மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.11.08

சிக் லீவை வைத்து ஒரு சீரியசான காமெடி!

உலக பொருளாதாரச் சீரழிவை அனைவரும் அறிவீர்கள். சீரழிவிலிருந்து விடுபட
ஒவ்வொரு நிறுவனமும் தங்களால் முடிந்த நடவடிக்கையை மேற்கொள்ள
வேண்டும் என்கிறது அரசு. அதை மனதில் கொண்டு ஒரு பெரிய நிறுவனம்
நடவடிக்கை எடுத்தால் அது எப்படி இருக்கும் என்பது நகைச்சுவையாகக்
கொடுக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை ஆர்வலர்கள் மேலே படிக்கவும். லாஜிக் பிரியர்களும், உம்மன்னா
ஆசாமிகளும் விலகிக்கொள்ளலாம்.

இறக்குமதிச் சரக்கு; மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!
---------------------------------------------------------------------------------------------------------

கம்பெனி நிர்வாகம் எடுத்த முதல் நடவடிக்கை!

நோய்நொடி விடுப்பிற்கான புதிய விதிமுறைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எல்லா ஊழியர்களுக்குமான அறிவிப்பு

பொருள்: உடல் நலமின்மை விடுப்பிற்கான விதிமுறைகள்

1
மருத்துவச் சான்றுடன் கேட்கப்படும் விடுப்பு:
சால்சாப்பு தேவையில்லை. மருத்துவச் சான்றிதழ்களை ஏற்றுக் கொள்வதில்லை
என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருத்துவரிடம் செல்லக்கூடிய நிலையில்
இருப்பவர்கள், வேலைக்கும் வந்து செல்ல முடியும் என்பதில் நிர்வாகம்
நம்பிக்கை கொண்டுள்ளது.

2.
அறுவை சிகிச்சை:
இதை நிர்வாகம் ஒப்புக்கொள்ளாது. உங்களுக்கு அறுவை சிகிச்சை அவசியம்
என்பதை எக்காரணம் கொண்டும் நிர்வாகம் ஆதரிக்காது. நீங்கள் எங்கள்
நிறுவனத்தின் ஊழியராக இருக்கின்ற வரையில், உங்கள் உடலில் இருக்கும்
உறுப்புக்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
உங்கள் உடல் உறுப்பில் ஒன்றைக்கூட நீக்குவதை நிர்வாகம் ஒப்புக்கொள்ளாது.
வேலைக்குச் சேர்த்தபோது, நிர்வாகம் எதிர்பார்த்து உங்களைச் சேர்த்தற்கு
எதிரானது இது.

3
சாவுகள்: உங்களைத் தவிர்த்து அடுத்த சாவுகள்.
வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு போவதற்காகவே கூறப்படும் சால்சாப்
புக்களில் இது முதன்மையானது என்று நிர்வாகம் கருதுகிறது.

விடுப்பிற்கான இந்தவகைச் சாவுகளில் பாதி பொய்யானது என்று நிர்வாகம்
கருதுகிறது. அகவே இதற்கான விடுப்புக்களை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாது.

எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும், நீங்கள் செல்லவில்லை என்றாலும்
இறந்தவரின் ஈமச் சடங்குகள் ஒன்றும் கெட்டுப்போகாது. அங்கே உள்ளவர்கள்
அதை நடத்திவிடுவார்கள்.

வேலை முடிந்த பிறகு நீங்கள் சென்று அஞ்சலி செலுத்தலாம் என்று நிர்வாகம்
கருதுகிறது. மாலையில்தான் ஈமக் கிரியைகள் என்றால், உணவு இடைவேளையில்
தொடர்ந்து வேலை செய்துவிட்டு, அந்த ஒரு மணி நேர அவகாசத்தை எடுத்துக்
கொண்டு நீங்கள் மலையில் ஒரு மணி நேரம் முன்பாகவே செல்லலாம்.
நிர்வாகம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்.

4.
மேலும் ஒரு விதிமுறை!

