மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.8.08

வர்க்கம் எத்தனை வர்க்கமடி?


வர்க்கம் என்பது இரண்டு விதமாகப் பொருள்படும். வருமானம், தொழில்,
அதிகார உரிமை இவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பெற்ற பிரிவு என்று
ஒருவிதமாகவும், குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக்
கிடைக்கும் எண் என்று மறுவிதமாகவும் பொருள் படும்.

மொத்தத்தில் பிரிவுதான் வர்க்கம்.

இன்று ஜோதிடச் சக்கரங்களில் உள்ள பல பிரிவுகளை அல்லது வர்க்கங்களை
உங்களுக்குச் சொல்லித் தரவுள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வானவெளியில் சூரியனைச் சுற்றி, சந்திரன், உட்பட அத்தனை கிரகங்களும்
எந்நேரமும் சுழற்சியில் உள்ளன. பூமியும் சுழற்சியில் உள்ளது. அதனால்
ஒவ்வொரு நிமிடமும் பூமிக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு மாறுபட்டுக்
கொண்டே இருக்கிறது.

அந்த கிரகங்களில் இருந்து வெளிப்படும் காந்த அலைகளும் மாறுபடுகின்றன.

அதனால்தான் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது மனுஷிக்கும்
நிமிடங்களில் ஜாதகங்கள் வேறுபடுகின்றன.

வானவெளியில் பிரிக்கப்பட்டுள்ள ராசிகளும், நட்சத்திரங்களும் மாறுபடுகின்றன.

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் கால அளவு சரியாக 24 மணி
நேரம் என்று கிடையாது. அவற்றிற்கு - அதாவது நட்சத்திரங்களுக்கு இடையே
உள்ள இடைவெளியை (தூரத்தை) வைத்து நட்சத்திரங்களைச் சந்திரன் கடந்து
செல்லும் கால அளவும் மாறுபடும். சில நட்சத்திரங்களை 23 மணி நேரத்திலும்,
சில நட்சத்திரங்களை 25 மணி நேரத்திலும் கடக்கும்.

முதலில் லக்கினத்தை எடுத்துக் கொள்ளுவோம். லக்கினம் என்பது என்னவென்று
முன்பாடத்தில் சொல்லிக் கொடுத்துள்ளேன். புதியவர்கள் அதைப் படித்து அறிந்து
கொள்ள வேண்டுகிறேன்.

நாள் ஒன்றிற்குப் பன்னிரெண்டு லக்கினங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒரு லக்கினத்தின் கால அளவு இரண்டு மணி நேரம். அதாவது 24 மணி நேரம்
வகுத்தல் 12 ராசிகள் = 2 மணி நேரத்திற்கு ஒரு ராசி = அந்த ராசியை
நோக்கியவாறு ஜனிக்கும் குழந்தைக்கு, அந்த ராசிதான் லக்கினம்.

சித்திரை மாதம் முதல் தேதியன்று சூரிய உதயம் காலை 6.06 நிமிடங்களில்
ஏற்படும் அந்தத் தேதியில் காலை 6.06 மணி முதல் 8.06 மணிவரை பிறக்கும்
குழந்தைகளுக்கு மேஷ ராசிதான் லக்கினம். அதற்கு அடுத்து, அன்றைய தேதியில்
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்து ரிஷபம், மிதுனம், கடகம்
என்று லக்கினங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

இரண்டு மணி நேரம் (120 நிமிடங்கள்) வகுத்தல் (மாதத்திற்கு) 30 நாட்கள் என்ற
கணக்கில் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் 4 நிமிடங்கள் குறைந்து கொண்டே
வரும். சித்திரை மாதம் 30ஆம் தேதியன்று மேஷ லக்கினத்தில் பிறப்பு லக்கினம்
4 நிமிடங்கள் மட்டுமே பாக்கியிருக்கும். அன்று சூரிய உதய நேரத்திலும்
மாற்றம் இருப்பதால் (அன்று சூரிய உதயம் 5.55) காலை 5.59 வரைதான் மேஷ
லக்கினம். 6.00 மணிக்கு ரிஷப லக்கினம் வந்து விடும்.

வைகாசி மாதம் சூரிய உதயம் காலை 5.53 மணிக்கு. அதை வைத்து இதே
கணக்கில்தான் லக்கினங்கள் குறிக்கப்படும்.

அந்தக் காலத்தில் ஜோதிடன் தன் மண்டையைக் குடைந்து இதைக் கணக்கிடுவான்
இப்போது அந்தக் குடைச்சல்கள் எதுவும் உங்களுக்கு இல்லாமல் கணினி மென்
பொருட்கள் கைகொடுக்கின்றன.

சூரிய உதய அட்டவணையை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். இந்த
அட்டவணை கோட்டு சூட்டுப் போட்டுகொண்டு, கைநிறையச் சம்பளம், பஞ்சப்படி
கள் வாங்கும் அதிகம் படித்த ஒரு விஞ்ஞானி கணித்து எழுதியதல்ல!
பல நூறு வருடங்களுக்கு முன்பு ஜோதிடக் கலை அறிந்த முனிவர்கள் எழுதியது.
இன்றளவும் எந்த விஞ்ஞானியும் இதனுடன் முரண்படவில்லை என்பதே அல்லது
இந்த உதய நேரம் தவறு என்று சொல்லாமல் இருப்பதே ஜோதிடக் கலையின்
மேன்மைக்கு ஒரு சான்று ஆகும். அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

சூரிய உதய அட்டவணையைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன்.
அது முன் பதிவில் ஒருமுறை கொடுத்திருந்தாலும், அதைத் தேடி நீங்கள்
களைப்படைய வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்!
-----------------------------------------------------------------------------------------------
ஒரு லக்கின கட்டத்திற்கு 30 பாகைகள் (degrees)
அதாவது 360 பாகைகள் வகுத்தல் 12 = 30 பாகைகள்
ஒரு லக்கினத்தின் கால அளவு 2 மணி நேரம்.

