மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.1.07

இயேசு காவியம்

இயேசு காவியம் - ஆக்கம் - கவியரசர் கண்ணதாசன்

"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்
-----------------------------------------------------------------
கவியரசர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற இறவாக்
காவியமான
'இயேசு காவியம்' படிப்பவர்களின் மனதில் படிக்கும்
போது ஏற்படுத்தும்
இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில்
கீழே கொடுத்துள்ளேன்.


நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம்


புத்தகத்தைப் பிரித்தவுடன் 'என்னுரை' பகுதியில் தன்னுரையாகக்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப்
படித்தவுடனேயே
நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!

"இயேசு காவியம் - பேச்சுவாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி.
கலைக்காவிரியின் சார்பில் தந்தையர் என்னைச் சந்தித்துப்
பேசிய பொழுதும், திரு.சந்திரமோகன் என்னை விடாப்பிடி
யாகக் குற்றாலத்திற்குக் கூட்டிச் சென்றபொழுதும் இது

ஏதோ ஒரிரு நாள் வேலை என்றே நான் எண்ணியிருந்தேன்.

ஆனால், வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப்
பிடித்தது. 'என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம்
கைவைத்து விட்டோம்' என்று பீதியடைந்தேன்.இயேசு பெருமான்
அருள் பாலித்தார்! நான் இதுவரை உழைக்காத வகையில்,
தொடர்ந்து பதினைந்து நாட்கள், தினமும் எட்டு மணி நேரம்
வேலை செய்து இதை முடித்தேன் என்றால் அது அவரது
கருணையே!"


காவியம் எழுதப்பெற்ற கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?

மேலும் கவியரசர் சொல்கின்றார்,"பலர் என்னை இறவாக்
காவியம்
ஒன்று எழுதுங்கள்
என்று வற்புறுத்தியதுண்டு.அந்த
இறவாக் காவியம் 'இயேசு காவியம்'தான் என்று நான்
உறுதியாகக் கூறமுடியும்"


இந்தக் காவியம் உருவாவதற்குக் கவியரசருக்கு உறுதுணையாக
இருந்த
அன்பர் திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் மனம்
நெகிழ்ந்து இப்படிச சொல்கின்றார்.


"தமிழகத்தின் தனிப்பெரும் கவிஞராய் விளங்கிய கண்ணதாசன்
அவர்கள்
தமிழ்கூறும் நல்லுலகிலுள்ள அனைவருக்கும்
பொதுவான சொத்து.அந்த சொத்தில் நமக்கும் உரிமை
உண்டு என்று எண்பித்து, பேருவகை கொண்டு,இறைமகன்
இயேசுவின் புகழ் பாடும்படி அழைத்தோம்.கிறிஸ்துவின்
வரலாற்றையே காவியமாக வடிக்க வேண்டினோம். கவிஞரும்
அதை உடனே ஏற்று அற்புதமாக எழுதிக்கொடுத்தார்


குற்றலாம் அருவி தோற்கும் அளவிற்குக் கவிதை வெள்ளம்
அங்கே
கரைபுரண்டோடியது!"

மேலும் அவர் இந்த நூலைப் பற்றி, "தம் வேலை முடிந்ததும், கவிஞர்
அவர்கள்
காவியத்தை, விவிலியத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்ற
கிறிஸதுவ அறிஞர்கள்
ஆய்ந்து ஆலோசனை கூறவேண்டுமென
விரும்பினார். தனது நூல், யாராலும்
குறைசொல்ல முடியாத
அளவுக்குச் சிறப்புடன் அமைய வேண்டுமென்பதில்

அவர் கருத்தாயிருந்தார்" என்கின்றார்.

அதன்படி காவிய நூல் அச்சாவதற்கு முன்பு, பதினோரு பேர்கள்
கொண்ட
ஆய்வுக்குழு அமைக்கப்பெற்று, அவர்கள் சமர்ப்பித்த
சில திருத்தங்கள்
கவியரசர் அவர்களால் சரி செய்யப்பெற்றுப்
பின் பதிப்பிக்கப் பெற்றதாம்.
அந்தக் குழுவில் எட்டு அருள்
திருவாளர்களும், மூன்று தமிழ் அறிஞர்களும்
கூடிப் பணியாற்றி
யிருக்கிறார்கள் எனும்போது இந்த நூல் உருவான
பிரம்மாண்டம்
கண்ணில் வந்து நிற்கின்றது!


