மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.8.08

ஜோதிட நூல் அறிமுகம் : அலெக்ஸாண்டர் முதல் ஜியா-உல் ஹக் வரை!


வித்தியாசமாக ஒரு இடுகையைத் தரும் பொருட்டு, ஜோதிட நூல் ஒன்றை
உங்களுக்கு இன்று அறிமுகம் செய்கிறேன்.

திரு.ரேவன சித்தப்பா என்னும் கல்லூரிப் பேராசியர் சரித்திரப்பாடங்களில் விற்பன்னர்
அந்தத் துறையில் கரைகண்டு சரித்திரப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியராகப் பல
ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியவர். அதே நேரத்தில் ஜோதிடத்தில் மிகுந்த
நம்பிக்கை உடையவர்.

உலகப் புகழ் பெற்ற 60 பிரபலங்களின் சரித்திரத்தை ஆராய்ந்து அவர்களைப் பற்றி,
அவர்களுடைய காலத்துத்துச் ஜோதிடர்கள் சொன்னது என்ன? அதன்படி நடந்ததா?
என்று அசத்தலாக எழுதியுள்ளார்.

Blitz (Mumbai) , Sadhane (Bangalaore University), Sidda Ganga போன்ற சஞ்சிகை
களிலும், வார இதழ்களிலும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

1. அலெக்ஸாண்டர், 2 ஜூலியஸ் சீசர், 3.புத்தர், 4 ராணி மேரி 5. ராணி எலிஸபெத்
6. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், 7 எட்வர்டு மன்னர், 8 .நெப்போலியன், 9 ஜவஹர்லால் நேரு.
10. ப்ரொஃபட் முகமது.11 அக்பர். 12, மர்லின் மன்ரோ 13. ஷேக் முஜிபிர் ரெஹ்மான்
14. ஜியா உல் ஹக் என்று 60 பிரபலங்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல
சம்பவங்களை, ஜோதிடம் மற்றும் சரித்திரப் பின்னணியில் அவர் எழுதியுள்ளார்.

அதாவது ஜோதிடன் சொன்னது என்ன? அதன்படி நடந்தது என்ன? என்பவற்றை
ஆதாரங்களோடு எழுதியுள்ளார்

நாம் எல்லாம் பகுத்து அறிபவர்கள் அதானால் நமக்கு சம்பவங்களைவிட ஆதாரங்கள்
முக்கியம்.

ஆதாரம் இல்லாமல் எழுதினால் நம்மைக் கிழித்துத் தொங்க விட்டு விடுவார்கள்.

இந்தப் புத்தகங்களில் நிறைய ஆதாரங்களோடு பேராசிரியர் மாய்ந்து மாய்ந்து எழுதியுள்ளார்

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் படித்தால் மிகவும் சந்தோஷமடைவார்கள்.
அதனால் இதை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

விரும்பியவர்கள் தேடிப் பிடித்து, வாங்கிப் படியுங்கள்.

எங்கே தேடுவதா?

ஸிம்ப்பிள்: அந்தப் பதிப்பகத்திற்கே கடிதம் எழுதுங்கள் கிடைக்காமலா போய்விடும்?

இந்தப் புத்தகத்தை நான் வாங்கிய ஆண்டு 1992. (ஹைதராபாத் சென்றிருந்த சமயம்,
அங்கே விமான நிலையத்தில் இருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் இதை
வாங்கியதாக நினைவு.

பக்கங்கள் 92
அன்றைய விலை: ரூ.18:00

புத்தகத்தின் பெயர்: Alexander to Zia -Ul- Hag

ஆசிரியர்: H. Revanasiddappa (Reader in History, Siddaganga College, Tumkur, Karnataka)

பதிப்பகத்தின் பெயரும், முகவரியும்:

Shashi Prakashana,
Third Main,
K.R.Extension,
Tiptur - 572 202
Karnataka

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

48 comments:

hotcat said...

Me the first:-)))) I'll try this get this book...

Shankar

அணுயோகி said...

ஆசானே ! அந்த book படிச்சா syllbus எவ்வளவு தூரம் கவர் ஆகும்? :-)

தமாம் பாலா (dammam bala) said...

