மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.7.08

என்ன (டா) ஆச்சு பெருமாளுக்கு?

பெருமாளுக்கு என்ன ஆச்சா? கீழே உள்ளது; படித்துப் பாருங்கள்!

செட்டியார் ஒருவர் தீவிர சிவபக்தர். தசாவதாரம் படத்தில் வரும் நெப்போலியனைப்
போல (குலோத்துங்க மன்னனைப் போல) என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

பெரும் செல்வந்தர். தன் வேலைகளுக்கு வீட்டோடு ஒரு தனிப்பட்ட உதவியாளரை
வைத்துக் கொள்ள விரும்பினார்.

நண்பர்களின் பரிந்துரைகளின் பேரில் பலரையும் நேர்கானல் செய்தார்.

கடைசியில் பொள்ளாச்சி சூலக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனைப்
பிடித்ததிருந்தது.

தாமிரபரணி விஷாலைப் போன்ற அவனுடைய தோற்றம் அவருக்குப் பிடித்து விட்டது.
படிப்பு வணிகம் இளங்கலை. அடிப்படைக் கணினி தெரியும். கையெழுத்து சூப்பராக
இருந்தது. கனரக வாகனம் ஓட்டுவதற்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தான்.

பரிசோதனையாக தன்னுடைய மேஜை மீதிருந்த கடிதங்களையெல்லாம் ஒழுங்கு
படுத்து என்றார். தேதி வாரியாக அனைத்தையும் பிரித்துத் தனித்தனி ஃபோல்டரில்
வைத்ததோடு மேஜையில் இருந்த இன்னபிற சாமான்களையும் பிரித்து ஒழுங்கு
படுத்திச் சுத்தமாக்கினான்

தங்கும் இடம், உணவு இலவசம், சம்பளம் மாதம் ரூபாய் பத்தாயிரம் என்றார்.

மகிழ்ச்சியோடு சரி என்றான்.

கடைசியாகக் கேட்டார்,"உன் முழுப்பெயர் என்ன?"

அவன் சொன்னான்;

"ஆளவந்த பெருமாள்"

செட்டியாருக்குத் 'திக்' கென்றது!

அவனை வீட்டோடு வைத்துக் கொண்டு நாளொன்றுக்குப் பத்து அல்லது இருபது
முறைகள் ஆளவந்தான் என்றும் கூப்பிட முடியாது; பெருமாள் என்றும் (தீவிர சிவ
பக்தியால்) கூப்பிட முடியாது.

"எல்லாம் சரி. பெயரை மட்டும் நீ மாற்றிக் கொள்ள வேண்டும்"

"நானாக மாற்ற முடியாது ஐயா! ஊருக்குச் சென்று என் பெற்றோர்களிடம் சொல்லி
மாற்ற வேண்டும். அதுவும் எங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய்தான் மாற்ற
முடியும்"

செட்டியார் விடவில்லை!

இரண்டு ஆயிரம் ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினார்,"பரவாயில்லை: மாற்றிக்
கொண்டு வா. இதைச் செலவிற்கு வைத்துக் கொள்"

உடனே புறப்பட்டுப் போனவன் இரண்டு நாட்களில் திரும்பி வந்தான்

செட்டியார் ஆர்வத்துடன் கேட்டார்:

"போன காரியம் என்ன ஆயிற்று?"

"பெயரை மாற்றிக் கொண்டு வந்து விட்டேன் ஐயா!"

"என்ன பெயர்?"

அவன் மெல்லிய குரலில் சொன்னான்:

"பெத்த பெருமாள்!"

இதுதான் பெருமாள் பெத்தபெருமாள் ஆன கதை!

எங்கள் ஊர்ப் பகுதிகளில் சொல்வார்கள்

அதாவது ஒரு செயல் இரட்டிப்பாவதற்கு இதைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள்
-----------------------------------------------------------------------------------------
"அதுசரி, என்ன (டா) ஆச்சு பெருமாளுக்கு? வேலை கிடைத்ததா இல்லையா?"

"கிடைத்து!"

"எப்படி?"

"செட்டியார், உன்னை நான் சிவ பெருமாள் என்று அழைப்பேன்' என்று சொல்லி
வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். நீங்கள் எப்படி வேண்டு மென்றாலும்
அழையுங்கள் வேலை கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டான்"

"இதை செட்டியார் முதலிலேயே செய்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை?"

"அதுதான் விதி! சும்மா சுமக்க வேண்டிய துணி மூட்டையைச் சிலர் நனைத்துச்
சுமப்பார்கள்"

"இன்றைய ஜோதிடப் பாடத்திற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?"

"அதையும் நானே சொல்ல வேண்டுமா? படித்துப் பாருங்கள் தெரியும்!
-----------------------------------------------------------------------------------------------------------------


முன் பதிவின் தொடர்ச்சி இது. அந்தப் பதிவைப் படித்திராதவர்கள் படித்து விட்டு
இங்கே வரவேண்டுகிறேன்!


ஆறாம் வீட்டிற்குச் சில வினோதமான செயல்பாடுகள் உண்டு! தீயவன் அங்கே
நன்மைகள் செய்வான். நல்லவன் அங்கே தீயவனாக மாறிவிடுவான். தீயவர்கள்
என்பது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களைக் குறிக்கும்.

ஆறாம் வீடு தீமைகள் நிறைந்த வீடு. அதை மறைவிடம் என்போம். தீமைகளை
மறைந்து செய்வதால் அந்தப் பெயர் வந்தது போலும்!

Sixth house is called as eveil house!

அந்த வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்தாலும் சரி அல்லது அந்தவீட்டை ஒரு தீய
கிரகம் பார்த்தாலும் சரி (by aspect), ஜாதகனுக்குத் தீமைகள் குறையும். எதிரிகளும்
குறைவாகவே இருப்பார்கள். அப்படி இருக்கும் இரண்டொருவரும் அவனுக்குப்
பயப்படுவார்கள்.

