சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலம். மன்னர் ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தது.
தண்டோராக்காரன் மேடை ஒன்றில் நின்று கத்திக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்தவுடன் ஏதோ முக்கிய அறிவிப்பாக இருந்து தொலைக்கப்போகிறது
என்று கூட்டம் கூடிவிட்டது.
ஐந்தாவது முறையாக எல்லோருக்கும் கேட்கும்படி அவன் உரத்த குரலில் சொன்னான்.
"நமது மன்னர் மன்னருக்கு, என்ன பழம் மிகவும் பிடிக்குமோ அதைக் கொண்டுவந்து
கொடுப்பவருக்கு, ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கிடைக்கும்"
கூட்டத்திலிருந்து இதைக்கேட்ட ஒருவன்," மன்னருக்கு என்ன பழம் பிடிக்கும் என்று
நமக்கு எப்படியப்பா தெரியும்?"என்றான்.
அருகில் இருந்தவன் உடனே கேட்டான்,"நீ என்ன ஊருக்குப் புதுசா?"
"ஏன் கேட்கிறாய்?"
"மன்னர் மன்னன் என்று சொல்வதை வைத்தே நீ தெரிந்து கொள்ள வேண்டாமா?
நமது மன்னன் ஒரு சரியான கோமாளிப் பண்டாரம். வேலை வெட்டி இல்லாத பயல்
அவன் அறிவிப்பும், சொறிவிப்பும் எப்படி இருக்கும்? போய் உருப்படுகிற வழியைப்
பார்" என்று சொல்லிவிட்டு, அவன் போய்விட்டான்.
கேட்டவனுக்கு நைப்பாசை. அடுத்த நாளே, அதிகாலையில், ஊகமாகக் கையில் ஒரு
பழத்தோடு அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே அவனுக்கு முன்னால்
இரண்டு பேர்கள் வரிசையில் காத்திருந்தார்கள். இவனும் போய் நின்றான். அதற்குப்
பின்னால் நான்கைந்து பேர்கள் வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள்.
சூரிய உதயத்தில் இருந்து சரியாகப் பத்தாவது நாழிகையில் (அதாவது காலை மணி
பத்து அளவில்) அரண்மனையின் வாசல் கதவு திறக்கப்பட்டது.
முதன் மந்திரியார் வந்து எச்சரித்துவிட்டுப்போனார்.
"நீங்கள் கொண்டுவந்திருக்கும் பழத்தைப் பார்த்து - மன்னர் மன்னர், அது தனக்கு
மிகவும் பிடித்த பழம்தான் என்று ஒப்புக்கொண்டால், பரிசுப் பணம் கிடைக்கும்.
இல்லையென்றால் மன்னர் என்ன சொல்வாரோ அது நடக்கும். ஆகவே துணிச்சல்
உள்ளவர்கள் மட்டும் உள்ளே வாருங்கள்!"
நம்ம ஆள் மிகவும் தைரியமானவன். என்ன ஆகிவிடப்போகிறது பார்த்துவிடலாம்
என்று தைரியமாக நின்றான்.
வரிசையில் முதலில் நின்ற மூன்று நபர்களை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தார்கள்.
வரிசைப்படி முதலில் வந்த ஆசாமி, சபையின் நடுவில் நின்று, தான் கொண்டு
வந்திருந்த பழத்தைத் தன் சட்டைப் பையில் இருந்து எடுத்துக் காட்டினான்.
அது நாவல் பழம்!
மன்னர் மன்னன், அது தனக்கு மிகவும் பிடித்த பழம் அல்ல, என்று கூறி, அதை
அப்படியே கொட்டையோடு விழுங்க உத்தரவிட்டார். அவனும் வாயில் போட்டு
அந்தப் பழத்தை விழுங்கி விட்டு ஏமாற்றத்தோடு நகர்ந்தான்.
அடுத்தவன் கொண்டுவந்திருந்தது கறுப்புத் திராட்சை. மன்னர் மன்னன் இல்லை
என்று தலையசைக்க அவனுக்கும் அதே கதி.
மூன்றாவதாக இருந்த நம்ம ஆள் கொண்டுவந்திருந்தது. பெரிய கொய்யாப்பழம்.
