மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.8.17

Astrology: ஜோதிடம்: பரிவர்த்தனை யோகம்

Astrology: ஜோதிடம்: பரிவர்த்தனை யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!

இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!

"Parivartthanai means Planet A occupies the sign of Planet B while simultaneously Planet B occupies the sign of Planet A.
Example: Moon occupies Jupiter's (குரு) house and Jupiter (குரு) occupies moon's house
---------------------------------------------------------------------------
இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.

Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two grahas involved. Increasing the power of the two bhavas and the two grahas may be helpful for the success of the native.

அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும்

எப்படி?

வாருங்கள். அதையும் பார்ப்போம்.
------------------------------------
அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும்

ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம்.

If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may increase negative results.
-------------------------------------------------------------------------------------
பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும்.

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும்.

If the graha involved are natural benefics; the benefits will be more for which those grahas are concerned.If the exchanged graha are natural malefics; results may be more difficult than the graha might separately produce.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள்.

1.தைன்ய பரிவர்த்தனை.

தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

This parivarththanai leads to a wicked nature, persistent trouble from opponents and ill health. The dushthana lord will be strengthened by its
interaction with the other non-dushthana partner.
________________________________________
2. கஹல பரிவர்த்தனை!

மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும்.
மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out and get stuff done.
---------------------------------------------
3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga

1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும்.

When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs, then it is called as Maha Parivarththanai Yoga
Result: This yoga promises wealth, status, and physical enjoyments, plus beneficial influences from the houses involved.
++++++++++++++++++++++++++++++++++++++
பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு.

தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும்.

உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம்.

இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜாதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும்.

ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும்.
---------------------------------------------------------------------
2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும்.

2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான்

1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.

1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான்.

9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த
அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு!

This type of parivarththanai yoga will confer high position, reputation,
fame and power.

Shukra-Kuja exchange
If Venus and Mars exchange their divisions, the female will go after other males. If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. 
(எச்சரிக்கை: இது பொது விதி)

அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா? ஆண்களுக்கு இல்லையா?

எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-)))))

பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும்.
________________________________________
இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் ஜாதகம். அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. அதைப் பற்றி விரிவாக பதிவில் முன்பு எழுதியுள்ளேன்

ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும் பெற்றார். பல தீமைகளையும் பெற்றார்.

இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir, very useful to see parivarthanai yoga in detail,sir,what is the result when 2nd house lord Mercury and 12th house lord moon gets parivarthanai my father has this yoga sir, thanks sir vazhga valamudan sir

kmr.krishnan said...

Fine Sir.

journey said...

மிதுன லக்னம். ஒன்பதில் குரு, செவ்வாயுடனும், கேதுவுடனும். பத்தில் சனி. ஏழுக்கும் பத்துக்கும் உரியவன் ஒன்பதில். எட்டுக்கும் ஒன்பதிற்கும் உரியவன் பத்தில். நீங்கள் இன்னொறு தளத்தில் எழுதிய போது பின்னூட்டமிட்டுருக்கிறேன்! உங்கள் எழுத்துக்களை தொடர்கிறேன்.

journey said...

மன்னிகவும், மிதுன லக்னம் என்று சொல்லியிருக்க வேண்டும். ஒன்பதும் பத்தும் பரிவர்த்தனை. ஒன்பதுக்குரியவன், எட்டுக்கும் உரியவனாக இருக்கிறான்.
mixed results ஆக இருக்குமா? நன்றி.

gokila srinivasan said...

Hi sir,
Waited more days to know about parivarthana yoga. I have this yoga between 5th & 6th house,(rishaba lagnam). but in fifth house three planets are present sukran, sani, guru. Budhan dasa won't be good for me or it is good to have Bhudan in 6th house for rishaba lagnam sir.
Pls reply. Thank you sir.

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம் ஐயா.
பரிவர்த்தனையில் ஒரு கிரகம் அஸ்தங்கம் ஆகி இருந்தால் அதை எப்படி எடுத்து கொள்வது.
உதாரணம் சனி செவ்வாய் பரிவர்த்தனை யில் செவ்வாய் அஸ்தங்கம்.
நன்றி.

t.nagoji rao said...

Sir, again good view on parivarthana yogam. I have one doubt, if 5th(thulam) sukran in 8th(magaram) place, and 8th(magaram)sani in 5th(thulam), then what is the parivarthana balan?, this is not mine. My doubt only

KJ said...

Nice lesson sir.. Thank you

Anonymous said...

Greetings Sir!
I have parivarthanai yoga between 7th and 11th house. 7th house Lord Sun is in Sagittarius and 11th house Lord Jupiter is in Leo. Ashtagavarga score for Jupiter is 6 and for Sun is 5. Jupiter is natural benefic but functional malefic. How about Sun Sir? Looking forward to your views and comments. Thank you

adithan said...

