மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.7.08

ஜோதிடம்: என்னதான் ரகசியமோ இதயத்திலே!

இன்று பாடம் மட்டுமே! அரட்டைக் கச்சேரி, கதை எதுவும் இல்லை!

தேனில்லாத மருந்து;. எப்படியிருக்கிறது என்று பாருங்கள்!

முன் பதிவில் ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார். கதை அதிகமாகி
விட்டதகவும், பாடம் குறைந்துவிட்டதாகவும். அவருக்கு இந்தப் பதிவு
சமர்ப்பணம்!
----------------------------------------------------------------
1. ஐந்தாம் வீடு மூன்று பலன்களைத் தருவது. அவை முறையே பூரவ
புண்ணியம், குழந்தைபாக்கியம், நுண்ணறிவு!

2. பூர்வபுண்ணியம் என்பது முன் பிறவியில் நாம் செய்த நன்மைதீமை
களின்படி நமக்குக் காலன் கொடுக்கும் சான்றிதழ். அந்த சான்றிதழை
வைத்துத்தான் இந்தப் பிறவியில் பல செயல்கள் நமக்கு நன்மை
உள்ளதாக அமையும்!

3. நிறைய ஜோதிடர்கள் இங்கேதான் சறுக்கிவிடுவார்கள். பூர்வ ஜென்
மத்தை முழுமையாக அறிந்து சொல்ல எந்தக் கொம்பனாலும் முடியாது.
ஓரளவிற்குச் சொல்லலாம்!

4 இந்த 5ஆம் வீட்டிற்குக் காரகன் (authority) குரு. அவர் அந்த 5ஆம்
வீட்டிற்கு ஐந்தில் அதாவது லக்கினத்தில் இருந்து 9ல் இருந்தால் ஜாதகன்
மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் அவர்
(காரகன் குரு) பெற்றுத்தருவார்.

5. 1ஆம் வீடு லக்கினம், 5 ஆம் வீடு அவனுடைய குழந்தை. 9ஆம்
வீடு அவனுடைய (ஜாதகனுடைய) தந்தை. அந்த 9ஆம் வீட்டிலிருந்து
5ஆம் வீடு மீண்டும் ஜாதகனின் வீடாகவே இருக்கும். அதாவது
9ஆம் வீட்டுக் காரரின் மகன். ஒரு சுழற்சி!! என்ன அற்புதம் பாருங்கள்!

6. ஐந்தாம் வீடு எண்ணங்களையும், உணர்வுகளையும் குறிப்பதாகவும்
இருக்கும். ஐந்தாம் வீடு நல்ல அமைப்புக்களைப் பெற வில்லை என்றால்
ஜாதகன் வில்லங்கப் பார்ட்டி அல்லது டென்சன் பார்ட்டி!

7. ஐந்தாம் வீட்டைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் பார்க்க வேண்டிய மூன்று.
ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் காரகன் குரு.
அவைகள் நன்றாக இருந்தால் நல்லது. காரகனும், அதிபதியும் கேந்திர,
கோணங்களிலோ அல்லது சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடனோ இருத்தல் நலம்.

8. அடுத்து உபரியாகப் பார்க்க வேண்டியது. 5 ஆம் வீட்டில் வந்து இடம் பிடித்து
அமர்ந்திருக்கும் கிரகம், ஐந்தாம் வீட்டு அதிபதியோடு சேர்ந்
திருக்கும் கிரகம், அல்லது காரகனோடு சேர்ந்திருக்கும் கிரகம். அவை
களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே!

9. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் இயற்கையாகவே நேர்மையான வராக இருப்
பார். அவரை யாரும் சுலபமாக விலைக்கு வாங்க முடியாது
ஜாதகத்தில் லக்கினதிபதி போன்றவர்கள் கெட்டிருந்தால் மட்டுமே அவர்
நேர்மை தவற நேரிடும். இல்லையென்றால் இல்லை!

10. அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும்.
ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன
உறுதியுடன் இருப்பார்கள்..

ஐந்தாம் வீடு மனதிற்கும் உரிய வீடுதான் மனம், நெஞ்சம், இதயம் என்று
எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள்! (அப்பா, தலைப்பைப்
பிடித்து விட்டேன்!:_)))))

11. ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி
ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்.

12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (imagination), ஆழ்ந்த
உணர்வுகள் (deep feelings) அதீத நினைவாற்றல் (memory) உள்ளவராக
இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை
வைத்து இது மாறுபடும் (இது பின்னூட்டத்தில் வருபவர்களுக்காக
முன்பே சொல்லி வைக்கிறேன்)

13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly
optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம்

14. மகர ராசியை ஐந்தாம் வீடாகப் பெற்றவர்கள் பொதுவாக டென்சனா
கும் ஆசாமிகள் Highly pessimistic and takes life seriously கரணம்
அதிபதி சனி!

15. கன்னி ராசியை ஐந்தாம் வீட்டாகப் பெற்றவர்களுக்கு ரிஷபம் மற்றும்
மகர ராசிகளின் பலன்கள் கலவையாக இருக்கும். காரணம் அதிபதி புதன்
அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்கள், எப்போது சீரியசாகி விடு
வார்கள் என்பது அவர்களுக்கு அன்றாடம் அமையும் சூழ்நிலை களைப்
பொறுத்து மாறுபடும்!

16. மிதுனம், துலாம், கும்ப ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்கள்
அடுத்த பிரிவினர். They will have different emotional set up. They are concerned
with conduct rather than motive. They are concerned with action rather than
thought or feeling. செயல் வீரர்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் காரியங்களைச் செய்பவர்கள்.

17. துலா ராசியை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள் யாதார்த்தமானவர்
கள். More practical people!

18. கும்பராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள். உண்மையான
மனதுடையவர்கள். நம்பகத்தன்மை மிக்கவர்கள் (அவர்களை முழுதாக நம்பலாம்.

19. மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
விடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்
பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.
ஆகவே விளக்கம்/ கதை இல்லை!

20. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள், அதிகமான தொல்லைகளுக்கு ஆளாவர்கள். ஆனால்
அவற்றைப் பொறுமையுடனும், மன் உறுதியுடனும் தீர்க்க
கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள்.

21. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள் தத்துவஞானிகளாக இருப்பார்கள். உலகின் மிகப் பரபல
மான Philosopherகள் எல்லாம் இந்த அமைப்பை உடையவர்களாகவே
இருப்பார்கள். இயற்கையாகவே இந்த அமைப்பைக் கொண்டவர்கள்
தர்ம, நியாயங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். யாரும் அவர்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

22. கடகம், விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் வித்தியசமான
பார்வை கொண்டவர்கள். மற்றவர்களை விட இவர்கள் ஒன்றைப் பார்த்து
எடுக்கும் முடிவு. அற்புதமாக இருக்கும். அதுதான் சிறந்ததாகவும்
இருக்கும்

23. இந்த அமைப்பினர் தலைமை ஏற்கத்தகுதியுடையவர்கள். அந்த
மூன்றில் (கடகம், விருச்சிகம்,மீனம்) கடகம் மிகவும் சிறப்பானது.
காரணம் அதிபதி சந்திரன்.

24. மீனத்தை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள், ஆக்கபூர்வமான சிந்தனை
மற்றும் செயலை உடையவர்கள். அவர்களுடைய மன ஒட்டத்தை யாராலும்
ஊகிக்க முடியாது.

25. ஜாதகத்தில் லக்கினம், ஒன்பதாம் வீடு ஆகியவ்ற்றிற்கு நிகராக 5ஆம்
வீடும் அதி முக்கியமானது. அத்னால அவை மூன்றிற்கும் திரிகோணம்
எனப்படும் முதல் நிலை அந்தஸ்து (status) கொடுக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வீட்டைவைத்து இங்கே குறிப்பிட்டுள்ள யாவுமே பொது விதிகள்
ஆகும். மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

அவற்றை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)
வாழ்க வளமுடன்!

88 comments:

  1. ஹலோ வாத்தியாரய்யா,

    அப்பா, படிக்க படிக்க தலையே சுத்தர மாதிரி இருக்கு. கொஞ்சம் நிதானமா நிறுத்தி படிச்சா தான் மண்டையில ஏறும்னு நினைக்கிறேன்.பாக்கலாம் ஏறுதான்னு.

    ReplyDelete
  2. excellent article with beautiful explanations never heard before, Guruji !!!!

    நுணலும் தன் வாயால் கெடும்-பழமொழி
    தமாம் பாலாவும் தன் பின்னூட்டத்தால் கெடும்-புதுமொழி

    யாரங்கே..குருஜியை பரமார்த்த என தவறாக விளித்த தமாம் பாலாவை
    குளுகுளு 50 செண்டிகிரேட் சவுதியிலிருந்து கொளுத்தும் 25-30 செண்டி பசுமை/பாசி படர்ந்த நியூசிலாண்டில் தூக்கி போடுங்கள்(துளசி டீச்சர் ஊர் :-))

    குருவே அவை குறிப்பில் திருத்தம், நீங்கள் பரமார்த்த அல்ல.. ஆத்மார்த்த குரு!!!! :-)))

    அடியேனுக்கு ஐந்தாமிடம் மேஷம், அவ்விடத்தில் என்னவோ?!!!

