பரமாச்சார்யா சொல்லிய வாழ்க்கை முறைகள்!!!!
*மஹா பெரியவா சொல்லிய இனிய வாழ்க்கை ரகசியங்கள்...
இன்னிக்கி பெண்களிடம் இயற்கையான நாணமும், நல்ல பண்புகளும் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு.
Atomic Power மாதிரியான, தங்களுக்குண்டான குடும்ப கார்யங்களை, கடமைகளை விட்டுட்டு, social service-னு கெளம்பக் கூடாது.*
*பெண்கள் வீட்டோட இருந்தா ‘அடஞ்சு கெடக்கறது’ ன்னு அர்த்தமில்லை! பெண்கள் வீட்ல அடைபட்டிருக்கணுமே-ன்னு நெனச்சு, பாதுகாப்பில்லாத எடங்களில் வேலை செய்து, திண்டாடறதை விட, நம்ம ஸாஸ்த்ரங்கள், புராணங்கள், ஸம்ஸ்க்ருதம் இதுகள… படிக்கறதையும், அப்படிப் படிச்சதை கொழந்தேளுக்கும், மத்தவாளுக்கும் மனஸ்ல.. ஸதா உருவேத்தி, அவாள நல்ல ப்ரஜைகளா... உருவாக்கறதே பெண்களுக்கு லக்ஷணம். வாஸ்தவத்ல, ஸமுதாயத்துக்கு.. பெண்களோட இந்தப் பங்கு.. ரொம்ப பெருஸு!*
*‘வீட்ல புருஷனுக்கு அடங்கி இருக்கறது முடியாது! பணத்துக்கு, அவன்ட்ட கையேந்திண்டு நிக்க முடியாது! பெண் ஸ்வதந்த்ரம் வேணும்! ‘…ன்னுகொடி தூக்கறவா, அதுனால, ஏதோ வேலைக்கு போறா! அப்படி வேலைக்கு போற வழில பஸ்ஸுல, ட்ரெயின்ல.எத்தன கஷ்டங்களுக்கும், அவமானத்துக்கும் ஆளாறதோட, வேலை செய்யற எடத்துலயும். மேலதிகாரிகள், ஸக ஊழியர்கள்னு, ஆயிரம் பேருக்கு அடங்கித்தான் வேலை செய்ய வேண்டியிருக்கு!*
*ஒரு புருஷனுக்கு அடங்கி வாழ்கை நடத்த முடியாதவா, ஆயிரம் புருஷாளுக்கு அடங்கி, திட்டு வாங்கி, பயந்து..அங்க இங்க ஓடி. கொழந்தேளையும் ஸெரியா கூட இருந்து பாத்துக்க முடியாம, கடஸீல. வாழ்க்கை முடியறப்போ. யோஜிச்சுப் பாத்தா.. பணம் ஒண்ணுதான் அவாளுக்கு ப்ரதானமா இருந்திருக்கறதும், ஆனா. வாழ்க்கைல.அழகான, நல்லதான எத்தனை விஷயங்களை, அவா கோட்டை விட்டிருக்கறதும் புரியவரும். அப்போ. என்ன ப்ரயோஜனம்?…*
*பெண் கொழந்தைகள், கன்யா பெண்கள், ஸுமங்கலிகள் இவாள்ளாம் எப்பவுமே நெத்திக்கு இட்டுக்கணும, பாழ் நெத்தியா இருக்கக் கூடாது.*
*ஸுமங்கலிகள் நெத்தி வகிடுலயும், நெத்திலயும் குங்குமம் வெச்சுக்கணும்.*
*கருப்பு பொட்டு அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வெச்சுக்கறதும், பொட்டு வெச்சுக்காம இருக்கறதும் ஒண்ணுதான்.*
*பெண்களுக்கு நகைகள், fashion-க்காக இல்ல! கன்யாவா இருக்கறச்சே அவளுக்கும், கல்யாணமானதும் அவளோட புருஷனுக்கும், அவை ரக்ஷைகள்.*
*திருமாங்கல்யத்தை.. மஞ்சக்கயத்துலதான் கோர்த்துக்கணும். தெனோமும்.. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சா அழுக்கோ, பிஸுக்கோ அதுல ஏறாது.*
*காதுல தோடு பெருஸா இருந்தா, அவ புருஷனுக்கு ஆயுஸ் ஜாஸ்தி! அம்பாளோட தாடங்க மஹிமையாலதான், ஹாலாஹல விஷம் கூட, பரமேஸ்வரனை ஒண்ணும் பண்ணல!*
*கழுத்துல கருகமணியும், கைகள்ள, கண்ணாடி வளையலும், அவஸ்யம்.*
*ஸ்வர்ணம்[தங்கம்] ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி! பொண்கள் கால்ல.. போட்டுக்கற கொலுஸு, மெட்டி இதையெல்லாம்…. தங்கத்ல பண்ணி, கால்ல போட்டுக்க கூடாது. அம்பாளோட பாதங்கள்ள மட்டுந்தான் தங்கத்தை போடணும்.*
*வெள்ளிக்கெழமை கண்ணாடி வளையல் இருக்கற பொட்டி காலியா.. இருக்கக்கூடாது.*
*கன்யாப் பெண்களும், ஸுமங்கலிகளும் தலை முடியை வெட்டிக்கக் கூடாது.*
*இப்போ… ஜீன்ஸ் பான்ட் போட்டுக்கறதுக்காக, திருமாங்கல்யத்தையே கழட்டி வெச்சிட்டு போற அளவுக்கு பெண்கள் ‘முன்னேறியிருக்கா!