வணக்கம் ஐயா,முக்கோண பரிவர்த்தனை என்பது உண்டா? அப்படியெனில் அது பற்றி எளிய விளக்கம் தரலாமா.நன்றி.

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, very useful to see parivarthanai yoga in detail,sir,what is the result when 2nd house lord Mercury and 12th house

lord moon gets parivarthanai my father has this yoga sir, thanks sir vazhga valamudan sir////

2nd lord and 12th lord பரிவர்த்தனை என்பது நன்மையானதல்ல! வரவை விட செலவே அதிகமாக இருக்கும்!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Fine Sir.////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!


Subbiah Veerappan said...

////Blogger journey said...
மிதுன லக்னம். ஒன்பதில் குரு, செவ்வாயுடனும், கேதுவுடனும். பத்தில் சனி. ஏழுக்கும் பத்துக்கும் உரியவன் ஒன்பதில். எட்டுக்கும் ஒன்பதிற்கும்
உரியவன் பத்தில். நீங்கள் இன்னொறு தளத்தில் எழுதிய போது பின்னூட்டமிட்டுருக்கிறேன்! உங்கள் எழுத்துக்களை தொடர்கிறேன்./////

அது நினைவில் இல்லை! நல்லது, நன்றி!!!

Subbiah Veerappan said...

///Blogger journey said...
மன்னிகவும், மிதுன லக்னம் என்று சொல்லியிருக்க வேண்டும். ஒன்பதும் பத்தும் பரிவர்த்தனை. ஒன்பதுக்குரியவன், எட்டுக்கும் உரியவனாக
இருக்கிறான்.
mixed results ஆக இருக்குமா? நன்றி.////

ஒன்பதும் பத்தும் பரிவர்த்தனை ஆகும்போது, தர்ம கர்மாதிபதி யோகம். நீங்கள் சொல்லும் கணக்கு வராது! நன்மையே மிகுந்திருக்கும்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger gokila srinivasan said...
Hi sir,
Waited more days to know about parivarthana yoga. I have this yoga between 5th & 6th house,(rishaba lagnam). but in fifth house three
planets are present sukran, sani, guru. Budhan dasa won't be good for me or it is good to have Bhudan in 6th house for rishaba lagnam
sir.
Pls reply. Thank you sir./////

ரிஷப லக்கினத்திற்கு புதன் 2 மற்றும் 5ற்கு உரியவன். புதன் 6ல் இருக்கும் அமைப்பு நன்மையான அமைப்பு அல்ல சகோதரி!!!!

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் ஐயா.
பரிவர்த்தனையில் ஒரு கிரகம் அஸ்தங்கம் ஆகி இருந்தால் அதை எப்படி எடுத்து கொள்வது.
உதாரணம் சனி செவ்வாய் பரிவர்த்தனை யில் செவ்வாய் அஸ்தங்கம்.
நன்றி. /////

அஸ்தங்கம் ஆன கிரகம் அவுட். அதனால் அதன் மூலம் நன்மைகள் எதுவும் இருக்காது.!!!!

Subbiah Veerappan said...

////Blogger t.nagoji rao said...
Sir, again good view on parivarthana yogam. I have one doubt, if 5th(thulam) sukran in 8th(magaram) place, and 8th(magaram)sani in
5th(thulam), then what is the parivarthana balan?, this is not mine. My doubt only/////

6,8 & 12 போன்ற மறைவிடங்கங்களில் ஏற்படும் பரிவர்த்தனைகளால் பாதி பலன் இருக்காது!!!!


Subbiah Veerappan said...

////Blogger KJ said...
Nice lesson sir.. Thank you////

நல்லது. நன்றி!!!

Subbiah Veerappan said...

////Blogger You and Your Astrology said...
Greetings Sir!
I have parivarthanai yoga between 7th and 11th house. 7th house Lord Sun is in Sagittarius and 11th house Lord Jupiter is in Leo.
Ashtagavarga score for Jupiter is 6 and for Sun is 5. Jupiter is natural benefic but functional malefic. How about Sun Sir? Looking
forward to your views and comments. Thank you/////

7ம், 11ம் நல்ல வீடுகள் அல்லவா? நன்மையான பலன்கள் உண்டு! நல்ல துணைவி அமைவார். அவர் வருகையால் பல நன்மைகள் உண்டாகும் (லக்கினாதிபதி, சுக்கிரன் ஆகியோரின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும். அதையும் மனதில் கொள்ளவும்)

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,முக்கோண பரிவர்த்தனை என்பது உண்டா? அப்படியெனில் அது பற்றி எளிய விளக்கம் தரலாமா.நன்றி./////

ஆஹா தாராளமாக உண்டு, திரிகோண அல்லது கேந்திர வீட்டு அதிபதிகளின் முக்கோண பரிவர்த்தனையால் ராஜ யோகம் உண்டாகும்!!!!

karthi keyan said...