ஊழியர்கள் கேன்ட்டீனில் அதிக நேரத்தைச் செலவழிப்பது வருந்தத்தக்கது.
அலுவலக நேரத்தில் ஊழியர்கள் அங்கே சென்று பொழுதைக் கழிப்பதை நிர்வாகம்
வன்மையாகக் கண்டிக்கிறது.

இன்று முதல் இந்தப் புதியமுறை அமுலுக்கு வருகிறது. அகரவரிசைப்படி ஒவ்வொரு
வருக்கும் - உதாரணமாக அ'வில் பெயர் தொடங்கும் நபர்கள் காலை 8.00 முதல் 8.15
வரை செல்கின்றார்கள் என்றால் அகர வரிசைப்படி அதற்கு அடுத்தடுத்த பாட்ச்கள்
சென்று திரும்பலாம். ஏதோ ஒரு காரணத்தால் தன் பெயர் வரிசை உள்ளவர்களுடன்
செல்ல முடியாமல் தங்கிவிட்ட நபர். அடுத்த நாள் காலை தன்னுடைய வரிசைக்குப்
பொறுத்திருக்க வேண்டும். வேறு வழிமுறைகளை மறந்தும் கடைப்பிடிப்பதை நிர்வாகம்
அனுமதிக்காது.

இந்த விதிமுறைகளைச் செயல் படுத்துவதில் உங்களுடைய ஒத்துழைப்புத் தேவை.
மேலும் அது பாராட்டிற்குரியது என்பதை அனைவரும் நினைவில் கொள்க!
இப்படிக்கு
தலைமை நிர்வாகி!

========================================================
"வாத்தியார், தூக்கக் கலக்கத்தில் பதிவை மாத்திப் போட்டுவிட்டீர்களா?"

"ஏன் கேட்கிறாய்?"

"இல்லை, இது பல்சுவையில் வரவேண்டிய பதிவு அல்லவா? வகுப்பறையில்
இதற்கென்ன வேலை?"

"ஆன்மீகத்தையும், ஜோதிடத்தையும் எழுதி எழுதி, வகுப்பறை கலகலப்பில்லாமல்
போய்விட்டது! ஒரு மாற்றத்திற்காக இதை இங்கே கொடுத்துள்ளேன்!"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை
என்றும் பாராமல் இன்று வகுப்பை நடத்தியுள்ளார். அடுத்த வகுப்பு இரண்டு
நாட்கள் கழித்து, புதன்கிழமையன்று நடைபெறும்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

30 comments:

  1. சூப்பர்... :)))

    //லாஜிக் பிரியர்களும், உம்மன்னா
    ஆசாமிகளும் விலகிக்கொள்ளலாம்.//


    ஏதோ கெட்ட வார்த்தையைப் போல் உள்ளது... உம்மன்னா??? அப்படி என்றால் என்ன ஐயா?

    ReplyDelete
  2. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!

    //அருமைங்க

    ReplyDelete
  3. VIKNESHWARAN said...
    சூப்பர்... :)))
    //லாஜிக் பிரியர்களும், உம்மன்னா
    ஆசாமிகளும் விலகிக்கொள்ளலாம்.//
    ஏதோ கெட்ட வார்த்தையைப் போல் உள்ளது... உம்மன்னா???
    அப்படி என்றால் என்ன ஐயா?////

    நகைச்சுவை உணர்வு இல்லாமல், எந்நேரமும் முகத்தை உம் என்று
    வைத்துக்கொண்டிருப்பர்கள் என்று பொருள் கொள்ளவும்!

    ReplyDelete
  4. ////தமிழ்நெஞ்சம் said...
    மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!
    //அருமைங்க/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. ///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    வகுப்பறை கலகலப்பாய் ஆனது!////

    இதை, இதைத்தான் எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  6. அமோகமான ஆதரவு பெற்ற ஆன்மீகப் பதிவுகள் தந்தற்கும்

    அளுமை செய்யும் ஆருட
    சோதிடப் பதிவகள் தந்தற்கும்

    அழுமூஞ்சி மாந்தரையும் மாற்றிய
    நகைசுவைப் பதிவுகள் தந்தற்கும்

    அருமைத்திரு ஆசான் அவர்களை
    பாராட்டி மகிழ்வோம் அனைவருமே!