பொதுவாக ஆசிரியர்கள் 'ரெஃரென்ஸ்' ஐ ரகசியமாக வைத்துகொண்டு மாணவர்களுக்கு, சொல்லி மாத்திரம் கொடுப்பார்கள், நீங்கள் புத்தகத்தின் விவரத்தையும் தெரிவித்தது,நன்று ஐயா!

அதோடு, நீங்கள் வந்து துவக்கி வைத்த என் வலைப்பதிவும் இந்த மாதத்தில் 20+ பதிவுகளுடன், தமிழ் மணத்திலும், தேன்கூட்டிலும் சுட்டிகள் கொடுக்கவும், மெல்ல கற்றுவருகிறேன், புதுபுது வலைநண்பர்களும் கிடைத்து வருகின்றனர். அதற்காகவும்,எனது கற்றலின் விஸ்தீரணத்தை அகலப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் உதவுவதற்கும் உங்களுக்கும், நமது வகுப்பு அறை மாணவ நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்!

SP.VR. SUBBIAH said...

/////hotcat said...
Me the first:-)))) I'll try this get this book...
Shankar/////

இப்படியொரு சந்தோஷமா? வாழ்க உங்கள் சந்தோஷம்!

SP.VR. SUBBIAH said...

//////அணுயோகி said...
ஆசானே ! அந்த book படிச்சா syllbus எவ்வளவு தூரம் கவர் ஆகும்? :-)///////

பாடத்திட்டம் (syllbus) என்று எதுவும் கிடையாது.
கண்டதையும் படித்துப் பண்டிதன் ஆவோம்.
முடிந்தால் இதையும் படியுங்கள்
என்ன குறைந்துவிடப்போகிறது?

நீங்கள் படிப்பதுதான் உங்களுடைய சிலபஸ்:-)))

SP.VR. SUBBIAH said...

//////தமாம் பாலா (dammam bala) said...
பொதுவாக ஆசிரியர்கள் 'ரெஃரென்ஸ்' ஐ ரகசியமாக வைத்துகொண்டு மாணவர்களுக்கு, சொல்லி மாத்திரம் கொடுப்பார்கள், நீங்கள் புத்தகத்தின் விவரத்தையும் தெரிவித்தது,நன்று ஐயா!///////

யாம் பெற்ற் இன்பம் பெறுக இவ்வையகம் - அவ்வளவுதான்!

///////அதோடு, நீங்கள் வந்து துவக்கி வைத்த என் வலைப்பதிவும் இந்த மாதத்தில் 20+ பதிவுகளுடன், தமிழ் மணத்திலும், தேன்கூட்டிலும் சுட்டிகள் கொடுக்கவும், மெல்ல கற்றுவருகிறேன், புதுபுது வலைநண்பர்களும் கிடைத்து வருகின்றனர். அதற்காகவும்,எனது கற்றலின் விஸ்தீரணத்தை அகலப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் உதவுவதற்கும் உங்களுக்கும், நமது வகுப்பு அறை மாணவ நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்!//////

வாழ்க உங்கள் முயற்சிகள். வளரட்டும் உங்கள் பதிவுகள்!

கோவை விமல்(vimal) said...
This comment has been removed by the author.
கோவை விமல்(vimal) said...

நன்று வாத்தியரே,

பாலா அண்ணே, மன்னிக்கவும் வேலை பலு காரணமா என்னால உங்கள் வலை பக்கம் வர முடியல... என் வகுப்பறைக்கு கூட வருவது குறைக்கிறது. (தேன் கூடு-னு சொன்னது என் கூட்டை இல்லையே)

Rajagopal said...

ஊருக்கு வரும் பொழுது வாங்கி படிக்க வேண்டும். பரிந்துரைத்தற்கு நன்றி.

அன்புடன்
இராசகோபால்

குட்டிபிசாசு said...

தகவலுக்கு நன்றி!

ஒரு கூடுதல் கேள்வி!!
பிறந்தநாள் அன்று கிருத்திகையும் அமாவாசையும் ஒன்றாக வந்தால் அதில் எதாவதி விஷேசம் உண்டா?

தமிழன் said...

http://www.hinduonnet.com/mag/2003/06/22/stories/2003062205010614.htm

//What are the ill effects of "Gulika" in the eighth house of a horoscope, and of Dasasandhi or Koottu Dasa? What are the remedies?

KHOUSIKAN

Mohanan, Kochi.

GULIKA is mentioned in Tamil texts. Some believe that Gulika and Maandi are the same, and others differ.//

that was a part from hindu paper
why didn't they clear the issue ?

