மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.7.19

அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!


அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!

1. கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். நியாயத்தின் பக்கம் உங்களால் நிற்க முடியும்.

2. ஏதோ தவறு செய்து விட்டோம் அடுத்ததில் சரியாக இருப்போம் என கடந்து போக பழகியவர்களே வெற்றி பாதையை சீக்கிரம் அடைந்து விடுவார்கள்.

3. கடன் கொடுத்து பார் நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும். கடன் கேட்டு பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்.

4. மனசு ஏத்துக்கிட்டா ஒரு விஷயத்த சந்தோஷமா செய்யுறோம். அதே மனசு ஏத்துகிடலனா பிறர் பார்வைக்காக மட்டுமே செய்கிறோம்.

5. வாழ்க்கையில் சந்தோசத்தை மட்டும் எதிர் நோக்கி சென்றால். நமக்கு துன்பம் தான் வந்து சேரும். நமக்கு வரும் கஷ்டங்களை ஏற்று எதிர் நோக்கி செல்லுங்கள். நீங்கள் எதிர்பாராத சந்தோசம் உங்களை தேடி வரும்.

6. உங்களை வெறுப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். வெறுப்பின் வலியை வேறு யார் மூலமோ அவர்களுக்கு புரிய வரும்.

7. கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உறவிற்குள் பிரிதலை ஏற்படுத்துபவை. ஆதலால் சற்று நிதானமாக சிந்தித்து வார்த்தைகளை உபயோகிப்பது சிறந்தது.

8. நம் மீது அக்கறை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் நம்மைப் பற்றி கூறும் விமர்சனங்கள் மனதிற்குப் பிடிப்பதில்லை.

9. சில சமயம் நேரமே போக மாட்டேங்குது, சில சமயம் நேரம் எங்க போச்சுன்னே தெரியல. ஆனா வாழ்க்கை அசராம அதே இடத்துல தான் இருக்கு.

10. கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய் என்பது பொருள்.

11. உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர் பார்த்தது போல் இல்லை என்றால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் நினைத்தது போல் மாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதுவும் நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே நடக்கும்.

12. அவருக்கு என்ன நிம்மதியான வாழ்க்கை என்பது பணம் சார்ந்தது அல்ல நல்ல குடும்ப உறுப்பினர்கள் சார்ந்தது.

13. பார்த்தவுடன் பழகாதே. பழகியவுடன் இணையாதே. இணைந்தவுடன் பிரியாதே. பிரிந்தவுடன் வருந்தாதே. வருந்தியவுடன் தேடாதே.

14. ஒரு உறவை முறித்துக் கொள்ள பொய்களை விடவும் உண்மைகளே அதிகக் காரணம் ஆகின்றன.

15. முன்னெல்லாம் பிரச்சினையைத் தீர்க்கப் பலர் இருந்தார்கள். இப்போதெல்லாம் தூண்டி விட பலர் விரும்புகிறார்கள்.

16. நமது பிரச்சனைகளை பிறர் உதவியுடன் தீர்த்துக்கலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர அது கொஞ்சம் கூட குறையாது.

17. தன் மகள், மகன் கேட்கும் எந்தப் பொருளும் வீண் செலவாய்த் தெரிவதில்லை பெற்றோருக்கு.

18. மெட்சூரிட்டி என்பது புரிஞ்சுக்குறதோ புரிய வைக்கிறதோ இல்லை. சூழ்நிலையைப் பொருத்து நடந்து கொள்வது.

19. காயப்படுத்துகிற மாதிரி எல்லாருக்குமே பேசத் தெரியும். சிலருக்கு மட்டும் தான் எதைப் பேசக் கூடாதுனு தெரிஞ்சிருக்கு.

20. வாழ்க்கையில நல்லது கெட்டதை புத்தகத்தை விட தெளிவா புரிய வைக்கறது நாம் பழகும் சக மனிதர்கள் தான். எனவே 'ஆகச் சிறந்த புத்தகம் மனிதன்'

21. எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நல்ல நட்பு, ஆனால் கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.

22. மகிழ்ச்சி  நம்மைத் தேடி வருவதில்லை!  நாம் தான் அதை தேடிச் செல்ல வேண்டும்!

23. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை.  அவர்கள் செய்வதை வித்தியாசமாய் செய்கிறார்கள்.

24. ஓரு சிலர் மனசு கஷ்டமா இருந்தா யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள், இதைப் புரிந்து கொண்டால் பிரச்சனை வராது.

25. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தி முடிவு செய்யுங்கள்.

26. சென்றதை சிந்திப்பவனை விட, இனி மேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.

27. எல்லாவற்றிலும் திறந்த புத்தகமாக இல்லாமல் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்து விடுங்கள். இவ்வளவு தானா இவர் என்று இல்லாமல் கொஞ்சம் புதிர் சுவாரஸ்யமாக இருக்க உதவும்.

28. சிலர் யாரைப் பார்த்தாலும் வெறுப்பாக பேசுவார்கள். மற்றவர்களிடம் சாதாரணமாகப் பேச யார் பழக்குவது.

29. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள். எல்லோரையும் திருப்திப் படுத்தும் எண்ணம் வேண்டாத விஷயம். செய்ய முடியாதவற்றையும், செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

30. மற்றவர்கள் பிரச்சனைகளை, கவலையை பகிர்ந்து கொள்ளும் போது முழுமையான அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறுவது தான் மனிதாபிமானம்.

31. எதையும் எதிர் பார்த்து செல்லாதீர்கள். சூழ்நிலை எவ்வாறு இருப்பினும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்.

32. உரிமையோடு உரையாடுவதாக எண்ணி உண்மையான உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தி விடாதீர்கள்.

33. இன்னொருத்தரோட இக்கட்டனா சூழ்நிலைய தனக்கு சாதகமா மாத்தி மத்தவங்களை கஷ்டப் படுத்துவது தவறு.

34. தகுதியும் வயதும் இருந்தும், வேலைக்கு முயற்ச்சி செய்யாதவர்கள் வாழ்வதே வீண்.

35. நம்மிடம் வசதி இருக்கும் போது உதவிகள் கேட்க ஆயிரம் உறவுகள் வந்து விடும். நம்மிடம் வசதி இல்லை என்றால் நமக்கு ஆறுதல் சொல்லக் கூட உறவினர்கள் வருவதில்லை.

36. எமோஷனலா சிந்திக்கும் போது நியாமான விஷயங்களைக் கூட நமது மனது ஏற்றுக் கொள்ளத் தடுக்கிறது.

37. கடைசி வரை கிடைக்காத விஷயஙுகளுக்கு, முதலில் இருந்தே போராட வைக்கிறது வாழ்க்கை.

38. பெரிய பிரச்சனைகள் எல்லாம் அதுவாக சரியாகி நகரும் வாழ்க்கையில் சிறு பிரச்சனை எல்லாம் நினைத்துப் பார்க்காத கஷ்டத்தை தருவது தான் வாழ்க்கையின் இயல்பு.

39. தேவை என்றால் சந்தர்ப்பத்தை உருவாக்கி பேசி விடுவார்கள். தேவை இல்லை என்றால் பிஸி என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுவார்கள்.

40. மன குழப்பமில்லாத தருணங்களில்தான் பிறருக்கு உதவிகள் கூட செய்ய முடியும்.

41. உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் மீது வரும் சிலரின் அக்கறை உங்களை கஷ்டப் படுத்தாது உங்கள் மீதுள்ள பொறாமையால் அக்கறை உள்ளது போல் நடிப்பவர் காட்டும் அக்கறை உங்களைக் கஷ்டப் படுத்தும்.

42. தோல்வியை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் நினைக்க வேண்டிய ஒரு விஷயம் வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று.

43. யாராலும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது. ஆனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன் வைக்க முடியும்.

44. ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள்.

45. கஷ்டப் பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கு மட்டும் செலவு செய்ய யோசிக்கும் குடும்பஸ்தன் பெற்ற பிள்ளைகளின் செலவுகளில் அதிகம் யோசிப்பதில்லை.�
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் குருவே,

    45. கஷ்டப் பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கு மட்டும் செலவு செய்ய யோசிக்கும் குடும்பஸ்தன் பெற்ற பிள்ளைகளின் செலவுகளில் அதிகம் யோசிப்பதில்லை.
    அற்புதமான அறிவுரை ஆசானே.

    ReplyDelete
  2. Good morning sir excellent article thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    45. கஷ்டப் பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கு மட்டும் செலவு செய்ய யோசிக்கும் குடும்பஸ்தன் பெற்ற பிள்ளைகளின் செலவுகளில் அதிகம் யோசிப்பதில்லை.
    அற்புதமான அறிவுரை ஆசானே.//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  5. //////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent article thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!!

    ReplyDelete
  6. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Have a great day.
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com