மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.1.07

உங்கள் வயதென்ன நண்பரே?

உங்கள் வயதென்ன நண்பரே?

பெண்களிடம் வயதையும், ஆண்களிடம் வருமானத்தையும்
கேட்கக் கூடாது என்பார்கள்!

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்க்காகத் தெரிந்து கொள்வதில்
தவறு இல்லை! சொல்வதாலும் ஒன்றும் குறைந்து விடாது!

பதிவுகளில் உள்ள பதிவர்களின் வயதையும், வந்து படித்துவிட்டுப்
போகின்றவர்களின் வயதையும் ஒரு முக்கியமான காரணத்திற்காகத்
தெரிந்து கொள்ள விழைகின்றேன்

இந்த வரிசையில் அடுத்தடுத்து இன்னும் மூன்று சர்வே பதிவுகளும்
தொடர்ந்து வரும். அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கெல்லாம்
(அதாவது பதிவுலக குறுநில மன்னர்களுக்கெல்லாம்) பயன்படும்படியான
செய்திகளைத் தரவுள்ளேன்

ஆகவே உங்கள் அனைவரையும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்

அன்புடன்
SP.VR. சுப்பையா

சர்வே படிவம் - இங்கே சொடுக்குங்கள்

33 comments:

நாமக்கல் சிபி said...

30 க்கும் குறைவு எனில் ஆரம்பக் கல்வியும்,

31-40 எனில் மேல்நிலைக் கல்வியும்
41-50 எனில் உயர்நிலைக் கல்வியும்

51க்கும் மேல் எனில் முதியோர் கல்வியும் இங்கு பயிற்றுவிக்கப் படும்!

அனைவரும் வருக!

SP.VR. சுப்பையா said...

//கல்வியும் இங்கு பயிற்றுவிக்கப் படும்!//

கல்விக் கட்டணம் என்னவென்று சொல்லவில்லையே?
முதியோருக்கு சலுகை உண்டா?

நாமக்கல் சிபி said...

//கல்விக் கட்டணம் என்னவென்று சொல்லவில்லையே?
முதியோருக்கு சலுகை உண்டா?
//

அதையெல்லாம் வகுப்பு வாத்தியார்தான் சொல்லவேண்டும்!

கட் அடிப்பவன் said...

கட் அடிச்சா பனிஷ்மெண்ட் உண்டா?

நாமக்கல் சிபி said...

எங்கள் வகுப்பு வாத்தியார் சேவை மனப்பான்மையுடன் அனைவருக்கும் இலவசக் கல்வி பயிற்றுவிக்க இருக்கிறார்.

கல்விக் கட்டணம், தட்சணை என்றெல்லாம் எதையேனும் கொண்டுவந்து அவரை அவமானப் படுத்த வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!

FloraiPuyal said...

கால் நூற்றாண்டு தாண்டி நாலு வலுஷம் ஆச்சு. ஹும்.அதை ஏன் நினைவு படுத்தறீங்க?

SP.VR. சுப்பையா said...

// கட் அடிப்பவன் said...
கட் அடிச்சா பனிஷ்மெண்ட் உண்டா?//
எந்தக் காலத்தில் இருக்கீறீர்கள்?
இந்த வகுப்பறையில் பதிவேடு கூடக்
கிடையாது!

SP.VR. சுப்பையா said...

// நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது: அன்புடன் கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!//
தட்டச்சுப்பிழையா?
அல்லது ......?

குமரன் (Kumaran) said...

என் வயதைச் சொல்லிவிட்டேன்.

சேதுக்கரசி said...

16 என்றொரு option வேண்டுமே :(

வெற்றி said...

ஐயா,
நானும் என் வயதைச் சொல்லிவிட்டேன்.

Anonymous said...

நானும் போட்டாச்சு... இதுவரை கிடைத்த புள்ளிகள் கண்டு அதிர்ச்சியாக இருக்கு..

நாமக்கல் சிபி said...

//தட்டச்சுப்பிழையா?
அல்லது ......?
//

ஐயஹோ! வாத்தியாரின் வகுப்பிலேயே பிழையா?..............
என்றெல்லாம் பில்டப் கொடுக்க விரும்பவில்லை.

அது வேண்டுமென்றே செய்யப்பட்ட குசும்புப் பிழை!
:))

வகுப்பை வெறுப்பவன் said...

//எந்தக் காலத்தில் இருக்கீறீர்கள்?
இந்த வகுப்பறையில் பதிவேடு கூடக்
கிடையாது!
//

எங்கள் போறாத காலத்தில் இருக்கிறோம் போலும்!

சின்சியர் ஸ்டூடெண்ட் said...

கோட்டு சூட்டுலே நல்லா இருக்கீங்க சார்!

சின்ஸியர் மாணவி!

கோவி.கண்ணன் said...

ஐயா,

இதுவரை சர்வே படி இளையர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

புதிய சிந்தனைகள் ஓங்கட்டும் !

SP.VR. சுப்பையா said...

