யார் ஏழை?
நாம்தான் ஏழை.......
மன நிறைவு
பல சமயங்களில் நம்மிடம் இருப்பதை மறந்து இல்லாத விஷயங்கள் மேல் கவனத்தை செலுத்துகிறோம். ஒருவருக்கு உபயோகமில்லாத பொருள் மற்றவருக்கு பொக்கிஷமாக இருக்கலாம். எல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது.
நம்மிடம் இல்லாததை எண்ணி வருந்துவதை விட இருக்கும் விஷயங்களுக்காக நன்றி செலுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒருவர் தன் வாழ்வின் வரங்களை எண்ணி நன்றி உணர்வோடு இருந்தால், மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் இருக்கலாம்.
“குறைவான ஆசைகளுடன் இருப்பவன் தான் பணக்காரன். அதிக ஆசைகள் இருப்பவன் தான் பரம ஏழை.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகனுக்கு மக்கள் எவ்வளவு ஏழையாக இருக்க முடியும் என்பதைக் காண்பிக்க நாட்டுபுறத்திற்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்தார். ஒரு ஏழ்மையான குடும்பத்துடன் அவர்களது சிறிய பண்ணையில் சில நாட்கள் தங்கினார்.
பயணம் முடிந்து, வீடு திரும்பியவுடன் தந்தை தன் மகனிடம், “இந்த அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்டார். மகனும் மிக அருமையாக இருந்ததாகப் பதிலளித்தார். “மக்கள் எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா?” என்று தந்தை கேட்டதற்கு “நிச்சயமாக” என்று கூறினான்.
“இந்த பயணத்திலிருந்து புரிந்து கொண்ட விஷயங்கள் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு மகன், “நமக்கு ஒரு நாய் இருக்கையில் அவர்களுக்கு நான்கு இருக்கிறது. நம் நீச்சல் குளம் பாதி தோட்டம் வரை உள்ளது. அவர்களுக்கு வற்றாத ஆறே உள்ளது. நம் தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட விளக்குகள் வெளிச்சம் அளிக்கின்றன. அவர்களுக்கு வானத்தின் நட்சத்திரங்கள் அனைத்துமே உள்ளன. நம் திண்ணை முன் வாசல் வரையில் தான். ஆனால் வானம் முழுவதும் அவர்களுக்கு இருக்கின்றது. நாம் குடியிருக்க தேவையான பூமியில் வீடு கட்டி வாழ்கிறோம். இவர்களது வயல்களோ பல மைல்கள் தூரம் பரவியிருக்கின்றன. நமக்கு சேவை செய்ய வேலையாட்கள் உள்ளனர். அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்கின்றனர். நாம் உணவை வாங்குகிறோம், ஆனால் அவர்கள் பயிரிட்டு உணவை உண்ணுகிறார்கள். நம்மை பாதுகாக்க வீட்டை சுற்றி மதில் இருக்கிறது, அவர்களுக்கு நண்பர்கள் இருக்கின்றனர்.“ என்றான்.
இதையெல்லாம் கேட்ட தந்தைக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமித்துப் போனார்.
மகன் இறுதியாக, “ உண்மையில் நாம் தான் ஏழை என்று காட்டியதற்கு மிகவும் நன்றி” என்று சொன்னான்.
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very excellent story amazing thanks sir vazhga valamudan
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteசபாஷ், நல்ல தந்தைக்கு சிறந்த பரந்த அறிவுள்ள மகன். தான் நினைத்ததை விட பலமடங்கு கூர்மைத் திறன் கொண்ட மனம் கொண்ட மகனைப் பற்றி யார் தான் பெருமை கொள்ள மாட்டார்கள்!?
படிப்பினைக் கதை!
//////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very excellent story amazing thanks sir vazhga valamudan////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
சபாஷ், நல்ல தந்தைக்கு சிறந்த பரந்த அறிவுள்ள மகன். தான் நினைத்ததை விட பலமடங்கு கூர்மைத் திறன் கொண்ட மனம் கொண்ட மகனைப் பற்றி யார் தான் பெருமை கொள்ள மாட்டார்கள்!?
படிப்பினைக் கதை!////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!!
அருமை ஐயா அருமை.........படிப்பினையான கதை..........
ReplyDeleteஅன்பும் நன்றியும் என்றும் உரித்தாகுக.
/////Blogger Vicknaa Sai said...
ReplyDeleteஅருமை ஐயா அருமை.........படிப்பினையான கதை..........
அன்பும் நன்றியும் என்றும் உரித்தாகுக./////
நல்லது. நன்றி நண்பரே!!!!