பழநியில் கிடைக்குமே அதுபோன்ற பெரிய கொய்யாப்பழம். சபையில் இருந்தவர்கள்
எல்லாம் திகைத்துப்போய் இருந்தார்கள் - என்ன நடக்கப்போகிறதோவென்று!
ஒரு வேளை, மன்னர் தனக்கு மிகவும் பிடித்தபழம் இதுவல்ல என்று கூறி, அப்படியே
விழுங்கு என்று சொன்னால் இவன் என்ன செய்வான்? எல்லோரும் ஆவலோடு
மன்னரின் முகத்தைப் பார்த்தார்கள்.
மன்னர் சொன்னார்." எனக்குப் பிடித்த பழம்தான் இது. ஆனால் மிகவும் பிடித்த பழம்
அல்ல! ஆகவே இதை நீ அப்படியே விழுங்க வேண்டும் இல்லை என்றால் தவறான
பழத்தோடு வந்ததால் பத்துக் கசையடி வாங்கிக்கொள்ள வேண்டும். எது விருப்பமோ
அதைச் செய்!"
சபையில் இருந்த அத்தனை பேரும் சட்டென்று அவன் பக்கம் திரும்பி,
பரிதாபத்தோடு அவனைப் பார்த்தார்கள்.
ஆனால் அவனோ கவலைப்பாடாமல், "ஹஹ், ஹஹ், ஹா" என்று வாய்விட்டுப்
பலமாச் சிரிக்க ஆரம்பித்தான்.
மன்னர் மன்னனுக்குக் கடுங்கோபமாகி விட்டது.
"நிறுத்து. எதற்குச் சிரிக்கிறாய் இப்போது?"
நம்ம ஆள் உடனே பவ்வியமாகப் பதில் சொன்னான்."மன்னர் மன்னா, மன்னிக்கவும்
நான் வெளியே, வாசலில் எனக்குப் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தவனை
நினைத்தேன் உடனே சிரிப்பு வந்துவிட்டது."
"சிரிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது?"
"அவன் கொண்டுவந்திருக்கும் பழத்தை நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது. அந்தப்
பழம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழமில்லை என்றால் அவன் கதி என்னவாகும்
என்று நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது."
இப்போது மன்னர் மன்னனே ஆர்வமாகி, அவனைப் பார்த்துக் கேட்டார்," என்ன
பழம் அது?"
நம்ம ஆள் உரக்கச் சொன்னான்,"பலாப்பழம் மன்னா!"
சபை மொத்தமும் கொல்'லென்று சிரிப்பில் அதிர்ந்து விட்டது. அடக்க முடியாமல்
அததனை பேர்களும் சிரித்து விட்டார்கள் - அரசனைத் தவிர!
---------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே எதற்காக இந்தக் கதை? தலைப்புப்படி பலாப்பழம் வந்துவிட்டது!
ஜோதிடத்திற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?
"நவாம்சத்தைப் பற்றிய முன் பாடத்திற்கே எல்லோரும் அயர்ந்து விட்டீர்களே -
அடுத்த பாடத்தை நினைத்தேன். அடுத்த பாடத்தை எப்படி நீங்கள் எதிர்
கொள்ளப் போகிறீர்களோ என்று நினைத்தேன். எனக்கு உடனே இந்தக் கதைதான்
ஞாபகத்திற்கு வந்தது!"
"அவ்வளவு கஷ்டமா அந்தப் பாடம்?"
"ஆமாம், நீங்கள் பிடிக்கவில்லை என்றால் அங்கே பலாப்பழத்தோடு நிற்பவன்
கதிதான் என்கதியும்!"
"சரி, பதிவைப் போடுங்கள் பார்ப்போம்!"
"பதிவு வெள்ளிக்கிழமையன்று!"
-------------------------------------------------------------------------------------------------------------------
பலாப்பழம் பார்க்க முரடாக இருக்கும். உரித்தால் உள்ளே இனிப்பான பல
சுளைகள் இருக்கும். ஜோதிடமும் அப்படித்தான். உரிக்காமல் அப்படியே
திங்க (திண்ண) முடியாது. பிரித்து, ஆழ்ந்து படிக்காமல் ஜோதிடத்தைத் தெரிந்து
கொள்ள முடியாது!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

பாழாப் போன பழாப்பழம்!!
ReplyDeleteவாத்தியாரே!! அது பலாப்பழம். பழாவும் இல்லை கொழாவும் இல்லை.
