மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.8.08

எதுவுமே என்றைக்கும் சொந்தமில்லை!

Every relationship has an expiry date! என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லடை உண்டு!
எல்லா உறவுகளுமே ஒரு நாள் காலாவதியாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால் காணாமல் போய்விடும்!

அன்பு, பரிவு, பாசம், காதல், மயக்கம், கிறக்கம் என்று உருகிப் போகக்கூடிய
உறவுகள் அல்லது நட்புகள் பல நமக்கு இருக்கலாம். ஆனால் அத்தனையுமே
ஒரு நாள் காலாவதி ஆகிவிடும்!

அல்லது அவற்றை விட்டு நானும், நீங்களும் ஒரு நாள் காணாமல் போய்விடுவோம்.

அதுதான் வாழ்க்கை!

இங்கே எதுவுமே சாசுவதம் இல்லை!

நிரந்தரமாக இருக்கப் போவதில்லை!

அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும், காலம் காலமாகச் சொல்லிக்
கொண்டிருக்கின்றன!

உறவுகளே காணாமல் போகும்போது, உடமைகள்?

அவைகளும் நில்லாது போய்விடும்.

உங்களுக்குக் கெட்ட நேரம் வரும்போது அவைகள் போய்விடும்! அல்லது அவற்றை
அப்படியே பொட்டது பொட்டபடி நீங்கள் போய்விடுவீர்கள்!

அந்த அவலத்தை ஞானி ஒருவர் அசத்தலாகச் சுட்டிக் கட்டினார்:

(25 வரிகள் உள்ளன. இது முன் பதிவு ஒன்றில் எழுதியதுதான். மீண்டும் ஒருமுறை
படிப்பதில் தவறில்லை. படிக்க வேண்டுகிறேன்.)

எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

”நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உணக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?”

என்று மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும்
அவலத்தை, ஒரு ஞானி நான்கே வரிகளில் நெத்தியடியாகப் பாட்டில்
சொன்னார்

அதை உங்களுக்காக மீண்டும் இன்று கொடுத்துள்ளேன்

”வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
- பட்டினத்தார்

பீடு = பெருமை (Honour)
ஊண் = உணவு (food)

இந்தப் பாட்டிலுள்ள கருத்தைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எளிமைப்
படுத்தி இப்படிச்சொன்னார்:

ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
---------------------------------------------------------------------------------------
"இதெல்லாம் கவைக்கு ஆகாது வாத்தியார்! ஆவி போன பிறகு என்ன நடந்தால்
என்ன? இன்றைக்கு அதெல்லாம் வேண்டாமா? நடப்பைப் பற்றிப் பேசுங்கள்;
எதிர்காலத்தில் உயிர் பிரியும் வரை உள்ள தேவைகளைப் பற்றிப் பேசுங்கள்!
மற்றதைப் பேசுங்கள்; பயனுள்ளதை மட்டும் பேசுங்கள்"

அதைத்தான் சொல்ல வருகிறேன்!

ஆசைப் படுவது வேறு. தேவைகள் வேறு.

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டும்.
இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு இம்மூன்றும் அடிப்படைத் தேவைகள்!

இருக்க வீடு வேண்டும். அது ஓட்டு வீடாக இருந்தால் என்ன? அல்லது
பிளாட்டாக இருந்தால் என்ன? அல்லது பெரிய பங்களாவாக இருந்தால்
என்ன? வாடகை வீடாக இருந்தால் என்ன? அல்லது சொந்த வீடாக இருந்தால்
என்ன?

நம் உடம்பே நமக்குச் சொந்தமில்லை! அது இரவல் வீடு. வாடகை இல்லை!
நம் ஆன்மா அதில் குடியிருக்கிறது.

அதைத்தான் கவியரசர் இரண்டு வரிகளில் சொன்னார்

"இரவல் தந்தவன் கேட்கின்றால்
இல்லையென்றால் அவன் விடுவானா?"

(பாடலின் முதல் வரி ஞாபகம் இருக்கிறதா?)

அதனால் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! இல்லாததற்கு ஏங்காதீர்கள்!
போராடாதீர்கள் (முயற்சி செய்யலாம் அதில் தவறில்லை)

1.
Some people are born genius
Some people are made genius
Some people become genius

2.
Some people are born rich
Some people are made rich
Some people become rich

3.
Some people are born poor
Some people are made poor
Some people become poor

மேலே குறிப்பிட்டுள்ள நிலைப்பாடுகளில் பிறப்பிலேயே ஞானம் உள்ளவன்
பிறப்பிலேயே செல்வந்தன், பிறப்பிலேயே ஏழை என்பதெல்லாம் யார் கையிலும்
இல்லை! யார் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் அப்படிப் பிறக்க
முடியாது.

அதெல்லாம் கொடுப்பினை!

நாம் பிறக்கும்போதே அதீதமான செலவந்தர் வீட்டில் - அதுவும் தவமிருந்து பெற்ற
ஒரே பிள்ளையாக இருந்துவிட்டால் எவ்வளவு அற்புதமாக இருக்கும். வாழ்க்கையில்
எந்தத் தேடலும் இல்லாத நிலை இருந்து விட்டால் எப்படி இருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள் ; கற்பனைக்கென்ன காசா? பணமா?
கற்பனை செய்து பாருங்கள்.