ARUVAI BASKAR said...

அவசியம் வாங்கி படிக்கிறேன் ஐயா !

SP.VR. SUBBIAH said...

//////////கோவை விமல்(vimal) said...
நன்று வாத்தியரே,
பாலா அண்ணே, மன்னிக்கவும் வேலை பலு காரணமா என்னால உங்கள் வலை பக்கம் வர முடியல... என் வகுப்பறைக்கு கூட வருவது குறைக்கிறது. (தேன் கூடு-னு சொன்னது என் கூட்டை இல்லையே)////////

திருத்தங்கள்
பலு = பளு
தேன் கூடு-னு = தேன்கூடு என்று அல்லது தேன்கூடுன்னு

SP.VR. SUBBIAH said...

/////Rajagopal said...
ஊருக்கு வரும் பொழுது வாங்கி படிக்க வேண்டும். பரிந்துரைத்தற்கு நன்றி.
அன்புடன்
இராசகோபால்//////

நன்றி கோபால்

SP.VR. SUBBIAH said...

/////குட்டிபிசாசு said...
தகவலுக்கு நன்றி!
ஒரு கூடுதல் கேள்வி!!
பிறந்தநாள் அன்று கிருத்திகையும் அமாவாசையும் ஒன்றாக வந்தால் அதில் எதாவதி விஷேசம் உண்டா?//////

நீங்கள் சொல்வது கிருத்திகை நட்சத்திரத்தைத்தானே?
அதில் ஒன்றும் விஷேசம் இல்லை!

SP.VR. SUBBIAH said...

/////தமிழன் said...
http://www.hinduonnet.com/mag/2003/06/22/stories/2003062205010614.htm
//What are the ill effects of "Gulika" in the eighth house of a horoscope, and of Dasasandhi or Koottu Dasa? What are the remedies?
KHOUSIKAN
Mohanan, Kochi.
GULIKA is mentioned in Tamil texts. Some believe that Gulika and Maandi are the same, and others differ.//
that was a part from hindu paper
why didn't they clear the issue ?/////

எனக்குத் தெரியவில்லை சாமி!
பொதுவாக கிரக & உப கிரகத் துன்பங்களுக்குப் பரிகாரம் பிரார்த்தனை மட்டுமே! வேறு விதமான remedy எல்லாம் கிடையாது

SP.VR. SUBBIAH said...

ARUVAI BASKAR said...
அவசியம் வாங்கி படிக்கிறேன் ஐயா !

நன்றி நண்பரே!

குட்டிபிசாசு said...

சுப்பைய்யா ஐயா,

நான் கூறியது நட்சத்திரம் தான். பதிலுக்கு மிக்க நன்றி!

கோவை விமல்(vimal) said...

////////////கோவை விமல்(vimal) said...
நன்று வாத்தியரே,
பாலா அண்ணே, மன்னிக்கவும் வேலை பலு காரணமா என்னால உங்கள் வலை பக்கம் வர முடியல... என் வகுப்பறைக்கு கூட வருவது குறைக்கிறது. (தேன் கூடு-னு சொன்னது என் கூட்டை இல்லையே)////////

திருத்தங்கள்
பலு = பளு
தேன் கூடு-னு = தேன்கூடு என்று அல்லது தேன்கூடுன்னு//


திருத்தங்களுக்கு நன்றி வாத்தியரே, பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன். என்ன நேரம் கிடைப்பதே சிறிது, அதில் இந்த தமிழ் தட்டச்சு பாடாய் படுத்துகிறது. இருந்தாலும் உங்களுக்கு வேண்டியே இந்த முயற்சி.

வாத்தியரே. அம்மாவாசை என்று குட்டிபிசாசு சொல்லும் பொழுது ஒன்று கேட்க தோணுகிறது. அம்மாவாசை தினத்தில் பிறந்த பிள்ளைகள் கெட்டு போய்டுவார்கள் என்று ஒரு பேச்சு உள்ளதே... அது ஜாதகபடி ஏதேனும் விளக்கம் உள்ளதா?

VIKNESHWARAN said...

நல்ல தகவல் ஐயா... கண்டிப்பாக தேடிப் பிடிக்கிறேன், படிக்கிறேன் புத்தகத்தை... நன்றி

தமாம் பாலா (dammam bala) said...