அப்படியென்றால் ஒரு பாகையின் நேரம் என்ன?

ஸிம்ப்பிள்:
2 x 60 நிமிடங்கள் = 120 நிமிடங்கள் வகுத்தல் 30 பாகைகள் = 4 நிமிடங்கள்

ஆகவே ஒரு டிகிரி மாறினாலும் ஜாதகம் மாறும். பொதுவாக 4 நிமிடங்களுக்கு
ஒரு ஜாதகம் மறுபடும். துல்லியமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ஜாதகம் மாறுபடும்.

ஒரு நிமிடத்தில் என்னய்யா ஆகிவிடப்போகிறது?' என்று கேட்காதீர்கள்.
ஒரு நிமிடத்தில் ரயிலை விட்டவன் கதை தெரியுமல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

ஒரு நிமிடத்தில் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் ஒரு இடத்தில் - அதாவது
ஒரு ஜாதகத்தின் ஒரு ராசியில் அமர்ந்துவிடுவதுண்டு. அந்த ஆசாமி ஒரு நிமிடம்
முன்னதாகப் பிறந்திருந்தால் 6 டிகிரி வித்தியாசத்தில் அதே கிரக அமைப்பில்
பிறந்திருப்பான்.

5 டிகிரிக்குள் இருக்கும் இரண்டு கிரகங்களில் இரண்டாவதாக இருக்கும் கிரகம்
அஸ்தமனமாகி விடும் என்பது தெரியுமல்லவா? அஸ்தமனம் என்பது combust

combust என்பது என்ன? அடிபட்டுப்போவது. வலிமை இழந்து போவது.

அப்படி வலிமை இழக்கும் கிரகம் லக்கினாதிபதியாக இருந்தால் ஜாதகனின்
நிலைமை என்ன ஆகும்?

ஒரு நிமிடம் முன்னால் பிறந்தவன் நன்றாக இருப்பான். அடுத்துப் பிறந்தவன்
நன்றாக இருக்க மாட்டான்.

இரட்டைப் பிறவிகள் (Twin Births) மாறுபடுவது இப்படித்தான்.

ஒரே நிமிடத்திற்குள் ஒரே இடத்தில் இருவர் பிறந்தால் அவர்கள் இணைப்
பிறவிகள் (Parrellel Births). இணைப் பிறவிகளின் ஜாதகமும் வாழ்க்கையும்
ஒரே மாதிரியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
என் உறவினர் ஒருவருக்கு இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த இரண்டு மகன்
களில் ஒருவன் எப்போதுமே ஆரோக்கியமாக இருந்தான். ஒருவன் எப்போதுமே
நோய் வாய்ப்பட்டிருந்தான். அடிக்கடி காய்ச்சல், வலிப்பு, என்று அவதிப்பட்டுக்
கொண்டே இருப்பான்.

இருவருடைய ஜாதகத்திலும் ராசிச் சக்கரமும், அம்சச் சக்கரமும் அச்சு அசலாக
ஒரே மாதிரியாக இருக்கும். பாவச் சக்கரம் மட்டும் மாறி இருக்கும்.

சாதாரண அல்லது அறைகுறை ஜோதிடர்களால் ஒன்றையும் கண்டு பிடித்து
அந்த நிலைப்பாடிற்கான காரணத்தைச் சொல்ல இயலாது.

ஆனால் அறிவும், அனுபமும் உள்ள ஜோதிடர்கள் வியக்கும்படி சொல்லி
விடுவார்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவை யூனியன் ஹை ஸ்கூல் எதிரே
திரு.கிருஷ்ணமூர்த்தி என்ற ஜோதிட வல்லுனர் இருந்தார். அவரிடம்
அன்றைய தேதியில் அதாவது இருவருக்கும் பத்து வயது இருக்கும்போது,
அவர்களுடைய ஜாதககங்களைக் கொண்டுபோய்க் காட்டியபோது, அசத்தலாக
அவரே அதைச் சொன்னார்.

அதோடு இருபத்தியோரு வயதுவரை அப்படித்தான் இருக்கும் என்றும்
சொன்னார். அதற்குப் பரிகாரம் ஏதாவது உண்டா என்று கேட்டபொது,
பரிகாரம் ஒன்றும் இல்லை. இருவரும் தனித்தனி இடங்களில் வளர்ந்தால்
உபாதைகள் குறையும் என்றார். அதன்படி ஒருவனை அவனுடைய பாட்டி
வீட்டில் விட்டு வைத்தார்கள்.

ஆனால் அவர் சொல்லியபடி 21வது வயதில் இயற்கையாகவே அதற்குத்
தீர்வு கிடைத்தது.

வேறு என்ன? நோய்வாய்ப்பாடுச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த பையன்
இறந்துபோய் விட்டான். அந்த இரட்டையர்களில் ஒருவன் மட்டுமே
இப்போது உள்ளான்.
----------------------------------------------------------------------------------------------------
நான்கு நிமிடங்களில் லக்கின பாவங்கள் மாறுபடுவதையும், ஒரு பாகையில்
(degree) கிரகங்கள் உரசிக்கொள்வதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

ஆகவே இரண்டு மணி நேரத்திற்குப் பொதுவான ராசிச் சக்கரத்தை மட்டும்
அல்லது ராசிக் கட்டங்களை மட்டும் எப்படிப் பலன் சொல்வது?

அந்த இரண்டு மணி நேரத்தில் பிறந்த அனைவருக்குமே ஒரே பலனா?

இல்லையே!

ஆகவே ஒவ்வொருவருடைய ராசிச் சக்கரங்களையும் அக்கு வேறாக ஆணி
வேறாகப் பிரித்துப் போட்டுப் பார்க்க உதவுவதுதான் வர்க்கங்கள் என்னும்
உபகட்டங்கள் (divisional charts)

எதற்காகப் பிரித்துப் போட்டுப் பார்க்க வேண்டும்?