சென்னை அடையாறில் இரண்டு ஏக்கர் தோட்டத்துடன் பங்களா, அண்ணா சாலையில்
ஸ்பென்சர் பிளாசா அளவிற்குக் கட்டடம், நுங்கம்பாகத்தில் ஒரு ஃபைவ் ஸ்டார்
ஹோட்டல்,
வளசரவாக்கத்தில் 25 வீட்டு மனைகள், கோடம்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோ,
திருவான்மியூரில் 50 ஏக்கர் பூமி, ஊட்டியில் 200 எக்கர் தேயிலைத் தோட்டம்,
ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரம்மாண்டமான - நம் குடும்பத்திற்குச் சொந்தமான
பொறியியற் கல்லூரி, 500 கோடி ரூபாய் அளவிற்குப் ப்ளூ சிப் பங்குப் பத்திரங்கள்
வீட்டில் 2 ரோல்ஸ்ராய்ஸ், மற்றும் 4 பென்ஸ் கார்கள் அதோடு நம்மை மணம்
செய்துகொள்ளப் போட்டி போடும் நிலையில் சினேகா போன்ற அத்தை மகள்
அல்லது நயன்தாரா போன்ற மாமா மகள்........இப்படியெல்லாம் by birth நமக்கு
இருந்தால் எப்படியிருக்கும்?

(நன்றாக இருக்காது. சுவையில்லாமல் போய்விடும். தேடிப் பிடிப்பதில் உள்ள
த்ரில் இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவுமே இல்லை. அது புரிபவர்களுக்கு
மட்டுமே புரியும்)

அதெல்லாம் முயற்சியின்றி வருவது. அதற்கு ஜோதிடத்தில் பாக்கியம் (gains)
என்று பெயர்.

அந்த பாக்கியம் ஒருவனுக்கு எந்த அளவு இருக்கிறது என்பதைக் காட்டுவதுதான்
ஒன்பதாம் வீடு. தமிழில் அதைப் பாக்கிய ஸ்தானம் என்பார்கள். ஆங்கிலத்தில்
It is called as House of Gains!

அந்த வீடுதான் ஒருவனுக்கு அமையும் தந்தையைப் பற்றிய வீடு. பூர்விகச் சொத்துக்
களுக்கான வீடு. தந்தைவழி உறவுகளுக்கான வீடு.

ஜோதிடத்தின் மேன்மை அதன் வீடுகளின் பிரிவில்தான் இருக்கிறது. ஒருவனுக்குத்
தாய்தான் முதன்மையான உறவு. தாய்க்கு 4ஆம் வீடு. அடுத்து தந்தை. அதற்கு
9ஆம் வீடு.

கல்வி முக்கியம். கல்விக்கு 4ஆம் வீடு. கல்வியைவிட அறிவு முக்கியம். அதற்கு
5ஆம் வீடு.

வேலை முக்கியம். ஆதற்கு 10ஆம் வீடு. வேலையைவிட அதனால் நமக்குக்
கிடைக்கும் ஆதாயங்கள் முக்கியம். அதற்கு 11ஆம் வீடு.

எல்லாவற்றையும் விட நாம் முக்கியம் அதற்கு ஒன்றாம் வீடு. அதைவிட நமது
உயிர் முக்கியம். இங்கே வாழப்போகும் நாட்கள் முக்கியம். அதற்கு 8ஆம் வீடு.

எல்லாக் காலத்திலேயும் நம்மை அரவணைக்க குடும்பச் சூழல் முக்கியம். அதற்கு
2ஆம் வீடு. கையில் காசு முக்கியம் அதற்கும் அதே 2ஆம் வீடு.

எதுவந்தாலும் தாங்கக்கூடிய துணிச்சல் முக்கியம். அதற்கு மூன்றாம் வீடு.

நோய்களையும், எதிரிகளையும், இழப்புக்களையும், வாழ்க்கையில் சந்தித்தாக
வேண்டும். அதற்கான வீடுகள் 6ம் 12ம் ஆகும்!

ஒரு கவிஞன் சொன்னான்:

"அணைக்க ஒரு அன்பில்லாத மனைவி
பிழைக்க ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள் - ஆனாலும்
இன்னும் உலகம் கசக்கவில்லை!"

என்ன ஒரு அசத்தலான மனம் பாருங்கள் அவனுக்கு!
------------------------------------------------------------------------------
அடுத்த பாடம் ஒன்பதாம் வீட்டைப் பற்றியது. அதைப் பற்றிய செய்திகளை
உங்களுக்கு விவரமாகத் தரவுள்ளேன்.

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

55 comments:

ARUVAI BASKAR said...

//அதோடு நம்மை மணம்
செய்துகொள்ளப் போட்டி போடும் நிலையில் சினேகா போன்ற அத்தை மகள்
அல்லது நயன்தாரா போன்ற மாமா மகள்.......//
கற்பனையில் இது இரண்டும் இடிக்கிறது .
அவ்வாறு இருந்தால் அது சாபம் . வரமல்ல என்று நான் நினைக்கிறேன் .
அவர்கள் இருவருமே கேரக்டர் சரியில்லாத பெண்கள் !

Rajagopal said...

9-வது வீட்டைப் பற்றிய பாடத்திற்கான முன்னோட்டம் கலக்கல்

அன்புடன்
இராசகோபால்

கோவை விமல்(vimal) said...
This comment has been removed by the author.
கோவை விமல்(vimal) said...

May i come in sir

SP.VR. SUBBIAH said...