முன்னரே கேள்வி பட்ட கதை ஆனாலும் உங்கள் எழுத்தில் படிக்க சுவையாகவே இருந்தது. பாடத்தை எதிர்பார்த்து ஆவலுடன்
ReplyDeleteஇராசகோபால்
கதையை சபை நாகரீகம் கருதி மாற்றியிருக்கிறீர்கள்தானே ? (கதையின் 'உண்மை' version எனக்குத்தெரியுமாக்கும்)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபலாப்பழத்தை போல ஜோதிடமும் சுவையானதுதான். கவலை படாதீர்கள் மாணவர்கள் யாரும் அதை உங்களை முழுதாக சாப்பிட சொல்ல மாட்டார்கள். நாங்களே சுவைபட பகிர்ந்து கொள்வோம்.
ReplyDeleteமா,பலா,வாழை முக்கனிகளில்
ReplyDeleteமாதா ஊட்டாததை மா ஊட்டும்
பலா,பலன்களை அறியச்செய்யும்
வாழையடி வாழையாக வந்துள்ள
கலையை எங்களுக்கு போதிக்கும்
ஆசானே, பலா பழமும் உங்கள்
கை பட்டு கொழகொழ ஆகிடாமல்
பள பள என்றே மின்னுகின்றதே
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
உணர்ந்து பார்த்து நிம்மதி நாடு
என்ற கவியரசர் கூற்று தான்
நினைவுக்கு வருகிறது ஐயா!
ப லா...... பலா.
ReplyDeleteஎனக்கு ரொம்பப் பிடிச்ச பழம்:-)
///////இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteபாழாப் போன பழாப்பழம்!!
வாத்தியாரே!! அது பலாப்பழம். பழாவும் இல்லை கொழாவும் இல்லை./////
வாங்க கொத்தனாரே! சொற்பிழை அது! தவறுதான் திருத்திவிட்டேன்.நன்றி!
பார்த்தீர்களா? சொற்பிழை அல்லது தவறு இருந்தால் உடனே நீங்கள்
உள்ளே வந்து விடுகிறீர்கள். அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி!
//////Rajagopal said...
ReplyDeleteமுன்னரே கேள்வி பட்ட கதை ஆனாலும் உங்கள் எழுத்தில் படிக்க
சுவையாகவே இருந்தது. பாடத்தை எதிர்பார்த்து ஆவலுடன்
இராசகோபால்////
நானும் கேள்விப்பட்ட கதைதான் கோபால்.உங்களைப் போன்ற
அபிமானிகளுக்காகத்தான் அதை இங்கே எழுதினேன்
/////Muthukumar said...
ReplyDeleteகதையை சபை நாகரீகம் கருதி மாற்றியிருக்கிறீர்கள்தானே ?
(கதையின் 'உண்மை' version எனக்குத்தெரியுமாக்கும்)/////
நான் எதையும் மாற்றவில்லை சுவாமி.
உண்மையான version என்ன? மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
//////கல்கிதாசன் said...
ReplyDeleteபலாப்பழத்தை போல ஜோதிடமும் சுவையானதுதான். கவலை
படாதீர்கள் மாணவர்கள் யாரும் அதை உங்களை முழுதாக சாப்பிட
சொல்ல மாட்டார்கள். நாங்களே சுவைபட பகிர்ந்து கொள்வோம்./////
நல்லது கல்கியாரே! கடைசி பெஞ்ச் கண்மணிகள் என்ன சொல்கிறார்கள்
என்று பார்ப்போம்
//////தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteமா,பலா,வாழை முக்கனிகளில்
மாதா ஊட்டாததை மா ஊட்டும்
பலா,பலன்களை அறியச்செய்யும்
வாழையடி வாழையாக வந்துள்ள
கலையை எங்களுக்கு போதிக்கும்
ஆசானே, பலா பழமும் உங்கள்
கை பட்டு கொழகொழ ஆகிடாமல்
பள பள என்றே மின்னுகின்றதே//////
மின்னுவதுதான் சமயங்களில் வம்பாகி விடுகிறது. வருகிறவர்கள்
மின்னுவதை மட்டும் வேடிக்கை பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள்!
/////துளசி கோபால் said...
ReplyDeleteப லா...... பலா.
