முன்னாடியா அல்லது பின்னாடியா?
"நெக்ஸ்ட்" என்று டாக்டர் குரல் கொடுத்தவுடன் கதவைத்திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் டாக்டருக்கே பரிதாபமாக இருந்தது.
வந்தவருக்கு வயது நாற்பது இருக்கும். இரட்டை நாடி உடம்பு. நடக்க முடியாமல் நடந்து வந்தார். முகம் மட்டும் அப்பாவித்தனமாக இருந்தது. தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பிறகு எதிரில் இருந்த இருக்கையில் சிரமப்பட்டு அமர்ந்தார்.
"சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.
"உடம்பு கனத்து விட்டது சார். அதுதான் பிரச்சினை. எப்படிக் குறைப்பது என்று தெரியவில்லை. சாப்பாட்டைக் குறைக்கமுடியவில்லை. குறைத்தால் பசி பிராணன் போகிறது.இப்போது நூறு கிலோ வெயிட்டாகி விட்டது. குறைப்பதற்கு உதவுங்கள்" என்றார்.
"முப்பது கிலோ அதிகமாக இருக்கிறீர்கள். சடனாகக் குறைக்கக் கூடாது. படிப்படியாகக் குறைத்து விடுவோம். நீங்கள் காலையிலும், மாலையிலும் தவறாமல் ஒரு நாற்பது நிமிடங்களாவது வாக்கிங் போகவேண்டும்."
"சரி சார்!"
"உங்கள் உணவுப் பழக்கத்தைப் பற்றி சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.
வந்தவர் பட்டியலிட ஆரம்பித்தார்." காலை ஆறு மணிக்கு ஒரு டம்ளர் காப்பி,. எட்டு மணிக்கு நான்கு இட்லி, நான்கு தோசை. பதினோரு மணிக்கு ஒரு கப் சூப், ஒரு பிளேட் காளிப்ள்வர். ஒரு மணிக்கு •புல் மீள்ஸ் வித் சிக்கன் 65, மாலை 4 மணிக்கு மூன்று பஜ்ஜி அல்லது 3 உருளைக்
கிழங்கு போண்டா, இரவு எட்டு மணிக்கு ஆறு சப்பாத்தி, ஒரு கப் ஐஸ்க்ரீம், படுக்கப்போகும் முன்பு இரவு 10 மணிக்கு ஒரு டம்ளர் கற்கண்டு பால்"
டாக்டர் உணவுக்கட்டுப்பாடு மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். வந்தவரின் எடைக்கு அவருடைய அந்த மோசமான உணவுப் பழக்கம்தான் காரணம் என்று தெரிந்து கொண்டவர், அதை மாற்ற நினைத்து மெல்லிய குரலில் சொன்னார்.
"முதலில் பதினைந்து நாட்களுக்குப் பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். இரண்டு டம்ளர் கோதுமைக் கஞ்சி , ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுங்கள்!"
வந்தவர் அப்பாவித்தனமாகக் கேட்டார், "அது இரண்டையும் எப்போது சாப்பிடவேண்டும் டாக்டர் - சாப்பிடுவதற்கு முன்னாடியா அல்லது பின்னாடியா?"
-------------------------------------------------------------
2
வழக்குரைஞருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?
உன் பக்கம் உண்மை இருந்தால்
அந்த உண்மையை நீதிமன்றத்தில் அடித்துப்பேசு!
உன் பக்கம் சட்டம் இருந்தால்
நீதிமன்றத்தில் அந்த சட்டத்தை எடுத்துச் சொல்லி அடித்துப்பேசு!
அவை இரண்டுமே உனக்கு சாதகமாக இல்லையென்றால்
நீதிமன்றத்தின் மேஜையை அடித்துப்பேசு!
- மின்னஞ்சலில் வந்தது!
---------------------------
What a lawyer should know?
If you have facts on your side, hammer the facts in Judge's mind;
If you have law on your side, hammer the law in Judge's mind;
If you have neither, hammer the table!
===========================================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே,
ReplyDelete👌இன்றைய பதிவில்.... முன்னாடியா அல்லது பின்னாடியா.....
கலக்கலான காமெடி!
If you have neither, hammer the table!....விழுந்து சிரித்தேன், ஆசானே!👌
Good morning sir all are excellent thanks sir vazhga valamudan
ReplyDelete//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
👌இன்றைய பதிவில்.... முன்னாடியா அல்லது பின்னாடியா.....
கலக்கலான காமெடி!
If you have neither, hammer the table!....விழுந்து சிரித்தேன், ஆசானே!👌/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!
//////Blogger Shanmugasundaram said...
ReplyDeleteGood morning sir all are excellent thanks sir vazhga valamudan/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!