அதே நேரத்தில் நல்ல கிரகம் அமர்ந்தாலும் சரி அல்லது அந்தவீட்டை ஒரு நல்ல
கிரகம் பார்த்தாலும் சரி (by aspect), ஜாதகனுக்குத் தீமைகள் அதிகரிக்கும்.
எதிரிகளும் எதிர்ப்புகளும் அதிகமாகவே இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபனுடன் சனி அல்லது ராகு கூட்டாக இருந்தால் (by association)
ஜாதகனுக்கு எப்போதுமே தொல்லைகள்தான். தொல்லைகள் க்யூவில் நின்று
அவனைப் படுத்தி எடுக்கும். நிம்மதியே இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்!
----------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டில் சென்று அமரும் கிரகங்களுக்கான பலன்கள்!

1
சூரியன்.
ஜாதகன் சிறந்த அரசியல்வாதியாக இருப்பான். வெற்றியாளனாக இருப்பான். எதையும்
சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பான். ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவுகள்
ஏற்படும்.

சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத
வியாதிகள் உண்டாகும்.

சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகன் நிர்வாகத்
திறமை உள்ளவனாக இருப்பான். செல்வந்தனாக இருப்பான். எடுத்த காரியங்களை
வெற்றிகரமாக முடிக்கக்கூடியவனாக இருப்பான்.

இதே இடத்துச் சூரியன் சனியின் பார்வை பெற்றால், இதய நோய்கள் உடையவனாக
இருப்பான். அல்லது பின்னாட்களில் இதய நோய்கள் உண்டாகும்!
---------------------------------------------------------------------------------------------------
2.
சந்திரன்
குழந்தைப் பருவத்தில் அடிக்கடி நோயுற்ற சேயாக இருந்திருப்பான்.

அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை/பார்வை
பெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். மாறாத எதிரிகள் இருப்பார்கள்.

அதே இடத்துச் சந்திரன் நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை
பெற்றிருந்தால், ஜாதகன் திறமைசாலியாக இருப்பான். எடுத்த காரியங்களை
வெற்றிகரமாக முடிக்கக் கூடியவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------
3.
செவ்வாய்
மிகுந்த பந்த பாச உணர்வுகள் உள்ளவராக ஜாதகர் இருப்பார். வெற்றியாளர்.
அரசுக் கட்டிலில் அமர்ந்தால் சிறந்த நிர்வாகி அல்லது ஆட்சியாளராக இருப்பார்.

அதே செவ்வாய், சேர்க்கை அல்லது பார்வையால் தீய கிரகங்களின் கூட்டணியில்
விழ நேர்ந்தால், விபத்துக்கள், விரையங்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால்
தொல்லைகள் ஏற்படும்.

செவ்வாயுடன் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் சேர்க்கை அல்லது பார்வை
இருந்தால் ஜாதகன் அசாதரணமான மரணத்தைச் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------
4.
புதன்

எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்பவர். கல்வியில் தடைகள் ஏற்படும்.

புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால்
மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் உண்டாகும்.

சோம்பல் உண்டாகும். பேச்சில் கடுமை உண்டாகும். எதிரிகளுக்குப் பயப்பட
மாட்டார். எதிரிகள் இவரைக் கண்டால் பயந்து ஓடுவார்கள்
-------------------------------------------------------------------------------------------------
5.
குரு.

சுறுசுறுப்பு இல்லாமை ஏற்படும். மெத்தனமாக இருப்பார். அவமானம், அவமரியாதை
களைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர்.

அதே குருவிற்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் உடல்
உபாதைகள் உண்டாகும்.
----------------------------------------------------------------------------------------------------
6.
சுக்கிரன்
விரோதிகளே இருக்கமாட்டார்கள். பெண்களால் ஏமாற்றப்படுவார்கள். பெண்
ஜாதகராக இருந்தால் ஆண்களால் ஏமாற்றப்படுவார்கள்.

அதே சுக்கிரனுக்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால்,
ஜாதகர் அதீதமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பார்.
அதனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகு
பவராகவும் இருப்பார்.
----------------------------------------------------------------------------------------------------
7.
சனி.
வாதம் செய்பவர். பெருந்தீனிக்காரர். துணிச்சல்மிக்கவர். எதிரிகள் இல்லாதவர்.

அங்கிருக்கும் சனி, பார்வை அல்லது சேர்க்கையால் கெட்டிருந்தால், நோய்கள்
உண்டாகும், நண்பர்களால் சீரழிவு உண்டாகும்.

சனியுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அல்லது சனி செவ்வாயின் பார்வை பெற்றால்,
அபாயகரமான நோய்கள் உண்டாகும். அடிக்கடி அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட
நேரிடும்.

ராகு சேர்ந்தால் அல்லது பார்த்தால் (அதாவது ஆறில் இருக்கும் சனியை)
ஜாதகருக்குக் ஹிஸ்டீரியா நோய் உண்டாகும்.

சனி நல்ல நிலமையில் அங்கிருந்தால் ஜாதகர் பெரிய காண்ட்ராக்டராகப் பணி
செய்வார். பெரும் பொருள் ஈட்டுவார்.
-----------------------------------------------------------------------------------------------------
8.
ராகு.
நீண்ட ஆயுள் உடையவர்.ஆரோக்கியமானவர். ஆனால் அவ்வப்போது எதிரிகளின்
தொல்லைகளும் இருக்கும்.

ராகு கெட்டிருந்தால் புதிரான நோய்கள் உண்டாகும்.

