மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.8.08

எப்போது நல்ல காலம்?


கடவுள் உங்கள் கண்முன்னே தோன்றி (ஒரு பேச்சுக்குத்தான் சாமி!),
"உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால்
என்ன கேட்பீர்கள்? (விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில்
தெரியப்படுத்துங்கள்)

முருகப்பெருமானின் தீவிர பக்தரான வீரபாகுவிடம், முருகன் நேரில்
காட்சி கொடுத்துக் கேட்டபோது, வீரபாகு சொன்னாராம்: "அப்பனே!
என் வாழ்நாள் முழுவதும் உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் வேண்டும்"

"அதைத் தந்தேன்; இன்னொன்றும் தருகிறேன், அடுத்ததைக் கேள்"
என்று முருகப்பெருமான் சொன்னபோது, வீரபாகு அடுத்ததாக என்ன
கேட்டார் தெரியுமா?

"உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத
மனம் வேண்டும்!"
------------------------------------------------------------------------------------
நாம் அப்படிக் கேட்டிருப்போமா என்றால் - நிச்சயம் கேட்டிருக்க மாட்டோம்.

இன்றைய 13% inflation லெவலில் அது சாத்தியமில்லாதது.
அரசு சொல்வது 13%. ஆனால் உண்மையில் 20% இருக்கும்போல் உள்ளது!

சரி, விஷயத்திற்கு வருகிறேன். நம்ம ஆசாமி ஒருவனிடம் - அதாவது
நம்ம காலத்து ஆசாமி ஒருவனிடம் - இன்னும் விளக்கமாகச் சொன்னால்
நமீதாயுகத்து ஆசாமி ஒருவனின் கண்முன்னே இறைவன் தோன்றி,
அதே போன்று சொல்ல, அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா?

"ஆண்டவனே, நான் என்னுடைய நூறாவது வயதில், அழகான என்
மனைவியோடு, என்னுடைய ஆயிரம் ஏக்கர் பண்ணைத் தோட்டத்தில்
உள்ள, பத்து மாடி மாளிகையில், சுயமாக படிகளில் கடகடவென்று
நானே ஏறி உச்சி மாடத்திற்குச் சென்று, கண்ணாடி அணியாத என்
கண்களால், கீழே தோட்டத்தில் அமர்ந்து தங்கத்தட்டில் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் என்னுடைய கொள்ளுப் பேரனை, மனங்குளிரப்
பார்த்து மகிழும் பாக்கியம் வேண்டும்."

ஜாதகத்தின் 36 பாக்கியங்களும் இதில் அடங்கியிருக்கும்.அப்படியொரு
வரனைக் கேட்டான் அந்தக் கில்லாடி. அவன் கேட்கும்போது வயது 25

ஒரு வரம் கேள் என்று சொன்னால் எப்படிக் கேட்பதாம்.
இப்படித்தான் கேட்க முடியும்!:-))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறை வாசகர் ஒருவர் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பினால்
பார்த்துச் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! ஜோதிடத்தைப் படித்தவன்
அவ்வளவுதான். ஆர்வக் கோளாரினால் பதிவில் எழுதிகொண்டிருக்கிறேன்.
அல்லது ஜாதகப்படி எனது கெட்ட நேரத்தினால் பதிவுகளில் எழுதிக்
கொண்டிருக்கிறேன் (போதாத காலம்). அதை இன்னும் சிறப்பாக எழுத
வேண்டும் என்று ஆசை. நிறையப் பேர்களுக்கு அது பயன்படும்.
அதற்கே எனக்கு நேரம் பற்றவில்லை.அதோடு என் சொந்தத் தொழிலையும்
நான் பார்க்க வேண்டும். ஆகவே, மன்னிக்கவும் பார்க்க இயலாது'
என்று பதில் எழுதியிருந்தேன்.

அவர் விடவில்லை. அடுத்தடுத்து ஏழு மின்னஞ்சல்களில் கெஞ்சி
எழுதியிருந்தார். சரி போனால் போகிறது இவர் ஒருவருக்கு மட்டும்
நமது விதுமுறைகளைத் தளர்த்துவோம் என்று எண்ணி, சரி உங்கள்
Horoscope or Full Bith details with one important query அனுப்பி
வையுங்கள் என்று எழுதியிருந்தேன்.

அவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டிருந்தார். அது மேலே அந்தக்
கில்லாடி கேட்ட வரம் போல அவ்வளவு விஷயங்களையும்
உள்ளடக்கியிருந்தது. அந்தக் கேள்வியைக் கீழே கொடுத்துள்ளேன்.

அவருக்கு வயது 28. அதை மனதில் வைத்துக் கொண்டு அவருடைய
கேள்வியைப் படிக்கவும்.

"என் திருமணம், மனைவி, குழந்தைகள், வேலை, வீடு, கார் வாங்கும்
யோகம், ஆயுள் ஆகிய விஷயங்களில் என்னுடைய எதிர்காலம்
எப்படி இருக்கும்?"
------------------------------------------------------------------------------
ஒரே ஒரு கேள்வி கேளுங்கள் என்று சொல்லும்போது கேள்வி எப்படி
இருக்க வேண்டும்?

உதாரணத்திற்கு இரண்டைக் கொடுத்துள்ளேன்.

1. எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு
பெரிய பிரச்சினையாகிவிடுகிறது. அடிக்கடி மன நிம்மதி இழந்து
தவிக்கிறேன். இதற்கு என் ஜாதகப்படி என்ன காரணம்?

பதில்: உங்களுக்கு இரண்டில் - வாக்கு ஸ்தானத்தில் ராகு. ஆகவே
மனைவி என்றில்லை , எவருடனும் நீங்கள் வாயைத் திறந்தால்
சண்டையில்தான் போய் முடியும். ஆகவே விவாதங்களைத் தவிருங்கள்!

2. எனக்கு தற்சமயம் வேலையில் பெரும் பிரச்சினையாக உள்ளது.
பிரச்சினைகள் எப்போது குறையும்?

பதில்: உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில்
கோச்சாரச் சனி இருக்கிறார். அவர் இன்னும் பதினான்கு மாதங்கள்
அங்கே இருப்பார். அதுவரை அப்படித்தான் இருக்கும். எச்சரிக்கையாக
இருங்கள். சக ஊழியர்களுடன் மல்லுக் கட்டாதீர்கள். அனுசரித்துப்
போங்கள்.
-------------------------------------------------------------------------------
ஆனால் வேறு சிலரது மின்னஞ்சல்கள் சிம்ப்பிளாக இருக்கும் - ஆனால்
சிக்கலாக இருக்கும். கேள்வியைப் பாருங்கள். "சார், நான் மிகவும்
துன்பத்தில் இருக்கிறேன். எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?"

முதலில் நான் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். மனிதர் துன்பத்தில்
இருக்கிறேன் என்று எழுதியிருக்கிறாரே என்னவிதமான துன்பம்.
அந்தத் துன்பம் எந்த பாவத்தை வைத்து இவருக்கு ஏற்பட்டிருக்கும்.
அதுவும் இந்த வயதில். நான்காம் வீட்டை வைத்தா? அல்லது ஏழாம்
வீட்டை வைத்தா?, அல்லது பத்தாவது வீட்டை வைத்தா? அல்லது
எதை வைத்து?

துன்பம் எதைவைத்து வேண்டுமென்றாலும் ஏற்படலாமில்லையா?

அதை அவர் எழுத மாட்டார். நானே அதையும் NASA வேலை செய்து
கண்டுபிடித்து, அவருக்குத் தீர்வும் சொல்ல வேண்டும்.

எப்படி இருக்கிறது கதை?
---------------------------------------------------------------------------------
சரி, பொதுவாகப் பேசுவோம்!

நல்ல காலம் என்றால் என்ன?

1. வேலையின்றித் தவிப்பவருக்கு வேலை கிடைத்தால் அது நல்ல காலம்!

2. வேலையில் இருப்பவருக்கு, அதை விட பெட்டர் சான்ஸ் (நல்ல
நிறுவனம் அல்லது நல்ல ஊதியம்) கிடைத்தால் அது நல்ல காலம்!

3. திருமணம் ஆகாமல் தள்ளிக்கொண்டே போகிறவருக்குத் திருமணம்
முடிந்தால் அது நல்ல காலம்!

4. திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்
களுக்குக் குழந்தை பிறந்தால் அது நல்ல காலம்!

5. குழந்தை இருப்பவருக்கு அது அடிக்கடி நோய்வாய்ப்பட்டுப் படுத்தாமல்
இருந்தால் அது நல்ல காலம்!

