மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

26.1.07

கடவுள் என்ன கேட்பார்?

கடவுள் என்ன கேட்பார்?
இந்தப் பதிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்தான்!
மற்றவர்கள் பதிவை விட்டு தயவுசெய்து விலகவும்!
---------------------------------------------------------------
1
என்ன வாகனம் வைத்திருந்தீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எத்தனை பேர்களுக்கு லிஃப்ட் கொடுத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
-------------------------
2
எத்தனை சதுர அடிகளில் வீடு கட்டினீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எத்தனை பேரை வீட்டிற்கு அழைத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
3
எத்தனை புத்தாடைகள் வாங்கினீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்....
பழைய ஆடைகளை எத்தனை ஏழைகளுக்குத் தந்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
4
எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எவ்வளவு கொடுத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
5
எவ்வளவு பெரிய பதவியில் இருந்தீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எவ்வளவு உண்மையாய் உழைத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
6
உங்கள் நிறம் என்னவாக இருக்கிறதென்று கடவுள் கேட்க மாட்டார்......
உங்கள் குணம் என்னவாக இருக்கிறதென்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
நமது நம்பிக்கை' மாத இதழ் வெளியிட்டுள்ள நாட்குறிப்பேட்டில்
உள்ள வரிகள் பலவற்றில் என் நெஞ்சைத் தொட்ட வரிகளைக்
கொடுத்துள்ளேன். அதோடு அந்த இதழ் நிர்வாகத்திற்கும் என்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
--------------------------
கீழே உள்ளது என்னுடைய சேர்க்கை!

கடவுள் நீ எத்தனை ஜல்லிப் பதிவுகள் போட்டாய் என்று கேட்க மாட்டார்....
எத்தனை பதிவுகள் உருப்படியாக, பயனுள்ளதாகப் போட்டாய் என்றுதான்
கேட்பார்!
--------------------------
எத்தனை பின்னூட்டங்கள் வாங்கினாய் என்று கேட்க மாட்டார்........
நேர்மையான பின்னூட்டங்கள் எத்தனை உனக்கு வந்தன என்றுதான் கேட்பார்!
---------------------------

18 comments:

SK said...

கடவுளின் தன்மையாம் அன்பை விளக்கும் மொழிகள்!

அந்த கடைசி இரண்டு [சேர்க்கைக்] கேள்விகளை அடிக்கடி என் மனைவியும் கேட்கிறார்!

ஆம்....அவரும் கடவுளே!![எனக்கு!]
:))

படியாதவன் said...

கடவுள் எத்தனை பின்னூட்டம் எடுத்தாய் எண்டு கேட்க மாட்டார், அனானியாக எத்தனை பின்னூட்டம் போட்டாய் எண்டுதான் கேட்பார்

SP.VR. சுப்பையா said...

//Mr.S.K Said: அந்த கடைசி இரண்டு [சேர்க்கைக்] கேள்விகளை அடிக்கடி என் மனைவியும் கேட்கிறார்!
ஆம்....அவரும் கடவுளே!![எனக்கு!]//

அய்யா, வீட்டில் உறையும் கடவுளுக்கு என்ன பதில் சொன்னீர்கள்??
அதையும் சொல்லியிருக்கலாமே!:-)))))

செல்வன் said...

நல்ல கருத்துக்கள் வாத்தியார் அய்யா.மிகவும் நன்றாக இருந்தது

குமரன் (Kumaran) said...

கடைசி இரண்டும் அருமை.

இது நேர்மையான பின்னூட்டம் என்பதையும் இந்தப் பதிவு உருப்படியான பதிவு என்பதையும் கடவுளிடம் தெரியப்படுத்திவிடுங்கள். :-)

SP.VR. சுப்பையா said...

// படியாதவன் அவர்கள் சொல்லியது:
கடவுள் எத்தனை பின்னூட்டம் எடுத்தாய் எண்டு கேட்க மாட்டார், அனானியாக எத்தனை பின்னூட்டம் போட்டாய் எண்டுதான் கேட்பார்//

அனானிப் பின்னூட்டம் - அறிவுபூர்வமான
பின்னூட்டமாக இருந்தால் சரிதான்!