இங்கே ராகு சந்திரனுடன் இருந்தால் அல்லது சந்திரனின் பார்வை பெற்றால் மனப்
பிறழ்வு உண்டாகும்.(mental retartation)

இதே இடத்தில் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல்
பேர்வழியாக இருப்பார்.
------------------------------------------------------------------------------------------------------
9.
கேது.
கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான். ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும்,
செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக
இருக்காது. சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்.

புதன், சனி போன்ற நட்புக்கிரகங்களின் கூட்டணி அமைந்தால், ஜாதகன், மந்திர,
தந்திர ஜால வேலைகளில் கெட்டிக்காரராக இருப்பார்.
-------------------------------------------------------------------------------------------------------
பொதுவாக ஆறாம் வீட்டு அதிபதியால் பெரும்பாலும் தீமையான பலன்களே
கிடைக்கும் அல்லது நடைபெறும். நம் ஜாதகத்தின் வில்லன் அவன்தான். அவன்
தன்னுடைய தசா, புக்திகளில் அதை நடத்திக் காட்டித் தன் இருப்பை வெளிப்
படுத்துவான். வேண்டா வெறுப்பாக அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அதில் இருந்து மீள வழியில்லையா?

ஏன் இல்லை? இருக்கிறது!

இறைவழிபாடு ஒன்றுதான் அதற்கு வழி!

இறைவன் அவற்றைத் தாங்கும் சக்தியை - தாக்குப்பிடிக்கும் சக்தியைத்
உங்களுக்குத் தருவான்.

வழி படாவிட்டால்?

வழிபடாவிட்டாலும் தருவான். அவன் கருணை மிக்கவன்.

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அவன் கருணைக்கு உட்பட்டவைதான்.

வழிபடாமல் இருந்து பார்க்கலாமா?

அது உங்கள் விருப்பம்!

சும்மா சுமப்பதை, நனைத்துச் சுமப்பீர்கள் அவ்வளவுதான்!

என் ஆசான் கவியரசரின் மொழியில் சொன்னால், புரிகிறவர்கள் புரிந்து
கொள்ளட்டும், புரியாதவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்!

----------------------------------------------------------------------------------------------------------
மிகப் பெரிய தலைவர்களும், தொழிலதிபர்களும், தோல்விகளைச் சந்திக்கிறார்கள்
என்றால் அது ஆறாம் வீட்டுக்காரனின் பங்களிப்பாகவே இருக்கும்!

உதாரணமாக நீங்கள் சிம்ம லக்கினக்காரராக இருந்தால், உங்கள் ஆறாம் வீட்டு
அதிபதியான சனிதான் உங்களுடைய வில்லன். சனியின் தசா, புக்திகளில்
உங்களுக்குத் தீய பலன்களே நடைபெறும். உங்களை உண்டு இல்லை என்று
ஆக்கிவிடுவான்.

இதை நான் ஆணித்தரமாகச் சொல்வேன். ஏனென்றால் நான் சிம்ம லக்கினக்காரன்
என் ஆறாம் இடத்து அதிபதியான சனியுடன், கடந்த 18 வருடங்களாகக் கத்திச்
சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் ஒரு வருடம் பாக்கியுள்ளது
சண்டை முடிய! (அதாவது சனி திசை முடிய)

பழநி ஆண்டவர் கொடுத்த மன உறுதி என்ற பெரிய பட்டாக் கத்தியும், அவர்
அருள் என்னும் கேடயமும் இருப்பதால் பலத்த பொருளாதாராக் காயங்களையும்,
வியாபாரத் துரோகங்கள் என்னும் சிராய்ப்புக்களையும், புன்முறுவலோடு
சந்தித்துத் தாண்டி வந்திருக்கிறேன்.

அதே சனிதான் என் ராசிநாதன் (மகர ராசி) என்பதால், அவனும் தன் கர்மத்தைச்
செய்வதற்காக என்னோடு யுத்ததில் இறங்கினாலும், தன் ராசிக்குரியவன் ஆயிற்றே
இவன் என்பதால், எனக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்துத்தான், ஆசுவாசப்
படுத்தித்தான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான். இல்லையென்றால் வீழ்த்துவ
தென்பது அவனால் முடியாத காரியமா என்ன?

அதனால்தான் எனக்கு அவன் மீது ஒரு பரிவு உண்டு!

நான் சிம்ம லக்கினம் - மகர ராசிக்காரன். என் லக்கினநாதன் சூரியன், ராசிநாதன்
சனி. இருவருமே பரம எதிரிகள். ஆனால் என் ஜாதகப்படி இருவருமே எனக்கு
மிகவும் வேண்டியவர்கள். என்னவொரு சுவையான விஷயம் பார்த்தீர்களா?

ஜோதிட விநோதங்களில் இதுவும் ஒன்று!

ஆறாம் வீட்டைப்பற்றிய பாடம் நிறைவுறுகிறது!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

55 comments:

  1. ஹலோ வாத்தியாரய்யா,

    மொதல்ல ஒரு சந்தேகம், மேலே இருக்குற படத்துக்கும் பாடத்துக்கும் என்ன தொடர்பு?
    பாடம் புரியர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.அதன்னல மறுபடியும் படிச்சுட்டு வர்ரேன்.

    ReplyDelete
  2. அய்யா,
    இன்றைய பாடம் அருமை ,ஒரு சந்தேகம் ...
    எனக்கு 5 மற்றும் 6 ம வீட்டு அதிபதியும் ஒன்றே சனி - (கன்னி லக்னம்.)
    இப்படி இருந்தால் சனி எந்த வீட்டுக்கு உரிய பலன் கொடுப்பார் ? ( 5வீடா இல்லை 6ம வீடா ) சனி பத்தாம் வீட்டில் கேது வுடன் நட்பாக உள்ளார்.