பிரித்துப் பார்த்தால்தான் உண்மையான நிலவரம் தெரியும். உண்மையான பலன்
தெரியவரும்.

அதாவது தங்கத்தை உரசிப் பார்ப்பதைப்போல! 24 காரெட்டா, 22 காரெட்டா
அல்லது பதினெட்டு காரெட்டா என்று தெரியுமல்லவா - அதைப்போல!

ராசியை ஒன்பது பிரிவாகப் பிரித்து, நவாம்சச் சக்கரமாக முன் பதிவில் பாடம்
நடத்தினேன். நிறையப் பேருக்கு அது புரியவில்லை.

ஒரு பெரிய ஊர் இருக்கிறது. அதை அப்படியே படத்தில் பார்த்தால் என்ன
தெரியும்? உதாரணத்திற்கு சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்.

சென்னையை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றாகக் காட்டினால்
உங்களுக்கு முழு விவரம் தெரியவரும் அல்லவா?

1. பாரீஸ் கார்னர் பகுதி (வட சென்னை)
2. மெரினா, கோட்டை பகுதிகள் (கிழக்குப் பகுதி)
3. அண்ணாசாலைப் பகுதி (மத்திய பகுதி)
4. நுங்கம் பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகள்,
5. மீனம்பாக்கம், தாம்பரம் பகுதிகள், (தென் பகுதி)
6. அடையாறு, கோட்டுர்புரம் பகுதிகள்,
7. வில்லிவாக்கம் அம்பத்தூர் பகுதிகள்
8. தி.நகர், சைதைப்பகுதிகள்
9. தேனாம் பேட்டை, போயஸ் கார்டன்பகுதிகள்

இப்படிப் பிரித்துக் காட்டி, ஒருவருக்கு எந்தப் பகுதியில் பெரிய வீடு
அல்லது சொத்து இருக்கிறது என்று சொல்லும் போதே அவருடைய ஸ்டேட்டஸ்
தெரிய வந்துவிடும். அதுபோல ஒரு ஜாதகத்தின் ஸ்டேட்டசைப் பார்க்க
உதவுவதுதான் நவாம்சம்.

அந்த இடங்களில் உள்ள நிலத்தின் விலை ஒரே மாதிரியாகவா இருக்கிறது
அம்பத்தூரில் சென்ட் ( 40அடிக்கு x 60 அடி உள்ள ஒரு கிரவுண்டிற்கு 5.5
சென்ட்டுகள்) பத்து லட்சம் என்றால் அடையாறில் ஒருகோடியும்,
அண்ணா சாலையில் ஐந்து கோடியும் (உத்தேசமான மதிப்புதான்)
இருக்குமல்லவா?

அதுபோல ஒரு இடத்தின் அதிபதி அந்தவீட்டின் எந்த நவாம்சப் பகுதியில்
இருக்கிறானோ அதை வைத்துத்தான் அவருடைய மதிப்பும் ஜாதகனுக்கு
அவர் தரும் பலனும்!

அண்ணாசாலையில், ஒரு எக்கரில், அதுவும் ஜெமினி மேம்பாலம் அருகே
ஒருவனுக்குச் சொத்து இருந்தால் அவன் இன்றைய தேதியில் எவ்வளவு பெரிய
செல்வந்தன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதுபோல ஒன்பதிற்கு உரியவன் நவாம்சத்தில் ஏழாம் வீட்டில் லக்கினாதிபதி
லாபதியோடு சேர்ந்து அமர்ந்திருந்தால், ஜாதகன் வெளிநாடு சென்று அல்லது
வெளி நாட்டு வியாபாரத்தால் (Exports) கொடிக்கணக்கில் பொருள் ஈட்டுவான்
(இதை ஒரு உதாரணத்திற்காகச் சொல்லியுள்ளேன்)

இது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவுவதே உபகட்டங்கள்
அல்லது வர்க்கங்கள் (divisional charts) எனப்படும்

இப்போதாவது புரிந்ததா சுவாமிகளா?
--------------------------------------------------------------------------------------------------
ஒரு பத்து ஏக்கர் நிலத்தை எப்படி வேண்டுமென்றாலும் பிரித்து ஸைட்
போடலாமில்லையா? அதுபோல ஒரு ஜாதகத்தைப் பலவாறாகப் பிரித்துப்
பார்ப்பதுதான் உபகட்டங்கள் (divisional charts)

அந்த divisional Charts எத்தனை வகைப்படும். எந்த அளவில் பிரிக்கப்
படுகிறது. எதெது எதற்காகப் பிரிக்கப் படுகிறது. அதன் பயன் என்ன
என்பதுதான் இன்றையப் பாடம்!
--------------------------------------------------------------------------------------------------------
நவாம்சச் சக்கரம்
Rasi divided by nine parts.
முன் பாடத்தில் சொல்லப்பட்டுவிட்டது.
-------------------------------------------------------------------------------------------
மற்ற வர்க்கங்கள்

(The Varga charts, also known as the divisional charts, are a unique method
employed by the ancient seers to study various aspects of life.
Each rasi of 30 degrees is further subdivided and by employing a series
rules new additional charts are made. There are 16 divisional charts and they
are studied to analyze the finer conditions, strengths and effects of the planets.
These charts are also employed to study certain specific aspects of life like
spouse, children, parents etc. The following are the varga divisions.)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1
Rashi or the Lagna chart as it is of 30 degrees to study all aspects of life.

ராசிச் சக்கரம் 30 டிகிரிகள் கொண்ட 12 கட்டங்களாக ஜாதகத்தைப் பிரிப்பது.
எல்லாப் பொதுப்பலன்களையும் பார்ப்பதற்காக உள்ளதாகும் இது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
Hora Chart (one-half of a sign or raasi) is the varga to study wealth.

