ஒரு பெண்ணைப் பார்த்து அவள் அம்சமாக இருக்கிறாள் என்று சொன்னால்
அவள் எல்லா லட்சணங்களும் பொருந்திப் பார்க்க ரம்மியமாக இருக்கிறாள்
என்று பொருள். அது போல ஒரு வீட்டைப் பார்த்து வீடு அம்சமாக இருக்கிறது
என்று சொன்னாலும் அதுதான் அர்த்தம்!
அம்சம்' என்ற தமிழ்ச் சொல்லை இப்படி வகைப் படுத்தலாம்.
1. பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம் (aspect of an affair, idea,
plan etc)
2. எடுத்துக்கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை (a typical of noticeable)
3. ஒருவர் அல்லது ஒன்றின் அமைப்பிற்கு வேண்டிய அளவான லட்சணம். கச்சிதம்
(compactness)
ஒரு பெண்ணையும் அம்சமாக இருக்கிறாள் என்று சொல்லலாம் அல்லது ஒரு
வீட்டையும் அம்சமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
இதே அம்சம் ஜாதகத்திற்கும் உண்டு. அதுதான் நவாம்சம். அதாவது ஒன்பது
கிரகங்களின் அம்சம். கிரகங்களுக்கு ஏது அம்சம் (லட்சணம்) என்று குறுக்குக்
கேள்வி கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.
நவக்கிரகங்கள் அம்சமாக இருக்கின்றனவா அல்லது இல்லையா என்று தெரிந்து
கொள்ள உதவுவதுதான் நவாம்சச் சக்கரம்
உங்கள் மொழியில் புரியும்படியாகச் சொல்கிறேன். ஒரு நடிகையை அல்லது
நடிகரை ஒப்பனையுடன் (மேக்கப்புடன்) பார்க்கும்போது ஒருவிதமாகக் காட்சி
அளிப்பார்கள், அவர்களையே ஒப்பனை எதுவுமின்றிப் பார்க்கும் போது
உண்மையான தோற்றம் கிடைக்கும்.
ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலுவை ராசியில் பார்ப்பதற்கும், அம்சத்தில்
பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு மேற்கூறிய உதாரணத்தில் உள்ளது போலத்தான்
இருக்கும்.
ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம், அம்சத்தில் நீசம் பெற்று இருக்கலாம்
அல்லது ராசியில் நீசம் பெற்று இருக்கும் கிரகம் அம்சத்தில் ஆட்சி பலம் பெற்று
இருக்கலாம்
ஏன் இந்த வேறு பாடு? எப்படி இந்த வேறு பாடு என்பதுதான் இன்றைய பாடம்!
-------------------------------------------------------------------------------------
ராசிச் சக்கரத்திற்கும் (Rasi Chart) அம்ச சக்கரத்திற்கும் (Navamsa Chart) என்ன
வித்தியாசம்?
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம்
அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.
(It is magnified version of Rasi Chart)
ஒரு முழு வட்டம் வகுத்தல் 12 ராசிகள் = 360 வகுத்தல் 12 = 30 பாகைகள்
அல்லது 30 டிகிரிகள். ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை மீண்டும் ஒன்பது பாகங்களகப் பிரிக்கும் போது, 30 வகுத்தல் 9 = 3.33
பாகைகள் என்பது ஒரு பகுதி. இதைப்போல ஒவ்வொரு ராசியையும் பிரித்தால்
மொத்தம் 108 பகுதிகள் வரும். அதை அட்டவணையாகக் கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------------------------------------
அட்டவணை
இந்த அட்டவணை முக்கியமானது. உங்களுக்குச் சுலபமாக நவாம்சத்தைப்
புரிய வைப்பது.
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவரது ராசியில் மேஷத்தில் செவ்வாய் இருக்கிறது என்றால், அது அந்த
ராசியின் எந்தப் பாகையில் இருக்கிறதோ - அது அந்த ராசியின் எந்தப் பகுதியில்
வருகிறதோ, அதுதான் அந்தக் கிரகத்தின் அம்சம்.
என்ன தலை சுற்றுகிறதா? இந்தப் பகுதியை ஒரு தகவலுக்காக அல்லது
அறிதலுக்காக மட்டும் நீங்கள் படித்தால் போதும். பிரித்துக் கணக்கிட்டுப்
பார்க்கும் வேலையை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அதை இப்பொது உள்ள ஜாதகம் கணிக்கும் மென்பொருட்கள்
கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து கொடுத்துவிடும்.
அம்சத்தின் பயன்பாட்டை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால் போதும்!
ராசியில் ஒரு நிலையில் உள்ள கிரகம், அம்சத்தில் வேறுபட்ட - நல்ல அல்லது
தீய நிலையில் இருக்கலாம். அதுதான் அம்சத்தில் தெரிய வரும்!
வேறு பட்டால் என்ன ஆகும்? இது சரியான கேள்வி!
வேறுபட்டால் உரிய பலனை விட அதிகமான பலன் கிடைக்கலாம் அல்லது
உரியபலனும் கிடைக்காமல் போகலாம்.
உதாரணத்திற்கு நடிகர் ரஜினி அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள். அவருடைய ஜாதகத்தில் இரண்டில் சனி. இரண்டில் சனி என்றால்
கையில் காசு தங்காது என்பது பொதுப்பலன். சரி, ரஜினியிடம் இல்லாத காசா?
அல்லது சேர்ந்திருக்காத பணமா? அதற்குக் காரணம் இரண்டிற்கு உரிய
அதிபதி புதன் அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார் பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் ரஜினி அவர்களின் ஜாதகம்;
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆகவே ராசியை மட்டும் பார்த்துப் பலன் சொன்னால் 'தாவு' தீர்ந்துவிடும்.
அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பதை மனதில் வையுங்கள்.
ராசியில் கிரகங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அம்சத்திலும் வலுவாக
இல்லாவிட்டால், அவற்றிடமிருந்து எந்த நன்மைகளையும் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே கிரகங்களின் பலம் அறியவும், பலன்களை அறியவும் நவாம்சம்
முக்கியமாகும். மனைவியின் நிலையை அல்லது கணவனின் நிலையை அறிய
நவாம்சம் முக்கியமானதாகும்.
1. இராசி அதிபதியும் (Owner of the rasi) நவாம்ச அதிபதியும் இயற்கை
நட்பென்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்
2. இராசி அதிபதியும் (Owner of the rasi) நவாம்ச அதிபதியும் சமம் என்றால்
மத்தியமான பலன்கள் (average) கிடைக்கும்.
3. இராசி அதிபர் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருந்து,
அம்சத்தில் அவர் பகை வீட்டில் இருந்தால் மத்தியமான பலன்களையே
கொடுப்பார். பகை என்றால் சில அமைப்புக்களில் எதிர்மாறான பலன்களே
கிடைக்கும்.