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா,
    இன்றைய பதிவு அருமை..
    கொஞ்சம் தேனும் கலந்து கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் .
    எனக்கு ஐந்தில்(மகரத்தில்) குரு (நீசம்) ,.. எப்படி இருக்கும்? பத்தில் (மிதுனம்) சனி மற்றும் கேது, வேலை எப்படி இருக்கும்?
    என்னோடைய தனி மடலுக்கு இன்னும் பதில் வரவில்லை அய்யா..

    அன்புள்ள மாணவன் ,
    ஜி கே , பெங்களூரு .

    ReplyDelete
  4. //மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் அவர்(காரகன் குரு) பெற்றுத்தருவார்.//

    அப்படி எதயும் காணும். நான் தான் மாங்கு மாங்குனு வேலை செஞ்சிகிட்டு இருக்கேன்...

    //10. அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும்.
    ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன உறுதியுடன் இருப்பார்கள்..//

    அவ்வ்வ்.....

    //ஐந்தாம் வீட்டைவைத்து இங்கே குறிப்பிட்டுள்ள யாவுமே பொது விதிகள்
    ஆகும். மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.//

    கடைசியா இப்படி ஒரு பிட்ட போட்டு தப்பித்துக் கொள்கிறீர்கள். ;)))

    தேன் இல்லாமல் மருந்து மட்டும் சூப்பர்... இனி இப்படியே கூட கொடுக்கலாம்...
    மருந்து அதிக கசப்பு இல்லாத மருந்தாக இருக்கட்டுமே :)

    ReplyDelete
  5. 5 ம் வீடு பற்றிய விரிவான பதிவு ஒருமுறைக்கு இரண்டு முறை படித்தால் தான் புரிகிறது.கதை சேர்த்து கொடுங்கள் சார்.தேன் கல்ந்த மருந்தே மாமருந்தல்லவா!

    ReplyDelete
  6. 12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
    அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (imagination), ஆழ்ந்த
    உணர்வுகள் (deep feelings) அதீத நினைவாற்றல் (memory) உள்ளவராக
    இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை
    வைத்து இது மாறுபடும் (இது பின்னூட்டத்தில் வருபவர்களுக்காக
    முன்பே சொல்லி வைக்கிறேன்)

    13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
    சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly
    optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
    அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம். ஐயா வணக்கம். அடியேனுக்கு சுக்கிரனின் வீடான, ரிஷபம் ஐந்தாவது வீடாகி அதில் காரகன் குரு அமர்ந்திருக்கிறார்.நல்ல பெயரெடுப்போமா? பெரியவர்களின் பெயரை காப்பாற்றுவோமா? வாழ்க்கை சுலபம் தான். அதில் ஏதும் சந்தேகமில்லை ஐயா."எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நாம் கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?"

    ReplyDelete
  7. ////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    அப்பா, படிக்க படிக்க தலையே சுத்தர மாதிரி இருக்கு. கொஞ்சம் நிதானமா நிறுத்தி படிச்சா தான் மண்டையில ஏறும்னு நினைக்கிறேன்.பாக்கலாம் ஏறுதான்னு.////

    ஆர்வத்துடன் படியுங்கள் சகோதரி! தலை சுற்றல் நின்றுவிடும். நான் கற்றுக்கொண்டபோது இதைவிடக் கடினமான நடையில் எழுதப்பெற்ற புத்தகங்களைப் படித்தேன்!

    ReplyDelete
  8. ///தமாம் பாலா சைட்...
    எxcஎல்லென்ட் அர்டிcலெ நித் பெஔடிfஉல் எxப்லனடிஒன்ச் நெவெர் கெஅர்ட் பெfஒரெ, Gஉருஜி !!!!
    நுணலும் தன் வாயால் கெடும்-பழமொழி
    தமாம் பாலாவும் தன் பின்னூட்டத்தால் கெடும்-புதுமொழி
    யாரங்கே..குருஜியை பரமார்த்த என தவறாக விளித்த தமாம் பாலாவை
    குளுகுளு 50 செண்டிகிரேட் சவுதியிலிருந்து கொளுத்தும் 25௩0 செண்டி பசுமை/பாசி படர்ந்த நியூசிலாண்டில் தூக்கி போடுங்கள்(துளசி டீச்சர் ஊர் :-))
    குருவே அவை குறிப்பில் திருத்தம், நீங்கள் பரமார்த்த அல்ல.. ஆத்மார்த்த குரு!!!! :-)))
    அடியேனுக்கு ஐந்தாமிடம் மேஷம், அவ்விடத்தில் என்னவோ?!!!///

    எண் ஓன்பதைப் படியுங்கள் பாலா!

    ReplyDelete
  9. ////Gஏகய் சைட்...
    வணக்கம் அய்யா,
    இன்றைய பதிவு அருமை..
    கொஞ்சம் தேனும் கலந்து கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் .
    எனக்கு ஐந்தில்(மகரத்தில்) குரு (நீசம்) ,.. எப்படி இருக்கும்? பத்தில் (மிதுனம்) சனி மற்றும் கேது, வேலை எப்படி இருக்கும்?
    என்னோடைய தனி மடலுக்கு இன்னும் பதில் வரவில்லை அய்யா..///

    எண் 14 ஐப் படியுங்கள் ஜீக்கே!
    மற்ற கிரங்கள் அமைப்பெல்லாம் இந்தப் பாடத்தில் வரவில்லை. வரும்போது உங்களுக்கே தெரியவரும்!
    பதில் எழுதுகிறேன். தற்சமயம் நேரமின்மை காரணம் (தனி மடல்களுக்கு!

    ReplyDelete
  10. ////VஈKணேஸ்HWஆறாண் சைட்...
    //மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் அவர்(காரகன் குரு) பெற்றுத்தருவார்.//
    அப்படி எதயும் காணும். நான் தான் மாங்கு மாங்குனு வேலை செஞ்சிகிட்டு இருக்கேன்...
    //10. அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும்.
    ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன உறுதியுடன் இருப்பார்கள்..//
    அவ்வ்வ்.....
    //ஐந்தாம் வீட்டைவைத்து இங்கே குறிப்பிட்டுள்ள யாவுமே பொது விதிகள்
    ஆகும். மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.//
    கடைசியா இப்படி ஒரு பிட்ட போட்டு தப்பித்துக் கொள்கிறீர்கள். ;)))/////

    தப்பித்துக் கொள்வதென்றால் பதிவே எழுதாமல் இருந்து விடலாமே:-)))))

    //// தேன் இல்லாமல் மருந்து மட்டும் சூப்பர்... இனி இப்படியே கூட கொடுக்கலாம்...
    மருந்து அதிக கசப்பு இல்லாத மருந்தாக இருக்கட்டுமே :)////

    கூழும் குடிக்க வேண்டும் மீசையும் நனையக்கூடாது அப்படித்தானே?:-))))

    ReplyDelete
  11. ////திருநெல்வேலி கார்த்திக் சைட்...
    5 ம் வீடு பற்றிய விரிவான பதிவு ஒருமுறைக்கு இரண்டு முறை படித்தால் தான் புரிகிறது.கதை சேர்த்து கொடுங்கள் சார்.தேன் கல்ந்த மருந்தே மாமருந்தல்லவா!

    சிலர் தேன் வேண்டுமென்கிறீர்கள். சிலர் வேண்டாம் என்கிறீர்கள்! என்ன செய்யலாம்?
    ஒரு பதிவு தேனுடனும், ஒரு பதிவு மருந்து மட்டும் என்று மாற்றி மாற்றிக் கொடுக்கவா?

    ReplyDelete
  12. ////தியாகராஜன் சைட்...
    12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
    அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (இமகினடிஒன்), ஆழ்ந்த
    உணர்வுகள் (டேப் fஏலிங்ச்) அதீத நினைவாற்றல் (மெமொர்ய்) உள்ளவராக
    இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை
    வைத்து இது மாறுபடும் (இது பின்னூட்டத்தில் வருபவர்களுக்காக
    முன்பே சொல்லி வைக்கிறேன்)

    13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
    சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (Tகெ பெர்சொன் நில்ல் பெ கிக்க்ல்ய்
    ஒப்டிமிச்டிc அன்ட் கெ டகெச் லிfஎ எஅச்ய்) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
    அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம்.

    ஐயா வணக்கம். அடியேனுக்கு சுக்கிரனின் வீடான, ரிஷபம் ஐந்தாவது வீடாகி அதில் காரகன் குரு அமர்ந்திருக்கிறார்.நல்ல பெயரெடுப்போமா? பெரியவர்களின் பெயரை காப்பாற்றுவோமா? வாழ்க்கை சுலபம் தான். அதில் ஏதும் சந்தேகமில்லை ஐயா."எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நாம் கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?"///

    நீங்களே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லிவிட்டீர்கள். ந்ல்லது
    விதித்தபடி என்று இருப்போம். நானும் அப்படித்தான் இருக்கிறேன்!
    சைடுபாரில் உள்ள வாசகங்களைப் பாருங்கள்!