    GK

    ReplyDelete
  3. /////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    மொதல்ல ஒரு சந்தேகம், மேலே இருக்குற படத்துக்கும் பாடத்துக்கும் என்ன தொடர்பு?
    பாடம் புரியர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.அதன்னல மறுபடியும் படிச்சுட்டு வர்ரேன்.////

    ச்சும்மா....ஒரு அழகுக்காகத்தான் சகோதரி! அழகாக இருக்கிறதா? இல்லையா?

    ReplyDelete
  4. //////Geekay said...
    அய்யா,
    இன்றைய பாடம் அருமை ,ஒரு சந்தேகம் ...
    எனக்கு 5 மற்றும் 6 ம வீட்டு அதிபதியும் ஒன்றே சனி - (கன்னி லக்னம்.)
    இப்படி இருந்தால் சனி எந்த வீட்டுக்கு உரிய பலன் கொடுப்பார் ?
    ( 5வீடா இல்லை 6ம வீடா ) சனி பத்தாம் வீட்டில் கேது வுடன் நட்பாக உள்ளார்.
    GK//////

    ஒரு அமைச்சர் இரண்டு துறைகளுக்கு அமைச்சராக இருப்பதில்லையா?
    பூகோள வாத்தியார் சமூகப் பாடத்தையும் சேர்த்து நடத்துவதில்லையா?
    அப்படித்தான் இதுவும்!

    கன்னி லக்கினத்திற்கு 5ஆம் மற்றும் 6ஆம் பாடங்கள் இரண்டிற்குமே ஒரே வாத்தியார்!
    அதேபோல சிம்ம லக்கினத்திற்கு 6 & 7ஆம் பாடங்களுக்கும் அதே வாத்தியார்தான்!
    கடக லக்கினத்திற்கு 7 & 8, ரிஷப லக்கினத்திற்கு 9 & 10 இப்படிப் போய்க் கொண்டே இருக்கும்
    அவர் பெயர் சனி. அந்தந்த வகுப்பில் அந்தந்தப் பாடங்களை நடத்துவார்!
    Is it clear now Mr.Geekay?

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்.
    வழமையான உதாரண மகர லக்ன,துலா இராசி ஜாதகத்தில் 6,9 க்குடைய புதன், உச்சம் பெற்ற சூரியனோடு 4 மிடத்திலமர்ந்து, 7க்குடையவரான சந்திரனால் 10 மிடத்திலிருந்து பார்க்கப் படுகிறார்.மேலும் 3 மிடத்திலுள்ள செவ்வாய் தனது 4ம் பார்வையாக புதனின் வீடான 6ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பாதிப்பு என்ன?

    ReplyDelete
  6. //////தியாகராஜன் said...
    ஐயா வணக்கம்.
    வழமையான உதாரண மகர லக்ன,துலா இராசி ஜாதகத்தில்
    6,9 க்குடைய புதன், உச்சம் பெற்ற சூரியனோடு 4 மிடத்திலமர்ந்து,
    7க்குடையவரான சந்திரனால் 10 மிடத்திலிருந்து பார்க்கப் படுகிறார்.
    மேலும் 3 மிடத்திலுள்ள செவ்வாய் தனது 4ம் பார்வையாக புதனின்
    வீடான 6ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பாதிப்பு என்ன?/////

    The placement of sixth lord in the 4th house along with the eight lord sun is not desireable!
    But the aspect of natural benefic Moon (also 7th lord) will reduce the evil effects

    ReplyDelete
  7. உள்ளேன் ஐயா.
    பாடங்களை படித்துவிட்டேன்.

    ReplyDelete
  8. //உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அவன் கருணைக்கு உட்பட்டவைதான்.

    வழிபடாமல் இருந்து பார்க்கலாமா?

    அது உங்கள் விருப்பம்!

    சும்மா சுமப்பதை, நனைத்துச் சுமப்பீர்கள் அவ்வளவுதான்!//

    ஒரு பெரிய உண்மையை நச்சுன்னு சொல்லிவிட்டீர்கள்

    :) :)

    ReplyDelete
  9. //////கல்கிதாசன் said...
    உள்ளேன் ஐயா.
    பாடங்களை படித்துவிட்டேன்./////

    இதோ அடுத்த பாடத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன் கல்கியாரே!:-)))

    ReplyDelete
  10. //////புருனோ Bruno said...
    //உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அவன் கருணைக்கு உட்பட்டவைதான்.
    வழிபடாமல் இருந்து பார்க்கலாமா?
    அது உங்கள் விருப்பம்!
    சும்மா சுமப்பதை, நனைத்துச் சுமப்பீர்கள் அவ்வளவுதான்!//

    ஒரு பெரிய உண்மையை நச்சுன்னு சொல்லிவிட்டீர்கள்:) :)/////

    உண்மையிலே உங்களுடைய பின்னூட்டங்கள் அடியவனுக்கு ஊக்க மருந்து டாக்டர்!
    நன்றி டாக்டர்!

    செலவில்லாத ஊக்க மருந்து!:-))))

    ReplyDelete
  11. Dear Sir,

    I have Kumba lakanam, In my 6th House, Suriyan & Ragu is sitting. Can you please tell me what is the effect for it?

    With Best Regards
    S R Balaji

    ReplyDelete
  12. 'புலி பசித்தாலும் புல்லை தின்னாது'
    'புலிக்கு பிறந்தது பூனையாகுமா'
    'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி எட்டடி பாயும்' 'புலி பதுங்குவது பாய்வதற்கே' என்று பல சிந்தனைகள் ஐயா, இந்த பாடத்தின் படத்தை பார்க்கவும். மறைவு ஸ்தானத்து பாடத்துக்கு மறைந்திருந்து தாக்கும் விலங்கை படமாக்கியிருக்கும் விதம் நன்று.

