மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.11.08

மனதுக்கொரு மருந்து

"உடம்பிற்கு மட்டுதானே மருந்துகள் உள்ளன! மனதிற்கு ஏது மருந்து?"
என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

இளவட்டங்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய மனதிற்கான மருந்து ஒன்று
இருக்கிறது. வகுப்பறைப் பதிவில் அதை விவரமாக எழுத முடியாது.

தமிழகமெங்கும் அந்த மருந்து கிடைக்கும் கடைகளின் பெயரை மட்டும்
சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள். ஆளை வளத்துப்போடுகின்ற,
பழகிவிட்டால் இறுதியில் சாகடிக்கக்கூடிய மருந்து கிடைக்கும் இடத்தின்
பெயர். டா' வில் ஆரம்பிக்கும் க்' கில் முடியும்.

புரிகிறதா?

ஆனால் மனதிற்கு உரிய உண்மையான மருந்தை, அதுவும் செலவில்லாத
மருந்தைப் பற்றி இன்று அறியத்தருகிறேன்
=========================================================

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்

கோளறு திருப்பதிகம்:
பாடலைப் பாடிய ஸ்தலம்: மறைக்காட்டுநாதர் கோவில்,
திருமறைக்காடு (வேதாரண்யம்)

உலக வாழ்க்கையில், மக்கட்கு இறைவன் ஆணைப்படி, நன்மை
தீமைகளைத் தருவன, ஞாயிறு திங்கள் முதலான கோள்கள்
(நவக் கிரகங்கள்). சமண நெறியினின்று சைவசமயத்தைக்காக்கத்
திருமறைக் காட்டிலிருந்து மதுரை செல்ல முற்பட்ட ஞானசம்பந்த
ரிடம், அப்பர் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை,
சமணர்களோ வஞ்சகர்கள், காலந் தாழ்த்துப் புறப்படலாம், எனக்
கனிவோடு தெரிவித்தார். அப்போது ஞானசம்பந்தர், அடியார்களுக்கு
இடர்வாரா என உரைத்தருளும் இத்திருப்பதிகம், சிறந்த கவச
மந்திரமாக விளங்குகிறது.

அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்!
============================================================

அதெப்படி வாத்தியார் பாட்டைத் தினமும் ஒருமுறை படிப்பதால்
மட்டும் நன்மை வந்துவிடுமா? என்று கேட்காதீர்கள். எல்லாமே நம்பிக்கையின்
அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது!

எல்லாம் நடக்கும்!

இரவில் படுப்பவன், நாளைக் காலையில் எழுவோம் என்று நம்பிக்கையில்தான்
படுக்கிறான்.

விமானத்தில் பயணிப்பவன், போய்ச்சேருவோம் என்கின்ற நம்பிக்கையில்தான்
பயணிக்கிறான்

மருத்துவர் எழுதிக்கொடுக்கும் சீட்டுப்படி மாத்திரைகளை விழுங்கும்போது,
நமக்கு மருத்துவர் கொடுத்துள்ள மருந்து நோயைத் தீர்க்கும் என்று நம்பிக்கை
யோடு மாத்திரைகளை விழுங்கினால் நோய் நிச்சயம் குணமாகும்.
மனதும் உடம்பும் ஒத்துழைக்கும்

மருந்து தயாரித்தளிக்கும் கம்பெனிகளையோ அல்லது சீட்டு எழுதிக்கொடுத்த
மருத்துவரையோ திட்டிக் கொண்டே மருந்தைச் சாப்பிட்டால் சீக்கிரம்
குணமாகாது

ஆகவே நம்பிக்கையோடு தினமும் படியுங்கள். உய்வு கிடைக்கும். அல்லது
மன உறுதி கிடைக்கும்

you will get the standing power to face any crisis....including the present
global financial crisis:-))))))))

உடலுக்கு மருந்தை மருத்துவர் தருவார்.

மனதிற்கு ஒரு மருந்தை ஞானிகளால்தான் தரமுடியும்

ஞானசம்பந்தர் தெய்வ அருள் பெற்ற ஞானி. அவர் தந்த ஊக்க மருந்தை
தினமும் படித்துப் பயன் பெறுங்கள்!
=======================================================

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழுபதி னெட்டோடு ஆறும் உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

வாள்வரி அதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடுகொலை யானை கேழல் கொடுநா கமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடு முடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடு மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

பலபல வேட மாகும் பரன்நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடு எருக்கும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னிவளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

========================================================
திருஞானசம்பந்தரின் பெருமை; வரலாறு கூறும் உண்மை!