    ReplyDelete
  13. படித்துவிட்டேன் சார்.. நான் சொன்ன அவ்விடம், தங்கள் ஜாதகத்தில்.. :-))

    ReplyDelete
  14. ஆஹா! இந்த தடவை பாடங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிகனி போல ரொம்ப தெளிவா பாயிண்ட் பாயிண்டா சொல்லி இருக்கீங்க.

    தமாம் பாலா, கைய குடுங்க.

    ReplyDelete
  15. ஐயாவிற்கு வணக்கம்...

    shanmugas என்ற பின்னுட்டம் அடியேனுடையதுதான். அது எனது இன்னோரு ஈமெயில் ஆகும். அன்று தெரியாத்தனமாக அந்த முகவரியில் லாக் இன்னிலிருந்து போது பின்னுட்டமிட்டுவிட்டேன்.

    பின்னுட்ட ஈமெயில்கள் எனது இன்பாக்ஸிற்கு வராத போதுதான் கவனித்தேன்...

    இதற்கு சமர்ப்பணம் எல்லாம் செய்து என்னை மிகவும் கஷ்டப்படுத்தவேண்டாம்.

    //ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
    சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly
    optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
    அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம்///

    இதுதான் வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது எனக்கு ரிஷ்ப ராசி ஐந்தாம் வீடுதான் ஆனால் கதை இல்லை என்று சொல்லவேண்டாம் தனிப்பதிவிலாது போடுங்கள்...

    இல்லையென்றால் தலை வேடித்துவிடும்...

    நன்றி

    ReplyDelete
  16. ///தமாம் பாலா said... படித்துவிட்டேன் சார்.. நான் சொன்ன அவ்விடம், தங்கள் ஜாதகத்தில்.. :‍))///

    என்னுடைய லக்கினம் சிம்மம். மற்ற‌தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் பாலா!

    ReplyDelete
  17. ////ambi said... ஆஹா! இந்த தடவை பாடங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிகனி போல ரொம்ப தெளிவா பாயிண்ட் பாயிண்டா சொல்லி இருக்கீங்க. தமாம் பாலா, கைய குடுங்க.////

    பதிவு போட்டது நான். பாலாவிடம் கை குலுக்குவதோடு என்னிடமும் குலுக்கலாமே அம்பி?:)))

    ReplyDelete
  18. ////கூடுதுறை said... ஐயாவிற்கு வணக்கம்... shanmugas என்ற பின்னுட்டம் அடியேனுடையதுதான். அது எனது இன்னோரு ஈமெயில் ஆகும். அன்று தெரியாத்தனமாக அந்த முகவரியில் லாக் இன்னிலிருந்து போது பின்னுட்டமிட்டுவிட்டேன்.
    பின்னுட்ட ஈமெயில்கள் எனது இன்பாக்ஸிற்கு வராத போதுதான் கவனித்தேன்...
    இதற்கு சமர்ப்பணம் எல்லாம் செய்து என்னை மிகவும் கஷ்டப்படுத்தவேண்டாம்.
    //ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
    சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly
    optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
    அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம்///
    இதுதான் வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது எனக்கு ரிஷ்ப ராசி ஐந்தாம் வீடுதான் ஆனால் கதை இல்லை என்று சொல்லவேண்டாம் தனிப்பதிவிலாது போடுங்கள்...
    இல்லையென்றால் தலை வெடித்துவிடும்...////

    அதனால் என்ன? எனக்கு தேனைக் கலக்கும் நேரம் மிச்சம்! நல்லதுதானே செய்திருக்கிறீர்கள்?
    ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன்.
    தலை வெடிக்காமல் அவன் பார்த்துக் கொள்வான். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  19. //ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன்.
    தலை வெடிக்காமல் அவன் பார்த்துக் கொள்வான். //

    ஐயா எனக்கு ரிஷிபம் ராசி இல்லை அது எனக்கு ஐந்தாம் வீடு. மகர லக்கினக்காரன் நான் குரு 8ல்...இது எப்படி?

    ReplyDelete
  20. ///கூடுதுறை said...
    //ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன்.
    தலை வெடிக்காமல் அவன் பார்த்துக் கொள்வான். //
    ஐயா எனக்கு ரிஷிபம் ராசி இல்லை அது எனக்கு ஐந்தாம் வீடு. மகர லக்கினக்காரன் நான் குரு 8ல்...இது எப்படி?///

    அது எல்லாவற்றையும் விட சிற‌ப்பு. மகர லக்கினம் என்றால் சனி அதிபதியல்லவா?
    சர்வ நிச்சயமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்வார்.
    மகர லக்கினத்திற்கு குரு 12 & 3 ற்கு உரியவன் அவன் 8ல் இருந்‍தால் நல்லது.
    வேறு கிரகமாக இருந்‍தால் 100% நல்லது. அவன் குருவானதால் பாதி மட்டுமே நல்லது.
    வேறு மேட்டர்களுக்கு அவன் எட்டில் இருப்பது இடைஞ்சலாகும்!
    (உடனே பின்னூட்டம் போட்டு அது என்னவென்று கேட்காதீர்கள்.பின் பாடங்களில் வரும் அப்போது தெரிந்‍து கொள்ளுங்கள்

    ReplyDelete
  21. //உடனே பின்னூட்டம் போட்டு அது என்னவென்று கேட்காதீர்கள்.பின் பாடங்களில் வரும் அப்போது தெரிந்‍து கொள்ளுங்கள்//

    உடனே பின்னூட்டம் தவிர்க்க முடியவில்லை ஐயா...

    குரு 8ல் மறைந்திருந்கிறார் அதானால் எனக்கு கடவுள் அனுக்கிரகம் இல்லை என்று சொல்கிறார்களே அது உண்மையா?

    நீசபங்க ராஜயோகம் பற்றி அடுத்து எழுதுங்கள் ஐயா...

    ReplyDelete
  22. ////குரு 8ல் மறைந்திருந்கிறார் அதானால் எனக்கு கடவுள் அனுக்கிரகம் இல்லை என்று சொல்கிறார்களே அது உண்மையா?////

    அது உண்மையில்லை!
    கடவுள் அனுக்கிரஹம் இல்லையென்றால் பூமியில் எதுவுமே இல்லை!
    அவனன்றி ஓர் அணுவும் அசையாது!
    அதைத்தான் திருவிளையாடல் படத்தில், "பாட்டும் நானே, பாவமும் நானே' பாடலில் திருவாளர் ஏ.பி.என் அசத்தலாகக் காண்பித்தாரே சாமி!

    ReplyDelete
  23. ஐயா,

    ஐந்தாம் வீட்டைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  24. "அம்பியும் கை குலுக்கலும்"
    நானும் கூட கொஞ்சம் குழம்பி போய்விட்டேன் வாத்தியாரைய்யா..

    அவருக்கும் என்னைப்போல ஐந்தாமிடம் மேடம் என நினைக்கிறேன். கை குலுக்கல் அதற்காகத்தான்.

    சரிதானே அம்பி? :-))

    ReplyDelete
  25. ////மணிவேல் said...
    ஐயா,
    ஐந்தாம் வீட்டைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.///

    என்ன அதற்குள் தெரிந்‍து கொண்டு விட்டேன் என்கிறீர்கள். இன்னும் ஐந்தாம் வீட்டைப் பற்றிய பாடம் பாக்கி இருக்கிற‌து. அது அடுத்த பதிவில் வரும். தொடரும் போட்டதைப் பார்க்கவில்லையா நீங்கள்?

    ReplyDelete
  26. ///தமாம் பாலா said...
    "அம்பியும் கை குலுக்கலும்"
    நானும் கூட கொஞ்சம் குழம்பி போய்விட்டேன் வாத்தியாரைய்யா..
    அவருக்கும் என்னைப்போல ஐந்தாமிடம் மேடம் என நினைக்கிறேன். கை குலுக்கல் அதற்காகத்தான்.
    சரிதானே அம்பி? :‍))///

    மேடம் என்றால் அர்த்தம் மாறிவிடும் பாலா:‍)))
    வடமொழிச் சொல் கலக்காமல் ஜோதிடத்தை எழுத முடியாது.
    மேஷம் இல்லையென்றால் மேசம் என்றாவது சொல்லுங்கள்!:‍)))

    ReplyDelete
  27. Excellent lessons, special thanks for this blog....

    ///பதில் எழுதுகிறேன். தற்சமயம் நேரமின்மை காரணம் (தனி மடல்களுக்கு!///
    So u have not forgot about all personal emails, Good Guruji, take your time...