    கொக்கு தலை வெண்ணெயாய் பெயர் மாற்ற கதையும் இலவச இணைப்பாக கிடைத்தது எங்களுக்கு :)))

    ReplyDelete
  13. (தலைப்பை மட்டும் படித்து இட்ட பின்னூட்டம்)

    பெருமாளுக்கு என்ன ஆச்சா??? சனி உச்சத்தில் இருக்கு .. யார் யார் வாய்லியோ விழுந்து எழுந்திருக்க வேண்டியதாப்போச்சே!!

    ReplyDelete
  14. Dear Subbiah sir,
    very good lesson and i am able to understand today's lesson clearly with out any effort.

    Following are my details and Could you please tell me why am i getting health problems frequently?

    Tulam rasi ( moon is in that place) 23 parals
    kumbam laguna ( guru in in that place) 26 parals
    Sani in 5th place at midunan 24 parals
    6th place kadakam has 29 parals
    6th load is moon in 9th place at Tulam with 23 parals.
    Currently i have guru maha dasi with moon sub dasa and it should end by 30-01-2009. Since moon is my 6th load does it give only trouble and health problems?


    Thanks,
    Manickam

    ReplyDelete
  15. பெருமாளை விடுங்க.....அவரை நான் படத்திலும் கோயிலிலும், வீட்டிலும் பார்த்ததோட சரி.

    வீட்டுலே கொண்டுவந்து வச்சுக்க முடியாதவங்க படத்தை இந்தப் பதிவுக்குப் போட்டீங்க பாருங்க.

    ஹைய்யோ....ஒவ்வொன்னும் என்ன அழகு. செல்லம்போலப் பாக்குதுங்க.

    அதுக்கே ஒரு நன்றி உங்களுக்கு.

    ரொம்பப் பிடிச்சிருக்கு:-)

    ReplyDelete
  16. //"அதுதான் விதி! சும்மா சுமக்க வேண்டிய துணி மூட்டையைச் சிலர் நனைத்துச்
    சுமப்பார்கள்"//
    உண்மை வாத்தியாரைய்யா!!
    நான் பலபேரை பார்த்து இருக்கிறேன்

    ReplyDelete
  17. //////S R Balaji said...
    Dear Sir,
    I have Kumba lakanam, In my 6th House, Suriyan & Ragu is sitting.
    Can you please tell me what is the effect for it?
    With Best Regards
    S R Balaji////////

    The placement of the Sun (The planet for body) in
    the sixth house along with melefic planet Rahu is
    not auspicious (நல்லதல்ல)
    You may suffer with health problems in the later
    part of the life. Be careful!

    ReplyDelete
  18. ///////தமாம் பாலா (dammam bala) said...
    'புலி பசித்தாலும் புல்லை தின்னாது'
    'புலிக்கு பிறந்தது பூனையாகுமா'
    'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி எட்டடி பாயும்'
    'புலி பதுங்குவது பாய்வதற்கே' என்று பல சிந்தனைகள் ஐயா,
    இந்த பாடத்தின் படத்தை பார்க்கவும். மறைவு ஸ்தானத்து
    பாடத்துக்கு மறைந்திருந்து தாக்கும் விலங்கை படமாக்கியிருக்கும்
    விதம் நன்று.
    கொக்கு தலை வெண்ணெயாய் பெயர் மாற்ற கதையும்
    இலவச இணைப்பாக கிடைத்தது எங்களுக்கு :)))/////

    நான் யோசித்துப் பார்க்காத விளக்கத்தையெல்லாம் சிறப்பாகக்
    கொடுத்திருக்கிறீர்கள். நன்றி பாலா

    ReplyDelete
  19. //////Ram Ravishankar said...
    (தலைப்பை மட்டும் படித்து இட்ட பின்னூட்டம்)
    பெருமாளுக்கு என்ன ஆச்சா??? சனி உச்சத்தில் இருக்கு ..
    யார் யார் வாய்லியோ விழுந்து எழுந்திருக்க வேண்டியதாப்போச்சே!!//////

    நீங்கள் நினைக்கும் அந்தப் பெருமாளுக்கு ஒன்றும் ஆகாது!
    அவருக்குத்தான் பூதேவியும், மாதேவியும் அரணாக இருக்கிறார்களே!

    ReplyDelete
  20. //////Monickam said...
    Dear Subbiah sir,
    very good lesson and i am able to understand today's lesson clearly with out any effort.
    Following are my details and Could you please tell me why am i getting health problems frequently?

    Tulam rasi ( moon is in that place) 23 parals
    kumbam lagna ( guru in in that place) 26 parals
    Sani in 5th place at midunan 24 parals
    6th place kadakam has 29 parals
    6th load is moon in 9th place at Tulam with 23 parals.
    Currently i have guru maha dasi with moon sub dasa
    and it should end by 30-01-2009. Since moon is my 6th load
    does it give only trouble and health problems?
    Thanks,
    Manickam//////

    முக்கியமான கிரகத்தை விட்டு விட்டீரே ஸ்வாமி!
    சூரியன் எங்கே இருக்கிறார்?
    அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் -
    எப்படி ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்வது?

    ReplyDelete
  21. /////துளசி கோபால் said...
    பெருமாளை விடுங்க.....அவரை நான் படத்திலும்
    கோயிலிலும், வீட்டிலும் பார்த்ததோட சரி.//////

    பெயரிலேயே அவருக்குப் பிடித்ததைக் கொண்டிருப்பதால்,
    அவர் ஒரு நாள் உங்களுக்கு (அட்லீஸ்ட் கனவிலாவது) காட்சி
    கொடுப்பார் டீச்சர்!

    /////////வீட்டுலே கொண்டுவந்து வச்சுக்க முடியாதவங்க
    படத்தை இந்தப் பதிவுக்குப் போட்டீங்க பாருங்க.
    ஹைய்யோ....ஒவ்வொன்னும் என்ன அழகு.
    செல்லம்போலப் பாக்குதுங்க.
    அதுக்கே ஒரு நன்றி உங்களுக்கு.
    ரொம்பப் பிடிச்சிருக்கு:-)//////

    நீங்கள் பெரிய கலா ரசிகை ஆயிற்றே! உங்களுக்குப் பிடிக்காமல்
    போனால் மட்டுமே ஆச்சரியப் படவேண்டும் டீச்சர்!