    ReplyDelete
  7. :-)

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  8. Dear Guru,

    This fun based class is good and I was laughing. With such breaks, I am sure the classroom will be more attendive and attractive.

    I appreciate, in spite of your pre-occupied workload, you have allocated your valuable time to such thing!

    Best Wishes

    Sridhar

    ReplyDelete
  9. இந்த விதிமுறைகளைச் செயல் படுத்துவதில் உங்களுடைய ஒத்துழைப்புத் தேவை.
    மேலும் அது பாராட்டிற்குரியது என்பதை அனைவரும் நினைவில் கொள்க!
    இப்படிக்கு
    தலைமை நிர்வாகி!

    Super Sir..

    ReplyDelete
  10. ஆஹா, சிபி / கூடுதுறை அய்யாக்களே, வாத்தியார் //வகுப்பறை கலகலப்பில்லாமல்
    போய்விட்டது! // அப்படின்னு சொல்றாரு. சும்மா விட்டுடறதா?

    அய்யா, ஏதோ வாத்தியார் வகுப்பில் வம்பளக்காமல் நாலும் கற்றுக் கொண்டு போகலாம் என்று இருந்து விட்டோம். இனி மேல் கலகல/வளவள தான்.

    ReplyDelete
  11. வாத்தியார் சரியில்லை.

    ReplyDelete
  12. ஹலோ சார்,

    அடடாஆஅ.....சூப்பர் போங்க.
    ஆமாம் இத எங்கிருந்து புடிச்சீங்க?

    ReplyDelete
  13. Thought Sir is busy and he doesnot like to waste a time on jokes...but this is really good one!

    -Shankar

    ReplyDelete
  14. ஐயா!

    மீண்டும் ஒரு பொது கேள்வி. சில ஜாதகங்களில் தெய்வீக அமைப்பு உள்ளது என்கிறார்கள், அது எதை வைத்து முடிவுக்கு வருவது? அது போன்ற அமைப்பினால் நன்மை என்ன?

    ReplyDelete
  15. I read in a news item that they see jadhagam for animals in mumbai...
    is it possible ..

    ReplyDelete
  16. ////பொதிகைத் தென்றல் said...
    அமோகமான ஆதரவு பெற்ற ஆன்மீகப் பதிவுகள் தந்தற்கும்
    அளுமை செய்யும் ஆருட
    சோதிடப் பதிவகள் தந்தற்கும்
    அழுமூஞ்சி மாந்தரையும் மாற்றிய
    நகைசுவைப் பதிவுகள் தந்தற்கும்
    அருமைத்திரு ஆசான் அவர்களை
    பாராட்டி மகிழ்வோம் அனைவருமே!/////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. /////Rajagopal said...
    :-)
    அன்புடன்
    இராசகோபால்////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  18. Sridhar said...
    Dear Guru,
    This fun based class is good and I was laughing. With such breaks, I am sure the classroom will be more attendive and attractive
    I appreciate, in spite of your pre-occupied workload, you have allocated your valuable time to such thing!
    Best Wishes
    Sridhar

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////ஸ்ரீதர்கண்ணன் said...
    இந்த விதிமுறைகளைச் செயல் படுத்துவதில் உங்களுடைய ஒத்துழைப்புத் தேவை.
    மேலும் அது பாராட்டிற்குரியது என்பதை அனைவரும் நினைவில் கொள்க!
    இப்படிக்கு
    தலைமை நிர்வாகி!
    Super Sir../////

    நன்றி ஸ்ரீதர்கண்ணன்

    ReplyDelete
  20. ////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ஆஹா, சிபி / கூடுதுறை அய்யாக்களே, வாத்தியார் //வகுப்பறை கலகலப்பில்லாமல்
    போய்விட்டது! // அப்படின்னு சொல்றாரு. சும்மா விட்டுடறதா?
    அய்யா, ஏதோ வாத்தியார் வகுப்பில் வம்பளக்காமல் நாலும் கற்றுக் கொண்டு போகலாம் என்று இருந்து விட்டோம். இனி மேல் கலகல/வளவள தான்.//////

    ஆகா, மாணவர்களுக்குரிய குறும்புத்தனம் இருந்தால்தானே வகுப்பறை கலகலக்கும்.
    கலக்குங்கள் சகோதரி!