    -Shankar

    ReplyDelete
  28. //ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி
    ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்.//

    http://payanangal.blogspot.com/2008/05/blog-post_7964.html

    ின் குறிப்பு 1 : ஒரு பெண்ணிற்கு ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால், அந்த பெண்ணின் அத்தைக்கோ (தந்தையில் சகோதரி) அல்லது அந்த பெண்ணின் மருமகளுக்கோ (சகோதரனின் மகள்) ராகு இருக்கும் வாய்ப்பு 8.33 சதத்திற்கு அதிகமாக நடைமுறையில் இருக்கிறதா என்று யாராவது சோதிடர்கள் தான் கூற வேண்டும் :) :) :)

    பின் குறிப்பு 2 : ஒருவருக்கு ஒரு இடத்தில் இருக்கும் கிரகமானது மற்றொருவருக்கு அதே இடத்தில் இருக்கும் வாய்ப்பு 8.33 சதம்.

    ReplyDelete
  29. ////Anonymous said...
    Excellent lessons, special thanks for this blog....
    ///பதில் எழுதுகிறேன். தற்சமயம் நேரமின்மை காரணம் (தனி மடல்களுக்கு!///
    So u have not forgot about all personal emails, Good Guruji, take your time...
    -Shankar///// -

    ஐம்பதிற்கும் மேற்பட்ட மின்ன‌ஞ்சல்களுக்குப் பதில் எழுத வேண்டும். பதிவு போடுவதை ஒரு பத்து நாட்களுக்கு நிறுத்திவிட்டால் அவற்றிற்கான பதில்களை எழுதி அனுப்பி விடலாம்.

    பதிவு என்பது முன்னூறு பேர்களுக்குப் பயன் படுகிறது.....!

    ReplyDelete
  30. ஐந்தாம் வீடாக ரிஷபம், சுக்கிரனுடன் சூரியன் இருப்பின் அதன் பலன் என்ன என்று கூறுங்கள்.

    ReplyDelete
  31. //பதிவு என்பது முன்னூறு பேர்களுக்குப் பயன் படுகிறது.....!//
    மிகவும் குறைத்துச் சொல்லியுள்ளிர்.

    ReplyDelete
  32. புருனோ Bruno said...
    //ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி
    ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்.//
    http://payanangal.blogspot.com/2008/05/blog-post_7964.html

    ின் குறிப்பு 1 : ஒரு பெண்ணிற்கு ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால், அந்த பெண்ணின் அத்தைக்கோ (தந்தையில் சகோதரி) அல்லது அந்த பெண்ணின் மருமகளுக்கோ (சகோதரனின் மகள்) ராகு இருக்கும் வாய்ப்பு 8.33 சதத்திற்கு அதிகமாக நடைமுறையில் இருக்கிறதா என்று யாராவது சோதிடர்கள் தான் கூற வேண்டும் :) :) :)
    பின் குறிப்பு 2 : ஒருவருக்கு ஒரு இடத்தில் இருக்கும் கிரகமானது மற்றொருவருக்கு அதே இடத்தில் இருக்கும் வாய்ப்பு 8.33 சதம்.///

    It is simple probability theory Doctor!
    100 divided by 12 = 8.33%
    ஒவ்வொரு நாளும் இதே 8.33% ஜாதகர்களுக்கு ஏழாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் இருக்கும்படியான ஜாதகம் அமைந்‍துவிடும். அவர்களுக்கெல்லாம் திருமண வாழ்க்கை விரயம் ஆகிவிடும். விவாகரத்தில் முடிந்‍துவிடும் அல்லது வேண்டா வெறுப்பாக ‍ ஊருக்காக குடும்பம் நடத்துவார்கள்.அல்லது திருமணமே நடைபெறாமல் போய்விடும்.
    அதே 8.33% மற்ற கட்டங்களுக்கும் கிரக சுழற்சி வகுத்தல் 12ன் காரணமாக ஏற்படும்.
    சிந்திக்க வைத்தமைக்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  33. ///நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    ஐந்தாம் வீடாக ரிஷபம், சுக்கிரனுடன் சூரியன் இருப்பின் அதன் பலன் என்ன என்று கூறுங்கள்.///

    ஐந்தாம் வீடாக ரிஷபம் என்றால் உங்கள் லக்கினம் மகரம். மகரத்திற்கு எட்டிற்கு உரியவன் சூரியன். அஷ்டமாதிபதி. அவன் எங்கே உட்கார்ந்‍தாலும் அந்‍த வீட்டின் பலனைப் பாதியாகக் குறைத்து விடுவான்.

    உங்கள் வீட்டில் நூறு மாம்பழங்கள் காய்க்கிறதென்றால், நீங்கள் பறிக்கும்போது 50 மட்டுமே இருக்கும். மீதம் எப்படிப் போயிருக்கும்? அதுதான் ஜாதக பலன். யோசித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  34. ///நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    //பதிவு என்பது முன்னூறு பேர்களுக்குப் பயன் படுகிறது.....!//
    மிகவும் குறைத்துச் சொல்லியுள்ளிர்.///

    உத்தேசமாகத்தான் சொன்னேன். அதைவிட அதிகம் என்றால் மகிழ்ச்சிதான் நண்பரே!

    ReplyDelete
  35. வாத்தியார் அய்யா அவர்களே..உங்களுக்கு ஒரு தனி பதிவு

    ReplyDelete
  36. ///செந்தழல் ரவி said...
    வாத்தியார் அய்யா அவர்களே..உங்களுக்கு ஒரு தனி பதிவு///

    வாங்க செந்தழலாரே! தனிப்பதிவா? மகிழ்ச்சி! சுட்டி எங்கே?
    பதிவைத் தேடினேன் தமிழ்மமண முகப்பில் காணோமே?

    ReplyDelete
  37. ////ஐம்பதிற்கும் மேற்பட்ட மின்ன‌ஞ்சல்களுக்குப் பதில் எழுத வேண்டும். பதிவு போடுவதை ஒரு பத்து நாட்களுக்கு நிறுத்திவிட்டால் அவற்றிற்கான பதில்களை எழுதி அனுப்பி விடலாம.///

    Please dont stop blogs for personal emails....Hope you will not...I mentioned it because you are still considering to answer the emails...Not in the other way..

    -Shankar

    ReplyDelete
  38. மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
    அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
    விடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்
    பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.
    ஆகவே விளக்கம்/ கதை இல்லை!

    இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. solla vanthai please solli vidungal?

    ReplyDelete
  39. எனக்கு ஐந்தாம் வீடு ரிஷபம், 3ம் வீட்டில் சுக்கிரனும் ராக்வும். 9ம் வீட்டில் குரு. 4அம் வீட்டில் சூரியன்,புதன்,சனி.. அதன் பலன் எப்படி இருக்கும்.

    ReplyDelete
  40. ////Anonymous said...
    ////ஐம்பதிற்கும் மேற்பட்ட மின்ன‌ஞ்சல்களுக்குப் பதில் எழுத வேண்டும். பதிவு போடுவதை ஒரு பத்து நாட்களுக்கு நிறுத்திவிட்டால் அவற்றிற்கான பதில்களை எழுதி அனுப்பி விடலாம.///
    Please dont stop blogs for personal emails....Hope you will not...I mentioned it because you are still considering to answer the emails...Not in the other way..
    -Shakar////

    அதெல்லாம் நிறுத்த மாட்டேன்.கவலை வேண்டாம் நண்பரே!
    வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் உண்டு சங்கர்!
    குறைந்‍தது ஒரு பதிவிற்கு 25 பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றிற்குப் பதில் எழுதும் நேரத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!‌

    ReplyDelete
  41. ////Monickam said...
    மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
    அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
    விடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்
    பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.
    ஆகவே விளக்கம்/ கதை இல்லை!
    இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. solla vanthai please solli vidunகல்?////

    மிதுன ராசி ஐந்தாம் இடமென்றால் லக்கினம் கும்பம்.
    அந்த லக்கினக்காரர்கள் நிறைவாக பல நல்ல குணங்களையும் செயல்களையும் உடையவ‌ர்கள்.அனால்தான் அந்‍த ராசிக்கு/லக்கினத்திற்கு கும்பம்/குடம் சின்னமாக உள்ள‌து!இப்படி எழுதிக்கொண்டே போகலாம்...!

    ReplyDelete
  42. ////aravindaan said...
    எனக்கு ஐந்தாம் வீடு ரிஷபம், 3ம் வீட்டில் சுக்கிரனும் ராக்வும். 9ம் வீட்டில் குரு. 4அம் வீட்டில் சூரியன்,புதன்,சனி.. அதன் பலன் எப்படி இருக்கும்.////

    ஐந்‍தாம் வீட்டோடு 3, 4, 9 ஆகிய வீடுகளை இணைத்துப் பதில் கேட்கிறீர்களே?
    ஒரே கல்லில் நான்கு மாங்காய்களா?
    இரண்டு பக்கம் பதில் எழுத வேண்டிய மேட்டர் அது!.பின்னூட்டத்தில் எப்படி எழுதுவது?