    ReplyDelete
  22. //////Blogger ARUVAI BASKAR said...
    //"அதுதான் விதி! சும்மா சுமக்க வேண்டிய துணி மூட்டையைச் சிலர் நனைத்துச்
    சுமப்பார்கள்"//
    உண்மை வாத்தியாரைய்யா!!
    நான் பலபேரை பார்த்து இருக்கிறேன்////

    நன்றி அருப்புக்கோட்டையாரே!

    ReplyDelete
  23. அரியும் சிவனும் ஒன்னு

    அரியாதவன் வாயில் ........


    வீர வைணவர்கள் போல்
    வீர சைவர்கள்

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  24. வாத்தியரே இன்றைய வகுப்பு அருமை.. படித்தும் விட்டேன்.. :-))

    1.எனக்கு ஆறில் கேது தனியாக இருக்கிறார். அப்போ....
    //கேது.
    கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான். ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும்,
    செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக
    இருக்காது. சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்.//

    இது சரிதானா?

    2.ஆறின் அதிபதி குரு, எனக்கு இப்போது குரு திசை தான் நடக்கிறது. உங்கள் கூறு படி
    //பொதுவாக ஆறாம் வீட்டு அதிபதியால் பெரும்பாலும் தீமையான பலன்களே
    கிடைக்கும் அல்லது நடைபெறும். நம் ஜாதகத்தின் வில்லன் அவன்தான். அவன்
    தன்னுடைய தசா, புக்திகளில் அதை நடத்திக் காட்டித் தன் இருப்பை வெளிப்
    படுத்துவான்.//
    எனக்கு குரு திசை சரி இல்லையா?

    ReplyDelete
  25. //////கோவை விஜய் said...
    அரியும் சிவனும் ஒன்னு
    அரியாதவன் வாயில் ........
    வீர வைணவர்கள் போல்
    வீர சைவர்கள்
    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com//////

    இன்றைய சூழலில் எல்லோருமே, இறைவன் ஒருவன் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்
    அதனால் அறியாதவன் வாயில் மண்ணிற்கெல்லாம் வேலையில்லை!

    ReplyDelete
  26. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியாரே இன்றைய வகுப்பு அருமை.. படித்தும் விட்டேன்.. :-))
    1.எனக்கு ஆறில் கேது தனியாக இருக்கிறார். அப்போ....
    //கேது.
    கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான். ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும்,
    செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக
    இருக்காது. சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்.//
    இது சரிதானா?////

    அதுதான் பொது விதி! உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரையில்,
    அது சரியா இல்லையா என்று நீங்கள் அல்லவா சொல்லவேண்டும்!

    /////// 2.ஆறின் அதிபதி குரு, எனக்கு இப்போது குரு திசை தான் நடக்கிறது. உங்கள் கூறு படி
    //பொதுவாக ஆறாம் வீட்டு அதிபதியால் பெரும்பாலும் தீமையான பலன்களே
    கிடைக்கும் அல்லது நடைபெறும். நம் ஜாதகத்தின் வில்லன் அவன்தான். அவன்
    தன்னுடைய தசா, புக்திகளில் அதை நடத்திக் காட்டித் தன் இருப்பை வெளிப்
    படுத்துவான்.//
    எனக்கு குரு திசை சரி இல்லையா?//////

    அது உங்கள்
    ஆறாம் வீட்டதிபர் எங்கே போய்ச் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்,
    ஆறாம் வீட்டை யார் யார் லுக் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்
    ஆறாம் வீட்டதிபரின் திசையில் என்ன புக்தி நடைபெறுகிறது
    அடுத்து வரும் புக்திகள் என்னென்ன?
    அந்த நாயகர்கள் எல்லாம் எங்கே போய் உட்கார்ந்து.............
    என்ன தலை சுற்றுகிறதா?

    ஆகஸ்ட்டில் என்னைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமல்லவா
    அப்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள்.
    இந்த ஒரு கேள்விக்கு மட்டும், உங்கள் ஜாதகத்தைப் பார்த்துப்
    பலன் சொல்கிறேன்.

    ReplyDelete
  27. //அது உங்கள்
    ஆறாம் வீட்டதிபர் எங்கே போய்ச் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்,
    ஆறாம் வீட்டை யார் யார் லுக் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்
    ஆறாம் வீட்டதிபரின் திசையில் என்ன புக்தி நடைபெறுகிறது
    அடுத்து வரும் புக்திகள் என்னென்ன?
    அந்த நாயகர்கள் எல்லாம் எங்கே போய் உட்கார்ந்து.............
    என்ன தலை சுற்றுகிறதா?

    ஆகஸ்ட்டில் என்னைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமல்லவா
    அப்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள்.
    இந்த ஒரு கேள்விக்கு மட்டும், உங்கள் ஜாதகத்தைப் பார்த்துப்
    பலன் சொல்கிறேன். //

    கண்டிப்பாக கொண்டு வருகிறேன், நன்றி வாத்தியரே

    ReplyDelete
  28. Tulam rasi ( moon is in that place) 23 parals
    kumbam lagna ( guru in in that place) 26 parals
    Sani in 5th place at midunan 24 parals
    6th place kadakam has 29 parals
    6th load is moon in 9th place at Tulam with 23 parals.
    Currently i have guru maha dasi with moon sub dasa
    and it should end by 30-01-2009. Since moon is my 6th load
    does it give only trouble and health problems?
    Thanks,
    Manickam//////

    முக்கியமான கிரகத்தை விட்டு விட்டீரே ஸ்வாமி!
    சூரியன் எங்கே இருக்கிறார்?
    அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் -
    எப்படி ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்வது?

    sun is at virucham in the 10th house with mars, mercury and ragu. the 10th house has 29 parals. ketu is at the 4th house. Rasi atapathi Venus is at the 11th house with 34 parals

    Could you please explain how is sun related to health?