ஒவ்வொரு ராசியையும் இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது.
(செல்வ நிலையைப் பார்ப்பதற்காக உள்ளது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Drekkana Chart (one-third of a sign or raasi) is the varga to study siblings.

ஒவ்வொரு ராசியையும் மூன்று சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(உடன் பிறப்புக்களை அறிந்து கொள்ள உதவுவது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Chaturthamsha Chart (one-fourth of a sign or raasi) is the varga to
study destiny and house.

ஒவ்வொரு ராசியையும் நான்கு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(விதியின் போக்கைப் பார்ப்பதற்கு உதவுவது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
Saptamsha Chart (one-seventh of a sign or raasi) is the varga to study
progeny.

ஒவ்வொரு ராசியையும் ஏழு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(குழந்தைப் பேற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
Navamsha Chart (one-ninth of a sign or raasi) is the varga for spouse
and many other things.

ஒவ்வொரு ராசியையும் ஒன்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவுவதோடு,
மேலும் பல அறிய தகவல்களைத் தருவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
Dashamsha Chart (one-tenth of a sign or raasi) is the varga to study
ones profession.

ஒவ்வொரு ராசியையும் பத்து சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய தொழில், வேலை, வியாபாரம் மொத்தத்தில் ஜீவனத்திற்
கான வழியைத் தெரிந்து கொள்ள உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.
Dwadashamsha Chart (one-twelfth of a sign or raasi) is the varga
to study parents.

ஒவ்வொரு ராசியையும் பன்னிரெண்டு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய பெற்றோர்களைப் பற்றிய அறிய உதவும் கட்டம் இது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.
Shodashamsha Chart (one-sixteenth of a sign or raasi) is the varga
to study conveyance.

ஒவ்வொரு ராசியையும் பதினாறு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(வண்டி, வாகனங்கள், இதர செளகரியங்களை அறிய உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.
Vimshamsha Chart (one-twentieth of a sign or raasi) is the varga to
study spiritual progress.

ஒவ்வொரு ராசியையும் இருபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய பக்தி நெறி அல்லது அது இல்லாமையை அறிந்து கொள்ள
உதவும் கட்டம் இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.
Chaturvimshamsha Chart (one-twenty fourth of a sign or raasi) is to
study knowledge.

ஒவ்வொரு ராசியையும் இருபத்திநான்கு சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது.(அறிவு, ஞானத்தின் தன்மையை அறிய உதவுவது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Saptavimshamsha Chart (one-twenty seventh of a sign or raasi) is to
study the strength.

ஒவ்வொரு ராசியையும் இருபத்தியேழு சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது. ஜாதகரின் பொது வலிமையை அறிய உதவுவது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
13.
Trimshamsha Chart (one-thirtieth of a sign or raasi) is foor assertaining
misfortunes and nature.

ஒவ்வொரு ராசியையும் முப்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகரின் துரதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ள உதவுவது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
14.
Khavedamsha Chart (one-fortieth of a sign or raasi) is for auspicious &
inauspicious effects.

ஒவ்வொரு ராசியையும் நாற்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகத்தில் உள்ள நல்ல விளைவுகளையும், தீய விளைவுகளையும் அறிய
உதவுவது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
15.
Akshavedamsha Chart (one-forty fifth of a sign or raasi) is for all areas
of life.

ஒவ்வொரு ராசியையும் நாற்பதைதைந்து சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது. வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் பொதுவாக அறிந்து
கொள்ள உதவுவது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
16.
Shashtyamsha Chart (one-sixtieth of a sign or raasi) is for all general
effects.

ஒவ்வொரு ராசியையும் ஆறுபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகருக்கு ஏற்பட இருக்கும் பொது விளைவுகளை அறிந்து கொள்ள
உதவுவது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பதினாறு வர்க்க கட்டங்களிலும் நவாம்சம் மட்டுமே அதி
முக்கியமானது.

மற்றவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே கொடுத்துள்ளேன்.

நவாம்சம் என்பது வாழ்க்கைத் துணையை மட்டுமல்ல, ஒருவரின் ஜாகத்தில்
உள்ள கிரகங்களின் வலிமைகளையும்.அல்லது வலிமையின்மைகளையும்
அதனால் ஏற்பட இருக்கும் பலாபலன்களையும் தெள்ளத் தெளிவாகக்
காட்டுவதாகும்.

ஜாதகத்தின் ராசியில் பலவீனமாக உள்ள கிரகம், அம்சத்தில் பலத்தோடு
இருக்கலாம். அதுபோல ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம், அம்சத்தில்
நீசமாகி இருக்கலாம். அம்சத்தைப் பார்க்கும்போதுதான் ஒரு கிரகத்தின்
உண்மையான வலிமை தெரிய வரும். ஆகவே ராசியைவிட அம்சம் அதிக
முக்கியமானதாகும்.

இன்றையக் குழந்தைப் பிறப்பு விகிதத்தில் இரண்டு மணி நேரத்தில்
எத்தனையோ குழந்தைகள் பிறக்கலாம். அவ்வளவு பேருக்கும் ராசிச் சக்கரம்
ஒன்றாக இருந்தாலும் அம்சம், மற்றும் பாவச்சக்கரங்கள் பல விதமாக
வேறுபடும். அதன்படி அந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
பிறந்தவர்கள் அனைவருக்கும் தலை எழுத்தும், விதியும் வேறுபடும்.
அதை அறிந்து கொள்ள உதவுவதுதான் இந்தச் சக்கரங்கள்.

நீங்கள் பிறந்த நேரம் சரியாகக் குறிக்கப்பட்டிருந்தால்தான், இந்தச் சக்கரங்களின்
படியான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இல்லையென்றால் இல்லை.

பார்த்துச்சொல்பவனின் கணிப்புக்கள் பொய்யாகிவிடும்.

ஜோதிடம் பொய்யல்ல!

