மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

19.1.07

யார் இந்தப் பெண்மணி?

யார் இந்தப் பெண்மணி?

இன்று பொது அறிவுப்பாடம்!

கீழேயுள்ள படத்தில் ஐந்து பெண்மணிகள்
வரிசையாக அமர்ந்துள்ளனர்.

பார்த்தாலே தெரியும் எந்தத்துறையில் இருந்து
தமிழ்நாட்டைக் கலக்கினார்கள் என்று!

சரி, கேள்விக்கு வருகிறேன்.

படத்தில் (from left to right ) ஐந்தாவதாக இருக்கும்
பெண்மணி யார்?

பதிலைத் தெரிந்துகொள்ள கூகுள் ஆண்டவரிடமெல்லாம்
போகவேண்டாம். சர்வ நிச்சயமாகக் கிடைக்காது!

எங்கே கண்டுபிடியுங்கள் - எத்தனை பேர் தேறுகிறீர்கள்
என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்!

என்னுடைய மற்றொரு 'வலைப்பூ'விற்குத் தொடுப்பு இங்கே உள்ளது
அதில் கவியரசர் கண்ணதாசன் அவர்களைப்பற்றிய தொடர் உள்ளது
படித்து மகிழுங்கள்!

14 comments:

கானா பிரபா said...

ராஜசுலோசனா?

SP.VR.சுப்பையா said...

கானா பிரபா அவர்களே!
உங்கள் விடை சரியானதுதான்!

G.Ragavan said...

வலமிருந்து இடமாக

ராஜசுலோச்சனா, சரோஜாதேவி, சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, கடைசியில் இருப்பவர் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ராஜஸ்ரீயா?

SP.VR. சுப்பையா said...

ஜி.ரா அவர்களே,நீங்கள் எழுதியுள்ள விடை சரியானதுதான்.

மற்றும் நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலைக்கீழே கொடுத்துள்ளேன்

வரிசையில்(from left to right)
முதலில் அமர்ந்திருப்பவர்
எம்.என்.ராஜம் அவர்கள்!

Sridhar Venkat said...

ராஜ்ய சுலோசனா!

மற்றவர்கள்

M N ராஜம், K R விஜயா, சவுகார் ஜானகி, சரோஜா தேவி

சரியா?

SP.VR.சுப்பையா said...

ஸ்ரீதர்வெங்கட் அவர்களே நீங்கள் எழுதியுள்ள விடைகள் சரியானதுதான்!

Johan-Paris said...

அண்ணா!
படம் சற்றுத் தெளிவில்லை.
என்னினும் ஓர் முயற்சி அங்சலி தேவியா???
யோகன் பாரிஸ்

Sivabalan said...

அய்யா

பானுமதி?

உண்மையில் படம் சரியாக தெரியவில்லை..

உள்ளேன் அய்யா சொல்ல வந்தேன்

Abul said...

Anjali Devi amma

-Abul

வல்லிசிம்ஹன் said...

இவ்வளவு நாட்கள் கழித்து இவர்கள் எல்லோரையும் பார்ப்பதே நல்லாத் தானிருக்கு.

எப்போது எடுத்த படம் சுப்பையா சார்?

SP.VR. சுப்பையா said...

// வல்லிசிம்ஹன் அவர்கள் கேட்டது:
எப்போது எடுத்த படம் சுப்பையா சார்?//

சமீபத்தில் எடுக்கப்பெற்ற படம்தான் சகோதரி.இந்தமாத இதழ் ஒன்றில் வந்திருந்தது!

SP.VR. சுப்பையா said...

புதிரில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

சரியான விடை: திருமதி.ராஜசுலோசனா

மஞ்சூர் ராசா said...

நான் சரியான விடை சொல்வதற்குள் கானா பிரபா முந்திவிட்டார். இருந்தாலும் எனக்கு சரியான விடை தெரிந்திருந்தது என்பதால் உடனடியாக பரிசை எனக்கு அனுப்பிவையுங்கள்.

SP.VR. சுப்பையா said...

//Mr.Manjur Raja said:நான் சரியான விடை சொல்வதற்குள் கானா பிரபா முந்திவிட்டார். இருந்தாலும் எனக்கு சரியான விடை தெரிந்திருந்தது என்பதால் உடனடியாக பரிசை எனக்கு அனுப்பிவையுங்கள்.//

ஓகோ இதுதான் மேட்டுப்பாளையம்
குறும்பு என்பதா?