6. குடும்பஸ்தர்களுக்கு, வாடகை வீட்டில் குடியிருக்காமல் சொந்த வீடு
வாங்கினால் அல்லது ஃப்ளாட் வாங்கினால் அது நல்ல காலம்.

7. சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு, அந்த வீட்டிற்காக வாங்கிய
கடனைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் அது நல்ல காலம்.

8. கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதை ஜீரோ லெவலுக்கு
கொண்டு வரும் நிலை ஏற்பட்டால் அது நல்ல காலம்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!
---------------------------------------------------------------------------------
ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?

நடப்பது எந்தக் கிரகத்தின் திசை, எந்தக் கிரகத்தின் புத்தி என்பதை முதலில்
குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகத்தில் அந்த தசா நாதனும், அந்த
புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனில் இருக்கக்கூடாது.
அல்லது 1/12 பொஸிசனிலும் இருக்கக்கூடாது. இருந்தால் அந்த திசையில்
அந்த புத்தி நன்மையைச் செய்யாது. இதுதான் குறுக்குவழி ஃபார்முலா!

இதை வைத்து அதாவது இந்த ஃபார்முலாவை வைத்து, அடுத்தடுத்து
வரப்போகும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வாருங்கள், உங்களுக்கு
நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும்.

முன் பதிவில் புலிப்பாணி முனிவரின் தசாபுத்திப் பலன்களைக்
கொடுத்துள்ளேன். அதை வைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு
ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும்,
அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி
நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள்
கிடைக்கும்.

ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி
நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால்
நல்ல பலன்கள் கிடைக்காது.

தசாபுக்திதான் முக்கியம். அதற்கடுத்தபடிதான் கோச்சாரப் பலன்கள்.
----------------------------------------------------------------------------------
கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது.
குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம்,
11ஆம் இடம் ஆகிய இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல
பலன்களைத் தருவார்.

1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம்,
10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்
காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.

மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான்
நல்குவார்.

குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல்

"கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும்
ஆளப்பா அகத்திலே களவுபோகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான்
கூளப்பா குவலயங்க ளெல்லாம் ஆண்ட
குற்றமிலாகாந்தாரி மகனும் தானும்
வீளப்பா வீமன் கை கதையினாலே
விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!"
- புலிப்பாணி பாடல்

இந்த ஒரு பாடலே படித்து விளங்கிக் கொள்வதற்கு எவ்வளவு சிரமமாக
இருக்கிறது பாருங்கள். அந்தக் காலத்தில் ஜோதிடம் கற்றவர்கள் எல்லாம்
பாடல்களை வைத்துத்தான் பாடங்களைக் கற்றார்கள். உரை நடைப்பாட
மெல்லாம் இப்போது ஐம்பது ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் இருக்கின்றன
அதற்கு முன்னால் நஹி சாமி, நஹி!

"குமாரசுவாமியம்" என்னும் தமிழ் ஜோதிட நூல் இன்னும் இதைவிடக்
கடினமான தமிழ்ப் பாடல்களால் எழுதப்பெற்றிருக்கும்.

அதைக் கையில் கொடுத்தால், இன்றைய இளைஞன் ஜோதிடமே வேண்டாம்
என்று ஓடிப்போவிடுவான்.
--------------------------------------------------------------------------------
மிக மிக மோசமான காலம் எது?

மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
மோசமானதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------
மிகவும் சூப்பரான நல்ல காலம் எது?

சந்தேகமில்லாமல் பதினோராம் இடத்து நாயகனின் புத்திதான்!
------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய
எழுதும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

மற்றவை அடுத்த வகுப்பில்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

78 comments:

  1. பாடம் அருமை. வாரம் கேட்டவரின் புத்தி கூர்மையும் அருமை.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  2. மறுபடியும் வெள்ளி எனக்கே! :))

    ReplyDelete
  3. அருமை குருவே! இப்போ பதினோறாம் வீட்டு அதிபதி தசை தான் நடக்குது எனக்கு. :))

    இந்த வருடம் எப்போ குரு பெயற்ச்சி? oct or nov..?

    ReplyDelete
  4. நம்ம விமலா இருந்தா சினேகா மனைவியாவும், மச்சினியா நமீதாவும் வேணும்னு கேட்பார். என்ன விமல் சரி தானே? :p

    ReplyDelete
  5. Rajagopal said...
    பாடம் அருமை. வரம் கேட்டவரின் புத்தி கூர்மையும் அருமை.
    அன்புடன்
    இராசகோபால்////

    நீங்களாக இருந்தால் என்ன வரம் கேட்டிருப்பீர்கள் கோபால்?

    ReplyDelete
  6. /////ambi said...
    மறுபடியும் வெள்ளி எனக்கே! :))////

    அடுத்தமுறை தங்கத்திற்கு முயற்சி செய்யுங்கள்!

    ReplyDelete
  7. ////Blogger ambi said...
    அருமை குருவே! இப்போ பதினோறாம் வீட்டு அதிபதி தசை தான் நடக்குது எனக்கு. :))
    இந்த வருடம் எப்போ குரு பெயற்ச்சி? oct or nov..?////

    உங்களுக்குத்தான் லாபாதிபதியின் தசை நடக்கிறதே!
    குருவைப் பற்றிய கவலை எதற்கு?

    ReplyDelete
  8. /////Blogger ambi said...
    நம்ம விமலா இருந்தா சினேகா மனைவியாகவும், மச்சினியாக நமீதாவும் வேணும்னு கேட்பார். என்ன விமல் சரி தானே? :p////

    Over to Vimal for suitable reply!

    ReplyDelete
  9. நீங்களாக இருந்தால் என்ன வரம் கேட்டிருப்பீர்கள் கோபால்? ////

    என் தாய் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று கேட்க தோன்றியது.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  10. Bronze for me this time:-))) I will ask God to give my mother (as mother) in all janma(if I have so...)

    -Shankar

    ReplyDelete
  11. ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
    ஆயிரம் வருகுது சுபதினம்..
    அடுத்தவர் நலனை நினைப்பவர்தமக்கு
    ஆயுள் முழுவதும் சுபதினம்-சீர்காழி
    கோவிந்தராஜன் பாடல்.

    ஐயா, இன்று எது நல்ல காலம்
    என்ற பாடம் ஜோதிட விதிகளோடு
    போனஸாக பலன் கேட்பவர்களின் ஸைக்காலஜி பற்றிய விளக்கமும் சேர்ந்து ஸடையர் போல நையாண்டி
    நகைச்சுவையாக ரசிக்கும்படி இருந்தது
    அதிலும் நாஸா வேலை சூப்பர்! :))

    நீங்கள் போட்ட படத்தில் உள்ள
    தையல் மிஷினும் தலையும்
    மூழ்காதிருப்பதும் அதில் உள்ள
    வயதானவர் அந்த நிலையிலும்
    புன்னகைப்பதும் பல பாடங்களை
    சொல்லாமல் சொல்கின்றன, நல்ல
    செலக்ஷன், வழக்கம் போலவே

    நல்லவேளை எது எல்லாம் நல்ல
    காலம் என்று பட்டியல் போட்டு
    கொடுத்து விட்டீர்கள்! இல்லாவிட்டால்
    இவைவெல்லாம் கிடைத்தவர் கூட
    தேவையில்லாமல் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்த்து நல்ல காலத்தையும் கெட்டதாக்கி விடுவார் அல்லவா?

    பலபல பொதுப்பணிகளுக்கு உங்களுக்கு காலம் போதவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. போதாத காலம் நம் யாருக்கும் வேண்டாமே..

    கடவுள் என் முன்னே தோன்றினால், பொறாமை, வயித்தெரிச்சல் இல்லாத எல்லோருக்கும் உதவும் மனம் கேட்கலாம் என்றிருக்கிறேன்,அதன் பிறகு எல்லா காலமுமே நல்ல காலம்தானே ஐயா?

    ReplyDelete
  12. >>உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால்
    என்ன கேட்பீர்கள்?<<

    அவரின் அன்பு வேண்டும் என்று கேட்பேன்...சர்வ நிச்சியமாக...

    நல்ல பதிவு 'நல்ல காலம்' விளக்கம் அருமை.

    >>1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம்,
    10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்
    காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.<<

    இந்த விளாக்கம் போதும்,இனி இதழை புரட்ட வேண்டிதில்லை
    கோச்சார குரு என்ன செய்யும் என்று அறிய....


    >>எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி
    நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள்
    கிடைக்கும்.....மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
    மோசமானதாக இருக்கும்<<


    இப்படி சொன்னல் எப்படி...எனக்கு 11ஆம் வீட்டு அதிபதி(9இல்(கடகத்தில்) உள்ளார்) தசா ஆனால் 11 மந்தி.