4. ராசி ரீதியாகக் கெட்டிருக்கும் கிரகம், அம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில்
இருந்தால், கெட்ட பலன்கள் ஏற்படாமல் தடுத்துவிடுவார். அல்லது கெட்ட
பலன்களைத்தர மாட்டார்.
ராசி ரீதியாக ஒருவருக்கு அல்லது ஒருத்திக்குச் செவ்வாய் தோஷமிருந்து
அம்சத்தில் செவ்வாய் சுபக் கிரகத்தின் இடத்தில் இருந்தால் செவ்வாய்
தோஷம் இல்லை. ரத்தாகிவிடும். இந்த விதி எல்லாக் கிரகங்களுக்கும் பொருந்தும்!
ராசி ரீதியாக ஏழாம் வீட்டிற்கு உரியவன், அம்சத்தில் பாவி வீட்டில் இருந்தால்
அல்லது பகை வீட்டில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத்
திருமணமாவதில் தாமதம் அல்லது தடைகள் ஏற்படும். இதே விதி மற்ற
வீடுகளுக்கும் பொருந்தும். உதாரணம் குழந்தை பிறுப்பு, வேலை கிடைப்பது
போன்றவற்றையும் சொல்லலாம்!
-----------------------------------------------------------------------------------------
ராசியில் இருந்து அம்சம் எப்படிக் கணக்கிடப் படுகிறது, பலன்கள் எப்படிக்
கணக்கிடப்படுகிறது என்பதை உங்களுக்கு அறியத்தரும் முகமாக
ஒரு ஜாதகத்தைக் கொடுத்து விளக்கியுள்ளேன்.
முதலில் ஜாதகத்தைப் பாருங்கள். பிறகு விளக்கங்களைப் பாருங்கள்.
இந்த ஜாதகம் என் உறவினர் ஒருவரின் ஜாதகம். என் சேமிப்புக் கிடங்கில்
இருந்து எடுக்கப்பெற்றது.
(Print out taken on 27.1.2002. It is also mentioned in the bottom of the page.Please note it!)
------------------------------------------------------------------------------------------------------------
Horoscope:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரண ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை
இப்போது பார்ப்போம்.
1.
சூரியன்
116.5 பாகையில் கடக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 3ம் பாதம்
ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன்
அம்சம் = 116.5 கழித்தல் முன் சென்ற 3 ராசிகளின் 90 பாகைகள் போக மீதி
26.5 பாகைகள். 26.5 வகுத்தல் 3.33 = 8 வது பகுதி.
அதாவது கடகத்தின் 8வது பகுதி. கடகத்தின்
எட்டாவது பகுதி கும்பச் சனியின் வீடு (அட்டவணையில் உள்ளது. பார்க்கவும்)
சூரியன் ராசியில் தன் நட்பு வீடான கடகத்தின் வீட்டில் இருந்தாலும் அம்சத்தில்
பகை வீடான சனியின் வீட்டில் உள்ளார்.
ஐந்தாம் வீட்டிற்குரிய சூரியன் ராசியில் அந்த வீட்டிற்கு 12ல் மறைந்துவிட்டாலும்
அம்சத்தில் ஐந்தாம் வீட்டை அதன் 7ம் இடத்தில் இருந்து அற்புதமாகப் பார்ப்பதால்
ராசியில் இருந்த குறை போய்விடுகிறது. அதனால் ஐந்தாம் வீட்டிற்குரிய பலன்களை
எல்லாம் அவர் வழங்கிவிடுவார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
2.
சந்திரன்
46.1 பாகையில் ரிஷப ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 2ம் பாதம்
ராசி நாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன்
அம்சம் = 46.1 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக மீதி
16.1 பாகைகள் 16.1 வகுத்தல் 3.33 = ரிஷபத்தின் 5வது பகுதி.
சுக்கிரனின் பகுதியில் உள்ளார்.
(அட்டவணையில் உள்ளது)
ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் வலுவாக உள்ளார்.
அதுவும் உச்சம் பெற்றுள்ளார்.
இந்த ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் உச்சம் பெற்று, 2ம் இடத்தில்
அதுவும் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்று அட்டகாசமாக
அமர்ந்திருப்பதால் ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு உரிய பலன்களை வாரி வழங்கி உள்ளார்
ஜாதகருக்கு நல்ல அன்பான தாய். அதோடு சுக ஸ்தானத்திற்கு அதிபதியும் அவரே
என்பதால் ஜாதகருக்கு நல்ல வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஜாதகர் அமெரிக்காவில் மிகவும் வசதியாக சொந்த வீடு, வாகன வசதிகளோடு
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
---------------------------------------------------------------------------------------------------------------------
3.
செவ்வாய்
136.38 பாகையில் சிம்ம ராசியில்
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரம் 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சூரியன். நட்சத்திர நாதன் சுக்கிரன்.
அம்சம் = 136.38 கழித்தல் முன் சென்ற நான்கு ராசிகளின் 120 பாகைகள் போக
மீதி 16.38 பாகைகள்
16.38 வகுத்தல் 3.33 = சிம்மத்தின் 5வது பகுதி. சூரியனின் அம்சத்தில்
சிம்மத்திலேயே உள்ளார்.
அதாவது ராசியிலும், அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமும், திரிகோணமும்
பெற்றுள்ளார். மிகவும் சிறப்பான அமைப்பாகும் இது!
லக்கினாதிபதிக்கு இந்த அமைப்புக் கிடைப்பதற்குத் தவம் இருந்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய வரம். வாங்கிவந்த வரம் இது!
ஜாதகர் நல்ல தோற்றத்துடன், யாரையும் கவரும் விதமாகப் பொலிவுடன் இருப்பார்.
உண்மையைப் பேசுவார். அதுவும் அடித்துப் பேசுவார். ஆதென்டிக்காகப் பேசுவார்.
ஸ்டாண்டிங் பவர் உள்ளவர். உறவினர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் லக்கினாதிபதியின் இந்த நிலைப்பாடுதான் காரணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
4.
புதன்.
111.1 பாகையில் கடக ராசியில் 1 உள்ளது
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 2ம் பாதம்
அமர்ந்திருக்கும் கடக ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன்.
அம்சம் = 111.1 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக
மீதி 21.1 பாகைகள். 21.1 வகுத்தல் 3.33 = கடகத்தின் 7வது பகுதி.
சனியின் அம்சத்தில் மகரத்தில் உள்ளார்.
ராசியில் பகை வீட்டில். ஆனால் அம்சத்தில் சமம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்
ஜாதகரின் மூன்று, ஆறு ஆகிய தீங்கிடங்களுக்கு உரியவர். ஆறாம் இடத்திற்குப்
பதினொன்றில் அமர்ந்திருப்பதையும், அம்சத்தில் சமன் பெற்று இருப்பதையும்
கவனியுங்கள். ஜாதகருக்கு நோய், கடன் என்று இதுவரை எந்தத் தொல்லையும்
ஏற்பட்டதில்லை!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5.