    Thanks,
    Monickam

    ReplyDelete
  29. குருவே,

    கதை அருமை. பாடம் சிறிது பயமுறுத்தினாலும், இறையருள் காக்கும் என வலுவாக கூறியது மனதுக்கு தெம்பாக உள்ளது.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  30. இன்றைய கதை+ வகுப்பு = அருமை

    ReplyDelete
  31. //////Monickam said...
    Tulam rasi ( moon is in that place) 23 parals
    kumbam lagna ( guru in in that place) 26 parals
    Sani in 5th place at midunan 24 parals
    6th place kadakam has 29 parals
    6th load is moon in 9th place at Tulam with 23 parals.
    Currently i have guru maha dasi with moon sub dasa
    and it should end by 30-01-2009. Since moon is my 6th load
    does it give only trouble and health problems?
    Thanks,
    Manickam//////

    முக்கியமான கிரகத்தை விட்டு விட்டீரே ஸ்வாமி!
    சூரியன் எங்கே இருக்கிறார்?
    அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் -
    எப்படி ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்வது?

    sun is at virucham in the 10th house with mars, mercury and ragu. the 10th house has 29 parals. ketu is at the 4th house. Rasi atapathi Venus is at the 11th house with 34 parals
    Could you please explain how is sun related to health?
    Thanks,
    Monickam///////

    The Sixth lord moon is in the ninth place without any aspect
    of melefic planets. His period will not do any harm
    Sun is the karaka (authority) for the body & his conjunction
    with Rahu is not auspicious (நல்லதல்ல)
    So, in the sub period of the sun or rahu there may be some little ailments!
    (A physical disorder, especially a mild illness.)

    ReplyDelete
  32. //////Rajagopal said...
    குருவே,
    கதை அருமை. பாடம் சிறிது பயமுறுத்தினாலும், இறையருள் காக்கும்
    என வலுவாக கூறியது மனதுக்கு தெம்பாக உள்ளது.
    அன்புடன்
    இராசகோபால்//////

    குறைகள், நிறைகள் நிறைந்ததுதான் ஜாதகம். எல்லொருமே சமம்தான். அனைவருக்கும் பரல்கள் 337 தானே!
    மனதிற்குத் தெம்பு அளிப்பதற்குதான் இந்தக் கட்டுரைத் தொடரே! யார் முதலில் சொல்கிறார்கள் பார்ப்போம் என்றிருந்தேன்
    101 அத்தியாயங்களுக்குப் பிறகு இன்று, அதுவும் நீங்கள் முதலில் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  33. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    இன்றைய கதை+ வகுப்பு = அருமை////

    நன்றி நவநீதன்! வகுப்பிற்கு ஏன் லேட்?

    ReplyDelete
  34. Dear Sir,

    Thank you for your lesson.


    -Shankar

    ReplyDelete
  35. ////hotcat said...
    Dear Sir,
    Thank you for your lesson.
    -Shankar////

    நன்றி இருக்கட்டும்! பாடத்தைப் படித்தீர்களா?
    எல்லாம் புரியும்படி உள்ளதா?

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. I tried to see my horoscope with the lesson, I am confused...anyway, I will ask you...
    I am simha lagna, kataka rassi
    Sun is in lagna with Saturn (6th lord) and mercury. while 6th house is empty...6th is being aspected by venus and moon from 12 house....
    Jupiter and mars is in 11th house.

    How to find my 6th lord effectiveness?

    -Shankar

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    இன்றைய கதை+ வகுப்பு = அருமை////

    நன்றி நவநீதன்! வகுப்பிற்கு ஏன் லேட்?///

    சிறிய அலுவலகப் பணியின் காரணமாகாக் தாமதம் ஏற்ப்பட்டது. தங்களின் பதிவு ஒரு பொற்க்குடம் என்றால் பின்னூட்டம் அதற்குப் பொட்டு வெய்தாற்ப்போல் உள்ளது.
    தங்களின் பதிவு மட்டும் அல்லாது பின்னூட்டமும் செய்தி,பாடம் போதிந்தது

    ReplyDelete
  42. /////hotcat said...
    I tried to see my horoscope with the lesson,
    I am confused...anyway, I will ask you...
    I am simha lagna, kataka rassi
    Sun is in lagna with Saturn (6th lord) and mercury.
    while 6th house is empty...6th is being aspected by
    venus and moon from 12 house....
    Jupiter and mars is in 11th house.
    How to find my 6th lord effectiveness?
    -Shankar//////

    சூரியன் & சனி சேர்க்கை - அதுவும் லக்கினத்தில் நல்லதல்ல!
    நான்கடி ஏறினால் ஆறடி சருக்கும்!
    ஆறாம் வீட்டை இரு நல்ல கிரகங்கள் பார்ப்பது நல்லதுதான்
    வரும் துன்பங்களில் இருந்து அவைகள் உங்களைக் காக்கும்!

    ReplyDelete
  43. //////கல்கிதாசன் said...
    This post has been removed by the author./////

    What happened Mr.Kalkidasan?
    Why this deletion?