வெப்பு நோய் தவிர்த்தல்:

ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன்
அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன்
ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப்
பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் `நுமது ஊர் எது`
எனக் கேட்கப் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு
சம்பந்தரை நோக்கி `உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள்`
எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை
நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி
`மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த
பிறகு வாது செய்யலாம்` என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப்
பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா;
ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம்` என்றார். சமணர்கள்
மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்து
கிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய்
மேலும் கூடியது. ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம்
பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில்
நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்
பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான்.
ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய்
தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து
`யான் உய்ந்தேன்` என்று போற்றினான்.

அனல் வாதம்:

பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க
வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம்
என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையைக்
கூறுங்கள்` என்றார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட
பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு
எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்`
என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம்
அமைக்கக் கட்டளையிட்டான்.

ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச்
செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்`
என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர்
நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம்
அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வள ரொளி` என்றதொரு
திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில்
எரியாது பச்சென்றிருந்தது.சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப்
பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து
சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான்
இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும்
பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்
பெறுவதாயிற்று.

புனல்வாதம்:

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை
நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே
முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள்
எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச்
செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்`
என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்
களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில்
தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை
செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான்.

ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை
அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும்
`அஸ்தி நாஸ்தி` என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி
ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே
விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய
உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர்,
திருப்பாசுரம் எனப்படும் `வாழ்க அந்தணர்` என்னும் திருப்பதிகத்தை
அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை
ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக்
கிழித்து எதிர் ஏறிச் சென்றது.

அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர்
அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன்
ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து
சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வன்னியும்
மத்தமும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ் வேடு
வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று
நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது. குலச் சிறையார்
அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார்.

அனைவரும் கண்டு அதிசயித்து மகிழ்ந்தனர்.

சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். ஞானசம்பந்தர்
பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று
`வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம்
திருமடத்துக்கு எழுந்தருளினார்.

மேலும் படிக்க விரும்புவோர்க்கான சுட்டி
வாழ்க வளமுடன்!

21 comments:

  1. இந்தப் பதிவை எழுதத் தூண்டிய நமது வகுப்பறை மாணவக் கண்மணி ராஜகோபால் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

    ReplyDelete
  2. ஐயா...

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது முன்னோர் சொல்.

    அதை விட்டு விஞ்ஞானத்திற்குவவாத அஞ்ஞானக் கற்பனைக்கொவ்விய கதைகளை விட்டுத்தள்ளுங்கள் பெரியவரே...

    மனதைத் தெளிவாக, விருப்பு வெறுப்புகற்கப்பாற்பட்டு வையுங்கள். உலக நடப்புகளின் உண்மைகளும் காரண காரியங்களும் புரியவரும்.

    எழுதி வைத்து அச்சேற்றினால் உண்மையென்று தோற்றமளிக்கும் கதைகளெல்லாம் நமக்கு வேண்டாம்.

    ReplyDelete
  3. /////படகோட்டி said...
    ஐயா...
    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது முன்னோர் சொல்.
    அதை விட்டு விஞ்ஞானத்திற்குவவாத அஞ்ஞானக் கற்பனைக்கொவ்விய கதைகளை விட்டுத்தள்ளுங்கள் பெரியவரே...
    மனதைத் தெளிவாக, விருப்பு வெறுப்புகற்கப்பாற்பட்டு வையுங்கள். உலக நடப்புகளின் உண்மைகளும் காரண காரியங்களும் புரியவரும்.
    எழுதி வைத்து அச்சேற்றினால் உண்மையென்று தோற்றமளிக்கும் கதைகளெல்லாம் நமக்கு வேண்டாம்.//////

    செம்மையான மனதுடைய ஒருவனை முதலில் காட்டுங்கள்.
    அச்சேறிய மந்திரங்களை நம்புவதா அல்லது வேண்டாமா என்பதைப்பற்றிப் பிறகு பேசுவோம் நண்பரே!