/////ARUVAI BASKAR said...
//அதோடு நம்மை மணம்
செய்துகொள்ளப் போட்டி போடும் நிலையில் சினேகா போன்ற அத்தை மகள்
அல்லது நயன்தாரா போன்ற மாமா மகள்.......//
கற்பனையில் இது இரண்டும் இடிக்கிறது .
அவ்வாறு இருந்தால் அது சாபம் . வரமல்ல என்று நான் நினைக்கிறேன் .
அவர்கள் இருவருமே கேரக்டர் சரியில்லாத பெண்கள் !////

பதிவைச் சரியாகப் படியுங்கள்!
போன்ற' என்றுதான் எழுதியுள்ளேன்.
அப்படிக்குறிப்பிட்டது ஒரு அழகான தோற்றத்தைத் சுட்டிக்காட்டவே!
இன்றைய (ஏன் எந்தக்காலத்திலேயும்) இளைஞர்கள் அப்படிப் பற்ற தோற்றமுடைய
பெண்ணைத்தானே மணம் செய்ய ஆர்வம் கொள்கிறார்கள்.

போகட்டும்! அவர்கள் இருவருமே கேரக்டர் சரியில்லாத பெண்கள்' என்று எழுதியுள்ளீர்களே?
என்ன நியாயம்? உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? நேரில் பார்த்திருக்கிறீர்களா?
திரைத்துறையில் இருப்பதாலேயே ஒருவருக்கு அவப்பெயர் சூட்டுவது சரிதானா?
சொல்லுங்கள் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Rajagopal said...
9-வது வீட்டைப் பற்றிய பாடத்திற்கான முன்னோட்டம் கலக்கல்
அன்புடன்
இராசகோபால்/////

உங்கள் வருகைக்கு நன்றி கோபால்!

தியாகராஜன் said...

ஐயா வணக்கம்.
பாக்கியஸ்தானத்திற்கான முன்னோட்டம்
அற்புதமாக உள்ளது. காத்திருக்கிறோம்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger கோவை விமல்(vimal) said...
May i come in sir///

Not now! You can come when you feel to come with out asking the வாத்தியார்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger தியாகராஜன் said...
ஐயா வணக்கம்.
பாக்கியஸ்தானத்திற்கான முன்னோட்டம்
அற்புதமாக உள்ளது. காத்திருக்கிறோம்.////

பாடமும் அற்புதமாக இருக்கும்; திங்கட்கிழமை மாலைவரை பொறுத்திருங்கள்!

கோவை விமல்(vimal) said...

//SP.VR. SUBBIAH said...

Not now! You can come when you feel to come with out asking the வாத்தியார்!//


வகுப்றை வருவதற்கு முன்னமே வகுப்பு தொடங்கி விட்டது, வாத்தியார் வேற அறையில். அது எப்படி கேட்காமல் உள்ளே வருவது, அப்படி வந்தால் அது வாத்தியர்க்கு மரியாதை குறைவு இல்லயா? அதுதான் உள்ளே வரலாமா என்று கேட்டேன்...

கோவை விமல்(vimal) said...

பேப்பர் பேனாவுடன் தயாராகி விட்டேன் வாத்தியரே, 9'ம் வீட்டின் படத்திற்காக...

என்ன ஒரு சிறு வருத்தம் உங்கள் கற்பனை எடுத்து காட்டு-இல்
//"அதோடு நம்மை மணம்
செய்துகொள்ளப் போட்டி போடும் நிலையில் சினேகா போன்ற அத்தை மகள்
அல்லது நயன்தாரா போன்ற மாமா மகள்"//

அதுபோல அமைய வில்லையே என்று ஒரு சிறு வருத்தம்.

//(நன்றாக இருக்காது. சுவையில்லாமல் போய்விடும். தேடிப் பிடிப்பதில் உள்ள
த்ரில் இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவுமே இல்லை. அது புரிபவர்களுக்கு
மட்டுமே புரியும்)//

இருந்தாலும் மனத்தை இந்த வார்த்தைகள் வைத்து தேற்றி கொள்கிறேன்...

Sumathi. said...

ஹலோ சார்,

//இங்கே எதுவுமே சாசுவதம் இல்லை! நிரந்தரமாக இருக்கப் போவதில்லை..//

//ஆசைப் படுவது வேறு. தேவைகள் வேறு.//

//அதனால் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! இல்லாததற்கு ஏங்காதீர்கள்!
போராடாதீர்கள் (முயற்சி செய்யலாம் அதில் தவறில்லை)//

ஆமாம், எத்தனை சத்தியமான உண்மைகளான வார்த்தைகள்.

அடுத்த பாடம் ஒன்பதாம் வீட்டைப் பற்றியது.

ஆரம்பிங்க, காத்திருக்கிறோம்.

கோவை விஜய் said...

ஆசிரியர் ஐயா ஒன்பதாம் விடு பற்றிய விரிவான பதிவுக்கான முன்னுரை வாழ்வியல் உண்மைகளை மிக எளிதாகச் சொல்லுகிறது.

பாடம் நாளையா?

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

தமாம் பாலா (dammam bala) said...

///பாடல் முதல் வரி ஞாபகம் இருக்கிறதா? -வாத்தியார்//

முதல் வரி என்ன ஐயா,முழு பாடலும் இதோ..கவியரசரின் மாஸ்டர்பீஸ் அல்லவா அது?!

போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா.

தத்துவப்பாடத்துக்கு நன்றிகள்,பல..

கல்கிதாசன் said...