    ReplyDelete
  43. அவ்வ்..... என்ன இது கோன்ச்சம் தாமதமாக வகுப்பிற்கு வந்தால் ...வகுப்புகளே முடிந்து விட்டதே..

    வகுப்பறையில் நான் இல்லை என்றால் பாடம் மட்டும்தானா...? கலாய்க்க யாரும் இல்லை என்ற தைரியமா வாத்தியரே...

    என்ன தாமம் பாலா, அம்பி நீங்கள் கூட அமைதியாக இருந்து விட்டீர்களே...? இருக்கட்டும் அடுத்த முறை வருவீர்களே கூட்டனிக்கு அப்போது பார்த்து கொள்கிறேன்.

    5'ம் வீடு பாடம் அருமை வாத்தியரே, என்ன பதிவு படித்து முடித்தவுடன் ஒன்றும் விளங்க வில்லை, என் வீட்டின் வழி கூட மறந்து விட்டது....

    மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  44. நல்ல செய்திகள்..

    //ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன்.
    //

    இந்த மாதிரி இன்ன ராசிக்காரர்களுக்கு யார் யோக காரகன் அல்லது பாவி யார் என்பதை ஏதாவது பதிவில் சொல்லி இருக்கிறீர்களா?

    அது போல பாவத்திற்கான ராசிகள் என்ன என்று சொன்னாலும் நலம்,காட்டாக ஐந்தாம் வீடுக்கு காரகன் குரு என்பது போல்...

    ReplyDelete
  45. ////கோவை விமல்(vimal) said...

    5'ம் வீடு பாடம் அருமை வாத்தியரே, என்ன பதிவு படித்து முடித்தவுடன் ஒன்றும் விளங்க வில்லை, என் வீட்டின் வழி கூட மறந்து விட்டது....

    மீண்டும் சந்திப்போம்.////

    வீட்டுக்குபோகிற‌ வழியே மற‌ந்‍துவிட்டதாம்.அப்புற‌ம் எங்கே மீண்டும் சந்‍திப்பது?

    ReplyDelete
  46. ////அறிவன்#11802717200764379909 said...
    நல்ல செய்திகள்..
    //ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன். //
    இந்த மாதிரி இன்ன ராசிக்காரர்களுக்கு யார் யோக காரகன் அல்லது பாவி யார் என்பதை ஏதாவது பதிவில் சொல்லி இருக்கிறீர்களா?
    அது போல பாவத்திற்கான ராசிகள் என்ன என்று சொன்னாலும் நலம்,காட்டாக ஐந்தாம் வீடுக்கு காரகன் குரு என்பது போல்...////

    அந்‍தப் பாடங்கள் எல்லாம் வரிசைப்படி வரும் நண்பரே! சற்றுப் பெரிய பாடம் அது!
    யோகங்கள் மொத்தம் 300 உள்ளன!
    கஜகேசரி யோகம், லக்ஷ்மி யோகம், சண்டாள யோகம், ஆதித்ய யோகம் இப்படியாக....!

    ReplyDelete
  47. //SP.VR. SUBBIAH said..
    வீட்டுக்குபோகிற‌ வழியே மற‌ந்‍துவிட்டதாம்.அப்புற‌ம் எங்கே மீண்டும் சந்‍திப்பது? //

    5'ம் வீடு தனுசு - ஆகா இருப்பவர்களை விருச்சிகம் எப்படி விட்டு போக முடியும்.
    எங்கே போனாலும் கடைசியாக வீட்டிற்கு வரும் பொழுது, அடுத்த வீடு-காரரை சந்தித்து தானே ஆகா வேண்டும். (கடக லக்கினம்|சிம்ம லக்கினம்) ....:-))

    ReplyDelete
  48. ////////கோவை விமல்(vimal) said...
    எங்கே போனாலும் கடைசியாக வீட்டிற்கு வரும் பொழுது,
    அடுத்த வீட்டுக்காரரை சந்தித்து தானே ஆகா வேண்டும்.
    (கடக லக்கினம்|சிம்ம லக்கினம்) ....:-))/////

    எல்லாம் இந்த தமாம் பாலாவினால் வந்தது!
    நான் சிம்ம லக்கினக்காரன் என்று சொன்னது எவ்வளவு தப்பாகப் போயிற்று!
    இனிமேல் பதிவில் பெர்சனல் மேட்டரைக் கொடுக்க மட்டேன் சாமி!:-)))))))))))

    ReplyDelete
  49. //SP.VR. SUBBIAH said...
    எல்லாம் இந்த தமாம் பாலாவினால் வந்தது!
    நான் சிம்ம லக்கினக்காரன் என்று சொன்னது எவ்வளவு தப்பாகப் போயிற்று!
    இனிமேல் பதிவில் பெர்சனல் மேட்டரைக் கொடுக்க மட்டேன் சாமி!:-))))))))))) //

    ஹையா.. நான் தப்பிததேன். பந்து தாமம் பாலா-விற்கு போய் விட்டது.

    ReplyDelete
  50. ((((("மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
    அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
    விடுங்கள்!")))))

    எனக்கும் அதேதான். வகுப்பறைக்கு லேட்டாக வந்ததற்காக என்னுடைய நட்பையும் விட்டுவிடாதீர்கள். விமலும் இன்னிக்கு லேட்டுத்தான்.

    அந்த 19, 20, 21 பந்திகளுக்கு தனியே நன்றிகள்.(உண்மையோ! இல்லையோ! தெரிந்துகொள்ளும்போது சிறிது மகிழ்ச்சியாக இருக்கின்றது)

    ReplyDelete
  51. //கல்கிதாசன் said..
    எனக்கும் அதேதான். வகுப்பறைக்கு லேட்டாக வந்ததற்காக என்னுடைய நட்பையும் விட்டுவிடாதீர்கள். விமலும் இன்னிக்கு லேட்டுத்தான்.//

    வருத்த படாதீர்கள் கல்கியாரே,

    நாம எப்போ வருவோம், எப்படி வருவோம்-னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்-ஆ வந்துருவோமிலே....

    லேட்டா வந்தாலும் லேடஸ்டா வருவோம்...:))))

    ReplyDelete
  52. /////கல்கிதாசன் said...
    ((((("மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
    அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
    விடுங்கள்!")))))
    எனக்கும் அதேதான். வகுப்பறைக்கு லேட்டாக வந்ததற்காக என்னுடைய நட்பையும்
    விட்டுவிடாதீர்கள். விமலும் இன்னிக்கு லேட்டுத்தான்.
    அந்த 19, 20, 21 பந்திகளுக்கு தனியே நன்றிகள்.
    (உண்மையோ! இல்லையோ! தெரிந்துகொள்ளும்போது சிறிது மகிழ்ச்சியாக இருக்கின்றது)//////

    உண்மையோ - இல்லையோவா? என்ன சாமி குண்டைத்தூக்கிப் போடுகிறீர்கள்.
    93 பதிவுகளை மாங்கு மாங்கென்று எழுதியிருக்கிறென். பலவற்றை அதாரங்களுடன்.
    இன்னுமா நம்பிக்கை வரவில்லை?
    நம்பிக்கை இன்றிப் படிப்பதால் என்ன பயன்?
    பாடம் எப்படி மனதில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் லோட் ஆகும்?

    ReplyDelete
  53. ////கோவை விமல்(vimal) said...
    நாம எப்போ வருவோம், எப்படி வருவோம்-னு யாருக்கும் தெரியாது.
    ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்-ஆ வந்துருவோமிலே....
    லேட்டா வந்தாலும் லேடஸ்டா வருவோம்...:))))/////

    அதே மாதிரி வாத்தியாரும் போட வேண்டிய முட்டைகளை (மார்க் சீட்டில்) போட்டுவிடுவார் - தெரியுமில்ல?

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. //SP.VR. SUBBIAH said...
    அதே மாதிரி வாத்தியாரும் போட வேண்டிய முட்டைகளை (மார்க் சீட்டில்) போட்டுவிடுவார் - தெரியுமில்ல? //

    நீங்கள் முட்டை போட்டாலும் சரி இல்லை என்றாலும் சரி எங்கள் அப்பன் பழநி ஆண்டவரின் துணையுடன் கூடிய வாத்தியாரின் அன்பிற்கும் வரை, வகுப்பறையில் இச்சிறிய மாணவனை யாரும்....
    அசைச்சிக்க முடியாது (இதை நடிகர் பாலாயவின் குரலில் இரண்டு முறை கூறவும்).

    என்ன இப்போ ரைட்-அ இல்ல ராங்க.....?:)))))))))

    ReplyDelete
  56. தம்பி விமல், உங்கள் பணி உயர்வுக்கு நீங்கள் எங்களுக்கு பார்ட்டி கொடுக்கா விட்டாலும் காதலிக்க நேரமில்லை பாலைய்யா சொன்னது போல், நீங்க.. தம்ப கம்பி இல்ல தங்க கம்பி. என்ன வாத்தியாரைத்தான் அவ்வப்போது wrong side ல் rub செய்து விடுகிறீர்கள்..இந்த முறை நான் மாட்டிக்கொண்டேன். ;-)))).

