மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.2.19

திருநள்ளாறும் சனீஷ்வரனும்!


திருநள்ளாறும் சனீஷ்வரனும்!

தெரிந்து கொள்வோம்.

#திருநள்ளாறு சனி பரிகார ஸ்தலம் அல்ல.

பெரும்பாலோனோர் திருநள்ளாறு திருத்தலத்தை சனியின் பரிகாரத் தலமாக கருதுகின்றனர்.

அவ்வாலயம் சனியதன் ஆலயமோ -  சனிக்கு ப்ரீதியான இடமோ அல்ல.

அவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் தளமாகும்.

வருத்ததிற்கு உரிய விஷயம் என்னவென்றால் சுவற்றில் குடையப்பட்டிருக்கும் சனியை பார்க்க முந்தியடித்து செல்லும் மக்கள் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிப்பதில்லை.

தல வரலாறு:

நள தமயந்தியை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.

நளமகாராஜாவுக்கு 7 1/2 சனி பிடித்தது. அவரது ராஜ்யம், மனைவி தமயந்தி மக்கள் அனைவரையும் இழந்தார். எனினும் சனியானவர் நள மகாராஜாவை விடாமல் துரத்தினாராம்.

அப்பொழுது நளமகாராஜா திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று ஈசனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே ஈசன் அங்கு தோன்றி, சனியை ஆலயத்தின் உள்ளே வராதே என்று சொல்ல சனியும் ஆலய வெளியிலேயே நின்றுவிட்டார்.

அத்துடன் திருநள்ளாறு வந்து என்னை அதாவது, ஸ்ரீ தர்பாரனண்யேஸ்வரரை தரிசத்து செல்பவரை சனி பிடிக்கக்கூடாது என்று கட்டளை இட்டார்.

ஆக திருநள்ளாறு திருத்தலத்தில் தரிசிக்கப்பட வேண்டிய மூர்த்தி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரே தவிர சனி அல்ல.

ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் பெற்றாலே சனி பீடை தானாக விலகிவிடும்.

ஆகவே  இதைப்படிக்கும் அன்பர்கள் திருநள்ளாறு சென்றால் சனிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை கட்டாயம் தரிசியுங்கள்.

தல விருட்சம்:

திருனள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தல விருக்ஷமாக இருப்பது தர்பைப்புல் தாவரம்.

இதுவே அவ்வாலயம் சனி பரிகார ஸ்தலம்  அல்ல என்பதை நிரூபிக்கும். ஏனெனில் சனியின் அபிமான தாவரம் வன்னி எனப்படும் மரமே தவிர தர்ப்பைப்புல் அல்ல....!!!!

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அறிந்து கொண்டோம் ஆலய வரலாறு மற்றும் சனி பகவான் ஸ்தலம் அல்ல என்பதற்கு ஆன முக்கிய விஷயமான ஸ்தல விருட்சம்
    தர்ப்பை என்பது!.
    ஆனால் ஏனோ தினசரிகளில் எழுதும் எல்லா ஜோதிடர்களும் மற்றும் பரிகாரம் சொல்லும் குருக்களும் திருநள்ளாறு செல்லத்தான் எழுதித் தருகிறார்கள்?!
    என்ன உலகமடா?

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் பற்றி தெரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா
    கண்ணன்

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Nice post...

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. /////K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அறிந்து கொண்டோம் ஆலய வரலாறு மற்றும் சனி பகவான் ஸ்தலம் அல்ல என்பதற்கு ஆன முக்கிய விஷயமான ஸ்தல விருட்சம் தர்ப்பை என்பது!.
    ஆனால் ஏனோ தினசரிகளில் எழுதும் எல்லா ஜோதிடர்களும் மற்றும் பரிகாரம் சொல்லும் குருக்களும் திருநள்ளாறு செல்லத்தான் எழுதித் தருகிறார்கள்?!
    என்ன உலகமடா? ///////

    எழுதித்தந்தால் என்ன? அங்கே உறைந்திருக்கும் மூலவரான சிவனாரை வணங்கிவிட்டு பிறகு சனீஷ்வரனை வணங்குங்கள்! நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  7. //////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் பற்றி தெரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா
    கண்ணன்//////

    நல்லது. நன்றி கண்ணன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com