விமல் தம்பி,

இது வேறு தேன்கூடு. www.thenkoodu.com

இது கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் மிர்ரர் சைட் போல. சாகர் என்ற பெயரில் எழுதிய திரு.கல்யாண் என்பவர் (அகால மரணம் அடைந்துவிட்டார், பாவம்) இதை தொடங்கினார் என்று படித்திருக்கிறேன்.

முதலில் தேன்கூடு வாயிலாகவே நம் வாத்தியார் அவர்களது பதிவுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பே உங்கள் அனைவரின் அன்பும், அறிமுகமும்.

Sumathi. said...

ஹலோ வாத்தியாரய்யா,

இன்னொமொரு சந்தேகம், அதாவது நீங்கள் மாந்தி என்று குறிப்பிட்டுள்ளீர்கள், நான் திரு. கரூர்.தியாகராஜன் அவர்களின் ஜாதக குறிப்புப் படி எனக்கு //வருஷ ஜாதகத்தில் மாந்தி லக்னத்தில் உள்ளது//என்று குறிப்பிட்டுள்ளதே, அப்படி என்றால் என்ன? விளக்கவும். மேலும், இது அனுகூலமான ஸ்தானம் என்றும் உள்ளதே, அதுவும் சரிதானா? ஐய்யா தெளிவான விளக்கம் கூற முடியுமா?

அப்பறம் எனக்கு 11ம் வீடு காலியாக உள்ளதே என்ன செய்யலாம்?(ஹா ஹா ஹா... )

கோவை விமல்(vimal) said...

//தமாம் பாலா (dammam bala) said...
விமல் தம்பி,

இது வேறு தேன்கூடு. www.thenkoodu.com

இது கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் மிர்ரர் சைட் போல. சாகர் என்ற பெயரில் எழுதிய திரு.கல்யாண் என்பவர் (அகால மரணம் அடைந்துவிட்டார், பாவம்) இதை தொடங்கினார் என்று படித்திருக்கிறேன்.

முதலில் தேன்கூடு வாயிலாகவே நம் வாத்தியார் அவர்களது பதிவுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பே உங்கள் அனைவரின் அன்பும், அறிமுகமும்.//

சுட்டிக்கும் தகவலுக்கும் நன்றி பாலா அண்ணே. நானும் உங்கள் வலை பூவின் சுட்டி எனது வலை தளத்தில் இட அனுமதி வேண்டுகிறேன்.

எங்கள் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு பாலா அண்ணே.

சும்மா கவலபடாம கலகுங்க

கோவை விமல்(vimal) said...

// Sumathi. said...
அப்பறம் எனக்கு 11ம் வீடு காலியாக உள்ளதே என்ன செய்யலாம்?(ஹா ஹா ஹா... )//


மேடம் வாடகை எவ்வளவு சொன்ன (பர்ஸ பொறுத்து) அட்வான்ஸ் இல்லாம வேன குடி வந்துகிறேன். என்ன சொல்றீங்க?

(நான் இப்பவே பெங்களூர்ல வீடு பார்க்க தொடங்கிட்டேன், அடுத்த தாவல்காக)...:-))

Sumathi. said...

ஹாய் விமல்,

//மேடம் வாடகை எவ்வளவு சொன்ன (பர்ஸ பொறுத்து) அட்வான்ஸ் இல்லாம வேன குடி வந்துகிறேன். என்ன சொல்றீங்க?
(நான் இப்பவே பெங்களூர்ல வீடு பார்க்க தொடங்கிட்டேன், அடுத்த தாவல்காக)...:-)//

வாடகையா?ஹா ஹா ஹா ஹா ஹா... நான் ஏற்கெனவே சென்னைல இருக்கற என் வீட்டுலருந்து வர்ற வாடகையையே என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன், இதுல நீங்க வேற 11ம் வீட்டுக்கு என்ன வாடகைனு கேக்கறீங்களே, அய்யோ அய்யோஒ...

தமாம் பாலா (dammam bala) said...

வாத்தியார் எவ்வழியோ மாணவர் அவ்வழி! தாராளமாக சுட்டி கொடுங்கள். :))))
அப்படியே உங்கள் சகோதரர் திருமணத்துக்கு, தாமதமான நல்வாழ்த்துக்கள், விமல்.

கோவை விமல்(vimal) said...