    ReplyDelete
  13. >>உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால்
    என்ன கேட்பீர்கள்?<<

    அவரின் அன்பு வேண்டும் என்று கேட்பேன்...சர்வ நிச்சியமாக...

    நல்ல பதிவு 'நல்ல காலம்' விளக்கம் அருமை.

    >>1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம்,
    10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்
    காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.<<

    இந்த விளாக்கம் போதும்,இனி இதழை புரட்ட வேண்டிதில்லை
    கோச்சார குரு என்ன செய்யும் என்று அறிய....


    >>எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி
    நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள்
    கிடைக்கும்.....மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
    மோசமானதாக இருக்கும்<<


    இப்படி சொன்னல் எப்படி...எனக்கு 11ஆம் வீட்டு அதிபதி(9இல்(கடகத்தில்) உள்ளார்) தசா ஆனால் 11 மந்தி.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. கடவுள் என் முன்னால் தோன்றினால் நான் கேட்கும் ஒரே வரம் எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான்..

    பாடம் அருமை வாத்தியார் ஐயா.
    ஒரு சின்ன சந்தேகம்.
    கும்ப லக்கினத்தாருக்கு பதினோராம் இடத்து அதிபதி குரு. ஆனால் கும்ப லக்கினத்தாருக்கு குரு தசை அவ்வளவாக நன்மையை தராது என்று பொதுவாக சொல்லுவார்களே. இது ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றதே?

    ReplyDelete
  16. What if the 11 th house lord becomes a "PADAKATHIPATHI" for that horroscope? Still he continues to do goodness during his DASA/PUTHI ?

    ReplyDelete
  17. //SP.VR. SUBBIAH said...
    /////Blogger ambi said...
    நம்ம விமலா இருந்தா சினேகா மனைவியாகவும், மச்சினியாக நமீதாவும் வேணும்னு கேட்பார். என்ன விமல் சரி தானே? :p////

    Over to Vimal for suitable reply!//

    திரும்பவும்மா, என் உடம்பு தங்காது பா, எனக்கு கல்யாணமே வேண்டாம்பா என்று தான் கடவுளிடம் கேட்பேன்...:))

    நீங்க எப்படி எப்போ பார்த்தாலும் வெள்ளி வங்குறீங்கன்ணு எனக்கு தெரியும் (வாத்தியரே பதிவு இடும் சமயத்தை மாற்றவும்)

    ReplyDelete
  18. ஐயா ரிஷிபத்தில் மாந்தி இருந்தால் சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருந்து 5 வீடான தன் வீட்டைப்பார்த்தாலும் ஆட்டம் காலிதானா?

    ReplyDelete
  19. கடவுளிடம் வரம் கேட்டவரில் நந்தி பகவான் தான் நம்பர் 1 என நினைக்கிறேன்...

    அவர் பிறந்த போது அவருக்கு ஆயுள் குறைவு 12 வயது அல்லது 16 வயது வரைதான் ஆயுள் என்று அவருடைய தந்தைக்கு தெரியும். நந்தியாரோ சிறந்த சிவபக்தர்.

    அந்த குறிப்பிட்ட வயதில் பெற்றோரின் கவலையைக்கண்டு நந்தியாரும் அவர்களிடம் கேட்க தந்தையும் நிலமையை விளக்க நந்திகளும் நான் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறி ஊர்க்கோவில் குளத்தில் நடுவில் இறங்கி நின்று சிவனை நினைத்து தவம் செய்யத்தொடங்கினார்...

    ReplyDelete
  20. வாத்தியாரே..

    புகைப்படம் அருமை.. பதிவில் எழுதியிருந்த அனைத்தையும் அந்த ஒரு புகைப்படமே சொல்லிவிட்டது.

    புரிந்து கொண்டேன்..

    நன்றி..

    தொடரட்டும் வாழ்க்கைப் பாடங்கள்..

    ReplyDelete
  21. நந்தியின் உயிரை எடுக்க வந்த எமதர்மனும் சிவ தவத்தை கலைக்க பயந்து தவம்

    முடிந்தவுடன் உயிரை எடுக்கலாம் எனக் காத்திருந்தார்...

    நந்தி பகவானும் ஓம் நமச்சிவாய மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தார்... ஒரு கோடியே எட்டு லட்சம் உச்சரித்து முடித்தவுடன் சிவபெருமான் பார்வதி தேவியுடன் பிரசன்னமாகி நந்தியே உனக்கு என்ன வரம் எனக்கேட்க நந்தியும் பெருமானே மீண்டும் ஒரு முறை நான் ஒரு கோடியே எட்டு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தினை உச்சரித்து தவம் செய்ய வரம் அளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

    பெருமானும் அவ்வாறே வரம் அருளினார்... நந்தியும் உடன் அடுத்த தவம் செய்யதொடங்கிவிட்டார்... எமனும் காத்திருந்தார்.

    இரண்டாவது முறையும் ஒரு கோடியே எட்டு லட்சம் முறை முடிந்ததும் சிவபெருமான் பிரசன்னமாகி என்னவேண்டும் எனக்கேட்க நந்தியும் மீண்டும் ஒரு முறை நான் ஒரு கோடியே எட்டு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தினை உச்சரித்து தவம் செய்ய வரம் அளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்

    பக்தர்கள் கேட்டால் பகவான் கொடுத்தாக வேண்டுமே உடன் கொடுத்தார் பகவான்.

    இப்போது மூன்றாம் முறையும் தவம் முடிவுக்கு வந்தது. சிவபெருமானும் பார்வதி தேவியும் வந்தனர். பெருமான் என்ன வரம் வேண்டும் எனக்கேட்க நந்தியும் வரம் கேட்க தன் வாயைத்திறந்தார்.

    ReplyDelete
  22. அப்போது சிவபெருமான் உடனிருந்த பார்வதிதேவி நந்தியின் வாயை கப்பென வாயை முடிவிட்டார்...

    சிவபெருமான் சினத்துடன் ஏன் இப்படிச்செய்கிறாய் எனக்கேட்க தேவியும் இவர் ஏற்கனெவே மூன்று முறை ஒரு கோடியே எட்டு லட்சம் தடவை பஞ்சாட்சர மந்திரத்தினைக் கூறி தவம் செய்ததால் தங்களிடம் இருக்கும் அனைத்தும் இவருக்கு சொந்தமாகி விட்டன.

    இன்னும் ஒரு முறை அதைக்கூறி அவ்வாறு தவம் இருந்தால் இவருக்கு சிவபதவியியும் நீங்கள் கொடுக்கவேண்டியதாக இருக்கும். அதற்குத்தான் தடுத்தாட்கொண்டேன் தேவி கூறினார். அதன் பிறகு சிவனும் நந்தியை தனது வாகனமாக்கி எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டார்.

    எதோ நான் எப்போது படித்ததை எழுதியுளேன். இன்னும் வேறு யவரேனும் நந்தி புராணத்தை அறிந்தால் தொடுப்பு கொடுக்கவும்

    ReplyDelete
  23. //////Rajagopal said...
    நீங்களாக இருந்தால் என்ன வரம் கேட்டிருப்பீர்கள் கோபால்? ////
    என் தாய் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று கேட்க தோன்றியது.
    அன்புடன்
    இராசகோபால்//////

    பொதுவாக எல்லோரும் கேட்பதுதான்! வித்தியாசமாகக் கேட்க வேண்டாமா?

    ReplyDelete
  24. //////hotcat said...
    Bronze for me this time:-))) I will ask God to give my mother (as mother) in all janma(if I have so...)
    -Shankar//////

    பொதுவாக எல்லோரும் கேட்பதுதான்! வேறு என்ன கேட்பீர்கள்?