எனக்கு ரொம்பப் பிடிச்ச பழம்:-)////
வாங்க டீச்சர்! உங்களுக்கு பிடித்த பழம், அங்கே நியூஸிலாந்தில் கிடைக்கிறதா?
கொத்தனார் வசிக்கும் ஊரில் இல்லை என்று கேள்விப் பட்டுள்ளேன். டின்னில்
அடைத்துவருவது மட்டும் கிடைக்குமாம்
வாத்தியார் ஐயா,
ReplyDeleteகொத்ஸ் ஊருக்கு எங்கூர் இளைச்சதா என்ன?
இங்கே(யும்) தாராளமாக் கிடைக்குது டின்களில்.
ஐயா,
ReplyDeleteசஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை...
ஆனாலும் அம்சம் பாடம் சற்றுக்கடினம்தான்.
இருந்தாலும் தாங்கள்தான் பாடம் என்னும் பலாப்பழத்தை கொய்து கொட்டை நீக்கி பழத்தை எடுத்து தேனில் தடவிக்கொடுக்கிறீர்களே... உங்கள் மாணவர்களுக்கு அதைச்சாப்பிட கஷ்டமே இல்லை...
என்ன அதிகமாக சாப்பிட்டு விட்டு வாத்தியார் பரிட்சை வைக்கும் சமயத்தில் வயிறு பிடுங்குவிடுகிறது...
//////துளசி கோபால் said...
ReplyDeleteவாத்தியார் ஐயா,
கொத்ஸ் ஊருக்கு எங்கூர் இளைச்சதா என்ன?
இங்கே(யும்) தாராளமாக் கிடைக்குது டின்களில்.////
அதுக்குத்தான் இளையராஜா சொன்னார் டீச்சர்:
"சொர்க்கமே என்றாலும் - அது
நம்ம ஊரைப் போலாகுமா?"
////கூடுதுறை said...
ReplyDeleteஐயா,
சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை...
ஆனாலும் அம்சம் பாடம் சற்றுக்கடினம்தான்.
இருந்தாலும் தாங்கள்தான் பாடம் என்னும் பலாப்பழத்தை கொய்து
கொட்டை நீக்கி பழத்தை எடுத்து தேனில் தடவிக்கொடுக்கிறீர்களே...
உங்கள் மாணவர்களுக்கு அதைச்சாப்பிட கஷ்டமே இல்லை...
என்ன அதிகமாக சாப்பிட்டு விட்டு வாத்தியார் பரிட்சை வைக்கும்
சமயத்தில் வயிறு பிடுங்குவிடுகிறது...////
அதுக்குத்தான் பரீட்சைவைக்கும் எண்ணத்தையே மறந்துவிட்டேன்;-)))))
இளைய ராஜாவா சொன்னார்?
ReplyDeleteகங்கை அமரன் இல்லையா???????
நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்கா வோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க
ReplyDeleteகோவை விமல்?
ReplyDelete//நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்கா வோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க//
வாழை(பழம்) எங்கே????
சேர்க்க விட்டுப்போச்சா?
அச்சசோ.........:-)))))
ஆஹா....
ReplyDeleteதுளசி அக்காகூட விமலை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்....
/////துளசி கோபால் said...
ReplyDeleteஇளைய ராஜாவா சொன்னார்?
கங்கை அமரன் இல்லையா???????////
எழுதினது தம்பிதான் டீச்சர் ஆனால் பாட்டைத் தன் குரலால்
பிரபலப் படுத்தியது அண்ணன்தானே? அதனால் அந்தப் பாட்டின்
ராயல்ட்டி அண்ணனுக்குத்தான் டீச்சர்!
//////Blogger கோவை விமல்(vimal) said...
ReplyDeleteநான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்காவோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க///
மாங்காயை உரிக்க மாட்டர்கள். நறுக்கித்தான் கொடுப்பார்கள்
/////Blogger துளசி கோபால் said...
ReplyDeleteகோவை விமல்?
//நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்கா வோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க//
வாழை(பழம்) எங்கே????
சேர்க்க விட்டுப்போச்சா?
அச்சசோ.........:-)))))////
என்ன டீச்சர், அவரே செமையான வால்! நீங்கள் அவருக்கு எடுத்துக் கொடுப்பது நியாயமா?
are you going to write about D4 and D10
ReplyDeleteஆவலாக உள்ளேன்..அடுத்த பாடத்தை(ஜோதிட நுணுக்கத்தை) அரிய....