குரு
322.19 பாகையில் கும்ப ராசியில் உள்ளது
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரட்டாதி 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சனி. நட்சத்திர நாதன் குரு (சுய நட்சத்திரம்)
அம்சம் = 322.19 கழித்தல் முன் சென்ற பத்து ராசிகளின் 300 பாகைகள் போக
மீதி 22.19 பாகைகள்.
22.19 வகுத்தல் 3.33 = கும்பத்தின் 7வது பகுதி. செவ்வாயின் அம்சத்தில் மேஷத்தில்
உள்ளார். ராசியில் இருக்கும் இடம் சம வீடு.ஆனால் அம்சத்தில் நட்பு வீடு.
பாக்கிய் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு திரிகோணம் பெற்று லக்கினத்தில்
நட்பு வீட்டில் இருப்பதைக் கவனிக்கவும். அவரே விரையத்திற்கு அதிபதியும்
ஆவார். ஜாதகருக்கு ஒரு விரையம் ஏற்பட்டாலும், தன் திரிகோண அமைப்பால்
அதைச் சரி செய்து விடும் வல்லமையுடன் பாக்கியாதிபதி குரு உள்ளார்.
லக்கினாதிபதியும், பாக்கியாதிபதியும் திரிகோண பதவி பெற்றுத் திகழ்கிறார்கள்.
ஜாதகத்தின் மேன்மைக்கு வேறு என்ன வேண்டும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
6.
சுக்கிரன்
93.43 பாகையில் கடக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூசம் 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சந்திரன். நட்சத்திரநாதன் சனி
அம்சம் = 93.43 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக
மீதி 3.43 பாகைகள்.
3.43 வகுத்தல் 3.33 = கடகத்தின் 2வது பகுதி சூரியனின் சிம்ம வீடு.
சுக்கிரனிற்கு இரண்டுமெ பகை வீடுகள்தான். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!
இரண்டு ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் நான்கிலும், அம்சத்தில் ஐந்திலும் அமர்ந்து
கேந்திர ஆதிபத்யம் பெற்றதால் நல்ல கணவரையும், குடும்பவாழ்க்கையையும்
ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.
அதோடு அம்சத்தில் லக்கினாதிபது செவ்வாயுடன் கூட்டணி போட்டுள்ளதால் குடும்ப
வாழ்க்கையில் பல ஏற்றங்களையும் கொடுத்துள்ளான். மேலும் கொடுப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
7.
சனி
80.12 பாகையில் சனி மிதுன ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் புனர்பூசம் 1ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் புதன். நட்சத்திர நாதன் குரு
அம்சம் = 80.12 கழித்தல் முன் சென்ற இரண்டு ராசிகளின் 60 பாகைகள் போக
மீதி 20.12 பாகைகள்
20.12 வகுத்தல் 3.33 = மிதுனத்தின் 7 வது பகுதி. அது செவ்வாயின் வீடான மேஷம்.
அட்டவணையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.ராசியில் நட்பு வீட்டில்
இருக்கும் சனி அம்சத்தில் நீசமாக இருக்கிறார் (மேஷத்தில் சனி நீசமல்லவா?)
என்ன பலன் சொல்வீர்கள்? 10 ஆம் இடத்திற்குரிய சனி ஆறாம் வீட்டிலும்,
அம்சத்தில் நீசமாகியிருந்தால் ஜாதகருக்கு வேலை எப்படிக் கிடைக்கும். ஜாதகர்
படித்திருந்தும் வேலை இல்லாமல் இருக்கிறார்.( ஜாதகர் பெண்மணி. அதனால்
தற்சமயம் வேலை இல்லையென்றால் பரவாயில்லை. கணவர் சம்பாத்தியம் போதாதா?)
ஜாதகருக்கு குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. குரு அம்சத்தில் சனியோடு
சேர்ந்திருப்பதால் ஜாதகருக்குக் கூடிய விரைவில் வேலை கிடைக்கும்!)
-------------------------------------------------------------------------------------------------------------------
8.
ராகு
232.33 பாகைகளில் விருச்சிக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் கேட்டை 2ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் புதன்.
அம்சம் = 232.33 கழித்தல் முன் சென்ற ஏழு ராசிகளின் 210 பாகைகள் போக
மீதி 22.33 பாகைகள்
22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சனியின் மகர அம்சம்
ராசியில் உச்சம் பெற்ற ராகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது.
அதனால் உச்சம் பெற்ற பலனை அவரால் ஜாதகருக்கு அளிக்க முடியவில்லை!
ஜாதகர் ராகு திசையில் சில ஆண்டுகள் சிரமங்களை அனுபவித்தார். அதை
நான் அறிவேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
9
கேது
52.33 பாகைகளில் ரிஷப ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 4ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன்.
அம்சம் = 52.33 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக
மீதி 22.33 பாகைகள்
22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சந்திரனின் அம்சம்.
கடகம். ராசியில் நீசம் பெற்ற கேகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது.
நீசத்தன்மை குறைந்துள்ளது.
நாலில் உள்ள கேது அவ்வப்போது சில சுகக் கேடுகளை ஏற்படுத்தும்.
ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. (ஜாதகர் சொல்லக் கேள்வி)
------------------------------------------------------------------------------------------------------------------------------
10.
லக்கினம்.
3.12 பாகைகளில் மேஷ ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் அஸ்விணி 1ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசி நாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் கேது.
இங்கே கழிக்கும் வேலை இல்லை. ராசியின் முதல் அம்சமான செவ்வாயின் அம்சம்
ராசியும் அம்சமும் ஒரே இடம். ஆட்சி பலத்துடன், வர்கோத்தம பலனும் பெற்றுள்ளார்.
ஜாதகத்தின் லக்கினம் படு ஸ்திரம் (very strong) ஜாதகத்தின் மேன்மைக்கு
முதன்மையான காரணம் இதுதான்!
------------------------------------------------------------------------------------------
ராசியிலிருந்து அம்சம் எப்படிப் பிரிபடுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக
விவரித்து எழுதியுள்ளேன். அதோடு பலன் அறிவது எப்படி என்றும் குறிப்பாகச்
சொல்லியுள்ளேன்.
இன்றைய பாடம் அனைவருக்கும் புரியும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன்!
கடைசிப் பெஞ்சுக் கண்மணிகள் என்ன சொல்வார்களோ தெரியவில்லை!
பார்க்கலாம்!
இதற்கு முன் நடத்திய பாடத்தின் (9ஆம் வீடு) மீதிப்பகுதி அடுத்த வகுப்பில் நடத்தப்படும்.