    ReplyDelete
  25. ////தமாம் பாலா (dammam bala) said...
    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
    ஆயிரம் வருகுது சுபதினம்..
    அடுத்தவர் நலனை நினைப்பவர்தமக்கு
    ஆயுள் முழுவதும் சுபதினம்-சீர்காழி
    கோவிந்தராஜன் பாடல்.
    ஐயா, இன்று எது நல்ல காலம்
    என்ற பாடம் ஜோதிட விதிகளோடு
    போனஸாக பலன் கேட்பவர்களின் ஸைக்காலஜி பற்றிய விளக்கமும்
    சேர்ந்து ஸடையர் போல நையாண்டி
    நகைச்சுவையாக ரசிக்கும்படி இருந்தது
    அதிலும் நாஸா வேலை சூப்பர்! :))
    நீங்கள் போட்ட படத்தில் உள்ள
    தையல் மிஷினும் தலையும்
    மூழ்காதிருப்பதும் அதில் உள்ள
    வயதானவர் அந்த நிலையிலும்
    புன்னகைப்பதும் பல பாடங்களை
    சொல்லாமல் சொல்கின்றன, நல்ல
    செலக்ஷன், வழக்கம் போலவே

    நல்லவேளை எது எல்லாம் நல்ல
    காலம் என்று பட்டியல் போட்டு
    கொடுத்து விட்டீர்கள்! இல்லாவிட்டால்
    இவைவெல்லாம் கிடைத்தவர் கூட
    தேவையில்லாமல் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்த்து
    நல்ல காலத்தையும் கெட்டதாக்கி விடுவார் அல்லவா?
    பலபல பொதுப்பணிகளுக்கு உங்களுக்கு காலம் போதவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. போதாத காலம் நம் யாருக்கும் வேண்டாமே..
    கடவுள் என் முன்னே தோன்றினால், பொறாமை, வயித்தெரிச்சல் இல்லாத எல்லோருக்கும் உதவும் மனம் கேட்கலாம் என்றிருக்கிறேன்,அதன் பிறகு எல்லா காலமுமே நல்ல காலம்தானே ஐயா?/////

    பாராட்டுக்களுக்கு நன்றி பாலா! ஆகா, அதையே கேளுங்கள்!

    ReplyDelete
  26. //////மதி said...
    >>உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால்
    என்ன கேட்பீர்கள்?<<
    அவரின் அன்பு வேண்டும் என்று கேட்பேன்...சர்வ நிச்சியமாக..
    நல்ல பதிவு 'நல்ல காலம்' விளக்கம் அருமை./////

    நன்றி நண்பரே!

    ////>>1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம்,
    10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்
    காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.<<
    இந்த விளாக்கம் போதும்,இனி இதழை புரட்ட வேண்டிதில்லை
    கோச்சார குரு என்ன செய்யும் என்று அறிய....
    >>எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி
    நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள்
    கிடைக்கும்.....மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
    மோசமானதாக இருக்கும்<<
    இப்படி சொன்னல் எப்படி?.எனக்கு 11ஆம் வீட்டு அதிபதி (9இல்(கடகத்தில்) உள்ளார்) தசா ஆனால் 11 மாந்தி.

    அப்படியிருந்தால் mixed result!

    ReplyDelete
  27. கல்கிதாசன் said...
    கடவுள் என் முன்னால் தோன்றினால் நான் கேட்கும் ஒரே வரம் எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான்..
    பாடம் அருமை வாத்தியார் ஐயா.
    ஒரு சின்ன சந்தேகம்.
    கும்ப லக்கினத்தாருக்கு பதினோராம் இடத்து அதிபதி குரு. ஆனால் கும்ப லக்கினத்தாருக்கு குரு தசை அவ்வளவாக நன்மையை தராது என்று பொதுவாக சொல்லுவார்களே. இது ஒன்றுக்கொன்று முரனாக இருக்கின்றதே?/////

    கும்பலக்கினக்காரர்களுக்கு குரு 2ஆம் மற்றும் 11ஆம் இடங்களுக்கு அதிபதி. ஏன் நன்மை செய்யமாட்டார்?

    ReplyDelete
  28. /////Prabhu said...
    What if the 11 th house lord becomes a "PADAKATHIPATHI" for that horroscope? Still he continues to do goodness during his DASA/PUTHI?

    அப்படியிருந்தால் mixed result!

    ReplyDelete
  29. ///////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    /////Blogger ambi said...
    நம்ம விமலா இருந்தா சினேகா மனைவியாகவும், மச்சினியாக நமீதாவும் வேணும்னு கேட்பார். என்ன விமல் சரி தானே? :p////
    Over to Vimal for suitable reply!//
    திரும்பவும்மா, என் உடம்பு தங்காது பா, எனக்கு கல்யாணமே வேண்டாம்பா என்று தான் கடவுளிடம் கேட்பேன்...:))
    நீங்க எப்படி எப்போ பார்த்தாலும் வெள்ளி வங்குறீங்கன்ணு எனக்கு தெரியும் (வாத்தியரே பதிவு இடும் சமயத்தை மாற்றவும்)////

    அடுத்த பதிவு உங்கள் வசதிப்படி! எத்தனை மணிக்குப் போட வேண்டும் என்று சொல்லுங்கள் விமல்!

    ReplyDelete
  30. /////கூடுதுறை said...
    ஐயா ரிஷிபத்தில் மாந்தி இருந்தால் சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருந்து 5 வீடான தன் வீட்டைப்பார்த்தாலும் ஆட்டம் காலிதானா?////

    தகவல் முழுமையாக இல்லை!

    ReplyDelete
  31. ///////கூடுதுறை said...
    கடவுளிடம் வரம் கேட்டவரில் நந்தி பகவான் தான் நம்பர் 1 என நினைக்கிறேன்...
    அவர் பிறந்த போது அவருக்கு ஆயுள் குறைவு 12 வயது அல்லது 16 வயது வரைதான் ஆயுள் என்று அவருடைய தந்தைக்கு தெரியும். நந்தியாரோ சிறந்த சிவபக்தர்.
    அந்த குறிப்பிட்ட வயதில் பெற்றோரின் கவலையைக்கண்டு நந்தியாரும் அவர்களிடம் கேட்க தந்தையும் நிலமையை விளக்க நந்திகளும் நான் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறி ஊர்க்கோவில் குளத்தில் நடுவில் இறங்கி நின்று சிவனை நினைத்து தவம் செய்யத்தொடங்கினார்...///////

    நந்தி பகவான் கதைக்கு நன்றி!

    ReplyDelete
  32. ///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    புகைப்படம் அருமை.. பதிவில் எழுதியிருந்த அனைத்தையும் அந்த ஒரு புகைப்படமே சொல்லிவிட்டது.
    புரிந்து கொண்டேன்..
    நன்றி..
    தொடரட்டும் வாழ்க்கைப் பாடங்கள்../////

    அப்படியே ஆகட்டும் (செய்கிறேன்) உண்மைத் தமிழரே! நன்றி!

    ReplyDelete
  33. //////கூடுதுறை said...
    நந்தியின் உயிரை எடுக்க வந்த எமதர்மனும் சிவ தவத்தை கலைக்க பயந்து தவம்
    முடிந்தவுடன் உயிரை எடுக்கலாம் எனக் காத்திருந்தார்..
    நந்தி பகவானும் ஓம் நமச்சிவாய மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தார்... ஒரு கோடியே எட்டு லட்சம் உச்சரித்து முடித்தவுடன் சிவபெருமான் பார்வதி தேவியுடன் பிரசன்னமாகி நந்தியே உனக்கு என்ன வரம் எனக்கேட்க நந்தியும் பெருமானே மீண்டும் ஒரு முறை நான் ஒரு கோடியே எட்டு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தினை உச்சரித்து தவம் செய்ய வரம் அளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
    பெருமானும் அவ்வாறே வரம் அருளினார்... நந்தியும் உடன் அடுத்த தவம் செய்யதொடங்கிவிட்டார்... எமனும் காத்திருந்தார்.
    இரண்டாவது முறையும் ஒரு கோடியே எட்டு லட்சம் முறை முடிந்ததும் சிவபெருமான் பிரசன்னமாகி என்னவேண்டும் எனக்கேட்க நந்தியும் மீண்டும் ஒரு முறை நான் ஒரு கோடியே எட்டு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தினை உச்சரித்து தவம் செய்ய வரம் அளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்
    பக்தர்கள் கேட்டால் பகவான் கொடுத்தாக வேண்டுமே உடன் கொடுத்தார் பகவான்.
    இப்போது மூன்றாம் முறையும் தவம் முடிவுக்கு வந்தது. சிவபெருமானும் பார்வதி தேவியும் வந்தனர். பெருமான் என்ன வரம் வேண்டும் எனக்கேட்க நந்தியும் வரம் கேட்க தன் வாயைத்திறந்தார்.
    அப்போது சிவபெருமான் உடனிருந்த பார்வதிதேவி நந்தியின் வாயை கப்பென வாயை முடிவிட்டார்...
    சிவபெருமான் சினத்துடன் ஏன் இப்படிச்செய்கிறாய் எனக்கேட்க தேவியும் இவர் ஏற்கனெவே மூன்று முறை ஒரு கோடியே எட்டு லட்சம் தடவை பஞ்சாட்சர மந்திரத்தினைக் கூறி தவம் செய்ததால் தங்களிடம் இருக்கும் அனைத்தும் இவருக்கு சொந்தமாகி விட்டன.
    இன்னும் ஒரு முறை அதைக்கூறி அவ்வாறு தவம் இருந்தால் இவருக்கு சிவபதவியியும் நீங்கள் கொடுக்கவேண்டியதாக இருக்கும். அதற்குத்தான் தடுத்தாட்கொண்டேன் தேவி கூறினார். அதன் பிறகு சிவனும் நந்தியை தனது வாகனமாக்கி எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டார்.
    எதோ நான் எப்போது படித்ததை எழுதியுளேன். இன்னும் வேறு யவரேனும் நந்தி புராணத்தை அறிந்தால் தொடுப்பு கொடுக்கவும்////

    நந்தி பகவான் கதை நன்றாக உள்ளது. பெரிய பின்னூட்டமாகப் போட்டமைக்கு நன்றி கூடுதுறையாரே!