    ReplyDelete
  4. ஐயா,

    மனம் சரியில்லையென்றால் மருந்தும் வேலை செய்யாது என சகோதரர் சொல்லுவார். மனதுக்கு மருந்தான பாடல் கொடுத்த தாங்களுக்கும் எழுத சொன்ன கண்மணி ராஐகோபாலுக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா,
    நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! எதை நீ அறிந்தால் கிடைத்தும் இன்பம்! இதை விளக்கும் உன்னத பதிப்பு!

    எல்லோருக்கும் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுள், மனசாந்தியுடன் இருக்க இறைவனை ப்ரர்த்திகேறேன்.

    உங்கள் தொண்டு வளர வேண்டும்!

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  6. Good lesson!
    Thanks a bunch for writing this.

    ReplyDelete
  7. இதே பாடலை தினமும் வாசிக்கச் சொல்லி புத்தகத்தை எனைத்தேடி வந்து கொடுத்த இன்னொரு ஆசானும் கோவைக் காரர்தான்!

    திருச்சிற்றம்பலம்!

    பதிவின் வாயிலாகவும் வாசிக்க பதிவு செய்த உங்களுக்கும் எனது நன்றி!எழுதத் தூண்டிய ராசகோபால் அவர்க்கும் நன்றி!

    ReplyDelete
  8. ////வேலன். said...
    ஐயா,
    மனம் சரியில்லையென்றால் மருந்தும் வேலை செய்யாது என சகோதரர் சொல்லுவார். மனதுக்கு மருந்தான பாடல் கொடுத்த தாங்களுக்கும் எழுத சொன்ன கண்மணி ராஐகோபாலுக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    நமக்குள் நன்றி எதற்கும் வேலன்? நீங்கள் பதிவைப் படித்து மகிழ்ந்தால் போதும்!

    ReplyDelete
  9. /////Sridhar said...
    வணக்கம் அய்யா,
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! எதை நீ அறிந்தால் கிடைக்கும் இன்பம்! இதை விளக்கும் உன்னத பதிப்பு! எல்லோருக்கும் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுள், மனச்சாந்தியுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    உங்கள் தொண்டு வளர வேண்டும்!
    ஸ்ரீதர் S//////

    நன்றி ஸ்ரீதர்

    ReplyDelete
  10. /////hotcat said...
    Good lesson!
    Thanks a bunch for writing this./////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  11. /////நாமக்கல் சிபி said...
    இதே பாடலை தினமும் வாசிக்கச் சொல்லி புத்தகத்தை என்னைத்தேடி வந்து கொடுத்த இன்னொரு ஆசானும் கோவைக் காரர்தான்!
    திருச்சிற்றம்பலம்!
    பதிவின் வாயிலாகவும் வாசிக்க பதிவு செய்த உங்களுக்கும் எனது நன்றி!எழுதத் தூண்டிய ராசகோபால் அவர்க்கும் நன்றி!/////

    திருச்சிற்றம்பலம்!திருச்சிற்றம்பலம்!திருச்சிற்றம்பலம்!
    (பதிவில் போட மறந்ததால் இங்கே போட்டுள்ளேன்)

    ReplyDelete
  12. வணக்கம் அய்யா,

    ஹரியும் ஹரனும் ஒன்னு !!
    அறியாதவன் வாயில் மண்ணு !!

    தென்னாடுடைய சிவனே போற்றி.

    திருச்சிற்றம்பலம்!
    திருச்சிற்றம்பலம்!
    திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete
  13. ஞானசம்பந்தர் மதுரைக்குக் கிளம்பும் போது நாளும் கோளும் சரியில்லை என்று அப்பர் தடுத்ததாகவும், அதற்கு மறுமொழியாய் ஞானசம்பந்தர் கோளறு பதிகம் எழுதியதாகவும் படித்திருக்கிறேன். மதுரையில் சோதனைகள் தொடர்ந்தன; அவற்றை நள்ளாற்றுடையான் துணையுடன் ஞான சம்பந்தர் வெற்றி கொண்டார் என்பது சைவ வரலாறு.

    பதிந்தமைக்கு நன்றி.