ஒரு மாறுதலுக்காக நடுவில் இதை - அதாவது அம்சத்தின் சிறப்பைப் பாடமாக நடத்தினேன்
உங்கள் புரிதலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்
நன்றி,
வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அம்சம் அறிந்தால் வம்சம் கூறலாம் என்று ஒரு பேச்சு வழக்கு எங்கள் ஊர் பக்கம் உள்ளது
ReplyDelete/////புருனோ Bruno said...
ReplyDeleteஅம்சம் அறிந்தால் வம்சம் கூறலாம் என்று ஒரு பேச்சு வழக்கு எங்கள் ஊர் பக்கம் உள்ளது////
நீங்கள்தான் இன்று பின்னூட்டக் கணக்கைத் துவக்கி வைத்துள்ளீர்கள் டாக்டர். அதற்கு முதலில் நன்றி!
அம்சம் நன்றாக இருந்தால் வம்சமும் நன்றாக இருக்கும். உங்கள் ஊர் பேச்சு வழக்கு உண்மையானதுதான்!
Dear Sir,
ReplyDeleteI can see your real interest in breaking the information into pieces for us to understand. I salute your effort.
coming back to the lesson, I read couple of times...Still I think I have not got throughly. I think, it will take some time and more reading.
-P.Shankar
I am not able to download the software what Mr.Thiyagarajan recommended. Any suggestions.
ReplyDelete-Shankar
Dear Sir,
ReplyDeleteI like to thank you for your effort on Horoscope lesson. I am Interested in Horoscope Learning, but I am doing a Window shopping. I mean to say that I not fully taking your lesson in mind, because it requires lots of patience and deep knowledge. Currently I am reading your lessons and taking the various calculations and trying to compare what you are saying with my horoscope and forget it on the same day. I like to say that I may learn fully in future, that day yours lessons may be an mini encyclopedia of Horoscope and I may able to compare the horoscope lesson with my experience during the time. Still I am young to take more effort to check your lesson with others horoscope and I know, if I started learning with full intake then I am sure my concentration may affect on my regular work because it is an interesting to learn . Keep writing, your writings will be a good source of Horoscope learners for ever and it will last for ever.
Thanks
ஒரு சிறு விளக்கம் தேவை ஐயா, இலக்கன ஜாதகம் சரியாக இருந்தாலும், நவாம்சம் ஒவ்வோரு சாப்ட்வேருக்கும், ஜோதிடர் கணித்தர்க்கும் வெறுபடுகின்றதே ஏன்?
ReplyDeleteஎன்னிடன் மூன்று ஜோதிடம் கணிக்கும் சாப்ட்வேர் உள்ளது. என் ஜாதகத்தினை இரண்டு ஜோதிடர்கள் கணித்து எழுதியுள்ளனர்.
ஜாதகத்தில் நான் கண்ட மிகவும் கடினமான பகுதி இந்த அம்சம். இன்னும் இந்த பகுதி எனக்கு சிக்கலானதாகத்தான் இருக்கின்றது. உங்கள் பதிவு விளக்கமாக இருக்கின்றது. நன்றி வாத்தியார் அவர்களே.
ReplyDelete//////ஒரு சிறு விளக்கம் தேவை ஐயா, இலக்கன ஜாதகம் சரியாக இருந்தாலும், நவாம்சம் ஒவ்வோரு சாப்ட்வேருக்கும், ஜோதிடர் கணித்தர்க்கும் வெறுபடுகின்றதே ஏன்?
ReplyDeleteஎன்னிடன் மூன்று ஜோதிடம் கணிக்கும் சாப்ட்வேர் உள்ளது. என் ஜாதகத்தினை இரண்டு ஜோதிடர்கள் கணித்து எழுதியுள்ளனர்.//////
வாக்கியத்துக்கும் திருக்கணிதத்துக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு இந்த அம்சத்தில் இருக்கின்றது. எது சிறந்தது வாத்தியாரே?
ஒரு முறை தான் படித்தேன். அவ்வளவாகப் புரியவில்லை. திரும்பிப் படித்துப் பார்க்க வேண்டும். இன்னும் உதாரணங்கள் கொடுத்து இருந்தால் (பதிவு பெரிசாப் போயிடும்:-( என்னைப் போன்ற மக்கு ப்ளாஸ்திரிகளுக்குச் சட்னு புரியுமோ?
ReplyDeleteலக்னம் என்பது நவாம்சத்தில் வேறுபட இயலுமா? (அதாவது ராசிச் சக்கரத்தில் மிதுனத்திலும் நவாம்சத்தில் மகரத்திலும் இருக்கிறது என்றால்).
///////hotcat said...
ReplyDeleteDear Sir,
I can see your real interest in breaking the information into pieces for us to understand. I salute your effort.
coming back to the lesson, I read couple of times...Still I think I have not got throughly. I think, it will take some time and more reading.
-P.Shankar//////
நான் ஜோதிடம் பயின்ற காலத்தில் ஒரு குறுக்கு வழி வைத்திருந்தேன். படிக்கும் பாடங்களில் இருந்து நோட்ஸ் எடுத்து வைத்துக்கொள்வேன். அதைத் திருப்பத்திரும்பப் படித்து மனதில் உருவேற்றுவேன்.
மனதில் வைத்தது மறக்காது. அதற்கென்று நேரம் செலவழிக்க வேண்டும் இல்லையென்றால் ஒன்றும் நடக்காது.
படித்தது அவ்வப்போது மறந்து கொண்டே இருக்கும்.அதைத்தான் ஒளவையர்' வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்' என்றார்.
hotcat said...
ReplyDeleteI am not able to download the software what Mr.Thiyagarajan recommended. Any suggestions.
-Shankar///
தரவிறக்கம் செய்வதற்கான 2 சுட்டிகளும் எனது வலைப்பூவின் பக்க அட்டையில் உள்ளது. அவை இரண்டையும் ஒரு சேரப் பயன் படுத்துங்கள். பிரச்சினை இருக்காது!
//////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDeleteDear Sir,
I like to thank you for your effort on Horoscope lesson. I am Interested in Horoscope Learning, but I am doing a Window shopping. I mean to say that I not fully taking your lesson in mind, because it requires lots of patience and deep knowledge. Currently I am reading your lessons and taking the various calculations and trying to compare what you are saying with my horoscope and forget it on the same day. I like to say that I may learn fully in future, that day yours lessons may be an mini encyclopedia of Horoscope and I may able to compare the horoscope lesson with my experience during the time. Still I am young to take more effort to check your lesson with others horoscope and I know, if I started learning with full intake then I am sure my concentration may affect on my regular work because it is an interesting to learn . Keep writing, your writings will be a good source of Horoscope learners for ever and it will last for ever.
Thanks/////
window shopping will help only to buy snacks in astrology:-)))
Involvement and dedication in reading only will help you to learn astrology!