வணக்கம் வாத்தியாரே,
ஆறாம் வீட்டில இருந்து ஒன்பதாம் வீட்டுக்கு ஒரேயடியாக தாண்டிவிடீர்கள். அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

//////(நன்றாக இருக்காது. சுவையில்லாமல் போய்விடும். தேடிப் பிடிப்பதில் உள்ள
த்ரில் இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவுமே இல்லை. அது புரிபவர்களுக்கு
மட்டுமே புரியும்)///////

நூற்றில் ஒரு வார்த்தை வாத்தியாரே.

SP.VR. SUBBIAH said...

//////கோவை விமல்(vimal) said...
//SP.VR. SUBBIAH said...
Not now! You can come when you feel to come with out asking the வாத்தியார்!//
வகுப்றை வருவதற்கு முன்னமே வகுப்பு தொடங்கி விட்டது,
வாத்தியார் வேற அறையில். அது எப்படி கேட்காமல் உள்ளே வருவது,
அப்படி வந்தால் அது வாத்தியர்க்கு மரியாதை குறைவு இல்லயா?
அதுதான் உள்ளே வரலாமா என்று கேட்டேன்...//////

இணையத்தில் நடத்தப்படும் வகுப்பு இது! இதற்குக் கால நேரம் ஏது?

SP.VR. SUBBIAH said...

///////கோவை விமல்(vimal) said...
பேப்பர் பேனாவுடன் தயாராகி விட்டேன் வாத்தியரே, 9'ம் வீட்டின் படத்திற்காக...
என்ன ஒரு சிறு வருத்தம் உங்கள் கற்பனை எடுத்து காட்டு-இல்
//"அதோடு நம்மை மணம்
செய்துகொள்ளப் போட்டி போடும் நிலையில் சினேகா போன்ற அத்தை மகள்
அல்லது நயன்தாரா போன்ற மாமா மகள்"//
அதுபோல அமைய வில்லையே என்று ஒரு சிறு வருத்தம்.
//(நன்றாக இருக்காது. சுவையில்லாமல் போய்விடும். தேடிப் பிடிப்பதில் உள்ள
த்ரில் இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவுமே இல்லை. அது புரிபவர்களுக்கு
மட்டுமே புரியும்)//
இருந்தாலும் மனத்தை இந்த வார்த்தைகள் வைத்து தேற்றி கொள்கிறேன்...///////

பேப்பர் பேனா எதற்கு? இணையத்தில் நடத்தப்பெறும் வகுப்பு இது.

SP.VR. SUBBIAH said...

//////Sumathi. said...
ஹலோ சார்,
//இங்கே எதுவுமே சாசுவதம் இல்லை! நிரந்தரமாக இருக்கப் போவதில்லை..//
//ஆசைப் படுவது வேறு. தேவைகள் வேறு.//
//அதனால் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! இல்லாததற்கு ஏங்காதீர்கள்!
போராடாதீர்கள் (முயற்சி செய்யலாம் அதில் தவறில்லை)//
ஆமாம், எத்தனை சத்தியமான உண்மைகளான வார்த்தைகள்.
அடுத்த பாடம் ஒன்பதாம் வீட்டைப் பற்றியது.
ஆரம்பிங்க, காத்திருக்கிறோம்.//////

பதிவில் சில வரிகள் உங்களுக்குப் பிடித்ததில் எழுதிய எனக்கும் மகிழ்ச்சி சகோதரி!
எழுதுபவருக்கு வேறு என்ன வேண்டும்? உளமாற அதைக் குறிப்பிட்டுச் சொல்வதுதான்
மனதை நிறைக்கும். நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

///////கோவை விஜய் said...
ஆசிரியர் ஐயா ஒன்பதாம் விடு பற்றிய விரிவான பதிவுக்கான
முன்னுரை வாழ்வியல் உண்மைகளை மிக எளிதாகச் சொல்லுகிறது.
பாடம் நாளையா?
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com////////

பாடம் திங்கட்கிழமை மாலை!

SP.VR. SUBBIAH said...

//////தமாம் பாலா (dammam bala) said...
///பாடல் முதல் வரி ஞாபகம் இருக்கிறதா? -வாத்தியார்//
முதல் வரி என்ன ஐயா,முழு பாடலும் இதோ..கவியரசரின் மாஸ்டர்பீஸ் அல்லவா அது?!
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.
இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா.
தத்துவப்பாடத்துக்கு நன்றிகள்,பல..///////

அட்டா, முழுப்பாடலையும் கொடுத்து அசத்திவிட்டீர்களே பாலா!

SP.VR. SUBBIAH said...

//////கல்கிதாசன் said...
வணக்கம் வாத்தியாரே,
ஆறாம் வீட்டில இருந்து ஒன்பதாம் வீட்டுக்கு ஒரேயடியாக
தாண்டிவிடீர்கள். அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
//////(நன்றாக இருக்காது. சுவையில்லாமல் போய்விடும். தேடிப் பிடிப்பதில் உள்ள
த்ரில் இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவுமே இல்லை. அது புரிபவர்களுக்கு
மட்டுமே புரியும்)///////
நூற்றில் ஒரு வார்த்தை வாத்தியாரே.//////

ஏழு & எட்டுக்குரிய பாடங்கள் பிறகு நடத்தப்படும்!
புரிந்துகொண்டதைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கல்கியாரே!

புருனோ Bruno said...

//அன்பு, பரிவு, பாசம், காதல், மயக்கம், கிறக்கம் என்று உருகிப் போகக்கூடிய
உறவுகள் அல்லது நட்புகள் பல நமக்கு இருக்கலாம். ஆனால் அத்தனையுமே
ஒரு நாள் காலாவதி ஆகிவிடும்!//

புருனோ Bruno said...