    ReplyDelete
  21. /////ஆட்காட்டி said...
    வாத்தியார் சரியில்லை./////

    இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தைப் படியுங்கள்!

    ReplyDelete
  22. ////Sumathi. said...
    ஹலோ சார்,
    அடடாஆஅ.....சூப்பர் போங்க.
    ஆமாம் இத எங்கிருந்து புடிச்சீங்க?/////

    நன்றி சகோதரி! உங்கள் மாதிரி சகோதரிகளும், சகோதரர்களும் மின்னஞ்சலில் அனுப்புவதுதான்!

    ReplyDelete
  23. ////hotcat said...
    Thought Sir is busy and he doesnot like to waste a time on jokes...but this is really good one!
    -Shankar///

    'really good one' என்று சொன்னீர்கள் அல்லவா? அதுதான் விஷயம்! ஆகவே இதில் நேர விரையம் என்பது இல்லை!

    ReplyDelete
  24. ////Kumaresan said...
    ஐயா!
    மீண்டும் ஒரு பொது கேள்வி. சில ஜாதகங்களில் தெய்வீக அமைப்பு உள்ளது என்கிறார்கள், அது எதை வைத்து முடிவுக்கு வருவது? அது போன்ற அமைப்பினால் நன்மை என்ன?/////

    தெய்வீக அமைப்பு என்றேல்லாம் ஒன்றும் கிடையாது. மகாபுருஷ யோகம் என்று சில யோகங்கள் உண்டு.
    அது பற்றிய விவரம் பின் பாடங்களில் வரும். பொறுமை காக்கவும்!

    ReplyDelete
  25. /////மிஸ்டர் அரட்டை said...
    I read in a news item that they see jadhagam for animals in mumbai...
    is it possible ./////

    எனக்குத் தெரியவில்லை; அது பற்றி இதுவரை நான் படித்ததில்லை!

    ReplyDelete
  26. சார் ,
    இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வி !
    உச்சம் பெற்ற ஒரு நல்ல கிரகத்தை சனி , ராகு அல்லது கேது இவற்றில் ஏதாவது ஒன்று பார்ப்பதால் யாருடைய பலம் அதிகமாய் இருக்கும் ?
    தயவு செய்து விளக்கவும் !
    அன்புடன் ,
    பாஸ்கர்

    ReplyDelete
  27. /////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    சார் ,
    இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வி !
    உச்சம் பெற்ற ஒரு நல்ல கிரகத்தை சனி , ராகு அல்லது கேது இவற்றில் ஏதாவது ஒன்று பார்ப்பதால் யாருடைய பலம் அதிகமாய் இருக்கும் ?
    தயவு செய்து விளக்கவும் !
    அன்புடன் ,
    பாஸ்கர்/////

    உச்சம்பெற்ற கிரகத்தால் ஜாதகன் அடையவிருக்கும் பலன்களை அவைகள் குறைத்துவிடும்

    ReplyDelete
  28. //உச்சம்பெற்ற கிரகத்தால் ஜாதகன் அடையவிருக்கும் பலன்களை அவைகள் குறைத்துவிடும்//

    அதே போல் அந்த தீய கிரகத்தின் தீமையை அந்த உச்சம் பெற்ற கிரகம் தடுக்காதா ?

    திரிகோணங்களில் வீற்றிருக்கும் தீய கிரகம் நன்மையை தருமா அல்லது ?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com