    ReplyDelete
  34. //தகவல் முழுமையாக இல்லை!////

    ஐயா 5ம் இடமான ரிஷிபத்தில் மாந்தி இருந்தால் சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருந்து 5 வீடான தன் வீட்டைப்பார்த்தாலும் ஆட்டம் காலிதானா?

    இது போதுமா? என்னுடையதுதான்..

    ReplyDelete
  35. //நந்தி பகவான் கதை நன்றாக உள்ளது. பெரிய பின்னூட்டமாகப் போட்டமைக்கு நன்றி கூடுதுறையாரே!//

    வாத்தியார் மாணவர்களுக்கு நன்றி எல்லாம் கூறலாமா?

    அப்புறம் உங்கள் நன்றிக்கு நன்றி என்று வளர்ந்துகொண்டே இருக்கும்...

    ReplyDelete
  36. /////கூடுதுறை said...
    //தகவல் முழுமையாக இல்லை!////
    ஐயா 5ம் இடமான ரிஷிபத்தில் மாந்தி இருந்தால் சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருந்து 5 வீடான தன் வீட்டைப்பார்த்தாலும் ஆட்டம் காலிதானா?
    இது போதுமா? என்னுடையதுதான்../////

    ஐந்தாம் இடம் என்பது அறிவு (keen intelligence), மனது (Mind) ,
    குழந்தைகள், பூர்வபுண்ணியம் ஆகியவற்றிற்காக இடம் அதில் மாந்தி
    அமர்ந்தால், ஏதாவது ஒன்றைக் கவிழ்க்கும். பொதுவாக மன
    நிம்மதியைக் கவிழ்க்கும். சிலருக்கு அறிவை - அதாவது புத்திசாலித்
    தனத்தை - எவ்வளவு புத்திசாலித்தனம் இருந்தாலும் அது அவனுக்குப்
    பயன்படாமல் செய்து - அந்த ஜாதகனைக் குடத்தில் வைத்த விளக்கைப்
    போல ஆக்கிவிடும் (குடத்தில் வைத்த விளக்கு என்ன ஆகும்
    தெரியுமல்லவா?)
    அல்லது பிள்ளைகளால் அவனுக்குப் பயனின்றி செய்துவிடும்.
    இவை மூன்றில் ஒன்றை மட்டும் செய்யும். உங்களுக்கு எது suitable
    ஆகிறது என்று நீங்களே உங்கள் நடப்பு நிலமையை வைத்து
    முடிவு செய்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  37. வணக்கம் ஆசானே ! நான் தங்களின் பாடம் நடாத்தும் முறையினை கண்டு தங்களின் மாணவனாக விருப்பம் கொண்டு விண்ணப்பித்து இருந்தேன். தங்களின் பணிசுமையின் காரணமாக எனது விண்ணப்பதை தாங்கள் பார்க்க இல்லை என நினைக்கிறேன் ஒரு வேளை நான் தங்களின் மாணவனாக தகுதி இல்லையோ...............??????
    தாங்கள் என்னை மாணவனாக ஏற்று கொள்ள விட்டாலும் நான் தங்களை ஆசானாக ஏற்று கொண்டேன்....
    இன்றைய தங்களின் பாடம் நன்றாக இருந்தது.......
    ஆனால் ஒரு சந்தேகம்
    --------------------------------------------------------------------------------
    மிக மிக மோசமான காலம் எது?மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்மோசமானதாக இருக்கும்.------------------------------------------------------------------------------
    மிகவும் சூப்பரான நல்ல காலம் எது?சந்தேகமில்லாமல் பதினோராம் இடத்து நாயகனின் புத்திதான்!-----------------------------------------------------------------------------
    அப்படின்னு சொல்லி இருக்கீங்க ? ஆனா என் ஜாதகத்துல 2 ல் அதாவது மேசத்தில் மாந்தி 11 ல் செவ்வாய்.............. இப்போது சந்தேகம் தான் மிஞ்சுகிறது?
    எனது சந்தேகத்தை தீர்ப்பிரா ஆசானே?

    ReplyDelete
  38. பாக்கியா கேள்வி பதிலில் வரும் கதைப் போல் அருமையாக் உள்ளது. நான் வரம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்,"இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபத்து அடுத்த பிறவி இருக்காமல் செய்து விடவேண்டும்".

    ReplyDelete
  39. தற்பொழுது பாடம் சொல்லித்தரும் தமிழ் ஆசிரியருக்கே தமிழ் தகராராக உள்ளது. படிக்கும் மாணவர்களின் நிலைப்பற்றி சொல்ல் வேண்டியதில்லை. ஒருவேளை நீங்கள் தமிழ் பாடம் எடுத்தால் அனைவரும் செய்யுள் நடையினை கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறென்

    ReplyDelete
  40. நந்தியின் கதைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
  41. /////அணுயோகி said...
    வணக்கம் ஆசானே ! நான் தங்களின் பாடம் நடாத்தும் முறையினை கண்டு தங்களின் மாணவனாக விருப்பம் கொண்டு விண்ணப்பித்து இருந்தேன். தங்களின் பணிசுமையின் காரணமாக எனது விண்ணப்பதை தாங்கள் பார்க்க இல்லை என நினைக்கிறேன் ஒரு வேளை நான் தங்களின் மாணவனாக தகுதி இல்லையோ...............??????//////
    ----------------------------------------------------
    இங்கே பதிவில் வந்து படிக்கும் வாசகர்கள் அனைவரும் என் மாணவர்களே!
    பின்னூட்டம் (comments)போடுகிறவர்களும் மாணவர்களே!
    பின்னூட்டம் போட நேரமின்றிப் போடாதவர்களும் மாணவர்களே!

    நீங்கள் வருகைப் பதிவேட்டைப் பார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள் என்று
    எண்ணுகிறேன். அது வெறும் பதிவேடுதான். அதைவைத்து நான் அட்டென்டன்ஸ்
    எடுப்பதில்லை.

    பின் அது எதற்காக? இங்கே அடிக்கடி வருபவர்களை மரியாதை (Honouring)
    செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. மாதம் ஒருமுறை அதை நேர் படுத்தும்
    போது புதியவர்களின் பெயர்களை (கேட்டுக் கொண்டவர்களின் பெயர்களை)
    அதில் சேர்த்துவிடுவேன்!

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! இதுவரை 108 பாடங்களை நடத்தியுள்ளேன்.
    அதையெல்லாம் படித்துப் பாருங்கள்.அப்போதுதான் வரும் பாடங்கள் பிடிபடும்!
    ----------------------------------------------------------
    ///////தாங்கள் என்னை மாணவனாக ஏற்று கொள்ள விட்டாலும் நான் தங்களை ஆசானாக ஏற்று கொண்டேன்....
    இன்றைய தங்களின் பாடம் நன்றாக இருந்தது.......
    ஆனால் ஒரு சந்தேகம்
    மிக மிக மோசமான காலம் எது?மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்மோசமானதாக இருக்கும். மிகவும் சூப்பரான நல்ல காலம் எது?சந்தேகமில்லாமல் பதினோராம் இடத்து நாயகனின் புத்திதான்!- அப்படின்னு சொல்லி இருக்கீங்க ? ஆனா என் ஜாதகத்துல 2 ல் அதாவது மேசத்தில் மாந்தி 11 ல் செவ்வாய்.இப்போது சந்தேகம் தான் மிஞ்சுகிறது? எனது சந்தேகத்தை தீர்ப்பிரா ஆசானே?//////
    ---------------------------------------------------------------------------
    என்ன சந்தேகம்? சொல்லுங்கள்!
    நீங்கள் மீன லக்கினக்காரர் என்று தெரிகிறது 2ல் மாந்தி என்றால், 2ம் வீட்டிற்கு உள்ள மூன்று பிரிவுகளான குடும்பம், பணம், வாக்கு, ஆகிய ஒன்றில் பிரச்சினையை உண்டாக்குவார் அவர். அந்த மூன்றில் உங்களுக்கு எந்தப் பிரிவில் பிரச்சினை?
    அதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  42. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    பாக்கியா கேள்வி பதிலில் வரும் கதைப் போல் அருமையாக் உள்ளது. நான் வரம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்,"இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபத்து அடுத்த பிறவி இருக்காமல் செய்து விடவேண்டும்".////

    நல்ல வரம்தான் நவநீதன். கிடைக்க நானும் பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  43. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    தற்பொழுது பாடம் சொல்லித்தரும் தமிழ் ஆசிரியருக்கே தமிழ் தகராராக உள்ளது. படிக்கும் மாணவர்களின் நிலைப்பற்றி சொல்ல் வேண்டியதில்லை. ஒருவேளை நீங்கள் தமிழ் பாடம் எடுத்தால் அனைவரும் செய்யுள்
    நடையினை கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்////

    யோசனைக்கு நன்றி! நான் பள்ளி இறுதியாண்டுவரை தமிழ்வழிக்கல்வி பயின்றவன். தமிழ்வழிக்கல்வி பயின்றவர்களுக்கு உண்மையில் தமிழில் தடுமாற்றம் இருக்காது!