நவாம்ச பரிவர்தனை அமைப்பிற்கு பலன் உண்டா ஐயா

மேற்கிலிருந்து ம. ராஜவேல். said...

தற்செயலாய் உங்கள் blog பார்க்க நேரிட்டது. மிகவும் அருமை. என்னுடைய ஜாதகத்தில்(கன்னி ராசி, கன்னி லக்னம்), 7-ல் (மீனம்)சூரியன், 12-ல்(சிம்மம்) குரு,ராகு, சனி, செவ்வாய் (!?!). இந்த 7-12 (சூ -குரு) பரிவர்த்தனை எப்படி இருக்கும்...நன்மையா, தீமையா...என்ன நடக்கும்.
- rajavel.

ராஜன் said...

வணக்கம் ஐயா.
மகர லக்ன ஜாதகருக்கு 1ம் அதிபதி (சனி), 11ம் அதிபதி (செவ்வாய்) பரிவர்த்தனை.
பரிவர்த்தனையில் ஒரு கிரகம் ஆகிய சனி தனது பகை வீடாகிய விருச்சிக ராசியில் 11ல் வக்ரம் ஆகி ,மற்றொரு கிரகம் ஆகிய செவ்வாய் லக்னத்தில்(மகரம்) உச்சம் பெற்றும் உள்ளது.இதை எப்படி எடுத்து கொள்வது.

நன்றி

மேற்கிலிருந்து ம. ராஜவேல். said...

வணக்கம்... உங்கள் பதிவுகள் மிக அருமை.. இப்பொழுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்...

என்னுடைய ஜாதகத்தில் (கன்னி ராசி, கன்னி லக்னம்)...7-ல் (மீனம்)சூரியன், 12-ல்(சிம்மம்) குரு, ராகு, சனி, செவ்வாய்...இந்த பரிவர்த்தனை பற்றி சற்று விளக்குங்களேன்.

Subbiah Veerappan said...

////Blogger karthi keyan said...
நவாம்ச பரிவர்தனை அமைப்பிற்கு பலன் உண்டா ஐயா/////

நவாம்சம் என்பது இராசியின் விரிவாக்கம் It is magnified version of Rasi ஆகவே ராசியை வைத்துப் பாருங்கள் நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger மேற்கிலிருந்து ம. ராஜவேல். said...
தற்செயலாய் உங்கள் blog பார்க்க நேரிட்டது. மிகவும் அருமை. என்னுடைய ஜாதகத்தில்(கன்னி ராசி, கன்னி லக்னம்), 7-ல் (மீனம்)சூரியன், 12-ல்(சிம்மம்) குரு,ராகு, சனி, செவ்வாய் (!?!). இந்த 7-12 (சூ -குரு) பரிவர்த்தனை எப்படி இருக்கும்...நன்மையா, தீமையா...என்ன நடக்கும்.
- rajavel.////

உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொல்லக்கூடாது. முழு ஜாதகத்தையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும் நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger ராஜன் said...
வணக்கம் ஐயா.
மகர லக்ன ஜாதகருக்கு 1ம் அதிபதி (சனி), 11ம் அதிபதி (செவ்வாய்) பரிவர்த்தனை.
பரிவர்த்தனையில் ஒரு கிரகம் ஆகிய சனி தனது பகை வீடாகிய விருச்சிக ராசியில் 11ல் வக்ரம் ஆகி ,மற்றொரு கிரகம் ஆகிய செவ்வாய் லக்னத்தில்(மகரம்) உச்சம் பெற்றும் உள்ளது.இதை எப்படி எடுத்து கொள்வது.
நன்றி//////

உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொல்லக்கூடாது. முழு ஜாதகத்தையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும் நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger மேற்கிலிருந்து ம. ராஜவேல். said...
வணக்கம்... உங்கள் பதிவுகள் மிக அருமை.. இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்...
என்னுடைய ஜாதகத்தில் (கன்னி ராசி, கன்னி லக்னம்)...7-ல் (மீனம்)சூரியன், 12-ல்(சிம்மம்) குரு, ராகு, சனி, செவ்வாய்...இந்த பரிவர்த்தனை பற்றி சற்று விளக்குங்களேன்.////

தொடர்ந்து படியுங்கள் நண்பரே! உங்களுக்கே அலசும் திறமை உண்டாகும்!!! உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொல்லக்கூடாது. முழு ஜாதகத்தையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும். ஆகவே பொறுத்திருந்து பாருங்கள்!!!!

gokila srinivasan said...

The planet(1,2,3,4,5,7,9,10,11) dasa will not be good if parivarthana between 6,8,12 and other planet(1,2,3,4,5,7,9,10,11). So Budhan is in 6th house, it is not favour dasa to me. sukran dasa will also not good because it is neecham in rasi as well in navamsam. So even I have that yoga, there is no use to me. am I correct sir.