    திருநீலகண்டம்! திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete
  14. /////Geekay said...
    வணக்கம் அய்யா,
    ஹரியும் ஹரனும் ஒன்னு !!
    அறியாதவன் வாயில் மண்ணு !!
    தென்னாடுடைய சிவனே போற்றி.
    திருச்சிற்றம்பலம்!
    திருச்சிற்றம்பலம்!
    திருச்சிற்றம்பலம்!/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  15. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ஞானசம்பந்தர் மதுரைக்குக் கிளம்பும் போது நாளும் கோளும் சரியில்லை என்று அப்பர் தடுத்ததாகவும், அதற்கு மறுமொழியாய் ஞானசம்பந்தர் கோளறு பதிகம் எழுதியதாகவும் படித்திருக்கிறேன். மதுரையில் சோதனைகள் தொடர்ந்தன; அவற்றை நள்ளாற்றுடையான் துணையுடன் ஞான சம்பந்தர் வெற்றி கொண்டார் என்பது சைவ வரலாறு.பதிந்தமைக்கு நன்றி.
    திருநீலகண்டம்! திருச்சிற்றம்பலம்!//////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  16. ////Namaste,

    GL is Ghati Lagna. Gk is Gulika. Md is Maandi.

    Best regards,
    Narasimha////


    I got reply from Jaganath Hora Software administrator!!

    ReplyDelete
  17. /////hotcat said...
    ////Namaste,
    GL is Ghati Lagna. Gk is Gulika. Md is Maandi.
    Best regards,
    Narasimha////
    I got reply from Jaganath Hora Software administrator!!/////

    Thanks for your efforts and immediate reply Mr.Shankar!

    ReplyDelete
  18. ஐயா,

    அருமையான பதிவு. முன்பொருமுறை அண்ணன் குமரன் கோளாறு பதிகத்திற்க்கு பொருளுரைதார்.

    அருமையான பதிகம், நன்றிகள் பல.

    எந்த பதிகம் எந்த கிரகதிற்க்குரியது என்று தெரிவிக்கவும்.

    நான் தினமும் இப்பதிகம் முழுமைக்கும் இடைவிடாது சொல்லி வருகிறேன். கடந்த 2003 ஆம் ஆண்டில் தான் இப்பதிக்கதை படித்து பாடஆரம்பித்தேன். தொடக்கத்தில் ஒரு நாளில் இருமுறை படித்தேன், பிறகு காலை வேளைகளில் மட்டும் மனப்பாடமாய், 3-5, நிமிடத்தில் பாராயணம் செய்து விடுவேன், ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அடுத்தடுத்து வரவேண்டும் என்று கவனமாக இருப்பேன்

    ReplyDelete
  19. /////சிவமுருகன் said...
    ஐயா,
    அருமையான பதிவு. முன்பொருமுறை அண்ணன் குமரன் கோளாறு பதிகத்திற்க்கு பொருளுரைதார்.
    அருமையான பதிகம், நன்றிகள் பல.
    எந்த பதிகம் எந்த கிரகதிற்குரியது என்று தெரிவிக்கவும்.
    நான் தினமும் இப்பதிகம் முழுமைக்கும் இடைவிடாது சொல்லி வருகிறேன். கடந்த 2003 ஆம் ஆண்டில் தான் இப்பதிக்கதை படித்து பாடஆரம்பித்தேன். தொடக்கத்தில் ஒரு நாளில் இருமுறை படித்தேன், பிறகு காலை வேளைகளில் மட்டும் மனப்பாடமாய், 3-5, நிமிடத்தில் பாராயணம் செய்து விடுவேன், ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அடுத்தடுத்து வரவேண்டும் என்று கவனமாக இருப்பேன்////

    புத்தகத்தைத் தேடிப்பிடித்து அதை எழுதுகிறேன் நண்பரே!
    நன்றி!

    ReplyDelete
  20. வேண்டுகோளை ஏற்று சிறப்பான பதிவை இட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  21. ////Rajagopal said...
    வேண்டுகோளை ஏற்று சிறப்பான பதிவை இட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.
    அன்புடன்
    இராசகோபால்////

    விரும்பிக் கேட்கும் மாணவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதுதான் ஆசியருக்கு அழகு!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com