//அன்பு, பரிவு, பாசம், காதல், மயக்கம், கிறக்கம் என்று உருகிப் போகக்கூடிய உறவுகள் அல்லது நட்புகள் பல நமக்கு இருக்கலாம். ஆனால் அத்தனையுமே
ஒரு நாள் காலாவதி ஆகிவிடும்!//

உண்மை.

கோவை விமல்(vimal) said...

//SP.VR. SUBBIAH said...

இணையத்தில் நடத்தப்படும் வகுப்பு இது!//


எங்கு நடந்தாலும் வகுப்பு வகுப்பு-தானே, வாத்தியார் வாத்தியார்-தானே, நானும் சரி மற்றவர்களும் சரி இந்தா இணைய வகுப்பாக கருதவில்லை மாறாக உண்மை வகுப்பு போல கருதியே தான் தினம் தினம் இங்கு வருகிறேன் (மற்றவர்களும் வருகிறார்கள் என்று நினைக்குறேன் வாத்தியரே)

நவநீத்(அ)கிருஷ்ணன் said...

அருமையான பதிவு,மிகுந்த ஆழமான கருத்துக்கள், யாரும் மருக்கமுடியாது. கற்பனைக்கும் ஒர் யோகம் வேண்டும், அது தங்களுக்கு அமைந்துள்து என்று மாணவர்கள் அனைவரும் அறிவர்.

SP.VR. SUBBIAH said...

////புருனோ Bruno said...
//அன்பு, பரிவு, பாசம், காதல், மயக்கம், கிறக்கம் என்று உருகிப் போகக்கூடிய உறவுகள் அல்லது நட்புகள் பல நமக்கு இருக்கலாம். ஆனால் அத்தனையுமே
ஒரு நாள் காலாவதி ஆகிவிடும்!//
உண்மை.////

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி டாக்டர்!

SP.VR. SUBBIAH said...

/////கோவை விமல்(vimal) said...
//SP.VR. SUBBIAH said...
இணையத்தில் நடத்தப்படும் வகுப்பு இது!//
எங்கு நடந்தாலும் வகுப்பு வகுப்பு-தானே, வாத்தியார் வாத்தியார்-தானே,
நானும் சரி மற்றவர்களும் சரி இந்தா இணைய வகுப்பாக கருதவில்லை
மாறாக உண்மை வகுப்பு போல கருதியே தான் தினம் தினம் இங்கு வருகிறேன்
(மற்றவர்களும் வருகிறார்கள் என்று நினைக்குறேன் வாத்தியரே)////

எதைச் சொல்லி எதைச் செய்ய? நேரத்தைச் சொன்னால் வகுப்பற்றிக் கதைக்கிறீர்.
வகுப்பைச்சொன்னால் நேரத்தைப்பற்றிக் கதைக்கிறீர்?
உங்கள் அலுவலகத்திலும் இப்படித்தானா?

SP.VR. SUBBIAH said...

///////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
அருமையான பதிவு,மிகுந்த ஆழமான கருத்துக்கள், யாரும் மறுக்கமுடியாது.
கற்பனைக்கும் ஒர் யோகம் வேண்டும், அது தங்களுக்கு அமைந்துள்து
என்று மாணவர்கள் அனைவரும் அறிவர்.////

ஒருவரைத்தவிர:-))))
நன்றி நவநீதன்!

கூடுதுறை said...

//எங்கு நடந்தாலும் வகுப்பு வகுப்பு-தானே, வாத்தியார் வாத்தியார்-தானே, நானும் சரி மற்றவர்களும் சரி இந்தா இணைய வகுப்பாக கருதவில்லை மாறாக உண்மை வகுப்பு போல கருதியே தான் தினம் தினம் இங்கு வருகிறேன் (மற்றவர்களும் வருகிறார்கள் என்று நினைக்குறேன் வாத்தியரே)//

ரிப்ப்பீபீட்ட்ட்ட்டே....

ஐயா, எட்டாமிட பாடத்தை எடுக்காமல் ஏன் 9ம் இடத்திற்கு தாவிவிட்டீர்கள்.

எட்டாமிடம் இறுதி என்பதால் இறுதியில்தானா?

கூடுதுறை said...

this is for e-mail connection

hotcat said...

Rocking!!!

Good intro!!!! the way ur presented is awesome...your flow of thought is really amazing...keep going waiting to hear more about 9th house...

-Shankar

தியாகராஜன் said...

ஆசான் அவர்களுக்கும், பாசமிகு சகோதரர்களுக்கும் வணக்கம்.

நமது மரியாதைக்குரிய குரு அவர்களின் ஆணைக்கிணங்க,
ஜாதகம் (தமிழில்) கணிக்கும் ஒரு மென் பொருளை அன்பர்களுக்குப் அறிமுகப்படுத்துகிறேன்.

ஆர்வலர்கள் கீழ்கண்ட இரண்டு சுட்டிகளிலிருந்தும் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டுகிறேன்.

மென்பொருள்

மென்பொருளுக்குத் தேவையான இணைப்பு

அன்பன்
தியாகராஜன்.
9994956124

கையேடு said...

//ஊண் = உணவு (food)//

திரு. சுப்பையா அவர்களுக்கு,
பட்டினத்தாரின் இப்பாடலில் ஊண் என்பது உடலைக்(சடலத்தைக்) குறிக்கிறதா அல்லது உணவா..??