The lagna, hora, drekkana, navamsa, dwadasamsa and trimamsa ஆகிய ஆறு
பிரிவுகளில் உள்ள சக்கரங்களை மட்டும் நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டால்
போதும். மற்றவற்றைச் சாய்சில் விட்டுவிடலாம்.ஸீரியசாக ஜோதிடம் படிப்பவர்கள்
மட்டும் படிக்கலாம்.

பலன் சொல்வதற்கு ராசி மற்றும் அம்சம் ஆகிய இரண்டும் போதும்

பின் எதற்காக எழுதினீர்கள்?

கூடுதுறையார் மாதிரி மிகவும் ஆர்வமுள்ளவர்களின் வருத்தத்திற்கு ஆளாகக்
கூடாது என்பதற்காக அறியத் தந்துள்ளேன்.

All these, except the navamsa are only for information and not for serious
study!

இந்த வர்க்கக் கட்டங்களையெல்லாம் எப்படித் தயாரிப்பது அல்லது எப்படி
எழுதுவது?

அன்பர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்த மென்பொருள் - சைடுபாரில்
உள்ளது. அது உங்களுக்கு, சில வினாடிகளுக்குள் அடித்துக் கொடுத்துவிடும்!

பலன் எப்படிப் பார்ப்பது?

முன் பாடத்தில் சொல்லியுள்ள அதே விதிமுறைகள்தான் அத்தனை
கட்டங்களுக்கும்!

Placement, association, aspect என்று அதே ஜடைபோட்டு, பூவைத்து, பொட்டு
வைக்கும் வேலைதான்.

முயன்று பாருங்கள். சந்தேகமிருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

இன்றைய பாடம் எழுதித் தட்டச்சிட அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டு
விட்டது. பொறுமையோடு, செய்வன திருந்தச் செய்' என்ற முதுமொழிக்கிணங்க
எழுதியுள்ளேன். ஸ்கிரீன் சைசில் மொத்தம் 14 பக்கங்கள்.

இரண்டு பகுதிகளாக தனித்தனியாக இரண்டு தினங்களில் பதிவிடலாம் என்று
நினைத்தேன். ஆனால் பாடத்தின் தன்மை கருதி ஒரே பதிவாகக் கொடுத்துள்ளேன்

ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஒரே ஒட்டத்தில் படித்துவிட்டு, சார், அடுத்த பாடம்
எப்பொது என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இதை முழுமையாகப் படித்து மனதில் ஏற்றுங்கள்.

அடுத்த பாடம் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தானாக நடக்கும்!

நன்றி,
வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்.
=========================================================
Rotation of Planets and rotation time for planets


வாழ்க வளமுடன்!

31 comments:

 1. New student... please enroll me...

  Really marevellous description about other squares of astrology..

  GOD bless you..

  ReplyDelete
 2. New student... please enroll me...

  Really marevellous description about other squares of astrology..

  GOD bless you..

  ReplyDelete
 3. ///அந்த இரட்டையர்களில் ஒருவன் மட்டுமே
  இப்போது உள்ளான்.-வாத்தியார்///

  இவ்வளவு சீரியஸ் ஆன பாடத்திலும் ஒரு சஸ்பென்ஸ் கதையை கலக்க உங்களால் எப்படி முடிகிறது, ஆசானே!!!!

  மிகவும் சிறப்பாக,பொறுமையாக பக்கம் பக்கமாக எழுதியுள்ளீர்கள், மிக்க நன்றி. பாடம் புரிகிறதோ, இல்லையோ கல் பொறுக்கும் வேலை கைவசம் இருக்கின்றது. இந்த பாடம் ஒரு வைரக்கல், அதை பட்டை தீட்ட என் சிறு முயற்சிகள் இதோ..

  //அண்ணாசாலையில், ஒரு எக்கரில்
  //(Exports) கொடிக்கணக்கில்
  //பல அறிய தகவல்களைத்
  //பெற்றோர்களைப் பற்றிய அறிய
  //(one-thirtieth of a sign or raasi) is foor
  //ராசியையும் ஆறுபது சம

  (கல்)பொறுக்குவது திருந்த பொறுக்கு என்பதில் உங்கள் சிஷ்யனாக என்னை
  ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். :)))

  அல்கெமிஸ்ட் மொழிபெயர்ப்பை என் வலைப்பதிவில் அவ்வப்போது ஒரே ஒரு பக்கம் தட்டச்சிடவே, நாக்கில் நுரை தள்ளி விடுகிறது. உங்கள் வயதில் இவ்வளவையும் வலையேற்றுவது, தங்கள் ஆர்வத்தையும்,எங்கள் மீது கொண்ட அன்பையுமே காட்டுகிறது,ஐயா!!
  உங்கள் விடாமுயற்சிக்கும்,கடும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.

  ReplyDelete
 4. வாழைப்பழத்துக்கு ஊசி ஏற்றுவதுபோல இன்றைய பாடம் மிகவும் அருமையாக இருந்து. அம்சம்தான் முழி பிதுங்கி விட்டது. நல்ல நேரத்தில் தியாகராஜா அவர்களும் மென்பொருளை தந்து உதவி இருக்கின்றார். கொஞ்சம் "ஹோம் வொர்க்" பண்ணிவிட்டு மீண்டும் வருகின்றேன். தங்கள் சேவைக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 5. விளக்கமான, சற்றே நீளமான பாடம். உங்கள் பொறுமை கலந்த சேவை மனப்பான்மைக்கு நன்றி. மீண்டும் ஓரிரு முறைகள் படித்து விட்டு வருகின்றேன்.

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 6. விளக்கமான, சற்றே நீளமான பாடம். உங்கள் பொறுமை கலந்த சேவை மனப்பான்மைக்கு நன்றி. மீண்டும் ஓரிரு முறைகள் படித்து விட்டு வருகின்றேன்.