ReplyDeleteஹலோ சார்,
ReplyDelete//"ஆமாம், நீங்கள் பிடிக்கவில்லை என்றால் அங்கே பலாப்பழத்தோடு நிற்பவன் கதிதான் என்கதியும்!"//
ஹா ஹா ஹா... போன பாடமே இன்னும் சரியா ஏற மாட்டேங்கரது, இது வேறயா? ம்ம்ம்... சரி பாக்கலாம் இதுவாவது ஏறுதான்னு.
////துளசி கோபால் said...
ReplyDeleteகோவை விமல்?
//நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்கா வோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க//
வாழை(பழம்) எங்கே????
சேர்க்க விட்டுப்போச்சா?
அச்சசோ.........:-)))))//////
அது மட்டும் (வாழை பழம்) தட்ட ச்ச வரல டீச்சர்,
அது என்னமோ தெரியல கவுண்டருக்கும் எனக்கும் வாழை பழம்னு வந்தாலே ஆகா மாட்டேங்குது :-(
//SP.VR. SUBBIAH said...
ReplyDelete//////Blogger கோவை விமல்(vimal) said...
நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்காவோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க///
மாங்காயை உரிக்க மாட்டர்கள். நறுக்கித்தான் கொடுப்பார்கள்////
எங்க வாத்தியார் சொன்னா வானை கூட வில்ளாக்கும் பொழுது, உரிப்பது நறுபது எல்லாம் தம்மாதூண்டு வாத்தியரே....:-)
////SP.VR. SUBBIAH said...
ReplyDelete/////Blogger துளசி கோபால் said...
கோவை விமல்?
//நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்கா வோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க//
வாழை(பழம்) எங்கே????
சேர்க்க விட்டுப்போச்சா?
அச்சசோ.........:-)))))////
என்ன டீச்சர், அவரே செமையான வால்! நீங்கள் அவருக்கு எடுத்துக் கொடுப்பது நியாயமா?///////
என்ன அருமையான வாத்தியார் நீங்கள், நீங்களே அடுத்தவரிடம் என்னை பற்றி புகழ்ந்து சொல்லும் பொழுது இதை விட வேறு முகவரி எனக்கு தேவை இல்லை. (என்னை அனுமார் என்று குறிப்பிட்டததை கூறுகிறேன்).
(உரிச்ச)வாழைப்பழம் வேண்டாமுன்னு சொல்லும் 'அனுமாரை' இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கின்றேன்:-))))
ReplyDeleteபழத்தை வச்சு பிரச்சினை பண்ணாதீங்கடே... ஒரு பழத்தாலதான் பழனியில போய் ஒக்காந்திருக்காரு ஒருவர். ( அதுவும் கோவணத்தோட)
ReplyDelete/////கூடுதுறை said...
ReplyDeleteஆஹா....
துளசி அக்காகூட விமலை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்....
நியாயமா?/////
துளசி அக்காவைப் பற்றி நீங்கள் அறிந்தது அவ்வளவுதானா?
அவர்களுடைய பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு, அவர்கள்
எழுதும் பதில்களைப் படித்தால் இன்னும் தெரிய வரும்!
/////தமிழன் said...
ReplyDeleteare you going to write about D4 and D10/////
What is meant by D4 & D10, my dear friend?
/////மதி said...
ReplyDeleteஆவலாக உள்ளேன்..அடுத்த பாடத்தை(ஜோதிட நுணுக்கத்தை) அரிய..../////
ஆகா, உங்கள் ஆர்வம் வாழ்க! வளர்க!
/////Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
//"ஆமாம், நீங்கள் பிடிக்கவில்லை என்றால் அங்கே பலாப்பழத்தோடு நிற்பவன் கதிதான் என்கதியும்!"//
ஹா ஹா ஹா... போன பாடமே இன்னும் சரியா ஏற மாட்டேங்கிறது, இது வேறயா?
ம்ம்ம்... சரி பாக்கலாம் இதுவாவது ஏறுதான்னு.///////
உங்களுக்குச் சுலபமாகத்தான் இருக்கும். பதிவை வலை ஏற்றியபிறகு படித்துவிட்டுச் சொல்லுங்கள் சகோதரி!
///////கோவை விமல்(vimal) said...