அது உயிரற்ற உடலைக் குறிப்பதாகவே புரிந்து வைத்திருந்தேன்..

SP.VR. SUBBIAH said...

//////கூடுதுறை said...
//எங்கு நடந்தாலும் வகுப்பு வகுப்பு-தானே, வாத்தியார்
வாத்தியார்-தானே, நானும் சரி மற்றவர்களும் சரி இந்தா இணைய
வகுப்பாக கருதவில்லை மாறாக உண்மை வகுப்பு போல கருதியே
தான் தினம் தினம் இங்கு வருகிறேன் (மற்றவர்களும் வருகிறார்கள்
என்று நினைக்குறேன் வாத்தியரே)//
ரிப்ப்பீபீட்ட்ட்ட்டே....
ஐயா, எட்டாமிட பாடத்தை எடுக்காமல் ஏன் 9ம் இடத்திற்கு தாவிவிட்டீர்கள்.
எட்டாமிடம் இறுதி என்பதால் இறுதியில்தானா?/////

அதைக் கடைசியில் நடத்துவதுதானே நல்லது! அதனால்தான் தாண்டி வந்துவிட்டேன்!

SP.VR. SUBBIAH said...

/////hotcat said...
Rocking!!!
Good intro!!!! the way ur presented is awesome...
your flow of thought is really amazing...keep going
waiting to hear more about 9th house...
-Shankar////

நன்றி சங்கர். திங்கட்கிழமை மாலையில் அடுத்த பதிவு!

SP.VR. SUBBIAH said...

//////தியாகராஜன் said...
ஆசான் அவர்களுக்கும், பாசமிகு சகோதரர்களுக்கும் வணக்கம்.
நமது மரியாதைக்குரிய குரு அவர்களின் ஆணைக்கிணங்க,
ஜாதகம் (தமிழில்) கணிக்கும் ஒரு மென் பொருளை அன்பர்களுக்குப் அறிமுகப்படுத்துகிறேன்
ஆர்வலர்கள் கீழ்கண்ட இரண்டு சுட்டிகளிலிருந்தும் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டுகிறேன்.
மென்பொருள்
மென்பொருளுக்குத் தேவையான இணைப்பு
அன்பன்
தியாகராஜன்.
9994956124/////

ஆணையா? அதெல்லாம் இல்லை சாமிகளா? ஆணையிடும் அளவிற்கு நான் அரசனும் இல்லை
அரசு பதவியிலும் இல்லை. அமைச்சராகவும் இல்லை!
அன்பர் கேட்டார். செவிசாய்த்தேன். அவ்வளவுதான்!
மென்பொருள் நன்றாக உள்ளது. திருக்கணிதம் (லஹிரி) வாக்கியம் (B.V.ராமன்) என்று இரண்டு
முறைகளிலும் கணக்கிட்டுக்கொள்ளலாம். திருக்கணிதம் துல்லியமாக இருக்கும்!
தியாகராஜன் அவர்களுக்கு உங்களுடைய நன்றியைத் தெரிவித்து விடுங்கள்!

SP.VR. SUBBIAH said...

கையேடு said...
//ஊண் = உணவு (food)//
திரு. சுப்பையா அவர்களுக்கு,
பட்டினத்தாரின் இப்பாடலில் ஊண் என்பது உடலைக்(சடலத்தைக்)
குறிக்கிறதா அல்லது உணவா..??
அது உயிரற்ற உடலைக் குறிப்பதாகவே புரிந்து வைத்திருந்தேன்..////

அந்தச் சொல்லிற்கு இரண்டு அர்த்தமும் உண்டு!
நீங்கள் புரிந்து கொண்டுள்ளது சிறப்பாக உள்ளது நண்பரே!
அப்படியே பொருள் கொள்ளுங்கள்! நன்றி!

தியாகராஜன் said...

ஐயா,
ஆணை இடுவதற்கு அரசனாகவோ, அமைச்சராகவோ இருக்கவேண்டியது அவசியம் இல்லை.ஆசான் வார்த்தைகள் அமுதமல்லவா.

கூடுதுறை said...

ஐயா, திரு தியாகராஜன் அவர்கள் அனுப்பிய சாப்ட்வேர் மிக நன்றாக உள்ளது. அதுவும் பலன்களைக்கூட தெளிவாக தமிழில் உள்ளது...

தயவு செய்து தாங்கள் ஒருபதிவாக வெளியிட்டு அறிமுகபடுத்த முடிந்தால் நல்லது...

என்ன கிராக்குடு சாப்ட்வேர்...அதனால் சிரமம் என நினைக்கிறேன்.

KP முறை என்றால் என்ன என்று சற்று விளக்கமுடியுமா?

தியாகராஜன் said...

ஐயா,
சைடு பாரில் இருப்பதை இப்போது தான் பார்த்தேன். எனக்கே அதிக ஓவராக தெரிகிறது.

கல்கிதாசன் said...

Thank you for your software Mr. Thiyagarajah. But how to join those files.

கூடுதுறை said...

கல்கி அவர்களே அதே போல்டரில் டெக்ஸ்ட் பைலில் விவரம் உள்ளது பாருங்கள்...

கோவை விமல்(vimal) said...