’. பெண்கள் செய்யற.. இந்த மாதிரி, பல ஆகாத கார்யங்களாலும், ‘பணத்தையும், ஸ்டேடஸ்ஸையும், வெளிநாட்டு மோஹத்தையும்’ மட்டுமே அடிப்படையா வெச்சிண்டு, பெத்த கொழந்தேள்-லேர்ந்து, புருஷன், மாமனார், மாமியார் அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, “தான், தன் ஸுகம் “ன்னு மட்டுமே வாழறதுனால, அப்படிப்பட்ட பெண்களை, அவாளோட பெத்தவாளும் எடுத்துச் சொல்லி திருத்தாம, encourage வேற பண்றதாலும்,
இன்னிக்கி.பல பெண்களோட கல்யாண வாழ்க்கை, நிம்மதியில்லாமலும், புருஷன், ஸொந்தக்காரா எல்லார்கிட்டேர்ந்தும் பிரிஞ்சு அமங்கலமா.. இருக்கறதை கண்கூடா பாக்கறோம்.*
*பெண்கள் காயத்ரீ மந்த்ரத்தையோ, வேத மந்த்ரங்களையோ, சொல்லக் கூடாது.
அதெல்லாம் மொறையா… பூணூல் போட்டுண்டவா மட்டுந்தான் சொல்லணும். பிள்ளைக் கொழந்தைகளே கூட, பூணூல் போட்டுக்கறதுக்கு முன்னாடி, வேத பாடம் சொல்லக் கூடாது.*
*பெண்களுக்கு லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, மாதிரி ஸ்லோகங்களே ஸ்ரேஷ்டம். பொண்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது.*
*பெண்கள் எப்பவுமே பொடவைதான் கட்டிக்கணும். புருஷாளே.. கால் தெரியும்படி ட்ராயர்-ல்லாம் போட்டுக்காம வேஷ்டி கட்டிக்கணும்-ங்கறச்சே பெண்கள் இப்போல்லாம் வீட்டுலயும், வெளிலயும் ‘ஸ்வதந்த்ரம்’ன்னு போட்டுண்டு போற dress-கள்…. புருஷாளவிட.ரொம்ப மோசமா இருக்கு.*
*கோவிலுக்கோ, மஹான்களை தர்சனம் பண்ணப் போறச்சயோ கட்டாயமா.. ஆண்கள்-வேஷ்டியும், பெண்கள்-பொடவையும்,
பொண்கொழந்தைகள்-பாவாடை சட்டையும், கன்யாபெண்கள்- தாவணியும் கட்டிண்டுதான் போகணும். அதையும், கௌரவமான மொறைல போட்டுக்கணும்.
எப்பவுமே பொறத்தியாரோட கவனத்தை திசை திருப்பும்படியான dress-களையோ, நகைகளையோ போட்டுண்டு போகக் கூடாது.*
*பெண்கள் வீட்டுலயும், வெளிலயும்.. தலையை விரிச்சுப் போட்டுண்டு இருக்கக் கூடாது. எழவு [ஸாவு] விழுந்த வீட்டில்தான், தலையை விரிச்சுப் போட்டுண்டிருப்பா. பொண்கள், தலையை முடிஞ்சுக்காம, விரிச்சுப் போட்டுண்டு இருக்கற வீடுகள்ள.தரித்ரம் தாண்டவமாடும். லக்ஷ்மீகரம் போய்டும்! ‘லக்ஷ்மீகரம்’-னா வெறும் பணம் காஸு மட்டுமில்ல! மனஸ்ல, ஸந்தோஷம், நல்ல குடும்ப வாழ்க்கை, குடும்பத்ல அமைதி, நிம்மதி* *இதெல்லாம்தான் உண்மையான லக்ஷ்மீகரம்.*
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ. நமஸ்காரம். ராம் ராம்! 🙏 🙏 🙏 🙏
===================================================================
2
“பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே"..பாட்டி
(“ஆமா இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே”--பெரியவா)
{மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை?}
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்.
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும் என்று வைத்துக்கொள்வோமே!
தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி.
பெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள்
கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள்.
பெரியவாள் கேட்டார்கள்:
“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே .இன்னும் இருக்கோ?”
“ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறார்கள்”
“கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே”
“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்”
“ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே”
“ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு, நல்ல வம்சம்”
“அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?”
“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்”
“எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா?”
“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..”
“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா யாராவது படிக்கிறாளா?”
“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..”
“ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தயே நடக்கிறதா?”
“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்”
கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!
கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள் அப்போது பார்த்தது.., கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ?
