மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.2.19

விதியும் சதியும்!!!!!


விதியும் சதியும்!!!!!

#விதிப்படியல்ல...
*****************

ருசியோடு ஒரு மருத்துவமனை
உன் வீட்டின் சமயலறை!

மேற்கத்திய சிகிச்சை முறை
உன் மரணத்தின் தொடக்க உரை...

நம் இயற்கை மருத்துவ வழி முறை...
அந்த மரணத்திற்கே முடிவுரை!

கருஞ்சீரகமும்,பெருஞ்சீரகம்
மணக்க மணக்க
நோய் தீர்க்கும் மா மருந்து...

அது...
புற்று நோயை பூட்டிவைக்கும்
சுகாதார பூ விருந்து!

மஞ்சள் என்னும்
கிருமி நாசினியின் மகத்துவம்
தெரியுமோ?

வேனல் நீக்கும்
வெந்தயத்தைத்தான் உனக்கு
புரியுமோ?

நடமாடும்
மருத்துவ சாலை உன் வீடு..

உன் வாழ்வு வண்டி
அதில் பயணிக்க அனுமதி கூறு!

உன் தலையணையின்
அடியிலிருக்கும் சுகாதாரமே
உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...

ஆனாலும் நீ,
நோயை இருத்திக்கொண்டு
பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்
சோம்பலைக் கொட்டி!

இனியேனும் அருகிலிருக்கும்
சமையல் கூடத்தின்
நிவாரணம் உணர்...

ஆங்கில மருந்தென்பது
உன்னை ஏமாற்றித்தொலைக்கும்
தற்காலிகத் திமிர்!

உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்
இஞ்சி, மிளகு பற்றிதான் நீ
அறிந்திருக்கிறாயா?

இரத்தத்தை சுத்திகரித்து
இதயத்தை பலப்படுத்தும்
வெங்காய வேகத்தைத்தான்
நீ உணர்ந்திருக்கிறாயா?

பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?
அதன் பலன்தான் உனக்கு புரியுமா?

ஆங்கில மருத்துவர்கள் உன்னை
அடி மடையனாக்கி பிழைக்கும்
வியாபாரத் தந்திரத்தை யோசி...

பொது புத்தி கொண்ட அவன்,
தேகம் மெலிந்த உன்னவர்களிடம்
ஆப்பிள் அற்புத சத்தன்றே
சாதித்து விட்டான் பேசி...

ஒரு வாழைப் பழத்திற்கு
நான்கு ஆப்பிளே சமம் என்பதை
மட்டும் மறுத்து விட்டான்...
கூகுலில் தேடி வாசி!

உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த
பழங்களிலும் மருந்துண்டு என்பதை
ஏனோ? மறைத்து விட்டான்...

உடற்கேட்டை உண்டாக்கும்
மைதாவையும், கோதுமையையும்
நல்லதெனச் சொல்லி பொய்யையும்
அவிழ்த்து விட்டான்...

நல்ல அரிசி,பலகாரங்களுக்குள்தானே
இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...

அரிசி உணவென்பது நம் ஆயுளை 
கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்
கணக்கு வாத்தியார் என்பதையோ
ஒளித்து விட்டான்!

தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்
உனக்காகவிளைத்ததெல்லாம்விசங்கள்!

பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு
ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?

வெள்ளைச் சக்கரையின்
வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே
புசித்துக்  கொண்டிருக்கிறாய்...

நாட்டுச்சக்கரையின் நலன்
தெரியாது!

ஆங்கில வலி மருந்து உன்
சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்
கரு நாகப் பருந்து என்பதை உணர்!

அயோடின் உப்பு மருத்துவர்களின்
வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்
தப்பு தெரியுமோ?

மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க
மடையனாக்கிவிட்டான் உன்னை...

விழித்துக்கொள் நண்பா...
எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்
ஆங்கில  நயவஞ்சகத்தின் சதிப்படி!
----------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

 1. Good morning sir absolutely truth very useful health tips thanks sir vazhga valamudan

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  வாழ்வில் போராடி, சிறையில் வாடி, உண்ணாநோன்பில் உருக்குலைந்து,
  பின் மீண்டு, எதிர்த்து ஆங்கிலேயன்
  போனான். ஆனால், இந்தியனின்
  சுதந்திர தாகத்தை வெருத்தான்.
  அதற்காக நமது புதிய அரசு பொம்மைகளை தந்திரத்தால் வென்று நம்து பொருளாரதாரம்
  முன்னேற விடாமல் செய்ய பல சூழ்ச்சிகள் மூலம் நோகடித்து விட்டான். எல்லாம் தெரிகிறது!?
  ஆனால் இன்னும் நம்மால் எழ முடியாமல் செய்து கொண்டு தானே நமது இன்றைய ஆட்சியாளர்களும்
  செய்கிறார்கள்?
  பதிவில் கண்டவை நம் கண் முன்னே நடைபெறுகிறது.விழித்துக்கொண்டு
  முழிக்கிரோம், கைகள் கட்டப்பட்டு!?
  இறைவா இந்தியாவைக் காப்பாற்றி!

  ReplyDelete
 3. அருமை...அருமை...
  இயற்கையாய் இருந்த தமிழ் மருத்துவம்...
  அதனை மூடிமறைக்க வந்த ஆங்கில மருத்துவம்...
  என்று விழிப்பார்கள் நம் மக்கள்...

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா,உண்மை.விழித்துக் கொள்ள வேண்டும்.நன்றி.

  ReplyDelete
 5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir absolutely truth very useful health tips thanks sir vazhga valamudan//////

  நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

  ReplyDelete
 6. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  வாழ்வில் போராடி, சிறையில் வாடி, உண்ணாநோன்பில் உருக்குலைந்து,
  பின் மீண்டு, எதிர்த்து ஆங்கிலேயன்
  போனான். ஆனால், இந்தியனின்
  சுதந்திர தாகத்தை வெருத்தான்.
  அதற்காக நமது புதிய அரசு பொம்மைகளை தந்திரத்தால் வென்று நம்து பொருளாரதாரம்
  முன்னேற விடாமல் செய்ய பல சூழ்ச்சிகள் மூலம் நோகடித்து விட்டான். எல்லாம் தெரிகிறது!?
  ஆனால் இன்னும் நம்மால் எழ முடியாமல் செய்து கொண்டு தானே நமது இன்றைய ஆட்சியாளர்களும்
  செய்கிறார்கள்?
  பதிவில் கண்டவை நம் கண் முன்னே நடைபெறுகிறது.விழித்துக்கொண்டு
  முழிக்கிரோம், கைகள் கட்டப்பட்டு!?
  இறைவா இந்தியாவைக் காப்பாற்று!/////


  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

  ReplyDelete
 7. /////Blogger J Murugan said...
  அருமை அய்யா...//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி முருகன்!!!!!

  ReplyDelete
 8. //////Blogger SUNRAYS said...
  அருமை...அருமை...
  இயற்கையாய் இருந்த தமிழ் மருத்துவம்...
  அதனை மூடிமறைக்க வந்த ஆங்கில மருத்துவம்...
  என்று விழிப்பார்கள் நம் மக்கள்...///////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 9. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,உண்மை.விழித்துக் கொள்ள வேண்டும்.நன்றி./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com