//////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDeleteஒரு சிறு விளக்கம் தேவை ஐயா, இலக்கன ஜாதகம் சரியாக இருந்தாலும், நவாம்சம் ஒவ்வோரு சாப்ட்வேருக்கும், ஜோதிடர் கணித்தர்க்கும் வெறுபடுகின்றதே ஏன்?
என்னிடன் மூன்று ஜோதிடம் கணிக்கும் சாப்ட்வேர் உள்ளது. என் ஜாதகத்தினை இரண்டு ஜோதிடர்கள் கணித்து எழுதியுள்ளனர்./////
திருக்கணிதத்தை (indian ephemeris)அடிப்படையாகக் கொண்டவை சரியாக இருக்கும்.
அது முழுக்க கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது.
//////கல்கிதாசன் said...
ReplyDeleteஜாதகத்தில் நான் கண்ட மிகவும் கடினமான பகுதி இந்த அம்சம். இன்னும் இந்த பகுதி எனக்கு சிக்கலானதாகத்தான் இருக்கின்றது. உங்கள் பதிவு விளக்கமாக இருக்கின்றது. நன்றி வாத்தியார் அவர்களே./////
மீண்டும் மீண்டும் படித்தால் தெளிவாகிவிடும். அது அவ்வளவு சுலபமானது.
நடிகையின் ஒப்பனைத் தோற்றத்தை அதற்காகத்தான் உதாரணமாகக் கொடுத்தேன்.
உங்கள் ராசியை ஒப்பனையின்றிப் பார்க்க நவாம்சம் உதவும்
In short, navamsa is the magnified version of the rasi chart in a horoscope!
கல்கிதாசன் said...
ReplyDelete//////ஒரு சிறு விளக்கம் தேவை ஐயா, இலக்கன ஜாதகம் சரியாக இருந்தாலும், நவாம்சம் ஒவ்வோரு சாப்ட்வேருக்கும், ஜோதிடர் கணித்தர்க்கும் வெறுபடுகின்றதே ஏன்?
என்னிடன் மூன்று ஜோதிடம் கணிக்கும் சாப்ட்வேர் உள்ளது. என் ஜாதகத்தினை இரண்டு ஜோதிடர்கள் கணித்து எழுதியுள்ளனர்.//////
வாக்கியத்துக்கும் திருக்கணிதத்துக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு இந்த அம்சத்தில் இருக்கின்றது. எது சிறந்தது வாத்தியாரே?////
திருக்கணிதம் சிறந்தது. திருக்கணிதத்தில் வருடத்திற்குக் கணக்கில் 365.25 நாட்கள். வாக்கியத்தில் கணக்கு
360 நாட்கள். ஆனால் வாக்கியத்தில் எல்லாக் கணக்குகளுக்குமே 360 நாட்கள் என்பதால் அதில் தவறில்லை என்று வாதிடுபவர்களும் உண்டு (12 மதங்கள் x 30 நாட்கள் என்ற கணக்கு. தசா புக்தி முழுவதற்கும் அவர்களுடைய கணக்கு அதுதான்)
//////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteஒரு முறை தான் படித்தேன். அவ்வளவாகப் புரியவில்லை. திரும்பிப் படித்துப் பார்க்க வேண்டும். இன்னும் உதாரணங்கள் கொடுத்து இருந்தால் (பதிவு பெரிசாப் போயிடும்:-
(என்னைப் போன்ற மக்கு ப்ளாஸ்திரிகளுக்குச் சட்னு புரியுமோ?)
நான் எழுதிய பதிவுகளிலேயே மிகவும் அதிக நேரம் செலவழித்து விவரமாக எழுதிய பதிவு இதுதான். மீண்டும் மீண்டும் படியுங்கள். முக்கியமான இடங்கள் நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் வசப்படும்!
//////லக்னம் என்பது நவாம்சத்தில் வேறுபட இயலுமா? (அதாவது ராசிச் சக்கரத்தில் மிதுனத்திலும் நவாம்சத்தில் மகரத்திலும் இருக்கிறது என்றால்)./////
லக்கினம் என்பது ஒன்றுதான் அது ராசியில் இருப்பது மட்டுமே! அம்சத்தில் அதன் சாரம் தெரியும்.
அம்சத்திலும் அதே லக்கினம் என்றால் ஜாதகன் அதிர்ஷ்டசாலி. அது வர்கோத்தமம் என்று அழைக்கப்படும்!
வணக்கம் ஐயா
ReplyDeleteராசியில் நீசமான கிரகம் அம்சத்திலும் நீசமானால் பலன் என்ன ?
நீசவர்க்கோத்தமம் நல்ல பலன் தரும் என்பது உண்மையா ?
( நான் கடகலக்கின சாதகன் 10 இல் சனி நீச வர்க்கோத்தமம் , இன்றுவரை நல்ல தொழில் இல்லை , வயது 40 )
மிகவும் எதிர்பார்த்த விசயம்...
ReplyDeleteநன்கு படித்துவிட்டு இரவில் சந்தேகம் கேட்கிறேன் ஐயா...
//////தமிழன் said...
ReplyDeleteவணக்கம் ஐயா
ராசியில் நீசமான கிரகம் அம்சத்திலும் நீசமானால் பலன் என்ன ?
நீசவர்க்கோத்தமம் நல்ல பலன் தரும் என்பது உண்மையா ?/////
நான் அறிந்தவரை அப்படியில்லை. நீசம் நீசம்தான். அதற்குப் பலன் இல்லை!
( நான் கடகலக்கின சாதகன் 10 இல் சனி நீச வர்க்கோத்தமம் , இன்றுவரை நல்ல தொழில் இல்லை , வயது 40 )////
விவரங்கள் போதுமானதல்ல! பத்தாம் அதிபன் எங்கிருக்கிறான். பத்தில் வேறு யார் இருக்கிறார்கள். யார் யார் பத்தாம் இடத்தைப் பார்க்கிறார்கள். என்ன தசா புத்தி நடைபெறுகிறது. லக்கினத்தின், லக்கின அதிபதியின் நிலைப்பாடு போன்ற அனைத்து விவரங்களும் இருந்தால்தான் இதற்குப் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்!
/////கூடுதுறை said...
ReplyDeleteமிகவும் எதிர்பார்த்த விசயம்...
நன்கு படித்துவிட்டு இரவில் சந்தேகம் கேட்கிறேன் ஐயா...///
காதைக் கொடுங்கள். ஒரு தகவல் சொல்கிறேன். பதிவே உங்களுக்காகத்தான்!
வாத்தியரே, கொன்ச்சம் கஸ்டமனா பாடம் தான், இப்போது திரும்ப படிக்க நேரமில்லை, முழுவதும் படித்து அறிந்தபின் கேள்வி கனைகளை தொடுகிறேன்...
ReplyDeleteஇன்றய பாடம் மிகநன்று, நல்ல தெளிவான விளக்கம்...சிரத்தை எடுத்து விளக்கியுள்ளிர்கள்...மிக்க நன்றி.