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 7. Anbu Aiyya,
  உங்கள் வயதில் இவ்வளவையும் வலையேற்றுவது, தங்கள் ஆர்வத்தையும்,எங்கள் மீது கொண்ட அன்பையுமே காட்டுகிறது,ஐயா!!
  உங்கள் விடாமுயற்சிக்கும்,கடும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.
  Padiththu mudiththavudan en manathil yerpatta karuththai Thiru thamam Bala sariyaga velipaduththi irukkirar. Thangal panikkana palanai IRAIVAN abarithamaai vazhangi memmelum ungalukku Shakthi thara iraivanai vendi vanangugiren.

  Sara,
  CMB

  ReplyDelete
 8. //////Prabhu said...
  New student... please enroll me...
  Really marvelous description about other squares of astrology..
  GOD bless you..////////

  ஆகா, வாருங்கள் புது மாணாக்கரே! பழைய பாடங்களையெல்லாம் ஒருமுறை படியுங்கள்.
  God will bless all of us, since we are all having real faith on him!

  ReplyDelete
 9. //////தமாம் பாலா (dammam bala) said...
  ///அந்த இரட்டையர்களில் ஒருவன் மட்டுமே
  இப்போது உள்ளான்.-வாத்தியார்///
  இவ்வளவு சீரியஸ் ஆன பாடத்திலும் ஒரு சஸ்பென்ஸ் கதையை கலக்க உங்களால் எப்படி முடிகிறது, ஆசானே!!!!/////

  அது கதையல்ல உண்மைச் சம்பவம். சொல்லிய பாணி கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்திருக்கலாம். Jeffery Archerரின் ரசிகன் நான் அதனால் சிலசமயம்
  கட்டுரைகளிலும் கதை போன்ற நடை வந்‍துவிடுகிறது!:‍)))

  /////// மிகவும் சிறப்பாக,பொறுமையாக பக்கம் பக்கமாக எழுதியுள்ளீர்கள், மிக்க நன்றி. பாடம் புரிகிறதோ, இல்லையோ கல் பொறுக்கும் வேலை கைவசம் இருக்கின்றது. இந்த பாடம் ஒரு வைரக்கல், அதை பட்டை தீட்ட என் சிறு முயற்சிகள் இதோ..
  (கல்)பொறுக்குவது திருந்த பொறுக்கு என்பதில் உங்கள் சிஷ்யனாக என்னை
  ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். :)))/////

  இங்கே வருபவர்கள் அனைவருமே எனது சீடர்கள்தான்!

  /////அல்கெமிஸ்ட் மொழிபெயர்ப்பை என் வலைப்பதிவில் அவ்வப்போது ஒரே ஒரு பக்கம் தட்டச்சிடவே, நாக்கில் நுரை தள்ளி விடுகிறது. உங்கள் வயதில் இவ்வளவையும் வலையேற்றுவது, தங்கள் ஆர்வத்தையும்,எங்கள் மீது கொண்ட அன்பையுமே காட்டுகிறது,ஐயா!!
  உங்கள் விடாமுயற்சிக்கும்,கடும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.////

  ஆர்வத்திற்கு வயதெல்லாம் கிடையாது பாலா! இத்தனை உள்ளங்கள் கிடைப்பது என்பது சாதாரணச் செயலா? அது இறையருள்! அதற்க்காகவே நான் இன்னும் எத்தனை பக்கங்கள் வேண்டுமென்றாலும் எழுதிப் பதிவிடத் தயாராக உள்ளேன்!

  ReplyDelete
 10. /////கல்கிதாசன் said...
  வாழைப்பழத்துக்கு ஊசி ஏற்றுவதுபோல இன்றைய பாடம் மிகவும் அருமையாக இருந்து. அம்சம்தான் முழி பிதுங்கி விட்டது. நல்ல நேரத்தில் தியாகராஜா அவர்களும் மென்பொருளை தந்து உதவி இருக்கின்றார். கொஞ்சம் "ஹோம் வொர்க்" பண்ணிவிட்டு மீண்டும் வருகின்றேன். தங்கள் சேவைக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றிகள்.////

  ஆகா, நன்றாகப் படித்து, சொன்னவற்றை மனதில் ஏற்றிக் கொண்டு வாருங்கள்!

  ReplyDelete
 11. /////Rajagopal said...
  விளக்கமான, சற்றே நீளமான பாடம். உங்கள் பொறுமை கலந்த சேவை மனப்பான்மைக்கு நன்றி. மீண்டும் ஓரிரு முறைகள் படித்து விட்டு வருகின்றேன்.
  அன்புடன்
  இராசகோபால்////

  நன்றி கோபால்! அப்படியே செய்யுங்கள்!

  ReplyDelete
 12. /////sara said...
  Anbu Aiyya,
  உங்கள் வயதில் இவ்வளவையும் வலையேற்றுவது, தங்கள் ஆர்வத்தையும்,எங்கள் மீது கொண்ட அன்பையுமே காட்டுகிறது,ஐயா!!
  உங்கள் விடாமுயற்சிக்கும்,கடும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.
  Padiththu mudiththavudan en manathil yerpatta karuththai Thiru thamam Bala sariyaga velipaduththi irukkirar. Thangal panikkana palanai IRAIVAN abarithamaai vazhangi memmelum ungalukku Shakthi thara iraivanai vendi vanangugiren.
  Sara,
  ச்ம்ப்/////

  வாருங்கள் கொழும்புக்காரரே. உங்கள் எல்லோருடைய அன்பைவிட நான் எழுதும்
  நேரமும், ஆர்வமும் பெரிதல்ல! (பெரிதானதல்ல!) உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 13. அக்குவேரு ஆணிவேராக பிச்சிட்டிங்க, இவ்வளவு அறுமையான விளக்கம் வேறுயாரேனும் தந்துள்ளனாரா என்பது சந்தேகமே!