    நம்ப வாத்தியார் ஒரு சிம்மம்-னு அவர் லக்னத்தை பார்த்துதான் சொல்லணுமா.. புகைப்படத்திலும் எழுத்திலுமே தெரிகிறதே.. இதைத்தான் நம்ப சூப்பர் ஸ்டார் சொன்னார் சிவாஜியிலே.. ‘சிங்கம் எப்போதுமே.. சிங்கிளாதான் வரும்’

    பின்னூட்டம் செம காமெடியா போகுது..சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாச்சு!!!!

    ReplyDelete
  57. //தமாம் பாலா said..
    தம்பி விமல், உங்கள் பணி உயர்வுக்கு நீங்கள் எங்களுக்கு பார்ட்டி கொடுக்கா விட்டாலும் காதலிக்க நேரமில்லை பாலைய்யா சொன்னது போல், நீங்க.. தம்ப கம்பி இல்ல தங்க கம்பி. என்ன வாத்தியாரைத்தான் அவ்வப்போது wrong side ல் rub செய்து விடுகிறீர்கள்..இந்த முறை நான் மாட்டிக்கொண்டேன். ;-)))).//

    வாத்தியருக்கு என்னிடம் தாமஸ் செய்யும் உரிமை இருப்பது போல, எனக்கும் அவரிடம் வம்பிலுக்கும் உரிமை இருக்கு தாமம் பாலா (அப்பிடித்தான் நினைக்கிறேன், வாத்தியார் தான் சொல்ல வேண்டும்).

    //சிங்கம் எப்போதுமே.. சிங்கிளாதான் வரும்’//

    சிங்கத்தின் சிறுத்தைகள் நாம் (வாத்தியாரின் மாணவர்கள்). நாம் எப்போதும் பாயிந்து தான் செல்ல வேண்டும்...(23'm Pulikesi Warfield dialogue)

    //பின்னூட்டம் செம காமெடியா போகுது..சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாச்சு!!!! //

    என்னாது சிரிப்பு பின்னூட்டமா..? நான் சீரியஸா பேசிண்டு இருக்கேன்... நீங்க சிரிப்பு பின்னூட்டம்-னு சொல்றீங்க..?

    ReplyDelete
  58. பணி உயர்வு பார்ட்டி (வாத்தியாரின் அனுமதியுடன், சட்டாம் பிள்ளை ஆதற்வுடன்)

    வாங்க வாங்க எல்லாரும் லைனா வந்து SWEET எடுத்துக்கணும். சண்டை போடாம அமைதியா பெண்ச்ல போய் இருந்து சாப்பிடணும்...(என்னை மாதிரி)

    ஓ என்ன இன்னைக்கு தாமம் பாலா போல நிறைய மாணவர்கள் காலை வகுப்பிற்கு வரவில்லையா. அச்சோ சோ Choclate தீர்ந்து போச்சே....:(((((

    ReplyDelete
  59. //Lordship of quadrants has a neutralising influence on the nature of planets. The natural benefics thus lose the capacity to give benefic results, while the natural malefics lose their capacity to do harm.

    (3)Only the ownership of quadrants does not convert benefics into malefics, and vice versa.

    (c) Lords of trines (houses 1, 5 and 9) give benefic results no matter whether by their inherent nature they are benefics or malefics.//

    Sir still confusion can you please clarify Lord, Lordship, woner, wonership..bit confused..

    GK BLR..

    ReplyDelete
  60. (((((("உண்மையோ - இல்லையோவா? என்ன சாமி குண்டைத்தூக்கிப் போடுகிறீர்கள்.
    93 பதிவுகளை மாங்கு மாங்கென்று எழுதியிருக்கிறென். பலவற்றை அதாரங்களுடன்.
    இன்னுமா நம்பிக்கை வரவில்லை?
    நம்பிக்கை இன்றிப் படிப்பதால் என்ன பயன்?
    பாடம் எப்படி மனதில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் லோட் ஆகும்?)))))))

    கோவிச்சுக்காதீங்க வாத்தியாரே,
    வகுப்பறை பாடங்களுடன் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட புத்தகங்கள் பலவற்றையும் வாங்கி படித்துப்பார்த்துவிட்டேன். இருந்தாலும் சிலரது வாழ்க்கை நடைமுறையுடன் ஒப்பிடும் போது ஜாதகம் இடிக்கத்தான் செய்கின்றது.

    இப்போதுதான் நல்ல வாத்தியார் நீங்கள் கிடைத்திருக்கின்றீர்களே. கவலைப்படாதீர்கள் வகுப்பறை முடியும் முன் நான் தெளிவாகிவிடுவேன்.

    ReplyDelete
  61. >>>////அறிவன்#11802717200764379909 said...
    நல்ல செய்திகள்..
    //ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன். //
    இந்த மாதிரி இன்ன ராசிக்காரர்களுக்கு யார் யோக காரகன் அல்லது பாவி யார் என்பதை ஏதாவது பதிவில் சொல்லி இருக்கிறீர்களா?
    அது போல பாவத்திற்கான ராசிகள் என்ன என்று சொன்னாலும் நலம்,காட்டாக ஐந்தாம் வீடுக்கு காரகன் குரு என்பது போல்...////

    அந்‍தப் பாடங்கள் எல்லாம் வரிசைப்படி வரும் நண்பரே! சற்றுப் பெரிய பாடம் அது!
    யோகங்கள் மொத்தம் 300 உள்ளன!
    கஜகேசரி யோகம், லக்ஷ்மி யோகம், சண்டாள யோகம், ஆதித்ய யோகம் இப்படியாக....!>>>>>

    இல்லை,என் கேள்வி சரியாகப் புரியவில்லையோ என அஞ்சுகிறேன்.

    ஒவ்வொரு ராசிக் காரனுக்கும்,லக்ன காரனுக்கும் சில கிரகங்கள் யோக காரகனாகவும் சில கிரகங்கள் பாவ காரகனாகவும் பொதுவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.காட்டாக மகர ராசி அன்பர்களுக்கு சுக்கிரனும் யோக காரகன்(என நினைக்கிறேன்) அது போல பாவிக் கிரகங்களும் வரையறுக்கப் படுகின்றன அல்லவா?
    அதையே நான் கேட்டேன்,பொதுவான(சசி மங்கள யோகம்) போன்ற யோக விபரங்கள் அல்ல.

    இரண்டாவதாக பாவத்துக்குரிய நாயகர்கள்.காட்டாக ஐந்தாம்பாவக் காரகன் குரு என்பது போல..

    இவை இரண்டையும் பற்றி சில பதிவுகளில் விளக்கி விட்டு,இந்தப் பதிவு போல(ஐந்தாம்) ஒவ்வொரு பாவ விளக்கப் பதிவுகள் போடும் போது அவை இன்னும் சுவாரசியமாகவும் நல்ல அலசலுக்கு வழி கோலும் விதயத்திலும் இருக்கும்..

    பொதுவாக (சசிமங்கள,விபரீத ராஜயோகம் போன்ற) யோகங்கள் பற்றிய விளக்கப் பதிவுகள் இதற்கு அப்புறம் வரும்போது படிப்பவர்கள் ஒரு கோர்வையாக விதயங்களை உணர்வார்கள்.

    முதலில் கட்டமைப்பு(பாவ விளக்கங்கள்)-இது ஏற்கனவே செய்து விட்டீர்கள்,அடுத்தது ஒவ்வொரு லக்ன,ராசிகளுக்கான யோககாரக,பாவிகள் விவரங்கள்,அடுத்து பாவங்களுக்கான fixed காரகர்கள்,அடுத்து பாவ அலசல்கள்,யோக அலசல்கள் வரும் போது பாடம் முழுமை பெறும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  62. /////தமாம் பாலா said...
    தம்பி விமல், உங்கள் பணி உயர்வுக்கு நீங்கள் எங்களுக்கு பார்ட்டி கொடுக்கா
    விட்டாலும் காதலிக்க நேரமில்லை பாலைய்யா சொன்னது போல், நீங்க.. தம்ப கம்பி
    இல்ல தங்க கம்பி. என்ன வாத்தியாரைத்தான் அவ்வப்போது wrong side ல் rub செய்து
    விடுகிறீர்கள்..இந்த முறை நான் மாட்டிக்கொண்டேன். ;-)))).
    நம்ப வாத்தியார் ஒரு சிம்மம்-னு அவர் லக்னத்தை பார்த்துதான் சொல்லணுமா..
    புகைப்படத்திலும் எழுத்திலுமே தெரிகிறதே.. இதைத்தான் நம்ப சூப்பர் ஸ்டார் சொன்னார்
    சிவாஜியிலே.. ‘சிங்கம் எப்போதுமே.. சிங்கிளாதான் வரும்’
    பின்னூட்டம் செம காமெடியா போகுது..சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாச்சு!!!!/////

    மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?
    மாணவர்களுடன் சேர்ந்து வாத்தியாரும் கூத்தடிக்கிறார் என்று நினக்க மாட்டார்களா?