ReplyDelete//////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteவாத்தியரே, கொஞ்சம் கஷ்டமான பாடம் தான், இப்போது திரும்பப் படிக்க நேரமில்லை, முழுவதும் படித்து அறிந்தபின் கேள்விக் கனைகளைத் தொடுக்கிறேன்...//////
இந்தப் பாடத்தில் கனைகளுக்கு வேலை இருக்காது என்று நினைக்கிறேன். முயன்று பாருங்கள்!
/////மதி said...
ReplyDeleteஇன்றைய பாடம் மிகநன்று, நல்ல தெளிவான விளக்கம்...
சிரத்தை எடுத்து விளக்கியுள்ளிர்கள்...மிக்க நன்றி./////
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் மதி! நன்றி!
வாத்தியாரே,
ReplyDeleteகொஞ்சம் கஷ்டமான பாடம்தான்.. இருந்தாலும் இன்னொரு முறை படித்துப் பார்த்தால் புரியுமென்று நினைக்கிறேன்.. படிக்கிறேன்.. உதாரணத்திற்கு பயன்படுத்தி எழுதிப் பார்க்கிறேன்.
தொடரட்டும் நமது பாடம்..
////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே,
கொஞ்சம் கஷ்டமான பாடம்தான்.. இருந்தாலும் இன்னொரு முறை படித்துப் பார்த்தால் புரியுமென்று நினைக்கிறேன்.. படிக்கிறேன்.. உதாரணத்திற்கு பயன்படுத்தி எழுதிப் பார்க்கிறேன்.
தொடரட்டும் நமது பாடம்../////
ஆகா வாருங்கள் உனா தானா! முயன்று படித்தால் நன்றாகப் புரியும்.
படியுங்கள்!
மானிட்டரே அடிக்கடி மட்டம் போட்டால் எப்படி?
நீங்கள் வகுப்பிற்கு வந்தால் தெம்பாக இருக்குமல்லவா?
ஒரு மாதமாக உங்களை வகுப்பறைப் பக்கம் காணவில்லையே?
முன்பு நடத்திய பாடங்களை எல்லாம் படித்தீர்களா?
/////அதாவது
ReplyDeleteபெற்றுள்ளார். மிகவும் சிறப்பான அமைப்பாகும் இது!
லக்கினாதிபதிக்கு இந்த அமைப்புக் கிடைப்பதற்குத் தவம் இருந்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய வரம். வாங்கிவந்த வரம் இது!/////
சின்ன சந்தேகம். இயற்கையில் தீய கிரகங்களான ராகு, கேது ராசியிலும், அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமும், திரிகோணமும் பெறுவது நல்லதா? கெட்டதா?. பலன் ராசிக்கு ராசி வேறுபடுமா?
//////Blogger கல்கிதாசன் said...
ReplyDelete/////அதாவது
பெற்றுள்ளார். மிகவும் சிறப்பான அமைப்பாகும் இது!
லக்கினாதிபதிக்கு இந்த அமைப்புக் கிடைப்பதற்குத் தவம் இருந்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய வரம். வாங்கிவந்த வரம் இது!/////
சின்ன சந்தேகம். இயற்கையில் தீய கிரகங்களான ராகு, கேது ராசியிலும், அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமும், திரிகோணமும் பெறுவது நல்லதா? கெட்டதா?. பலன் ராசிக்கு ராசி வேறுபடுமா?/////
கிரகங்கள் வர்கோத்தமம் பெறுவது பொதுவாக நல்லது
உச்சமடைந்திருந்தால் இரண்டு மடங்கு பலன். நீசமடைந்திருந்தால் பலன் இல்லை!
நட்பு வீட்டில் சராசரி பலன் உண்டு.
பகை வீடுகளில் பலன் இல்லை!
ராகு & கேதுவிற்கு விருச்சிகம் உச்சம், ரிஷபம் நீசம்
மேஷம், கடகம், சிம்மம், மகரம் பகையான இடங்கள்
மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் நட்பு வீடுகள்
இடத்திற்குத் தகுந்தாற்போல பலன்கள் மாறுபடும்!
ஆப்பிள் பழங்கள் குலுங்க
ReplyDeleteஆகாயத்தின் பின்னணியில்
ஆங்கே கார்மேகக்கூட்டம்!
ராசி சக்கரம் ஆப்பிள் என்றால்
நவாம்சம் ஆப்பிள் ஜூஸ் என்று
சிம்பாலிக் ஆக சொல்கிறீர்களா,ஐயா?
பேராசிரியரின்(ப்ரொஃபஸர் :)கல்லூரி
பாடத்துக்கும், எடுத்துக்காட்டு(கேஸ் ஸ்டடி)
விளக்கங்களுக்கும் மாணவர் சார்பாய் நன்றி!
//////தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteஆப்பிள் பழங்கள் குலுங்க
ஆகாயத்தின் பின்னணியில்
ஆங்கே கார்மேகக்கூட்டம்!
ராசி சக்கரம் ஆப்பிள் என்றால்
நவாம்சம் ஆப்பிள் ஜூஸ் என்று
சிம்பாலிக் ஆக சொல்கிறீர்களா,ஐயா?////
இதுவும் நன்றாகத்தான் உள்ளது. அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்
என்னை ஜூஸ் போடாமல் இருந்தால் போதும்:-))))
////பேராசிரியரின்(ப்ரொஃபஸர் :)கல்லூரி
பாடத்துக்கும், எடுத்துக்காட்டு(கேஸ் ஸ்டடி)
விளக்கங்களுக்கும் மாணவர் சார்பாய் நன்றி!//////
கஷ்டப்பட்டு கேஸ் ஸ்டடி எழுதியதற்கு நீங்கள் ஒருவர்தான் பாராட்டியுள்ளீர்கள்
சிலர் கண்டு கொள்ளவேயில்லை! கேஸ் ஸ்டடி எழுதுவது வீண் என்ற
நினைப்புத்தான் மிஞ்சுகிறது!:-((((((
Dear Sir
ReplyDeleteCase study is really awesome...Thats what I meant in my previous comment, about your ability to break information into pieces...
-Shankar
This comment has been removed by the author.
ReplyDelete/////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir
Case study is really awesome...Thats what I meant in my previous comment, about your ability to break information into pieces...
-Shankar////
Thanks Mr.Shankar
///மேஷம், கடகம், சிம்மம், மகரம் பகையான இடங்கள்
ReplyDeleteமிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் நட்பு வீடுகள்////
In the lesson 7, the chart you provided says, makara is friendly house for rahu and ketu while kumba is not??? The information which you have given is typo?