//சேதுக்கரசி அவர்கள் சொல்லியாது: 16 என்றொரு option வேண்டுமே :(//

அதுதான் சொல்லி்விட்டீர்களே - புள்ளிக் கணக்கை முடிக்கும்போது - உங்களைப் போன்று பின்னூட்டத்தில் வயதைச் சொல்பவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.

பத்து வயதிற்குக் கீழே உள்ளவர்களும் தஙகள் வயதைத் தைரியமாகச் சொல்லலாம்:-)))

SP.VR. சுப்பையா said...

//கோட்டு சூட்டுலே நல்லா இருக்கீங்க சார்! சின்ஸியர் மாணவி!//
அது கேட்டு வாங்கிப் போட்ட படம்!

ஆரம்ப்ப் பள்ளிக்கூட வாத்தியாருக்கு
ஏது கோட்டும் சூட்டும்?

SP.VR. சுப்பையா said...

//புளோரைப்புயல் அவர்கள் சொல்லியது:கால் நூற்றாண்டு தாண்டி நாலு வருஷம் ஆச்சு. ஹும்.அதை ஏன் நினைவு படுத்தறீங்க?//

நீங்களே இப்படி வருத்தப்பட்டால் என் வயதை நினைத்து நான் என்ன செய்வது?

SP.VR. சுப்பையா said...

//குமரன் அவர்கள் சொல்லியது:என் வயதைச் சொல்லிவிட்டேன்.//

நன்றி குமரன்!

SP.VR. சுப்பையா said...

// வெற்றி அவர்கள் சொல்லியது: ஐயா,
நானும் என் வயதைச் சொல்லிவிட்டேன்.//

வாருங்கள் வெற்றி! வயதைச் சொன்னதோடு பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி!

SP.VR. சுப்பையா said...

// தூயா அவர்கள் சொல்லியது:நானும் போட்டாச்சு... இதுவரை கிடைத்த புள்ளிகள் கண்டு அதிர்ச்சியாக இருக்கு..//

50 வய்திற்கும் மேற்பட்டவர்கள்கூட பதிவில் ஊள்ளார்களே என்பதாலா?:-)))

SP.VR. சுப்பையா said...

// வகுப்பை வெறுப்பவர் சொல்லியது:எங்கள் போறாத காலத்தில் இருக்கிறோம் போலும்!//

எல்லாம் உங்கள் செளகரியத்திற்காகத்தான்

SP.VR. சுப்பையா said...

//இதுவரை சர்வே படி இளையர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
புதிய சிந்தனைகள் ஓங்கட்டும் !//

Mentally I am also twenty five!
என்னையும் இளஞர்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள் கோவியாரே!

SP.VR. சுப்பையா said...

//நாமக்கல்லார் சொல்லியது; அது வேண்டுமென்றே செய்யப்பட்ட குசும்புப் பிழை! :))//

இப்படியெல்லாம் வகுப்பறையில் செய்தால் Term Exam மார்க்குகள் 40 ற்கும் கீழே போய்விடும். கவனத்தில் கொள்க!:-)))

கோவி.கண்ணன் said...

//SP.VR. சுப்பையா said...


Mentally I am also twenty five!
என்னையும் இளஞர்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள் கோவியாரே!//

அதுக்காக இன்னொரு திருமணமா ?
நோ சான்ஸ் !!!

சாரி வீட்டுக்கார அம்மா பின்னால் நிக்கிறாங்க பாருங்க !
:)))

சென்ஷி said...

நானும் ஓட்டு போட்டுட்டேன்.


சென்ஷி

SIVABALAN V said...

Sir,

I am 32 yrs.

I also voted.

சேதுக்கரசி said...

//உங்களைப் போன்று பின்னூட்டத்தில் வயதைச் சொல்பவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.//

பின்னூட்டத்தில் வந்த ஆதங்கத்தை விட்டுவிடுங்கள் :) உண்மையான வயதை சர்வேயிலேயே சொல்லிவிட்டேன்.

நன்மனம் said...

வோட்டு போட்டுவிட்டேன் ஐயா.

SP.VR. சுப்பையா said...

1. Mr.Senshi
2. Mr.Sivabalan,
3. Ms Sethukkarasi
4. Mr.Nanmanam

I thank you all!

ஞானவெட்டியான் said...

மனிதனாக வாழ்ந்த காலம் மட்டுமே கணக்கில் எடுத்துகொள்ளப்படுமா? அல்லது அவனியில் விழுந்ததிலிருந்தா?

SP.VR. சுப்பையா said...

//ஞான வெட்டியான் அவர்கள் கேட்டது: மனிதனாக வாழ்ந்த காலம் மட்டுமே கணக்கில் எடுத்துகொள்ளப்படுமா? அல்லது அவனியில் விழுந்ததிலிருந்தா?//

1.மனிதனாக வாழ்ந்த காலம் : இந்தக்
கணக்கு (உங்களுக்குத் தெரியாததா?)
இறைவனுக்கு கொடுப்பதற்கு நம் கணக்கில் இருப்பது. அது எனக்க்கு வேண்டாம்

2.அவனிக்கு வந்த கணக்கு மட்டும் போதும் அய்யா