    ReplyDelete
  63. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியருக்கு என்னிடம் தாமஸ் செய்யும் உரிமை இருப்பது போல,
    எனக்கும் அவரிடம் வம்பிலுக்கும் உரிமை இருக்கு தாமம் பாலா
    (அப்பிடித்தான் நினைக்கிறேன், வாத்தியார் தான் சொல்ல வேண்டும்).
    //சிங்கம் எப்போதுமே.. சிங்கிளாதான் வரும்’//
    சிங்கத்தின் சிறுத்தைகள் நாம் (வாத்தியாரின் மாணவர்கள்).
    நாம் எப்போதும் பாயிந்து தான் செல்ல வேண்டும்...(23'm Pulikesi Warfield dialogue)
    //பின்னூட்டம் செம காமெடியா போகுது..சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாச்சு!!!! //
    என்னாது சிரிப்பு பின்னூட்டமா..? நான் சீரியஸா பேசிண்டு இருக்கேன்...
    நீங்க சிரிப்பு பின்னூட்டம்-னு சொல்றீங்க..?////

    பாலவின் பின்னூடத்தில் உள்ள என்னுடைய பதில் உங்களுக்கும் சேர்த்துத்தான்!

    ReplyDelete
  64. //////Geekay said...
    //Lordship of quadrants has a neutralising influence on the nature of planets.
    The natural benefics thus lose the capacity to give benefic results, while the
    natural malefics lose their capacity to do harm.
    (3)Only the ownership of quadrants does not convert benefics into malefics, and vice versa.
    c) Lords of trines (houses 1, 5 and 9) give benefic results no matter whether
    by their inherent nature they are benefics or malefics.//
    Sir still confusion can you please clarify Lord, Lordship, woner, wonership..bit confused..
    GK BLR..////

    ஒரு வீட்டின் ஆட்சிக்கிரகம்தான் அதன் உரிமையாளர் (Owner)
    காரகன் (authority) என்பது வேறு! உதாரணம் Karaka for finance = Jupiter -குரு
    நல்ல கிரகங்கள் (benefics) எப்போதும் நல்ல கிரகங்கள்தான் (குரு, சந்திரன், சுக்கிரன்)
    தீய கிரகங்கள் (melefics) எப்போதும் தீய கிரகங்கள்தான் (சனி, ராகு, கேது, சூரியன், செவ்வாய்)
    நல்ல கிரகங்கள் by placement or by association or by combust தங்கள் வலிமையை இழந்து டம்மியாகிவிடுவதுண்டு. அதனால் அவற்றால்
    டம்மியாகிவிட்ட சூழலில் நல்லதைச் செய்ய முடியாமல் போவதுண்டு.
    தீய கிரகங்களுக்கும் அதே rulesதான்.தீமையைச் செய்ய முடியாது.
    உச்சமான கிரகம் நன்மைகளை செய்யும்
    நீசமான கிரகம் நன்மைகளைச் செய்ய முடியாமல் போய்விடும்
    1, 2, 4, 5, 7, 9, 10, 11ஆம் வீடுகளின் அதிபதிகள் (owners or lords) முக்கியமானவர்கள்
    அவர்கள் உச்சத்தில் இருக்க வேண்டும் அல்லது கேந்திர திரிகோண ஸதானங்களில் இருக்க வேண்டும்
    எத்தனை பேர்கள் அப்ப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே ஜாதகன் மேன்மை அடைவான்.

    ReplyDelete
  65. /////கல்கிதாசன் said..
    கோவிச்சுக்காதீங்க வாத்தியாரே,
    வகுப்பறை பாடங்களுடன் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட புத்தகங்கள் பலவற்றையும் வாங்கி
    படித்துப்பார்த்துவிட்டேன். இருந்தாலும் சிலரது வாழ்க்கை நடைமுறையுடன் ஒப்பிடும் போது
    ஜாதகம் இடிக்கத்தான் செய்கின்றது.
    இப்போதுதான் நல்ல வாத்தியார் நீங்கள் கிடைத்திருக்கின்றீர்களே.
    கவலைப்படாதீர்கள் வகுப்பறை முடியும் முன் நான் தெளிவாகிவிடுவேன்./////

    கோபமெல்லாம் வராது. அது வரக்கூடிய ஆளாக இருந்தால் பதிவுப் பக்கம் எப்படி வரமுடியும்?
    தெளிவானால் சரி!:-)))

    ReplyDelete
  66. ////அறிவன்#11802717200764379909 said...
    >>>////அறிவன்#11802717200764379909 said...
    நல்ல செய்திகள்..
    //ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன். //
    இந்த மாதிரி இன்ன ராசிக்காரர்களுக்கு யார் யோக காரகன் அல்லது பாவி யார் என்பதை ஏதாவது பதிவில் சொல்லி இருக்கிறீர்களா?
    அது போல பாவத்திற்கான ராசிகள் என்ன என்று சொன்னாலும் நலம்,காட்டாக ஐந்தாம் வீடுக்கு காரகன் குரு என்பது போல்...////
    அந்‍தப் பாடங்கள் எல்லாம் வரிசைப்படி வரும் நண்பரே! சற்றுப் பெரிய பாடம் அது!
    யோகங்கள் மொத்தம் 300 உள்ளன!
    கஜகேசரி யோகம், லக்ஷ்மி யோகம், சண்டாள யோகம், ஆதித்ய யோகம் இப்படியாக....!>>>>>
    இல்லை,என் கேள்வி சரியாகப் புரியவில்லையோ என அஞ்சுகிறேன்.
    ஒவ்வொரு ராசிக் காரனுக்கும்,லக்ன காரனுக்கும் சில கிரகங்கள் யோக காரகனாகவும் சில கிரகங்கள் பாவ காரகனாகவும் பொதுவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.காட்டாக மகர ராசி அன்பர்களுக்கு சுக்கிரனும் யோக காரகன்(என நினைக்கிறேன்) அது போல பாவிக் கிரகங்களும் வரையறுக்கப் படுகின்றன அல்லவா?
    அதையே நான் கேட்டேன்,பொதுவான(சசி மங்கள யோகம்) போன்ற யோக விபரங்கள் அல்ல.
    இரண்டாவதாக பாவத்துக்குரிய நாயகர்கள்.காட்டாக ஐந்தாம்பாவக் காரகன் குரு என்பது போல.
    இவை இரண்டையும் பற்றி சில பதிவுகளில் விளக்கி விட்டு,இந்தப் பதிவு போல(ஐந்தாம்)
    ஒவ்வொரு பாவ விளக்கப் பதிவுகள் போடும் போது அவை இன்னும் சுவாரசியமாகவும் நல்ல அலசலுக்கு வழி கோலும் விதயத்திலும் இருக்கும்..
    பொதுவாக (சசிமங்கள,விபரீத ராஜயோகம் போன்ற) யோகங்கள் பற்றிய விளக்கப் பதிவுகள் இதற்கு அப்புறம் வரும்போது படிப்பவர்கள் ஒரு கோர்வையாக விதயங்களை உணர்வார்கள்.
    முதலில் கட்டமைப்பு(பாவ விளக்கங்கள்)-இது ஏற்கனவே செய்து விட்டீர்கள்,
    அடுத்தது ஒவ்வொரு லக்ன,ராசிகளுக்கான யோககாரக,பாவிகள் விவரங்கள்,அடுத்து
    பாவங்களுக்கான fixed காரகர்கள்,அடுத்து பாவ அலசல்கள்,யோக அலசல்கள் வரும்
    போது பாடம் முழுமை பெறும் என்று நினைக்கிறேன்...///////

    ஒவ்வொரு லக்கினத்திற்கும் யார் யோககாரகன், யார் பாவி என்பது தானே?
    அடுத்த பதிவில் எழுதுகிறேன்!

    ReplyDelete
  67. //ஒரு வீட்டின் ஆட்சிக்கிரகம்தான் அதன் உரிமையாளர் (Owner)
    காரகன் (authority) என்பது வேறு! உதாரணம் Karaka for finance = Jupiter -குரு
    நல்ல கிரகங்கள் (benefics) எப்போதும் நல்ல கிரகங்கள்தான் (குரு, சந்திரன், சுக்கிரன்)
    தீய கிரகங்கள் (melefics) எப்போதும் தீய கிரகங்கள்தான் (சனி, ராகு, கேது, சூரியன், செவ்வாய்)
    நல்ல கிரகங்கள் by placement or by association or by combust தங்கள் வலிமையை இழந்து டம்மியாகிவிடுவதுண்டு. அதனால் அவற்றால்
    டம்மியாகிவிட்ட சூழலில் நல்லதைச் செய்ய முடியாமல் போவதுண்டு.
    தீய கிரகங்களுக்கும் அதே rulesதான்.தீமையைச் செய்ய முடியாது.
    உச்சமான கிரகம் நன்மைகளை செய்யும்
    நீசமான கிரகம் நன்மைகளைச் செய்ய முடியாமல் போய்விடும்
    1, 2, 4, 5, 7, 9, 10, 11ஆம் வீடுகளின் அதிபதிகள் (owners or lords) முக்கியமானவர்கள்
    அவர்கள் உச்சத்தில் இருக்க வேண்டும் அல்லது கேந்திர திரிகோண ஸதானங்களில் இருக்க வேண்டும்
    எத்தனை பேர்கள் அப்ப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே ஜாதகன் மேன்மை அடைவான்.//

    Thank you very much ayya..