  ReplyDelete
 14. ஐயா வணக்கம் ,

  தங்களின் விரிவான தெளிவான‌ பதிவு அருமை ,
  உங்களின் பொறுமைக்கும் திறமைக்கும் என்ன்டைய மனமார்ந்த பாராட்டுக்கள்

  என்னுடைய சிறு சந்தேகங்களைத்தீர்த்துவைப்பீர்களா

  1) கடகலக்கின சாத‌கம் குரு 3 இல் , நவாம்சலக்கினம் சிங்கம் , நவாம்சத்தில் குரு மீனத்தில்
  இங்கு ராசியில் 9 ம் இடத்துஅதிபதி நவாம்சத்தில் ஆட்சிபெற்றதால் பலம்பெறுகிறானா அல்லது நவாம்சலக்கினத்திற்கு 8 இல் அமர்ந்ததால் மறைகிறானா ?

  2) நவாம்சத்தில் குருவினுடைய 5 ம் 9 ம் பார்வைகளைக் கருதிப் பலன் சொல்ல முடியுமா ?

  ReplyDelete
 15. ஐயா வணக்கம் ,

  தங்களின் விரிவான தெளிவான‌ பதிவு அருமை ,
  உங்களின் பொறுமைக்கும் திறமைக்கும் என்ன்டைய மனமார்ந்த பாராட்டுக்கள்

  என்னுடைய சிறு சந்தேகங்களைத்தீர்த்துவைப்பீர்களா

  1) கடகலக்கின சாத‌கம் குரு 3 இல் , நவாம்சலக்கினம் சிங்கம் , நவாம்சத்தில் குரு மீனத்தில்
  இங்கு ராசியில் 9 ம் இடத்துஅதிபதி நவாம்சத்தில் ஆட்சிபெற்றதால் பலம்பெறுகிறானா அல்லது நவாம்சலக்கினத்திற்கு 8 இல் அமர்ந்ததால் மறைகிறானா ?

  2) நவாம்சத்தில் குருவினுடைய 5 ம் 9 ம் பார்வைகளைக் கருதிப் பலன் சொல்ல முடியுமா ?

  ReplyDelete
 16. வணக்கம் அய்யா ,
  இன்றைய பாடம் மிக அருமை..
  உங்களின் கடின உழைப்புக்கு நன்றிகள்..

  இந்த வாரம் சேலம் சென்றிருந்தேன் , பி வி ராமனின் ஜோதிட புத்தகங்களை வாங்கிவந்தேன் (குடும்ப ஜோதிடம் புத்தகம் கிடைக்கவில்லை), ஜோதிடம் பெருங்கடல், உங்களின் உதவியால் என்னால் ஓரளவு பாடங்களை புரிந்துகொள்ள முடிகிறது.
  நன்றி வணக்கம்.

  ReplyDelete
 17. மிக அருமையான விளக்கம், ஆழமான ஜோதிட பாடதை விரல் நுனியில் கோடுத்துள்ளீர்கள், மிக்க நன்றி.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. ஐயா...

  இன்றைய பாடம் மிகவும் அற்புதம்... நானே கருர் தியாகராஜன் அவர்களின் மென்பொருளில் எடுத்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு இத்தனை ஜாதகக்கட்டங்கள் உள்ளதே..

  அவையெல்லாம் என்ன என்று விளக்க ஒரு பதிவுடுங்கள் எனக்கேட்கலாம் என நினைத்தேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் வேலை பளுவில் தாங்கள் தற்போது செய்யும் சேவையே பெரிது ஆகவே கேட்கவேண்டாம் என மனதை சமாதானப்படுத்திகொண்டேன்....

  ஆனால் தாங்கள் அதை எப்படியோ அறிந்து கொண்டு எனது பெயரைக்குறிப்பிட்டே அதற்கு விளக்கமாக பதிவிட்டுள்ளிர்கள்...

  இது எப்படி சாத்தியம்? எதாவது டெலிபதி மென்பொருள் வைத்துள்ளீர்களா?

  ReplyDelete
 20. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
  அக்குவேறு ஆணிவேராக பிச்சிட்டீங்க, இவ்வளவு அருமையான விளக்கம் வேறுயாரேனும் தந்துள்ளனாரா என்பது சந்தேகமே!

  நான் படிக்கும்போது என்னென்ன சந்தேகங்கள் வந்ததோ - அதெல்லாம் வரக்கூடாது என்று நினைத்து விவரமாக எழுதினேன்.
  அதனால் கட்டுரை நிறைவாக இருக்கலாம்!

  ReplyDelete
 21. /////தமிழன் said...
  ஐயா வணக்கம் ,
  தங்களின் விரிவான தெளிவான‌ பதிவு அருமை ,
  உங்களின் பொறுமைக்கும் திறமைக்கும் என்ன்டைய மனமார்ந்த பாராட்டுக்கள்
  என்னுடைய சிறு சந்தேகங்களைத்தீர்த்துவைப்பீர்களா
  1) கடகலக்கின சாத‌கம் குரு 3 இல் , நவாம்சலக்கினம் சிங்கம் , நவாம்சத்தில் குரு மீனத்தில்
  இங்கு ராசியில் 9 ம் இடத்துஅதிபதி நவாம்சத்தில் ஆட்சிபெற்றதால் பலம்பெறுகிறானா
  அல்லது நவாம்சலக்கினத்திற்கு 8 இல் அமர்ந்ததால் மறைகிறானா ?/////

  9ஆம் இடத்து அதிபதி அமர்ந்து ஆட்சி பெற்றதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்!

  2) நவாம்சத்தில் குருவினுடைய 5 ம் 9 ம் பார்வைகளைக் கருதிப் பலன் சொல்ல முடியுமா ?/////

  குருவின் பார்வை கோடி தோஷம் போக்கும் என்பது சொல்லடை! அது உண்மையும்கூட! அவருடைய பார்வை எப்போதும் நன்மையையே செய்யும்!