-shankar
//கஷ்டப்பட்டு கேஸ் ஸ்டடி எழுதியதற்கு நீங்கள் ஒருவர்தான் பாராட்டியுள்ளீர்கள்
ReplyDeleteசிலர் கண்டு கொள்ளவேயில்லை! கேஸ் ஸ்டடி எழுதுவது வீண் என்ற
நினைப்புத்தான் மிஞ்சுகிறது!:-( ////
Every lesson your writing is very much appreciable. Which one we say is less with other. we know your writing is always the best.
///window shopping will help only to buy snacks in astrology:-)))
Involvement and dedication in reading only will help you to learn astrology!///
///அதற்கென்று நேரம் செலவழிக்க வேண்டும் இல்லையென்றால் ஒன்றும் நடக்காது.
படித்தது அவ்வப்போது மறந்து கொண்டே இருக்கும்///
Sir, I am currently in a position to learn and keep learning to the next lesson without taking your lesson fully in mind(Time Constrain and I am not good in time management, like you.Busy people always find time. may be I am not busy). I require to learn the back lessons. That's why I said , I did window shopping. If learned fully then there is no need for to go back and look the back lesson.
I used the word, windows shopping in the contest of I need to put effort to learn horoscope at least in some extent.
Thanks Sir, keep writing. your writing can be used in two way,
1. learn fully for the good learners.
2. Read the lesson not fully but know what it is really and in which way it is used. Just like know how it works but not in professional way.
Either way it is worth. I believe.
Window shopping, is also welcomed because we know what is there in the world and When require we can get it without searching for it. It also increases the interest in what you like. It is like seeing the Guitar before learning. Learning the Guitar fully is next part. Without listing /seeing the guitar. how a person can make interest. So, I am listing to your lesson. Not learning. Learning I given it to Time.
There is no needs to be a good singer to listen to a good music. your lessons are like a good music. I may be a good listener to your lesson.
keep writing.
ஆஹா...நிறுத்தி,நிதானமாக திரும்பத்திரும்ப படிக்கவேண்டும்போல..கொஞ்சம் கடினமாக இருக்கிறது..
ReplyDelete//////hotcat said...
ReplyDelete///மேஷம், கடகம், சிம்மம், மகரம் பகையான இடங்கள்
மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் நட்பு வீடுகள்////
In the lesson 7, the chart you provided says, makara is friendly house for rahu
and ketu while kumba is not??? The information which you have given is typo?
-shankar
I have taken it from the panchangam. Makaram is inimical house for Rahu & Ketu
நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDelete//கஷ்டப்பட்டு கேஸ் ஸ்டடி எழுதியதற்கு நீங்கள் ஒருவர்தான் பாராட்டியுள்ளீர்கள்
சிலர் கண்டு கொள்ளவேயில்லை! கேஸ் ஸ்டடி எழுதுவது வீண் என்ற
நினைப்புத்தான் மிஞ்சுகிறது!:-( ////
Every lesson your writing is very much appreciable. Which one we say is less with other. we know your writing is always the best.
///window shopping will help only to buy snacks in astrology:-)))
Involvement and dedication in reading only will help you to learn astrology!///
///அதற்கென்று நேரம் செலவழிக்க வேண்டும் இல்லையென்றால் ஒன்றும் நடக்காது.
படித்தது அவ்வப்போது மறந்து கொண்டே இருக்கும்///
Sir, I am currently in a position to learn and keep learning to the next lesson without taking your lesson fully in mind(Time Constrain and I am not good in time management, like you.Busy people always find time. may be I am not busy). I require to learn the back lessons. That's why I said , I did window shopping. If learned fully then there is no need for to go back and look the back lesson.
I used the word, windows shopping in the contest of I need to put effort to learn horoscope at least in some extent.
Thanks Sir, keep writing. your writing can be used in two way,
1. learn fully for the good learners.
2. Read the lesson not fully but know what it is really and in which way it is used. Just like know how it works but not in professional way.
Either way it is worth. I believe.
Window shopping, is also welcomed because we know what is there in the world and When require we can get it without searching for it. It also increases the interest in what you like. It is like seeing the Guitar before learning. Learning the Guitar fully is next part. Without listing /seeing the guitar. how a person can make interest. So, I am listing to your lesson. Not learning. Learning I given it to Time.
There is no needs to be a good singer to listen to a good music. your lessons are like a good music. I may be a good listener to your lesson.
keep writing.//////
Don't worry I will keep on writing Navaneethan!
///////தங்ஸ் said...
ReplyDeleteஆஹா...நிறுத்தி,நிதானமாக திரும்பத்திரும்ப படிக்கவேண்டும்போல..
கொஞ்சம் கடினமாக இருக்கிறது..//////
ஆமாம் தங்ஸ். ஜோதிடத்தைக் கதைகளைப் படிப்பதைப் போல வேகமாகப் படிக்க முடியாது.
ஒவ்வொரு வரியையும் மனதில் வாங்கிக் கொண்டு படிக்கவேண்டும்!
>> ஒரு முழு வட்டம் / 12 ராசிகள் = 360 / 12 = 30 பாகைகள்
ReplyDeleteஅல்லது 30 டிகிரிகள். ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை மீண்டும் ஒன்பது பாகங்களகப் பிரிக்கும் போது, 30 வகுத்தல் 9 = 3.33
பாகைகள் என்பது ஒரு பகுதி. இதைப்போல ஒவ்வொரு ராசியையும் பிரித்தால் மொத்தம் 108 பகுதிகள் வரும். அதை அட்டவணையாகக் கொடுத்துள்ளேன்.
>>
27 நட்சத்திரங்களையும் நன்னான்கு பாகங்களாக பகுத்து (மொத்தம் 108 பாதங்களாக) ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரங்களாக அடைப்போமே அதுதான் இதுவா (அப்படியெனில் இந்த 3.33 பாகை கொண்ட பகுதிதானே ஒரு நட்சத்திர பாதம் ?) அல்லது அதுபோலவா ?
அன்புடன்
முத்து
ஐயா, வணக்கம்.
ReplyDeleteஅம்சம் பற்றிய பாடம் அம்சமாக இருக்கிறது.
நிச்சயமாக தாங்கள் அரும்பாடு பட்டு நேரத்தை எமக்காக செலவழித்து வடிக்கும் பதிவுகள் அனைத்திற்காகவும் நாங்கள் தமக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்.
"செறிவு என்பது யாதெனின், கூறியது மறா அமை"
என்கிறது கலித்தொகை.
ஆனால் முன் பக்கம் கருத்துடன் படித்தும்,அடுத்தப் பக்கத்திற்கு சென்றவுடன், முன்பு என்ன கண்டோம் என் குழப்புகிறது.
எளிய சூத்திரங்களும் சூட்சுமங்களும் தர வேண்டுகிறேன்.
பணிவுடன்,
நா.தியாகராஜன்.
//////Muthukumar said...