///ஹாய் விமல்,

வாடகையா?ஹா ஹா ஹா ஹா ஹா... நான் ஏற்கெனவே சென்னைல இருக்கற என் வீட்டுலருந்து வர்ற வாடகையையே என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன், இதுல நீங்க வேற 11ம் வீட்டுக்கு என்ன வாடகைனு கேக்கறீங்களே, அய்யோ அய்யோஒ...///

மேடம் நான் வேனா ஒரு யோசனை சொல்லட்டுமா?

அதிகப்படியான பணம் வரும் பொழுது என்ன செய்வது என்று அறியாமல் இருப்பதற்கு பதில் அதில் சிறிதேனும் நல்வழி தொண்டாற்ரும் அமைப்புக்கு தரலாம். (எ.கா: அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள்).

சட்டென்று நீங்கள் நினைக்கலாம்... என்னடா யோசனை சொல்வதற்கு மட்டும் நிறைய பேர் வருகிறார்கள், மத்தவங்க யாரும் செயல் படுத்த மாட்டாங்க என்று. என்னைப்பொருத்தவரை பெரியதாக செய்யவில்லை எனிலும் சிறிய துரும்பை போட்டுருகிறேன்.

கோவை விமல்(vimal) said...

//தமாம் பாலா (dammam bala) said...
வாத்தியார் எவ்வழியோ மாணவர் அவ்வழி! தாராளமாக சுட்டி கொடுங்கள். :))))
அப்படியே உங்கள் சகோதரர் திருமணத்துக்கு, தாமதமான நல்வாழ்த்துக்கள், விமல்.//

உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணே,

சுட்டி கொடுத்துவிட்டேன்.

SP.VR. SUBBIAH said...

//////குட்டிபிசாசு said...
சுப்பைய்யா ஐயா,
நான் கூறியது நட்சத்திரம் தான். பதிலுக்கு மிக்க நன்றி!/////

நன்றாகப் புரிந்தால் சரி!

SP.VR. SUBBIAH said...

கோவை விமல்(vimal) said...
வாத்தியரே. அமாவாசை என்று குட்டிபிசாசு சொல்லும் பொழுது ஒன்று கேட்க தோணுகிறது. அமாவாசை தினத்தில் பிறந்த பிள்ளைகள் கெட்டு போய்டுவார்கள் என்று ஒரு பேச்சு உள்ளதே... அது ஜாதகப்படி ஏதேனும் விளக்கம் உள்ளதா?///////

அதெல்லாம் எப்படிக் கெட்டுப் போவார்கள்? வகுப்பறை வாத்தியாரும் அமாவாசையன்று பிறந்தவர்தான்?
அவரென்ன கெட்டாபோய்விட்டார்?

SP.VR. SUBBIAH said...

////VIKNESHWARAN said...
நல்ல தகவல் ஐயா... கண்டிப்பாக தேடிப் பிடிக்கிறேன், படிக்கிறேன் புத்தகத்தை... நன்றி////

பதிப்பகத்திற்கு எழுதிக்கேட்டால் கிடைக்கும்!

SP.VR. SUBBIAH said...

//////தமாம் பாலா (dammam bala) said...
விமல் தம்பி,
இது வேறு தேன்கூடு. www.thenkoodu.com
இது கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் மிர்ரர் சைட் போல. சாகர் என்ற பெயரில் எழுதிய திரு.கல்யாண் என்பவர் (அகால மரணம் அடைந்துவிட்டார், பாவம்) இதை தொடங்கினார் என்று படித்திருக்கிறேன்.
முதலில் தேன்கூடு வாயிலாகவே நம் வாத்தியார் அவர்களது பதிவுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பே உங்கள் அனைவரின் அன்பும், அறிமுகமும்.//////

வரும்போது தேன்கூட்டின் வழியாக வந்ததால்தான் தேனாக இனிக்கிறீர்களா?

SP.VR. SUBBIAH said...