    ReplyDelete
  44. I will surely ask for peaceful life nothing more:-)))

    In my horoscope mandhi is in 12th house katakam with venus and moon. I understood that moon mahadasa will be bad. What is the result of mandhi in my 12th house?

    -Shankar

    ReplyDelete
  45. Sir,

    Actually I had this doubt when reading the previous blog, but forgot to ask.

    If person is born 20-30 minutes before the sunrise, what day should be taken for his/her birthday. For eg, if someone born on sunday morning 5:30AM (sunrise is at 6:06am)whether it should considered as saturday or as sunday.

    Thanks
    Shankar

    ReplyDelete
  46. ////hotcat said...
    I will surely ask for peaceful life nothing more:-)))
    In my horoscope mandhi is in 12th house katakam with venus and moon. I understood that moon mahadasa will be bad. What is the result of mandhi in my 12th house?
    -Shankar////
    Mandhi's placement in the 12th house is not desirable. The 12th house mandhi will confer sudden losses (unexpected losses). The native should be careful.

    ReplyDelete
  47. //////hotcat said...
    Sir,
    Actually I had this doubt when reading the previous blog, but forgot to ask.
    If person is born 20-30 minutes before the sunrise, what day should be taken for his/her birthday. For eg, if someone born on sunday morning 5:30AM (sunrise is at 6:06am)whether it should considered as saturday or as sunday.
    Thanks
    Shankar/////

    Any birth after 00.01 hours in the midnight (That is as you said Saturday night - Sunday morning cases)
    Sunday is to be taken into account

    ReplyDelete
  48. குருவே...
    9ஆம் வீட்டின் மீதி பாடம் எப்போழுது, பிறகு அம்சத்தை பற்றிய அடுத்த பாடம்?எனக்கு சில கேள்விகள், சந்தேகங்கள் அந்த ஆர்வத்தில் கேட்கிறேன்.

    நேரம் இருக்கும் பொழுது இதை தொடர வேண்டுகிறேன்...


    நன்றி...வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  49. நன்றாகப் புரிந்த பதிவுன்னாலும், உங்கள் பதிவுகளில் இதுவரை பற்பல முறை படித்தது இதுதான். மிக அவசியமான பதிவு, எளிதாக நினைவில் நிற்குமாறு விளக்கியதற்கு நன்றி.

    உங்க கிட்ட கேள்வி கேட்பவருக்கெல்லாம் ஒரு கிலி வந்திருக்கணும் இப்போ;-)

    ஜெ.ஹோ. வில் உள்ள ஜாதகத்தில் மாந்தி எப்படி தெரியும்? ஜோதிடர் கணித்ததில், எனக்கும் மாந்தி இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். //குடும்பம், பணம், வாக்கு, ஆகிய ஒன்றில் பிரச்சினையை உண்டாக்குவார் அவர். அந்த மூன்றில் உங்களுக்கு எந்தப் பிரிவில் பிரச்சினை?// வாக்கு தான்;) பணம் வரும் போகும்னு விவரம் தெரியும் வயதில் தெரிந்த முதல் விவரம், அதனால் அதைப் பற்றி கவலைப் படுவதால் பயனில்லை. அப்பப்ப டென்ஷன் ஆகி உளறுவேன்:( (பேரே அது தானே!) எழுதுவதில் அப்படியில்லை.

    எனக்கினி பிறவாமையும், உலகத்தில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் துயரில்லாமையும் வேண்டும். அது போதும்;)

    ReplyDelete
  50. அந்த படம் சூப்பரோ சூப்பர்! அவர் முகத்துல இருக்கும் நிம்மதி... - கடவுளே!

    ReplyDelete
  51. //////மதி said...
    குருவே...
    9ஆம் வீட்டின் மீதி பாடம் எப்போழுது, பிறகு அம்சத்தை பற்றிய அடுத்த பாடம்?எனக்கு சில கேள்விகள், சந்தேகங்கள் அந்த ஆர்வத்தில் கேட்கிறேன்.
    நேரம் இருக்கும் பொழுது இதை தொடர வேண்டுகிறேன்...////

    அதை சற்று விரிவாக எழுதும் நோக்கம் உள்ளது. வரும் ஞாயிறு அன்று எழுதிப் பதிவிட உள்ளேன் நண்பரே!
    (தற்சமயம் நேரம் இல்லை...)

    ReplyDelete
  52. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    நன்றாகப் புரிந்த பதிவுன்னாலும், உங்கள் பதிவுகளில் இதுவரை பற்பல முறை படித்தது இதுதான். மிக அவசியமான பதிவு, எளிதாக நினைவில் நிற்குமாறு விளக்கியதற்கு நன்றி.
    உங்க கிட்ட கேள்வி கேட்பவருக்கெல்லாம் ஒரு கிலி வந்திருக்கணும் இப்போ;-)/////

    கிலி எல்லாம் வரவேண்டாம். உண்மை நிலவரத்தை எழுதியிருக்கிறேன் சகோதரி!
    ------------------
    ஜெ.ஹோ. வில் உள்ள ஜாதகத்தில் மாந்தி எப்படி தெரியும்? ஜோதிடர் கணித்ததில், எனக்கும் மாந்தி இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். //குடும்பம், பணம், வாக்கு, ஆகிய ஒன்றில் பிரச்சினையை உண்டாக்குவார் அவர். அந்த மூன்றில் உங்களுக்கு எந்தப் பிரிவில் பிரச்சினை?// வாக்கு தான்;) பணம் வரும் போகும்னு விவரம் தெரியும் வயதில் தெரிந்த முதல் விவரம், அதனால் அதைப் பற்றி கவலைப் படுவதால் பயனில்லை. அப்பப்ப டென்ஷன் ஆகி உளறுவேன்:( (பேரே அது தானே!) எழுதுவதில் அப்படியில்லை./////

    ஜ.ஹோ. வில் குளிகன் என்று உள்ளதுதான் மாந்தி. மாந்தியின் மறு பெயர் அது!
    ----------------------------
    எனக்கினி பிறவாமையும், உலகத்தில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் துயரில்லாமையும் வேண்டும். அது போதும்;)/////

    நன்று. அப்படியே நடக்கட்டும் சகோதரி!

    ReplyDelete
  53. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அந்த படம் சூப்பரோ சூப்பர்! அவர் முகத்துல இருக்கும் நிம்மதி... - கடவுளே!////

    அந்தப் படத்தை மிகவும் அதிகமாக ரசித்தது. நீங்களும், சக மாணவரான உண்மைத்தமிழரும்தான்!
    அந்தப் படத்தில் உள்ளவர் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையிலும் அவரால் எப்படித்தான் மகிழ்ச்சியாக ஆற்றைக் கடக்க முடிகிறதோ ..கடவுளே!

    ReplyDelete
  54. ஜ.ஹோ. வில் குளிகன் மற்றும் மாந்தி..இரண்டுமே உள்ளதே....

    ReplyDelete
  55. Present Sir,

    பாடம் நன்றாக இருந்தது.

    Thanks,

    GK, BLR.