ReplyDelete>> ஒரு முழு வட்டம் / 12 ராசிகள் = 360 / 12 = 30 பாகைகள்
அல்லது 30 டிகிரிகள். ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை மீண்டும் ஒன்பது பாகங்களகப் பிரிக்கும் போது, 30 வகுத்தல் 9 = 3.33
பாகைகள் என்பது ஒரு பகுதி. இதைப்போல ஒவ்வொரு ராசியையும் பிரித்தால்
மொத்தம் 108 பகுதிகள் வரும். அதை அட்டவணையாகக் கொடுத்துள்ளேன்.
>>
27 நட்சத்திரங்களையும் நன்னான்கு பாகங்களாக பகுத்து (மொத்தம் 108
பாதங்களாக) ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரங்களாக அடைப்போமே
அதுதான் இதுவா (அப்படியெனில் இந்த 3.33 பாகை கொண்ட பகுதிதானே
ஒரு நட்சத்திர பாதம் ?) அல்லது அதுபோலவா ?
அன்புடன்
முத்து///
ஆமாம் நண்பரே!
//////தியாகராஜன் said...
ReplyDeleteஐயா, வணக்கம்.
அம்சம் பற்றிய பாடம் அம்சமாக இருக்கிறது.
நிச்சயமாக தாங்கள் அரும்பாடு பட்டு நேரத்தை எமக்காக செலவழித்து வடிக்கும்
பதிவுகள் அனைத்திற்காகவும் நாங்கள் தமக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்.
"செறிவு என்பது யாதெனின், கூறியது மறா அமை"
என்கிறது கலித்தொகை.
ஆனால் முன் பக்கம் கருத்துடன் படித்தும்,அடுத்தப் பக்கத்திற்கு சென்றவுடன்,
முன்பு என்ன கண்டோம் என் குழப்புகிறது.
எளிய சூத்திரங்களும் சூட்சுமங்களும் தர வேண்டுகிறேன்.
பணிவுடன்,
நா.தியாகராஜன்./////
கிடைக்கும் சூத்திரங்களையும், அட்டவணைகளையும் அவ்வப்போது கொடுத்துக்
கொண்டு வருகிறேன் நண்பரே!
எல்லா பாடங்களுக்குமே குறுக்குவழி என்பதோ அல்லது ஒரு சூத்திரத்திற்குள்
அடக்கிவிடலாம் என்பதோ கிடையாது அல்லது இயலாது என்பதுதான்
வருத்தப் பட வைக்கும் செய்தியாகும்!
ஐயா,
ReplyDeleteயோககாரகன் நவாம்சத்தில் நீசம் பெற்றால் பலன் கிடைக்காமல் போய்விடுமா? உதாரணம்
ராசி:
சிம்ம லக்னம்,லக்னத்தில் செவ்வாய்.
நவாம்சம்
லக்னம் :மேஷம்
லக்னத்தில் - சந்திரன், ராகு
கடகத்தில் செவ்வாய்(நீசம்), புதன், சுக்கிரன்
ஏழில் குருவும் கேதுவும் . சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் பரிவர்த்தனை உள்ளது. நீசபங்கம் உண்டா? செவ்வாயின் நிலை என்ன?
தயவுசெய்து விளக்குவீர்களா?
/////Anandhi said...
ReplyDeleteஐயா,
யோககாரகன் நவாம்சத்தில் நீசம் பெற்றால் பலன் கிடைக்காமல் போய்விடுமா? உதாரணம்////
அம்சம் என்பது Magnified version of Rasi Chart அவ்வளவுதான். ராசிச்சக்கரத்தில் சிம்ம லக்கினத்தில் வீற்றிருக்கும் யோககாரகனைப் பூதக் கண்ணாடி வைத்துப்பார்த்தால் (அம்சத்தில் அவன் ) நீசம் பெற்றுள்ளான். அவனால் Natural benefits எதுவும் இருக்காது. அதனால் என்ன ஜாதகத்தில் வேறு யோகங்கள் இருக்கும் (யோகங்கள் மொத்தம் 300). அதனால் கவலை வேண்டாம் சகோதரி!
=================================
ராசி:
சிம்ம லக்னம்,லக்னத்தில் செவ்வாய்.
நவாம்சம்
லக்னம் :மேஷம்
லக்னத்தில் - சந்திரன், ராகு
கடகத்தில் செவ்வாய்(நீசம்), புதன், சுக்கிரன்
ஏழில் குருவும் கேதுவும் . சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் பரிவர்த்தனை உள்ளது.
நீசபங்கம் உண்டா? செவ்வாயின் நிலை என்ன?
தயவுசெய்து விளக்குவீர்களா?////
அம்சத்தில் நீசம் பெற்றதால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை! அதற்கு முதலில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்!
ராசியில் சந்திரனின் நிலை என்ன? லக்கினாதிபதியின் நிலை என்ன? அதையெல்லாம் சொல்லவில்லையே நீங்கள்
பதிலுக்கு மிக்க நன்றி ஐயா. சிம்ம லக்னக்காரர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை என்கிறார்களே ?
ReplyDeleteமீண்டும் விவரங்களைத் தருகிறேன்.(என்னுடைய மகனுடையது)
ராசி
சிம்ம லக்னம் - லக்னத்தில் செவ்வாய்
கன்னி - சுக்கிரன், ராகு
துலாம் - சூரியன், சந்திரன்
விருச்சிகம் - புதன்
தனுசு - குரு
மீனம் - சனி(வ), கேது
நவாம்சம்
லக்னம் - மேஷம் -சந்திரன், ராகு
ரிஷபம் - சூரியன்
கடகம்- செவ்வாய், சுக்கிரன், புதன்
கன்னி- சனி
துலாம் - குரு, கேது
லக்னாதிபதியும், ராசிநாதனும் ராசியிலும் , யோககாரகன் அம்சத்திலும் நீசம் பெற்றுள்ளது மிகுந்த கவலையை அளிக்கிறது. அதனால்தான் நீசபங்கத்தைப் பற்றிக் கேட்டேன். தயவுசெய்து விளக்குவீர்களா?
Dear Sir,
ReplyDeleteFirst of all, I want to say thanks a lot for your effort and dedicated time to preparing lesson in an interesting manner and topic,
i am very much interested in leerning Jothidam. I am continously reading your lesson since December 2010,
I want to know what is Bhava chart, what is the difference between Rasi chart and Bhava chart.there is some difference bhava chart, some of planet transit to other place, how is it possible. Which one should i follow either Rasi chart or Bhava chart.
Please clarify me,
Thanks a lot,
Regards,
Nagarajan.T
Sir, I have read 100 lessons so far and your teaching has been excellent and so clear to understand. I am at a loss for words when it comes to appreciate how well you have made me understand a little drop of this ocean of astrology! Thanking you once again,
ReplyDeleteGeetha S.
என்னையும் தங்களின் மாணவனாக ஏற்று கொள்ளுங்கள ஐயா
ReplyDelete