1981ம் ஆண்டு ஜூன் மாதம், கவியரசர் மேல் நாட்டுப் பயணம்
மேற்கொள்
வதற்குச் சில தினங்கள் முன்பு அவருடைய ஒப்புதலைப்
பெற்ற புத்தகம்
அச்சிற்குத் தயாரானதாம். தாயகம் திரும்பியதும்,
சிறப்பான முறையில்
வெளியீட்டு விழா நடத்தவேண்டும் என்று
கவியரசர் பெரிதும் விரும்பினாராம்.

ஆனால் இறைத்திட்டம் வேறு வகையில் அமைந்துவிட்டது.

ஆமாம், அவர் தாயகம் திரும்பாமலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அதைப் பற்றித் தன் கண்ணில் நீர் திரையிட திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ்
இப்படிக் கூறுகின்றார்.

"இருப்பேன் பலநாள் என்றானே - எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே - அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே - அந்த
தேவன் அருகில் அழைத்தானோ!"

என்னவொரு அற்புதமான மனவெளிப்பாடு பாருங்கள்!

1982ம் ஆண்டு பதிப்பிக்கபெற்ற இந்த நூல் இதுவரை ஆறு
பதிப்புக்களைக்
கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு
மேலும் விற்றுள்ளது. ]


இந்த அரிய நூலைப் படிக்கும் வாய்ப்பை எனக்கு இறைவன்
இன்றுதான்
நல்கினார்.

அடியவன் படித்து மகிழ்ந்து எழுதுவதற்கு 2002ம் ஆண்டு
வெளிவந்த
பதிப்பு உதவியது. அதன் பதிப்பாசிரியர்
திரு.செ.பிலோமின்ராஜ் அவர்கள்,
"இறைமகன் இயேசுவின்
வாழ்வையும், வாக்கையும் கவிதை வடிவில் படித்து

மகிழ்வதில் மக்களின் தாகம் இன்னும் தணியவில்லை
என்பதை இதுவரை
வெளியான பதிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன!"
என்று தன் பதிப்புரையில் சிறப்பாகக் கூறியுள்ளார்

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர்
அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற ஆதங்கத்தில்
இதற்கு
ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.

இயேசுநாதரின் வரலாறு கவிதை வடிவில் அற்புதமாக எழுதப்
பெற்றுள்ள
இந்த நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில்
உள்ள அத்தனை கவிதைகளுமே
முத்துக்கள். எல்லாவற்றையும்
எடுத்து நான் எழுத விரும்பினாலும்
பதிப்பாளர்கள் தங்கள்
காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது!

அதேபோல மிகவும் அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக்
குறிப்பிட்டு
எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது
என்ற திகைப்புத்தான்
மேலிடும். ஒரு காவியத்தில் அதைச்
செய்வதும் சரியல்ல!


ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து
வாங்கிப் படியுங்கள்.
அதுதான் எழுதிய கவியரசருக்கும்,
வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும்

மரியாதையும், நன்றிக் கடனுமாகும்.

பதிப்பாளர்களின் முகவரி:
கலைக்காவிரி,
49-J, பாரதியார் சாலை,
திருச்சிராப்பள்ளி - 620 001

நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------

12 comments:

  1. //எல்லாவற்றையும்
    எடுத்து நான் எழுத விரும்பினாலும் பதிப்பாளர்கள் தங்கள்
    காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது!
    //

    கண்ணதாசனின் புத்தகங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளது. எனவே தைரியமாக செய்யலாம். அனுமதி பெற தேவையில்லை.