பாட்டி சொன்னாள்,
“பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை.”
பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போல ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக் கொண்டிருந்ததவர்களையெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்!
“ஆமா இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே”
மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை?
கற்கண்டுக்கு, இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன? பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?
----------------------------------------------------------------
படித்து வியந்தது! பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Present sir
ReplyDeleteGood morning sir very nice info thanks sir vazhga valamudan
ReplyDeleteஅருமை
ReplyDeleteRespected Sir,
ReplyDeletePleasant morning.... nice one.
Have a great day.
With regards,
Ravi-avn
வணக்கம் குருவே!
ReplyDeleteமனிதராகப் பிறந்து,மாபெரும் சக்தியாக வாழ்ந்து மஹானாகவே
மறைந்த மஹாப்பெரியவர்!
தனது 13வது வயதிலேயே சன்னியாசம் பூண்டு, நம்மைப் போன்ற சாதாரண மக்கள் மனதில்
நீங்காத இடம் பெற்ற உன்னத உயிர்!
அவர் கூறிய நல் வாக்குகளை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய
உதாரண மாமனிதர்!
உண்மையில் மனதார நினைந்து
அவரை அண்டிய எவ்வுயிரையும்
காப்பாற்றத் தவறியதேயில்லை
என்பதற்கு பல சான்றுகள் உள்ளன!
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர!
Anything about kalaignar
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeletePresent sir//////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very nice info thanks sir vazhga valamudan//////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
/////Blogger Nagendra Bharathi said...
ReplyDeleteஅருமை//////
நல்லது. நன்றி நண்பரே!!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Pleasant morning.... nice one.
Have a great day.
With regards,
Ravi-avn///////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
மனிதராகப் பிறந்து,மாபெரும் சக்தியாக வாழ்ந்து மஹானாகவே
மறைந்த மஹாப்பெரியவர்!
தனது 13வது வயதிலேயே சன்னியாசம் பூண்டு, நம்மைப் போன்ற சாதாரண மக்கள் மனதில்
நீங்காத இடம் பெற்ற உன்னத உயிர்!
அவர் கூறிய நல் வாக்குகளை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய
உதாரண மாமனிதர்!
உண்மையில் மனதார நினைந்து
அவரை அண்டிய எவ்வுயிரையும்
காப்பாற்றத் தவறியதேயில்லை
என்பதற்கு பல சான்றுகள் உள்ளன!
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர!////////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!!
//////Blogger MOHAN said...
ReplyDeleteAnything about kalaignar//////
இன்றைய பதிவைப் பாருங்கள் மோகன்! நன்றி
பெண்கள் பற்றிய மிக பிற்போக்கான கருத்துகள். வாத்தியார் அய்யா அந்த பெரியவர் மேல் உள்ள பற்றினால் அவர் கூறியதை பிரசுரித்திருக்கலாம். ஆனால் அந்த கருத்துகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ReplyDeleteபெண்கள் வீட்டோடு இருந்ததால் தான் ஆண்கள் அராஜகம் செய்தனர். பெண்களை அடிமையென எண்ணி பலர் அடித்து துன்புறுத்தினர். சமூக சீர்திருத்தங்களினால், இன்று பெண்கள் நன்கு படித்து வேலைக்கு சென்று பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைந்திருப்பதினால், அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆண்கள் அத்துமீறினால், அவர்களோடு வாழ விருப்பமில்லை என்று கூறி அவர்களால் வெளியில் வந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ள முடிகிறது.
சமூக ரீதியாகவும் பெண்கள் வேலைக்கு செல்வது பல நன்மைகளை தந்துள்ளது. பெண்கள் வேலைக்கு வருவதினால் ஆண்கள் அலுவலகத்தில் தவறான சொற்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டதாக ஒரு பெரியவர் என்னிடம் கூறினார். இப்போது இருக்கும் சூழ் நிலையில் படித்தவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு இருக்கிறது. ஆண்களால் மட்டும் அவற்றை நிரப்ப முடியாது. பொருளாதார ரீதியாக பெண்களும் வேலைக்கு செல்வதால் குடும்பத்திற்கு வருமானம் அதிகரிக்கிறது.
பெண்கள் வெளியுலகத்தை காணும்போது, அதில் உள்ள சிரமங்களும் அனுபவங்களும் அவர்களை வலிமையாக்குகிறது.
பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கியதால்தான் இந்திரா நூயி, கல்பனா சாவ்லா, ஷெரில் சான்ட்பெர்க் (முகநூல் நிறுவனத்தில் பெரிய அதிகாரி) போன்றவர்கள் கிடைத்தனர்.
இஸ்ரேல் இராணுவத்தில் பெண் வீரர்கள் உள்ளனர். ஏன் நமது புலிப்படையில் பெண் வீரர்கள் இருந்தனரே.
ஆணும் பெண்ணும் சமம். ஒருவர் வேலைக்கு செல்ல வேண்டும். மற்றவர் வீட்டை ஆள வேண்டும் என்ற கருத்து பிற்போக்கானது, ஆபத்தானது.