//SP.VR. SUBBIAH said...
எதைச் சொல்லி எதைச் செய்ய? நேரத்தைச் சொன்னால் வகுப்பற்றிக் கதைக்கிறீர்.
வகுப்பைச்சொன்னால் நேரத்தைப்பற்றிக் கதைக்கிறீர்?
உங்கள் அலுவலகத்திலும் இப்படித்தானா?///


எல்லாத்துக்கும் விடை
"எஸ்கேப்"


எனது அலுவலகம் இப்படி இருப்பதனால்தான் உங்கள் வகுப்புக்கு வந்து மனசை ஆறிருக்கிறேன் :-(((

கல்கிதாசன் said...

நன்றி கூடுதுரையாரே.

என்ன விமல் தம்பி, இதுக்கெல்லாம் பொய் டென்ஷன் ஆவங்களா?.

SP.VR. SUBBIAH said...

///////தியாகராஜன் said...
ஐயா,
ஆணை இடுவதற்கு அரசனாகவோ, அமைச்சராகவோ இருக்கவேண்டியது
அவசியம் இல்லை.ஆசான் வார்த்தைகள் அமுதமல்லவா./////

தங்கள் அன்பிற்கு எனது நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////கூடுதுறை said...
ஐயா, திரு தியாகராஜன் அவர்கள் அனுப்பிய சாப்ட்வேர்
மிக நன்றாக உள்ளது. அதுவும் பலன்களைக்கூட தெளிவாக தமிழில் உள்ளது...
தயவு செய்து தாங்கள் ஒருபதிவாக வெளியிட்டு அறிமுகபடுத்த முடிந்தால் நல்லது...
என்ன கிராக்குடு சாப்ட்வேர்...அதனால் சிரமம் என நினைக்கிறேன்.
KP முறை என்றால் என்ன என்று சற்று விளக்கமுடியுமா?/////

K.பார்த்தசாரதி என்ற பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவர் சென்னையில் இருந்தார்.
அவர் வடிவமைத்த ஜோதிடப் பாடங்கள் KP System of Predictions ஆகும்.
அவருடைய ஆக்கங்களைப் படித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்!

SP.VR. SUBBIAH said...

/////தியாகராஜன் said...
ஐயா,
சைடு பாரில் இருப்பதை இப்போது தான் பார்த்தேன். எனக்கே அதிக ஓவராக தெரிகிறது.//////

மனதில் பட்டதை எழுதியுள்ளேன்! சரியாகத்தான் உள்ளது!

SP.VR. SUBBIAH said...

//////கல்கிதாசன் said...
Thank you for your software Mr. Thiyagarajah. But how to join those files./////

அடுத்து வரும் கூடுதுறையாரின் பின்னூட்டத்தில் பதில் உள்ளது!

SP.VR. SUBBIAH said...

//////கூடுதுறை said...
கல்கி அவர்களே அதே போல்டரில் டெக்ஸ்ட் பைலில் விவரம் உள்ளது பாருங்கள்...///////

நன்றி கூடுதுறையாரே!

SP.VR. SUBBIAH said...

//////கோவை விமல்(vimal) said...
//SP.VR. SUBBIAH said...
எதைச் சொல்லி எதைச் செய்ய? நேரத்தைச் சொன்னால் வகுப்பற்றிக் கதைக்கிறீர்.
வகுப்பைச்சொன்னால் நேரத்தைப்பற்றிக் கதைக்கிறீர்?
உங்கள் அலுவலகத்திலும் இப்படித்தானா?///
எல்லாத்துக்கும் விடை
"எஸ்கேப்"
எனது அலுவலகம் இப்படி இருப்பதனால்தான் உங்கள் வகுப்புக்கு வந்து மனசை ஆறிருக்கிறேன் :-(((/////////

அவ்வளவு சுலபத்தில் யாரும் வகுப்பறையில் இருந்து தப்பிக்க முடியாது.
நான் முயன்றும் இதுவரை முடியவில்லை!:-)))

SP.VR. SUBBIAH said...

///////கல்கிதாசன் said...
நன்றி கூடுதுரையாரே.
என்ன விமல் தம்பி, இதுக்கெல்லாம் பொய் டென்ஷன் ஆவங்களா?.//////

அதானே! இன்னொருமுறை சொல்லுங்கள் கல்கி!

கோவை விஜய் said...

Error
Massive RapidShare hack attempts detected. IP blocked. Please call your internet provider.


தடை இருக்கும் போலுள்ளது

ஜாதகம் கணிக்கும் மென்பொருள்: உபயம் - மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் அவளிடமிருக்கும் கோப்பை எல்லோரும் உங்கள் பதிவிலிருந்து நேடையாக பெற ஆவன செய்ய வேண்டுகிறேன்

தியாகராஜன் said...

மாட்சிமை தங்கிய ஆசான் அவர்களே,அன்புடைய நண்பர்களே.
நன்றியுரைத்த நல் உள்ளங்களுக்கு சொந்தக்காரர்களான உங்கள் அனைவருக்கும் அடியேன் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது அரிதான நேரத்தை செலவிட்டு ஜோதிட பாடத்தை நடாத்திவரும் ஆசான் அவர்களின் சேவைக்கு முன் அடியேன், கண்டெடுத்த மென்பொருள் சுட்டியை காட்டியது பெரிய காரியமல்ல.
ஜோதிடப் பாடங்களை வகைப் படுத்தி அனைவருக்கும் எளிதாக்கி,சந்தேகமேற்படும் பாடங்களுக்கு சென்று படிக்ககூடியவாறு அதனை வகைப்படுத்தி அமைத்திருக்கும் கூடுதுறையாரின் அரும் பணிக்கு ஈடானதல்ல.