    ReplyDelete
  68. //ஒரு வீட்டின் ஆட்சிக்கிரகம்தான் அதன் உரிமையாளர் (Owner)

  69. ///அதெல்லாம் நிறுத்த மாட்டேன்.கவலை வேண்டாம் நண்பரே!
    வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் உண்டு சங்கர்!
    குறைந்‍தது ஒரு பதிவிற்கு 25 பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றிற்குப் பதில் எழுதும் நேரத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!////

    Good job! Thank you very much for patience in answering to details...

    -Shankar

    ReplyDelete
  70. ///அதெல்லாம் நிறுத்த மாட்டேன்.கவலை வேண்டாம் நண்பரே!
    வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் உண்டு சங்கர்!
    குறைந்‍தது ஒரு பதிவிற்கு 25 பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றிற்குப் பதில் எழுதும் நேரத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!////

    Good job! Thank you very much for patience in answering to details...

    -Shankar

    ReplyDelete
  71. /////Geekay said...
    1, 2, 4, 5, 7, 9, 10, 11ஆம் வீடுகளின் அதிபதிகள் (owners or lords) முக்கியமானவர்கள்
    அவர்கள் உச்சத்தில் இருக்க வேண்டும் அல்லது கேந்திர திரிகோண ஸதானங்களில் இருக்க வேண்டும்
    எத்தனை பேர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே ஜாதகன் மேன்மை அடைவான்.//
    Thank you very much ayya..////

    இதற்கெல்லாம் நன்றி எதற்கு ஜீக்கே? எல்லோருக்கும் பயன்படப் பொதுவில்தானே சொல்லியிருக்கிறேன்!

    ReplyDelete
  72. /////Anonymous said...
    ///அதெல்லாம் நிறுத்த மாட்டேன்.கவலை வேண்டாம் நண்பரே!
    வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் உண்டு சங்கர்!
    குறைந்‍தது ஒரு பதிவிற்கு 25 பின்னூட்டங்கள் வருகின்றன.
    அவற்றிற்குப் பதில் எழுதும் நேரத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!////
    Good job! Thank you very much for patience in answering to details...
    -Shankar/////

    என்னுடைய வயதில் எல்லோருக்குமே பொறுமை வந்துவிடும்:-))))

    ReplyDelete
  73. //////கனிமொழி said...
    Detailed lession,Informative.
    Thanks Sir/////

    நன்றி சகோதரி! சகோதரிதானே? இல்லை பெண்ணின் புனைப்பெயரில் இருக்கும் சகோதரனா?

    ReplyDelete
  74. அன்பு வாத்தியாரே,
    தமிழ்மணத்தின் கடந்த வாரத்து நட்சத்திர பதிவராக நீங்கள் தேர்தெடுக்கப்பட்டதை இப்போதுதான் யதேச்சையாக தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் !! :-))))

    ReplyDelete
  75. //////தமாம் பாலா said...
    அன்பு வாத்தியாரே,
    தமிழ்மணத்தின் கடந்த வாரத்து நட்சத்திர பதிவராக நீங்கள் தேர்தெடுக்கப்பட்டதை
    இப்போதுதான் யதேச்சையாக தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் !! :-))))////

    கடந்த வாரமல்ல. அது மார்ச் மாதம் நடந்த நிகழ்வாகும். அந்த வாரத்தில் மொத்தம் 33 பதிவுகளை இட்டேன்
    பல்சுவைப் பதிவில் நட்சத்திரப் பதிவுகள் என்ற குறிச்சொல்லுடன் (Label) அவைகள் படிக்கக் கிடைக்கும்.
    அத்தனை பதிவுகளுமே சுவையாக இருக்கும். சும்மா ஜோதிடப் பாடங்களையே படித்துக் கொண்டிருக்காமல்
    அவற்றையும் படியுங்கள் பாலா:-))))

    ReplyDelete
  76. //நன்றி சகோதரி! சகோதரிதானே? இல்லை பெண்ணின் புனைப்பெயரில் இருக்கும் சகோதரனா?//

    சகோதரி தான் அய்யா..
    மகர ராசி, கும்ப லக்னம், ஐந்தாம் வீடு மிதுனம். எனது பலன் எவ்வாறு இருக்கும்..?
    கனிமொழி (திருமதி ஜிகே )

    ReplyDelete
  77. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  78. //hi mate, this is the canadin pharmacy you asked me about: the link //

    ஐயா இது என்ன வெப்தளம் என்று பார்க்கவில்லையா?

    ReplyDelete
  79. /////hi mate, this is the canadin pharmacy you asked me about: the link////

    யாரப்பா அது. சின்னப்புள்ளங்க படிக்கின்ற வகுப்பறையில் இதைக்கொண்டு விற்கிறது?

    ReplyDelete
  80. /////கனிமொழி said...
    //நன்றி சகோதரி! சகோதரிதானே? இல்லை பெண்ணின் புனைப்பெயரில் இருக்கும் சகோதரனா?//
    சகோதரி தான் அய்யா..
    மகர ராசி, கும்ப லக்னம், ஐந்தாம் வீடு மிதுனம். எனது பலன் எவ்வாறு இருக்கும்..?
    கனிமொழி (திருமதி ஜிகே )//////

    இந்தப்பதிவில் எண்21ஐப் படியுங்கள் சகோதரி!

    ReplyDelete
  81. ////கூடுதுறை said... //hi mate, this is the canadin pharmacy you asked me about: the link //
    ஐயா இது என்ன வெப்தளம் என்று பார்க்கவில்லையா?////

    பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்திருப்பதால் வரும் கேடுகளில் இதுவும் ஒன்று!
    அது வரைஸ் எழுத்தாளர்களின் கைங்கர்யம். அதுபோல தெரியாதது எதுவும் வந்தால் க்ளிக் செய்து பார்க்காதீர்கள்!
    நான் வந்து கவனித்துக் கொள்கிறேன்! I will delete them without opening it!

    ReplyDelete
  82. /////கல்கிதாசன் said...
    /////hi mate, this is the canadin pharmacy you asked me about: the link////
    யாரப்பா அது. சின்னப்புள்ளங்க படிக்கின்ற வகுப்பறையில் இதைக்கொண்டு விற்கிறது?////

    பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்திருப்பதால் வரும் கேடுகளில் இதுவும் ஒன்று!
    அது வரைஸ் எழுத்தாளர்களின் கைங்கர்யம். அதுபோல தெரியாதது எதுவும் வந்தால்
    க்ளிக் செய்து பார்க்காதீர்கள்!
    நான் வந்து கவனித்துக் கொள்கிறேன்! I will delete them without opening it!

    ReplyDelete
  83. நிறைய நிறைய கற்று கொடுத்திருக்கிறீர்கள் இந்த பதிவிலும் பின்னூட்டங்களிலும். நன்றி!!!! நிறைய கேள்விகள் கேட்டு இன்னும் கற்று கொள்ள வைக்கும் சக மாணவர்களுக்கும் நன்றி!!

    ReplyDelete
  84. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    நிறைய நிறைய கற்று கொடுத்திருக்கிறீர்கள் இந்த பதிவிலும்
    பின்னூட்டங்களிலும். நன்றி!!!! நிறைய கேள்விகள் கேட்டு இன்னும்
    கற்று கொள்ள வைக்கும் சக மாணவர்களுக்கும் நன்றி!!/////

    வாருங்கள் சகோதரி! நன்றி எல்லாம் எதற்கு? நீங்கள் வந்து படித்தால் போதாதா?

    ReplyDelete
  85. அன்புள்ள ஐயா அவர்களூக்கு

    இப்பவும் எனது கூடுதுறை பதிவின் டெம்ப்லேட் மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தங்களுக்கு கொடுத்த லிங்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது

    தயவு செய்து உடனே கீழேக்கண்ட லிங்கை தங்களது பதிவில் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

    http://scssundar.blogspot.com/2008/06/blog-post.html

    சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன்.

    வணக்கம்

    scssundar

    ReplyDelete
  86. please see this

    http://munnarmvs.blogspot.com/2011/08/blog-post_03.html

    ReplyDelete
  87. Respected Sir, I pray God for your well being after the surgery. I am an ardent fan(a student too! ) of your blog, and i am sure you will be contributing more vital subjects on this divine science of The Indian Astrology

    Thanking you and best regards
    T.Sachidanandam

    ( Iyya i tried to write in tamil! but alas I dont know how to ??

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com