  ReplyDelete
 22. //////Geekay said...
  வணக்கம் அய்யா ,
  இன்றைய பாடம் மிக அருமை..
  உங்களின் கடின உழைப்புக்கு நன்றிகள்..
  இந்த வாரம் சேலம் சென்றிருந்தேன் , பி வி ராமனின் ஜோதிட புத்தகங்களை வாங்கிவந்தேன் (குடும்ப ஜோதிடம் புத்தகம் கிடைக்கவில்லை), ஜோதிடம் பெருங்கடல், உங்களின் உதவியால் என்னால் ஓரளவு பாடங்களை புரிந்துகொள்ள முடிகிறது.
  நன்றி வணக்கம்.///////

  பி வி ராமனின் ஜோதிட புத்தகங்கள் நன்றாக இருக்கும்.
  படித்துத் தெளிவு பெற வாழ்த்துக்கள் ஜீக்கே!

  ReplyDelete
 23. /////மதி said...
  மிக அருமையான விளக்கம், ஆழமான ஜோதிட பாடதை விரல் நுனியில் கோடுத்துள்ளீர்கள், மிக்க நன்றி.//////

  வாத்தியார் இதைக்கூடச் செய்யாவிட்டால் எப்படி? நன்றி எல்லாம் எதற்கு நண்பரே? உங்களுக்குப் பயன்பட்டால் போதும்! அதுவே நான் எழுதுவதன் நோக்கமும் ஆகும்!

  ReplyDelete
 24. //////கூடுதுறை said...
  ஐயா...
  இன்றைய பாடம் மிகவும் அற்புதம்... நானே கருர் தியாகராஜன் அவர்களின் மென்பொருளில் எடுத்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு இத்தனை ஜாதகக்கட்டங்கள் உள்ளதே..
  அவையெல்லாம் என்ன என்று விளக்க ஒரு பதிவுடுங்கள் எனக்கேட்கலாம் என நினைத்தேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் வேலை பளுவில் தாங்கள் தற்போது செய்யும் சேவையே பெரிது ஆகவே கேட்கவேண்டாம் என மனதை சமாதானப்படுத்திகொண்டேன்....
  ஆனால் தாங்கள் அதை எப்படியோ அறிந்து கொண்டு எனது பெயரைக்குறிப்பிட்டே அதற்கு விளக்கமாக பதிவிட்டுள்ளிர்கள்...
  இது எப்படி சாத்தியம்? எதாவது டெலிபதி மென்பொருள் வைத்துள்ளீர்களா?//////

  டெலிபதியெல்லாம் ஒன்றுமில்லை! நானும் அதைப் பார்த்தேன். சரி அதற்கு விளக்கம் எழுதுவோம் என்றுதான்
  எழுதினேன். இது தற்செயலாக நிகழ்ந்தது் கூடுதுறையாரே!

  ReplyDelete
 25. Dear Sir,

  Why chennai is split into 9 places as example other than any places? (or coimbatore):-))Anyhow the way you start the lesson is always rocking...Thanks for taking effort in typing(that too in tamil.

  -Shankar

  ReplyDelete
 26. //////hotcat said...
  Dear Sir,
  Why chennai is split into 9 places as example other than any places?
  (or coimbatore):-))Anyhow the way you start the lesson is always rocking...
  Thanks for taking effort in typing(that too in tamil.
  -Shankar///

  Chennai is an important place known to all tamilians than Coimbatore:-)))
  Thanks Mr.Shankar for your comments!

  ReplyDelete
 27. இதான் நல்ல வாத்தியார் என்கிறது. :-)) மாணவர்களின் புரிதல் எல்லையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல சிம்பிளா...

  வாழ்க!

  ReplyDelete
 28. /////திவா said...
  இதான் நல்ல வாத்தியார் என்கிறது. :-)) மாணவர்களின் புரிதல் எல்லையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல சிம்பிளா...
  வாழ்க!/////

  நல்ல வாத்தியாரின் அடையாளம் இதுதானா? நன்றி!

  ReplyDelete
 29. ஐயா,
  சூரியோதய அட்டவணை மிகவும் உபயோகமாக் இருக்கிறது.பழைய் ஜாதகக் குறிப்பில் நாழிகை, வினாழிகை என குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனை மணியாக மாற்ற அட்டவணை உதவியது.
  கூடுதுறையாரின் கேள்வியே எனக்கும் தோன்றிஇருந்தது.
  அவரின் வாயிலாக உமது பதிலை பெற்றோம்.
  நன்றிகள்

  ReplyDelete
 30. //////திவா said...
  இதான் நல்ல வாத்தியார் என்கிறது. :-)) மாணவர்களின் புரிதல் எல்லையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல சிம்பிளா...
  வாழ்க!/////

  நானும் பல ஆண்டுகளாக மாணவனாக இருந்து கற்றவன்தானே சாமி! அதானால் ஏற்பட்டது நீங்கள்
  சொல்லும் புரிதல்!

  ReplyDelete
 31. /////தியாகராஜன் said...
  ஐயா,
  சூரியோதய அட்டவணை மிகவும் உபயோகமாக் இருக்கிறது.பழைய் ஜாதகக் குறிப்பில் நாழிகை, வினாநாழிகை என குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனை மணியாக மாற்ற அட்டவணை உதவியது.
  கூடுதுறையாரின் கேள்வியே எனக்கும் தோன்றிஇருந்தது.
  அவரின் வாயிலாக உமது பதிலை பெற்றோம். நன்றிகள்/////

  ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஒரு நாளுக்கு அறுபது நாழிகைகள்.
  அங்கிலக் கணக்கில் ஒரு நாளிற்கு 24 மணிகள். ஒருமணிக்கு 60 நிமிடங்கள்
  இதையும் மனதில் வைத்துக் கொண்டால் எல்லாமே எளிதாக இருக்கும்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com