துளசி கோபால் said...

வாத்தியார் ஐயா,

நலமா?

அவரு நம்மைக் கேக்கறதுக்கு முன்னாடியேதான்
'சரணாகதி'ன்னு விழுந்துட்டேனே.

அதனாலே மொதல்லேயே 'கொஸ்டின் பேப்பரை அவுட்' ஆக்கிட்டார்:-)

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல் கேள்விகள் சார்.

நன்றி.

SP.VR. சுப்பையா said...

//Mr.Selvan Said:நல்ல கருத்துக்கள் வாத்தியார் அய்யா.மிகவும் நன்றாக இருந்தது//

வாருங்கள் செல்வன். மிக்க நன்றி!

SP.VR. சுப்பையா said...

///குமரன் அவர்கள் சொல்லியது: கடைசி இரண்டும் அருமை.
இது நேர்மையான பின்னூட்டம் என்பதையும் இந்தப் பதிவு உருப்படியான பதிவு என்பதையும் கடவுளிடம் தெரியப்படுத்திவிடுங்கள். :-)//

சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் குமரன்
நன்றி!

SP.VR. சுப்பையா said...

// துளாசி கோபால் அவர்கள் சொல்லியது: வாத்தியார் ஐயா,
நலமா?
அவரு நம்மைக் கேக்கறதுக்கு முன்னாடியேதான்
'சரணாகதி'ன்னு விழுந்துட்டேனே.
அதனாலே மொதல்லேயே 'கொஸ்டின் பேப்பரை அவுட்' ஆக்கிட்டார்:-)//

நலமாக உள்ளேன் சகோதரி!
இரண்டு மாதங்களாக நீங்கள் பதிவுகளுக்குள் வரவில்லையே என்ற
ஒரு மனக் குறையைத்தவிர வேறு ஒரு குறையும் இல்லை சகோதரி!

நாமக்கல் சிபி said...

நமது நம்பிக்கை என்ற டைரியில் இது போன்று இன்னும் வாசகங்கள் இருந்தன. அவற்றிற்காகவே நான் வாங்கினேன்.

SP.VR. சுப்பையா said...

//Mr.Syril Alex Said:
கலக்கல் கேள்விகள் சார்.//
நன்றி நண்பரே!

SP.VR. சுப்பையா said...

//Mr.Sibi Said: நமது நம்பிக்கை என்ற டைரியில் இது போன்று இன்னும் வாசகங்கள் இருந்தன. அவற்றிற்காகவே நான் வாங்கினேன்.//

ஆமாம் சிபி!எனக்கு ஒரூ நண்பர் அந்த டைரியைப் பரிசாகக் கொடுத்தார்.
புரட்டியவுடன் கண்ணில் பட்டது இந்தப் பக்கம்தான். அதனால்தான் உடனே பதிவில் இட்டேன்

மா சிவகுமார் said...

ஐயா,

நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கேள்விகள் பொருந்தத்தானே செய்யும். கடவுளுக்குப் பதிலாக வேறு யாரையாவது நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்,

மா சிவகுமார்

SP.VR. சுப்பையா said...

//நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கேள்விகள் பொருந்தத்தானே செய்யும். கடவுளுக்குப் பதிலாக வேறு யாரையாவது நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
அன்புடன்,
மா சிவகுமார்//
ஆகா, தாராளமாக நினைத்துக் கொள்ளலாம்.தவறில்லை சிவகுமார்!

வடுவூர் குமார் said...

ரொம்ப சீரியஸாக படித்துவிட்டு
முதல் பின்னுட்டம் பார்த்து சிரித்து மகிழ்ந்தேன்.
பதிவில் உள்ள வரிகள் அனைத்தும் அருமை.

unmaiadiyaan said...

நல்ல பதிவு நண்பரே,யோசிக்க வேண்டிய கேள்விகள் தான் இவை