/////Sumathi. said...
ஹலோ வாத்தியாரய்யா,
இன்னொமொரு சந்தேகம், அதாவது நீங்கள் மாந்தி என்று குறிப்பிட்டுள்ளீர்கள், நான் திரு. கரூர்.தியாகராஜன் அவர்களின் ஜாதக குறிப்புப் படி எனக்கு //வருஷ ஜாதகத்தில் மாந்தி லக்னத்தில் உள்ளது//என்று குறிப்பிட்டுள்ளதே, அப்படி என்றால் என்ன? விளக்கவும். மேலும், இது அனுகூலமான ஸ்தானம் என்றும் உள்ளதே, அதுவும் சரிதானா? ஐய்யா தெளிவான விளக்கம் கூற முடியுமா?//////

வருஷ ஜாதகம் என்பது ஒவ்வொரு ஆண்டும் முதல்த் தேதியை வைத்துச் சொல்லப்படுவது. அதற்கும் Birth Chartற்கும் தொடர்பு இல்லை!

//////அப்பறம் எனக்கு 11ம் வீடு காலியாக உள்ளதே என்ன செய்யலாம்?(ஹா ஹா ஹா... )//////

ஒரு லக்கினம், ஒன்பது கிரகம், ஆக மொத்தம் 10 பேர்கள். தனித்தனியாக இருந்தால்கூட இரண்டு வீடுகள் காலியாகத்தான் இருக்கும் சகோதரி. காலியாக இருப்பது பிரச்சினை இல்லை. அந்த வீட்டுக்காரன் எங்காவதுபோய் ஒளிந்து கொள்ளக்கூடாது அவ்வளவுதான். அதாவது 6, 8 12ஆம் வீடுகளில் போய் உட்கார்ந்துகொண்டுவிடக்கூடாது!

SP.VR. SUBBIAH said...

///////கோவை விமல்(vimal) said...
சுட்டிக்கும் தகவலுக்கும் நன்றி பாலா அண்ணே. நானும் உங்கள் வலைப் பூவின் சுட்டியை எனது வலைத் தளத்தில் இட அனுமதி வேண்டுகிறேன்.//////

உங்கள் வலைப்பூவா? முதலில் யு.ஆர் எல் ஐக் கொடுங்கள்!

///// எங்கள் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு பாலா அண்ணே.
சும்மா கவலபடாம கலகுங்க /////
= சும்மா கவலைப்படாமல் கலக்குங்கள்

SP.VR. SUBBIAH said...

/////கோவை விமல்(vimal) said...
// Sumathi. said...
அப்பறம் எனக்கு 11ம் வீடு காலியாக உள்ளதே என்ன செய்யலாம்?(ஹா ஹா ஹா... )//
மேடம் வாடகை எவ்வளவு என்று சொன்னால் (பர்ஸில் உள்ள பணத்தைப் பொறுத்து) அட்வான்ஸ் இல்லாமல் வேண்டுமென்றால் குடி வந்துவிடுகிறேன். என்ன சொல்றீங்க?/////

முகேஷ் அம்பானியே நினைத்தால் கூட அங்கே நுழையக்கூட முடியாது!
பில் கேட்ஸின் மொத்த சொத்தையும் எழுதிக்கொடுத்தால்கூட அங்கே இடம் கிடைக்காது!:-))))

SP.VR. SUBBIAH said...

////////Sumathi. said...
ஹாய் விமல்,
//மேடம் வாடகை எவ்வளவு சொன்ன (பர்ஸ பொறுத்து) அட்வான்ஸ் இல்லாம வேன குடி வந்துகிறேன். என்ன சொல்றீங்க?
(நான் இப்பவே பெங்களூர்ல வீடு பார்க்க தொடங்கிட்டேன், அடுத்த தாவல்காக)...:-)//
வாடகையா?ஹா ஹா ஹா ஹா ஹா... நான் ஏற்கெனவே சென்னைல இருக்கற என் வீட்டுலருந்து வர்ற வாடகையையே என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன், இதுல நீங்க வேற 11ம் வீட்டுக்கு என்ன வாடகைனு கேக்கறீங்களே, அய்யோ அய்யோஒ...//////

சேமித்துவையுங்கள் சகோதரி! வயதான காலத்தில் அது உதவும்!

SP.VR. SUBBIAH said...

//////தமாம் பாலா (dammam bala) said...
வாத்தியார் எவ்வழியோ மாணவர் அவ்வழி! தாராளமாக சுட்டி கொடுங்கள். :))))
அப்படியே உங்கள் சகோதரர் திருமணத்துக்கு, தாமதமான நல்வாழ்த்துக்கள், விமல்.//////

அட்டா, வாத்தியார் வேலைக்கே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறீர்களே பாலா!
படிக்கும் காலத்திலும் இப்படி இருந்தீர்களா/:-)))

SP.VR. SUBBIAH said...