ReplyDelete////துளசி கோபால் said...
கோவை விமல்?
//நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்கா வோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க//
வாழை(பழம்) எங்கே????
சேர்க்க விட்டுப்போச்சா?
அச்சசோ.........:-)))))//////
அது மட்டும் (வாழை பழம்) தட்ட ச்ச வரல டீச்சர்,
அது என்னமோ தெரியல கவுண்டருக்கும் எனக்கும் வாழை
பழம்னு வந்தாலே ஆகா மாட்டேங்குது :-(///////
இருவருமே கோயமுத்தூர்க்காரர்கள்.அதனால் இருக்கலாம்!
///////கோவை விமல்(vimal) said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
//////Blogger கோவை விமல்(vimal) said...
நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்காவோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க///
மாங்காயை உரிக்க மாட்டர்கள். நறுக்கித்தான் கொடுப்பார்கள்////
எங்க வாத்தியார் சொன்னா வானை கூட வில்லாக்கும் பொழுது,
உரிப்பது நறுக்குவது எல்லாம் தம்மாதூண்டு வாத்தியரே....:-)////
வானை வில்லாக்கத் தெரியும். ஆனால் வகுப்பறைப் பாடம் மட்டும் புரியாது!
//////கோவை விமல்(vimal) said..
ReplyDelete////SP.VR. SUBBIAH said...
/////Blogger துளசி கோபால் said...
கோவை விமல்?
//நான் ரெடி வாத்தியரே, பாலா வோ மாங்கா வோ எதா இருந்தாலும் உரித்து குடுங்க//
வாழை(பழம்) எங்கே????
சேர்க்க விட்டுப்போச்சா?
அச்சசோ.........:-)))))////
என்ன டீச்சர், அவரே செமையான வால்!
நீங்கள் அவருக்கு எடுத்துக் கொடுப்பது நியாயமா?///////
என்ன அருமையான வாத்தியார் நீங்கள், நீங்களே அடுத்தவரிடம் என்னை
பற்றி புகழ்ந்து சொல்லும் பொழுது இதை விட வேறு முகவரி எனக்கு தேவை இல்லை.
(என்னை அனுமார் என்று குறிப்பிட்டதைக் கூறுகிறேன்).//////
வால் இருப்பதால் மட்டும் அனுமார் ஆகிவிட முடியாது!:-)))
///////துளசி கோபால் said...
ReplyDelete(உரிச்ச)வாழைப்பழம் வேண்டாமுன்னு சொல்லும் 'அனுமாரை'
இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கின்றேன்:-))))////
அதானே, நீங்க சொன்னா, சரிதான் டீச்சர்!
//////கல்கிதாசன் said...
ReplyDeleteபழத்தை வச்சு பிரச்சினை பண்ணாதீங்கடே... ஒரு பழத்தாலதான்
பழனியில போய் ஒக்காந்திருக்காரு ஒருவர். ( அதுவும் கோவணத்தோட)/////
அதனால்தான் இன்று குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கிறான். அதை மறந்துவிட்டீர்களே நண்பரே!
Lesson is super! Waiting for next topic regarding 9th house(Is that lesson changed or still 9th house?
ReplyDelete-Shankar
பழய பலா (கதை), தங்கள் கை வண்ணத்தில் தேனில் ஊரிய பலாவாய் ஆனாது.
ReplyDelete/////hotcat said...
ReplyDeleteLesson is super! Waiting for next topic regarding 9th house(Is that lesson changed or still 9th house?
-Shankar///
ஒன்பாதாம் வீட்டின் 2 வது பகுதி சற்றுப் பெரிய பகுதி எழுதிப் பதிவிட வேண்டும்.
திங்கட்கிழமைவரை பொறுத்திருங்கள் நண்பரே!
///////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDeleteபழய பலா (கதை), தங்கள் கை வண்ணத்தில் தேனில் ஊரிய பலாவாய் ஆனாது.///
குட்டிக்கதைதான் அது.
ஊதிப் பெரிதாக்கியிருக்கிறேன்!
Hi, Please tell us the significance of solar and lunar eclipse in astrology, and how it will affect people?
ReplyDelete/////Prakash said...
ReplyDeleteHi, Please tell us the significance of solar and lunar eclipse
in astrology, and how it will affect people?////
I will write it in the order, my dear friend! It will come in the later
part of the lessons!