    ReplyDelete
  56. //////Blogger மதி said...
    ஜ.ஹோ. வில் குளிகன் மற்றும் மாந்தி..இரண்டுமே உள்ளதே..../////

    மாந்தி என்றாலும் குளிகன் என்ராலும் ஒன்றுதான் சாமி! நீங்கள் மாந்தி என்று போட்டிருப்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்

    இரண்டும் ஒன்றுதான் என்பதற்கு ஆதாரம் வேண்டுமல்லவா? நாம்தான் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப மாட்டோமே!:-))))
    கீழே கொடுத்துள்ளேன்:

    From the Hindu
    URL: http://www.hinduonnet.com/thehindu/mag/2003/08/17/stories/2003081705010614.htm
    Text:
    What is the role of Gulika (Mandi) in a horoscope? Is it true that the aspect of Gulika upon the 7th house or its Lord can obstruct marriage?
    K. Ganapathy, Chennai
    GULIKA or Mandi plays a vital role in fixing the Lagna in a horoscope, and in finding Maraka periods. Ancient texts do not say much about Gulika.
    The position of Mandi is ascertained according to dicta given in some texts as applicable to daytime and night time births. He is not a benefic planet, and can have an adverse effect on marital prospects.
    But these prospects must be reckoned over-all in the light of all relevant factors in a horoscope. Snap conclusions can prove dangerous.

    ReplyDelete
  57. /////Blogger Geekay said...
    Present Sir,
    பாடம் நன்றாக இருந்தது.
    Thanks,
    GK, BLR. //////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  58. ஆசானே ! எனக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை !..... எனது சந்தேகம் என்னவென்றால் ! (மீன லக்கனம் )௨ ல் மாந்தி ஆனால் அந்த இடத்தின் அதிபதி செவ்வாய் ... செவ்வாய் ஜாதகத்தில் உச்சம் என்றால் கூடவா பிரச்சனை ஏற்படும்?
    ஆசானே ! தங்களது முந்தைய பதிவுகள் அனைத்தையும் படித்தேன். நீங்கள் பரிந்துரைத்த மென்பொருளின் வாயிலாக சுவாமி விவேகனந்தர் அவர்களின் அஷ்ட வர்கத்தை பார்த்த பொழுது நிறைய சந்தேகம் எழுகிறது.... தங்களின் முந்தைய பதிவுகளை பற்றிய சந்தேங்களை இங்கேயே பின்னுட்டம் இடலாமா?

    ReplyDelete
  59. //////அணுயோகி said...
    ஆசானே ! எனக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை !..... எனது சந்தேகம் என்னவென்றால் ! (மீன லக்கனம் )௨ ல் மாந்தி ஆனால் அந்த இடத்தின் அதிபதி செவ்வாய் ... செவ்வாய் ஜாதகத்தில் உச்சம் என்றால் கூடவா பிரச்சனை ஏற்படும்?//////

    திருவிழாவில் ஐஸ்ஃப்ரூட் விற்கிறவன் அதைவிற்பான். பஞ்சுமிட்டாய் விக்கிறவன் அதை விற்பான் (கோபிச்செட்டிபாலையத்தில் பார்த்திருக்கிறீகளா?) அதுபோல செவ்வாய் தான் உச்சம் பெற்றுள்ளதற்கான பலனைத் தருவார். மாந்தி 2ல் அமர்ந்ததற்கான் பலனைத்தருவார். So, it will be mixed results!
    ----------------------------
    ///////ஆசானே ! தங்களது முந்தைய பதிவுகள் அனைத்தையும் படித்தேன். நீங்கள் பரிந்துரைத்த மென்பொருளின் வாயிலாக சுவாமி விவேகனந்தர் அவர்களின் அஷ்ட வர்கத்தை பார்த்த பொழுது நிறைய சந்தேகம் எழுகிறது.... தங்களின் முந்தைய பதிவுகளை பற்றிய சந்தேங்களை இங்கேயே பின்னுட்டம் இடலாமா?//////

    இப்போதைக்கு பாடத்தை மட்டும் படியுங்கள். எந்தப் பாடத்தில் சந்தேகம் வருகிறதோ அதை அந்தப் பாடப் பதிவின் கீழ் உள்ள பின்னூட்டங்களில் யாராவது கேட்டுப் பதில் வாங்கியிருப்பார்கள் அதனால் ஒவ்வொரு பதிவையும், அதனதன் பின்னூட்டங்களோடு
    படியுங்கள். அவற்றையும் மீறி அந்தப் பர்ட்டிகுலர் பதி்வில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்தப் பதிவிலேயே பின்னூட்டம் இடுங்கள்
    நான் பதில் அளிக்கிறேன்

    விவேகானந்தரின் ஜாதகத்தை இப்போதைக்கு மறந்துவிடுங்கள். பிறகு ஒரு நாள் பிரபலங்களின் ஜாதகங்கள் என்ற வரிசையில் அதை எழுத உள்ளேன். அப்போது பார்த்துக் கொள்ளலாம். பாடங்களை முடிக்காமல் அல்லது படிக்காமல் அதையெல்லாம் போய் நோண்டினால் குழப்பம்தான் வரும்!
    நம் ஊர் மொழியில் சொன்னால் மண்டை காய்ந்துவிடும்:-)))))

    ReplyDelete
  60. ஜீகே, எம்டி ந்னு ஜெகன்னாத ஹோர-இல் வருதே, அதுவா? ஏன் என்றால், குறித்துக் கொடுக்கப்பட்ட ஜாதகங்களில், என்னுடையதில் மட்டுமே மாந்தி இருக்கிறது, வேறு யாருக்கும் இல்லை என் குடும்பத்தில். ஜெ.ஹோ. இல், இதை எப்படி அறிவது?

    நான் பாட்டுக்கு ஜீகே, எம்டி எல்லாம் நம்ம வகுப்பு மாணவர்கள்னு நினைச்சேன், ஹிஹி.

    ReplyDelete
  61. அப்படியே ஆசானே ! தங்களின் வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது?

    ReplyDelete
  62. ஆசிரியர்க்கு,

    வணக்கம். பாடம் நன்றாக உளது, வழக்கம் போல. பதினொன்றாம் அதிபன் திசை நன்றாக இருக்கும் என்ற கூற்று உண்மை தான். ஆனால், மிதுன லக்னதிற்கு பதினொன்றாம் அதிபன் செவ்வாய். அவன் பாவியும் கூட. அந்த
    திசை நன்றாக இருக்குமா?

    தங்களின் கருத்தை வேண்டுகிறேன்.

    அன்புடன்,

    செந்தில்

    ReplyDelete
  63. Dear Sir,
    can you please explain about 6/8 planetary position? I dont get that part...example pls.

    -Shankar

    ReplyDelete
  64. Dear Sir,
    can you please explain about 6/8 planetary position? I dont get that part...example pls.
    -ஷங்கர் //
    நண்பர் சங்கர் அவர்களே,

    ஒருவருக்கு குரு தசை புதன் புத்தி நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த கிரகங்கள் தற்பொழுது எந்த நிலையில் இருக்கின்றது என்று பாருங்கள் (தினசரிகள்/calendar உதவும்). குருவில் இருந்து 6-வது இடத்தில் புதன் இருந்தால், புதனில் இருந்து குரு 8-வது இடத்தில் வருவார். அப்பொழுது புதன் புத்திக்கு உரிய பலன்கள் மாறுபடும்.

    28-8-2008 கிரக நிலைப்படி குருவும் சந்திரனும் 6/8-ல் உள்ளனர். அன்று குரு தசை சந்திரன் புக்தி பலன்களும், சந்திர தசை குரு புத்தி பலன்களும் மாறுபடும்.

    அன்று சூரியனும், புதனும் 1/12-ல் உள்ளனர். அந்த தசா புத்தி பலன்கள் மாறுபடும்.

    குருவே பிழை இருப்பின் தயை செய்து சரி செய்யவும்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  65. Thanks Mr. Rajagopal. Its always good to hear from fellow students, so the teacher can understand how well everyone is understanding the subject presented.
    But as far my understanding is Example: if you have sun in simha and moon in katakam(rasi chart) and running Sun Mahadasa and Moon bhukti (either way moon mahadasa and sun bhukthi)then its not favorable to the native(because sun and moon are in 1/12 planetary position in rasi chart for the native), and I thought it has nothing to do with current transit as you explained.

    Sir, is the way I understood right?

    Thanks in advance.

    Shankar

    ReplyDelete
  66. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ஜீகே, எம்டி ந்னு ஜெகன்னாத ஹோர-இல் வருதே, அதுவா? ஏன் என்றால், குறித்துக் கொடுக்கப்பட்ட ஜாதகங்களில், என்னுடையதில் மட்டுமே மாந்தி இருக்கிறது, வேறு யாருக்கும் இல்லை என் குடும்பத்தில். ஜெ.ஹோ. இல், இதை எப்படி அறிவது?
    நான் பாட்டுக்கு ஜீகே, எம்டி எல்லாம் நம்ம வகுப்பு மாணவர்கள்னு நினைச்சேன், ஹிஹி./////

    எனக்குத் தெரிந்தது நான் வியாபாரம் செய்யும் நிறுவனங்களின் எம் டி எனப்படும் (Managing Director) நிர்வாக இயக்குனர்கள்தான் ஹி..ஹி..ஹி!
    ஜெ.ஹோவில் அவர்களும் கணித்துவிடுங்கள் சகொதரி!!