//////கோவை விமல்(vimal) said...
///ஹாய் விமல்,
வாடகையா?ஹா ஹா ஹா ஹா ஹா... நான் ஏற்கெனவே சென்னைல இருக்கற என் வீட்டுலருந்து வர்ற வாடகையையே என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன், இதுல நீங்க வேற 11ம் வீட்டுக்கு என்ன வாடகைனு கேக்கறீங்களே, அய்யோ அய்யோஒ...///
மேடம் நான் வேனா ஒரு யோசனை சொல்லட்டுமா?
அதிகப்படியான பணம் வரும் பொழுது என்ன செய்வது என்று அறியாமல் இருப்பதற்கு பதில் அதில் சிறிதேனும் நல்வழி தொண்டாற்றும் அமைப்புக்கு தரலாம். (எ.கா: அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள்).
சட்டென்று நீங்கள் நினைக்கலாம்... என்னடா யோசனை சொல்வதற்கு மட்டும் நிறைய பேர் வருகிறார்கள், மத்தவங்க யாரும் செயல் படுத்த மாட்டாங்க என்று. என்னைப்பொருத்தவரை பெரியதாக செய்யவில்லை எனிலும் சிறிய துரும்பைப் போட்டு வருகிறேன்./////

பார்த்துப்போடுங்கள். எங்கே போடுகிறீர்கள் என்று சொல்லுங்கள். வாத்தியாரும் வந்து பார்க்க விரும்புகிறார்!

SP.VR. SUBBIAH said...

//////கோவை விமல்(vimal) said...
//தமாம் பாலா (dammam bala) said...
வாத்தியார் எவ்வழியோ மாணவர் அவ்வழி! தாராளமாக சுட்டி கொடுங்கள். :))))
அப்படியே உங்கள் சகோதரர் திருமணத்துக்கு, தாமதமான நல்வாழ்த்துக்கள், விமல்.//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணே,
சுட்டி கொடுத்துவிட்டேன்.//////

எங்கே சாமி கொடுத்திருக்கிறீர்? URL என்ன?

SP.VR. SUBBIAH said...

நேற்று முழுவதும், அகண்ட வரிசை இணைப்பில் கோளாறு. அதனால் பதிவைப் பார்த்து, வந்துள்ள பின்னூட்டங்களுக்கு உடனுக்கு உடன் பதில் அளிக்க இயலாமற்போய்விட்டது. வருந்துகிறேன்

தமாம் பாலா (dammam bala) said...

ஐயா, படிக்கும் காலத்தில் நான் வாத்தியார்களின் செல்ல பிள்ளை. அவர்கள் தந்த ஊக்கதாலும், அன்பாலும் வளர்ந்தவன். அதே ஆசிரியர்களோடு படித்த கல்லூரியிலேயே ஒரு ஆண்டு விரிவுரையாளனாகவும் பணியாற்றி, விதிவசத்தால் இடம் மாறிவிட்டேன். அடிப்படையில் விருப்பம் அதிலே, டோஸ்ட்மாஸ்டரிலும் அதே வேறு வடிவத்தில்.

விமல் தம்பியின் சுட்டி இங்கே
http://vimalind.blogspot.com/

SP.VR. SUBBIAH said...

//////Blogger தமாம் பாலா (dammam bala) said...
ஐயா, படிக்கும் காலத்தில் நான் வாத்தியார்களின் செல்ல பிள்ளை. அவர்கள் தந்த ஊக்கதாலும், அன்பாலும் வளர்ந்தவன். அதே ஆசிரியர்களோடு படித்த கல்லூரியிலேயே ஒரு ஆண்டு விரிவுரையாளனாகவும் பணியாற்றி, விதிவசத்தால் இடம் மாறிவிட்டேன். அடிப்படையில் விருப்பம் அதிலே, டோஸ்ட்மாஸ்டரிலும் அதே வேறு வடிவத்தில்.

விமல் தம்பியின் சுட்டி இங்கே
http://vimalind.blogspot.com/////

நன்றி பாலா! பார்த்துப் பின்னூட்டம் இட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டேன் பாலா!

தியாகராஜன் said...