    குமார்

    ReplyDelete
  2. வாருங்கள் அனானி நண்பரே!
    எனக்கு அது உசிதமாக்கப் படவில்லை!
    இது என் கருத்து மட்டுமே!
    இந்த நூலைக் குறைந்த விலையில் பதிப்பித்துள்ளார்கள்.
    மேலும் காப்புரிமை பற்றி எழுதியும் உள்ளார்கள்
    அதற்கு நாம் உடன்படுவதுதான்
    இறை தர்மம்!

    ReplyDelete
  3. அண்ணா!
    பல வருடங்களுக்கு முன் ஒரு கத்தோலிக்க நண்பர் தந்து படித்தேன். சமயமென்பதற்கப்பால் கவிஞர் கவிதைகள் எனும் ஆர்வத்தில் ரசித்தேன்.கவிஞர் ஆற்றல் பிரமிப்புக்குரியதே!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  4. //பல வருடங்களுக்கு முன் ஒரு கத்தோலிக்க நண்பர் தந்து படித்தேன். சமயமென்பதற்கப்பால் கவிஞர் கவிதைகள் எனும் ஆர்வத்தில் ரசித்தேன்.கவிஞர் ஆற்றல் பிரமிப்புக்குரியதே!
    யோகன் பாரிஸ்//
    சிறப்பாகச் சொல்லியிருக்க்கிற்றீர்கள் நண்பரே!

    ReplyDelete
  5. இயேசு காவியம் 10ம் வகுப்பிலோ, 12ம் வகுப்பிலோ தமிழ்ப் பாடப் பகுதியில் படித்திருக்கிறேன்.

    எழுத்து(கவிதை) நடை மிக அழகாக இருக்கும்!

    ReplyDelete
  6. //இயேசு காவியம் 10ம் வகுப்பிலோ, 12ம் வகுப்பிலோ தமிழ்ப் பாடப் பகுதியில் படித்திருக்கிறேன்.
    எழுத்து(கவிதை) நடை மிக அழகாக இருக்கும்!//

    பள்ளிகளில் ஒரு சில பகுதிகளைத்தான்
    பாடமாக வைத்துள்ளார்கள்
    வாய்ப்புக் கிடைத்தால் முழுவதையும்
    படித்துப் பாருங்கள்

    ReplyDelete
  7. அய்யா, இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    உங்கள் சோதிடம் வகுப்பில் பழைய பாடங்களை படித்து விட்டு
    மீண்டும் வருகிறேன்.

    நன்றி!

    பிகு: நீங்கள் என்ன பணியாற்றி கொண்டு உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  8. /// தென்றல் அவர்கள் சொல்லியது:
    பிகு: நீங்கள் என்ன பணியாற்றி கொண்டு உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?///

    I am in business: Marketing agents for Cotton & Synthetic Yarn

    ReplyDelete
  9. '.இயேசு காவியம்' புத்தகத்தில் மலைப்பொழிவு பகுதியை டி.எம்.எஸ் இசையமைத்து பாடி வெளியிட்டி ருந்தார் .அதை கேட்டுக் கேட்டு ஏறக்குறைய முழு வரிகளும் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

    நோன்பு பற்றி வரும் வரிகள்...


    நோன்பிருக்குங்கால் நோயாளி போல
    வேடமணிந்து வேதனை காட்டி
    போலித் தனத்தில் புகழ்பெற வேண்டாம்

    முகத்தை கழுவி முடியினைச் சீவி
    அகத்துத் தூய்மையை முகத்தினில் காட்டி
    அடுத்தவர் நோன்பை அறியா வண்ணம்
    ஆண்டவன் மட்டுமே அறியும் வண்ணம் இருந்தால்
    அது தான் இகத்திலும் பரத்திலும் சுகத்தைத் தரும்

    ReplyDelete
  10. உங்கள் பதிலுக்கு நன்றி!

    இப்பொழுதுதான் மூன்று பாடங்களை முடித்துள்ளேன். விறுவிறுப்பாகவே இருக்கிறது. மிக்க நன்றி! சிறப்பாக தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    /குறும்பன் said..
    வாத்தியார் ஐயா, அமெரிக்காவில் பிறக்கும் ஒருவருக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது?/
    இதற்கு பதில் சொல்லிருந்தால் அதற்கான சுட்டியை தரவும். நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com