ளலாமா?
    உலகப் புகழ் பெற்ற கொழும்புத் தேங்காய் ஐந்தோ அல்லது பத்தோ அனுப்பிவையுங்கள்!' இந்தியாவுக்கு வரும் போது வாங்கி வருகிறேன்.. :) உங்களுக்கு இல்லாமலா.. ஆனால் அடுத்த வருடம் தான் வருவதாக உத்தேசம்.////

    நகைச்சுவைக்காகச் சொன்னேன். விமானப் பயணத்தில் லக்கேஜ் செலவு வேறு ஆகும். அதெல்லாம் வேண்டாம் உங்கள் அன்பு ஒன்று போதும்.

    ReplyDelete
  78. எனக்கு இரண்டில் மாந்தி ராகு செவ்வாய் ரொம்ப damage ஆகி இருக்கு.. ஆனால் இறைவனிருக்க பயமெதற்கு........(வரம் வாங்கி இருக்கிறேன் நல்ல வாழ்க்கை
    அமைய
    )

    ReplyDelete
  79. ////Blogger sri said...
    எனக்கு இரண்டில் மாந்தி ராகு செவ்வாய் ரொம்ப damage ஆகி இருக்கு.. ஆனால் இறைவனிருக்க பயமெதற்கு.?(வரம் வாங்கி இருக்கிறேன் நல்ல வாழ்க்கை அமைய )/////

    நீங்களாவது வரம் வாங்கிவந்திருக்கிறீர்கள். நான் இறைவனை என்கூடவே வைத்திருக்கிறேன். yes God is with me! (கொஞ்சம் ஓவரா இருக்கில்ல?)

    ReplyDelete
  80. Sir,

    Is there any relationship between Power of Saturn and Maandi...i.e., if saturn is good to lagna or in Exaltation in rasi chakra...will it reduce the bad effect of Maandi...

    ReplyDelete
  81. ////Blogger Vinodh said...
    Sir,
    Is there any relationship between Power of Saturn and Maandi...i.e., if saturn is good to lagna or in Exaltation in rasi chakra...will it reduce the bad effect of Maandi...////

    only relationship, mandhi is said to be the son of Saturn. no other relationship in their working style!

    ReplyDelete
  82. what if Manthi is in 5'th place to Lagna? and there is no Kiragas have sight on this 5'th house. The 5'th House owner is Guru and he is there in 2'nd Place With Sani. Please please tell me the consequences. Will be the guy may not have children? Is this meant Buthira Thosa? Please tell me.

    ReplyDelete
  83. CAN SOMEONE COULD ANSWER MY ABOVE QUESTION PLEASE?

    ReplyDelete
  84. ///Blogger Krish said...
    what if Manthi is in 5'th place to Lagna? and there is no Kiragas have sight on this 5'th house. The 5'th House owner is Guru and he is there in 2'nd Place With Sani. Please please tell me the consequences. Will be the guy may not have children? Is this meant Buthira Thosa? Please tell me./////

    மாந்தியை மட்டும் வைத்து மனதைக் குழப்பிக்கொள்ளாதீர்கள். ஐந்தாம் வீட்டிற்கு பல கிரகங்களை வைத்து வெவ்வேறு விதமான செயல்பாடுகள் உள்ளன. பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள் தெரியவரும்!

    ReplyDelete
  85. Guruji,

    How about Maandi with Guru in 11th house? Good or bad? What will be the result?

    ReplyDelete
  86. ஐயா எனது ஜாதகத்தில் லக்னத்தில் (மிதுனம்) மாந்தி, குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து உள்ளது. பிறக்கும்போது எனது உதட்டில் பிளவு இருந்து பிறகு ( வயதில் சரி செய்யப்பட்டது). மாந்தியால் குழந்தை பேருக்கு பிரச்னை வருமா?. அது தவிர என் ஜாதகத்தில் இல் 2 சந்திரன்,3 இல் சனி, 4இல் ராகு, 9இல் சூர்யன் சுக்ரன் புதன் மற்றும் 10 இல் கேது.

    ReplyDelete
  87. mandhi graha dosha pariharam thiruvalangadu Rs.950/- pannurangal

    ReplyDelete
  88. sir mandhi graha dosha pariharam thiruvalangadu arakkonam endra stalathil mantheeswarar snannathi ullathu angu Rs.950 mandhi graho dosha pariharam

    ReplyDelete
  89. ஐயா
    மாந்திக்கு பரிகார ஆலயம்
    சென்னை அருகே இருக்கும்
    புகழ் பெற்ற திருவலங்காடு
    இங்கு மாந்திக்கு
    பரிகாரமாக
    விஷேச பூஜை செய்யப் படுகிறது எனது மொபைல் எண்
    6383233043.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com