    ReplyDelete
  67. ///////அணுயோகி said...
    அப்படியே ஆசானே ! தங்களின் வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது?////

    ஆகா புல்லரிக்கவைத்துவிட்டீர்களே கோபியாரே! இது கடைசிவரை இருக்குமா?:-))))

    ReplyDelete
  68. //////senthil said...
    ஆசிரியர்க்கு,
    வணக்கம். பாடம் நன்றாக உள்ளது, வழக்கம் போல. பதினொன்றாம் அதிபன் திசை நன்றாக இருக்கும் என்ற கூற்று உண்மை தான். ஆனால், மிதுன லக்னதிற்கு பதினொன்றாம் அதிபன் செவ்வாய். அவன் பாவியும் கூட. அந்த திசை நன்றாக இருக்குமா?
    தங்களின் கருத்தை வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    செந்தில்////

    பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறீர்களே நண்பரே!.
    உண்மைதான் என்று கூறிவிட்டு எதற்காக சந்தேகப் படுகிறீர்கள்?
    கண்காணிப்பில் இருப்பவன் எப்படித் தப்பு செய்ய மாட்டானோ, அப்படி 11ஆம் இடத்திற்கான பலனை வழங்கும் தகுதியுள்ளவன் அதை மாற்றிச் செய்ய மாட்டான்!

    ReplyDelete
  69. //////hotcat said...
    Dear Sir,
    can you please explain about 6/8 planetary position? I dont get that part...example pls.
    -Shankar/////

    ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் இடத்தில் இருந்து (இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) அதன் எட்டாம் இடத்தில் இருக்கும்
    கிரகம், அந்தக் கிரகத்திற்கு முதுகைக் காட்டிக் கொண்டு இருப்பது போன்ற நிலைமை! அந்த நிலைமையில் அவர்கள் இருவருக்குள்ளாக
    ஏற்படும் தசாபுத்திகளை 1/8 Lords தசாபுத்திகள் என்பார்கள். அது நன்றாக இருக்காது. நல்லதைச் செய்யாது.

    உதாரணத்திற்கு ஒருவரது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து எட்டாவது இடத்தில் குரு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஜாதகனின் சந்திர தசை குரு புத்தியும், குரு திசையில் சந்திர புத்தியும் நன்மைகளைச் செய்யாது.

    இதே விதிகள் தான் 1/12 நிலைமைக்கும்!

    புரிந்து விட்டதா? விவரம் தெரிவியுங்கள்!

    ReplyDelete
  70. /////Rajagopal said...
    Dear Sir,
    can you please explain about 6/8 planetary position? I dont get that part...example pls.
    -ஷங்கர் //
    நண்பர் சங்கர் அவர்களே,
    ஒருவருக்கு குரு தசை புதன் புத்தி நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த கிரகங்கள் தற்பொழுது எந்த நிலையில் இருக்கின்றது என்று பாருங்கள் (தினசரிகள்/calendar உதவும்). குருவில் இருந்து 6-வது இடத்தில் புதன் இருந்தால், புதனில் இருந்து குரு 8-வது இடத்தில் வருவார். அப்பொழுது புதன் புத்திக்கு உரிய பலன்கள் மாறுபடும்.
    28-8-2008 கிரக நிலைப்படி குருவும் சந்திரனும் 6/8-ல் உள்ளனர். அன்று குரு தசை சந்திரன் புக்தி பலன்களும், சந்திர தசை குரு புத்தி பலன்களும் மாறுபடும்.
    அன்று சூரியனும், புதனும் 1/12-ல் உள்ளனர். அந்த தசா புத்தி பலன்கள் மாறுபடும்.
    குருவே பிழை இருப்பின் தயை செய்து சரி செய்யவும்.
    அன்புடன்
    இராசகோபால்//////
    -----------------------------------
    தினசரிகள்/calendar உதவுமா? நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்

    அன்றாட கிரக நிலைமைகளை வைத்துப் பார்க்கும் சமாச்சாரமல்ல அது!

    ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமைகளைக் குறித்துப் பேசப்படுவதாகும் அது.
    இதே பின்னூட்டப் பகுதியில் இன்னொரு அன்பருக்குப் பதிலாக எழுதியுள்ளேன். அதைப் படிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  71. /////hotcat said...
    Thanks Mr. Rajagopal. Its always good to hear from fellow students, so the teacher can understand how well everyone is understanding the subject presented.
    But as far my understanding is Example: if you have sun in simha and moon in katakam(rasi chart) and running Sun Mahadasa and Moon bhukti (either way moon mahadasa and sun bhukthi)then its not favorable to the native(because sun and moon are in 1/12 planetary position in rasi chart for the native), and I thought it has nothing to do with current transit as you explained.
    Sir, is the way I understood right?
    Thanks in advance.
    Shankar///

    Excellent Mr.Shankar! Keep it up!

    ReplyDelete
  72. Thank you sir.
    But how come this 6/8 planetary position to be calculated? is that 6th and 8th both or 6/to 8 position? Eg., if sun is in simha and saturn is in kumbam, its in 8th position is what you mean.

    -Shankar

    ReplyDelete
  73. Thank you sir.
    But how come this 6/8 planetary position to be calculated? is that 6th and 8th both or 6/to 8 position? Eg., if sun is in simha and saturn is in kumbam, its in 8th position is what you mean.

    -Shankar

    ReplyDelete
  74. /////hotcat said...
    Thank you sir.
    But how come this 6/8 planetary position to be calculated? is that 6th and 8th both or 6/to 8 position? Eg., if sun is in simha and saturn is in kumbam, its in 8th position is what you mean.
    -Shankar///

    In the same way Mr.Shankar!

    The way you calculated the 1/12 position also applies to 6/8 position!
    Are you convinced now?
    Or shall I explain you in detail?

    ReplyDelete
  75. Now, I got it. Thank you sir.

    -Shankar

    ReplyDelete
  76. ஹலோ வார்த்தியாரய்யா,

    //அடுத்தடுத்து ஏழு மின்னஞ்சல்களில் கெஞ்சி எழுதியிருந்தார். சரி போனால் போகிறது இவர் ஒருவருக்கு மட்டும்..//

    ஆஹா இப்பவாவது மனம் இரங்கியதே,
    இல்லைன்னா அவரும் உங்கலை விட மாட்டார், நீங்களும் தினமும் மெயில் பாக்ஸில் பார்க்க வேண்டி இருக்கும்.


    //கடவுள் என் முன்னால் தோன்றினால் நான் கேட்கும் ஒரே வரம் எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான்..//

    இது தான் என் விருப்பமும் கூட.

    அப்பறம் இந்த பாடம் நன்றாக புரிந்தது.(கொஞ்சம் லேட்டாகி விட்டது.பல பணிசுமைகள்)இனி அடுத்த பாடத்திற்கு போயி பாக்க்கறேன்.

    ReplyDelete
  77. அய்யா வணக்கம்,

    ஒரு சந்தேகம்

    // --------------------------------------------------------------------------------
    மிக மிக மோசமான காலம் எது?

    மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
    மோசமானதாக இருக்கும்.
    ------------------------------------------------------------------------------
    மிகவும் சூப்பரான நல்ல காலம் எது?

    சந்தேகமில்லாமல் பதினோராம் இடத்து நாயகனின் புத்திதான்!
    ------------------------------------------------------------------------------ //

    மாந்தி 11 இல் இருந்தால் ?

    ReplyDelete
  78. ////தமிழ்மணி said...
    அய்யா வணக்கம்,
    ஒரு சந்தேகம்
    // --------------------------------------------------------------------------------
    மிக மிக மோசமான காலம் எது?
    மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
    மோசமானதாக இருக்கும்.
    ------------------------------------------------------------------------------
    மிகவும் சூப்பரான நல்ல காலம் எது?
    சந்தேகமில்லாமல் பதினோராம் இடத்து நாயகனின் புத்திதான்!
    ------------------------------------------------------------------------------ //
    மாந்தி 11 இல் இருந்தால் ?//////

    மாந்திக்கு உரிய இடம் 11 தான். அங்கே சமர்த்தாக இருப்பார். ஜாதகனுக்கு அதிக உபத்திரவம் கொடுக்க மாட்டார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com