ஐயா வணக்கம்.
புத்தகப் பரிந்துரைக்கு மிக்க நன்றி.
சைடு பாரிலிருக்கும் இரண்டு இணைப்புகளுக்கு பதிலாக கீழ்காணும் ஒரு சுட்டியை மட்டும் கொடுத்தால் போதும்.
http://rapidshare.com/files/141261438/Horoscope_Explorer_Pro_Retail.zip.html
ஒரு புண்ணியவான் முந்தைய இரண்டு சுட்டிகளிலிருந்தவைகளையும் இணைத்து இந்த வேலையை நமக்காக செய்தருளியிருக்கிறார்.

கோவை விமல்(vimal) said...

//SP.VR. SUBBIAH said...
அதெல்லாம் எப்படிக் கெட்டுப் போவார்கள்? வகுப்பறை வாத்தியாரும் அமாவாசையன்று பிறந்தவர்தான்?
அவரென்ன கெட்டாபோய்விட்டார்//

வாத்தியரே என்ன நீங்கள் அம்மாவாசை அன்று பிறந்தவரா, ஆச்சரியமான தகவல். நீங்கள் கெட்டு போய் விடவில்லை, கெட்டு போய் கொண்டு இருக்கும் இளைங்கர் சமுதாயத்தை நல் வழி படுத்த உங்களால் ஆனா சிறிய சேவையை செய்கிறீர்கள்.

கோவை விமல்(vimal) said...

// SP.VR. SUBBIAH said...
பார்த்துப்போடுங்கள். எங்கே போடுகிறீர்கள் என்று சொல்லுங்கள். வாத்தியாரும் வந்து பார்க்க விரும்புகிறார்!//

கண்டிப்பாக அறிய தருகிறேன், மின்னன்சல் வாய்யிலாக, ஏன் என்றால் போது இடத்தில் அதை கூறி எனது நன்மதிப்பை கூட்ட விரும்பவில்லை இதன் வாயிலாக வாத்தியரே.

இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிய கூடாது என்பார்களே அது போலத்தான்...

கோவை விமல்(vimal) said...

//SP.VR. SUBBIAH said...
//////Blogger தமாம் பாலா (dammam bala) said...
ஐயா, படிக்கும் காலத்தில் நான் வாத்தியார்களின் செல்ல பிள்ளை. அவர்கள் தந்த ஊக்கதாலும், அன்பாலும் வளர்ந்தவன். அதே ஆசிரியர்களோடு படித்த கல்லூரியிலேயே ஒரு ஆண்டு விரிவுரையாளனாகவும் பணியாற்றி, விதிவசத்தால் இடம் மாறிவிட்டேன். அடிப்படையில் விருப்பம் அதிலே, டோஸ்ட்மாஸ்டரிலும் அதே வேறு வடிவத்தில்.

விமல் தம்பியின் சுட்டி இங்கே
http://vimalind.blogspot.com/////

நன்றி பாலா! பார்த்துப் பின்னூட்டம் இட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டேன் பாலா!//

தமாதத்திற்கு மன்னிக்கவும், எனது URL கொடுததமைக்கு பாலா அண்ணனுக்கு நன்றி.

எனது வலை தளத்திற்கு வந்து என்னை வாழ்த்தியமைக்கு வாத்தியர்க்கு நன்றி, நானும் பதில் இட்டு விட்டேன்.

மதி said...

வணக்கம் ஐயா...

இந்த புத்தகம் படிக்க ஆர்வமாக உள்ளது ஆனால் நான் வெளியூரில் உள்ளதால் எப்படி வாங்குவது என்று தெரியவில்லை...

ஐயா, மின் அஞ்சல் முகவரி கொடுத்து உதவினால் பேருதவியாக இருக்கும்.


மிக்க நன்றி.

Srinath said...

Sir,
"ninth lord
and tenth lord exchanging their houses) அந்த யோகத்திற்குப் பெயர்
தர்மகர்மாதிபதி யோகம்."

My Lagna is Katagam
5th,10th lord - Sevvai
6th,9th lord - Guru

Guru is in 5th house (Viruchigam)
Sevvai is in 9th house (Meenam) along with Sun & Mercury

Could you explain
1) If I can say this as தர்மகர்மாதிபதி யோகம்? (Bcos of 6,9th / 5,10th lord parivarthanai
2) What is effect of Guru with his 5th paarvai on 9th house (Meenam)?

Thanks,
Srinath