    ReplyDelete
  44. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    இன்றைய கதை+ வகுப்பு = அருமை////
    நன்றி நவநீதன்! வகுப்பிற்கு ஏன் லேட்?///
    சிறிய அலுவலகப் பணியின் காரணமாகாக் தாமதம் ஏற்ப்பட்டது.
    தங்களின் பதிவு ஒரு பொற்க்குடம் என்றால் பின்னூட்டம் அதற்குப்
    பொட்டு வெய்தாற்ப்போல் உள்ளது.
    தங்களின் பதிவு மட்டும் அல்லாது பின்னூட்டமும் செய்தி,
    பாடம் போதிந்தது//////

    அதனால்தான் பின்னூட்டங்களுக்கும் பதில்களைக் கவனத்துடன் எழுதுகிறேன்

    ReplyDelete
  45. /////What happened Mr.Kalkidasan?
    Why this deletion?/////

    hi hi ...

    ReplyDelete
  46. வணக்கம் ஐயா! ஒரு வாரமாக இங்கு அகலப்பட்டை வேலை செய்யாதால் பின்னுட்டம் எதுவும் இட இயலவில்லை..

    பாடத்தை மட்டும் பிரவுசிங் செண்டரில் படித்தேன்.

    மற்றும் கூடுதுறை சங்கமேஸ்வரர் பதிவு மட்டும் ஆடிப்பெருக்கு அவசரம் கருதி வெளியிட்டேன். பார்த்துவிட்டு கருத்திட கேட்டுக்கொள்கிறேன்

    href="http://scssundar.blogspot.com/2008/07/blog-post_30.html"

    ReplyDelete
  47. ஐயா,

    ஆறாமிடத்தில் சந்திரனுடன் செவ்வாய் இருக்க குரு 9ம் பார்வை பார்க்கிறார்.

    இதற்கு எப்படி?

    குரு ஆறாமிடத்தில் தனியொருவறாக இருந்தால் ? சோம்பேறி தானா?

    ReplyDelete
  48. வாத்தியாரே கொஞ்சம் லேட்டா ஒரு கேள்வி.
    குரு பகவான் கும்ப ராசிக்காரர்களுக்கு அவர் பார்வை பதியும் இடங்களுக்கு நன்மை செய்வாரா தீமை ? செய்வாரா?.

    ReplyDelete
  49. /////கூடுதுறை said...
    வணக்கம் ஐயா! ஒரு வாரமாக இங்கு அகலப்பட்டை வேலை செய்யாதால் பின்னுட்டம் எதுவும் இட இயலவில்லை..
    பாடத்தை மட்டும் பிரவுசிங் செண்டரில் படித்தேன்.
    மற்றும் கூடுதுறை சங்கமேஸ்வரர் பதிவு மட்டும் ஆடிப்பெருக்கு அவசரம் கருதி வெளியிட்டேன். பார்த்துவிட்டு கருத்திட கேட்டுக்கொள்கிறேன்
    href="http://scssundar.blogspot.com/2008/07/blog-post_30.html"
    Thursday, July 31, 2008 6:29:00 ப்ம் /////

    சரி, பார்த்துவிட்டுச்சொல்கிறேன்!

    ReplyDelete
  50. /////கூடுதுறை said...
    ஐயா,
    ஆறாமிடத்தில் சந்திரனுடன் செவ்வாய் இருக்க குரு 9ம் பார்வை பார்க்கிறார்.
    இதற்கு எப்படி?////

    குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். கோடியை விட்டுத்தள்ளுங்கள். நமக்கு ஒரு புண்ணியமாவது ‍ அதாவது ஒரு நல்லதாவது நடக்காதா?
    நடக்கும்!

    ////குரு ஆறாமிடத்தில் தனியொருவறாக இருந்தால் ? சோம்பேறி தானா?///

    நாமாக சோம்பி இருந்‍தால் அது சோம்பல்!அந்த நிலைக்கு அதாவது வேலை வெட்டி இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டால் அதற்கு என்ன பெயர்? ஆறாம் இடத்துக் குரு
    சமயத்தில் அதையும் செய்யும்!

    ReplyDelete
  51. /////கல்கிதாசன் said...
    வாத்தியாரே கொஞ்சம் லேட்டா ஒரு கேள்வி.
    குரு பகவான் கும்ப ராசிக்காரர்களுக்கு அவர் பார்வை பதியும் இடங்களுக்கு நன்மை செய்வாரா தீமை ? செய்வாரா?./////

    கும்ப ராசி என்று இல்லை, எந்த ராசிக்கும் தன் பார்வையால் நன்மைகளைச் செய்பவர்தான் குரு!

    ReplyDelete
  52. பெருமாள் பெத்தபெருமாள் ஆனதும் சிவபெருமாள் ஆனதும் நல்ல நகைச்சுவையான கதை ஐயா. :-)

    ReplyDelete
  53. குமரன் (Kumaran) said...
    பெருமாள் பெத்தபெருமாள் ஆனதும் சிவபெருமாள் ஆனதும் நல்ல நகைச்சுவையான கதை ஐயா. :-)////

    ஆன்மீகக் கதை என்றால் உங்களுக் பிடிக்குமே! உங்களைப் போன்ற
    பக்தர்களுக்காகத்தான் (ரசிகர்களுக்காகத்தான்) நடுநடுவே இப்படிக் கதைகள்

    ReplyDelete
  54. Hello Sir

    I have one doubt...Super star Rajini is also having Simma Lagna , Mahara Raasi....He is also currently running Sani dasha.. So , how can we analyse the effect of sani bagavan in his case?

    ReplyDelete
  55. //நான் சிம்ம லக்கினம் - மகர ராசிக்காரன். என் லக்கினநாதன் சூரியன், ராசிநாதன்
    சனி. இருவருமே பரம எதிரிகள். ஆனால் என் ஜாதகப்படி இருவருமே எனக்கு
    மிகவும் வேண்டியவர்கள். என்னவொரு சுவையான விஷயம் பார்த்தீர்களா?//

    For me also the similar, Lagnam: Makaram- Saturn, Rasi: Simmam - Sun
    Both are enemies. And saturn in 8th place, ie in Simmam.

    I am getting trained day by day, by reading your old posts to analyze Horoscopes.

    Thanks,

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com