ஆசானின் தலை மாணாக்கர்கள் திருமிகு தமாம் பாலா, மருத்துவர் திரு.புருனோ, கல்கிதாசன்,எஸ்.சி.எஸ்.சுந்தர், சங்கர் உள்ளிட்ட சான்றோர்களான உண்மைத்தமிழன்,திருமதி. கெக்கேபிக்குணி,அருப்புக்கோட்டை பாஸ்கர், அமரபாரதி, அரவிந்தன், அறிவன், கடலூர் திவா, கனடா சுந்தர், கிச்சா, கோவை விமல், சென்னை சீனிவாசன், சென்னை தினேஷ், சென்னை மணிவேல்,சென்ஷி, துபாய் தமிழ் பிரியன்,நெய்வேலி கார்த்திக், நெல்லை, பார்த்தா, பெங்களூர் அம்பி, பெங்களூர் கோபால், பெங்களூர் ஜி.கே, மலேஷியா விக்னேஸ்வரன், யு.எஸ். அகில் பூங்குன்றன், யு.எஸ். தங்ஸ், ராசகோபால், விஜய்,சென்னை நானானி,பெங்களூர் சுமதி,ரம்யா, ராஜி,வல்லிசிம்ஹன்,ஷைலஜா ஆகிய அன்பர்களோடு சேர்ந்துகொள்ளும் வாய்ப்பினை கொடுத்த குரு அவர்களுக்கு நன்றி.

இதன் பொருட்டு நம் எல்லோருக்கும் மென்பொருளின் பயன் கிடைக்கிறதென்றால்,அதற்கான அனைத்துப் புகழும் நம் ஆசானுக்கே உரித்தானது.

பணிவுடன்,
அன்பன்,
நா.தியாகராஜன்.

SP.VR. SUBBIAH said...

/////கோவை விஜய் said...
Error
Massive RapidShare hack attempts detected. IP blocked. Please call your internet provider.
தடை இருக்கும் போலுள்ளது
ஜாதகம் கணிக்கும் மென்பொருள்: உபயம் - மாணவர் திலகம் கரூர் தியாகராஜன்
அவளிடமிருக்கும் கோப்பை எல்லோரும் உங்கள் பதிவிலிருந்து நேடையாக பெற
ஆவன செய்ய வேண்டுகிறேன்////

சைடுபாரில் இரண்டு சுட்டிகள் உள்ளன. இரண்டையும் பயன்படுத்திப்பாருங்கள். சரியாக உள்ளது.
பிரச்சினை ஒன்றும் இல்லை!

SP.VR. SUBBIAH said...

தியாகராஜன் said...
மாட்சிமை தங்கிய ஆசான் அவர்களே,அன்புடைய நண்பர்களே.
நன்றியுரைத்த நல் உள்ளங்களுக்கு சொந்தக்காரர்களான உங்கள் அனைவருக்கும் அடியேன் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அரிதான நேரத்தை செலவிட்டு ஜோதிட பாடத்தை நடாத்திவரும் ஆசான் அவர்களின் சேவைக்கு முன் அடியேன், கண்டெடுத்த மென்பொருள் சுட்டியை காட்டியது பெரிய காரியமல்ல.
ஜோதிடப் பாடங்களை வகைப் படுத்தி அனைவருக்கும் எளிதாக்கி,சந்தேகமேற்படும் பாடங்களுக்கு சென்று படிக்ககூடியவாறு அதனை வகைப்படுத்தி அமைத்திருக்கும் கூடுதுறையாரின் அரும் பணிக்கு ஈடானதல்ல.
ஆசானின் தலை மாணாக்கர்கள் திருமிகு தமாம் பாலா, மருத்துவர் திரு.புருனோ, கல்கிதாசன்,எஸ்.சி.எஸ்.சுந்தர், சங்கர் உள்ளிட்ட சான்றோர்களான உண்மைத்தமிழன்,திருமதி. கெக்கேபிக்குணி,அருப்புக்கோட்டை பாஸ்கர், அமரபாரதி, அரவிந்தன், அறிவன், கடலூர் திவா, கனடா சுந்தர், கிச்சா, கோவை விமல், சென்னை சீனிவாசன், சென்னை தினேஷ், சென்னை மணிவேல்,சென்ஷி, துபாய் தமிழ் பிரியன்,நெய்வேலி கார்த்திக், நெல்லை, பார்த்தா, பெங்களூர் அம்பி, பெங்களூர் கோபால், பெங்களூர் ஜி.கே, மலேஷியா விக்னேஸ்வரன், யு.எஸ். அகில் பூங்குன்றன், யு.எஸ். தங்ஸ், ராசகோபால், விஜய்,சென்னை நானானி,பெங்களூர் சுமதி,ரம்யா, ராஜி,வல்லிசிம்ஹன்,ஷைலஜா ஆகிய அன்பர்களோடு சேர்ந்துகொள்ளும் வாய்ப்பினை கொடுத்த குரு அவர்களுக்கு நன்றி.
இதன் பொருட்டு நம் எல்லோருக்கும் மென்பொருளின் பயன் கிடைக்கிறதென்றால்,அதற்கான அனைத்துப் புகழும் நம் ஆசானுக்கே உரித்தானது.
பணிவுடன்,
அன்பன்,
நா.தியாகராஜன்.//////

மாட்சிமை எல்லாம் இல்லை சுவாமி. நான் எளிமையானவன். அதிகபட்சமாக வாத்தியார் என்ற பட்டம் போதும்!
உங்கள் அன்பிற்குத் தலை வணங்குகிறேன் நண்பரே!